தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பிரியங்கா சோப்ரா: அமெரிக்க ஆனந்தமும்.. அவமானமும்..
Page 1 of 1

[You must be registered and logged in to see this image.]
இந்தியாவிலும், அமெரிக்காவிலும் நடிப்பில் கலக்கிக்கொண்டிருக்கிறார், பிரியங்கா சோப்ரா. இங்கே ‘பாஜீராவ் மஸ்தானி’ இந்தி படம் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. அதில் பாஜீராவின் காதலி ‘காஷியபாயி’யாக நடித்துள்ளார் பிரியங்கா. அமெரிக்காவில் தொலைக்காட்சி தொடர் ‘குவாண்டிகோ’வில் முக்கிய கதாபாத்திரத்தில் அசத்திக்கொண்டிருக்கிறார்.
அவரது அமெரிக்க அனுபவங்களை கேட்போமா!
அமெரிக்க நடிகர்கள் மூலம் உங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய பாராட்டு?
‘‘அவர்கள் என்னை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும்போது, ‘இவர் இந்தியப் பெண்’ என்று கூறுவார்கள். அதுதான் எனக்கு கிடைக்கும் மிகப்பெரிய பாராட்டு. அப்போது என் மனதில் ஒருவித பொறுப்புணர்வு தொற்றிக்கொள்ளும். ஒழுங்காக வேலைபார்த்து நமது நாட்டிற்கு பெருமை தேடித் தர வேண்டும் என்று மனதில் சங்கல்பம் செய்துகொள்வேன்’’
‘பாஜீராவ் மஸ்தானி’ பட டிரைலர் வெளியிடும்போது நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டீர்களாமே?
‘‘ரண்வீர் கேலியாக சொன்ன விஷயம் அது. நான் கண் வலியால் கண்களை கசக்கிக் கொண்டிருந்தபோது என்னை படம்பிடித்து அனைவருக்கும் அனுப்பிவிட்டார். ‘பிரியங்கா உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார். இந்த படம் எனக்கு மனநிறைவை தந்துவிட்டது. அதனால் இதோடு சினிமா வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று நெகிழ்ந்து கூறிவிட்டாள்’ என்றெல்லாம் குறிப்பிட்டு, அவர் விளையாட்டாக அனுப்பிய செய்திகளை சிலர் உண்மை என நம்பி என்னிடமும் விசாரித்தனர்’’
சஞ்சய் லீலா பன்சாலியின் படத்தில் நடிக்க எல்லா நடிகைகளும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவர் தொடர்ந்து உங்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்து வருகிறாரே ஏன்?
‘‘அவர் டைரக்டர் என்பதைவிட எனக்கு சிறந்த நண்பர். நான் அவர் நட்பில் நம்பிக்கை வைத்திருக் கிறேன். அவர் என் நடிப்பில் நம்பிக்கை வைத்திருக் கிறார். அவர் வித்தியாசமாக சிந்திக்கக்கூடியவர். என்னை மனதில் வைத்துக்கொண்டு கதாபாத்திரங்களை சித்தரிப்பதால் என்னை தேர்வு செய்கிறார். அவர் சொன்ன கதாபாத்திரத்தில் நான் நடிக்காவிட்டால், அந்த படத்தையே கைவிட்டுவிடுவார்.
அவருடைய அலுவலகம் முழுவதும் என்னுடைய படங்களை ஒட்டி வைத்திருக்கிறார். அது எனக்கே ஆச்சரியமாக இருக்கும்’’
அமெரிக்க மக்கள் உங்களிடம் எப்படி பழகுகிறார்கள்?
‘‘நட்போடுதான் பழகுகிறார்கள். ஆனாலும் அவர்கள் மனதில் இன்னமும் நிறத்தை பற்றிய பேதம் இருக்கிறது. ஆபிரகாம் லிங்கன் வந்து இனவெறியை மாற்றிவிட்டார் என்பதெல்லாம் ஓரளவுதான் உண்மை. நிறத்தை வைத்துதான் மனிதர்களை மதிக்கிறார்கள். ‘இந்தியாவில் ஒவ்வொரு மாநில மக்களும் வெவ்வேறு நிறம் கொண்டவர் களாக இருக்கிறார்களே. அவர்களுக்குள் பேதம் ஏற்படுவதில்லையா?’ என்று என்னிடம் கேட்டார்கள். அதிர்ச்சியாக இருந்தது. ‘எங்களுக்குள் நிற பேதம் கிடையாது. எல்லோரும் இந்தியர்கள் என்ற ஒரே உணர் வோடுதான் பழகுகிறோம்’ என்றேன். ஆச்சரியப்பட்டார்கள். அவர் கள் மனிதர்கள் என்றால் வித்தியாசம் இருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள்’’
நமது வாழ்க்கை முறையில் அவர்களை ஆச்சரியப்படுத்தும் விஷயம் எது?
‘‘நமது ஊரில் நடக்கும் அறுபதாம் கல்யாணத்தை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். ‘எப்படி ஒரே மனைவியுடன் இவ்வளவு காலம் வாழ்கிறார்கள்?’ என்று வியப்பார்கள். ‘உங்கள் நாட்டில் மந்திரவாதிகள் அதிகமாக இருக்கிறார் களாமே. பிடிக்காதவர்களை மந்திரம் செய்து கொன்றுவிடுவார்களாமே?’ என்று பீதியுடன் கேட்பார்கள். நமது நாட்டு மந்திரவாதிகளுக்கு உதவ தனி கடவுள் இருப்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்’’
நம்மை பற்றி அவர்களது மதிப்பீட்டில் உங்களை கஷ்டப்படுத்திய விஷயம்?
‘‘அமெரிக்க பெண் ஒருவர் என்னிடம், ‘இப்போது இந்தியாவில் கற்பழிப்புதான் விசேஷம். யார் வேண்டுமானாலும் பெண்களை எளிதில் பாலியல் பலாத்காரம் செய்யலாம். அரசாங்கம் கண்டுகொள்ளாது’ என்றார். கேட்டுக்கொண்டிருந்த பலரும் சிரித்தார்கள். எனக்கு அவமானமாக இருந்தது. ஆனால் உண்மை அது தானே!’’
-
தினத்தந்தி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» நடிகை பிரியங்கா சோப்ரா...
» பிரியங்கா சோப்ரா உடல் உறுப்பு தானம்
» உலகின் இரண்டாவது அழகி பிரியங்கா சோப்ரா
» சினிமாவில் நிலைத்திருக்க முகவெட்டுதான் முக்கியம்..! – பிரியங்கா சோப்ரா
» பெண் குழந்தைகள் பாரம் கிடையாது:பிரியங்கா சோப்ரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum