தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விடுகதை - கேள்வி - பதில்
Page 1 of 1
விடுகதை - கேள்வி - பதில்
1. அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன?
- மிருதங்கம்
02. அடித்து நொறுக்கி அணலில் போட்டால் ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும். அது என்ன?
- சாம்பிராணி
03. அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம். அது என்ன?
- வளையல்
04. அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?
- மதி
05. பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது. அது என்ன?
- பாம்பு
06. ஆயிரம் தச்சர் கூடி கட்டிய அந்த அழகான மண்டபம் , ஒருவர் கண்பட்டு உடைந்ததாம் அந்த மண்டபம். அது என்ன?
- தேன் கூடு
07. எட்டாத ராணியாம் இரவில் வருவாள், பகலில் மறைவாள். அது யார்?
- நிலா
08. ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல; சூடு கொடுக்கும், தீ அல்ல; பளபளக்கும், தங்கம் அல்ல. அது என்ன?
- சூரியன்
09. அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன?
- காற்று
10. ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை. அது என்ன?
- மரம்
11. ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை. அது என்ன?
- குடை
12. ஊருக்கெல்லாம் ஓய்வு, உழைப்பவர்க்கும் ஓய்வு; இவனுக்கு மட்டும் ஓய்வில்லை; இரவும் பகலும் ஓட்டந்தான். அது என்ன?
- மூச்சு
13. ஒற்றைக் காலில் ஆடுவான், ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார்?
- பம்பரம்
14. பகலிலே வெறுங்காடு, இரவெல்லாம் பூக்காடு. அது என்ன?
- வானம்
15. அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது. அது என்ன?
- தண்ணீர்
16. அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அது என்ன?
- குளிர்
17. உணவு கொடுத்தால் வளரும்; நீர் கொடுத்தால் அழியும். அது என்ன?
- நெருப்பு
18. ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான். அது என்ன?
- தீக்குச்சி
19. தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். அது என்ன?
- உரோமம்
20. இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?
- கடிகாரம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: விடுகதை - கேள்வி - பதில்
- பகுதி ( 02 )
01. நன்றிக்கு வால் கோபத்துக்கு வாய் அது என்ன?
நாய்02. உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன?
இளநீர்03. தலையில் கீரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன?
அன்னாசிப்பழம்04. எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?
நண்டு05. படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?
பட்டாசு06. சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன?
நுளம்பு07. கந்தல் துணிக்காறி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்?
சோளப்பொத்தி08. மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம் அது என்ன?
அன்னாசிப்பழம்09. ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்?
தேங்காய்10. நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாது அந்த நாயகனுக்கோ உடல் மேல் கவசம் அது என்ன?
நத்தை11. ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?
கண்ணீர்12. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?
மெழுகுதிரி13. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்?
நுங்கு14. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?
அகப்பை15. ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?
முட்டை16. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?
கடிதம்17. வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன?
கல்வி18. பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?
முருங்கைமரம்19. தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான். அவன் யார்?
உப்பு20. குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்?
கத்தரிக்காய்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: விடுகதை - கேள்வி - பதில்
- பகுதி ( 03 )
01.கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்?
புகை02. வெயிலில் மலரும், காற்றில் உலரும். அது என்ன?
வியர்வை03. வேகாத வெயிலில் வெள்ளையப்பன் விளைகிறான். அது என்ன?
உப்பு04. கழுத்து உண்டு, தலையில்லை; உடல் உண்டு, உயிர் இல்லை, கையுண்டு, விரல் இல்லை. அது என்ன?
சட்டை05. ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவை யாவை?
எறும்புகள்06. ஆகாயத்தில் பறக்கும். அக்கம் பக்கம் போகாது. அது என்ன?
கொடி07. ஆறு எழுத்துள்ள ஓர் உலோகப் பெயர். அதன் கடை மூன்று எழுத்துகள் சேர்ந்தால் ஒரு கொடிய பிராணி. அது என்ன?
துத்தநாகம்08. அண்டமென்ற பெயரும் உண்டு, அடைகாத்தால் குஞ்சுமுண்டு. அது என்ன?
முட்டை09. வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும். அது என்ன?
மழை10. பூமியிலே பிறக்கும், புகையாய்ப் போகும். அது என்ன?
பெட்ரோல்11. தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார்?
இளநீர்12. ஆயிரம் பேர் வந்து சென்றாலும் வந்த சுவடு தெரியாது? அது என்ன?
எறும்பு13. வினா இல்லாத ஒரு விடை அது என்ன விடை?
பணிவிடை14. உரசினால் உயிரே மாய்த்துக் கொள்ளும் அது என்ன?
தீக்குச்சி15. கை பட்டால் சிணுங்கும் கன்னிப் பெண், கூச்சல் போட்டு கதவை திறக்க வைப்பவள் அவள் யார்?
காலிங்பெல்16. தாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக மூடி திறக்கும் கதவு அது என்ன?
கண் இமை17. பேசாத வரை நான் இருப்பேன். பேசினால் நான் உடைந்துவிடுவேன். நான் யார்?
அமைதி18. நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்?
தென்றல்19. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
பட்டாசு20. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?
எறும்புக் கூட்டம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: விடுகதை - கேள்வி - பதில்
- பகுதி ( 04 )
01. முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன?
முத்திரை02. ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன், ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன், நான் யார்?
நெருப்பு03. கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அது என்ன?
சவப்பெட்டி04. ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனை உண்டு, ஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க முடியாது, அக் குற்றம் என்ன?
தற்கொலை05. 3. முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது அது என்ன?
குயில்06. வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
சோளம்07. மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்?
பஞ்சு08. சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள். அது என்ன?
மின்விசிறி09. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன?
தொலைபேசி10. கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன், பள்ளநீரைக் கண்டு பதைபதைக்கிறான். அது என்ன?
நெருப்பு11. கலர்ப்பூ கொண்டைக்காரி, காலையில் எழுப்பிவிடுவாள். அது என்ன?
சேவல்12. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?
சோளக்கதிர்13. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது?
உப்பு14. கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளைக் காகம் நிற்குது. அது என்ன?
உளுந்து15. காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை. அது என்ன?
ஈ16. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன?
ஈசல்17. . உருவத்தில் சிறியவன். உழைப்பில் பெரியவன். அவன் யார்?
எறும்பு18. எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன?
மெழுகுவர்த்தி19. வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும். அது என்ன?
வாழை20. அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு. அது என்ன?
இடியாப்பம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: விடுகதை - கேள்வி - பதில்
- பகுதி ( 05 )
01. மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன?
தீபம்02. அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன?
நிலா03. மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன?
மஞ்சள்04. இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?
இதயம்05. உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன?
தக்காளி06. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?
கடல்07. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
கண்08. மழை காலத்தில் பிடிப்பான் அவன் யார்?
காளான்09. காய்க்கும் பூக்கும் கலகலக்கும் காகம் இருக்கக் கொப்பில்லை அது என்ன?
நெல்லு10. கத்தி போல் இலை இருக்கும் கவரிமான் பூ பூக்கும் தின்ன பழம் கொடுக்கும் தின்னாத காய் கொடுக்கும் அது என்ன?
வேம்பு11. ராஜா, ராணி உண்டு நாடு அல்ல. இலைகள் பல உண்டு, தாவரம் இல்லை! அது என்ன?
காட்ஸ்12. கடலில் கலக்காத நீர், யாரும் குடிக்காத நீர் – அது என்ன?
கண்ணீர்13. ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் – அது என்ன?
வாய்14. விடுமுறை இல்லாத கடை எது?
சாக்கடை15. சின்னப்பயல் உரசினால் சீறிப் பாய்வான் – அது என்ன?
தீக்குச்சி16. வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார் அவர் யார்?
பாம்பு17. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும் அது என்ன?
கண் இமை18. வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார்?
ஆறு அல்லது அருவி19. அடிக்காமல், திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்?
வெங்காயம்20. வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன?
நெருப்பு
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: விடுகதை - கேள்வி - பதில்
- பகுதி ( 06 )
01. தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன ?
முதுகு02. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன ?
சிலந்தி வலை03. முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார் ?
மின்சாரம்04. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன ?
சிலந்தி வலை05. நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார் ?
மணிக்கூடு06. பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து. அது என்ன ?
தேன்07. உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை ஒன்றிணைப்பான். அது என்ன ?
ஊசி08. ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன ?
மத்து09. என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது. என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன். நான் யார் ?
துவாரம்10. நான்தான் சகலமும். என்னைப் பார்க்க முடியாது, பிடிக்கவும் முடியாது. எனக்கு வாயில்லை, ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார் ?
காற்று11. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான். அவன் யார் ?
வானொலிப் பெட்டி12. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன். அவன் யார் ?
தலையணை13. காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள். அவள் யார் ?
மெட்டி14. கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை மடக்கித் தாக்கும். அது என்ன ?
தேனீ15. அடி மலர்ந்து நுனி மலராத பூ – அது என்ன ?
வாழைப்பூ16. அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை – அது என்ன ?
தலை வகிடு17. அத்தையில்லா அத்தை என்ன அத்தை ?
சித்தரத்தை18. அத்தானில்லா அத்தான் என்ன அத்தான் ?
மொடக்கத்தான்19. அந்தரத்தில் தொங்குவது சொம்பும் தண்ணீரும் – அது என்ன?
இளநீர்20. அத்துவான காட்டிலே பச்சைப்பாம்பு தொங்குது – அது என்ன?
புடலங்காய்- பகுதி ( 07 )
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: விடுகதை - கேள்வி - பதில்
- பகுதி ( 07 )
01. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?
நிழல் அல்லது விம்பம்02. பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்?
சீப்பு03. வெள்ளை மாளிகை உள்ளே செல்ல வாசல் இல்லை அது என்ன?
முட்டை04. ஐந்து வீட்டிற்க்கு ஒரு முற்றம் அது என்ன?
உள்ளங்கையும் விரல்களும்05. சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன?
வாழைப்பழம்06. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?
செத்தல் மிளகாய்07. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது. அது என்ன?
சங்கு08. தட்டச் சீறும் அது என்ன?
தீக்குச்சி09. நீளவால் குதிரையின் வால் ஓடஓடக் குறையும் அது என்ன?
தையல் ஊசியும் நூலும்10. கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன?
நிழல்11. முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன?
நத்தை12. வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?
வழுக்கை13. தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்?
பென்சில்14. காற்றைக் குடித்து காற்றில் பறப்பான், அவன் யார்?
பலூன்15. பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்?
கிளி16. அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன?
அம்மி குளவி17. கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன?
பூசனிக்கொடி18. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
கரும்பு19. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
தலைமுடி20. வாலால் நீர் குடிக்கும்,வயால் பூச்சொரியும் அது என்ன?
விளக்கு
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: விடுகதை - கேள்வி - பதில்
- பகுதி ( 08 )
01. காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான். அவன் யார்?
புல்லாங்குழல்02. ஓட்டம் நின்றால் போதும் ஆட்டம் நின்று போகும். அது என்ன?
ரத்தம்03. தணித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை அது என்ன?
உப்பு04. வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?
கத்தரிக்கோல்05. ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?
துடைப்பம் (தும்புத்தடி)06. ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன?
ஊதுபத்தி07. மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?
பஞ்சு08. தொட்டால் மணக்கும், சுவைத்தால் புளிக்கும். அது என்ன?
எழுமிச்சம்பழம் (தேசிக்காய்)09. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
விக்கல்10. காலையிலே கூவும் பட்சி, கந்தன் கொடியில் காணும் பட்சி, குப்பையைக் கிளறும் பட்சி, கொண்டையுடைய பட்சி – அது என்ன?
சேவல்11. சங்கீதம் பாடும் சல்லாபம் செய்யும் சமயத்தில் ரத்தம் குடிக்கும் – அது என்ன?
கொசு12. சட்டையைக் கழற்றியதும் சடக்கென்று உள்ளே விழும் – அது என்ன?
வாழைப்பழம்13. சங்கரன் கோவில் டப்பா தாயும் மகளும் தேய்ப்பா – அவை என்ன?
அம்மி குழவி14. கோட்டையயைச் சுற்றி மதில் சுவர் உள்ளே மறைந்திருக்கிறான் வேட்டைக்காரன் – அது என்ன?
நாக்கு15. கோடையிலே ஆடி வரும் வாடையில முடங்கி விடும் – அது என்ன?
மின்விசிறி16. கோணல் எத்தனை இருந்தாலும் குணமும் குறியும் மாறாது – அது என்ன?
கரும்பு17. கோவில் குளம் இல்லாமல் கொட்டி திரிகிறான் ஒருவன் – அவன் யார்?
குயவர்18. கோவிலைச் சுற்றி கறுப்பு கோவிலுக்குள்ளே வெளுப்பு – அது என்ன?
சோற்றுப்பானை19. கோயிலுக்குப் போனானாம் எங்க தம்பி தீர்த்தம் விட்டானாம் தங்கத் தம்பி – அது என்ன?
தேங்காய்20. கோழிக் குஞ்சு பொரிப்பது எப்படி? தாழி நெய்யை எடுப்பது எப்படி?
முட்டையிட்டு
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: விடுகதை - கேள்வி - பதில்
- பகுதி ( 09 )
01. காவி உடையணியாத கள்ளத்தவசி கரையோரம் கடுந்தவம் செய்கிறான் அவன் யார்?
கொக்கு02. காளைக்குக் கழுத்து மட்டும் தண்ணீர் அது என்ன?
தவளை03. காற்று இல்லாத கண்ணாடிக் கூண்டில் மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது அது என்ன?
முட்டை04. காலில்லாதவன் வளைவான், நெளிவான் காடு மேடெல்லாம் அலைவான் அவன் யார்?
பாம்பு05. காலைக்கடிக்கும் செருப்பல்ல, காவல் காக்கும் நாயல்ல அது என்ன?
முள்06. காலையில் ஊதும் சங்கு, கறி சமைக்க உதவும் சங்கு அது என்ன?
சேவல்07. காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோஷம் அது என்ன?
வானம்08. கையுண்டு, கழுத்துண்டு, தலையுண்டு உயிரில்லை அது என்ன?
சட்டை09. வண்ணப் பட்டுச் சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக் காரி அது என்ன?
மயில்10. சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு, பச்சைப் பாவாடை கேட்குதாம் அது என்ன?
கிளி11. தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் -அது என்ன?
கப்பல்கள்12. மணல் வெளியில் ஓடுது தண்ணீர் கேட்காத கப்பல் அது என்ன?
ஒட்டகம்13. தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் அது என்ன?
தொட்டா சுருங்கிச் செடி14. வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது அது என்ன?
விமானம்15. சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன?
பப்பாளி விதைகள்16. நடக்கத் தெரியாதவன், நட்டுவனுக்கு வழி காட்டுகிறான் அவன் யார்?
கைகாட்டி17. நடலாம், பிடுங்க முடியாது அது என்ன?
பச்சை குத்துதல்18. நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன் நான் யார்?
வெங்காயம்19. நடைக்கு உவமை, நளனக்கு தூதுவன் அவன் யார்?
அன்னம்20. நாலு மூளைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத தண்ணீர் இல்லை அது என்ன?
அச்சு வெல்லம்- -நன்றி
- [You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» கேள்வி பதில்
» ஆன்மீக கேள்வி - பதில்
» கேள்வி..? பதில்..!!! கவிதை
» கேள்வி - பதில் (கல்கி)
» ஏடாகூட கேள்வி - பதில்
» ஆன்மீக கேள்வி - பதில்
» கேள்வி..? பதில்..!!! கவிதை
» கேள்வி - பதில் (கல்கி)
» ஏடாகூட கேள்வி - பதில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum