தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நூலின் பெயர்:ஆகாய தாமரை நூலாசிரியர்:டாக்டர் எம்.சீனிவாசன்.எம்.டி. மதிப்புரை:முனைவர்.ச.சந்திரா

2 posters

Go down

நூலின் பெயர்:ஆகாய தாமரை  நூலாசிரியர்:டாக்டர் எம்.சீனிவாசன்.எம்.டி.  மதிப்புரை:முனைவர்.ச.சந்திரா Empty நூலின் பெயர்:ஆகாய தாமரை நூலாசிரியர்:டாக்டர் எம்.சீனிவாசன்.எம்.டி. மதிப்புரை:முனைவர்.ச.சந்திரா

Post by eraeravi Sat Apr 23, 2011 2:32 pm

நூலின் பெயர்:ஆகாய தாமரை

நூலாசிரியர்:டாக்டர் எம்.சீனிவாசன்.எம்.டி.

மதிப்புரை:முனைவர்.ச.சந்திரா

கோபுர நுழைவாயில்:

விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் ஒப்புநோக்கி,அஞ்ஞானமுடையோரையும் அறிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதே ஆகாய தாமரை-எனும் நூல்.'இந்து'மகா சமுத்திரத்தை ஒரு கமண்டலத்தில் அடக்கி, அதனை அம்மனின் அருள் பாலிக்கும் தீர்த்தமாய் உருமாற்றி ,வாசிப்போரின் அறிவுத் தாகம் தணித்திருக்கும் நூலாசிரியர் மருத்துவர் சீனிவாசன்.எம்.டி. அவர்களுக்கு முதலில் மனமார்ந்த நன்றி.தன்னடக்கமே ஆசிரியரின் என்னுரையாய்,புன்னகையே நூலின் அணிந்துரையாய்,கேள்விக்கணையே முன்னுரையாய்,இறையியல் நூலா?உடலியல் நூலா?கலையியல் நூலா?என்று உய்த்துணர இயலாத அளவிற்கு இவ்வனைத்தும் விரவி, சீராகச் செதுக்கப்பட்ட செம்மையான நூல் என இந்நூலைக் கூறலாம்.

வண்ணக்களஞ்சியம்:
கணபதியில் துவங்கி மகாகவி வரை, ஓரறிவு முதல் ஏழறிவு வரை,புராண காலம் தொடங்கி பகுத்தறிவு காலம் வரை,,ஆதிசங்கரர் முதல் அப்துல்கலாம் வரை,திருவிளையாடற்புராணம் முதல் திருக்குறள் வரை,கௌதமபுத்தர் துவங்கி காஞ்சிப்பெரியவர் வரை- என இருவேறு பெரு எல்லைகளை ஆகாயதாமரை நூல் தொட்டுச் செல்கின்றது.மானிடவியல்,சோதிடவியல்,வானியல்,அளவியல், எண்ணியல்,புள்ளிவிவரஇயல்,உருவவியல்,கட்டிடவியல்,சிற்பவியல்,உடலியல்,உளவியல்,வரைபடவியல்-என பல்வேறு இயல்களை உள்ளடக்கிய கவின்மிகு களஞ்சியம் என்று இந்நூலைக் கூறலாம்.

அகமும் புறமும்:

ஸ்தூல சரீரம்,சூட்சும சரீரம் இவ்விரண்டிற்குமிடையே உள்ள 'அவித்யா'-எனும் திரை விலக்கி,'நானே பிரம்மம்;அந்த பிரம்மமே நீ!'-என்ற அரிய செய்தியைக் கூற வந்த நூலே ஆகாய தாமரை.மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் உள்கட்ட அமைப்பினையும்,மானிடனின் அகப்புற உடலமைப்பினையும் ஒப்புமைப்படுத்தி உருவாக்கப்பட்டதே இந்நூல். உடற்பிணி நீக்கி மேனி பொலிவுறச் செய்யும் வல்லமை ஆகாயதாமரை எனும் மூலிகைக்கு உண்டு என்பது மருத்துவ உலகம் கண்ட உண்மை.மனிதனின் உள்ளப்பிணி நீக்கி ஆத்மசுத்தி புரியும் தன்மை இந்த ஆகாயதாமரை நூலுக்கு உண்டு என்பது புத்தகத்தை வாசித்தோர் உணர்ந்த உண்மை.

ஆன்மீகமும் அறிவியலும்:

அம்மன் குடிகொண்டிருக்கும் ஆலயமே மனித மூளையாயிருக்க,மீனைப்போல் இமையாது விழித்திருந்து பக்தகோடிகளைக் காத்து நிற்கும் மீனாட்சியம்மனே மானிட இருதயமாக இருக்க,சூரிய சந்திரர் இருவிழியாய் ஒளிர,லிங்கோத்பவரோ விழிகளுக்கிடையே பேரொளியாய்த் திகழ,சரஸ்வதியானவள் நெற்றிப் பொட்டாய்த் துலங்க,அறுபடைவீடே நுரையீரலாய் அமைந்திருக்க ,ஓம் எனும் பிரணவ வடிவே காற்றறையாயிருக்க,தேவர்களும் அசுரர்களும் முறையே சிறுகுடல் பெருங்குடலாய் செயல்பட,கந்தன் கர வேல் மனிதனின் நெஞ்செலும்பாய் நிற்க, சண்டிகேஸ்வரரும் மகாலஷ்மியும் கேட்கும் மற்றும் பேசும் சக்தியாக விளங்க,-என மானிடனின் உள்ளுறுப்புக்கள் அனைத்தும் மதுரை மீனாட்சி திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் கடவுளர்களோடு ஆகாயதாமரை நூலில் அழகுற ஒப்புமைப்படுத்தப்பட்டிருக்கின்றது.இதுபோலவே மனிதனின் புற உறுப்புக்களும் கோவிலின் ஒவ்வொரு மண்டபத்துடன் இணைத்து ஒப்பிடப்பட்டிருப்பதில் நூலாசிரியரின் அறிவியலோடு கூடிய ஆன்மீக அறிவு நன்கு புலப்படுகிறது.

இளைப்பார...

கலசம் உருவாகிய கதை,கல்யானை கரும்பு தின்ற கதை,பொற்றாமரை குளம் பொலிவாய்த் தோன்றிய கதை,பராசக்தி உருவாகிய பழம்பெருங்கதை,மாபாதகம் தீர்த்த மதுரை வரலாறு-என ரசனையான புராணக் கதைகள் கலையியல் மற்றும் உடலியல் சார்ந்த கருத்துக்களுக்கிடையே இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் நூலை வாசிப்போர் மனம் தொய்வு அடையாமல் தொடர்ந்து வாசிப்பதற்கு ஏதுவாகின்றது.

வியப்பில் ஆழ்த்தும் செய்திகள்:

*மனித உடலின் 96 அகப்புற உறுப்புக்கள் 96 வகை சாஸ்திரங்களுடன் ஒப்பிடப்பட்டிருப்பது

*மனக்கண்ணால் வணங்கிய ஆங்கிலேய அதிகாரி ரோஸ்பீட்டருக்கு மீனாட்சியம்மன் அருளியது.

*மனிதக் கருவின் பயணம் தொடங்கி முடியும்விதமும் அது 27 நட்சத்திரங்களோடு இணைந்து கைகோர்த்து நடக்கும் விதமும்.

*பாற்கடலில் தோன்றிய 14 பொருட்களும் மனித உடலில் உள்ள தாதுக்களோடு ஒப்பிட்டுச் சொல்லப்பட்டிருப்பது.

*இயங்கு சக்தி ,நிலை சக்தி-என மாறி மாறி செயல்படும் சிவன் -பார்வதி நடனத்தை குரோமோசோமுடன் இணைத்து விளக்கியிருப்பது.

-என்று நூலை வாசிக்கும்போது அதிசயித்த செய்திகளை இன்னும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

மனதார...

அறிவியல் புரிந்தோர்க்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்காது;ஆன்மீகத்தில் தெளிந்தோர்க்கோ அறிவியல் புரிபடாது.இக்கூற்றை பொய்மையாக்கி இவ்விரு அரும்பெருந்துறைகளிலும் வல்லமை பெற்றுத் திகழும் டாக்டர் திரு.எம்.சீனிவாசன் அவர்களின் எழுத்தாற்றல் ஆச்சரியப்படத்தக்கது.மனித உள்ளுறுப்புக்களின் செயல்பாட்டு விளக்கத்தை நான் அறிந்தவரை இத்துணை எளிமையாக,சுவையாக எவரும் விவரித்ததில்லை.புரியாதவர்க்கும் புரியும்வண்ணம் வரைபடம் மற்றும் புகைப்படத்துடன் நூலாசிரியர் விளக்கியிருக்கும் விதம் போற்றத்தகுந்தது. ‘கல்லினால் கோயில் செய்தவர் கயிலை விட்டகலாதாரே'-எனும் முதுமொழிக்கேற்ப மீனாட்சிஅம்மன் திருக்கோவிலைக் கட்டியோர் சிவகணங்களாய்த் திகழட்டும்!ஆகாய தாமரை எனும் இந்நூல் நம் பாரத நூலகம் மட்டுமல்லாது பன்னாட்டு நூலகங்களிலும் இடம்பெறும் தகுதி பெற்று தமிழர் அறிவை தரணி முழுதும் பரவச் செய்யட்டும்!
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

நூலின் பெயர்:ஆகாய தாமரை  நூலாசிரியர்:டாக்டர் எம்.சீனிவாசன்.எம்.டி.  மதிப்புரை:முனைவர்.ச.சந்திரா Empty Re: நூலின் பெயர்:ஆகாய தாமரை நூலாசிரியர்:டாக்டர் எம்.சீனிவாசன்.எம்.டி. மதிப்புரை:முனைவர்.ச.சந்திரா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Apr 23, 2011 7:44 pm

நூலின் பெயர்:ஆகாய தாமரை  நூலாசிரியர்:டாக்டர் எம்.சீனிவாசன்.எம்.டி.  மதிப்புரை:முனைவர்.ச.சந்திரா 446419 நூலின் பெயர்:ஆகாய தாமரை  நூலாசிரியர்:டாக்டர் எம்.சீனிவாசன்.எம்.டி.  மதிப்புரை:முனைவர்.ச.சந்திரா 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி! மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!
» நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !
» நூலின் பெயர்:அவ்வுலகம்.நாவல் ஆசிரியர்:டாக்டர் வெ.இறையன்பு.மதிப்புரை:முனைவர் ச.சந்திரா
» நூலின் பெயர்:பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூலாசிரியர்:முனைவர் இரா.மோகன் திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா
» நூலின் பெயர்:என்னோடு நீ நூலாசிரியர்:சு.சோலைராஜா நூல் மதிப்புரையாளர்:முனைவர் ச.சந்திரா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum