தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



``அவ்வளவு துயரத்தோடு எப்படி, பாட முடிந்தது சொர்ணலதாவால்?" புஷ்பவனம் குப்புசாமி #SwarnalathaMemories

Go down

``அவ்வளவு துயரத்தோடு எப்படி, பாட முடிந்தது சொர்ணலதாவால்?" புஷ்பவனம் குப்புசாமி #SwarnalathaMemories Empty ``அவ்வளவு துயரத்தோடு எப்படி, பாட முடிந்தது சொர்ணலதாவால்?" புஷ்பவனம் குப்புசாமி #SwarnalathaMemories

Post by அ.இராமநாதன் Tue Apr 30, 2019 6:56 pm

இப்பெல்லாம் சொர்ணலதா பாட்டுகளை முழுசா 

கேட்கவே முடியறதில்ல. பாதி கேட்கும்போதே 

மனசு கனத்துப் போயிடும். 



உடனே பாட்டை நிறுத்திடுவேன். அவங்க பாடினதுல 

எனக்குப் பிடிச்ச பாட்டுன்னா, `போவோமா 

ஊர்கோலம்...!'"

-


[You must be registered and logged in to see this image.]
``மாலையில் யாரோ மனதோடு பேச.... "
-
என்று தொடங்கும் `சத்ரியன்' பாடலை விரும்பிக் கேட்கும் எவர் ஒருவருக்கும் சட்டென்று கண்முன் வந்துநிற்பது சொர்ணலதாவின் முகமாகவே இருக்கும். அந்தப் பாடலின் சூழல், மனநிலையைக் கேட்பவருக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் பரிமாறும் வித்தையைக் கொண்டிருந்தது அவரின் குரல். 



அந்தக் குரலைப் பின்பற்றியே மாலைப் பொழுதையும் நீலக் கடலையும் அடைந்துவிட முடியும். அதேபோல, `வள்ளி' திரைப்படத்தில் இடம்பெறும் `என்னுள்ளே.. என்னுள்ளே...' பாடலும் சொர்ணலதா ரசிகர்களுக்கு மிகவும் விரும்பிக் கேட்கும் பாடல்களில் ஒன்று. 


`அலைபாயுதே' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற `எவனோ ஒருவன் வாசிக்கிறான்..' பாடலுக்கு உயிரோட்டம் தந்தது சொர்ணலதாவின் குரல் என்றால் மிகையில்லை. மெலடிப் பாடல்கள் மட்டுமன்றி, துள்ளலிசை பாடல்களைப் பாடும் திறமையைப் பெற்றவர். 


அவர் குரலில் வழியும் குழந்தைமை மற்றவர்களிடையே தனித்துக் காட்டியது. அதுதான் மெலடி, துள்ளல், சோகம் என எந்த வகைப் பாடல்களாக இருந்தாலும் சொர்ணலதாவின் பாடலாக நாம் அடையாளம் இட்டுக்கொள்ள வைக்கிறது. இன்று அவரின் பிறந்த நாள்.

பெண் குழந்தைகளுக்குக் கள்ளிப்பால் கொடுத்துக் கொலை செய்யும் தீவிரமான சமூகப் பிரச்னையைப் பேசிய படமான கருத்தம்மாவில், `போறாளே பொன்னுத்தாயி...' என, உருக்கமான பாடலைப் பாடியிருந்தார் சொர்ணலதா. அந்தப் பாடலுக்காக, 1994-ம் ஆண்டுக்கான சிறந்த பாடகி எனும் தேசிய விருதைப் பெற்றார்.



1987-ம் ஆண்டு, பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸூடன். 'சின்னஞ்சிறு கிளியே' எனும் பாடலை `நீதிக்குத் தண்டனை' எனும் படத்திற்காக, சொர்ணலதா பாடியபோது அவருக்கு வயது 14. எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் ஆரம்பித்த, அவரின் பாடல் பயணம், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் எனப் பலரின் இசைக்கோவைகளில் வெற்றிப் பயணம் தொடர்ந்தது. தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளில் பாடியுள்ளார்.

-
மாநில, தேசிய விருதுகளைக் கடந்தும் ரசிகர்களின் பெரும் அன்போடு தொடர்ந்த சொர்ணலதாவின் இசைப்பயணம், அவரின் 37-வது வயதோடு முடிவுக்கு வந்தது. சுவாசப் பிரச்னை தொடர்பான உடல்நலக் குறைவால், 2010 செப்டம்பரில் மரணமடைந்தார். 



அவரின் மறைவை எண்ணி, புகழ்பெற்ற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, 
இரங்கல் பாடலை எழுதிப் பாடியிருந்தார். அதில்,
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

``அவ்வளவு துயரத்தோடு எப்படி, பாட முடிந்தது சொர்ணலதாவால்?" புஷ்பவனம் குப்புசாமி #SwarnalathaMemories Empty Re: ``அவ்வளவு துயரத்தோடு எப்படி, பாட முடிந்தது சொர்ணலதாவால்?" புஷ்பவனம் குப்புசாமி #SwarnalathaMemories

Post by அ.இராமநாதன் Tue Apr 30, 2019 7:00 pm

[You must be registered and logged in to see this image.]

-
``மண் உலகில் பாடிய பெண் குயிலே
விண் உலகில் பாடிட விரைந்தாயோ!... என்று தொடங்கும் பாடலில்,

பண்பாடும் குரல் எவன்
கண்பட்டு  கரைந்ததோ
புண்பட்டதோ சொல் சொர்ணமே...

மறுபிறப்பிருந்தால் இந்த மண்ணில் வந்து
தமிழ் மகளாய் பிறந்திடம்மா..."  

என்று பாடியிருப்பார். அவரிடம் சொர்ணலதா பற்றி நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள அழைத்தோம்.
[You must be registered and logged in to see this image.]
``சொர்ணலதாவுடன் மூன்று பாடல்கள்தான் சேர்ந்து பாடியிருக்கேன். ஒரு பாட்டைச் சீக்கிரமாகவே கற்றுக்கொண்டு பாடிவிடும் திறமை அவருக்கு உண்டு. இப்போ, அவரை நினைத்தால் பாடிய பாட்டுகளை விட, இவ்வளவு சீக்கிரமே இறந்துபோன வருத்தம்தான் அதிகம் ஞாபகத்துக்கு வரும். அவர் உயிரோடு இருக்கும்போது அந்தப் பாடல்களைக் கேட்பது வேறு, அவரின் இறப்புக்கு அப்புறம் கேட்பது வேறு. அவருக்குள்ள அப்படி சோகம் இருக்கு என்பது அவங்க குடும்பத்தினரைத் தவிர வேற யாருக்கும் தெரியாது. என்னோடு ரெக்கார்ட்டிங் வரும்போது, `நீங்க பாடின கிராமத்துப் பாட்டுகளைக் கேட்டேன் நல்லா இருந்துச்சு'னு பாட்டு சம்பந்தமாகத்தான் பேசுவாங்க. எல்லோரையும்போல சந்தோஷமாத்தான் இருக்காங்கனு நினைச்சிட்டு இருந்தோம். ஆனா, அப்படி ஒரு சோகத்தை வெச்சிக்கிட்டு எப்படித்தான் இவ்வளவு அருமையான பாட்டுகளைப் பாடினாங்களோ தெரியல. அது இன்னிக்கு வரைக்கும் ஆச்சர்யம்தான். வேப்பமரத்தில் எப்படி தேன் வடியும்!

TOP COMMENT

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

``அவ்வளவு துயரத்தோடு எப்படி, பாட முடிந்தது சொர்ணலதாவால்?" புஷ்பவனம் குப்புசாமி #SwarnalathaMemories Empty Re: ``அவ்வளவு துயரத்தோடு எப்படி, பாட முடிந்தது சொர்ணலதாவால்?" புஷ்பவனம் குப்புசாமி #SwarnalathaMemories

Post by அ.இராமநாதன் Tue Apr 30, 2019 7:01 pm

சொர்ணலதா கடைசிக்காலத்தில் பாடிய, பாட்டுகள் எல்லாமே ரசிகர்களுக்காகத்தான். ஏன்னா, அவ்வளவு துன்பத்தை அனுபவிச்சிட்டு பாட வேண்டிய தேவையே இருக்காது இல்லையா? அது ஒருவகையில் தியாகம்தான். அவரோடு சோகத்தை யார்கிட்டேயும் சொன்னதே இல்ல. ஒருவேளை அதை மனசுக்குள்ளே அடக்கி, அடக்கி இன்னும் அதிமாயிருக்கும் போல. அதனாலதான், இப்பெல்லாம் சொர்ணலதா பாட்டுகளை முழுசா கேட்கவே முடியறதில்ல. பாதி கேட்கும்போதே மனசு கனத்துப் போயிடும். உடனே பாட்டை நிறுத்திடுவேன். அவங்க பாடினதுல எனக்குப் பிடிச்ச பாட்டுன்னா, `போவோமா ஊர்கோலம்...." ஆனா, அவங்க ஊர்வலத்தை மேல் நோக்கி விட்டுட்டாங்க. சொர்ணலதாவிடம் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் தமிழ் வார்த்தைகளைத் தெளிவாக, சரியாகப் பாடுவார்.
நல்ல பாடகி. இவ்வளவு சீக்கிரம் அவங்களுக்கு இறப்பு வந்திருக்க வேணாம்" என்று துயரத்துடன் பகிர்ந்துகொள்கிறார்.

இலக்கியவாதிகளையும் சொர்ணலதாவின் பாடல்கள் வெகுவாக ஈர்த்திருக்கின்றன. சொர்ணலதாவின் பாடல்களைப் பற்றி நாடோடி இலக்கியன், `தனியொருத்தி' எனும் நூல் எழுதியுள்ளார். கவிஞர் இசை எழுதியுள்ள ஒரு கவிதையின் தலைப்பே, `இந்த முறை சுவர்ணலதா சரியாகப் பாடவில்லை" என்பதுதான்.

ஆகச் சிறந்த பாடகி சொர்ணலதா[You must be registered and logged in to see this link.] பிறந்த நாளில் அவரின் மரணத்தைப் பற்றியே அதிகம் பேசினாலும். அவரின் அடையாளம் பாடல்கள்தான். அவரின் ரசிகர்களின் மனத்தில் எந்நாளும் அந்தக் குரலுக்கு இறப்பில்லை. மகிழ்வையும் ஆறுதலையும் பரிமாறும் சொர்ணலதாவின் குரலில் இன்றைய நாள் நனையட்டும்.
சொர்ணலதாவின் குரலில் உங்களுக்குப் பிடித்த பாடல்களை கமென்ட் செய்யவும்.
வி.எஸ்.சரவணன்

நன்றி- விகடன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

``அவ்வளவு துயரத்தோடு எப்படி, பாட முடிந்தது சொர்ணலதாவால்?" புஷ்பவனம் குப்புசாமி #SwarnalathaMemories Empty Re: ``அவ்வளவு துயரத்தோடு எப்படி, பாட முடிந்தது சொர்ணலதாவால்?" புஷ்பவனம் குப்புசாமி #SwarnalathaMemories

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum