தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கூடா நட்பும் கேடாய் முடியும் ! நூலாசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
கூடா நட்பும் கேடாய் முடியும் ! நூலாசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
கூடா நட்பும் கேடாய் முடியும் !
நூலாசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் !
அலைபேசி 98421 81462.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மதுரைத் தென்றல், 10 ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர்,
பழங்காநத்தம், மதுரை- 625 003. விலை : ரூ. 70.
பழங்காநத்தம், மதுரை- 625 003. விலை : ரூ. 70.
*****
நூலாசிரியர் கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் பாரதி மாநில வங்கியில் பண அதிகாரியாக இருந்தவர். விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு தமிழ், தமிழ், தமிழ் என்று முழு மூச்சாக முழுநேரப் பணியாக தமிழ்ப்பணியாற்றி வருபவர். கவியரங்க தலைமை வகித்து நான் உள்பட பல கவிஞர்களுக்கு மேடை தந்து வளர்த்து விடுபவர். கவிஞர்கள் நெல்லை ஜெயந்தா, பாபாராஜ், கோ உள்பட பலர் இவர் தலைமையில் கவிதை பாடியவர்கள்.
மாமதுரைக் கவிஞர் பேரவை வைத்து வருடா வருடம் மகாகவி பாரதியாருக்கும், கல்வி வள்ளல் காமராசருக்கும் பிறந்த விழா எடுத்து கவிதைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் ,கோப்பைகள் ,கேடயங்கள் ,சான்றிதழ்கள் வழங்கி வருபவர். தமிழ் மீது அளப்பரிய பற்று மிக்கவர். அவர் தலைவராக உள்ள மாமதுரைக் கவிஞர் பேரவையில் நான் செயலராக இருந்து அவரோடு சேர்ந்து தமிழ்ப் பணி செய்து வருகிறேன் .மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை நடத்தும் தமிழ் விழாக்களில் தவறாமல் பங்குபெற்று வருபவர் .நாட்டில் நடக்கும் அவலம் குறித்து மனம் பொறுக்காமல் பொங்கி எழுந்து வடித்த கட்டுரை நூல் இது. 7 கட்டுரைகள் உள்ளன. வடசொல் அதற்குரிய தமிழ்ச்சொல் மிகவும் பயனுள்ள தொகுப்பு நூலில் உள்ளது.
தமிழ்மொழிப் பற்றை தமிழ்மொழி உணர்வை விதைக்கும் மிக நல்ல நூல். நூலாசிரியருக்கு பாராட்டுகள். தமிழர்கள் விழித்தெழ வேண்டும். அழியப்போகும் மொழிகள் பட்டியலில் தமிழும் உள்ளது. இனியாவது தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் தூங்கியது போதும் என்று விழிப்புணர்வு விதைக்கும் விதமாக கட்டுரைகள் வடித்து உள்ளார். காந்தியடிகளின் தாய்மொழிப்பற்று, இரவீந்திரநாத் தாகூரின் தமிழ்ப்பற்று பற்றி எடுத்தியம்பி வடித்த ‘பாயிரம்’ கட்டுரை நன்று.
“தாய்மொழிக் கல்வி வளமுறச் செய்வதற்க்குத் தேவை தங்கள் தாய்மொழியின் மீது பற்றும் மதிப்பும் தானே தவிர ஆங்கில அறிவல்ல. கவி இரவீந்திரநாத் தாகூரின் இலக்கிய நடையின் வெற்றிக்குக் காரணம் அவருடைய ஆங்கில வெற்றிக்குக் காரணம் அவருடைய ஆங்கில் அறிவு அல்ல. அவருக்கு அவருடைய தாய்மொழியின் மீது இருந்த பற்றும் மதிப்புமே காரணமாகும்”.
நூலாசிரியர் கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் கவிஞர் என்பதால் ஒரு சில கவிதை வரிகளும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. சொற்களும் வடசொல் கலப்பின்றி தனித்தமிழில் நல்ல கட்டுரைகள் வடித்துள்ளார். உலகின் முதல் மொழி ஒப்பற்ற தமிழ் என்று அமெரிக்காவின் மொழியியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு தமிழர்கள் தான் தமிழின் அருமை பெருமை இன்னும் அறியாமலே இருக்கின்றனர். இந்த நூல் படித்தால் படிக்கும் வாசகர்கள் மனதுக்கு தமிழின் அருமை புரியும். தமிழ் காக்க மனம் விரும்பும்.
ஆரம்பக்கல்வி அழகு தமிழிலேயே இருக்க வேண்டும். இதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதை நன்கு வலியுறுத்தி உள்ளார்.
“இன்றும் தெலுங்கு, கன்னடம், துளுவில் இருக்கும் தமிழ்ச்சொற்களையும் அதன் வேர்களையும் நீக்கிவிட்டால் அம்மொழிகளால் தனித்து இயங்க முடியாது! தலை நிமிரவும் முடியாது. மலையாளத்தை பொறுத்தவரையில் மூன்றில் இரண்டு பங்கு தமிழ்ச்சொற்கள் உள்ளன”. தமிழ்மொழியில் கலந்துள்ள வடசொற்களை நீக்கிவிட்டால் தனித்து இயங்கும் தன்மை தமிழுக்கு உண்டு. காரணம் தமிழ் முதலில் தோன்றிய மொழி. தோன்றிய போது வடமொழி கலப்பு இல்லை. காரணம் வடமொழி அப்போது தோன்றவில்லை. இடையில் தோன்றிய வடமொழியை இடையில் கலந்து விட்டனர். அவற்றை நீக்கி எழுதவும், பேசவும் முன்வர வேண்டும் என்ற கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தி வடித்த நூல்.
நூலாசிரியரின் வைர வரிகள் தமிழர்கள் உள்ளத்தில் கல்வெட்டாக பதித்துக் கொள்ள வேண்டிய அர்த்தமுள்ள வரிகள் இதோ.
“எந்த ஒரு மொழிக்கும் நான் எதிரானவன் இல்லை – ஆனால் என் தமிழ்மொழிக்கு எதிராகக் குழியைப் பறிக்கும் மொழிகளை எதிர்க்காமல் வேடிக்கை மனிதராக வீழ்ந்து கிடப்பதற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை”.
தமிழைக் காப்பதற்கும், தவறான செயல்களைத் தடுப்பதற்கும் இரண்டு வழிகள் உள்ளன.
- தமிழைத் தமிழ் எழுத்தால் எழுத வேண்டும்.
- தமிழ்ச் சொற்கள் எவை என்றும், தமிழ் எழுத்துக்கள் எவை என்றும் நாம் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்படி பல கருத்துக்களை மனதில் துணிவுடன், நெஞ்சுரத்துடன் தமிழ் அழியாமல் காக்க என்ன வழி, தமிழை உயிர்ப்பிக்க என்ன வழி என்பது பற்றி சிந்தித்து பல்வேறு சான்றுகளுடன் வடித்த நூல் மிக நன்று.
தமிங்கிலம் பேசும் தமிழன் மாற வேண்டும். குறிப்பாக தொலைக்காட்சிகள் தான் தமிங்கிலம் நாட்டில் பரவிட வழிவகுத்து வருகின்றன. அவற்றிற்கு தமிழ்ப்பற்று உள்ள தமிழ் ஆர்வலர்கள் கண்டன மடல்கள் அனுப்ப வேண்டும். உலகின் முதல் மொழியான ஒப்பற்ற தமிழை உருக்குலைய விடலாமா? விடக்கூடாது.
உலகில் பிறந்த ஒவ்வொரு தமிழனும் தமிழுக்காக ஏதாவது செய்ய வேண்டும். தமிழராகப் பிறந்ததற்காக பெருமை கொள்வதோடு நின்று விடாமல் தமிழ்மொழி காக்க முடிந்தளவிற்கு நல்ல தமிழில் எழுதிடவும், பேசிடவும் முன்வர வேண்டும். வடமொழி எழுத்துக்களையும், சொற்களையும் தவிர்க்க முன்வர வேண்டும் என்பதை கடுமையான கண்டிப்புடன் உணர்த்தி உள்ளார் நூலில். பாராட்டுக்கள்.
தமிழா நீ பேசுவது, எழுதுவது தமிழா? என்பதை உணர்த்தி உள்ளார். வடசொல் எது? அதனால் வழக்கொழியும் தமிழ்ச்சொல் எது? என பட்டியலிட்டு நம்மை பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளார். பதச்சோறாக சில சொற்கள் மட்டும்.
தவிர்க்க வேண்டிய வட சொல் | : | வழக்கொழியும் தமிழ்ச் சொற்கள் |
அபாயம் | : | இடர், இடர்பாடு, அச்சுறுத்தல், இடையூறு |
அபிவிருத்தி | : | பெருக்குதல், வளர்ச்சி, முன்னேற்றம் |
அவதாரம் | : | வருகை, தோன்றல், பிறப்பு, தோற்றம் |
அபிப்ராயம் | : | எண்ணம், கணிப்புரை, மனக்கருத்து |
அபகரித்தல் | : | கையகப்படுத்தல், திருடுதல், களவாடுதல் |
அக்னி | : | எரிதழல், நெருப்பு, கனல், அணல், தழல் |
அராசகம் | : | கொடுங்கோல், கொடுமை, வன்முறை |
அந்தச்த்து | : | தகுதி, பதவி, வசதி, மேன்மை. |
தவிர்க்க வேண்டிய ஆங்கிலச்சொல் | : | வழக்கொழியும் தமிழ்ச் சொற்கள் |
மம்மி | : | அம்மா, அன்னை, தாய், ஆத்தா, அம்மை |
டாடி | : | அப்பா, தந்தை, தகப்பன், அம்மையப்பன் |
ஆபிசு | : | அலுவலகம், அலுவல், வேலையிடம் |
கார் | : | உந்து, மகிழுந்து, உலாஉந்து, சிற்றுந்து |
லாரி | : | பார உந்து, சரக்குந்து, சுமையுந்து |
இப்படி பல பயனுள்ள தமிழ்ச்சொற்களின் சுரங்கமாக நூல் உள்ளது. ஒவ்வொரு தமிழரின் வீட்டில் இருக்க வேண்டிய நூல் இது. வாங்கிப் படித்து பயன்பெற்று அழகு தமிழ்ச்சொற்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தமிழன்னையை அழகுபடுத்துங்கள். நூலாசிரியர் கவிதைமாமணி சி. வீரபாண்டியத்தென்னவன் அவர்களுக்கு பாராட்டுகள்.
.நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» எது கவிதை ! நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» வெளிச்ச விதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை; கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன்
» காதல் மாயா நூலாசிரியர் : கவிஞர் ஆத்மலிங்கன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் : கவிஞர் முனைவர் மரியாதெரசா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» வெளிச்ச விதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை; கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன்
» காதல் மாயா நூலாசிரியர் : கவிஞர் ஆத்மலிங்கன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் : கவிஞர் முனைவர் மரியாதெரசா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum