தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

கல்லீரலைக் காப்பது நம் கையில்!

Go down

கல்லீரலைக் காப்பது நம் கையில்! Empty கல்லீரலைக் காப்பது நம் கையில்!

Post by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:59 am

கல்லீரலைக் காப்பது நம் கையில்! P14bகல்லீரலைக் காப்பது நம் கையில்! P14a
-
கல்லீரலில் ஏற்படக்கூடிய வீக்கத்தை ஹெபடைட்டிஸ் என்கிறோம். இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது ஹெபடைட்டிஸ் ஏ முதல் இ வரை உள்ள வைரஸ் கிருமிகள்தான். ஹெபடைட்டிஸ் பி, சி தவிர மற்ற வகை கிருமிகளால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனால், பி, சி வைரஸ் கிருமிகள் உயிரிழப்பு வரை கொண்டுவிடும். மற்ற வகை வைரஸ் கிருமிகளால் மஞ்சள் காமாலை ஏற்படும். அதை சரிபடுத்திவிட முடியும். இந்த வைரஸ் கிருமிகள் மாசடைந்த நீர், உணவுப் பொருட்கள் வழியாகப் பரவும். என்ன சாப்பிடுகிறோம், எங்கே சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்தினாலே, இத்தகைய வைரஸ் கிருமித் தொற்றைத் தவிர்த்துவிடலாம். சுகாதாரமான முறையில் தயாரான உணவு மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரையே எப்போதும் அருந்துவது நல்லது.
மிக மோசமான பி மற்றும் சி வைரஸ் கிருமிகள் ரத்தம் மூலமாகவும் உடலுறவு மூலமாகவும் பரவுகின்றன. இதில், உடலுறவு மூலம் பரவுவது மிகக் குறைவுதான். பெரும்பான்மையானோருக்கு ரத்தம் மூலமாகவே இந்த வைரஸ் கிருமிகள் பரவுகின்றன.

-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கல்லீரலைக் காப்பது நம் கையில்! Empty Re: கல்லீரலைக் காப்பது நம் கையில்!

Post by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 9:59 am

கல்லீரலைக் காப்பது நம் கையில்! P14c

-
பொதுவாக, பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தைப் பெறும்போதும், சரியாகச் சுத்தப்படுத்தப்படாத ஊசி உள்ளிட்ட அறுவைசிகிச்சைக் கருவிகளைப் பயன்படுத்துவதாலும், இந்த இருவகை வைரஸும் பரவுகின்றன. ஹெபடைட்டிஸ் பி வைரஸ் மட்டும் கர்ப்பக் காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கும் மற்றும் உடலுறவு மூலமாகவும் பரவுகிறது. எனவே, கர்ப்பிணிகள் மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதில் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தால், சிசுவுக்கும் அந்தப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்றைத் தடுக்க, குழந்தை பிறந்ததும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட வேண்டும். எந்த வயதினரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இப்போது, பச்சிளம் குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பூசி அட்டவணையிலேயே ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி சேர்க்கப்பட்டுவிட்டது. இதனால், எதிர்காலத்தில் இந்த வகை வைரஸால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. ஹெபடைட்டிஸ் சி-க்கு தடுப்பூசி இல்லை. எனவே, இந்த வைரஸ் வராமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.
இந்தியாவில் 10 சதவிகித மக்களுக்கு ஏதாவது ஒரு சூழலில் இந்த ஏ முதல் இ வரையிலான வைரஸ் கிருமித் தொற்று வந்து சென்றிருக்கும். இதைச் சரியாகக் கண்டறிந்து, சிகிச்சை எடுக்காதபோது அது கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்திவிடும்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கல்லீரலைக் காப்பது நம் கையில்! Empty Re: கல்லீரலைக் காப்பது நம் கையில்!

Post by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 10:00 am

Post by அ.இராமநாதன் Tue Jun 27, 2017 10:01 am

கல்லீரலைக் காப்பது நம் கையில்! P14d

-

கல்லீரலைக் காப்பது நம் கையில்! P14d
-பாதுகாப்பற்ற ரத்தப் பரிமாற்றத்தைத் தவிர்த்தல்,
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஊசியைப்
பயன்படுத்துதல், பாதுகாப்பான உடலுறவு போன்றவை
 ஹெபடைட்டிஸ் பி, சி பாதிப்பைத் தவிர்க்கும்.

தனிநபர் சுகாதாரம் பராமரிப்பது, சுகாதாரமற்ற
இடங்களில் உணவுப் பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம்
ஹெபடைட்டிஸைத் தடுக்கலாம்.

இவை அனைத்தும் நம் கையில்தான் உள்ளன என்பதை
உணர்ந்து செயல்பட்டால், ஹெபடைட்டிஸ் பாதிப்பை
முற்றிலுமாக வெல்ல முடியும்.
-
--------------------------------------------

- பா.பிரவீன் குமார்
விகடன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கல்லீரலைக் காப்பது நம் கையில்! Empty Re: கல்லீரலைக் காப்பது நம் கையில்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum