தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Sep 14, 2020 10:35 pm

» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! மிரட்டல் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Sep 14, 2020 10:21 pm

» மதுரையில் காந்தி! நூல் ஆசிரியர் : டாக்டர் இராம்பொன்னு ! மதிப்புரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Sep 02, 2020 10:01 pm

» அனல் மூச்சு! நூல் ஆசிரியர் : கவிவேந்தர் கா. வேழவேந்தன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 01, 2020 9:51 pm

» நாமார்க்கும் குடியல்லோம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 01, 2020 9:37 pm

» அர்த்தமில்லாத வேலைகளைச் செய்யாதீர்கள்! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:37 pm

» அர்த்தமில்லாத வேலைகளைச் செய்யாதீர்கள்! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:35 pm

» விசாரிக்காமல் முடிவெடுக்காதே…!
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:32 pm

» விசாரிக்காமல் முடிவெடுக்காதே…!
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:32 pm

» அருகில் இருப்பவருக்கு பிரச்சினை வந்தால்…
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:31 pm

» இதோ ஒரு நல்ல மனிதர்…!
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:31 pm

» பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன்
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:24 pm

» லாக்டவுன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:20 pm

» லாக்டவுன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:20 pm

» சிந்தனை கதை: நூறு சத வீத அன்பைக் காட்டுங்கள்
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:18 pm

» எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Aug 18, 2020 5:02 pm

» அச்சமில்லை மனமே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Aug 13, 2020 2:36 pm

» என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Aug 11, 2020 2:12 pm

» உலகப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:52 pm

» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:46 pm

» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:35 am

» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:30 am

» நகைச்சுவை- ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:28 am

» வெற்றியின் படிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:21 am

» விதையாக விழுந்து, மரமாக எழு...!
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:17 am

» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:13 am

» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
by eraeravi Thu Jul 30, 2020 8:46 pm

» வெங்காயம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 10:16 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 7:17 pm

» மேனேஜருங்கோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:55 pm

» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:52 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 17, 2020 8:26 pm

» காமராசர் ஒரு சகாப்தம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jul 16, 2020 3:33 pm

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 2:03 pm

» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 1:55 pm

» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார்.!! சோகத்தில் ரசிகர்கள்..!...
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:58 pm

» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:56 pm

» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» அம்மனாக நயன்தாரா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:52 pm

» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Go down

கால் முளைத்த கனவுகள்   நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன்    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Empty கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi on Thu Jul 02, 2020 2:43 pm

https://www.tamilauthors.com/04/543.html
கால் முளைத்த கனவுகள்

நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன்


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

வெளியீடு : வசந்தா பதிப்பகம், 2-16, ஆர்.கே இல்லம் முதல் தெரு,
புதிய வசந்த நகர், ஓசூர் – 635 109, பக்கங்கள் : 160, விலை : ரூ. 150
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

******
நூலாசிரியர் கருமலைத் தமிழாழன் அவர்கள் மிகச்சிறந்த மரபுக் கவிஞர். பல்வேறு பரிசும் பாராட்டும் விருதும் பெற்றுள்ள தகைசால் கவிஞர். தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வுக்கு ஓய்வு தந்து ஓய்வின்றி மரபுக் கவிதைகளை எழுதி தமிழன்னைக்கு அணிகலங்கள் பூட்டி வருகின்றார். பல்வேறு இதழ்களில் எழுதி வருகின்றார். அவற்றைத் தொகுத்து தொடர்ந்து நூலாக்கி வருகிறார். இயங்கிக்கொண்டே இருக்கும் இனிய கவிஞருக்கு பாராட்டுக்கள்.
நூல் வெளியானவுடன் மறக்காமல் எனக்கு மதிப்புரைக்காக அனுப்பி விடுவார். அவரது மரபுக்கவிதை ரசிகன் நான். இந்த நூலில் மூன்று பகுதிகளாக கவிதைகள் உள்ளன. முதல்பகுதி தமிழ்க்கால்கள் 38 கவிதைகள் உள்ளன. தமிழ்மொழியின் மேன்மையை மரபில் மகுடம் சூட்டி உள்ளார். குமுகக் கால்கள் என்ற பகுதியில் சமுதாய அவலங்களை எடுத்தியம்பி உள்ளார். கனவுக்கால்கள் என்ற மூன்றாம் பகுதியில் பெண்ணியம் பாடி உள்ளார்.
அருந்தமிழில் பேச வைப்போம்
அருந்தமிழில் பேசுவதே குற்றமாக
அடிக்கின்றார் குழந்தைகளைப் பெற்ற வர்தாம்
பெருமையுடன் மம்மியென அழைப்ப தற்குப்
பெருந்தொகையைக் கட்டணமாகச் செலுத்துகின்றனர்

குழந்தைகள் தமிழில் பேசினால் தண்டத் தொகை வசூலிப்போம் என்று சொல்லும் ஆங்கிலப் பள்ளிகளை சும்மா விட்டு வைத்து விட்டு இருப்பது தமிழகத்தின் அவலம். செத்தப் பிணமென்ற பொருளுடையதை மம்மி என்று அழைக்க்ச் சொல்லும் மடமையும், தமிழகத்தில் அரங்கேறி வரும் அவமானத்தை கவிதை வரிகளின் மூலம் சுட்டி உள்ளார். பாராட்டுகள்.
இலக்கியங்கள் கூறும் வீரம்!
அகமென்றும் புறமென்றும் வாழ்க்கை தன்னை
அருமையாக வகுத்தவர்கள் தமிழர் தாமே!
அகந்தன்னை ஐந்திணையில் உலவ விட்டார்
அரும்புறத்தை எண்திணையில் முழக்க விட்டார்

தமிழ் இலக்கியங்கள் கூறும் வீரத்தை மரபுக் கவிதைகளில் வடித்து படிக்கும் வாசகர்கள் மனதில் வீரத்தை விதைத்து உள்ளார். அகநானூறு, புறநானூறு என அற்புதமான இலக்கியங்கள் கொண்ட மொழி நம் தமிழ்மொழி என்பதை நன்கு பறைசாற்றி உள்ளார்.
என் இலக்கு
செந்தமிழே ஆட்சிமொழி பள்ளி யெல்லாம்
செந்தமிழே கல்விமொழி தெருவி லெல்லாம்
செந்தமிழே பேச்சுமொழி வீட்டிலெல்லாம்
செந்தமிழே மழலை மொழி குவித்திருக்கும்
செந்தமிழின் நூல்களெல்லம் மொழி பெயர்த்தும்
செந்தமிழில் பிறமொழி நூல் ஆக்கம் சேர்த்தும்
எந்தமிழை உலகமொழி ஆக்க லொன்றே
என் இலக்கு என் ஓட்டம் முயல்வேன் செய்வேன்.

தமிழ்மொழி பன்னாட்டு மொழி. ஆனால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தான் தமிழ் இன்னும் ஆகவில்லை. ஆங்கில மொழி போல தமிழ் மொழியை உலக மொழி ஆக்குவேன், முயல்வேன், செய்வேன் என்ற தமிழ்ப்பற்று பாராட்டுகள்.
வணிகமாக விற்கின்ற கல்வி தன்னை
வாங்காமல் இளவயதில் கற்கின்றார்கள்
மணியான தமிழ்வழியைப் பள்ளி யெல்லாம்
மணக்க வைத்தே ஆங்கிலத்தைத் தூக்கெறிந்தார்
கணினிக்குள் நுழைந்திட்ட தமிழை வீட்டுள்
கடைத்தெருவில் மழலை நாவில் ஒலிக்க வைத்தார்
பணியெல்லாம் தமிழ்வழியில் படித்த வர்க்கே
பாங்காகக் கிடைப்பதற்கு சட்டம் செய்தார்.

நூலாசிரியர் கண்ட கனவு நனவாக வேண்டும். ஆனால் இன்றோ நடப்பதோ வேறாக உள்ளது. அரசுப்பள்ளிகளில் மட்டும் வாழ்ந்திட்ட தமிழ்வழிக்கல்வி அங்கும் மூடுவிழா நடத்தப்பட்டு ஆங்கிலவழிக் கல்வியை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆரம்பக்கல்வி தமிழில் தான் இருக்க வேண்டுமென்று சட்டம் செய்தல் வேண்டும். நாட்டில் நடைமுறைப்படுத்திட வேண்டும்.
காமத்தின் கண் பறிப்போம்
மலராத மொட்டதனின் இதழ் கிழித்து
மதுவுண்ட வண்டொன்றைப் பார்த்த துண்டோ
புலராத இரவுக்குள் புணர்தல் போன்று
புரிந்திட்டார் வன்செயலைக் கயவர் சில்லோர்
வலம் வந்து வலம் வந்தே அழகு மொட்டை
வன்புணர்வில் சீரழித்தார் துடிது டிக்க
நிலம் மீதில் எவ்வுயிரும் செய்தி டாத
நீச செயல் செய்வதெல்லாம் மனிதர் தாமே!

சிறுமியை சென்னையில் பதினேழு கயவர்கள் கெடுத்த செய்தி படித்து துடித்து வடித்த கவிதை நன்று. உள்ளத்து உணர்வுகளை கவிதைகளாக யாத்து வாசகர் மனதில் கவி உணர்வை விதைத்து உள்ளார். பாராட்டுகள்.
பச்சோந்தி
மரத்திற்கு மரம் தாவும் மந்தி போல
மனம் தாவிக் கட்சிகளை மாற்றிக் கொள்வர்
உரமின்றிக் கொள்கையின்றிப் பதவிக்காக
உருவத்தை எற்றார்போல் மாற்றிக் கொள்வர்
குரல் மாற்றிப் பேசுகின்ற வித்தைக் காரர்
குடுகுடுப்பைக் காரர்போல் வேடம் கொள்வர்
வரவுக்காகப் பச்சோந்தி போல மாறி
வருவோரின் நிறத்திரையைக் கிழிப்போம் நாமே!

அரசியலில் இன்று நடக்கும் அவலத்தை கவிதைகளில் சுட்டி உள்ளார். கொள்கை ஏதுமின்றி பணத்திற்காக பதவிக்காக வாலாட்டி வரும் போலி அரசியல்வாதிகள் மலிந்து விட்ட காலமிது. அரசியலில் நேர்மை, உண்மை வழக்கொழிந்து விட்டது. ஏமாற்று அரசியலே இன்று நாட்டு நடப்பாக உள்ளது என்பதை உள்ளக்குமுறலுடன் கவிதைகளில் உணர்த்தி உள்ளார்.
உண்மை வழியே உயர்வளிக்கும்
அறுசுவைக்கு நாவடிமை ஆகி விட்டால்
அதிக எடை உடல்சேர நோயோ கூடும்
உறுப்புகள் இயங்காமல் முடங்கிப் போக
உயிர்க்காற்றும் அதனாலே வருதல் போன்று
மறுப்பின்றி உள்ளத்தின் வழி நடந்தால்
மாப்பழி தான் நமக்குவரும் உலகம் ஏசும்
உறுதியுடன் நடப்பதற்கே உள்ள மங்கே
உதவாது ஆசையாலே அழிந்து போவோம்!

அளவோடு உண்டால் வளமோடு வாழலாம். நோயின்றி வாழலாம். உண்மை வழியே உயர்வளிக்கும் என்று அறநெறி கருத்துக்களை மரபுக்கவிதைகளாக வடித்துள்ளார்.

கால் முளைத்த கனவுகள் என்ற நூலின் மூலம் மரபுக்கவிதை விருந்து வைத்துள்ள பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்களுக்கு பாராட்டுகள்
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2487
Points : 5897
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum