தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சத்சங்கம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Go down

சத்சங்கம்!  நூல் ஆசிரியர்  :      முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.    நூல் விமர்சனம் :    கவிஞர் இரா. இரவி. Empty சத்சங்கம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi Tue Sep 03, 2019 1:51 pm

http://www.tamilauthors.com/04/502.html  

சத்சங்கம்!

நூல் ஆசிரியர்  :    
முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.


நூல் விமர்சனம் :    கவிஞர் இரா. இரவி.

******




நூல் வெளியீடு  :    நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 
                    41 பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,                     அம்பத்தூர், சென்னை-98.
பக்கங்கள்  :         , விலை : ரூ. 150


     ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு நண்பர் முனைவர் ஞா. சந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் கிருஷ்ண  மூர்த்தி ஆகியோருடன் நானும்  சென்று இருந்தேன். காலையில் நூல்கள் வெளியீட்டு விழா, மாலையில் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் ‘எது ஆன்மீகம்?’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.  மாநாடு போல கூட்டம் கூடி இருந்தது. மிக நீண்ட உரை ஒருவர் கூட எழுந்து செல்லவில்லை. அற்புதமாக உரையாற்றினார். கடவுள் நம்பிக்கை இல்லாத நானும் மிகவும் ரசித்துக் கேட்டு மகிழ்ந்தேன். கேட்டபோது இந்த உரை நூலாக வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். நூலாக வந்து விட்டது.



     ஆன்மிகம் என்றால் என்ன? என்பதற்கு விளக்கம் கூறும் விதமாக வந்துள்ளது. ஆன்மிகம் என்ற பெயரில் வேடமிடும் வேடத்தை களையும் விதமாக நூல் எழுதி உள்ளார். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மிக நேர்த்தியாக அச்சிட்டு வெளியிட்டு உள்ளனர். 25 கட்டுரைகள் உள்ளன.


    பேசிய உரையை அப்படியே நூலாக்காமல் கேள்வி-பதில் போல வித்தியாசமான வடிவத்தில் பதிவு செய்துள்ளார்கள். படிப்பதற்கு எளிதாகவும் சுவையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. இந்த நூலை ஆத்திகர்கள் நாத்திகர்கள் இருவருமே படிக்கலாம். உண்மையான ஆன்மிகம் என்பது மனிதநேயம் என்பதை வலியுறுத்தும் விதமாக வடிவமைத்து உள்ளார்கள்.


     மாணவர்களால் இளைஞர்களால் பெரிதும் நேசிக்கப்படும் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் மாமனிதர் அப்துல்கலாம் அவர்களைப் போலவே கடவுள் நம்பிக்கை உள்ளவர். ஆனால் மூட நம்பிக்கைகளை முற்றாக விரும்பாதவர்.


     கே.எஸ். சுப்பிரமணியன் அவர்களின் அணிந்துரையில் சிறு துளி." குறிப்பாகக் கட்டமைக்கப்பட்ட குறிக்கோள்கள் எதுவுமின்றி நம்மை மேம்படுத்தும் முயற்சியில் இந்நூல் வெற்றி காண்கிறது”. ஆம் வாசகரை மூட நம்பிக்கைகளிலிருந்து மீட்டெடுத்து பகுத்தறிவு சிந்தனை விதைத்து மனிதநேயம் பற்றிய பக்குவத்தை விதைத்து மேம்படுத்தும் விதமாக எழுதப்பட்ட நூல்."


     உலகத்தின் நியதிகள் நாத்திகத்தில் பாதிக்கப்படுமே?


     “நியதிகளை காற்றில் பறக்க விடுவதற்காக கடவுளைக் கைக்குள் போட்டுக் கொள்ள முயற்சி செய்யும் ஆத்திகர்களை நானறிவேன். தூய்மையில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாத நாத்திகர்களை நானறிவேன். கோபத்தில் கொந்தளிக்கும் சந்நியாசிகளைப் பார்த்திருக்கிறேன். அனைவரிடமும் அன்பு செலுத்தும் கடவுள் மறுப்பாளர்களைக் கண்டிருக்கிறேன்.  மனநிலையை எல்லா நிகழ்வுகளிலும் செம்மைப்படுத்துவதற்கு மக்கள் முயற்சி செய்வதில்லை. இவர்களுக்கு ஆன்மிகம் தப்பித்தலே தவிர விடுதலை அல்ல”


     இந்த கேள்வி பதில் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் இந்த நூலை ஆத்திகர் நாத்திகர் இருவருமே படிக்க வேண்டும் என்கிறேன். நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொள்ள உதவிடும் நூல். உணமையான ஆன்மிகம் பற்றி மிக விளக்கமாக எழுதி உள்ளார். இதனை ஆத்திகர்கள் கடைப்பிடித்து நடந்தால் நாட்டில் மதக்கலவரம், சாதிக்கலவரம் இருக்காது, வன்முறை ஒழியும், அமைதி நிலவும்.


     நல்ல நாத்திகர் யார்?


     மற்றவர்களைப் புண்படுத்தாமல் தன் தரப்பு நியாயங்களை யாரும் வருந்தாதவாறு உரைப்பவர் நல்ல நாத்திகர். அவர் வாழும் சமூகத்தின் மரபுகளை மண்ணுக்கடியில் போட்டு மிதிக்கவும் அவர் விரும்ப மாட்டார். சமூகத்தில் இருந்து கொண்டே சமூக மாற்றத்தை முன்மொழிவதே நல்ல வழி. ஆனால் அதற்கு நிறைய தெளிவு வேண்டும்.


     நல்ல ஆத்திகர் யார்?


     கடவுள் மறுப்பாளர்களுக்கும் அவர்கள் கருத்தைச் கொல்ல உரிமையுண்டு என்று நினைப்பவர்கள் மனிதர்கள். அனைவரும் சமம் என்று கருதுபவர்கள். இன்னும் சொல்லப் போனால் எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல நினைப்பவர்கள்.


     நூலிலிருந்து பதச்சோறாக சில எழுதி உள்ளேன். நாத்திகர் ஆத்திகர் பற்றி விளக்கம் மிக நன்று. இந்த பக்குவம் எல்லோருக்கும் வருவதில்லை.ஆத்திகர்கள் நாத்திகர்களை எதிரிகளாகவும், நாத்திகர்கள், ஆத்திகர்களை எதிரிகளாகவும் கருத வேண்டிய அவசியமில்லை. அவரவர் உரிமை பற்றிய புரிதல் வேண்டும்ம். யார் மீதும் எதிரி மீதும் வெறுப்பை வெளிப்படுத்தாமல் சக மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்ற மனப்பக்குவத்தை விதைத்திடும் நூல்.


     “உணமையான ஆன்மிகம் தன்முனைப்பைத் தகர்த்தெறிவதில் தொடங்குகிறது”.


     இப்படி பல பொன்மொழிகள் நூலில் உள்ளன். அன்பும் கருணையும் தவழும் இடமாக இல்லம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.


     அத்திவரதர் பற்றி முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் கருத்து எதுவும் கூறவில்லை. அதற்கு முன்பே வெளியான நூல் இது.


     கடவுளின் பெயரால் நடக்கும் மூடநம்பிக்கைகளைச் சாடி உள்ளார்.  கோவில் அருகே நடக்கும் வணிகத்தையும் குறிப்பிட்டுள்ளார். "மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம்." என்ற சித்தர்களின் கருத்தை வழிமொழிந்து எழுதியுள்ள நூல் இது.


     குரு சீடன் விவாதம் போலவே கேள்வி-பதில் முறையில் எழுதி, அறிவு விளக்கை ஏற்றி வைத்து ‘ஆன்மிகம்’ என்றால் என்ன? ஆன்மிகம் என்ற பெயரில் மூட நம்பிக்கைகளை நம்பாதீர். எல்லா உயிருக்கும் கருணை காட்டுவது மனித நேயம் பேணுவது, நல்லது நினைத்தல், நல்லது செய்தல், நல்லவராக வாழ்தல் – இப்படி நம்மை நாமே காதலித்து விரும்பி மனசாட்சிக்கு உண்மையாக, நேர்மையாக வாழும் வாழ்க்கையே ஆன்மிகம் என்கிறார். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், இல்லாதவர்கள் இருவரும் படித்துத் தெளிவு பெற உதவிடும் நல்ல நூல். ‘சத்சங்கம்’ ஆத்திகர், நாத்திகர் சங்கமிக்க உதவும். 
[size]
.  [/size]

.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இனிய இறையன்பு ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தவம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நாமார்க்கும் குடியல்லோம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வியர்வைக்கு வெகுமதி! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» உன்னை அறிந்தால்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இஆப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum