தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
திருவள்ளுவ மாலை மூலமும் எளிய உரை விளக்கமும் ! நூல் ஆசிரியர் : புலவர் இராம. வேதநாயகம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
திருவள்ளுவ மாலை மூலமும் எளிய உரை விளக்கமும் ! நூல் ஆசிரியர் : புலவர் இராம. வேதநாயகம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
திருவள்ளுவ மாலை
மூலமும் எளிய உரை விளக்கமும் !
மூலமும் எளிய உரை விளக்கமும் !
நூல் ஆசிரியர் : புலவர் இராம. வேதநாயகம் !
[size=17]நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
[/size]
[/size]
மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை,
தியாகராய நகர், சென்னை – 600 017.
******
நூல் ஆசிரியர் புலவர் இராம. வேதநாயகம் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் வடமாதிமங்கலம் ஊரில் வாழ்ந்து வரும் தமிழ்க்குன்று எனலாம். தமிழுக்காக தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி. ‘திருவள்ளுவ மாலை மூலமும் எளிய உரை விளக்கமும்’ என்ற இந்த நூல் தமிழன்னைக்குச் சூட்டிய வைர மாலை எனலாம். திருக்குறளுக்குச் சூட்டிய வைர மகுடம் எனலாம்.
உலகப்பொதுமறையான திருக்குறளின் அருமை பெருமையை அன்றே 55 தமிழ்ப்புலவர்கள் திருவள்ளுவ மாலைபாடி வைத்துள்ளனர். பலர் பாடிய பாடலின் தொகுப்பான திருவள்ளுவமாலை மூலப்பாடல்களையும், பொழிவு, கருத்து என்று மூன்று பிரிவுகளாக 55 பாடல்களுக்கும் எழுதி இருப்பது, சிறப்பு.
புலவர் இராம. வேதநாயகம் எம்.ஏ.எம்.ஏ.எம்.எப். கற்றறிந்த புலவர் என்பதால் பாடல்களுக்கான கருத்துரையை மிக எளிமையாகவும், இனிமையாகவும், நுட்பமாகவும் எழுதி உள்ளார். நூலாசிரியர் கவிஞர் என்பதால் உரையை கவித்துவமாக உள்ளத்தில் நன்கு பதியும்படி எழுதி உள்ளார்.
திருவள்ளுவ மாலை கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் படித்தது இல்லை, நூலாசிரியரின் ஒரு நூலிற்கு அணிந்துரை எழுதி உள்ளேன். இந்நூலை வெளியிட்டவுடனேயே எனக்கு அனுப்பி வைத்து விட்டார். படித்துப் பார்த்து வியந்து போனேன். திருக்குறள் மீது எனக்கு அளவற்ற மதிப்பு உண்டு. இந்நூல் படித்து முடித்ததும் அந்த மதிப்பு இருமடங்காக உயர்ந்து விட்டது.
திருவள்ளுவ மாலை 54 பாடல்கள் நூலில் இருந்தாலும் பதச்சோறாக ஒரே ஒரு பாடலை மட்டும் இங்கு எழுதுகின்றேன்.
" 55. அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி
குறுகத் தரித்த குறள் !
ஔவையார் !
பொழிவு : திருவள்ளுவரின் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறள் வெண்பாக்களும், கடுகை விட மிகவும் நுண்ணிய அணுவை, அதன் நடுவே துளை செய்து, ஏழு கடல்களின் நீரையும், அத்துளையுள் பெய்து, தன்னளவில் குறுகும் வண்ணம் தறித்து வைத்தால் அது போல்வன ஆகும்.
கருத்து : கடுகோ சிறியது, கடுகை விட அணுவானது குறுகியது, சிறியது. அதனுள் அதன் நடுவே துளை போட்டு அத்துளையினுள் ஏழு கடல்களின் நீரையும் புகுத்திக் குறுகிய பின் எவ்வாறிருக்குமோ அது போலாம் திருக்குறள்.
அணு தனிமத்தின் இயல்புகளைக் கொண்ட இயல்பான பொருள் ஒன்றின் மிகச்சிறிய அலகுப் பொருட்கூறு. அணு என்பது மிகவும் சிறியது. அளவில் மீட்டரின் 10 பில்லியனில் ஒரு பங்கு. அதாவது ஆயிரங்கோடியில் ஒரு பங்கு.
ஔவையார் என்ற பெயரில் ஏழு பேர் இருந்தார்கள் என்றறியப்-படுகிறது. இதில் சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையாரே மேற்காண் குறள் வெண்பாவை யாத்ததாகக் குறிப்புள்ளது."
ஒரே ஒரு பாடலை மட்டும் எழுதி உள்ளேன். மீதமுள்ள 54 பாடல்களையும் உரையையும் கருத்தையும் நூல் வாங்கிப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
அரங்கேற்ற மறுத்த திருக்குறளை அரங்கேற்ற உதவிய ஔவையார் தான் இந்தப் பாடலை எழுதி இருக்க வேண்டும் எனபது என் கருத்து.
உண்மை தான். அரிய, பெரிய கருத்துக்களை ஏழு சீரில் அடக்கிய வல்லவர் திருவள்ளுவர். ஒவ்வொரு பாடலுக்கும் மிக நுட்பமாகவும், திட்பமாகவும் எழுதி உள்ளார். எனக்கு மிகவும் பிடித்த கருத்துரை மட்டும் உங்கள் பார்வைக்கு.
பாடல் எண் 12 : எழுதியவர் : நாகன் தேவனார்.
கருத்து : தாமரை மலர்கள் நிறைந்துள்ள குளத்தில் ஒருவர் குளித்தால், வேறு குளத்தை நாட மாட்டார் என்பது போல திருக்குறளைப் படிப்பவர் வேறு நூலை நாட மாட்டார்.
உண்மை தான். திருக்குறளில் சொல்லாத கருத்துக்களே இல்லை. அனைத்தையும் பாடியவர் நம் திருவள்ளுவர். உலக அளவில் தமிழர்களுக்கு பெருமையையும், புகழையும் தேடித் தந்தவர் திருவள்ளுவர். தமிழை அறியாதவரும் திருக்குறளை அறிந்து உள்ளனர்.
புத்தன், இயேசு, காந்தி போன்ற அறவோரை உருவாக்கியது நம் திருக்குறள். மண் உலகிலேயே சொர்க்கம் கண்டு வாழ்வாங்கு வாழ்ந்திட வழி உரைத்தவர் திருவள்ளுவர். திருக்குறளின் சிறப்பை அன்றே உணர்ந்து பாடிய பாடல்கள் படிக்கப் படிக்க திருக்குறளின் மீதான மரியாதை மேலும் மேலும் உயர்ந்து வருகின்றது.
நூல் ஆசிரியர் புலவர் இராம. வேதநாயகம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ஒரே ஒரு நூலில் பல தகவல்கள் உள்ளன. திருவள்ளுவரின் வேறு பெயர்கள், திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள், திருக்குறள் உரையாசிரியர்கள் பட்டியல் திருவள்ளுவ மாலை மூலமும் உரை விளக்கமும் திருக்குறள் பற்றிய சுவையான தகவல்கள், கால வரிசையில் திருக்குறள் உரைகள் பிற என 7 தலைப்புகளில் தகவல் களஞ்சியமாக உள்ளது.
ஆய்வு மாணவர்களும், ஆசிரியர்களும் பேராசிரியர்களும் படிக்க வேண்டிய நூல். இன்னும் சில கருத்துரைகள் உங்கள் ரசனைக்கு.
பாடல் எண் : 22, எழுதியவர் : நொடித்தலை விருத்தண்டினார்.
கருத்து : உலகத்துப் பொருள் அத்தனையும் திருவள்ளுவத்தில் அடங்கும். உலகின் விட்ட பொருள் ஏதேனும் இல்லை. பெறுவதற்கு அரிதானவையே அறம், பொருள், இன்பம் மற்றும் வீடாம்.
பாடல் எண் : 35, பாடியவர் : மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்.
கருத்து : இன்பமும் துன்பமும் இணைந்ததே வாழ்க்கை. மாந்தர் இன்பத்திற்கான காரணங்களையும் துன்பத்திற்கான காரணங்களையும் ஆய்ந்து உணர வேண்டிய வள்ளுவர் வள்ளுவத்தை வாயாற வாழ்த்தாகப் படைத்தார்.
பாடல் எண் : 47, பாடியவர் : நப்பாலத்தனார்.
கருத்து : அறம், பொருள், இன்பம், சொல், குறட்பா ஆகியவற்றை அகல், திரி, நெய், நெருப்பு, தண்டு எனக் கொண்டு திருவள்ளுவர் மாந்தரின் அக இருளை ஓட்டினார்.
பாடல் எண் : 48, பாடியவர் : குலபதி நாயனர்
கருத்து : திருக்குறளும், கதிரவனும் நிகராம். திருக்குறள் மாந்தரின் அக இருளை நீக்கும், கதிரவன் புற இருளை நீக்கும்.
திருக்குறளுக்கு உரை கண்ட பெண்மணிகளின் பட்டியல், திருவள்ளுவர் எழுதியதாகக் கருதப்படும் பிற நூலகளின் பட்டியல், திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகளின் பட்டியல், திருவள்ளுவர் சிலைகள் உள்ள இடங்கள், திருவள்ளுவர் கோயில் உள்ள இடங்கள், இந்நூல் தயாரிக்க உதவிய நூல்களின் பட்டியல். இப்படி படிக்கப் படிக்க பிரமிப்பு வந்தது. நூலாசிரியரின் கடின உழைப்பையும், ஆழ்ந்த எழுத்தையும் உணர முடிந்தது.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» அமிழ்தினும் இனிது! நூல் ஆசிரியர் : கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
» கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
» உதிர்த்த முத்துக்கள் (லிமரைக்கூ – இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
» நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» குத்தூசி ! நூல் ஆசிரியர் : நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
» உதிர்த்த முத்துக்கள் (லிமரைக்கூ – இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
» நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» குத்தூசி ! நூல் ஆசிரியர் : நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum