தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பாம்பு, முயல், மந்திரி..! – சைதன்யன் கதை!

Go down

பாம்பு, முயல், மந்திரி..! – சைதன்யன் கதை! Empty பாம்பு, முயல், மந்திரி..! – சைதன்யன் கதை!

Post by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:56 am

பாம்பு, முயல், மந்திரி..! – சைதன்யன் கதை! BhyFsJZRAegQyUSFoHGQ+seedan_18216
-

சைதன்யன்!
நாமதேவரின் குருகுலத்தின் மிகச் சிறந்த மாணவன்
அதிபுத்திசாலி. மற்ற மாணவர்களைவிட குரு அவனை
அதிகம் நேசிப்பார்.
-

நாமதேவர் தனக்குத் தெரிந்த வித்தைகள் அனைத்தையும்
சைதன்யனுக்கு பயிற்றுவித்திருந்தார். சைதன்யனுக்கு
18 வயது ஆனதும் குரு அவனை அழைத்தார்.

சைதன்யா “நீ தெரிந்துகொள்ள வேண்டிய அத்தனை
வித்தைகளையும் கற்றுக் கொண்டாய். இனிமேல் நீ
இங்கிருக்க வேண்டிய தேவை இல்லை. 

-
எனவே உன்னை
பெற்றெடுத்த தாய் தந்தையரிடம் சென்று அவர்களுக்கு
பணிவிடை செய்!

உன்னுடைய வாழ்வில் கடவுள் எப்போதும் உனக்குத் துணை
இருப்பார்” என்று சொல்லி ஆசீர்வதித்தார்.

——————————–


Last edited by அ.இராமநாதன் on Wed May 24, 2017 9:58 am; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பாம்பு, முயல், மந்திரி..! – சைதன்யன் கதை! Empty Re: பாம்பு, முயல், மந்திரி..! – சைதன்யன் கதை!

Post by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:56 am


——————————–

பாம்பு, முயல், மந்திரி..! – சைதன்யன் கதை! ErAQcIQcTpWlZipWOgWs+puththaa_18272
சைதன்யனும் குருவின் பாதத்தில் விழுந்து வணங்குகிறான்.
பின்னர் குருவிடம்,”குருவே, நீங்கள் எனக்கு கற்றுக் கொடுக்க
வேண்டிய வித்தை ஒன்று மீதமிருக்கிறது” என்றான்.
-
குரு,’என்ன வித்தை அது?’ என்று அதிர்ச்சியுடன் கேட்டார் .
‘ஆம். குருவே, எத்தனையோ வித்தைகளைக் கற்றுக் கொடுத்த
நீங்கள் கடவுளைக் காணும் வித்தையை மட்டும் எனக்குக்
கற்றுக் கொடுக்கவில்லையே’ என்றான்.
-
இதைக் கேட்டதும் மெல்லப் புன்னைகைத்தபடியே,
“உன்னுடைய சந்தேகத்துக்கு இப்போது என்னால் விடை அளிக்க
முடியாது. இப்போது நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்”
என்கிறார் நாமதேவர்.
-
”என்ன குருவே, நீங்கள் என்ன சொன்னாலும், உடனே
நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்” என்கிறான் சைதன்யன்.
நாமதேவரோ, “வடக்குத் திசையில் ஒரு வனம் உள்ளது.
அதைக் கடந்ததும் பவானிபுரம் என்று ஒரு இடம் உள்ளது.
அங்கு சென்று என் சகோதரனைச் சந்தித்து நலம் விசாரித்து வா”
என்கிறார்.
-

அடுத்த நாளே குருவின் மனைவி அளித்த உணவோடு,
குருவின் சகோதரனைக் காண புறப்பட்டான் சைதன்யன்.
காட்டு வழியே பாதி தூரம் சென்றதும், மிகுந்த தாகம் எடுத்தது
சைதன்யனுக்கு.
-
காட்டில் தண்ணீர் எங்கே இருக்கிறது என்று தேடத் தொடங்கினான்.
சரியாக, அந்த நேரத்தில் வயது முதிர்ந்த பார்வையிழந்த மனிதன்
காட்டில் எதோ இலைகளை முகர்ந்துப் பார்த்து பறித்துக்
கொண்டிருந்தான்.
-


அவன் அருகில் சென்ற சைதன்யன் , “ஐயா எனக்கு மிகுந்த
தாகமாக உள்ளது. இங்கே குடிப்பதற்கு தண்ணீர் எங்கே கிடைக்கும்?
என்று வினவினான். அருகில் ஒரு கிணறு இருக்கிறது என்று
கூறினார். அந்த பார்வையற்ற முதியவர். அதோடு நில்லாமல்,
“பாம்புக் கடிக்கான மூலிகை பறிக்கவே நான் இங்கு வந்தேன்,

நீயும் காட்டு வழியே பயணிக்கிறாய். உனக்கும் தேவைப்படும்”
என்று சில மூலிகைகளையும் அவனுக்குத் தருகிறார்.
-


Last edited by அ.இராமநாதன் on Wed May 24, 2017 10:01 am; edited 2 times in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பாம்பு, முயல், மந்திரி..! – சைதன்யன் கதை! Empty Re: பாம்பு, முயல், மந்திரி..! – சைதன்யன் கதை!

Post by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:57 am

பாம்பு, முயல், மந்திரி..! – சைதன்யன் கதை! XcZsPJo2ROGhvmdh6kax+Koil_view_(1)_14496_18495


அதை வாங்கிக் கொண்டு முதியவர் சொன்ன கிணற்றுக்குச்
சென்று தண்ணீர் குடித்து தன் தாகம் போக்குகிறான். மேலும் தான்
கொண்டு வந்திருந்த உணவையும் சாப்பிட்டுவிட்டு வந்த
களைப்பில், அங்கேயே உறங்கி விடுகிறான்.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது அவன் மீது எதோ
இடிப்பது போல் உணரவே கண்விழிக்கிறான் சைதன்யன்.
அப்போது ஒரு முயல் ஒன்று வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.
அதே நேரம் மரத்தில் எதோ சத்தம் கேட்கவே மேலே பார்க்கிறான்.
பெரிய கிளை ஒன்று முறிந்து கீழே விழுவதற்குத் தயாராக
இருந்தது. கண நேரத்தில் விலகி உயிர்த் தப்பினான் சைதன்யன்.

மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான் சைதன்யன். சரியாக
இருட்டும் நேரத்தில் சுசாந்தம் என்னும் நகரை அடைந்தான்.
அங்கே உணவில்லாமல் பசியால் வாடிய ஒரு குடும்பத்தைக்

கண்டான். தன்னிடம் மீதமிருந்த உணவை அவர்களுக்குத்
தானம் செய்தான். அப்படியே அங்கே ஒரு சத்திரத்தில் இரவு
தங்கினான்.

சத்திரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும்போது சரியாக நள்ளிரவில்
ஒரு அலறல் சத்தம் கேட்டு கண்விழித்தான். அப்போது சத்திரத்தில்
முதியவர் ஒருவரை பாம்பு கடித்துவிட, இரவு நேரத்தில் என்ன
செய்வது என்பதையறியாமல் அங்குள்ள அனைவரும் தவிப்பதைக்
கண்டான்.

உடனே தன்னிடம் இருந்த மூலிகையைக் கொண்டு அவரது
உயிரைக் காப்பாற்றினான். உயிர் பெற்று எழுந்தவர் வேறு யாரும்
அல்ல. மாறுவேடத்தில் குடிமக்களின் நிலையை அறிய வந்த
மந்திரி.

சைதன்யனுக்கு தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார் மந்திரி.
மேலும் சைதன்யனிடம் “என் உயிரைக் காப்பாற்றிய உனக்கு நான்
ஏதாவது கைம்மாறு செய்யவேண்டும். நீ என்னுடன் வந்துவிடு
அரசரிடம் சொல்லி உனக்கு ஒரு வேலை வாங்கித் தருகிறேன்”
என்கிறார்.

உடனே சைதயன் நான் நிறைவேற்ற வேண்டிய கடமை ஒன்று
மீதம் இருக்கிறது. அது முடிந்ததும் நானே உங்களை வந்து
சந்திக்கிறேன் என்று கூறி அங்கிருந்து விடை பெறுகிறான்.

மறுநாள் பவானிபுரத்தை அடைந்து குருவின் சகோதரரைக் கண்டு
நலம் விசாரித்து அறிந்துகொள்கிறான். பின்னர் அங்கிருந்து
விடைபெற்று குருகுலத்துக்கே திரும்புகிறான். குருவிடம் அவர்
சகோதரரின் நலம் பற்றியும் செல்லும் வழியில் தனக்கு நிகழ்ந்த
நிகழ்வுகள் பற்றியும் பிரமிப்போடு கூறுகிறான்.

சரி ஏற்கெனவே நான் கூறியது போல் நீ வீட்டுக்குச் சென்று
உன் பெற்றோருக்குத் தொண்டு செய்யக் கிளம்பு என்கிறார்
குருதேவர்.

குருவே, நான் அன்றே கேட்டது போல் கடவுளைப் பார்க்கும்
வித்தையைக் கற்றுக் கொண்டு இங்கிருந்து கிளம்புகிறேன் ”
என்கிறான் சைதன்யன்.

உடனே குருவோ, ”நீதான் கடவுளைக் கண்டு விட்டாயே”
என்கிறார்.

”நான் எங்கே கடவுளைக் கண்டேன்” என்று பரிதாபத்தோடு
கேட்டான் சைதன்யன்.

மகனே, “கடவுளுக்கு தனித்த உருவம் கிடையாது. ஆனால்,
அனைத்து உருவிலும் கடவுள் இருக்கிறார். உனக்கு தாகம் எடுத்த
நேரம் பார்த்து கிணற்றின் பாதையைச் சொன்ன முதியவர் உனக்குக்
கடவுள்!.
யாருக்காவது தேவைப்படும் என்று நடுக்காட்டில் கிணறு
தோண்டியிருக்கிறானே அவன் கடவுள்! கணநேரத்தில் போக
வேண்டிய உன் உயிரைக் காப்பாற்றிய அந்த முயல் கடவுள்!

பாம்புக் கடியிலிருந்து நீ ஒருவனைக் காப்பாற்றினாயே அவனுக்கு
நீதான் கடவுள்! என்கிறார்.

குருவின் வார்த்தைகளில் இருந்த உண்மையைப் புரிந்து
கொண்டான் சைதன்யன். அவரின் காலில் விழுந்து வணங்கி
விடை பெற்றான்.

தன் பெற்றோரைச் சந்தித்தான். பின்பு, அவர்களை அழைத்துக்
கொண்டு மந்திரியைச் சந்தித்தான். அவர் கூறியது போலவே
அரசாங்க வேலை கொடுத்து உதவினார்.
தன் குடும்பத்துடன் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்தான்

———————————–
இரா.செந்தில்குமார்
விகடன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பாம்பு, முயல், மந்திரி..! – சைதன்யன் கதை! Empty Re: பாம்பு, முயல், மந்திரி..! – சைதன்யன் கதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum