தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Yesterday at 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Yesterday at 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பசி வயிற்றுப் பாச்சோறு!  நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

பசி வயிற்றுப் பாச்சோறு!   நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty பசி வயிற்றுப் பாச்சோறு!  நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Mon Mar 08, 2021 10:38 pm

பசி வயிற்றுப் பாச்சோறு!

 நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

நூல் வெளியீடு : வசந்தா பதிப்பகம், 2-16, ஆர்.கே. இல்லம், முதல் தெரு, புதிய வசந்த நகர், ஓசூர்-635 109.  பக்கங்கள் : 160, விலை : ரூ.150.

*****      பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள் மரபுக்கவிதை எழுதுவதில் வல்லவர். பல்வேறு பரிசுகளும், பாராட்டும் மரபுக்கவிதை-களுக்காகப் பெற்றவர். உலக அளவில் நடந்த கவிதைப் போட்டியில் முதல்பரிசு பெற்றவர். கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவனார் நடத்திய மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்திய கவிதைப் போட்டியில் வென்றவர். இந்நூலிற்கு கலைமாமணி ஏர்வாடியார் வாழ்த்துரை வழங்கி உள்ளார்.

      பசிவயிற்றுப் பாச்சோறு என்று வித்தியாசமான பெயர் சூட்டி பாச்சோறு அல்ல பா விருந்து வைத்துள்ளார். பழஞ்சோறு, கூட்டாஞ் சோறு, பால்சோறு, வெண்சோறு என நான்கு பகுதிகளாகப் பிரித்து மரபுக்கவிமாலை தொடுத்துள்ளார்.

      மூச்செனக் காப்போம் நமது மொழி!         
   அன்னை தமிழ்தாம் அடையாளம்
            அருமை மொழிதாம் கடிவாளம்
            என்றும் இனத்தை உலகிற்கே
            எடுத்துக் காட்டும் பிடிமானம்!

      உலகின் முதல்மொழியாம் தமிழ்மொழியின் அருமை பெருமை எடுத்து இயம்பி காக்க வேண்டிய அவசிய அவசரத்தை வலியுறுத்தி தமிழர்களுக்குத் தமிழே அடையாளம், முகவரி என்பதை கவிதைகளின் மூலம் நன்கு வலியுறுத்தி உள்ளார். பாராட்டுக்கள்.  மரபுக்கவிதை படிப்பதே மனதிற்கு சுகமான அனுபவம் தான்.      இருமொழிக் கொள்கையே தொடரட்டும், மும்மொழிக் கொள்கை தமிழ்மொழிக்குக் கேடு தரும் என்பதை கவிதைகளில் சிறப்பாக எடுத்து இயம்பி உள்ளார்.

      வரலாற்றை மாற்றிய கீழடி!
            நதிக்கரையில் பிறப்பது தான் நாக ரீகம்
            நம்முடைய வைகைநதிக் கரையி லின்று
            புதியதொரு வரலாற்றை எழுது தற்குப்
            புதையலெனக் கிடைத்ததுதான் கீழடிச் சான்று  .
    
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட எல்லா நாகரிகத்திற்கும் முந்தைய நாகரிகம் கீழடி நாகரிகம் எழுத்தறிவோடு வாழ்ந்தவன் தமிழன் என்பதை உலகிற்கு பறைசாற்றும் கீழடி பற்றிய கவிதை நனி நன்று.

      கல்வியினைச் செந்தமிழில் காண்!
      கல்விதன்னைத் தாய்மொழியில் கற்றிட்ட நாட்டோரே
      பல்பலவாய்ச் சாதனைகள் பார்படைத்தார் – தொல்தமிழால்
      வெல்வதற்கு வேற்றுமொழியுதவா முன்னோர்போல்
      கல்வியினைச் செந்தமிழில் காண்!

தேசப்பிதா காந்தியடிகள் தொடங்கி நோபல் நாயகர் ரவீந்திரநாத் தாகூர் வரை அனைத்து அறிஞர்களும் வலியுறுத்துவது தாய்மொழிக் கல்வியே!  இது அறியாமல் தமிழ்நாட்டு தமிழர் ஆங்கில மோகம் கொண்டு அலைந்து ஆங்கிலவழிக் கல்வியில் குழந்தைகளைப் படிக்க வைத்து சுயசிந்தனை இல்லாத குழந்தைகளை உருவாக்கி வருகின்றனர். இந்நிலை மாற வேண்டும். ஆரம்பக்கல்வி தமிழ்வழியிலேயே இருக்க வேண்டும் என்பதை கவிதைகளின் மூலம் நன்கு வலியுறுத்தி உள்ளார்.

நூலாசிரியர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள் தலைமையாசிரியராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றப்பின்னரே மரபுக்கவிதை எழுதுவதையே முழுநேரப்பணியாகக் கொண்டு வெற்றி மேல் வெற்றியைக் குவித்து வருகின்றார். பல்வேறு கவிதைப் போட்டிகளில் வென்ற கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி வருகின்றார்.

விழவில்லை வீரம் !

      பாய்ந்துவந்த காவிரியைத் தடுத்த போது
      படையெடுத்தே சோழனன்று மீட்டு வந்து
      காய்ந்திடாமல் தஞ்சையினைச் செழிக்க வைத்துக்
      காத்திட்ட வீரமின்று வீழ்ந்த தென்று
      நாய்வாலாய் எடுத்துரைத்தும் மீண்டும் மீண்டும்
      நடுவிலே அணை கட்ட முயலுவோரே
      பாய்புலியை இடறாதீர் வீழ வில்லை
      பழம்வீரம் என்றெழுந்தால் அணைகள் தூளாம்!

வறட்சியின் போதெல்லாம் காவிரியை சிறைப்பிடித்து வைத்துக் கொண்டு சீண்டிப்பார்ப்பதும், திரும்பத் திரும்ப புதிய அணை கட்டுவோம் என்று மிரட்டல் விடுக்கும் கர்னாடகத்து மனிதர்களுக்கு கவிதையின் மூலம் எச்சரிக்கை விடுத்தது சிறப்பு. பாராட்டுகள்.

      மதுரை!

      தூங்காத நகரமெனும் மதுரைத் தொன்மை
      துலங்குகின்ற கூடலெனப் போற்றும் ஊராம்
      தாங்கி நின்று தாயாகத் தமிழ்வ ளர்க்கத்
      தகுசங்கம் நான்கிருந்த தமிழின் ஊராம்!

ஆறாயிரம் ஆண்டுகளாக இயங்கி வரும் மதுரை சிலப்பதிககரம் காலம் தொடங்கி இன்றுவரை தூங்காத நகரமாக எப்போதும் இயங்கிவரும் மதுரை நகருக்கு மரபுக்கவிதையின் மூலம் மகுடம் சூட்டி உள்ளார். நன்று.

முயலாமல் முடியாது!

முயலாமல் என்றைக்கும்
      முன்னேற்றம் வாராது
புயத்தாலே உழைக்காமல்
      புகழ்வெற்றி நிலைக்காது!

முயற்சியே திருவினையாக்கும், முயல வேண்டும், உழைக்க வேண்டும், விதைக்க வேண்டும் என்று தன்னம்பிக்கை விதை விதைத்துள்ளார். பல்வேறு தலைப்புகளில் அறநெறிப்பாடல்கள் எழுதி உள்ளார். யார் மனிதன்? என்று மரபால் விளக்கம் தந்துள்ளார். மனித உயிர்களைக் கொல்லும் கொலைகார ‘இசுடெர்லெட் சாம்பலாகும்’ என்ற கவிதையின் மூலம் தீங்கை, தீமையை நன்கு சுட்டி உள்ளார்.

காதல் கவிதைகளும் நூலில் உள்ளன. படிக்கும் வாசகர்களுக்கு மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெறுகின்றன கவிதைகள்.

சுற்றுலா!

உள்நாடு வெளிநாடு என்றே நாமும்
ஊர்மாறி சுற்றுலா தான் செல்லும்போதோ
உள்ளத்தான் விரிவடையும் அங்குள் ளோரின்
உண்மைவாழ்வு நாகரிகம் அறியும்போது
வெள்ளம்போல் புதுவறிவு நம்முள் பாயும்
வேற்றுமைகள் மறைந்துமன நேயம் தோன்றும்
கள்ளமில்லா நட்புவரும் உறவு சேரும்
காண்கின்ற காட்சியெல்லாம் பாடம் சொல்லும்.

கொடிய கொரோனா நோயின் காரணமாக, ஊரடங்கு காரணமாக எல்லாவிதமான துறைகளும் பாதிக்கப்பட்டாலும் சுற்றுலாத்துறையை சுருட்டி விட்டது. மிகப்பெரிய இழப்பையும் பாதிப்பையும் சுற்றுலாவிற்கு விளைவித்தது. சுற்றுலாவிற்கு புத்துணர்வு தரும் வண்ணம் சுற்றுலா பற்றி கவிதை வடித்தது நன்று. மொத்தத்தில் மரபுக்கவிதைகளின் மூலம் பல்சுவை விருந்து வைத்துள்ளார், பாராட்டுகள்.

--
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அகமுகம்! நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கல்லெழுத்து ! நூல் ஆசிரியர் : புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» செப்பேடு! நூல் ஆசிரியர் : புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கால் முளைத்த கனவுகள்! நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.!
» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum