தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மயிலின் அழகைப் பற்றி பாரதிதாசன்.

Go down

மயிலின்  அழகைப் பற்றி பாரதிதாசன். Empty மயிலின் அழகைப் பற்றி பாரதிதாசன்.

Post by அ.இராமநாதன் Sun Apr 08, 2018 4:44 am

மயிலின் அழகைப் பற்றிப் பல கவிஞர்கள் பாடியுள்ளார்கள். 
மயிலின் சாயலையும், தோகையையும், நீண்ட 
கழுத்தினையும் பெண்களுக்கு உவமையாகப் பாடியுள்ளனர். 

ஆனால் பாரதிதாசன், மயிலின் அழகையும் அதன் 
தன்மையையும் அடிப்படையாகக் கொண்டு, ஓர் அழகான 
நடனக் காட்சியை நம் கண்முன் கொண்டு நிறுத்துகிறார்.

தென்றல் காற்றால் சிலிர்க்கின்ற மரங்கள் நிறைந்த 
சோலை. அங்கு மணம் பொருந்திய அழகிய மலர்கள் 
உள்ளன. மலரிலுள்ள தேனை உண்பதற்காக வரும் 
வண்டுகள் ரீங்காரப் பண்ணைப் பாடுகின்றன. 

கொஞ்சும் மொழியில் கிளி பேசிக் கொண்டிருக்கிறது. 
கருமை நிறம் பொருந்திய குயில் அமுதம் போன்ற இசை 
விருந்தை அளித்துக் கொண்டிருக்கிறது. 

அந்த அருமையான சூழலில், மயில் தன் அழகான 
தோகையை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. 

இதைப் பார்த்து உள்ளம் மட்டுமல்ல, உடலும் பூரிப்பு 
அடைகிறது. இந்த அழகான காட்சியைக் கீழ்க்குறிப்பிடும்
கவிதையில் வடித்துக் காட்டுகிறார் பாரதிதாசன். 
-
மயிலின்  அழகைப் பற்றி பாரதிதாசன். P70a
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

மயிலின்  அழகைப் பற்றி பாரதிதாசன். Empty Re: மயிலின் அழகைப் பற்றி பாரதிதாசன்.

Post by அ.இராமநாதன் Sun Apr 08, 2018 4:47 am

அழகிய மயிலே ! அழகிய மயிலே ! 
அஞ்சுகம் கொஞ்ச, அமுத கீதம் 
கருங்குயில் இருந்து விருந்து செய்யக் 
கடி மலர் வண்டுகள் நெடிது பாடத் 
தென்றல் உலவச், சிலிர்க்கும் சோலையில்
அடியெடுத்து ஊன்றி அங்கம் புளகித்து
ஆடுகின்றாய் அழகிய மயிலே !
-
------------------
(இயற்கை. மயில், வரிகள்: 1-7)
(அஞ்சுகம் = கிளி, புளகிதம் = பூரிப்பு) 
 
இனிமையான அழகிய இயற்கைச் சூழல் மிகுந்த ஓர் 
அரங்கத்தில் மயிலை ஆடவைத்தார். அதோடு அவர் மனம் 
நிறைவு பெறவில்லை. மேலும் அதன் இயற்கை அழகைப் 
புகழ்கிறார்.

மயிலின் தோகை, வரையப்படாத, வரையமுடியாத 
ஓவியம் என்கிறார். அந்தத் தோகையில் பல வண்ணங்களில் 
கண்போல் பொருந்திக் காட்சி அளிப்பவை, ஒளிபொருந்திய 
மாணிக்கக் களஞ்சியம் என்று புகழ்கிறார்.
 -
உனதுதோகை புனையாச்சித்திரம் 
ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம் !
-
(இயற்கை. மயில், வரிகள்: 8 - 9)
-
மயிலின்  அழகைப் பற்றி பாரதிதாசன். C0114208
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

மயிலின்  அழகைப் பற்றி பாரதிதாசன். Empty Re: மயிலின் அழகைப் பற்றி பாரதிதாசன்.

Post by அ.இராமநாதன் Sun Apr 08, 2018 4:49 am

மயிலின்  அழகைப் பற்றி பாரதிதாசன். Peacock
-
மயிலின் அழகில் வயப்பட்டு, தன்னை மறந்திருந்த 
பாரதிதாசனுக்குத் தன் நினைவு வருகிறது. மயிலை அருகில் 
அழைக்கின்றார். அருகில் வந்த மயிலிடம், 

‘மயிலே! உனக்கு ஒரு செய்தி சொல்வேன். நீயும் பெண்களுக்கு 
நிகர் என்று கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் கழுத்தும் 
உன் கழுத்தும் ஒன்றா?

 இல்லையே! பெண்கள் அடுத்த வீட்டு நிகழ்ச்சிகளை அறிவதற்கு 
மிகவும் ஆவலுடையவர்களாக இருப்பார்கள். அத்தகைய 
பெண்கள் அடுத்த வீட்டை எட்டிப் பார்க்காமல் இருப்பதற்கே 
இயற்கை அன்னை அவர்களுக்குக் குட்டைக் கழுத்தைக் 
கொடுத்துள்ளாள். 

உனக்கோ, இப்படிப்பட்ட குறையில்லாத காரணத்தால் நீண்ட 
கழுத்தை இயற்கை அன்னை வழங்கியுள்ளாள். இதைக்
 கேட்டால் பெண்கள் என்னிடம் சினம் கொள்வார்கள். 
எனவேதான் உன்னிடம் சொன்னேன். 

பெண்களின் இந்தச் சுருங்கிய உள்ளம் விரிவு அடையாமல் 
இருப்பதற்கு என்ன காரணம்?, இந்த ஆண்களின் கூட்டம்தான். 
இதை இந்த உலகம் உணர வேண்டும்’ என்று கூறுகிறார் கவிஞர்.
-

இயற்கையின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர் பாரதிதாசன். 
இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்கின்ற பொழுது 
தன்னை இழந்து பார்க்கும், நுகரும் பாரதிதாசனுக்குத் தன் 
நினைவு வந்ததும், சமுதாய உணர்வு மேலோங்கி நிற்கிறது. 

எனவே, மயிலின் அழகைப் பற்றிக் கூறியவர், திடீரென 
ஆண் ஆதிக்கச் சமுதாயக் கொடுமைகளைச் சுட்டிக் காட்டுகிறார்.

இவ்வாறு, மயிலின் இயற்கை அழகினையும், அதன் இயல்பையும், 
சிறப்பாகப் பாடியுள்ளார் பாரதிதாசன்.
-
-------------------------------
நன்றி
.tamilvu.org/courses/degree/c011/c0114/html/c0114205.htm
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

மயிலின்  அழகைப் பற்றி பாரதிதாசன். Empty Re: மயிலின் அழகைப் பற்றி பாரதிதாசன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum