தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
‘வாகீச கலாநிதி’ கி.வா.ஜகந்நாதன் அவர்களின் சிலேடைகள்
Page 1 of 1
‘வாகீச கலாநிதி’ கி.வா.ஜகந்நாதன் அவர்களின் சிலேடைகள்
[ltr]-
கி.வா.ஜ. ஒருமுறை, ‘‘நான் உண்மையிலேயே
பேசிய சிலேடைத் துணுக்குகளைத் தவிர, நான்
பேசாத சில சிலேடைகளும் என் பெயரில்
பத்திரிகைகளில் இடம்பெற்று விடுகின்றன.
சில துணுக்கு எழுத்தாளர்கள் அவர்களின்
சிலேடைகளுக்கு என் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்.
ஒன்று சொல்ல வேண்டும்... நான் சொன்ன
சிலேடைகளை விட நான் சொன்னதாக வரும்
சில சிலேடைகள் மிக நன்றாகவே இருக்கின்றன.’’
என்று சொன்னார்.
ஹா... ஹா... இது எப்புடி இருக்கு?
-
-----------------------------------
-
கி.வா.ஜ. அவர்களுக்கு கடைசிக் காலத்தில் உடல்
நலம் குன்றிய போது நிறைய ஓய்வு தேவைப்பட்டது.
அவரைச் சோதித்த மருத்துவர், ‘‘TAKE REST’’
என்று அறிவுரை சொன்னார்.
அதற்கு மருத்துவருக்கு கி.வா.ஜ. சொன்ன பதில்:
‘‘OK. I TAKE REST AND LEAVE THE REST
TO YOU!’’
-
-------------------------------------
-
சேலத்தி்ல் சாரதா கல்லூரி சில காலத்துக்கு முன்
உயர்நிலைப் பள்ளியாக இருந்தது. கி.வா.ஜகந்நாதன்
அவர்கள் பள்ளிக்கு வந்து பேச வேண்டும் என்று
நிர்வாகத்தினர் விரும்பி அழைத்தார். கி.வா.ஜ.வும்
வந்தார்.
ஊருக்கு வெளியே பல ஏக்கர் புன்செய் நிலங்களுக்கு
இடையே அந்தப் பள்ளி இருந்ததாகையால் பள்ளியின்
பின்புறம் கிணறு இருந்தது. அதையும் காட்டினார்கள்.
‘‘கவலை ஏற்றம் போட்டுத்தான் இதுவரை தண்ணீர்
இறைத்து வந்தோம். ஆனால் இப்போது பம்ப் செட்
போட்டு விட்டோம். பம்ப் மூலமாகத் தண்ணீர்
கொட்டுகிறது’’ என்றார் பள்ளித் தலைமை ஆசிரியர்.
இதைக் கேட்ட அடுத்த கணம் கி.வா.ஜ., ‘‘அடடே!
அப்படியானால் இனிமேல் தண்ணீருக்குக் கவலையே
இல்லை என்று சொல்லுங்கள்!’’ என்றார்.
-
--------------------------------
‘இலக்கியமும் ஆன்மீகமும்’ குறித்துப் பேச கி.வா.ஜ.
அழைக்கப்பட்டிருந்தார். அவர் வாழ்க்கையின்
நிலையாமைத் தத்துவத்தைப் பேசிவிட்டு, இம்மை
மறுமை ஆகியவை குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் பேசிக் கொண்டிருந்த மைக் தகராறு
செய்தது. உடனே அதை நீக்கி விட்டு வேறொரு
மைக்கை வைத்தார் மைக்செட் உரிமையாளர்.
அதில் இவர் பேச்சைத் தொடர, அந்தோ... அதுவும்
தகராறு செய்தது. உடனே கி.வா.ஜ. அவர்கள் உரத்த
குரலில், ‘‘இம்மை மறுமை இரண்டிலும் பயன்படுவது
ஆன்மீகம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
ஆனால் இன்று எனக்கு இம்மைக்கும் பயன்படவில்லை,
மறுமைக்கும் பயன்படவில்லை. என்ன செய்ய..?’’
என்றார்.
அவையினர் வியந்து கரவொலி எழுப்பினார்கள்.
-
-----------------------------------------
-
சில பேருக்கு வாய் பேசிக் கொண்டிருக்கும் போது
கூட கைகள் தானாக ஏதாவது (குரங்குச்) சேட்டை
செய்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட இயல்புடைய
ஒரு பேச்சாளர் கி.வா.ஜ. அருகில் ஒரு விழா
மேடையில் அமர்ந்திருந்தார்.
கி.வா.ஜ.வுககும், அவருக்கும் மாலை போட்டு
மரியாதை செய்தார்கள். கி.வா.ஜ.வுடன் பேசியபடி
இருந்த அவரது கரங்கள் மாலையிலிருந்து ரோஜாவின்
இதழ்களை ஒவ்வொன்றாகப் பிய்த்துப் போட்ட வண்ணம்
இருந்தன.
இயல்பாக அவர் செய்து கொண்டிருந்த இந்தச் செயல்
கி.வா.ஜ.வுக்குச் சங்கடமாக இருந்ததால் அவரால்
சரியாகப் பேச முடியவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்
வந்து, ‘‘ஐயா, ஆரம்பிக்கலாமா?’’ என்று
கி.வா.ஜ.விடம் கேட்டார்.
உடனே பளிச்சென்று ஒரு பன்ச் அடித்தார் கி.வா.ஜ..- -
‘‘நான் இனிமேல்தான் ஆரம்பிக்க வேண்டும். இவர்
ஏற்கனவே ஆரம் பிய்த்துக் கொண்டிருக்கிறார்’’ என்று.
-
-----------------------------------
கி.வா.ஜ.வும் நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்த
போது அது ரிப்பேராகி நின்று விட்டது. கி.வா.ஜ.
வயதானவர் என்பதால் அவரை காரிலேயே இருக்கச்
சொல்லிவிட்டு மற்ற நண்பர்கள் இறங்கி காரைத்
தள்ள முற்பட்டனர்.
கி.வா.ஜ. தானும் காரை விட்டு இறங்கி, அவர்களுடன்
காரைத் தள்ளியபடியே சொன்னார் இப்படி:
‘‘என்னை என்ன தள்ளாதவன் என்று நினைத்து
விட்டீர்களா?’’
-
-----------------------------------
கி.வா.ஜ. ஒரு நண்பரின் வீட்டில் பேசிக் கொண்டிருந்த
போது காலையில் செய்த உப்புமாவை மாலையில்
தன் குழந்தைக்கு அம்மா ஊட்டிக் கொண்டிருக்க,
அது சாப்பிட மறுத்து அடம் பிடித்தது.
‘‘ஏண்டி... பாத்துப் பாத்து உப்புமா செஞ்சா திங்கக்
கசக்குதோ? தொண்டையில குத்துகிறதா?’’ என்று
கோபமாக மகளின் தலையில் குட்டினார் அந்த அம்மா.
அருகிலிருந்த கி.வா.ஜ. ஒரு வாய் உப்புமாவை வாயில்
போட்டுப் பார்த்துவிட்டு, ‘‘ஆம், தொண்டையில்
குத்தத்தான் செய்யும். ஏனென்றால் இது ‘ஊசி’
இருக்கிறதே!’’ என்றார்.
-
-------------------------------------
-
ஒரு விழாவில் கி.வா.ஜ.வுக்கு மு்ன்னதாகப் பேசிய
குமரி அனந்தன் அருமையாகப் பேசி அவையோரின்
ஏகோபி்த்த கை தட்டல்களை அள்ளினார்.
அடுத்துப் பேச வந்த கி.வா.ஜா. அவரிடம்,
‘‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’’ என்று கேட்க,
குமரி, ‘‘வண்ணாரப் பேட்டையிலிருந்து’’ என்றார்.
‘‘அதுதான் இப்படி வெளுத்துக் கட்டி விட்டீர்கள்!’’
என்று ஒரு போடு போட்டார் கி.வா.ஜ.
-
--------------------------------------
-
நண்பரின் வீட்டில் விருந்துண்ண அழைக்கப்பட்டிருந்த
கி.வா.ஜ. உணவு அருந்தியதும் கை கழுவத் தண்ணீர்
கேட்டார். நண்பரின் மனைவி ஒரு பிளாஸ்டிக்
குவளையில் நீர் மொண்டு வந்து அவரிடம் தர, கி.வா.ஜ.
சொன்னார் இப்படி: ‘‘நீரில்தான் குவளை இருக்கும்
என்று சொல்வார்கள்.
இங்கே குவளையிலேயே நீர் இருக்கிறதே!’’.
-
-----------------------------------
-
இதேபோன்ற மற்றொரு சந்தர்ப்பத்தில் நண்பருடன்
டிபன் சாப்பிட கி.வா.ஜ. அமர, நண்பரின் மனைவி
இலையில் பூரிகளைப் போட்டபடி, ‘‘நீங்க டிபன்
சாப்பிட வர்றீங்கன்னதும் பூரியும் கிழங்கும் தயார்
பண்ணிட்டேன். உங்களுக்குப் பிடிக்குமா,
பிடிக்காதான்னுகூட கேட்டுக்கலை. நாங்க...’’ என்றார்.
கி.வா.ஜ. உடனே, ‘‘என்னம்மா சொல்கிறீர்கள்...?
ஜகந்நாதனுக்கு பூரி பிடிக்காமல் இருக்குமோ?’’
என்றார். இந்தப் பதில் நண்பரையும் அவர்
மனைவியையும் ‘பூரி’க்க வைத்து விட்டது.
-
-------------------------------------
-
ஸ்ரீரங்கத்தில் நடந்த இலக்கியக் கூட்டத்திற்காக
சென்னையிலிருந்து வந்தார் கி.வா.ஜ. அந்த ரயில்
அதிகாலை 4 மணிக்கே ஸ்ரீரங்கத்தை அடைந்து விடும்.
பெரிய ரோஜாப்பூ மாலை ஒன்றைப் போட்டு அவரை
வரவேற்றனர் இலக்கிய அன்பர்கள். இத்தனை
அதிகாலையில் இவ்வளவு பெரிய மாலையை எப்படி
இவர்கள் வாங்கிவந்தார்கள் என்ற வியப்பு மனதில்
ஓட, கி.வா.ஜ., ‘‘அடடா... என்ன இது?
காலையிலேயே மாலை வந்து விட்டதே!’’ என்றதும்,
அனைவரும் கை தட்டி ஆரவாரித்தனர்.
-
--------------------------------------
-
நண்பரின் மனைவியொருவர் டிபன் எதுவும் வேண்டாம்
என்று மறுத்த கி.வா.ஜ.விடம், ‘‘அப்படியானால்
பழம் கிழம் எதுவும் சாப்பிடுகிறீர்களா?’’ என்று
கேட்டிருக்கிறார்.
‘‘பழைய காலத்துக் கிழவன் நான் என்பதால் இப்படிச்
சொன்னீங்க போல இருக்கு. எனக்கு எதுவும் வேண்டாம்மா...’’
என்ற கி.வா.ஜ.வி்ன் பதில் அவர்களைச் சிரிக்க வைத்து
விட்டது
-
--------------------------------------
--பால கணேஷ்[/ltr]

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» கி வ ஜகன்னாதனில் சிலேடைகள்
» இசைக்கு பெருமை சேர்த்த சங்கீத கலாநிதி கோவிந்தராவ்
» பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன் அவர்களின் நிலைத்த புகழுக்கு காரணம் திறமையா ? அதிர்ஷ்டமா ? பட்டிமன்றம் . நடுவர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் . பத்மஸ்ரீ கலைமாமணி டி .எம் .சௌந்தரராஜன் அவர்களின் நிலைத்த புகழுக்கு காரணம் திறமையே ! கவிஞர் இ
» எந்திரன் கதை திருட்டு விவகாரம்: கலாநிதி மாறன், ஷங்கருக்கு கோர்ட் சம்மன்
» புகார் வாபஸ்..ஆனாலும் கலாநிதி மாறனுக்கு போலீஸ் மீண்டும் சம்மன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum