தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தென்மேற்கு பருவக்காற்று - திரைவிமர்சனம்
3 posters
Page 1 of 1
தென்மேற்கு பருவக்காற்று - திரைவிமர்சனம்
[You must be registered and logged in to see this image.]
இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட ஒரு பகுதியின் வாழ்வியல் சார்ந்த கதை.
தமிழ் சினிமாவில், முதன்முதலாக சொல்லப்பட்ட புவியியல் பற்றிய படம். வயல்பட்டி என்ற செழிப்பான கிராமத்துக்கும், ஜல்லிப்பட்டி என்ற வானம் பார்த்த வறண்ட பூமிக்கும் இடையே கதை நிகழ்கிறது. வயல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு தாய், வீராயி. கணவனை பறிகொடுத்த அவள், தன் ஒரே மகன் முருகன் மீது உயிரை வைத்து இருக்கிறாள். முருகனுக்கு ஆடு மேய்ப்பது தொழில். அம்மா சேர்த்து வைக்கும் காசைத் திருடி, நண்பர்களுடன் சாராயம் குடிப்பது, பொழுதுபோக்கு.
ஒருநாள் நள்ளிரவில் ஆடு திருட வந்த திருடர்களை விரட்டிப் பிடிக்கும் போது, அதில் ஒருத்தி பெண் என்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். அவள் பக்கத்து ஊரான ஜல்லிப்பட்டியை சேர்ந்த பேச்சி என்பதையும், ஆடு திருடுவது அவர்களின் குடும்பத் தொழில் என்பதையும் கண்டுபிடிக்கிறான்.
தங்கையை அடையாளம் கண்டு கொண்டான் என்பது தெரிந்ததும் பேச்சியின் அண்ணன்கள், முருகனை போட்டுத்தள்ள முயற்சிக்கிறார்கள். விவகாரம் போலீஸ், கோர்ட்டு என்று வளர்ந்து, பேச்சியின் அண்ணன்கள் இருவரும் ஜெயிலுக்குப் போகிறார்கள். இதற்குள் முருகனுக்கும், பேச்சிக்கும் இடையே காதல் ஆழமாக வேர் விடுகிறது. இவர்கள் காதலை முருகனின் தாய் வீராயியும் எதிர்க்கிறாள். பேச்சியின் அண்ணன்களும் எதிர்க்கிறார்கள். இந்த காதல் விவகாரம் என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது? என்பது உயிரை உருக்குகிற இறுதிக்காட்சி.
இயக்குநருக்கு முதல் பாராட்டு. இப்படியொரு மண்ணும், மண் சார்ந்த கதையையும் தேர்ந்தெடுத்ததற்கு.. காதலை வைத்திருந்தும் காமத்தைத் துளி கூட காட்டாமலும், தாய்ப்பாசத்தை வைத்திருந்தும் அது முட்டாள்தனமாக இல்லாமல் தாயின் பரிதவிப்பையும் ஒரு சேர உணர்த்தியிருக்கும் அந்த நேர்மைக்கு சல்யூட்..
புழுதி பறக்கும் இந்தக் காட்டில் ஒத்தைப் பொம்பளை தானே ஏர் பூட்டி உழுது கொண்டிருக்கும் காட்சியில் நடிகை சரண்யாவை மறக்க வேண்டியிருக்கிறது.. சரண்யாவின் நடிப்பு கேரியரில் மிகச் சிறந்த படம் இது..
மகன் குடிக்கிறானே என்ற கவலையுடன் அவனை விரட்டி விரட்டி அடிப்பது.. குடித்துவிட்டு வயலில் வந்து விழுந்து 'பசிக்குதும்மா..' என்று கேட்பவனிடம் தூக்குவாளியைக் கொண்டாந்து வைத்துவிட்டு கடுகடுப்போடு செல்லும் அந்தக் கிராமத்துத் தாய் போல் பலர் எத்தனையோ ஊர்களில் இன்னமும் இருக்கிறார்கள்.. பையனுக்கு பேசி முடிக்க மிக எளிமையாக சுருக்குப் பையில் இருந்து காசை எடுத்து வெத்தலையை தம்பியிடமே வாங்கி பரிசம் போடும் அந்தக் காட்சியில் எந்த ஆடம்பரமும் இல்லை.
ஆடு காணாமல் போன கதையை விசாரிக்க வரும் போலீசிடம் 'ஏய் போலீசு.. களவாண்டவங்களைப் பார்த்த ஆளு இருக்கு' என்று எகத்தாளமாக சொல்கின்ற அழகு.. மகன் ரத்ததானம் கொடுக்கச் சென்ற இடத்தில் 'எவன்டா என் புள்ளைகிட்ட ரத்தம் எடுக்குறது..?' என்று புரியாமல் சவுண்டு விடும் கோபம்.. கலைச்செல்வியின் தந்தை வீட்டு வாசலில் வந்து நின்று மண்ணை வாரி இறைத்துவிட்டுப் போகும்போது காட்டுகின்ற அந்த பரிதவிப்பு. பேச்சியின் வீட்டிற்கே சென்று அவர்களுடன் சண்டையிடுவது.. என்று சரண்யா அசத்தல் ஸ்கோர் செய்திருக்கிறார். இது அவருக்கு 100-வது படம் என்று தெரிகிறது. வாழ்த்துகள் மேடம்.. இன்னும் அசத்துங்கள்..
கிராமத்து ஹீரோ என்றால் சீவாத தலை, தாடி என்ற ஃபார்முலாவிலிருந்து கொஞ்சம் மாறி ஹீரோ சேது அழகாகத் தலை சீவி ஆனால், தாடியோடு வருகிறார். குறை சொல்ல முடியாத நடிப்பு. வரவேற்க வேண்டிய புதுமுகம்.
'பேராண்மை' படத்தில் நடித்த வசுந்தராதான் இதில் பேச்சியாக உருமாறியிருக்கிறார். இயக்குநர்களிடத்தில் தங்களை நம்பி ஒப்படைத்துவிட்டால் இது போன்ற அருமையான கேரக்டர்கள் சிறந்த நடிப்பிற்காகக் கிடைக்கும். வசுந்தராவுக்கு உறுத்தாத மேக்கப்பும், அலட்டாத, மிகையில்லாத நடிப்பும் மிகச் சரளமாக இதில் வந்திருக்கிறது.. ஹீரோவைப் பார்த்து பயந்து போய் ஓடும் வேகமும், கண்டுபிடித்தவுடன் முகத்திலேயே ஏதோ தெரியாத ஆளிடம் பேசுவது போல பேசுகின்ற தொனியும் இயக்குநரின் திறமையையும் தாண்டி வசுந்தராவின் நடிப்பைக் காட்டுகிறது.. அவருடைய முகத்தைக் காட்டியே காட்சிகளை சிற்சில இடங்களில் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
குறிப்பிட்டுப் பாராட்டக்கூடிய இன்னொரு நபர் தீப்பெட்டி கணேசன். 'ரேணிகுண்டா'வில் கலகலக்க வைத்தவர் இதிலும் அப்படியே.. ஆயிரம் ரூபாயை சுருக்குப் பையில் வைச்சிருந்தனே.. காணோமே என்ற சரண்யாவின் பரிதவிப்பைக் கேட்டு 16 குவார்ட்டர் வாங்கிருக்கலாமே என்ற நக்கல் அங்கலாய்ப்பு செம கலகலப்பு.. படத்தின் துவக்கத்தில் இருந்தே இவரது கேரக்டர் ஸ்கெட்ச் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் துணையாய் இருக்கிறது.
இவர்களைப்போல ஒளிப்பதிவாளர் அருள்தாஸ், ஸ்டில்ஸ் குமார், காதல் சுகுமார், ஹேமலதா ஆகியோரும் அந்தந்த கதாபாத்திரங்களாக மனதில் இடம் பிடிக்கிறார்கள். கிராமத்து வாசனைத் தெறிக்கும் அத்தனையையும் பிரேம் டூ பிரேம் வைத்துச் செதுக்கியிருக்கிறார் இயக்குநர். இதற்கு கை கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் செழியனையும் பாராட்டத்தான் வேண்டும்.
கலைச்செல்வியாக நடித்த அந்தப் பெண்ணைத் தேர்வு செய்த இயக்குநருக்கு தனி ஷொட்டு.. கருமை என்றாலும் பளிச்.. தன்னை நிராகரித்த ஹீரோவிடம் திரும்பி வந்து அவருடைய புகைப்படத்தைக் கொடுத்து "இனிமே இது என்கிட்ட இருக்கக் கூடாது மாமா.." என்று சொல்லி நீட்டுகின்ற இடத்தில் தியேட்டரில் அப்ளாஸ் பறந்தது.
'களவாணிக் குடும்பத்துல பொண்ணெடுக்க உங்கம்மா சம்மதிப்பாங்களா?' என்று பேச்சி கேட்டவுடன் ஹீரோ நிற்க.. 'பார்த்தீங்களா நின்னுட்டீங்க..?' என்று திரும்பவும் பேச்சி சொல்கிற காட்சி டாப் கிளாஸ்.. அதேபோல் பேச்சியை ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஹீரோ அழைத்துவிட்டுப் போனவுடன் பேச்சியின் குடும்பத்தினர் ஆளாளுக்கு அவளுக்கு அட்வைஸ் செய்கின்ற சீனையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்..
புது இசையமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தனின் இசையும், பின்னணி இசைக்கு பதில், படம் முழுக்க வரும் கவிஞர் வைரமுத்துவின் வசீகரமான பாடல் வரிகளும் படத்தின் தரத்தை தூக்கிப் பிடிக்கின்றன. குறிப்பாக, 'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே' பாடலும், அதை படமாக்கியிருக்கும் விதமும் கண்களை குளமாக்குகிற கவிதை.
படத்தின் பின்பகுதியில் உள்ள அழுத்தம், முன்பகுதியில் இல்லாதது, குறை.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத கேப்டன் ஷிபு ஐசக் என்பவர் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். வெறும் 36 நாட்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறாராம் இயக்குநர். ஆச்சரியம்தான்.. எத்தனைத் தெளிவாக திரைக்கதை எழுதி, எத்தனை வேகமாக எடுத்திருப்பார் என்று யோசிக்க வைக்கிறது. பாலுமகேந்திரா மற்றும் சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி பயிற்சி பெற்றிருக்கும் சீனு ராமசாமியின் இத்திரைப்படம் நிச்சயமாக அவரது குருநாதர்களைப் பெருமைப்படுத்தும்..!
மிகக் குறுகிய காலத்தில் எடுத்து முடித்திருந்தாலும் நீண்ட காத்திருப்புக்குப் பின்பு ஆண்டு கடைசியில் வெளியிட்டிருக்கிறார்கள். நிச்சயம் இது போன்ற திரைப்படங்களை ஆதரிக்க வேண்டியது நல்ல சினிமாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நம்முடைய கடமை.
தென்மேற்கு பருவக்காற்று - மனதை வருடிய தென்றல்!
kl
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தென்மேற்கு பருவக்காற்று - திரைவிமர்சனம்
நல்லா சொல்லிருக்கிங்க தல.. சீக்கிரம் பார்க்கணும் ...
தொடரட்டும் உங்கள் பயணம்
தொடரட்டும் உங்கள் பயணம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தென்மேற்கு பருவக்காற்று - திரைவிமர்சனம்
அழகாக விமர்சித்திருக்கிறீங்க..... தொடர வாழ்த்துக்கள்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Similar topics
» ஆடுபுலி - திரைவிமர்சனம்
» மெர்சல் - திரைவிமர்சனம்
» சங்கரின் 'நட்பிற்கு பெருமை சேர்க்கும் நண்பனிவன் - திரைவிமர்சனம் - வித்யாசாகர்!
» தென்மேற்கு பருவமழை துவங்கியது
» தென்மேற்கு பருவ மழை படிப்படியாக தீவிரம்
» மெர்சல் - திரைவிமர்சனம்
» சங்கரின் 'நட்பிற்கு பெருமை சேர்க்கும் நண்பனிவன் - திரைவிமர்சனம் - வித்யாசாகர்!
» தென்மேற்கு பருவமழை துவங்கியது
» தென்மேற்கு பருவ மழை படிப்படியாக தீவிரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum