தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஓஷோ-சிந்தனைகள்

Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 9:14 am

பணத்தின் கவர்ச்சி.
-------------

ஒவ்வொருவரும் பணத்தைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்.அவர்கள் பரவாயில்லை. இன்னும் சிலர் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் அடுத்த உலகத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

நன்னெறியைப் பற்றியும்,அதன் மூலம் சொர்க்கத்தை அடைவதைப் பற்றி சிந்திப்பதும், பணத்தைப் பற்றி சிந்திப்பதற்கு சமமாகத்தான் இருக்கும்.ஒரு மனிதன் நிகழ் காலத்தில் வாழும்போது மட்டும்தான் பணத்தைப் பற்றியோ அடுத்த உலகத்தைப் பற்றியோ சிந்திக்காமல் இருக்க முடியும்.பணம் என்பது எதிர்காலம்.எதிர்காலத்துக்கான பாதுகாப்பு.அதிகாரத்தின் அடையாளம். 

அதனால்தான் நீ பணத்தை மேலும் மேலும் சேகரிக்கிராய்.ஆனால் இன்னும் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உன்னை விட்டு ஒருபோதும் அகலாது. ஏனெனில் அதிகார தாகம் முடிவில்லாதது.மக்கள் அதிகாரத்திற்காக ஏங்கித் தவிக்கின்றனர்.ஏன் என்றால் அவர்கள் அவர்களுக்குள்ளே வெற்று மனிதர்களாக இருக்கிறார்கள்.

அந்த வெறுமையை எதைக் கொண்டாவது நிரப்பப் பார்க்கின்றனர்.அது பணமாக இருக்கலாம்;அதிகாரமாக இருக்கலாம்; தன் மதிப்பாக இருக்கலாம்;மற்றோரால் மதிக்கப் படுவதாக இருக்கலாம்; நல்ல குண நலன்களாக இருக்கலாம்.இவ்வுலகில் இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்.இருக்கும் வெறுமையை நிரப்ப முயல்பவர்கள் ஒரு வகை.இவர்கள் எப்போதும் ஏமாற்றத்துடனே இருக்கிறார்கள்.அவர்கள் நிரம்ப குப்பையை சேகரிக்கிறார்கள்.அதனால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பயனற்றதாகி விடுகிறது.

வெறுமையை அப்படியே காண முயலும் இன்னொரு வகையினர் தியானம் செய்தவர்கள் ஆகிறார்கள்.உன் முன் இருக்கும் கண நேரத்தில் வாழ்ந்து பார்.எதிர்காலத்தை விட்டுவிடு.அப்போது பணம் அதன் கவர்ச்சியை இழந்து விடும்.

நன்றி ;தென்றல் 
ஓஷோ சிந்தனைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 9:18 am

வருங்காலம்

-------

உங்கள் வருங்காலத்தைப் பற்றி நீங்கள் எதுவும் நிச்சயமாகக் கூற முடியாது.சொல்லவும் கூடாது.வருங்காலம் என்பது ஒரு திறந்த வெளி.இதை அறிந்து கொள்ளும் மனிதனின் முயற்சி நகைப்புக்குரியது.ஆனால் மனிதன் இதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான்.,இறந்த காலத்தை மாற்றி அமைக்க முயற்சிக்கிறான்.இது ஒருக்காலும் நடக்காது.நீங்கள் எப்போதும் நிகழ்காலத்துக்கு வருவதில்லை.நடந்து முடிந்ததை நீங்கள் சீர் செய்ய முடியாது.நடக்கக் கூடியதை உங்களால் அறிந்து கொள்ள முடியாது. வருங்காலத்தை உங்கள் அறிவால் தீர்மானிக்க முடியாது. வருங்காலத்தைப் பற்றி எதுவும் நிலையில்லை.ஆனால் மனிதன் வருங்காலத்தை முன் கூட்டியே தெரிந்து கொண்டு அதைத் தனக்கு சாதகமாகச் செய்ய முயலுகிறான்.இது முட்டாள்தனம்.நீங்கள் அதை முன்பே அறிந்து கொண்டால் அது வருங்காலமில்லை..அது இறந்த காலமாகி விடுகிறது.
******
கருமித்தனம்,பொறாமை கொண்ட மனம்,வெறுப்பு இவற்றிற்கு 'பகிர்ந்து கொள்ளுதல்'என்பது என்ன என்று தெரியாது.நீங்கள் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை.நீங்கள் யாருக்காவது எதையாவது கொடுத்தால் அதில் சில பேரங்கள் மறைந்திருக்கின்றன.நீங்கள் திரும்ப அவர்கள் ஏதேனும் வெகுமதிகள் கொடுக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்.எதையும் பதிலுக்கு எதிர்பாராது இருப்பதே பகிர்ந்து கொள்ளுதலின் அர்த்தமாகும்.இன்னும் சொல்லப் போனால் கொடுப்பவன்தான் நன்றியோடு இருக்க வேண்டும்.
******

நன்றி : ஜெயராஜன் : ஓஷோ-சிந்தனைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 9:22 am

அடக்குதல்
-------

நீங்கள் உங்கள் பேராசையை சரியாகப் புரிந்து கொண்டால் மட்டுமே நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைய முடியும்.அதைத் துறக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.சரியாகப் புரிந்து கொள்ளாத போதுதான் துறவு எண்ணம் வருகிறது.

சில பேர் பணத்துக்கு எதிராக இருக்கிறார்கள்.சிலர் பணத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஒருவன் அதைக் கண்டு அஞ்சுகிறான்.ஒருவன் பேராசை கொள்கிறான்.இருவருமே பணத்தினால் ஆக்கிரமிக்கப் படுகிறார்கள்.மிகுந்த ஈடுபாட்டினை முதலில் தவிர்க்கவும். அதைப்போல துறவு எண்ணத்திலும் ஜாக்கிரதையாக இருந்து தவிர்க்க வேண்டும்.இரண்டுமே எலிப்பொறி போலத்தான்.

மிக்க ஈடுபாடும் அடக்குதலும் இயந்திரத்தனமானது.

நீங்கள் பேராசை,பாலுணர்வு,கோபம்,பொறாமை....இவைகளுக்குள் உங்கள் மனதைத் திறந்து கொண்டு பயமில்லாமல் ஆழமாகச் சென்றால் நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைகிறீர்கள்.உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கிறது.அறிந்து கொள்ளுதல் உங்களை விடுவிக்கிறது.மாறாக நீங்கள் அதை அடக்கினாலும்,இயந்திரத்தனமாக மிகவும் ஈடுபட்டாலும்,முடிவு ஒன்றுதான்.

முதலில் நீங்கள் உங்கள் உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்.உங்கள் உடலின் குரலுக்கு மதிப்பு கொடுங்கள்.பிறகு மனதின் குரலைக் கேட்டு அதனைப் பூர்த்தி செய்யுங்கள்.எதையும் தவிர்க்காதீர்கள்.அவற்றின் தேவைகளில் ஆழமாக செல்லுங்கள்.அன்புடன் கூர்ந்து கவனியுங்கள்.உங்கள் உடலோடும் மனதோடும் நட்பாக இருங்கள்.அப்போதுதான் ஒரு நாள் அவற்றைக் கடந்து செல்ல முடியும்.


நன்றி : ஜெயராஜன் : ஓஷோ-சிந்தனைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 9:26 am

அடுத்தவர் கருத்து.
---------------------------

நான் ஏன் அடுத்தவரது கருத்துக்களைக் கண்டு பயப்படுகிறேன்?

ஏன் என்றால் நீங்கள் நீங்களாக இல்லை.நீங்கள் மற்றவர்களது அபிப்பிராயங்களைத் தாங்கும் தூணாக இருக்கிறீர்கள்.நீங்கள்,மற்றவரது அபிப்பிராயத்தைத் தவிர வேறு இல்லை.நீங்கள் அழகானவர் என்று மற்றவர் சொன்னால் ,நீங்கள் அழகாக இருப்பதாக நினைக்கிறீர்கள்.அவலட்சணமாக இருப்பதாகப் பிறர் சொன்னால்,அப்படி இருப்பதாகவே கருதுகிறீர்கள். இவ்வாறு மற்றவர் கூறும் அபிப்பிராயங்களை சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒருவர் நீங்கள் அழகானவர் என்று சொல்ல,அடுத்தவர் நீங்கள் அருவருப்பானவர் என்று சொன்னால் ,நீங்கள் பின்னவர் சொன்னதை மறக்க நினைக்கிறீர்கள்.ஆனால் அதை உங்களால் மறக்க முடியாது.இரண்டு கருத்துக்களும் உங்கள் உள்ளேதான் ஆழமாக இருக்கும்.இப்போது நீங்கள் இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கிறீர்கள்.அதாவது,நீங்கள் பல பொருட்களின் கலவையாக இருக்கிறீர்கள்.

நீங்கள் உங்கள் ஆன்மாவை அடையவில்லை.உங்களுக்கென்று எந்த தனித் தன்மையும் இல்லை.நீங்கள் வெறும் அடுத்தவரது குப்பைதான்.ஆகவே நீங்கள் எப்போதும் பயத்தில் இருக்கிறீர்கள்.ஏனெனில் அடுத்தவரது கருத்துக்கள் மாறினால்,நீங்களும் மாற வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்.நீங்கள் அடுத்தவரின் பிடியில் இருக்கிறீர்கள்.

முதலில் தைரியமாக உங்களை சார்ந்து இருங்கள்.அப்போது உங்களைத்தவிர வேறு யாரும் நல்லவனாகவோ,கெட்டவனாகவோ மாற்ற இயலாது.பொய்யான பிறர் அபிப்பிராயத்துக்கும்,நீங்கள் கனவுலகில் சஞ்சரிப்பதற்கும் எவ்வித வித்தியாசமும் கிடையாது.ஒருவன் உங்களைப் புகழும்போது,அவன் சக்தி மிக்கவனாகத் தெரிகிறான்.அவனுடைய புகழ்ச்சியை நீங்கள் ஏற்றுக் கொண்டால்,நீங்கள்தான் அவனுக்கு இரையானவன்.இப்போது அவன் உங்களைத் தனது பிடியில் வைத்துக் கொள்ளலாம்.அவன் உங்கள் குருவாகவும்,நீங்கள் அவன் அடிமையாகவும் இருப்பீர்கள்.

நன்றி : ஜெயராஜன் : ஓஷோ-சிந்தனைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 9:30 am

என்ன செய்ய?
------------------
பிறர் ஒவ்வொருவரும்,'இதைச் செய்கிறார்கள்,அதைச் செய்கிறார்கள்,இதை சாதிக்கிறார்கள்',நீ மட்டும் எப்படி நின்று விடுவது?போய்க்கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கிறது.இன்னும் அதிக தூரம்,அதிக வேகத்தில்,இன்னும் அதிக கம்பீரத்தோடு,இன்னும் அதிக எழுச்சியோடு என்று போய்க்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.ஆனால் எங்கே போய்க் கொண்டிருக்கிறாய் என்பது மட்டும் தெரியவில்லை.எது சேரும் இடம் என்பது மட்டும் தெரிவதில்லை.எதை சாதிக்க வேண்டும்?பணமா,கௌரவமா?அப்படித்தான் அவை நிறைய வந்தாலும் அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்றிருக்கிறாய்?

பெரிய வீட்டை வாங்கி வாழலாம்.நீதானே வாழப்போவது?வீடல்லவே!சிறிய வீட்டில் நிம்மதி இல்லை என்றால் பெரிய வீட்டில் அதிகமாக நிம்மதியை இழக்கப் போகிறாய்.உன்னைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது என்றால் பணம்,புகழை வைத்து என்ன செய்யப் போகிறாய்?உலகம் முழுக்கத் தெரிந்தவன் ஆகலாம்.அதனால் ஆகப் போவதென்ன?உன்னுடைய உள்ளிருட்டு அப்படியேதான் இருக்கப் போகிறது.
******
மற்றவர்களை நேசியுங்கள்;மதியுங்கள்.மற்றவர்களை விட மேலானவராகவோ,உயர்ந்தவராகவோ ஆக முயலாதீர்கள்.மற்றவர்களைத் தாழ்த்தாதீர்கள்.
******

நன்றி : ஜெயராஜன் : ஓஷோ-சிந்தனைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 9:35 am

சமூகம்
------------

தட்டெழுத்து பயின்றவனுக்கு அவனுடைய இயல்பான கையெழுத்து மறந்துவிடும்.கால்குலேட்டர் உபயோகிக்க ஆரம்பித்தால் அடிப்படைக் கணக்கே மறந்துவிடும்.படிக்காத கிராமத்தாரிடம் மென்மையான ஆழமான புத்திசாலித்தனம் இருக்கிறது.இந்த சமூகம் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு பெரிய தீங்கை ஏற்படுத்தியிருக்கிறது.உங்களை எப்போதும் அடிமைத் தனத்திலும்,பேராசையிலும்,திருப்தி அற்ற நிலையிலும், போட்டியிடும் நிலையிலும்,அன்பற்றும்,எப்போதும் கோபத்துடனும், வெறுப்போடும், ,ஒருவரைப் பார்த்து ஒருவர் வாழ நினைக்கும் நிலையிலும் வைத்திருக்கவே சமூகம் ஆசைப்படுகிறது.உங்களுடைய அறிவுக் கூர்மை அழிக்கப் படுகின்றது.அதிகம் படித்தவர்களால் இந்த உலகம் அபாயத்தில் இருக்கிறது. 

******

நீங்கள் உங்களைச்சுற்றி சற்று உன்னிப்பாகக் கவனியுங்கள்.ஏன் இவ்வளவு பேர் சோர்வாகவும்,அலுப்பாகவும்,இன்னும் மீதி நாட்களை எப்படி ஓட்ட வேண்டும் என்று விரக்தியாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்?ஏன் இந்த மரங்களைப் போலப் புத்துணர்வுடன் வாழக் கூடாது?அவர்களுக்கு என்ன நேர்ந்தது?ஒவ்வொரு மனிதனும் வேறு ஒருவரைப் போலவே இருக்க விரும்புகிறான்.முயற்சிக்கிறான்.அதனால்தான் இவ்வளவு சோகம்,சோர்வு,துன்பம் எல்லாம்.

******

ஒரு புத்தி கூர்மையுள்ளவன் சொர்க்கத்தைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் கவலைப்பட மாட்டான் அடுத்தவன் வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்பட மாட்டான்.ஏன்,கடவுளைப் பற்றிக் கூடக் கவலைப்பட மாட்டான்.அவன் இங்கே,இந்த தருணத்தில் வாழ்ந்து கொண்டிருப்பான்.அதைத்தவிர அவனுக்கு வேறொன்றும் தெரியாது.கடவுள்,ஆத்மா,சொர்க்கம் எல்லாம் தானே அவனை வந்தடையும்.

******


நன்றி : ஜெயராஜன் : ஓஷோ-சிந்தனைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 9:37 am

வாழ்க்கை ஒரு பரிசு.
-----------------
வாழ்க்கை ஒரு சிறைச்சாலை அல்ல.அது ஒரு தண்டனை அல்ல.அது ஒரு பரிசு.அதைப் பெறத் தகுதியானவர்களுக்கு மட்டுமே அது வழங்கப்பட்டு உள்ளது.இப்போது அதை ரசித்து மகிழ்வது உங்கள் கடமை.அதை ரசிக்கா விட்டால் அது ஒரு பாவம்.நீங்கள் வாழ்க்கையை அழகு படுத்தவில்லை என்றால்,அது இருந்தபடியே அதை விட்டு வைத்தால்,அது உயிர் வாழ்தலுக்கு எதிரானது.வாழ்வை இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சிகரமானதாக ஆக்குங்கள்.மேலும் சற்றே அழகானதாக, நறுமணம் மிக்கதாக ஆக்குங்கள்.
******
வாழ்க்கை ஒரு தேடுதலாக இருக்க வேண்டும்,ஒரு ஆசையாக அல்ல.ஒரு நாட்டின் அதிபராகவோ,பிரதமராகவோ ஆக வேண்டும் என்பது போன்ற லட்சியம் இல்லாமல்,'நான்யார்?'என்று கண்டறியும் ஒரு தேடுதலாக இருக்க வேண்டும்.தான் யார் என்று அறியாத மக்கள் யாராகவோ ஆக வேண்டும் என்று நினைப்பது ஒரு வினோதம்தான்.அவர்கள் இப்போது யாராக இருக்கிறார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.
****** 
நீ அக்கறை காட்டத் தேவையில்லாத விசயங்கள்இருக்கின்றன.நீ அவற்றை வெறுமனே கவனித்தால் போதும்.அவை சென்று விடும். கோபம், பொறாமை, பேராசை --இருளின் இந்த பாகங்களில் எல்லாம் ஒரு ஒற்றுமை இருக்கிறது.அதாவது அவற்றை நீ கவனித்தால் போதும்,அவை மறையத் தொடங்கிவிடும்.நீ வேறு எதுவும் செய்யத் தேவையில்லை.நல்லது கெட்டது என்பதற்கு வேறு எந்த வரைமுறையும் கிடையாது.கவனிப்பதுதான் அதை முடிவு செய்கிறது.


நன்றி : ஜெயராஜன் : ஓஷோ-சிந்தனைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 9:41 am

புனித நூல் எது?
---------------------------

இதுவரை இருந்தமனிதன் நிறைய வேதனைப்பட்டு விட்டான்.அவன் அவலத்தில் வாழ பழக்கப் பட்டிருக்கிறான்.துன்புறுவதிலும் சுய சித்திரவதையிலும் அவன் பயிற்சி அளிக்கப் பட்டிருக்கிறான்.அவனுக்கு சத்தியங்கள் வழங்கப்பட்டன.சாவுக்குப் பிறகு மகத்தான பரிசுகள் காத்திருப்பதாகக் கூறப்பட்டது.எத்தனை வேதனை அவன் படுகிறானோ,எந்த அளவுக்கு அவன் தன்னைத்தானே சித்திரவதை செய்து கொள்கிறானோ அவ்வளவு தூரம் பரிசுகள் அதிகரிக்குமாம்.இது சிலரின் சுயநலன்களுக்கு சாதகமாக இருந்தது.துன்புறும் மனிதனை அடிமைப் படுத்துவது சுலபம். 

அறியாத வருங்காலத்துக்காக தனது இன்றைய வாழ்வைத் தியாகம் செய்ய ஒப்புக் கொண்டவன்,தன்னை அடிமையாக்கிக் கொள்ளும்படி அறிவித்து விட்டவன் அவன்..காலம் காலமாக அவன் வெறும் நம்பிக்கைகளில் வாழ்ந்து விட்டான்.கற்பனைகளிலும்,கனவுகளிலும் வாழ்ந்து விட்டானே தவிர,யதார்த்தத்தை அவன் கண்டதில்லை.

ஒவ்வொரு குழந்தையும் ஒரு கட்டுப் படுத்தப்பட்ட கும்பலில்தான் பிறக்கிறது.ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,அண்டை அயலார் அனைவரும் கட்டுப் பட்டவர்களே.ஒரு சின்னக் குழந்தை ஆதரவற்றது.அதற்கு அந்தக் கும்பலுடன் ஒத்துப் போவதைத் தவிர வேறு வழி இல்லை.

பழையது சாகட்டும்;புதியது பிறக்கட்டும்!

புனித நூல் உன் வாழ்க்கைதான்.அதை உன்னையன்றி வேறு யாரும் எழுத முடியாது.நீ வெற்றுத்தாளுடைய புத்தகத்துடன் வந்தாய்.அதில் நீ என்ன எழுதுகிறாய் என்பதுதான் முக்கியம்.பிறப்பு மட்டும் வாழ்வல்ல.அது வாழ்வை உருவாக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பாகும்.நீங்கள் நேசிக்கக் கூடிய அளவு ஒரு வாழ்வை உருவாக்கிக் கொள்வது அவசியம்.

நன்றி : ஜெயராஜன் : ஓஷோ-சிந்தனைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 9:44 am

துன்பம் நிரந்தரமாய் நீங்க...
--------------------------

துன்பம் வரும்போது அதை அப்படியே அனுபவியுங்கள்.அதைக் கண்டு ஓட வேண்டாம்.அப்படி ஓடினால் அது உங்களைத் துரத்திக் கொண்டுதான் வரும்.அதை மறக்க நினைத்தால் அது உங்கள் மனதில் ஆழத்தில் பதுங்கி விடும்.மன வியாதிகளுக்கு மருந்து கொடுத்தால் அது உள்ள துன்பத்திலிருந்து உங்களை விலகி ஓடச்செய்யும்.

அதனால் துன்பத்திலிருந்து உங்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்காது.நீங்கள் துன்பத்தினால் வரும் வடுவை தைரியமாக முழுமையாகப் பார்க்க வேண்டும்.

உங்கள் அறையில் அமைதியான சூழ்நிலையில் தனிமையில் அமர்ந்து வேறெதிலும் மனம் ஈடுபடாது உங்கள் உள்போராட்டங்களைக் கவனியுங்கள்.உங்கள் உள்ளே உண்டான வடுவின் வலியை முழுமையாக மேலே கொண்டு வந்து உணர்ந்தால் அது உங்கள் இதயத்தைப் பிழியும்.அது மரண வலியாகத்தான் இருக்கும்.அதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அப்போது நீங்கள் ஒரு குழந்தை போலக் கதறலாம்.தரையில் புரண்டு அழலாம்.அப்போது அந்த வலி உங்கள் உடல் முழுவதும் பரவி இருப்பதை உணர்வீர்கள்.

துன்பம்,கவலை என்று ஏற்படும்போது அதை மறக்க அல்லது வெளியே தள்ள இதுவரை பழக்கப் பட்டிருக்கிறீர்கள்.அதற்கு மாறாக அதை எவ்வளவு அதிகப் படுத்த முடியுமோ,அப்படி அதிகப் படுத்தி,அதை நீங்களே ஜீரணம் செய்வது என்பது ஒரு புதுமையான மாறுபட்ட செயல்.அது உங்கள் இயல்பாக மாற கொஞ்சம் நாட்கள் ஆகும்.அப்படி அந்த சக்தியை முழுமையாக ஜீரணம் செய்து விட்டால்,அது உங்கள் உடலோடும் உள்ளத்தோடும் கலந்து விட்டால் உங்களிடம் புதுமையான ஒரு கதவு திறக்கும்.

அதன் வழியாக நீங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்குவீர்கள்.நீங்கள் எப்போது அந்த வலியை பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு விட்டீர்களோ,அதனுடன் கலந்து விட்டீர்களோ,அதன்பிறகு அது உங்களுக்கு ஒரு வலியாகவோ, துன்பமாகவோ தெரியாது.ஒரு பெரிய ரசாயன மாறுதல் உங்களுக்குள் இப்போது நடந்திருக்கிறது.இப்போது உங்கள் வலி,துயரம்,கவலை,இறுக்கம் அனைத்தும் மகிழ்ச்சி, ஆனந்தம், புத்துணர்ச்சி,பூரிப்பாக மாறி இருக்கும்.இதை நீங்கள் அனுபவத்தில்தான் உணர முடியும்.

நன்றி : ஜெயராஜன் : ஓஷோ-சிந்தனைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum