தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெரியாரை நாம் மறந்தால் தாழ்வோம் நாமே

Go down

பெரியாரை நாம் மறந்தால் தாழ்வோம் நாமே Empty பெரியாரை நாம் மறந்தால் தாழ்வோம் நாமே

Post by karumalaithamizhazhan Sun Sep 13, 2015 6:40 am

 பெரியாரை நாம்மறந்தால்   தாழ்வோம்   நாமே
பாவலர் கருமலைத்தமிழாழன்
 
கருமுகிலைக்   கிழித்திட்ட   மின்னல்   கீற்று
            ககனத்தை   அதிரவைத்த   இடியின்   ஓசை
இருகரையை   உடைத்தெறிந்த    வெள்ளச்   சீற்றம்
            இரும்பினையே   உருக்குலைத்த    தீக்கொ   ழுந்து
மருட்டுகின்ற   இருள்மாய்த்த   கதிரின்   வீச்சு
            மலையினையே   ஆட்டுவித்த   புயலின்  பாய்ச்சல்
கருவாகி    அத்தனையும்    ஒருங்கி   ணைந்து
            கண்முன்னே   இருந்தவர்தாம்   தந்தை  பெரியார்
 
விடியாத    இரவுக்கு    விடியல்   தந்து
            விரிகதிராய்    எழுந்திட்ட   வீரச்   சிங்கம்
மடியாதோ   எனயேங்கி    மாய்ந்த    மக்கள்
            மனக்குமுறல்    தீர்த்திட்ட    ஞான    வித்து
பிடியாதோ    எனும்மயலில்    கூம்பிச்    சோர்ந்த
            புரைதன்னை    நீக்கிட்ட    புரட்சி   வேந்தன்
படியீதோ   எனத்தன்னைத்    தந்து    தாழ்ந்தோர்
            படியேறக்  கரம்கொடுத்த   ஈக  நெஞ்சோன் !
 
மூத்திரப்பை    கையேந்தி    ஊர்ஊ   ராக
            மூடத்தை   ஓட்டிக்கால்    வெட்டி  யவன்நீ
ஆத்திகர்கள்    பின்னிவைத்த   சூழ்ச்சி   வலையை
            அறிவென்னும்    கத்தியாலே    அறுத்த   வன்நீ
சாத்திரங்கள்    எல்லாமே   புளுகு   மூட்டை
            சாய்த்துவிடும்   எனஉண்மை    உணர்த்தி   யவன்நீ
சூத்திரர்கள்   எனகுனிய   வைத்த   முதுகை
            சுரணையூட்டி   நிமிர்த்திநிற்க    வைத்த  வன்நீ
                                         (1)
தேவடியாள்   பிள்ளையென்று   பட்டம்  சூட்டித்
            தெருவோரம்   செல்வதற்கும்   தடைகள்   போட்டு
காவடிகள்   தூக்கியெங்கள்   கால்க   ளுக்குக்
            கைகூப்பி   வணக்கங்கள்   செய்க   என்றே
பூவடியாய்த்    தனையுயர்த்திச்    சூழ்ச்சி   செய்யும்
            பூணூல்கள்   அடிமையராய்ப்   பணிந்து  நின்ற
பாவடியாம்   மக்கள்தமை    இயக்க   மாக்கிப்
            பகுத்தறிவில்  நடப்பதற்கே   மாற்றி  யவன்நீ
 
நீவந்த   பின்னால்தான்    எங்கள்   வீட்டில்
            நின்றிருந்த   பழமைகளும்   எரியக்    கண்டோம்
நீவந்த    பின்னால்தான்   எங்கள்   நெஞ்சில்
            நீயாயத்தின்   நினைவுகளும்   எழும்பக்   கண்டோம்
நீவந்த    பின்னால்தான்   இந்த   நாட்டில்
            நின்றமூடம்    முடமான    காட்சி   கண்டோம்
நீவந்த   பின்னால்தான்   தாழ்ந்தி    ருந்தோர்
            நிமிர்ந்துதலை   நடக்கின்ற   துணிவு   கண்டோம் !
 
சிந்தனையைத்   தூண்டிவிட்டே    அறிவால்   எந்தச்
            சிறுவினையும்    செய்கவென்றே    முழக்க   மிட்டு
இந்நிலத்தில்   பகுத்தறிவுப்    பாதை    வெட்டி
            இருக்கின்ற    சூத்திரர்க்கே    உணர்வை   ஊட்டி
மந்தையென   வாழ்ந்தோர்க்கு    மதியை   ஈந்து
            மறுமலர்ச்சி    வரலாற்றை   புதிதாய்   ஆக்கித்
தந்திட்ட   பெரியாரை    நாம்ம   றந்தால்
            தலைநிமிர்ந்த    நாம்மீண்டும்    தாழ்ந்து   போவோம் !
                                               (2)

karumalaithamizhazhan
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum