தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
Page 1 of 1
மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
[You must be registered and logged in to see this image.]
ராஞ்சி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-4 என்ற
கணக்கில் பறிகொடுத்தது.
அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.
இதன் முதலாவது 20 ஓவர் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில்
நேற்றிரவு நடந்தது. மனைவிக்கு உடல்நலக்குறைவு காரணமாக
ஒரு நாள் தொடரில் ஆடாத ஷிகர் தவான் அணிக்கு திரும்பினார்.
லோகேஷ் ராகுல், மூத்த வேகப்பந்து வீச்சாளர் நெஹரா
ஆகியோருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.
டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி, வானிலையை
மனதில் வைத்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதற்கு கைமேல் பலன் கிடைத்தது.
பிஞ்ச் 42 ரன்
ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்சை கேப்டன் டேவிட் வார்னரும்,
ஆரோன் பிஞ்சும் தொடங்கினர். வார்னர் (8 ரன்)
புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார்.
அடுத்து மேக்ஸ்வெல் ஆட வந்தார்.
ஆரோன் பிஞ்ச், ரன் சேகரிப்பில் ஓரளவு வேகம் காட்டினார்.
ஸ்கோர் 55 ரன்களை எட்டிய போது மேக்ஸ்வெல் (17 ரன்),
யுஸ்வேந்திர சாஹல் வீசிய பந்தை வளைத்து பிடித்து அடித்த
போது, பும்ராவிடம் சிக்கினார்.
தொடர்ந்து ஆரோன் பிஞ்ச்சை (42 ரன், 30 பந்து, 4 பவுண்டரி,
ஒரு சிக்சர்) குல்தீப் யாதவ் காலி செய்தார்.
தொடர்ந்து சாஹல்-குல்தீப்பின் சுழலில் சிக்கி ஆஸ்திரேலிய
அணி நிலைகுலைந்து போனது. வேகம் குறைந்த இந்த (ஸ்லோ)
ஆடுகளத்தில் பந்து அதிகமாக மேலே எழும்பவே இல்லை.
சரியாக கணித்து ஆடாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்
விக்கெட்டுகளை கொத்து கொத்தாக தாரைவார்த்தனர்.
ஹென்ரிக்ஸ் (8 ரன்), டிராவிஸ் ஹெட் (9 ரன்), டிம் பெய்ன் (17 ரன்),
நாதன் கவுல்டர்-நிலே (1 ரன்), டேனியல் கிறிஸ்டியன் (9 ரன்)
வரிசையாக நடையை கட்டினர்.
மழையால் பாதிப்பு
ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 118 ரன்கள்
எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை
பெய்ததால் அத்துடன் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் முடித்துக்
கொள்ளப்பட்டது. 2 கேட்ச் மற்றும் ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பை
இந்திய வீரர்கள் கோட்டை விட்டனர்.
இதையும் கச்சிதமாக செய்திருந்தால் ஆஸ்திரேலியாவின்
நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். இந்திய தரப்பில் பும்ரா,
குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார்,
ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட்டும்
வீழ்த்தினர்.
மழையால் சுமார் 2 மணி நேரம் போட்டி பாதிப்புக்குள்ளானது.
பின்னர் டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி
6 ஓவர்களில் 48 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற எளிய இலக்கு
நிர்ணயிக்கப்பட்டது.
இந்தியா வெற்றி
இதை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணி 5.3 ஓவர்களில்
ஒரு விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி கண்டது. பவுண்டரியுடன் இலக்கை எட்ட வைத்த கேப்டன்
விராட் கோலி 22 ரன்களுடனும் (14 பந்து, 3 பவுண்டரி),
ஷிகர் தவான் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ரோகித் சர்மா 11 ரன்னில் அவுட் ஆனார். 20 ஓவர் கிரிக்கெட்டில்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக பெற்ற
7-வது வெற்றி இதுவாகும். குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக
தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா
1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது 20 ஓவர் போட்டி
வருகிற 10-ந்தேதி கவுகாத்தியில் நடக்கிறது.
ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் விலகல்
இந்தியாவுக்கு எதிராக நாக்பூரில் நடந்த கடைசி ஒரு நாள் கிரிக்கெட்
போட்டியின் போது, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்
காயமடைந்தார். பந்தை பாய்ந்து விழுந்து தடுத்த போது, வலது
தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. 20 ஓவர் தொடருக்குள் உடல்
தகுதியை எட்டி விடுவார் என்று அணி நிர்வாகம் எதிர்பார்த்த
நிலையில் தோள்பட்டை வலி இன்னும் முழுமையாக குறையவில்லை.
மேலும் தொடர்ந்து விளையாடினால் காயத்தன்மை அதிகரித்து
விட வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு
எதிரான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இருந்து
ஸ்டீவன் சுமித் நேற்று விலகினார். அவர் உடனடியாக தாயகம்
திரும்புகிறார்.
சுமித்தின் விலகலால் நேற்றைய முதலாவது 20 ஓவர் போட்டியில்
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் செயல்பட்டார்.
எஞ்சிய இரு ஆட்டத்திற்கும் அவரே கேப்டனாக தொடருவார் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டீவன் சுமித்துக்கு பதிலாக மார்கஸ் ஸ்டோனிஸ் அணியில்
சேர்க்கப்பட்டுள்ளார்.
-
-------------------------------
தினத்தந்தி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்
» மழையால் 8 ஓவர்களாக குறைப்பு: கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி தொடரை கைப்பற்றியது
» டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
» இலங்கையில்தொடராக பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துஆ செய்வோம் வாருங்கள்
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum