தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இனிய இறையன்பு ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1

இனிய இறையன்பு !
நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நூல் வெளியீடு : விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை – 641 001, பேச : 0422 2382614, பக்கங்கள் : 312, விலை : ரூ.250.
*****
முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் புதிய தலைமுறை இதழில் வாரந்தோறும் வாசகர்கள் கேள்விக்கு விடை அளித்து வந்தார்கள். இதழில் வாராவாரம் படித்து இருந்தாலும் மொத்தமாக நூலாகப் பார்த்ததில், படித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. சிறப்பாக பதிப்பித்து உள்ள விஜயா பதிப்பகத்திற்கு பாராட்டுகள்.
“‘நாம் பெற்ற அறிவைப் பகிர்ந்து கொள்ளும்போது தான் நம்முடைய அறிவும் பெருகி விரியும்’ என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் காலத்தின் குறுக்குவெட்டுத் தோற்றமாகக் காட்சி தரும் இனிய இறையன்பு என்ற இப்புத்தகத்தை வெளியிட்டுப் பெருமகிழ்ச்சி கொள்கிறது எங்கள் விஜயா பதிப்பகம்”.
பதிப்பக உரிமையாளர் மு.வேலாயுதம் அய்யா சொன்ன கருத்துக்கள் முற்றிலும் உண்மை. அறியாத பல தகவல்களை அறிந்துகொள்ளும் விதமாக நூல் உள்ளது. அரசுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூல் மட்டுமல்ல, பொதுவான வாசகர்களுக்கு பொதுஅறிவை வளர்த்துக் கொள்ள உதவிடும் நூல். அறிவியல், வரலாறு, இலக்கியம், நீதி, கலை, கல்வி, சமூகம், இயற்கை, தத்துவம் என 9 பிரிவுகளாக பகுத்து வழங்கியது நூலின் சிறப்பு அம்சமாகும்.
நூலில் உள்ள எல்லா கேள்வி பதிலும் பயனுள்ளவை என்றாலும், எனக்கு மிகவும் பிடித்த கேள்வி-பதில்களை மட்டும் பதச்சோறாக வழங்கி உள்ளேன். ‘மற்றவை வெள்ளித்திரையில் காண்க’ என்பது போல மற்ற கேள்வி-பதில்களை நூலை வாங்கிப்படித்து அறிந்து கொள்ளுங்கள். வாசகர்களின் மனநிலையை அறிவுநிலையை உயர்மட்டத்திற்கு உயர்த்திச் செல்லும் ஏணியாக உள்ளது நூல்.
அனைத்துத் துறைகளிலும் இன்றைய அறிவியலின் அதிநுட்ப வேகம் மனிதகுலத்திற்கு வரமா? சாபமா?
- முனைவர் இராம. முத்துக்குமரனார், கடலூர்
சுத்தியாக இருக்கும்போது செதுக்கவும், சம்மட்டியாக மாறும்- போது உடைக்கவும் செய்கிற இரும்பாகவே எல்லாக் கண்டுபிடிப்பு-களும் இருக்கின்றன.
நல்லவற்றிற்கு மட்டும், ஆக்கச்சக்திக்கு மட்டும் கண்டுபிடிப்பு-களை பயன்படுத்த வேண்டியது அறிவுள்ள மனித சமுதாயத்திற்கு அழகாகும்.
சினிமா மனதில் பதிவது போல் பாடம் பதிவதில்லையே, ஏன்?
சு. ஆறுமுகம், கழுகுமலை
திரைப்படத்தைப் போல பாடங்களையும் காட்சிப்படுத்திப் படித்தால் கட்டாயம் பதியும்.
உண்மை தான். மொட்டையாக மனப்பாடம் செய்வது மனதில் தங்காது. புரிந்து படித்தால் மனதில் தங்கும். வரலாறு படித்தால், அதில் வரும் நிகழ்வுகளை மனதில் காட்சிப்படுத்தி அசை போட்டுப் படித்தால் நினைவில் நிற்கும், மறக்காது.
தானியங்களில் தங்களுக்குப் பிடித்தது?
த. சிவாஜி மூக்கையா, தர்காஸ்
மக்காச்சோளம். அதிக சிரமமின்றி அனைத்து இடங்களிலும் பயிரிட முடிகிறது. உண்மை தான். அனைத்து இடங்களிலும் பயிரிட முடிவதால் அனைத்து இடங்களிலும் கிடைக்கின்றது. விலை குறைவாகவும் சுவையாகவும் இருப்பதால் உடல்நலத்திற்கு நன்மை என்பதாலும் எல்லா வயதினரும் விரும்பி உண்கிறோம். கட்டு சோளக்கதிராகவும், உதிர்த்து வறுத்து ‘பாப்கான்’ என்ற பெயரிலும் ‘சுவீட்கான்’ என்ற பெயரிலும் எங்கும் பயன்பாட்டில் உள்ளது. பாப்கான் விற்காத திரையரங்கே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லாத் திரையரங்கிலும் கிடைக்கும். திரைப்படத்தின் இடைவேளையில் பாப்கான் சாப்பிட்டால் தான் திரைப்படம் பார்த்த திருப்தியே பலருக்கு வரும். எனக்கும் மிகவும் பிடித்த தானியம் மக்காச்சோளமே.
மனிதனுக்கு வருவது போன்று, விலங்குகளுக்கும் கனவு வருமா?
-பாரதி முருகன், மணலூர் கோட்டை
வரும். அவை அந்த விலங்குகள் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். எதிர்பால் விலங்கு ஸ்லோமோசனில் நடனமாடுவதைப் போல அவை கனவு காண்பதில்லை. அப்படிப்பட்ட கனவுகள் மனிதர்களுக்கு மட்டுமே வருகின்றன.
விலங்குகளுக்கு கனவு வரும் செய்தி நான் அறிந்ததில்லை. இந்தக் கேள்வி-பதில் படித்தபோது தான் அறிந்து கொண்டேன். இப்படி பல அரிய தகவல்களை அறிந்து கொள்ள வாய்ப்பாக உள்ள தகவல் களஞ்சியமே இந்த நூல். ஸ்லோமோசன் கனவு மனிதர்களுக்கு வரக் காரணம் திரைப்படங்கள் பார்த்ததன் பாதிப்பு என்பது என் கருத்து. வெள்ளை உடை தேவதைகள் ஸ்லோமோசனில் வரும் காட்சியைப் பார்த்து பார்த்து மனிதர்களின் கனவுகளில் ஸ்லோமோசன் கனவு வருகின்றது. இதில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பங்கும் உண்டு.
வளர்ந்துவரும் இளைய தலைமுறையினரிடம் நீங்கள், விட்டால் பரவாயில்லை’ என நினைக்கும் பழக்கம் எது?
- டி. சந்திரன், ஈரோடு
மின்னணு போதை.
உண்மை தான். இன்றைய இளையதலைமுறையில் பலர் இரவு கண்விழித்து அலைபேசியில் பயனற்ற பொழுதுபோக்குகளை ரசித்து காலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை இழந்து விட்டனர். அலைபேசியும் ஒரு போதை என்றாகி விட்டது. எதையும் அளவோடு பயன்படுத்துவதே சிறப்பு. ‘அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழியை கருத்தில் கவனத்தில் கொண்டு திருந்த வேண்டியது அவசர அவசியமாகும் இன்று. இனிய இறையன்பு பெயர் பொருத்தம் நன்று. இனிமை சேர்க்கும் நூல் இது. வாங்கிப் படித்துப் பயன்பெறுங்கள்.
இந்தநூல் மதுரையில் ஜெயம் புக் சென்ட்ரில் தற்போது கிடைக்கின்றது.வெளியானபோது கிடைக்கவில்லை.உடன் இந்த நூலை அனுப்பி உதவிய திருமங்கலம் இறையன்பு நூலக நிறுவனர் இனியநண்பர் பார்த்தசாரதி அவர்களுக்கு நன்றி.
--

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» சத்சங்கம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» தவம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» வியர்வைக்கு வெகுமதி! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நாமார்க்கும் குடியல்லோம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வியர்வைக்கு வெகுமதி! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,

Permissions in this forum:
You cannot reply to topics in this forum