தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



‘இரண்டாவது கோப்பை’வாசகர்களின் கவிதைகள் - By கவிதைமணி

Go down

‘இரண்டாவது கோப்பை’வாசகர்களின் கவிதைகள் - By கவிதைமணி   Empty ‘இரண்டாவது கோப்பை’வாசகர்களின் கவிதைகள் - By கவிதைமணி

Post by அ.இராமநாதன் Sun Nov 11, 2018 11:04 pm

இரண்டாவது கோப்பை

சமத்துவபுரத்தில் 
தீண்டாமையை ஒழித்து
பிரிவினைகளை ஒடுக்கி
சாதிமதங்களை நீக்கிட
சபதமெடுத்த தலைவரின்
கூட்டணி பேச்சுவார்த்தை
இரண்டாவது ரவுண்டிலும்,
கடைக்கோடி தொண்டனின் பசி
சிரட்டையிலும்

- சிவம், திருச்சி

**

மதுக்குடி மாண்பல்ல என்ற நியாயம்
புதுக்குடி கொட்டை வடிநீருக்கில்லையே
ததும்பத் ததும்பப் பெரிய குவளையாயிற்று
வெதுவெதுப்பான திரவம் வேண்டலாயிற்று

பெருங் குவளையில் கவலையான இல்லாள்
இரு கோப்பைகளில் முக்காலும் நிரப்பினாள்
தரும் திரவத்தின் அளவுக் குறைவு தெரியாது
பெரும் சாதனையாய் இரண்டு கோப்பையில்

கோப்பை ஒன்றில் ருசி அறியாத வேகம்
கோப்பை இரண்டில் ருசிக்கும் ருசியாலே
காப்பாற்றினாள் அதிகமில்லாமல் இல்லாள்
சாப்பாடும் சரிவிகிதம் வயிற்றில் சென்றதே

இரண்டாவது கோப்பை வந்ததால் நன்மை
திரண்ட உடல்நலம் குன்றாது காத்தது அது
வரண்ட வாழ்க்கையிலும் இரண்டு கோப்பை
மிரண்ட வயிறு ஏழைகளை எண்ணியதே

ஒன்றே நன்று அதிகம் இல்லாதார்க்கென்றே
கன்றும் தாய்ப் பசுவுமான உறவில் வாழ்ந்திட
என்றும் நல்ல மனம் கொண்டால் நன்றல்லவா
அன்றே இரண்டாவது கோப்பை வேண்டாமே

கவிஞர்  ராம்க்ருஷ்

**
காலைக்கடன்களைக்
கட்டாயம் கழித்திடவே
இந்திய மூத்த குடி மக்களுக்கு
இரண்டாவது கோப்பைத் தேநீர்
இல்லை எனாமலே வேண்டும்.

சிந்தனை ஆள்பவர்க்கும்
சிரிக்க வைக்கும் நபர்களுக்கும்
இரண்டாவது கோப்பைத்தேநீர்
இனி வேண்டாம் எனக் கூறவருமோ?!

கோப்பையிலே குடியிருப்பு
கோலமயில் துணை இருப்பு
என்றெழுதிய கவியரசுகூட
எனக்கு எதற்கு இரண்டாவதுகோப்பை 
என என்றாவது சொன்னதுண்டா?!

தாய் மகிழ்ந்து தந்த பின்னும்
தாரம் தந்து மகிழ்ந்திடத்தான்
பாழ் மனந்தான் துடிக்கிறதே
பருகிடத்தான் இனிக்கிறதே
இரண்டாவது கோப்பை தேடி
இதய வாசல் திறக்கிறதே!

புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன் சிறுமுகை

**
காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை 
காப்பி ...பின்னர் காலாற ஒரு பொடி 
நடை வீட்டை சுற்றி சுற்றி !
தன் முகாமுக்கு திரும்பும் ஒரு படை 
வீரன் துணிவுடன் எடுப்பேன் நான் 
அன்றைய செய்தித்  தாளை தினமும்
என் நடைபயிற்சி முடிந்தவுடன் !
எத்தனை அதிர்வு செய்தி, எத்தனை 
குற்ற செய்தி தினமும் ! அத்தனையும் 
படிக்க மனதில் உறுதி வேண்டும் !
இரண்டாவது கோப்பை "ஸ்ட்ராங்" காப்பியும் 
கையில் இருக்க வேண்டும் அப்போது !
இரண்டாவது கோப்பை காப்பிக்கு என்ன 
அத்தனை சக்தி ! எதையும் தாங்கும் 
என் இதயம் இரண்டாவது கோப்பை 
காப்பி மட்டும் என் கையில் இருந்தால் !
முதல் கோப்பையில் இல்லாத தரமும் 
சுவையும் இரண்டாவது கோப்பை காப்பியில் 
எப்படி சாத்தியம் ?  அது என்ன ரகஸ்யம் ? 
கேட்டேன் நான் என் சகதர்மிணியை ! 
பட்டென கிடைத்தது விடை என் கேள்விக்கு 
முதல் கோப்பை காப்பி "நீங்களே தயாரிக்கும் 
காப்பி அவசரக் கோலத்தில் விடிந்தும் விடியாமலும் "!
இரண்டாவது கோப்பை காப்பி உருவாகுவது 
என் மனைவியின் முதல் தர இயக்கத்தில் !
புரிந்து கொண்டேன்  நான் இரண்டாவது 
கோப்பை காப்பியில்தான் முதல் தர 
காப்பியை ருசிக்கிறேன் தினமும் என்று !
கோப்பை இரண்டாவதாக இருக்கலாம் ஆனால் 
அதில் கிடைக்கும் காப்பி முதல் தரமாயிற்றே !
இந்த இரண்டாவது கோப்பை உண்மையில் 
இருக்க வேண்டிய இடம் இரண்டாவது இடத்தில் அல்ல !

- K.நடராஜன் 

**

இரண்டாவது கோப்பையும் இறங்கிற்று உள்ளே!
ஜிவ்வென்று எங்கோ பறந்தது அவனுளம்!
மூன்றாவதும் போட்டால் முகிழ்க்குமோ இன்பமென்று
முடிவின்றி எண்ணம் மூழ்கிற்று சுறுசுறுப்பில்!
அடித்து உதைத்து ஆர்ப்பாட்டம் மிகச்செய்ததால்
அருகிலிருந்தவன் அறைந்து இழுத்து வந்து
சாலையோரத்தில் சாக்கடை மத கருகில்
படுத்திருந்த நாயின் பக்கத்தில் இவனை
கிடத்திப் போனான்!கிஞ்சித்தும் இரக்கமின்றி!
முகர்ந்திட்ட நாயும் முகஞ்சுழித்து அகல
ஓடிவந்த பன்றியும் ஒடுங்கியே நின்றது!

பருவமழையின் ஊடலில் பரலோகம் இருளடைய
பச்சிளம் குழந்தைகள் இரண்டும் பயப்பட்டுக்கொண்டே
'அப்பா ஏம்மா இன்னும் வரவில்லை?யென்று
அடிக்கொரு தரம் அமுதாவைக் கேட்க
கரண்ட் போனதால் கவிந்த இருளை
கைவிளக்கால் மெல்லக் களைந்தே விட்டு
'வருவார் விரைவில் வாங்க நீங்கசாப்பிட!'
என்றே சொன்னாலும் எழிலான அவள்மார்பு
பயத்தில் சற்றே பதற்றத்துடன் துடிக்க
மின்னி இடித்து மிதமாய்ப் பெய்தவானம்
அவனையும் நனைத்தது!அவள் கண்ணையும் நிறைத்தது!

-ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி

**
ஒரு மழை நாளின்
குளிர் இரவில் சிலிர்க்கும் ஈரம் படர்ந்த 
சாலையோரத் தேனீர் விடுதியின் - 
முதல் கோப்பைத் தேனீரில் தெரிந்திருக்கவில்லை
மறுமுறை நாம் சந்திக்காதிருப்போம் என்று,
நிந்தனைகளும் நிபந்தனைகளும் சூழ்ந்த 
நிசப்த வெளி யின் நீண்ட பொழுதுகளில்
மெளன ஓலமாய் ஓசையின்றி அழும் 
உள்மனம் ஏங்குவது தொடர்கிறது,
இன்னொரு கோப்பைத் தேனீருக்கு,
உன் ஈர முகமும் செர்ரி இதழ் சிரிப்பும்
தேனீரை சுவையாக்குவது யாருக்கு தெரியும்?
அந்த
இரண்டாவது கோப்பைத் தேனீரை பருகுவது எப்போது?
நாம்.

- செந்தில்குமார் சுப்ரமணியம்
**
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

‘இரண்டாவது கோப்பை’வாசகர்களின் கவிதைகள் - By கவிதைமணி   Empty Re: ‘இரண்டாவது கோப்பை’வாசகர்களின் கவிதைகள் - By கவிதைமணி

Post by அ.இராமநாதன் Sun Nov 11, 2018 11:04 pm

தேநீர்க் கோப்பை வலது கையிலும்
திறந்த புத்தகம் இடது கையிலும்
இருப்பதே
எனது யோகாசனம்

தேநீர்ச் சுவையும்
வாசிப்பின் சுகமும் 
மனதை மயக்கும் தேவதைகள்

மனைவி அழைத்த போதும்
மழலை சிரித்த போதும்
தெரிவதில்லை
தேநீர்க் கோப்பையின் அரவணைப்பில்

வாசிப்பில் மெய்மறந்த தருணம்
ஆவி பறந்தோடித் தப்பித்திருக்கும்
கோப்பையில் இருந்து

காலியான தேநீர்க் கோப்பையை
உதடு பொருத்தி உறிஞ்சி ஏமாறுதல்
ஒவ்வொரு நாளும் உண்டு

இரண்டாவது கோப்பை கேட்கையில் மட்டுமே
நிகழ்வுலகுக்குத் திரும்புதல்
நிகழ்கிறது

-கோ. மன்றவாணன்

**
சொர்க்க சுந்தரியை க்காண வேணு மெனில் 
உடலெனும் உடுப்பினை 
வாழ்ந்த இடத்திலேயே கழட்டி வைத்து 
உயிர் மட்டும் செல்லுமாயின் அதனால் 
யாருக்கு என்ன சுகம் கிட்டக்கூடும்

அங்கே வெறும் ஐந்தே சுந்தரிகளே நீ 
இருக்கு மிடத்திலோ கோடான கோடி 
உடலின்றி உயிர் ஒரு உயிரில்லை 
உயிரின்றி உடல் ஒரு உடலில்லை 
இரண்டும் ஒன்றாயின் சுகம் உண்டு

கார்குழலை மல்லிகை மலர்களால் அலங்கரித் தொரு 
வாசம் வீசுதிங்கே 
தட்டுங்கள் திறக்கப்படும் என்றதுவோ 
உலக நியதிகளில் ஒன்றாகும் நானே 
தட்டுமுன் தட்டினாள் ஒருகப் காபியென 

சிலையாகி நின்றேன் பிரம்மித்து ஒரு
கோப்பையோடு ஓரங்கட்டி விடுவாளோ 
இரண்டாவது கோப்பை வரவழைத்திட
ஒப்புக்கொண்டாள் தீர்ந்தது சந்தேகம்
அக் கோப்பையாலே வாழ்வு பெற்றேன்

ஆபிரகாம் வேளாங்கண்ணி

**

உயர்ரக தேநீர் கடைக்கு  - நான்
உரிய நேரத்தில் வந்திடுவேன் 
என்றுரைத்தவளுக்காக
எனக்கான முதல் கோப்பையோடும் 
அவளுக்காக
வாங்கிவைத்த இரண்டாவது கோப்பையோடும் 
காத்திருந்தேன்...
நேரம் அதிகரிக்க அதிகரிக்க - கோபம்
அதிகரித்தது; நாள்தோறும் இப்படித்தான் 
காக்கவிடுவாள்...
கோபத்தை இன்று காட்டிவிட வேண்டுமென
நினைக்கும்போதே.. எதிரே நின்றால் புன்சிரிப்போடு..
அந்த புன்சிரிப்பில் என்கோபம் மட்டுமல்ல
நானும் அவளிடமே சரணடைந்து  விட்டேன்..
இரண்டாவது கோப்பையை மெல்லப்பருகினாள் 
நானோ அவளின் மயக்கும் விழியால் 
காதலைப்பருகினேன்..
அடிக்கடி கோப்பைகள் இடம் மாறின
அவளின் உதட்டின்சாயம் என்னுதட்டில் அரங்கேறின..
எத்தனையோ சுவையான தேநீரை சுவைத்தாலும்
அவள்சுவைத்து மீதம்வைத்த தேநீருக்கு ஈடாகவில்லை...
எவ்வளவு நேரமானாலும் ரசித்துக் கொண்டேயிருப்பேன்...
அவ்வளவு அழகுக்கு உரியவள் என்காதலி;
பலநாள் தொடர்ந்த எங்கள் சந்திப்பு
பாதியிலே முடிந்தது; மனம் உடைந்தது...
அவளைத் தேடி தேடி அலைந்தபோதுதான்
அதிர்ச்சியான உண்மை தெரிந்தது - அன்று
அவள் வாக்குறுதி அளித்தால் - உன்
பிறந்தநாளுக்கு நேரத்திற்கு வருவேன் என்று;
என்னை காண்பதற்கு வேகமாய் வந்தவள்
வாகன விபத்துக்குள்ளாகி துடிதுடித்து இறந்திருக்கிறாள்..
இதை அறியாமல் இருந்துவிட்டேன் - அவள்
இல்லாமல்  பித்து பிடித்தவானேன் - நாள்தோறும்
தேநீர் கடைக்கு செல்வேன் - வராத
தொலைபேசியில் அவளோடு நிறைய பேசுவேன் 
வாகனத்தில் பாா்த்து பொறுமையாய் வா
நேரத்தைவிட உயிர் முக்கியம் என்றவாறு...
இரண்டாவது கோப்பையை வாங்கிவைத்தேன் அவளுக்காக..
அதில் தேநீர் நிரம்பி இருக்கவில்லை...
அவளின் அற்புத நினைவுகளே நிரம்பியிருந்தது....!

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி

**
முதலாக  உழைப்புதளை  போட்ட  வர்கள்
    முழுநாளும்   வயல்களிலே  உழைத்த  போதும்
முதல்கோப்பை   கஞ்சிக்கும்  வழியே  யின்றி
    மூன்றுவேளை  பட்டினியில்   துடிக்கின்  றார்கள்
விதவிதமாய்   வாக்குறுதி   கொடுத்துத்  தேர்தல்
    விளையாட்டில்   வெற்றிகண்டே   ஆட்சி  பெற்றுப்
பதவியிலே   அமர்ந்தவர்கள்  செய்ய  வில்லை
    பரிதாப  உழவர்க்கோ  விடிய  லில்லை !

அடுக்கடுக்காய்   வீடுகட்டும்  கொத்த  னார்கள்
    அருமையாக   துணிநெய்யும்   நெசவா  ளர்கள்
வடுக்களாக  அங்கையில்  காய்ப்பு  காய்த்தும்
    வலியோடு   பொழுதெல்லாம்   கல்லு  டைப்போர்
நடுக்கடலின்  உள்சென்று   வலைகள்  வீசி
    நனைந்தவுப்பில்  திரும்புகின்ற  மீன  வர்கள்
விடுகின்றார்   பசியேப்பம் ;   கோப்பைக்  கஞ்சி
    விடியலுக்கும்   வழியில்லை   வறுமை  யாலே !

உழைப்பவரின்  வியர்வையிலே  வாழ்ப  வர்கள்
    ஊர்வளத்தைச்  சுருட்டியின்பில்  திளைப்ப  வர்கள்
அழைப்புதனை   தருவார்கள்  எனக்கா  வாமல்
    அவர்களாக  முன்வந்து   தாரா  விட்டால்
குழையாமல்   அவர்களிடம்  பிடுங்க  வேண்டும்
    கூடியதை   முதலிரண்டு  கோப்பை  என்ன
உழைப்பவர்கள்   வயிறார  உண்ப  தற்கே
    உரிமையென   மொத்தமுமே  கொடுக்க  வேண்டும் !

பாவலர்  கருமலைத்தமிழாழன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum