தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவை: வாக்குக் கணிப்புகளில் தகவல்

Go down

கர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவை: வாக்குக் கணிப்புகளில் தகவல் Empty கர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவை: வாக்குக் கணிப்புகளில் தகவல்

Post by அ.இராமநாதன் Sun May 13, 2018 8:30 am

கர்நாடகத்தில் தொங்கு சட்டப் பேரவை அமையும் என்று 
தேர்தலுக்கு பின்பு நடத்தப்பட்ட பரவலான வாக்கு 
கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக முன்னாள் பிரதமர் 
தேவெ கௌடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடி (எஸ்)) 
கட்சி உருவெடுக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

கர்நாடக சட்டப் பேரவையில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில்,
222}க்கு சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 
பதிவாகும் வாக்குகள், வரும் 15}ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்தத் தேர்தலுக்கு பிறகு, பல்வேறு ஊடகங்களும், செய்தி 
நிறுவனங்களும் வாக்குக் கணிப்புகளை நடத்தியுள்ளன. 
அதில் பெரும்பாலானவற்றில், கர்நாடகத்தில் காங்கிரஸ், 
பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் ஆட்சியமைக்க தேவையான
தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்காது, 

இதனால் மாநிலத்தில் தொங்கு சட்டப் பேரவையே அமையும், 
ஜேடி (எஸ்) கட்சியானது, ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக 
உருவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

அதேநேரத்தில், காங்கிரஸ், பாஜக ஆகியவற்றுக்கு எத்தனை 
இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து மாறுபட்ட தகவல்களை 
வெளியிட்டுள்ளன.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவை: வாக்குக் கணிப்புகளில் தகவல் Empty Re: கர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவை: வாக்குக் கணிப்புகளில் தகவல்

Post by அ.இராமநாதன் Sun May 13, 2018 8:31 am

இதுகுறித்த விவரம் வருமாறு:

ரிபப்ளிக் டிவி}ஜன் கீ பாத் மற்றும் ஏபிபி}சி வோட்டர் ஆகியவை 
கர்நாடக சட்டப் பேரவையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக 
உருவெடுக்கும் எனத் தெரிவித்துள்ளன. 

அதாவது, ரிபப்ளிக் டிவி}ஜன் கீ பாத்தின் வாக்கு கணிப்பில் 
பாஜகவுக்கு 95 முதல் 114 தொகுதிகளும், ஏபிபி}சி வோட்டர் வாக்கு 
கணிப்பில் 97 முதல் 109 தொகுதிகள் கிடைக்கும் எனவும் 
குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸூக்கு 73 முதல் 82 தொகுதிகள் கிடைக்கும் என ரிபப்ளிக் 
டிவி}ஜன் கீ பாத் வாக்கு கணிப்பு தெரிவிக்கிறது. 87 முதல்
99 தொகுதிகள் வரை கிடைக்கும் என ஏபிபி}சி வோட்டர் வாக்கு 
கணிப்பு கூறுகிறது. 

ரிபப்ளிக் டிவி}ஜன் கீ பாத் வாக்கு கணிப்பில், ஜேடி (எஸ்) கட்சிக்கு 
32 முதல் 43 தொகுதிகளும், ஏபிபி}சி வோட்டர் வாக்கு கணிப்பில்
21 முதல 30 தொகுதிகளும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ்}விஎம்ஆர் மற்றும் இந்தியா டுடே}ஆக்சிஸ் மை இந்தியா
ஆகியன நடத்திய வாக்கு கணிப்புகள், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்
கட்சியாக உருவெடுக்கும் எனத் தெரிவிக்கின்றன. 

அதாவது முறையே 90}103, 106}118 தொகுதிகள் கிடைக்கும் என 
அவற்றின் வாக்குக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன. பாஜகவுக்கு
80}93, 79}82 தொகுதிகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கின்றன.

இந்தியா டுடே வாக்கு கணிப்பில் காங்கிரஸூக்கும், ரிபப்ளிக் 
டிவி வாக்கு கணிப்பில் பாஜகவுக்கும் தனி பெரும்பான்மை கிடைக்க
வாய்ப்பிருப்பதாக கூறுகின்றன.

டைம்ஸ் நவ் வாக்கு கணிப்பில் ஜேடி(எஸ்) கட்சிக்கு 31}39 இடங்களும், 
இந்தியா டுடே கணிப்பில் 22}30 இடங்களும் கிடைக்கும் எனவும் 
தெரிவிக்கின்றன.

நியூஸ் எக்ஸ் வாக்கு கணிப்பில் பாஜகவுக்கு 102}110 இடங்களும், 
காங்கிரஸூக்கு 72}78 இடங்களும், ஜேடி(எஸ்) கட்சிக்கு 35}39 
இடங்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்கின்றன.

காங்கிரஸூக்கு 39 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு 35 சதவீத 
வாக்குகளும் கிடைக்கும் என இந்தியா டுடே வாக்கு கணிப்பு கூறுகிறது. 
அதேநேரத்தில், ரிபப்ளிக் டிவி வாக்கு கணிப்போ, காங்கிரஸூக்கு
36 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு 38.25 சதவீத வாக்குகளும் 
கிடைக்கும் எனத் தெரிவிக்கிறது.

கர்நாடகத்தில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 
113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையாகும். கடந்த சட்டப் பேரவைத் 
தேர்தலில் காங்கிரஸ் கட்சி 122 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 
பாஜக, ஜேடி(எஸ்) கட்சிகள் தலா 40 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
-
---------------------------
தினமணி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum