தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்
First topic message reminder :
நண்பர்களுக்கு தண்டச் சோறு போடுகிறீர்களா?
நல்ல வேலையிலிருக்கும் நான், என் நண்பன் ஒருவனுக்கு சாப்பாடு போட்டு, என் அறையில் கூடவே வைத்து பராமரித்து வந்தேன். அவனும் என்னை தெய்வமாக மதித்து, மற்றவர்களிடம் பெருமையாக புகழ்ந்து வந்தான்.
எனக்கு திருமணமாகியது. என் மனைவியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி போனேன். என் நண்பனுக்கு செலவு செய்ய தடை போட்டு விட்டாள் மனைவி. ஓசி சோறில், உடல் வளர்த்து சோம்பேறி ஆகிவிட்ட நண்பன், வேலைக்கு போகாமலும், வேலைக்குச் சென்றால் ஒரு மாதம் கூட நிலைத்து நிற்காமல் சும்மாகவே சுற்றித் திரிகிறான்.
ஓசி சோறு கிடைக்காததால் நான், நட்புக்கு துரோகம் செய்து விட்டதாக, இப்போது சேற்றை வாரி இறைத்து வருகிறான். அவன் பெற்றோரோ... தங்கள் மகனை நான் வேலைக்கு போக விடாமல் தடுத்து, எனக்கு எடுபிடியாக வைத்துக் கொண்டு, அவன் எதிர்காலத்தை பாழாக்கி விட்டதாக பழி சொல்கின்றனர்.
நண்பர்களுக்கு செலவு செய்து மகிழும் நட்பு திலகங்களே... நண்பர்களுக்கு நீங்கள் போடும் சோறு, உங்களுக்கு கெட்ட பெயரை கொண்டு வருவதோடு, உங்கள் நண்பனின் எதிர்காலத்தையும் பாதிக்கும், என்பதை உணருங்கள்!
நன்றி : வாரமலர் —கோ. பிரசன்னா, கோவை.

கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சிந்திக்கவைக்கும் கதைபோல் கருத்துக்கள்
அலட்சியத்தின் பரிசு அவஸ்தை!
தேங்காய் எண்ணெய் பாட்டிலுடன் மாடிப்படியேறியபோது, கைதவறி பாட்டிலை கீழே போட்டுவிட்டேன். பிளாஸ்டிக் பாட்டில் என்பதால் உடையவில்லை, ஆனால் மூடி திறந்து எண்ணெய் கொட்டிவிட்டது. அதை துடைப்பதற்காக துணியெடுக்க சமையலறைக்குச் சென்றேன். அதற்குள் கீழே வேகமாக இறங்கி வந்த என் பேத்தி, எண்ணெயில் வழுக்கி விழுந்துவிட்டாள். பின்மண்டையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தோம்.
எண்ணெய் கொட்டியதுமே, அருகில் கிடந்த துணியை எடுத்து அதன் மீது போட்டிருக்கலாம். அல்லது மேலே இருக்கிறவர்களுக்கு எண்ணெய் கொட்டிய விஷயத்தைச் சொல்லி, பேத்தியை இறங்கவிடாமலாவது செய்திருக்கலாம். அதற்குள் அவள் இறங்கி வரவா போகிறாள் என்ற அலட்சியத்தால் வந்த வினை இது. சின்ன அசட்டைகூட எத்தனை பெரிய ஆபத்தில் முடிந்துவிடுகிறது பாருங்கள் தோழிகளே! இனி நீங்களும் கவனமாக இருப்பீர்கள்தானே?
நன்றி : நம் தோழி- மா. பாக்கியம், ஈரோ

கட்சி சண்டையில் மாடுகள் வேண்டாமே!
----------
விவசாயத்திற்கும், வண்டி இழுக்கவும் உதவும் மாடுகளின் கொம்பில், சிலர் கட்சிக் கொடிகளின் வண்ணத்தைப் பூசுவதோடு, கட்சி கொடியையும் பறக்க விடுகின்றனர். சமீபத்தில், எங்கள் ஊருக்கு அருகில், இரு கட்சிக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் போது, கட்சி சாயம் பூசியிருந்த, ஒரு மாட்டை வெட்டிக் கொன்று விட்டனர். அரசியல் தகராறைக் காரணம் காட்டி, ஒரு வாயில்லா ஜீவனை கொல்வது எந்த வகையில் நியாயம்? உங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு, அப்பாவி மாடுகளா பலியாவது?
மாடுகளின் கொம்புகளில் கட்சிகளின் வண்ணம் பூசியிருந்தாலோ, கட்சிக் கொடி கட்டியிருந்தாலோ, அவர்களுக்கு, அரசு, கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். அப்போது தான், இம்மாதிரி கொடூரமான காரியங்களில், இனி, ஈடுபட மாட்டார்கள்.
அரசியல் கட்சிகளின் அல்லக் கைகளே... உங்கள் அரசியல் சண்டைகளில், நமக்காக பாடுபடும் வீட்டு விலங்குகளை பலிகடா ஆக்காதீர்கள்!
நன்றி - வாரமலர் - சி.வையாபுரி, கம்பம்.

கல்யாணம் என்றால் அவதிதானா?
------------
எனக்கு தெரிந்த பெண்மணி ஒருவருக்கு, கல்யாணமாகி ஐந்து மாதங்கள் ஆகின்றன. அவர், தன் தோழிக்கு கடிதம் எழுதும் போது, 'நான் கல்யாணம் செய்து கொண்டு அவதிப்படுகிறேன், அது மாதிரி, நீயும் அவசரப்பட்டு கல்யாணம் செய்து கொண்டு, அவதிப்படாதே...' என்று எழுதியிருந்தார்.
அதே போல், என் உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு வந்திருந்த அவர், மணமக்கள் அருகில் நின்று, 'இனிமேல் அடிமைதான் போ...' என்றார்.
இரு மனம் கலந்த திருமணம் புனிதமானது. அதை, ஒரு சிலரால் போற்றி காக்க முடியவில்லை என்றால், நம்முடைய வாழ்க்கையை போல் தான், எல்லாருடைய வாழ்க்கையும் இருக்கும் என்று நினைப்பது தவறு.
திருமண வாழ்வை, குதூகலத்துடன் ஆரம்பிக்க இருக்கும் புதுமண தம்பதிகளிடம், மணவாழ்வை பற்றி, இழிவாக பேசுவது, முறையற்ற, அநாகரிகமான செயல்!
nandri : மலர்விழி ரங்கசாமி, விருதுநகர்.

நோயாளியைப் பார்க்க மருத்துவமனைக்கு செல்லும் போது...
உறவினர் ஒருவர், உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் இருந்தார். அவரை பார்க்க, பழங்கள் வாங்கிக் கொண்டு, மருத்துவமனையில், துணைக்கு இருக்கும் உறவினருக்கு, சாப்பாடும் எடுத்துச் சென்றேன். உடல்நிலை சரியில்லாதவருக்கு, நாங்கள் பார்க்க வந்ததில் சந்தோஷம். உடனிருந்த உறவினருக்கு, நாங்கள் வீட்டு சாப்பாடு கொண்டு சென்றது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.
'ஒரு வாரமாக நோயாளிக்கு கொடுக்கப்படும் பிரட், கஞ்சி போன்ற உணவையே சாப்பிட்டு, நாக்கு செத்து விட்டது. இன்று தான், வயிறார சாப்பிட்டேன்...' என்றார்.
எனக்கும், சந்தோஷமாக இருந்தது. அது முதல், மருத்துவமனைக்கு யாரையாவது பார்க்க சென்றால், உடனிருப்போருக்காக சாப்பாடோ, சிற்றுண்டியோ எடுத்துச் செல்வது வழக்கமாகி விட்டது.
நன்றி : வாரமலர் - எஸ்.விஜயலட்சுமி, கோச்சடை.

அன்புக்கும் உண்டு எல்லை!
--------------
சுற்றமும் நட்பும் சூழ, சுற்றுலா சென்றிருந்தோம். பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து முடித்ததும் சாப்பிட உட்கார்ந்தோம். ஒவ்வொருவரும் ஆளுக்கொரு உணவு வகையைச் சமைத்து வந்திருந்தனர். அன்போடு சேர்த்து உணவையும் பரிமாறி மகிழ்ந்தோம். ஒருதோழி, டால்டா சேர்த்த குலோப்ஜாமூனை எடுத்து வந்திருந்தார்.
எனக்கு டால்டா ஒத்துக்கொள்ளாது என்று சொல்லியும் அன்பின் மிகுதியால் சாப்பிட வைத்துவிட்டார். ஆனால் அதைத் தொடர்ந்து பத்து நாட்களுக்கு உடல் முழுவதும் ஊறலும் தடிப்புமாக நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே, அது சொல்லி மாளாது. அன்புக்கும் ஒரு எல்லை உண்டு தோழிகளே. மற்றவருக்கு அவஸ்தை தரும் என்றால் அன்பை கொஞ்சம் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாமே!
+
கருத்துப்போல் அமையும் சின்ன கதைகள்
+
நன்றி - நம் தோழி - தேவசேனா திருமலையப்பன், உத்தங்குடி

திறமையைக் கொச்சைப்படுத்தலாமா?
----------
என் தோழியின் மகனுக்கு மத்திய அரசு வேலை கிடைத்த பூரிப்பில் இருந்தேன் நான். ஆனால் அவளது முகமோ வாட்டத்துடன் இருந்தது. தன் மகனுக்கு வேலை கிடைத்ததை அவள் பெருமையுடன் பகிர்ந்துகொள்ள, பெரும்பாலோனோர் `எவ்வளவு கொடுத்தீங்க? யாரைப் பிடிச்சீங்க?` என்று கேட்டு அவளை வேதனைப்பட வைத்திருக்கிறார்கள்.
இந்த மத்திய அரசுப்பணிக்காக அவளது மகன் எத்தனை போட்டித்தேர்வுகளை எழுதினான், எவ்வளவு புத்தங்களைப் படித்தான் என்பது எனக்குத் தெரியும். அவனது திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரத்தைச் சுற்றியிருக்கிறவர்கள் இப்படி ஒரு வார்த்தையில் கொச்சைப்படுத்திவிட்டார்களே என வருந்தினாள் தோழி. கையூட்டு கொடுத்தால்தான் எல்லாமே நடக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் எப்படி ஊறியிருக்கிறது பார்த்தீர்களா?
+
கருத்துப்போல் அமையும் சின்ன கதைகள்
+
நன்றி - நம் தோழி - ஆர். ராஜலஷ்மி, ஹூப்ளி

நிற மாற்றம் நல்லதா?
----------------
தன் மகள் நிறமாக இல்லையே என்ற கவலை என்தோழிக்கு. `நிறத்தில் என்ன இருக்கிறது? கறுப்பாக இருந்தாலும் லட்சணமாக இருக்கிறாள் உன் மகள்` என்று சொல்லி என் தோழியின் சிந்தனையை மாற்ற முயல்வேன். ஒருநாள் அவளை சந்தித்தபோது, அழகு கிரீம்கள் எதுவும் பயன்படுத்தாமலேயே தன் மகள் சிவப்பாகி வருவதாகச் சொன்னாள். திடீரென்று எப்படி நிறம் மாற முடியும் என்று யோசித்த நான், அவளது வீட்டுக்குச் சென்றேன்.
சோர்வுடன் காணப்பட்ட என் தோழியின் மகள், தனக்கு அடிக்கடி மயக்கம் வருவதாகச் சொன்னாள். அவளது வெளிறிய தோற்றத்தைப் பார்த்ததும் அவளுக்கு ரத்தசோகை இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டது. மருத்துவர், என் சந்தேகத்தை உறுதிசெய்துவிட, இப்போது மாத்திரையும் சத்தான உணவுகளும் சாப்பிட்டு வருகிறாள் அந்தப் பெண். தோழிகளே, எந்த திடீர் உடல் மாற்றமும் பரிசோதனைக்குரியதுதான். எதையும் அலட்சியம் செய்யாமல் இருந்தால் ஆபத்தைத் தவிர்க்கலாமே!
நன்றி நம் தோழி - ப. பூங்கோதை, காயக்காடு

இரவலுக்கு பதில் புதுசு!
-------------
என் வீட்டில் திடீர் விருந்து. முப்பது பேர் வருவார்கள் என்பதால் என்னிடம் இருந்த இரண்டு பிரஷர் குக்கர் போதாதென்று பக்கத்து வீட்டில் இருந்த உறவுப்பெண்ணிடம் குக்கர் வாங்கக் கிளம்பினேன். இரவல் வாங்குவதைவிட புதிதாக வாங்கலாமே என்ற கணவரின் ஆலோசனையை, `ஒருநாள் கூத்துக்காக...` என்ற உதாரணத்தைச் சொல்லி புறக்கணித்து விட்டேன். உறவுக்காரர் வீட்டில் வாங்கி வந்த அந்த குக்கரில் சமைக்கும் வரை எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. சமைத்து முடித்ததும் குக்கரைத் திறக்க முடியவில்லை. ஆளாளுக்கு பிரம்மபிரயத்தனம் செய்தும் குக்கர் மூடி அசைந்துகூட கொடுக்கவில்லை.
அண்டாகா கசம் சொல்லாததுதான் குறை. இத்தனைக்கும் நடுவே குக்கர் சொந்தக்காரியின் புலம்பல் வேறு. கடைசியில் அவளுக்குப் புது குக்கர் வாங்கித் தந்துவிடலாம் என்று கடைக்கு அழைத்துச் சென்றால், குறிப்பிட்ட பிராண்ட்தான் வேண்டும் என்று ஒத்தைக்காலில் நிற்கிறாள். கடை கடையாக ஏறி இறங்கி, அவள் கேட்ட மாதிரியே வாங்கித் தந்தும் நான் அவளை ஏமாற்றிவிட்டதைப் போல பேசினாள். அதையெல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தபோது என் கணவர் பார்த்த பார்வைக்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு சொல்லத்தான் வேண்டுமா?
நன்றி நம் தோழி- விஜயா கிருஷ்ணமூர்த்தி, சென்னை-78

வாங்க பழகலாம்!
--------------
நான் தினமும் செல்லும் காய்கறி கடைக்குச் சென்று தேவையானதை வாங்கிவிட்டு பையைத் துழாவினால் பர்ஸைக் காணோம். வீட்டிலேயே வைத்துவிட்டு வந்திருந்தேன். கடைக்காரரிடம் நாளைக்கு வந்து காய் வாங்கிக்கொள்வதாகச் சொன்னேன். நான் பணம் எடுத்துவரவில்லை என்பதை அறிந்தவர், `என்னம்மா, உங்களைத் தெரியாதா... என்னென்ன வேணுமோ வாங்கிக்கோங்க. வேற கடையில ஏதாவது வாங்கணும்னா சொல்லுங்க, நான் பணம் தர்றேன்` என்றார்.
அவர் பேச்சும் அணுகுமுறையும் என்னை வியக்கவைத்தது. நான் என்ன விதைக்கிறோமோ அதைத்தான் அறுக்கிறோம் என்பது எத்தனை உண்மை என்பது அப்போதுதான் புரிந்தது. பணத்தையும் தரத்தையும் வைத்து எப்போதும் நான் மனிதர்களை எடைபோடுவதில்லை. அனைவரிடமும் நன்றாகப் பழகுவேன். அதுதான் எனக்கு எதிர்பாராத நபரிடம் இருந்து எதிர்பாராத உதவியை கிடைக்க செய்திருக்கிறது!
நன்றி நம் தோழி- எஸ். விஜயலஷ்மி, சென்னை-8

ஏன் இப்படி பழக விடணும்!
---------------
எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில், பையனுக்கு வரன் பார்த்தனர். வந்த வரன்களில், ஒரு பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்து, பெண்ணை பிடித்து விட்டதாக கூறிவிட்டனர். பின், ஒரு நாளில், பெண் பார்க்க போவதாக திட்டம்.
பெண்ணின் ஊரிலேயே, பையன் வேலை பார்த்ததால், அதற்குள், இருவரும் பழக ஆரம்பித்து விட்டனர். இரண்டு வீட்டிற்கும் தெரிந்தே, இந்த கூத்து நடந்தது.
இந்நிலையில், சில மாதங்கள் கழித்து, பெண் பார்க்கச் சென்றிருந்த போது, பெண், மிகவும் ஒல்லியாக இருந்ததால், பையனின் உறவினருக்கு பெண்ணை பிடிக்கவில்லை. பையன் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவனது, பெற்றோர் ஒத்துக் கொள்ளவில்லை.
இதனால், திருமணம் நின்று போனது. தற்போது, அந்த பையன், 'உங்களால், நான் ஒரு பெண்ணுக்கு, நம்பிக்கை துரோகம் செய்து விட்டேன். எனக்கு, இனி, திருமணமே வேண்டாம்...' என்று கூறி, வெளிநாட்டிற்கு பறந்து விட்டான். இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு, வேறொரு இடத்தில், திருமணம் முடிந்து விட்டது.பையனின் பெற்றோரோ, தற்போது, தவியாய் தவித்துக் கொண்டிருக்கின்றனர். பெண் கூட பார்க்காத நிலையில், சின்னஞ்சிறுசுகளை பழக விட்டது, பெரியவர்கள் தவறு தானே... தேவையா இது?
nandri - ஜெ. ஜெசிக்கா, சென்னை.

பாஸ்ட்புட் கொடுமை!
எனக்கு தெரிந்த ஒரு பெண்ணிற்கு, குழந்தை பிறந்து நான்கு நாட்களில், அது, இறந்து விட்டது. அக்குழந்தைக்கு கேன்சராம். தாய்க்கு, கர்ப்பையில் கேன்சர் பாதிப்பு இருந்திருக்கிறது. அது, குழந்தையை பலி வாங்கி விட்டது.
கேன்சருக்கு காரணம், அந்த பெண், கர்ப்பமாக இருந்த போது, இயற்கை உணவை அறவே புறக்கணித்து, கடையில் விற்கும் ரெடிமேட் உணவுகள், திரும்ப திரும்பச் சுட வைத்த எண்ணெயில் பொரித்த பண்டங்கள், பேக்கரி பொருட்கள், சிப்ஸ் என்று, இவைகளையே, அதிகம் சாப்பிட்டு வந்துள்ளார். இதன் விளைவே, கர்ப்பபை புற்று நோய்.
'மேல்நாட்டு மோகத்தில், மக்கள் தாங்களாகவே நோயைத் தேடி கொள்கின்றனரே...' என்று, அவருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் மிகவும் வேதனைப்பட்டார். இதைத் தான், 'சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொள்வது' என்று கூறுவர்.
இனிமேலாவது, இளம் தலைமுறையினர் நம்நாட்டு உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பரா!
nandri - பத்மா திருமலை, கோவை.

'அதற்கு' முன் அனுபவம் தேவையா?
சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றின், சில காட்சிகளைப் பார்த்து அதிர்ந்து போனேன். அதில் காமெடியன், 'கத்திச் சண்டையில் தோற்கலாம், கட்டில் சண்டையில் தோற்கக்கூடாது...' என, ஒரு ஆண்மகனுக்கு அதுவும், தன் தங்கையை விரும்பும் காதலனுக்கு அறிவுரை கூறி, அவனை, 'பலான' இடத்திற்கு, முன் அனுபவம் பெற அழைத்துச் செல்வதாக நீளுகிறது காட்சி.
அது நகைச்சுவை காட்சிதான் என்றாலும், எதற்கும் ஒரு எல்லை இல்லையா? இப்படி எல்லா ஆண்மகனும், முன் அனுபவம் தேடி புறப்பட்டால், எய்ட்சில் தான், முடியும். இதையே பெண்கள் செய்தால், இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா?
அன்றைக்கு நகைச்சுவை என்றால், அறிவு சார்ந்து இருக்கும். என்.எஸ்.கே., போன்றோர் மகுடம் சூட்டிய அந்த கலையில், இப்போது இரட்டை அர்த்த வசனங்களும், மலிவான யோசனைகளுமே முன்வைக்கப்படுகின்றன. நாட்டுப்பற்றோடு, தேசிய உணர்வையும் ஊட்டிய சினிமா, இன்றைக்கு வெறும், 'டைம் பாசாகி' விட்டது, கவலையளிக்கிறது.
இறுதியாக... நீங்கள் சந்தனமா மணக்க வேண்டாம் காமெடியன்களே... தீயா வேலை செய்றோம்கிற பேரில், நாயா வேலை செய்து, சமூகத்தை நாறடிக்க வேணாமே... என, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி - வாரமலர் - யாழினி கவுதம், காரைக்குடி.

நோ தீபாவளி, நோ பொங்கல்!
தீபாவளி பண்டிகையன்று, வாழ்த்துகள் பரிமாறிக் கொள்வதற்காக, கையில் ஸ்வீட் பாக்சோடு, நண்பர் ஒருவர் வீட்டுக்கு நேரில் சென்றிருந்தேன். குடியிருப்பில், நண்பரின் வீடு மட்டுமே கலகலப்பின்றி இருந்தது. வீட்டுக்குள், நான் கண்ட காட்சி, என்னை வியப்பில் ஆழ்த்தியது!
அக்கம் பக்கத்து வீட்டிலுள்ள, சமவயது பிள்ளைகளெல்லாம் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, ஆனந்தமாக கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், நண்பரின் பிள்ளைகளோ புத்தகமும், கையுமாக இருந்தனர். என் பார்வையை புரிந்து கொண்ட நண்பர், 'இந்த ஆண்டு எங்களுக்கு நோ தீபாவளி, நோ பொங்கல்...' என்றார்.
'ஏன்?' என்று கேட்டேன்.
'மகள், பிளஸ் 2 படிக்கிறாள்; மகன் பத்தாவது படிக்கிறான். இருவருமே, இந்த ஆண்டு, போர்டு எக்சாம் எழுத இருக்கிறார்கள். பரிட்சையில் நல்ல மார்க் எடுத்தால்தான், டிரஸ், ட்ரீட், என்டர்டெயின்மென்ட் எல்லாமே...' என நண்பர் கூற, அவரது பிள்ளைகளின் கண்களில், எதையோ, 'மிஸ்'செய்றோம் என்ற ஏக்கம் தெரிந்தது!
பெற்றோரே... பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த உங்களின் கனவு நியாயமானதாக இருக்கலாம். ஆனால், அதை செயல்படுத்துவதில், இத்தனை கண்டிப்பும், கறார்த்தனமும் தேவைதானா? கல்வியை ஊட்டுவது, இனிப்பாக இருக்க வேண்டுமேயல்லாமல், திணிப்பாக இருக்கக் கூடாது!
நன்றி - வாரமலர்- பாலா சரவணன், சென்னை.

பெண் பார்க்க செல்கிறீர்களா?
அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, என் நண்பரிடம் இருந்து போன் வந்தது. எங்கள் ஊரில் உள்ள கோவிலுக்கு, உடனடியாக வருமாறு அழைத்தார். என்ன விஷயம் என்று புரியாமல், நானும் அங்கு சென்றேன். அங்கு என் நண்பரும், மற்றும் அவரின் குடும்பத்தாரும், ஒரு இடத்தில் ஒன்று கூடியிருந்தனர். அப்போது, ஏற்கனவே அங்கு வந்திருந்த, மற்றொரு குடும்பத்தார், சற்று தொலைவில் அமர்ந்திருந்தனர்.
என் நண்பரின் அம்மா, அங்கிருந்த பெண், ஒருவரைக் காட்டி, 'பிடித்திருக்கிறதா?' என, அவரிடம் கேட்டார். அவரும் பிடித்திருக்கிறது என்று சொன்னவுடன், அவர் அங்கு சென்று, ஒரு பெண்ணிடம் பூவும், ஸ்வீட் பாக்சும் கொடுத்து, பேசிவிட்டு வந்தார். நடப்பது எதுவும் புரியாத நான், என்னவென்று விசாரித்தேன்.
அதற்கு அவர், சற்று தொலைவில் இருக்கும் பெண் தான், எங்க வீட்ல எனக்கு திருமணத்திற்கு பார்த்து வச்சிருக்கிற பொண்ணு என்றும், போட்டோவை பார்த்து, எங்கள் வீட்டில் சம்மதித்து விட்டனர். ஆனால், வரனை நேரில் பார்க்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதனால் தான், நேற்றே அப்பெண் வீட்டாரிடம், குடும்பத்துடன் கோவிலுக்கு வருமாறும், அங்கு பெண்ணை பார்த்துக் கொள்கிறோம் என்றும், கூறி விட்டோம்.
பெண் பார்க்க போகிறோம் என, ஒரு கூட்டத்தையே கிளப்பி கொண்டு போய், பெண்ணை பார்த்து, ஏதேனும் காரணத்தால் நின்று போனால், அந்த பெண்ணுக்கும், அவர் குடும்பத்திற்கும் ஏற்படும் மனகஷ்டத்திற்கும், கேலிப் பேச்சுக்கும் யார் பதில் சோல்வது!
மேலும், அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக பேசுவர். அதனால் தான், இம்மாதிரி பொது இடங்களில் சென்று பார்த்து விட்டு, பின், திருமணம் செய்ய சம்மதம் இருந்தால் மட்டும், அவர்கள் வீட்டிற்கு, உற்றார் உறவினரை அழைத்துக் கொண்டு போக முடிவெடுத்தோம்' என்று கூறினார். நண்பரின் இந்த யோசனை சரியென தோன்றியது.
நன்றி - வாரமலர்-- கா.கந்தசாமி, விருதுநகர்.

பிளாஸ்டிக் பையை ஒழிக்க...
--------
சமீபத்தில், மும்பையில், ஒரு பிரபல டிபார்ட்மென்ட் கடையில், பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க, ஒரு நூதன முறையைப் பின்பற்றுவதைக் கண்டேன்.
வாடிக்கையாளர்கள், தங்கள் தேவைக்கேற்ப துணிப் பைகளை, சைஸ் வாரியாக, 50ரூபாய், 100ரூபாய் என, டெபாசிட் செய்து பெற்றுக் கொண்டு, பொருட்களை பெற்றுச் செல்லலாம். பின்னர், தாங்கள் எடுத்துச் சென்ற பையை திருப்பி தந்து, டிபாசிட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இங்கு, பிளாஸ்டிக் பை உபயோகம் இல்லை. கடைக்காரர்களும், பையை திருப்பித் தர, வாடிக்கையாளர்களை வற்புறுத்துவதில்லை. வாடிக்கையாளர்களும், மகிழ்ச்சியாக பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
எல்லாக் கடைகளிலும், இதைப் போலவே பின்பற்றலாமே? பிளாஸ்டிக் பைகளின் உபயோகம், மிகவும், குறைய வாய்ப்புள்ளது.
நன்றி - வாரமலர்- கே.ஸ்ரீனிவாசன், சென்னை.

Similar topics
» முல்லைப்பெரியார் பற்றி பதிவர்களின் கருத்துக்கள்...!!!
» ஓஷோவின் சின்ன கருத்துக்கள்
» கடவுள் நம்பிக்கை-சிவகுமாரின் மேலும் சில கருத்துக்கள்….!
» விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
» 8) திருக்குறள் கருத்துக்கள் = புதுக்கவிதை -சிங்கை டாக்டர். மா. தியாகராசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum