தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
யாருடன் கூட்டணி? சில நாள்களில் இறுதி முடிவு: ஜெயலலிதா
Page 1 of 1

[You must be registered and logged in to see this image.]
டுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றிய இறுதி முடிவு இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்படும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் சென்னை அருகே வானகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமை வகித்தார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் ஜெயலலிதா பேசியதாவது:
1967-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அண்ணா மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதாவது, 1967-க்குப் பிறகு திராவிட கட்சிகளில் ஒன்றுதான் தமிழகத்தை ஆளும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையை அண்ணா ஏற்படுத்தினார்.
அதேபோல் 2011 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க. மட்டுமே தமிழகத்தில் நிரந்தரமாக ஆட்சி அமைக்கும் என்ற புதிய திருப்புமுனையை நம்மால் ஏற்படுத்த முடியும்.
நீங்கள் என்னுடன் சேர்ந்து ஒத்துழைத்தால், கட்சிக்காக விசுவாசமாக உழைத்தால், கட்சிக்கான கடமையை சரிவரச் செய்தால் இந்த திருப்புமுனையை நாம் ஏற்படுத்தி விட முடியும்.
ஒற்றுமை தேவை: எம்.ஜி.ஆர். காலத்திலும் சிலருக்குதான் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். எனினும், எம்.ஜி.ஆர். முதல்வராக வர வேண்டும், அ.தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்பதையே அவர்கள் பிரதானமாக நினைத்ததால், ஏமாற்றத்தை மறந்து கட்சி நலனுக்காக மட்டுமே உழைத்தனர்.
ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளராக வாய்ப்புள்ளவர்கள் 10 முதல் 15 பேர் வரை உள்ளனர். எனினும், அவர்களில் ஒருவருக்குதான் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு தர முடியும். இந்த எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், வாய்ப்பு கிடைக்காத நான்கைந்து பேர் சேர்ந்து கொண்டு, நம் கட்சி வேட்பாளரையே தோற்கடிக்கும் புதிய கலாசாரம் கட்சியில் உருவாகியுள்ளது.
2006 தேர்தலில் உண்மையில் நாம் ஆட்சி அமைத்திருக்க முடியும். நம்மை தி.மு.க. தோற்கடிக்கவில்லை. ஆனால், நம் கட்சியினரே பல தொகுதிகளில் நம் வேட்பாளர்களைத் தோற்கடித்து விட்டனர்.
இதனால், கடந்த நான்கரை ஆண்டுகளாக நாம் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம். 2011 தேர்தலிலும் இதே நிலைமை ஏற்படக் கூடாது. எனவே, யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும், அவர் அ.தி.மு.க. வேட்பாளர். அவரை வெற்றி பெறச் செய்து, அ.தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில், நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
மனம்விட்டு பேசும் சூழ்நிலை இல்லை: பொதுக்குழுவில் பல விஷயங்களை மனம் விட்டு பேச வேண்டும் என்பதுதான் உங்களில் பலரது விருப்பம். எனது விருப்பமும் அதுதான். அத்தகைய கருத்துப் பரிமாற்றம் கட்சி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியும். எனினும், அதற்கான சூழ்நிலை இப்போது இல்லை.
எம்.ஜி.ஆர். காலத்தில் சத்யா ஸ்டுடியோவில் பொதுக்குழு நடைபெறும். கூட்டம் நடைபெறும் இடம் அருகே பத்திரிகையாளர்கள் செல்ல முடியாது. அதனால், கட்சியினர் தங்கள் மனக் குமுறல்களை மனம் விட்டுப் பேசுவார்கள். அது எதுவுமே வெளியில் தெரியாது.
ஆனால், இன்று கூட்டம் நடைபெறும் அரங்கைச் சுற்றிலும் பத்திரிகையாளர்கள் நின்று கொண்டு, நாம் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு நாம் பேசுவது கேட்காவிட்டால் கூட, நம் கட்சியினரே வெளியில் சென்று என்னென்ன பேசினோம் என சொல்லி விடுகிறார்கள்.
ஒரு குடும்பத்துக்குள் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கும். அதைப்பற்றி யாரும் வெளியில் சென்று பேசுவதில்லை. அதபோல் கட்சி என்பதும் ஒரு மிகப் பெரிய குடும்பம். இங்கு எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், நமக்குள் பேசிக் கொள்ள வேண்டுமே தவிர, வெளியில் பேசக் கூடாது.
2011-ம் ஆண்டு நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியினர் நிச்சயம் மனம் விட்டுப் பேசலாம். அப்போது அ.தி.மு.க. ஆட்சி அமைந்து விடும். அப்போது பத்திரிகையாளர்களை நம் கூட்ட அரங்குக்கு வராமல் செய்து, பிரச்னைகளை மனம் விட்டுப் பேச வாய்ப்பு தரப்படும்.
கூட்டணி குறித்து...: கூட்டணியைப் பற்றி நான் சொல்லியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உங்களிடம் இருப்பது எனக்குத் தெரியும். எத்தகைய கூட்டணியை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதும் எனக்கு நன்கு தெரியும். அந்தக் கூட்டணியில் எந்தெந்தக் கட்சியெல்லாம் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவதும் எனக்குத் தெரியும்.
நிச்சயமாக நீங்கள் விரும்பக் கூடிய கூட்டணியை நான் அமைப்பேன். அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.
நாம் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை இந்தப் பொதுக்குழுக் கூட்டத்திலேயே அறிவிக்க வேண்டும் என்று நான் ஆவலுடன் இருந்தேன். எனினும், 2010-ம் ஆண்டு நிறைவடைய இன்னும் ஓரிரு நாள்கள் மட்டுமே உள்ளன. நம் கட்சியின் சட்ட திட்ட விதிகள்படி 2010 இறுதிக்குள் நாம் பொதுக்குழுவை நடத்தியாக வேண்டும். எனவே, இந்தக் கூட்டத்தில் கூட்டணி பற்றி அறிவிக்க எனக்கு கால அவகாசம் இல்லை.
இருந்தபோதிலும், கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகளை நான் ஏற்கெனவே தொடங்கி விட்டேன். சில முக்கியமான கட்சிகளுடன் இப்போது நான் பேசி வருகிறேன். இன்னும் ஒப்பந்தம் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தைகள் முடிந்து, யாருடன் கூட்டணி என்பதை இன்னும் சில நாள்களில் அறிவிப்பேன் என்றார் ஜெயலலிதா.
DINAMANI

கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» லயோலா சர்வே முடிவு - ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க கூட்டணி முன்னிலை
» அதிமுக கூட்டணி 141-திமுக கூட்டணி 92 இடங்களில் முன்னிலை-ஜூ.வி கணிப்பு
» அதிமுக கூட்டணி 141 - திமுக கூட்டணி 92 இடங்களில் முன்னிலை-ஜூ.வி கணிப்பு
» இறுதி ஆசை...
» இறுதி மூச்சுவரை......

Permissions in this forum:
You cannot reply to topics in this forum