தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நூலின் பெயர்:அவ்வுலகம்.நாவல் ஆசிரியர்:டாக்டர் வெ.இறையன்பு.மதிப்புரை:முனைவர் ச.சந்திரா
2 posters
Page 1 of 1
நூலின் பெயர்:அவ்வுலகம்.நாவல் ஆசிரியர்:டாக்டர் வெ.இறையன்பு.மதிப்புரை:முனைவர் ச.சந்திரா
நூலின் பெயர்:அவ்வுலகம்
நாவல் ஆசிரியர்:டாக்டர் வெ.இறையன்பு I.A.S.iraianbuv@hotmail.com
மதிப்புரை:முனைவர் ச.சந்திரா.neraimathi@rocketmail.com
கோபுர நுழைவாயில்:
இலக்கியநாயகன் பாலைநிலம் கடந்து
வாகைசூடியது சங்ககாலம்!புதினநாயகன் மரணவாயிலின் நிலையைக் கடந்துசெல்ல
உதித்தது அவ்வுலகம்!சமூகத்தைப் பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலக்கவைக்கும்
சீரிய நோக்கத்தில்,விரிந்ததோர் பார்வையுடன் படைப்புக்களை வழங்குவதில்
இறையன்புக்கு நிகர் அவர்மட்டுமே!பழமையிலிருந்து வேறுபட்டும்,மாறுபட்டும்
இவ்வுலக இணைப்பிற்கும்,மறுவுலக பிரவேசித்தலுக்கும் இடையேயான பயணத்தை
எடுத்துரைக்கும் இந்நாவல் ஆசிரியரின் முத்தான மூன்றாவது நாவல்!
உருவமா?பிம்பமா?
மொழிகளற்ற,காலபேதம் உணர இயலாத,பெயர்
எனும் அடையாளம் தொலைக்கப்பட்டதும் மறுக்கப்பட்டதுமான ஓர் உலகில் உருவமற்று
உலவும் பிம்பங்களின் கதையே அவ்வுலகம்! வெளியுலகில் ,இல்லறத்தில் -என
தனக்குள் சுயமுரண்பாடு கொண்ட தலைமைக் கதாப்பாத்திரமும்,துணைக்கதாப்பாத்திரங்களும்
நதியும்,கிளைநதிகளுமாய் பிரவாகம் எடுத்து கடலோடு கலப்பதும், கலக்கும்முன்
அவர்களது ரிஷிமூலம் கண்டறிவதுமே இந்நாவலின் உள்ளடக்கம்.சதைப்பிண்டம் என்பது
முதற்பிறப்பாய் இருக்க, மனிதத்தை உணரும் மறு இருப்பாய் அவ்வுலகவாசிகள்
நடமாட,மரணத்திற்குப்பிறகும் மனிதவாழ்வு முற்றுப்பெறுவதில்லை என்பதனை
உலகிற்கு சொல்லவந்த நூலே இந்நாவல் எனலாம்.
சொர்க்கமா?நரகமா?
அவ்வுலகம் ஓர் அபூர்வமான உலகம்!அங்கு
ஒருமுறை சந்தித்தவரை இன்னொருமுறை சந்தித்தல் இயலாது!அங்கிருப்போர்
உண்ணலாம்!உறங்க முடியாது!பார்க்கலாம்;பேசலாம்;வாய்விட்டு
அழமுடியாது!பூவுலகில் வாழ்ந்தபொழுது இருளில் பொதிந்திருந்த அவர்களின்
பொய்மைகளெல்லாம் இங்கு வெளிச்சமிட்டுக் காட்டப்படும்!வாழ்ந்தவர்
மாய்வதும்,மாய்ந்தவர் எழுவதுமாய், இருத்தலில் இல்லாதிருத்தலும்,
இல்லாமையில் இருத்தலுமாய்,அந்நியப்படுதலும் அன்னியோன்யப்படுதலுமாய்,கட்டமைப்பும் கட்டவிழ்ப்புமாய் ,பிரிதலும் பிரித்தலுமாய் மொத்தத்தில் சுகமும் சோகமுமாய் நாவலின் கதை நயமாய் நகர்கின்றது.
இரத்த ஓட்டம்:
'வாழ்வதற்கே வணங்காதபொழுது சாவதற்கு கடவுளை
வணங்கவேண்டுமா?'-என்று வினவும் நாத்திகவாதியான காளிதாஸுடன் துவங்கும்
கதை,'கடவுள் மாத்திரம்தான் நான் கேட்டதைத் தரமுடியும்'-என்று பதிலளிக்கும்
ஆத்திகவாதியின் வாழ்க்கைக்குறிப்புடன் முடிய,இடையிடையே மகாபாரதக்
கிளைக்கதைகளாய் பல்வேறு பாத்திரங்கள் நடமாட, இவ்வனைவரும் எவ்விதமாய்
மரணநிலையை எதிர்கொள்கின்றனர் என்பதை ஆசிரியர் சொல்லிச்செல்லும் பாங்கு
அற்புதம்!விரும்புகின்ற எல்லாவற்றையும் செய்கின்ற இடமாக மண்ணுலகம்
இருக்க,யாருக்கு என்ன விருப்பமோ அவற்றைச் செய்யவிடாது தடுக்கும் ஒரு
விசித்திர உலகமாக 'அவ்வுலகம்' இருக்கின்றது.உணர்வுப்பகிர்தல்
மறுக்கப்பட,வெறும் எண்ணப்பகிர்தலுடன் வரையறுக்கப்பட்ட பகுதியில் உலவுகின்ற
வாழ்வே அவ்வுலக வாழ்வு!
மேடுகளும் பள்ளங்களும்:
அவ்வுலகத்தில் வெளிச்சத்திற்குள்
இருளும் ,இருளுக்குள் வெளிச்சமும் புலப்படுகின்றது.அசைவது
அசையாதிருக்கின்றது.அசையாதது அசைகின்றது.இவ்வுலகில் யானையாய் இருந்தவர்
அவ்வுலகில் பூனையாய் பதுங்குகிறார்.கேட்க முடியாதோர்க்கும் செவி
திறக்கின்றது.பார்க்கமுடிந்தவர்க்கோ பார்வை
பறிபோகின்றது.விட்டுப்போனது தொடர்கின்றது.தொடர்ந்து வந்ததோ
விட்டுப்போகின்றது.புத்தகங்கள் உயிர்பெற்று உலாவுகின்றன.அத்தோடு உயிலிலும்
இடம்பெறுகின்றன.வார்த்தைகளை உபதேசிக்க வாய் திறந்தாலோ குருதி
வழிகின்றது!கண்ணீரோ விழிகளிலிருந்து வழிய மறுக்கின்றது.
கல்வெட்டு வாசகங்கள்:
தலைமைக் கதாப்பாத்திரமான திரிவிக்ரமன்
தனக்குத் தானே வினவிக்கொள்வதும் விடையளித்துக் கொள்வதுமான பகுதி(ப.137-141)
தர்க்கநெறி சார்ந்த,அனைவரும் உய்த்துணரவேண்டிய உன்னத பகுதி.
* முடியாதவனின் கடைசி ஆய்தம் பொறாமை(ப.140)
* நல்லபடியாக மரணித்தவனே நல்லபடியாக வாழ்ந்தவன்(ப.124)
*மரணம் என்பது ஒரே நிகழ்வு அல்ல!பல சின்ன நிகழ்வுகளின் ஒட்டுமொத்த தொகுப்பு.
*நாத்தை மிதிச்சால் அது நல்ல பயிராய் வளருமா?(ப.110)
*பகிர்ந்து கொள்கின்ற போதுதான் நொய்யரிசிகூட நெய்யரிசி ஆகும்.(ப.50)
மனதார...
வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் எது வேண்டுமானாலும்
ஒன்றுபோல் நிகழலாம்;மரணம் என்பது மட்டும் ஒருவரிலிருந்து மற்றவர்க்கு
வேறுபடும்;அம்மரணத்தை எதிர்கொள்வதும் ஒருவரிலிருந்து மற்றவர்க்கு மாறுபடும்
என்பதனை எடுத்துரைக்க வந்த நூலே டாக்டர் இறையன்பு அவர்களின்
'அவ்வுலகம்'.இந்த மண்ணுலகில் நிறைவேற்றவேண்டும் என்று எண்ணியதை
தயக்கமின்றி சாதித்துவிடுங்கள்!இதன்பின் 'அவ்வுலகம்' மட்டுமல்ல! எவ்வுலகம்
சென்றாலும் அதற்கான வேகத்தடைகள் எழும்பிக்கொண்டே இருக்கும் என்று
வாசகர்க்கு சொல்ல வந்ததே இந்நாவல்.ஏக்கமும் தாக்கமுமாய்,துள்ளலும்
துவளலுமாய் தன் எழுத்துக்களை கருத்தாக்கம் செய்யாமல்,தத்துவமும்
தார்மீகமுமாய்- இவ்வுலகம் மட்டுமல்லாது மறு உலகத்திற்கும்
வழிகாட்டியிருக்கும் நூலாசிரியர் டாக்டர் வெ.இறையன்பு அவர்களின்
இலக்கியப்பணி சிறக்க என்போன்ற ஆர்வலர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நூல் விமர்சனம் நூலின் பெயர்:சாகாவரம் (நாவல்) நூலாசிரியர் :வெ.இறையன்பு இ.ஆ.ப. திறனாய்வாளர் :முனைவர்.ச.சந்திரா
» நூலின் பெயர்:ஆகாய தாமரை நூலாசிரியர்:டாக்டர் எம்.சீனிவாசன்.எம்.டி. மதிப்புரை:முனைவர்.ச.சந்திரா
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
» நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி! மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!
» நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum