தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் இலக்கிய சுவைகள்

Go down

தமிழ் இலக்கிய சுவைகள்  Empty தமிழ் இலக்கிய சுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 11:11 am

தமிழிலக்கிய வினா – விடை
--------------
செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு – 1903
செந்தாமரை நாவல் ஆசிரியர் – மு.வரதராசன்
செம்பியன் தேவி நாவலாசிரியர் – கோவி.மணிசேகரன்
செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார்
செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு
சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்
சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராகவையங்கார்
சேயோன் – முருகன்
சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து
சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து
சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார்
சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான்
சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை
சைவசமயக் குரவர்கள் – நால்வர்
சைவத் திறவுகோல் நூலாசிரியர் – திரு.வி.க
சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க
சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை
சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர்
சொல்லின் செல்வர் – ரா.பி.சேதுபிள்ள
சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன்
சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம்
சோழ நிலா நாவலாசிரியர் – மு.மேத்தா
ஞாநசாகரம் இதழாசிரியர் – மறைமலையடிகள்
ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி
ஞானக் குறள் ஆசிரியர் – ஔவையார்
ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
ஞானவெண்பாப் புலிப்பாவலர் – அப்துல் காதீர்
டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா
-=============================================
முனைவர் நா.சிவாஜிகபிலன்

நன்றி ;ராம் மலர் ஐயா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் இலக்கிய சுவைகள்  Empty Re: தமிழ் இலக்கிய சுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 11:12 am

கொம்பை வெட்டிக் காலை நடு!

இலக்கியம்

பிறவியிலேயே கண்பார்வை இழந்தவராய் பிறந்திருந்தும்
தமிழ்ப் புலமை நிரம்பியவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார்.
இவருடைய பாடல்கள் சொற்சுவையும் பொருள் நயமும் உடையவை.
ஒருமுறை இவர் சந்திரவாணன் மீது கோவை பாடிக்கொண்டிருந்தார்.


மாலே நிகராகுஞ் சந்திரவாணன் வரையிடத்தே

பாலேரியாயத் தேன்மாரி பெய்யநற்

பாகுகற்கண்டாலே

யெருவிட முப்பழச் சேற்றின அமுதவயன்

மேலே முளைத் தகரும்

போவிம் மங்கைக்கு மெய்யெங்குமே!

இந்தச் செய்யுளை கவிஞர் தன் மாணவனுக்குச் சொல்லி அவரை
ஏட்டில் எழுதப் பணித்தார். அதனைக் கேட்டுக்கொண்டிருந்த
திருப்பனைங்காட்டைச் சேர்ந்த அம்மைச்சி என்னும் மங்கை
“கவிராயருக்குக் கண்தான் கெட்டது – மதியும் கெட்டதோ? கரும்பு
சேற்றில் முளைக்காது என்பது தெரியவில்லையே” எனச் சொன்னார்.

இதனைச் செவிமடுத்த புலவர் அம்மங்கையின் கூற்றை ஆய்ந்து
சரி எனப்படத் தன் மாணவனிடம் “கொம்பை வெட்டி காலை நடு’
என்றார். மாணவரும் அதனைத் தெரிந்து கொண்டு சேற்றின
என்பதனைச் சாற்றின என மாற்றம் செய்து படித்தார்.
கேட்டுக் கொண்டிருந்த புலவர்கள் யாவரும் களிப்பெய்தனர்.

திருமாலுக்கு நிகரான சந்திரவாணன் வாழுமிடத்தே ஏரிகளிலெல்லாம்
பாலாகப் பாய்ந்து செழிக்க மாரி தேனாகப் பொழிகிறது.
கற்கண்டால் வயல்களுக்கு எருவிட்ட அந்நிலத்தில் முப்பழங்களாலான
சாற்றில் விளைந்த கரும்பின் சுவையை ஒத்திருக்கிறது இம்மங்கையின்
மேனியெங்கும் எனச் சுவைபடப் பாடல்
அமைந்ததற்கு புலவர்கள் யாவரும் கவிராயரை வாழ்த்தினர்.

இப்படி ஓர் அருமையான பாடலைப் பாடிய கவிராயர் பாடலைக் கேட்க
வந்த மங்கை சொன்ன திருத்தத்தையும் ஏற்றுச் செயல்பட்டது அவரது
பணிவைக் காட்டுகிறது.

—————————————–
-புலவர் ப.சோமசுந்தரவேலாயுதம்

தமிழ்மணி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் இலக்கிய சுவைகள்  Empty Re: தமிழ் இலக்கிய சுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 11:14 am

மங்கையின் போராட்டம்!
--------------
 இலக்கியம்

மக்களாட்சி இல்லாத ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னரே
உண்ணாநிலைப் போராட்டத்தின் மூலம் மன்னனின்
கவனத்தைத் திருப்பி வெற்றி கண்டாள் பெண் ஒருத்தி எ
ன்பதை அகநானூறு கூறுகிறது.

பசுமை நிறைந்த அந்தக் காட்டை முதுகோசர்கள் என்னும்
நில உரிமையாளர்கள் எருதுகள் பூட்டி, உழுது, நீர்ப்பாய்ச்சி,
பண்பட்ட நிலமாக்கி, பயிறு விதைகளை விதைத்து சிறந்த
தோட்டமாக்கிப் பாதுகாத்து வந்தனர்.

ஒருநாள் அந்தத் தோட்டத்தில் பசு ஒன்று மேய்ந்து விடுகிறது.
அதுகண்ட முதுகோசர்கள் அப்பசுவிற்குரியவனை அழைத்து
விசாரிக்கின்றனர். அவன் தன்னுடைய கவனக்
குறைவால்தான் இப்படி நேர்ந்தது என்று தன் குற்றத்தை ஒப்புக்
கொள்கிறான். அதற்காக வருந்துகிறான்.

ஆயினும் முதுகோசர்கள் சினம் அடங்கினாரில்லை.
தம் கண்ணிலும் மேலாகக் காத்த அத்தோட்டம் அழிவதற்கு
இவனே காரணம் எனக் கூறி அவன் கண்களைப் பிடுங்கி
விடுகின்றனர். இதைக் கேள்வியுற்ற அவன் மகள் அன்னிமிஞிலி
கொதித்தெழுகிறாள். தன் தந்தைக்கு இழைக்கப்பட்ட
கொடுமைக்கு நியாயம் கிடைப்பதற்காக உண்ணாவிரதப்
போராட்டத்தைத் தொடங்குகிறாள்.

உண்கலத்தில் உணவிட்டு உண்ணாமலும், தன்னை அழகுப்
படுத்திக்கொள்ளாமலும், தூய உடை உடுத்தாமலும்
இருக்கிறாள். இப்போராட்டம் பல நாள்கள் தொடர்கிறது.

போராட்டத்தைக் கைவிடும்படி கேட்கும் ஊராரிடம்
“தன் தந்தையைக் கொடுமை படுத்தியவர்களை மன்னன்
ஒடுக்கும் வரை ஓயாமல் போராடுவேன்’ என்று கூறிப்
போராட்டத்தைத் தொடர்கிறாள். இச்செய்தி நாடெங்கும் பரவி,
மன்னன் திதியனின் செவிக்கும் எட்டுகிறது. போராடும்
அப் பெண்ணை அழைத்து, அவளை உசாவி, உண்மை நிலையை
அறிந்து கொள்கிறான்.

இக்கொடிய செயலைக்கேட்ட மன்னன் கொதிப்படைகிறான்.
தன் குடிக்கீழ் வாழும் ஒருவனுக்கு இக்கொடுஞ்செயல் செய்த
அந்த முதுகோசரைக் கொன்றொழிக்கிறான்.

இச்செய்தியைக் கேட்ட அன்னிமிஞிலி தனது உண்ணாவிரதப்
போராட்டத்தைக் கைவிடுகிறாள். மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

மக்களாட்சியில் ஏழையின் குரலுக்கு மதிப்பளிப்பதில்
வியப்பொன்றுமில்லை. ஏழைப் பெண்ணின் உணர்வுகளுக்கும்
முடியாட்சியில் மன்னர்கள் மதிப்பளித்து ஆண்ட தமிழகம் இது
என்பதைக் காட்டும் சங்க இலக்கியப் பாடல் இதுதான்:

“முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கிப்

பகடுபல பூண்ட உழுவுறு செஞ்செய்

இடுமுறை நிரம்பி ஆகுவினைக் கலித்துப்

பாசிலை அமன்ற பயறுஆ புக்கென

வாய்மொழித் தந்தையைக் கண்களைத் தருளாது

ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின்

கலத்தும் உண்ணாள் வாலிது மூடாஅள்

சினத்தில் கொண்ட படிவ மாறாள்

மறங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன்

செருவியல் நன்மான் திதியற் குரைத்தவர்

இன்னுயிர் செகுப்பக் கண்டுசின

– மாறியஅன்னிமிஞிலி போல”

(அகம்.மணி.262,1-12)

——————————————-

-சு.சொக்கலிங்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் இலக்கிய சுவைகள்  Empty Re: தமிழ் இலக்கிய சுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 11:16 am

முத்தான முத்தம்

இலக்கியம்




நவமணிகளில் ஒன்று முத்து.
“துன்னரிய தரளம், நித்திலம், ஆரம், முத்து ஆம்’ என்று முத்தின்
பெயர்களைக் கூறுகிறது ஆசிரிய நிகண்டு.

அபிதான சிந்தாமணி என்னும் கலைக்களஞ்சியம் முத்துச் சனிக்கும்
(பிறக்கும்) இடங்கள் என ஒரு பட்டிலைத் தருகிறது. இதழோடு இதழ்
சேர்த்து இனிக்க இனிக்கத் தருவதும் பெறுவதும் முத்தம்.
என்றாலும், முத்தைக் குறிக்கும் இன்னொரு சொல்தான் முத்தம்.

“முறிமேனி, முத்தம் முறுவல், வெறிநாற்றம்

வேல்உண்கண் வேய்த்தோ ளவட்கு”

(குறள்.1113)

என்று திருக்குறள் தலைவன், தலைவியின் நலம்புனைந்து
உரைக்கிறான். கடவுளரையும் பெரியோரையும் குழந்தையாகப்
பாவித்துப் பாடும் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியத்தில்,
முத்தப்பருவம் என ஒன்றுண்டு.

பகழிக்கூத்தர் என்ற புலவர் இயற்றிய திருச்செந்தூர்ப் பிள்ளைத்
தமிழின் முத்தப்பருவப் பாடல், பல்வேறு இடங்களில் பிறக்கும்
முத்துக்களைப் பற்றிக்கூறி, “அந்த முத்துக்களுக்கு எல்லாம் முருகா!
உன் கனிவாய் முத்தம் ஈடாகுமோ, முத்தம் தருவாய் முதல்வா’ என்று
சொல்கிறது.

“இடைவிடாது எந்நேரமும் ஓசை முழங்கும் பெருங்கடலில்
அடுத்தடுத்துக் கரைமோதும் அலைகள், வலம்புரி சங்குகளை
வாரிக் கடற்கரையில் இறைக்கின்றன. அந்தச் சங்குகளின் சூல்
முற்றி முத்துக்களாக உதிர்கின்றன.

அந்த முத்துக்களுக்கு விலை கூறிவிடலாம். பருத்த யானைகளின்
பிறைநிலா போல் வளைந்த தந்தங்களில் பிறக்கும் தரளத்திற்கு
விலையுண்டு. தழைத்து வளர்ந்து முற்றிச் தலைசாயும் செந்நெல்லில்
பிறக்கும் குளிர்ந்த முத்துக்கும் விலையுண்டு.

கடல் நீரை முகந்து இந்தப் பார் செழிக்கப் பொழியும் கார்மேகத்தில்
தோன்றும் முத்துக்கும் விலையுண்டு. நீலத் திரைகடல் எந்நேரமும்
தன்னில் பிறந்த முத்துக்களை எல்லாம் வாரி வாரிக் கடற்கரையில்
குவிக்கின்ற பெருமைமிகு திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள
செந்திலாதிபனே, உன் செங்கனிவாய் முத்தத்திற்கு விலையுண்டோ?
உன் கொவ்வைச் செவ்வாயின் குமிழ்முத்தம் தந்தருள்வாய்’ என்று
வேண்டும் பகழிக் கூத்தரின் திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்ப் பாடல்
இதுதான்:


“கத்துந் தரங்கம் எடுத்தெறியக்

கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்

கரையில் தவழ்ந்து வாலுகத்திற்

கான்ற மணிக்கு விலையுண்டு;

தத்துங் கரட விகடத் தடத்

தந்திப் பிறைக்கூன் மருப்பில்விளை

தரளந்தனக்கு விலையுண்டு;

தழைத்துக் கழுத்து வளைந்த மணிக்

கொத்துஞ் சுமந்த பசுஞ்சாலிக்

குளிர் முத்தினுக்கு விலையுண்டு;

கொண்டல் தரு நித்திலர் தனக்குக்

கூறுந்தரமுண்டு; உன் கனிவாய்

முத்தந் தனக்கு விலையில்லை

முருகா முத்தந் தருகவே!

முத்தஞ் சொரியும் கடல் அலைவாய்

முதல்வா முத்தந் தருகவே!

———————————-

-கண்ணையன் தட்சிணாமூர்த்தி
நன்றி- தினமணி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் இலக்கிய சுவைகள்  Empty Re: தமிழ் இலக்கிய சுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 11:19 am

தோழியின் ஊடல்
இலக்கியம்


தமிழில் அன்பின் இணையரிடம் ஏற்படும் சிறு பிணக்கு
ஊடல் எனப்படும். அன்பினருக்குள் ஏற்படும்
இந்த ஊடல் மேலும் அன்பினை மிகுவிக்கக்கூடியது.
சங்ககால களவு வாழ்க்கையில் தலைவன்-தலைவி இருவரும்
சந்திப்பதற்குக் குறியிட்ட இடத்துக்கு காதலி வரத் தவறிய
போது காதலன் ஊடுவான்.

கற்பு வாழ்க்கையில் தலைவனின் பரத்தை ஒழுக்கத்தைக்
கண்டிக்கும் விதமாகத் தலைவி ஊடுவாள். தலைவியின்
ஊடலைத் தீர்க்கத் தலைவன் தூது விடுவான். பாங்கன்
தூதாகச் செல்வான். தலைவி ஊடல் நீங்கத் தூது விட்டதாகக்
குறிப்புகள் இல்லை.

இவ்வகை ஊடலை உணர்த்தும் பல பாடல்கள் சங்க அக
இலக்கியங்களில் உள்ளன.

களவு, கற்பு எனும் இரு அக வாழ்க்கை நிலையிலும் தலைவன் –
தலைவி இருவருக்குள் ஏற்படும் ஊடலைத் தோழி பக்குவமாக
எடுத்துரைத்து ஊடல் நீக்குவாள்.

தோழியின் ஊடல் நீக்கமானது களவு வாழ்க்கையில் காதலைத்
தொடரச் செய்யும், கற்பு வாழ்க்கையில் இல்லறத்தைச் சிறக்கச்
செய்யும்.

தலைவன், தலைவிக்குள் ஏற்படும் ஊடலை நீக்கும் தோழிக்கே
ஊடல் ஏற்பட்டதை வெளிப்படுத்தும் கபிலர் பாடிய ஒரு பாடல்
நற்றிணையில் உள்ளது. தலைவனுக்குக் குறைநேர்ந்தபோது
தலைவியிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி, தலைவன்
நிலையை உணரச் செய்யலாம் என்று தோழி எண்ணுகிறாள்.

தலைவி, தோழியின் சொல்லைக் கேட்டும் மனநிலையில்
இல்லாது அவள் சொல்வதை கண்டும் காணாததுபோல்
இருக்கிறாள். தாம் சொல்லும் கருத்தைக் கேட்கும் நிலையில்
இல்லாத தலைவியை நோக்கிப் பலவாறு கூறிவிட்டு ஊடுகிறாள்
தோழி.


“”மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்

வலியோன் அன்ன வயங்குவெள் அருவி

அம்மலை கிழவோன் நம்நயந்து என்றும்

வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய்

நீயும் கண்டு நும்மரோடும் எண்ணி

அறிவறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு

அரிய வாழி தோழி பெரியோர்

நாடி நட்பின் அல்லது

நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே” (நற்-32)

“மாயோனைப் போன்ற கரிய பெரிய மலைப்பக்கம்;
கண்ணனுக்கு முன்னவனாகிய பலதேவன் போன்று
வெண்மையான அருவிகள்; அத்தகு மலைக்குரிய தலைவன்
நாள்தோறும் நம் தினைப் புனத்தின் அருகில் வந்து நம்மை
விரும்பி வருந்தி நிற்கிறான் என்று நான் கூறும்
உண்மையான உரையை நீ ஏற்றுத் தெளிந்து கொள்ளவில்லை.
அவன் கூற்றும் மறுத்தற்குரியது இல்லை.

நான் சொல்வதைக் கேட்கவில்லையென்றாலும் உன்னிடத்து
அன்பு கொண்ட தோழியரிடம் கேட்டாவது ஆராய்ந்து இது
தக்கது, இது தகாதது என்பதை அறிந்து கொள்வாயாக.
அறிவுமிக்க சான்றோர் தம்மொடு நட்புக் கொள்ள
விரும்பியவர்களின் குணங்களை முதலில் ஆராய்ந்து பார்த்த
பின்னரே நட்புக்கொள்வர்.

நட்பு கொண்ட பின்னர் ஆராய்ந்து பார்க்க மாட்டார். நீ அவ்வாறு
தலைவனோடு நட்புக் கொள்ளவில்லை. முதலில் நட்புக் கொண்டு
விட்டு இப்போது வெறுத்தல் தகாது என்பதை அறிக” என்று
தோழி தலைவியிடம் ஊடல் கொண்டுவிட்டுச் செல்கிறாள்.

சங்க இலக்கியங்களில் தோழி, தலைவியோடு ஊடல் கொள்வதாக
இந்த ஒரு பாடல் மட்டுமே உள்ளதாகத் தெரிகிறது.
தோழி ஊடல் கொள்ளும் வகையிலமைந்த இப்பாடல்,
467(எண்ணித் துணிக), 791 (நாடாது நட்டலிற்) ஆகிய இரு
குறட்பாக்களை நினைவுகொள்ளச் செய்கிறது.

————————————
-முனைவர் இரா. வெங்கடேசன்
நன்றி- தினமணி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் இலக்கிய சுவைகள்  Empty Re: தமிழ் இலக்கிய சுவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் இலக்கிய ஒலிக்கோப்புகள்.
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» புகழ் பெற்றவர்களின் நகை சுவைகள்
» தமிழ் மக்கட் பெயர்கள் - நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள்
» நீங்கள் தமிழ் FM பிரியரா? இதோ உங்களுக்காக அணைத்து தமிழ் FM களும் ஒரே இடத்தில்,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum