தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சுயம்பு நூல் ஆசிரியர் : கவிஞர் வெ. முனிசு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
Page 1 of 1
சுயம்பு நூல் ஆசிரியர் : கவிஞர் வெ. முனிசு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
சுயம்பு
நூல் ஆசிரியர் : கவிஞர் வெ. முனிசு
நூல் ஆசிரியர் : கவிஞர் வெ. முனிசு
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
வெளியீடு : கவியரசர் கலைத் தமிழ்ச்சங்கம்,
பரமத்திவேலூர் – 638 182.
நாமக்கல் மாவட்டம். அலைபேசி : 96981 39000.
பக்கம் : 96, விலை : ரூ.100
******
‘சுயம்பு’ என்ற தலைப்பே சிந்திக்க வைத்தது. தானாகத் தோன்றுவதை சுயம்பு என்பார்கள். அதுபோல ஆணிடம் தானாகத் தோன்றிய பெண்மை நளினம் காரணமாக திருநங்கையாக மாறுகின்றனர். இந்த நூல் திருநங்கைகளின் உலகத்தை கவிதை வரிகளால் படம்பிடித்துக்காட்டி உள்ளார். அட்டை முதல் அட்டை வரை திருநங்கைகளின் படங்களையே பயன்படுத்தி உள்ளார். வளவளப்பான வண்ணத்தாள்களில் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளனர். பாராட்டுக்கள்.
த.மு.எ.க.ச. தலைவர் திரு. ச. தமிழ்ச்செல்வன், கவிஞர் பொன்குமார் சேலம், கவிஞர் சூர்யநிலா சேலம் ஆகியோர் அணிந்துரை வழங்கி உள்ளனர். நூலாசிரியர் கவிஞர் வெ. முனிசு திருநங்கைகளின் வாழ்க்கையை ஆய்வு செய்து கவிதை வடித்து உள்ளார்.
மூன்றாம் பாலினமான திருநங்கைகள் சந்திக்கும் புறக்கணிப்பை, வலியை, வேதனையை கவிதைகளாக வடித்துள்ளார். பாராட்டுக்கள்.
விரட்டியடிப்பு / பிறப்புக்குப் பொறுப்பேற்க / பிரம்மன்
தயங்கும் படைப்பு / ஆதரவு நீட்டா அன்னை / தள்ளி நின்ற
தந்தை / அடித்து உதைத்த அண்ணன் / இழுத்துத் தள்ளிய
தம்பி / என்ன செய்வதென்று / தெரியாத / எனது பயணம்.
கிடைத்த / முதல் உறவு / தாயம்மா / மரணிக்கும் எண்ணம்
மரணமானது / அன்று முதல்!
மூன்றாம் பாலினமான திருநங்கைகளை முதலில் குடும்ப உறவுகள் அனைத்தும் புறக்கணிக்கின்றன. வெறுத்து வெளியேறி வீதிக்கு வந்தால் சமுதாயமும் புறக்கணிக்கின்றது. அவர்களின் நிலையில் ஒரு கணம் யோசித்துப் பார்த்து அவர்கள் மீது அன்பு செலுத்திட மனிதநேயம் காட்டிட இந்த சமுதாயமும் குடும்ப உறவுகளும் முன்வர வேண்டும் என்ப்தை கவிதைகள் முழுவதும் வலியுறுத்தி உள்ளார்.
துறவு!
[size]உலகமெல்லாம் பரவி
இருக்கும் / எங்கள் பிறவி
ஒரு / துறவி போல் / சொந்தமும் இல்லை / பந்தமும் இல்லை
சொத்தும் இல்லை / சுகமும் இல்லை / காதலும் இல்லை
கணவனும் இல்லை / கண் கண்ட தெய்வமுமில்லை!
[/size]
திருநங்கைகள் வாழ்க்கை பந்த பாசம் உறவு எதுவுமின்றி துறவு வாழ்க்கைப் போன்றது என்பதை கவிதையில் நன்கு உணர்த்தி உள்ளார். சமுதாயத்தில் அவர்கள் மீது பரிவு காட்ட முன்வர வேண்டும். அவர்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் மனம் உண்டு. மதிக்கப்பட வேண்டும். கேலி, கிண்டல் செய்வதை விட்டுவிட்டு சக மனிதர்களாக மதித்து அன்பு செலுத்திட வேண்டும். இதுபோன்ற பல எண்ணத்தை விதைத்தன கவிதைகள் ...
விலைமகள்!
[size]பூப்பெய்தா பெண்கள் / மாதவிடாய காணா
மங்கைகள் / கருப்பை இல்லா கன்னிகள் / மணமாகா
விதவைகள் / வாழ்க்கைச் சந்தையில் / வாங்கப்படாத
நாங்கள் / விற்கப்படுகிறோம் / விலைமாதர்களாக!
[/size]
மூன்றாம் பாலினமான திருநங்கைகள் உடலமைப்பில் உள்ள குறைகளை புரியாமல் இருந்த புதிர்களுக்கு விடை சொல்லும் விதமாக உடலமைப்பின் இயல்பை கவிதை வரிகளின் மூலம் மிக இயல்பாக உணர்த்தி உள்ளார். பாராட்டுக்கள்.
ஆக்கல்!
[size]வாழத் துன்பப்படுவதால் / வறுமையில் / நிறமானோம்
அங்கீகரிக்கப்படாததால் / அன்பில் / ஆழ்கடலானோம்!
கண்டுகொள்ளப்படாததால் / கருணையில் / கடலானோம்!
அசிங்கப்படுத்தப்படுவதால் / மனிதநேயத்தில் / உருவமானோம்!
உதாசீனப்படுத்தப்படுவதால் / உறவில் / உண்மையானோம்!
[/size]
நூலாசிரியர் வெ. முனிசு அவர்கள், பல திருநங்கைகளை உற்றுநோக்கி அவர்களுடன் பழகி, அன்பு செலுத்தி, அவர்களின் வலியை அறிந்து நேர்முகம் கண்டு ஆய்வுசெய்து உணர்ந்து கவிதைகள் வடித்து இருப்பதால், கவிதைகளில் உண்மை இருப்பதால் படித்து முடித்ததும் நம் மனசும் கனத்து விடுகின்றது.
அழகு!
[size]நாங்கள் / அழகான கோலம் / ஆம் /
அழகுபடுத்தப்படுகிறோம் / மிதிபடுகிறோம் / அழிக்கப்படுகிறோம்!
[/size]
திருநங்கைகளில் சிலர் பெண்களை மிஞ்சிடும் அழகுடன் இருக்கின்றனர். அந்த அழகே ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. கோலம் போலவே மிதிபடுகிறோம், அழிக்கப்படுகிறோம் என்ற உவமை சிந்திக்க வைத்தது.
கருவில் கண்டுவிட்டால்!
[size]கருவில் ஆணா பெண்ணா / ஒருவேளை / எங்களையும்
கண்டுபிடிக்குமானால் / கருவறையே / கல்லறையாகும்
தாய்ப்பாலே கள்ளிப்பாலாகும் / ஆக்கலும் அழித்தலும்
அங்கேயே நடந்தேறியிருக்கும்.
[/size]
கருவில் ஆணா பெண்ணா என்பது போல மூன்றாம் பாலினம் என்பது தெரிவதில்லை. பிறந்து வளர்ந்து ஒரு குறிப்பிட்ட பருவம் வந்த பின்பு தான் அவர்களுக்குள் ஒருவித மாற்றம் நிகழ்கின்றது. இயற்கையாகவே அந்த மாற்றம் வந்துவிடுகின்றது. மாற்றத்தை தடுக்க முடிவதில்லை. கருவிலேயே மூன்றாம் பால் என்று தெரிய ஆரம்பித்தால் முடித்து விடுவர் கதையை என்பதை உணர்ந்து கவிதை வடித்துள்ளார்.
சுயம்பு!
[size]எனது பிரசவிப்பு / நானே தாயாகிறேன்
நானே வலியாகிறேன் / என்னை நானே பிரசவித்துக்
கொள்கிறேன் / அரவாணியாய் / பிரசவ வலி மட்டும்
அப்படியே ஆயுள் முழுவதும்!
[/size]
திருநங்கை என்ற மாற்றம் தங்களுக்குள் வந்தவுடன் குடும்பம் வெறுத்து ஒதுக்கி விரட்டி விடுகின்றது. அவர்கள அடைக்கலம் தேடி அலைந்து தங்கள் உடலுக்குள் பெண் போன்ற மாற்றத்தை தாங்களே உருவாக்கி விடுகின்றனர். இதற்கான அறுவை சிகிச்சையையும் வலியோடு செய்து கொள்கின்றனர். இந்த வலிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பிரசவ வலியை விட கொடிய வலி தான் என்பது மட்டும் உண்மை. அதனை கவிதையில் உணர்த்தி உள்ளார்.
தாயின் அடைமொழி!
[size]ஆணாக இருந்திருந்தால் / வீரன் சூரன் / என்றிருப்பாய்
பெண்ணாக இருந்திருந்தால் / அழகி பேரழகி / என்றிருப்பாய்
அலியாய் பிறந்ததினால் – உன் / அடைமொழி என்னை
அலங்கரிக்கவில்லையோ?
[/size]
இந்த உலகில் மிகவும் உயர்வானது தாயன்பு. குற்றம் செய்த குழந்தையின் மீது அன்பு செலுத்துவாள். தன் குழந்தையை என்றும் வெறுக்கவே மாட்டாள். அப்படிப்பட்ட உயர்ந்த தாய் கூட தன் மகன் திருநங்கையாக மாறுகிறான் என்று தெரிந்தால் சொல்லிப்பார்ப்பாள், பிறகு வேறுவழி இல்லை என்று தெரிந்தால், தாயே தன் மகனை வெறுத்து விடுகிறாள். திருநங்கையை ஏற்கும் குடும்பம் இல்லவே இல்லை. அந்த அளவிற்கு சமுதாயத்தில் விழிப்புணர்வு வரவில்லை.
மதுரை அனுப்பானடியில் பிறந்து, திருநங்கையாக மாறிய நர்த்தகி நட்ராஜ் தனது நடனத்திறமையால் உலகம் முழுவதும் வலம் வருகின்றார். முனைவர் பட்டம், கலைமாமணி, பத்மஸ்ரீ என பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். இந்த அளவிற்கு உச்சம் அடைந்துவிட்டதால் இன்றைக்கு குடும்பத்தில் அங்கீகாரம் தருவர். ஆனால் மற்ற சராசரி திருநங்கைகளுக்கு குடும்பத்தில் அங்கீகாரம், பாசம் நேசம் தருவதே இல்லை என்பதே உண்மை.
பிரசவித்தாய் !
[size]என்னைக் கருவில் உருவாக்கி / இருதனமை கொண்ட
குழந்தையாய் / நீதானே / பிரசவித் “தாய்” / பிறகு
ஏன் வெறுத்”தாய்”.
[/size]
பெற்ற தாயே வெறுத்து விடுகிறாள். காரணம். அக்கம்பக்கம், உறவினர்கள் கேலி பேசுவார்கள் என்ற அச்சமே. இந்த சமுதாயத்தில் மூன்றாம் பாலினமான திருநங்கைகளை குடும்பத்திலும் சமுதாயத்திலும் அங்கீகரிக்க வேண்டும். அன்பு செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை விதைக்கும் நல்ல கவிதை நூல். பாராட்டுக்கள், வாழ்த்துகள். திருநங்கைகள் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். மற்றவர்களும் வாசித்து நேசிக்க வேண்டிய நூல்.
[size]. [/size]
.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum