தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
இணையத்தில் இரவி ! கட்டுரையாளர்:முனைவர் பேராசிரியர் ச.சந்திரா ! சாதனமா?சீதனமா?
Page 1 of 1

இணையத்தில் இரவி !
கட்டுரையாளர்:முனைவர் பேராசிரியர் ச.சந்திரா !
சாதனமா?சீதனமா?
அன்று தமிழ் வளர்க்க, அதியமான் தனக்கு கிடைத்த அரிய நெல்லிக்கனியை ஔவைக்கு வழங்கி கடையெழுவள்ளல்களுள் ஒருவனானான்.இன்றோ இலக்கிய ஆர்வலர்களுக்கு இல்லம் தேடிவந்து தமிழ் இணையதளங்கள் கனியை வழங்கிச் செல்கின்றன. இளைய தலைமுறையினருக்கு அறிவியல் தந்திருக்கும் அதிசய சாதனமே இணையம்.இயந்திரயுகத்தில் இலக்கியவாதிகளுக்கும் இலக்கியரசனை மிக்கவர்களுக்கும் கால இடைவெளி மற்றும் தூர இடைவெளியைக் குறைக்க வந்த தகவல் தொடர்பு சாதனமே தமிழ் இணையம் எனலாம்.
ஆறிலிருந்து அறுபதுவரை :
ஏட்டில் படித்த நாளும் போய்,புத்தகத்தைப் புரட்டிய காலமும் படிப்படியாய் மாறி,இன்று ஆறிலிருந்து அறுபதுவரை இணையத்தை நாடுவது நடைமுறையாகிவிட்டது.காலத்தின் ஓட்டத்தில் தமிழின் அவசியத்தை வளரும் தலைமுறையினர் புரிந்துகொள்ள,உலகின் பிறமொழிகளோடு தமிழ்மொழியும் ஈடுகொடுத்து நடைபோட,மொழிப்பற்றைப் பெருக்க-என பல்வேறு நற்பணிகளைச் செய்துவரும் ஒரு வியத்தகு சாதனமே இணையம் கவிக் களஞ்சியம்:. அன்றாடப் பணிகளால் மனம் அயர்ந்து, சற்றே இளைப்பாற எண்ணி தமிழ் இணையத்திற்குள் புகுந்தேன்.கண்ணிற்பட்டது கவிமலர்.காம். அத்தளத்தில் புதுக் கவிதை,ஹைக்கூ,நகைச்சுவைத் துணுக்குகள் என எண்ணற்ற படைப்புக்கள். www.kavimalar.com கவிமலரை உருவாக்கிய பிரம்மா யாரென உற்றுநோக்கினேன்.அம்மூலவர் யாரெனில் மதுரைக் கவிஞர் இரா.இரவி.தமிழக அரசின் சுற்றுலாத்துறையின் உதவி சுற்றுலா அலுவலராகப் பணியாற்றிவரும் இவர் இலக்கிய ஆர்வலர்களின் உள்ளங்களிலும் உலா வருவதை அறிந்தேன்.கவிமலரோடு மேலும் www.eraeravi.blogspot.in வலைப்பூ இவருக்கு இருப்பதும் தெரியவந்தது. இந்தத் தளங்களும் முப்பத்தி நான்கு வலைதளங்களோடு இணைக்கப் பட்டிருப்பது வியக்கத்தக்க ஒன்றே.இன்னும் ஒரு ஆச்சிரியப்படத்தக்கச் செய்தி என்னவெனில், கவிஞர் இரா.இரவியின் www.kavimalar.com கவிமலர்.காமைப் பார்வையிட்டவர்கள் நான்கு இலட்சத்திற்கும் மேலான இலக்கிய பிரியர்கள் என்பதே.இவையெல்லாம் ஒருபுறமிருக்க,தற்செயலாக http://www.tamilthottam.in/f16-forum தமிழ்த்தோட்டம் எனும் இணையத்தைப் பார்க்க நேர்ந்தது.அதில் பெரும்பான்மையான இலக்கியப் பதிவுகளைச் செய்தமைக்காக செவ்வந்தி எனும் சிறப்புப் பட்டம் பெற்றிருக்கும் செய்தியும் அறியமுடிந்தது.ஈகரை களஞ்சியம் http://www.eegarai.net/sta/eraeravi எனும் தமிழ் இணையத்திலோ இவரது படைப்புக்கள் நிரம்பி வழிகின்றன.
எங்கும் எதிலும்:
எழுத்து.காமில் http://eluthu.com/user/index.php?user=eraeravi இவரது கவிதைகள் சிறப்புத்தேர்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.தாளம்.நியூஸ்.காமிலோ இரா.இரவியின் நூல் விமர்சனங்களை வாசிக்க நேர்ந்தது.தான் ஒரு படைப்பாளியாக இருந்து 16 நூல்களை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் பிறரது சிறந்த நூல்களுக்கான விமர்சனங்களையும் வாசகர் என்ற நிலைக்கு மாறி, எழுதி இணையத்தில் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.இவரது ஒவ்வொரு விமர்சனமும் உணர்ந்து வாசிக்கப்பட்டு படைக்கப்பட்ட உன்னத விமர்சனமாகும்.படைப்பாளி தரமான நூலைப் படைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் நிறைகளோடு நூலில் குறையிருந்தாலும் அவற்றைச் சுட்டிக் காட்டவும் இரா.இரவி தவறுவதில்லை.
இவரது https://www.facebook.com/rravi.ravi
முக நூல் நண்பர்கள் 5000 .பின் தொடர்வோர் 5500
http://tamil.pratilipi.com/kavignar-eraravi இணையத்தில் 600 படைப்புகள்
http://www.tamilauthors.com/4.html இணையத்தில் நூல் மதிப்புரைகள் ,கட்டுரைகள் ,கவிதைகள் உள்ளன .
மதிப்புரையும் தொகுப்புரையும்:
இவரது படைப்புக்கள் நான் வாசித்தறிந்த வரையில் முப்பதுக்கும் மேலான தமிழ் இணையங்களில் பதிவு செய்யபட்டிருக்கின்றது.கவிதை, திறனாய்வு மட்டுமல்லாது தான் நேரில் சென்று கேட்டறிந்த பிரபலமானவர்களின் சொற்பொழிவின் தொகுப்புரையும் தமிழ் இணையங்கள் பலவற்றிலும் இவரால் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.மேலும் இலக்கிய ஆர்வலர்களின் வசதிக்காக இலக்கியக் கூட்டங்களுக்கான அழைப்பிதழ்களின் வழி தமிழ்.ஆத்தர்ஸ்.காமில் தவறாது அழைப்பு விடுப்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு செய்தியாகும்.இதுபோல் நடந்து முடிந்த இலக்கியம் சார்ந்த கூட்டங்களின் முக்கிய நிகழ்வின் புகைப்படங்களும் கவிஞர் இரா.இரவியால் பல்வேறு தமிழ் வலைதளங்களில் பொருத்தப்பட்டிருப்பதும் அவரது தமிழியல் ஆர்வத்தை புலப்படுத்துகிறது.
ஈடு இணையுண்டோ?
கவிஞர் இரா.இரவியின் கவிதைகள் மூடத்தனத்தின் முதுகெலும்பை முறிக்க வருவன,பழமை மரபைச் சாடுவன,புதுமையைப்புகுத்துவன,தமிழின உணர்வை வெளிப்படுத்துவன,பெண்மையைப் போற்றுவன,இயற்கையை வியந்து பாடுவன,சமூக இழிநிலையைச் சுட்டிக்காட்டுவன-என சொல்லிக்கொண்டே போகலாம்.தேசத்தலைவர்களின் பிறந்த நாள்,நினைவு நாள்,நடப்புச்செய்தி இவற்றையெல்லாம் மனதில் வைத்து அவ்வப்பொழுதில் இணையத்தில் கவிதைகளை மறவாது பதிவு செய்வதில் கவிஞர் இரா.இரவிக்கு ஈடு இணை வேறு எவருமில்லை.
உதாரணத்திற்கு ஒன்றிரண்டு ஹைக்கூ:
“தாயிருக்க சேய்
சேயிருக்க தாய்
சுனாமி!”
இயற்கையை வியத்தல்:
“இயற்கை எனும் கவிஞன்
வானம் எனும் தாளில்
எழுதிய கவிதை வானவில்!”
ஆங்கிலத்திலும்துளிப்பாக்கள்:
Rainbow:
“sweet verse
written on skypaper
By nature poet”( http://www.kavimalar.com/vh/enhycoo.htm )
அன்று முதல் இன்றுவரை கவிஞர்கள்:
திருவள்ளுவர்:
“தமிழ் என்ற சொல்லைப் பயன்படுத்தாமலேயே
தமிழுக்கு மகுடம் சூட்டிய மாண்பாளன்” தாளம்.நியூஸ்.காம்
கவி சுரதா:
“இவர் பாடாத உவமை இல்லை!
இவர் பாடாத உவமை உவமையே இல்லை!”
அப்துல்கலாம்;
“செய்தித்தாள் விற்றுப் படித்து
தலைப்புச் செய்தி ஆனவரே”
என்று மேனாள் குடியரசுத் தலைவரைப் பாடியதோடு அவரின் அழைப்பின்பேரில் கலாமைச் சந்தித்து அவரின் பாராட்டுதல்களைப் பெற்ற பெருமை கவி இரவிக்கு உண்டு.கவிமலர்.காம் இதனை புகைப்படத்துடன் நிரூபணம் செய்கின்றது.
கவி இரவி காலத்தோடு கைகோர்க்கும் திறம்:
அணுகுண்டு போட்டனர்!
புல்பூண்டு கருகியது!
உயிர்கள் ஒழிந்தன!
ஓய்வின்றி உழைத்தனர்.
உச்சம் தொட்டனர்!
சுனாமி வந்தது!
சும்மா புரட்டிப் போட்டது!
அணு உலை வெடித்தது!
ஆருயிர்கள் மடிந்தன!
இனியும் உழைப்பர்!
உலகின் உச்சம் தொடுவர்!
விதியை நினைத்து
வீழமாட்டார் ஜப்பானியர்! (எழுத்து.காம்)
பெண்மைகுறித்த கவிதை:
“பெண்ணைக் குறை சொன்னால் பொறுத்துக் கொள்வாள்!
பெற்றோரைக் குறை சொன்னால் கொதித்து எழுவாள்!”
மனதார…
தமிழ் இணையத்தின் எந்தவொரு வலைதளத்தில் புகுந்தாலும் கவி இரா.இரவியின் படைப்புக்களைப் பார்க்க இயலும்.பெரும்பாலோர்க்கு வீடே உலகமாக இருக்க கவிக்கோ இணையமே உலகமாக இருப்பது தெள்ளத்தெளிந்த உண்மை.பதினாறு விருதுகளைப் பெற்ற பெருமையினை உடைய இவருக்கு இணையம் சார்பான விருதினை வழங்காமல் இருப்பது ஏனோ? என்ற ஆதங்கம் என்போன்ற இணையதள வாசகர்க்கு உண்டு.கவி இரவியின் பேரும் புகழும் அலைகடல் தாண்டி அகிலம் முழுதும் பரவ மனமார்ந்த வாழ்த்துக்கள்.

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா
» கவிச்சுவை ! நூலாசிரியர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா
» கவிஞர் இரா .இரவி ஹைக்கூ ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு பேராசிரியர் முனைவர் ச .சந்திரா
» நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum