தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெரியாறு அணை உடைந்து விடுமா
2 posters
Page 1 of 1
பெரியாறு அணை உடைந்து விடுமா
பிரச்சனை
பூமி என்ற பெயர் மத்திய கிழக்கு ஆசியாவிற்கு உண்டு. அந்த பகுதியில்
குண்டு வெடிக்காத நாடே, ரத்தம் சிந்தப்படாத நாடே இல்லையென்று சொல்லலாம்.
இந்த நிலை இன்று நேற்று உருவானது அல்ல. எண்ணெய் வளர்த்திற்காக
வல்லரசுகள் அரபு நாடுகளை உருட்டி விளையாடும் முன்பே அந்த பூமிகள் பற்றி
எரிந்து கொண்டு தான் இருந்தன. நமது இந்தியாவிலும் பிரச்சனை பூமி என்று
ஒன்று உண்டு. அது நக்சல் பயங்கரவாதம் அதிகமாக உள்ள ஒரிசாவோ, திரிபுராவோ,
உத்ரகண்டோ அல்ல, நமது தமிழ்நாடு தான்.
கிழக்கு
மாகாணங்களில் எதுவும் அண்டை மாநிலங்களோடு சிண்டை பிடித்துக் கொண்டு நிற்க
வேண்டி இல்லை. நாம் தான் நம் பக்கத்தில் இருக்கும் மாநிலங்களிடமிருந்து
காலகாலமாக உதைகள் வாங்கி கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம் என்ன பக்கத்து
வீட்டுக்காரர்களின் ஆக்கிரமிப்பு மனோபாவமா நம் வீட்டாரின் அறிவீனமா
என்பதை ஆழ்ந்து பார்க்கும் போது நமது தலைவர்களின் அக்கரை இன்மை வெளிச்சமாக
தெரிகிறது.
கர்நாடகாவோடு காவேரிக்காக சண்டை
ஆந்திராவோடு பாலாற்று அணை திட்ட சண்டை, கேரளாவோடு முல்லை பெரியாறு சண்டை
என்று பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். நல்லவேளை பாண்டிசேரியோடு சாராய
சண்டைகள் எதுவும் இல்லை.
நடுவர் நீதுமன்றம் காவிரியில் தண்ணீர் விடச் சொன்னாலும், அணைகள்
திறக்கபடாது பெரியாறு அணையை உயர்த்துவதற்கு நீதிமன்றம் ஆதரவு சொன்னாலும்
கேரளா அரசு தடுப்பது இதையெல்லாம் மத்திய அரசிடம் குறையிட்டாலும் அது
கண்டுகொள்ளாமல் இருப்பது மத்திய அரசின் பெருந்தன்மையை காட்டுவதாக இல்லை.
மாற்றாந்தாய் மனப்போக்கையை காட்டுகிறது. மத்திய அரசு கூட நிர்வாகத்திற்காக
வாய் திறக்காமல் இருக்கலாம் பா.ஜா.க., கம்னியூஸ்ட் போன்ற எதிர்கட்சிகள்
கூட தமிழகத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் மௌன சாமியராக தான் இருக்கும்.
காரணம் மத்தியில் ஆளுகின்ற கட்சிகள் தமிழகத்தில் செல்வாக்கு பெறுவதற்கான
வாய்ப்புகளே இல்லாமல் போனவைகளாகும். இங்கிருக்கும் தி.மு.க. தோளிலோ,
ஆ.தி.மு.க தலைமையிலோ ஏறி பயணம் செய்ய வேண்டிய நிலையில் தான் இருக்கின்றன.
தேர்தல் என்று வரும் போது இந்த குண்டர்களின் தோளில் ஏறி உட்கார்ந்து
கொள்ளலாம். வெற்றி பெற்றால் எதாவது பதவி எலும்பை தூக்கி போட்டால் நன்றி
விசுவாசத்தோடு வாலாட்டிக் கொண்டிருப்பார்கள். தமிழகர்களின் பிரச்சனைகளை
அக்கறையோடு தீர்க்க வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணம் தான் மத்திய ஆட்சி
பீடத்திலும், எதிரணியிலும் மேலோங்கி நிற்கிறது.
காவேரி பிரச்சனைக்காக போராடி ஒய்ந்து விட்ட அல்லது நீண்ட கால
போராட்டத்திற்காக பிரச்சனையை மூடி பாதுகாப்போர் என்ற எண்ணம் கொண்ட தமிழக
அரசியல்வாதிகள் முல்லை பெரியாறு பக்கம் நடைபயணம் போக ஆரமித்து
விட்டார்கள். ஜெயலலிதாவின் முந்தானைக்குள் மறைந்திருக்கும் வைகோ
தம்பியின் அணைகட்டு போராட்டத்தை வாழ்த்தி வரவேற்றால் அம்மாவின் கும்பலில்
இன்னும் பிளவை ஏற்படுத்தலாம் என்று கருணாநிதி சதுரங்க காய்களை
நகர்த்துகிறாரே தவிர மத்திய அரசில் தனக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி
பிரச்சனையை தீர்க்கலாம் என்று அவருக்கு தோன்றவே இல்லை. பாவம் அவர் தான்
என்ன செய்வார். காலையில் விடிந்ததில் இருந்து இரவு உறங்க போகின்ற நேரம்
வரை கோபாலபுரத்திற்கு பல லட்சங்களை கொண்டு வந்து கொட்டிய ராசாவின்
அமைச்சர் பதவியை காப்பாற்றி கொடுக்க பாடுபடுவதே பெரிய வேலையாக இருக்கிறது.
கருணாநிதி வயதானவர், சில மனைவிகளும், பல குழந்தைகளும் கொண்ட பெரிய
குடும்பஸ்தர். தனது காலத்திற்குள் தன் குடும்பத்தை பணக்கார பட்டியலில்
முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று எவ்வளவோ வேலையிருக்கிறது.
ஜெயலலிதாவிற்கு குடும்பமா, குழந்தை குட்டிகளாக அவராவது தமிழகத்தின்
அடிப்படை பிரச்சனைகளுக்கு மத்திய அரசாங்கத்தின் காதுகளை கம்பிபோட்டு
துளைக்காலாமே என்றால், அவரும் சதாசர்வ காலம் வேலைப்பளுவில் முழ்கி மூச்சி
விட முடியாமல் தத்தளிக்கிறார். கொடநாடு எஸ்டேட்டின் வளர்ச்சிக்கு என்ன
செய்வது அங்கு சாராய ஆலை துவங்கலாமா? உற்பத்தி ஆகும் சாராயம் டாஸ்மார்க்
கொள்முதல் எடுக்குமா? குடிக்கும் குடிமக்களின் குறைதீருமா? என்ற சிந்தனை
ஒரு புறம். சசிகலா எந்த நேரத்தில் என்ன கட்டளை தருவார் யாரை கட்சி
நிர்வாகத்திலிருந்து தூக்க சொல்வார். புதிதாக யாரை போட சொல்வார். எந்த
எம்.எல்.ஏ எப்போது கட்சி மாறுவார் என்று எல்லாம் குழப்பம் ஒரு புறம்.
தமிழகமக்களை பற்றி நினைக்க அவருக்கும் நேரமில்லை.
பெரிய தலைகள் இரண்டும் தான் சொந்த பிரச்சனைகளில் தலைதூக்க முடியாமல்
கிடக்கின்றன. தமிழின போராளி என்று பட்டம் கட்டிக் கொண்டு தைலாபுரத்தில்
தவமிருக்கும் ஐயா ராமதாஸாவது மக்களை பற்றி கவலைப் பட்டாரா? என்ற
ஏக்கத்தோடு பார்த்தால் அவரும் கவலையோடு தான் இருக்கிறார். தி.மு.க.வோடு
உறவை முறிக்காமல் இருந்தால் சின்ன போராளி அன்புமணிக்கு அமைச்சர் பதவி
கிடைத்திருக்குமே, கிடைத்த இலாக்காகளில் சுரண்டி கல்லூரி அது இது என்று
கட்டி நாலு காசு சம்பாதித்து இருக்கலாமே, திருக்குவளை திருமகன் மீண்டும்
அழைப்பாரா? ஸ்ரீரங்கத்து அம்மணியோடு தான் உறவுக்காக கையேந்த வேண்டுமா?
யாரும் அழைக்க வில்லை யென்றால் அப்பாவி வன்னியர் மக்கள் கொடி பிடிக்க
வருவார்களா? பிடித்தவரை போதும் போ என்று கை கழவி விடுவார்களா?
என்றுயெல்லாம் எண்ணி கொண்டு இருக்கிறார் பாவம் தமிழ்நாட்டை பொறுத்தவரை
பொது நலம் செத்துபோய் எந்தனையோ நாட்டுகளாகி விட்டது. தமிழனை ஒவ்வொரு
தமிழனும் தான் காப்பாற்றி கொள்ள வேண்டுமே தவிர தலைவர்கள் வந்து
காப்பாற்றுவார்கள் என்று நினைத்தால் அவனை சுடுகாட்டிற்கு தூக்கி கொண்டு
போக கூட ஆட்கள் இருக்க மாட்டர்கள் இது நம் தலையெழத்து. அந்த எழுத்தை
நாமாக எழுதினோமா? கடவுள் எழுதிவிட்டானா? என்ற பார்ப்பதற்கு முன்னால்
முல்லைபெயாறு பிரச்சனை என்ன? அதனால் ஏற்பட கூடிய விளைவுகள் என்ன? அதைத்
தீர்ப்பது எப்படி என்று சிறிது நேரம் சிந்திப்போம்.
நமது இந்தியாவில் மூவாயிரத்து அறநூறு பெரிய அணைகட்டுகள் உள்ளன. அதில்
முன்னூறு அணைகட்டுகள் மட்டும் தான் நாடு சுகந்திரம் அடைவதற்கு முன்பே
கட்டப்பட்டவை. மற்ற அனைத்தும் எதோ தெரியாதனமாக தலைவர்களுக்கு இருக்கும்
ஆயிரம் பிரச்சனைகளுக்கு நடுவில் கட்டப்பட்டது தான். இந்த தகவலை வைத்தே
காங்கிரஸ் கட்சி எங்கள் சாதனைகளை பார்யென்று தம்மட்டம் அடித்துக்
கொள்ளலாம். நல்லவேளை அவர்களால் ஏற்பட்ட சாதனைகளை விட சோதனைகளை அதிகம்
என்பதை அவர்களே உணர்ந்து கொண்டதனால் வாய் மூடிக் கிடக்கிறார்கள்.
இந்தியாவில் இரண்டு நதிகள் தான் வடக்கு மேற்காக பாய்கிறது. அந்த
இரண்டு நதி ஒன்று நர்மதை மற்றொன்று பெரியாறு. நர்மதை ஆறு மத்திய
பிரதேசத்தில் துவங்கி மராட்டியத்தில் சிறு பகுதியில் ஒடி குஜராத் கடலில்
போய் கலக்கிறது. மூன்று மாநிலத்தல் ஒடினாலும் நதி நீரை பங்கிட்டு
கொள்வதற்கு பெரிய தகராறு எதுவும் அங்கு இல்லை. பெரியாறு தமிழ்நாட்டில்
பிறந்து கேரளாவை நோக்கி ஒடுகிறது. கேரளாவில் ஒடும் ஆறுகளில் மிக நீண்டதும்
முதன்மையானதும் பெரியாறு தான். அழகிய மலை என்ற பொருளில் சுந்தர கிரி
என்று அழைக்கப்படும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிவகி என்ற சிகரத்தில்
பெரியாறு பிறப்பெடுத்து பெருந்துறை ஆறு, சின்னஆறு, சிறு ஆறு, சிறுதோனி,
கட்டப்பனை ஆறு, இடமலை ஆறு போன்ற ஆறுகளை தன்னோடு சேர்த்துக் கொண்டு
கேரளாவிற்குள் முன்னூறு கிலோ மீட்டர் தூரம் வளைந்து தெளிந்து, குதியாட்டம்
போட்டு நடந்து அரபிக்கடலில் போய் கலக்கிறது. கேரள விவசாயத்திற்கு மட்டும்
பெரியாற்று தண்ணீர் பயன்படவில்லை. அந்த மாநிலத்தின் 74 சதவிகித மின்
உற்பத்தியையும் பெரியாரே கொடுக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் அதிகபடியான மழை பெய்கின்ற பகுதியில் பெரியாறு
தோன்றியதால் வெள்ள பெருக்கு என்பது அதற்கு புதிது அல்ல. டெல்லிக்கு காவடி
தூக்குவதில் நீ சிறந்தவனா? நான் சிறந்தவனா? என்ற போட்டா போட்டி தமிழக
காங்கிரஸில் இருப்பது எப்படி வாடிக்கையானதோ அப்படி தான் பெரியாறில்
ஏற்படும் வெள்ள பெருக்கும் வாடிக்கையானதாகும்.
ஆண்டுதோறும் வெள்ள பெருக்கோடு கேரளாவை மகிழ்ச்சியில் திக்கு முக்காட
செய்யும் பெரியாறு சற்று தடுக்கப்பட்டால் தமிழ்நாட்டின் வறண்ட பகுதிகளான
ராமநாதபுரம், மதுரை, ஆகியவற்றின் சில பகுதிகள் ஒரளவுக்காவது தாகத்தை
தீர்த்து கொள்ள முடியும் என்று ஒரு ஆங்கிலேயன் யோசித்தான். அதன் விளைவு
தான் முல்லை பெரியாறு அணை.
நமது
பஞ்சாயத்துக்களில் ரோடு போடுவதற்கு நிதி ஒதுக்கினால் அதை பங்கிட்டு
கொள்வதற்கு பஞ்சாயத்து தலைவர்களுக்குள்ளும் உறுப்பினர்களுக்குள்ளும் சட்டை
கிழியும் அளவிற்கு சண்டை நடப்பதை தான் நாம் பார்த்துக் இருக்கிறோம். ஒரு
பொது வேலைக்காக அரசாங்கம் உதவி செய்யாமல் போனால் கூட தனது சொத்து சுகங்களை
விற்று வேலையை முடித்த யாரையாவது ஒருவரை பார்த்திருக்கிறோமா? அல்லது
கேள்விதான் பட்டிருக்கிறோமா? முல்லைபெரியாறு அணை கட்டிய ஆங்கிலயர் தான்
தனது சொந்த சொத்துக்களை விற்று அணையை கட்டி முடித்தார் என்பதை நம்ப
முடிகிறதா நம்பிதான் ஆக வேண்டும். பிழைக்க தெரியாத அந்த ஆங்கில
பொறியாளனின் பெயர் பென்னி குக்.
சிவகி சிகரத்தில் தோன்றிய பெரியாறு நாற்பத்தி எட்டு கிலோ மீட்டர் கடந்து
வந்து முல்லை என்ற சிற்றாரை சந்திக்கிறது. இந்த சங்கம் நிகழும் இடத்தில்
அணையை கட்டி நீரை தேக்கி கிழக்கு நோக்கி திருப்பினால் தமிழ்நாட்டிற்கு
கொண்டுவரலாம் என்று பென்னி குக் திட்டம் தீட்டினார். நீரை தேக்கலாம் வறண்ட
பகுதியின் தாகத்தையும் தணிக்கலாம். ஆனால் தேக்கும் நிலம் நீரில் முழ்கி
போகும் அதில் விவசாயம் செய்து கொண்டு இருந்தவர்களின் வயிறுகள் காய்ந்து
போகும். அதை விட முக்கியமான பிரச்சனை அவர் அணைக்கட்ட தேர்ந்தெடுத்த நிலம்
திருவிதாங்கூர் மகாராஜாவுக்கு சொந்தமானது. அரசு அனுமதி இல்லையென்றால்
அணைக்கட்டும் கனவு அணைந்து போகும்.
கருணாகரன்
போலவோ, அச்சுநாந்தன் போலவோ கேரள தலைவர்கள் அன்று இருந்திருந்தால் முல்லை
பெரியாறு அணைக்கு ஒரு கல்லை கூட தூக்கி வைத்திருக்க முடியாது.
திருவிதாங்கூர் அரசர் மலையாளி, தமிழன் என்றுயெல்லாம் பேரம் காட்டவில்லை.
பென்னி குக் கேட்டப்படி தனக்கு சொந்தமான எட்டாயிரம் ஏக்கர் நிலத்தை 999
வருடங்கள் அணைகட்ட குத்தகைக்கு கொடுத்தார் நில குத்தகை பணமாக வருடம்
நாற்பதாயிரம் ரூபாய் அப்போதைய சென்னை அரசாங்கம் அரசருக்கு கொடுத்து விட
வேண்டும். எந்த பிரச்சனையும் இல்லாமல்பேச்சு வார்த்தை ஆலோசனை கமிஷன்,
என்று எதுவுமே இல்லாமல் துரிதமாக வேலை துவங்கியது.
பிரிட்டிஷ் ராணுவத்தின் கட்டுமானத் துறை அணைகட்டும் பணியை ஏற்றுக்
கொண்டது. மூன்று ஆண்டுகள் பல நூறு தொழிலாளர்களின் உழைப்பில் பாதி அளவு
வேலை நடந்து கொண்டு இருந்தது. அப்போது மழை கொட்டு கொட்டு என்று கொட்டி
தீர்த்து சமாளிக்க முடியாத வெள்ளம் ஏற்பட்டு கட்டப்பட்டுயிருந்த அணைகட்டு
பகுதியை சுத்தமாக துடைத்து கொண்டு போய்விட்டது. பென்னி குக்கின் கனவு
நீரில் கரைந்து போனதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மீண்டும் நீதி ஒதுக்கி தரும்படி அரசாங்கத்திடம் கெஞ்சி கூத்தாடி
பார்த்தார். தமிழ்நாடு பொது பணித்துறை போல அப்போதைய பிரிட்டிஷ் அரசு
கோறும் நிதி ஒதுக்குகிறோம் ஒரே ஒரு நிபந்தனை தான் வெள்ளம் அடித்துக் கொண்டு
போனாலும் போகாவிட்டாலும் போய்விட்டதாக அறிக்கை தரவேண்டும். பாதிக்கு
பாதி கமிஷன் தரவேண்டும் என்று கேட்டிருப்பார்கள். பிழைக்க தெரியாத
மனிதர்கள் அப்போது நிர்வாகத்தில் இருந்ததனால் இது தேவையற்ற திட்டம், ஒரு
பைசா கூட தர முடியாது வாசலை பார்த்து நடை கட்டலாம் என்று பென்னி குக்கை
கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வெளியேற்றி விட்டார்கள். தனது கனவு
நிறைவேறாமல் போய் விடுமோ என்று கவலை பட ஆரம்பித்தார் பென்னி குக்.
இப்போதைய அதிகாரியாக இருந்திருந்தால் ஒரு திட்டம் நிறைவேறாமல் இருக்க
என்னென்ன வழிகள் உண்டு என்று தான் முதலில் சிந்திப்பார்கள் அரசாங்கம்
வேண்டாம் என்று சொல்லிவிட்டால் போதும் அப்பாடா நிம்மதியாக குமுதம்,
கல்கண்டு படிக்கலாம், புதியதாக எதாவது இளிச்சவாயன் மாட்டினால் அவன் தலையை
மொட்டையடிக்கலாம் என்று தான் சிந்திப்பார்கள் பென்னி குக் அந்த
ஜாதியில்லை, அரசாங்கம் பணம் தராவிட்டால் என்ன அப்பா சம்பாதித்த சொத்து
இருக்கிறது, மனைவி போட்டு வந்த நகைநட்டு இருக்கிறது, போதாக்குறைக்கு கடன்
தர நண்பர்கள் இருக்கிறார்கள், நடுத்தெருவில் நின்றாலும் பரவாயில்லை.
அணையை கட்டியே முடித்து விடுவது என்று வேலையில் இறங்கினார். 1895-ல்
கடன்பட்டு கட்டி முடித்தார்.
அணையில்
தேக்கப்படும் நீர் ஒரு குகை வழியாக தான் தமிழ்நாட்டிற்கு
திரும்பவேண்டும். அப்போது ஏற்படும் நீரின் வேகத்தை பயன்படுத்தி மின்சாரம்
தயாரிக்கலாம் என 1955-ம் ஆண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த
முயற்சி நடந்து கொண்டுயிருந்த போதே அதாவது 1979-ம் வருஷம் இடுக்கி
மாவட்டத்தில் புதிய அணை ஒன்றை கட்ட கேரள அரசு தீர்மானித்தது.
இந்த புதிய அணையால் தமிழகத்திற்கு ஒன்றும் பெரிய அளவில் பாதிப்பு
இல்லை. காரணம் முல்லை பெரியாறை கடந்து தான் தண்ணீர் இடுக்கிக்கு போக
முடியும், அந்த காலகட்டத்தில் தான் முல்லை பெயாறுக்கு ஒரு சாபம்
கொடுத்தான் கடவுள், மிதமான ஒரு நிலநடுக்கம் அங்கே ஏற்பட்டது. அது
தமிழர்களுக்கு சாபமான நேரத்தில் கேரளாவுக்கு வரமாக மாறியது. அணையின்
நீர்மட்ட அளவை நூற்றி ஐம்பதிரண்டு அடியில் இருந்து நூற்றி முப்பத்தாறு
அடியாக குறைக்க வேண்டுமென்று கேரளா நிர்பந்திக்க துவங்கியது. மத்திய
அரசின் நீர்வள குழுமம் பிரச்சனையை ஆராய்ந்து கேரளா சொல்வது சரிதான்
அணையின் நீர்மட்ட அளவை குறைப்பதில் தவறில்லை என்றது, நல்ல முறையில்
மராமத்து செய்த பிறகு நூத்தி நாற்பத்தி ஐந்து அடி அளவில் உயர்த்தி
கொள்ளலாம் என்றும், சிற்றணையை பலப்படுத்தினால் ஆபத்தை தவிர்க்கலாம்
எனவும் பரிந்துறை செய்தது.
தண்ணீர் விஷயத்தை பொறுத்தவரை எந்த நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும்
காதுகொடுத்து கேட்டமாட்டோம் என்று செவிடர்களாக இருந்த பங்காரப்பா,
எஸ்.எம்.கிருஷ்ணா, போன்ற கர்நாடாக முதலமைச்சர்கள் போலவே கேரள அரசும் நீர்
குழுமத்தின் பரிந்துரையை மதிக்கவே இல்லை. பாதுகாப்பு வேலையும்
நடக்கவில்லை.
கேரளாவின் பிடிவாதத்தால் கடந்த
முப்பது வருடங்களாக அணையின் முழு கொள்ளவான நூற்றி ஐம்பதிரண்டு அடிக்கு
நீர் நிரப்ப படவே இல்லை. நூத்தி முப்பத்தாறு அடி மட்டுமே
நிரப்பப்படுகிறது. இது மட்டுமல்ல திருவிதாங்கூர், அரசரோடு செய்து கொண்ட
ஒப்பந்தப்படி வருடம் நாற்பதாயிரம் ரூபாய் குத்தகை பணம் மிகவும் குறைவு,
அதிகப்படியாக தரவேண்டும் என்று அடம்பிடித்ததையும் தமிழகம் ஒத்துக்
கொண்டது. கேரளா இப்படியொரு நிபந்தனையை வைப்பதற்கு கரணமில்லாமல் இல்லை.
பெரியாறு அணையில் நீர் கொள்ளவை குறைத்தால் இடுக்கி அணைக்கு நீர்வரத்து
அதிகரிக்கும், அதிகப்படியான மின்சாரத்தை பெற்று அதை தமிழ்நாட்டிற்கே
விற்கலாம். என்பதற்காக தான். ஆனால் கேரளா அரசியல்வாதிகளும் தொலைக்காட்சி
மற்றும் பத்திக்கைகளும் உண்மையை வேறு விதமாக திரித்து பிரச்சாரம் செய்து
வருகிறார்கள் தொட்டால் கொட்டி விடும் அளவுக்கு அணை உழுத்து போய்விட்டது.
அதில் நீரை தேக்கினால் கேரளாவில் உள்ள மூன்று மாவட்டங்கள் நீரில் முழ்கி
விடும் பயிர் பச்சையெல்லாம் அழுகிவிடும். மனித உயிர்கள் பல பறிபோய்விடும்
என்றுயெல்லாம் கதைகட்டுகிறார்கள்.
செத்து போவது மலையாளியாகயிருந்தாலும், தமிழனாகயிருந்தாலும் பாதிப்பு
என்னவோ இந்திய நாட்டிற்கு தான். .மூன்று மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை
சீரழித்து மற்றவர்கள் வாழ வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் மற்றவர்களை
கெடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் வாழ்க்கை தரத்தை தடுக்க வேண்டும்
என்பதற்காக திட்டமிட்டு பொய்பிரச்சாரம் செய்தால் அதை பொறத்து கொள்ள
வேண்டும் என்று அவசியம் இல்லை.
முல்லை பெரியாறு
அணையை வலுப்படுத்தினால் நீரளவை அதிகப்படுத்தினால் மூன்று மாவட்டங்கள்
நிஜமாகவே அழிந்து போகுமா? இந்த கேள்விக்கு விடைகாண பெயரளவிலான பொறியியல்
மூளையெல்லாம் தேவையில்லை. சாதாரண அனுபவ அறிவே போதுமானது. பெரியாறு அணை
தொடங்கி வரிசையாக பதிமூன்று அணைகள் இருக்கின்றன. பெரியாறு அணை நிரம்பிய
பிறகு தான் மற்ற அணைகளுக்கு தண்ணீர் போக வேண்டும். அப்படி பதிமூன்று
அணைகளை தாண்டி தான் அரபிகடலை கட்டிபிடிக்கிறது பெரியாறு.
கேரள புத்திசாலிகள் சொல்வது போல் அணை உடைகிறது என்றே வைத்துக்
கொள்வோம் பதிமூன்று அணைகளை தாண்டிதான் வெள்ளம் ஊருக்குள் புகவேண்டும்.
அப்படி புகுவதற்கு முன்பே நிச்சயம் வெள்ளத்தின் வேகத்தை
கட்டுபடுத்திவிடலாம். அதுமட்டுமல்ல, பெரியாறு கேரளாவில் இருபத்தி மூன்று
கிலோமீட்டர் மட்டும் தான் சமவெளியில் பாய்கிறது. மற்றப்படி இருநூற்றி
இருபது கிலோமீட்டர் வனங்களிலும் மலைகளிலும் தான் தனது பயணத்தை
வைத்திருக்கிறது. வனங்களிலும் மலைகளிலும் பெரிதாக எந்த குடித்தனமும்
இல்லை. சமவெளி பகுதியில் தான் மக்கள் கூட்டம் அதிகம் உள்ளது. முரட்டு
குதிரையாக ஆறு பாய்ந்து வந்தாலும் சமவெளிக்கு வரவதற்குள் சாதுவான பசுவாகி
விடும். இதுதான் உண்மை நிலை. மேலும் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே
இல்லை. அணையை சிறிது தட்டி கொட்டி சீர் செய்தாலே பூரண வலுவை
பெற்றுவிடும்.
பிரச்சனையை தீர்ப்பதற்காக விஷயத்தை இரண்டு மாநில அரசுகளும்
சிந்திக்கவே இல்லை. கேரள அரசியல்வாதிகளுக்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும்
இந்த பிரச்சனை தங்களையும், தங்களது கட்சிகளையும் வளர்த்து கொள்ள ஒரு
வாய்ப்பாக கிடைத்துள்ளதே தவிர மக்கள் பிரச்சனையாக தெரியவே இல்லை.
உலகளாவிய பொதுவுடமை பேசும் தோழர்களாகட்டும், காந்தி வழியில் நடக்கும்
தியாகிகளாகட்டும் அல்லது அண்ணா, பெரியார் வழியில் நடக்கும் கழகங்களின்
அடலேறுகளாகட்டும் அரசியல்வாதிகளாகி விட்டால் பதவியை
காப்பாற்றுவாதற்காகவும், வங்கி கணக்கை வளர்ப்பதற்காகவும், பினாமிகளை
அதிகரிப்பதற்காகவும், பாடுபட வேண்டியிருக்கிறதே தவிர ஒட்டுபோட்ட மக்களை
நினைத்து பார்க்க கூட நேரம் இருப்பது இல்லை. இவர்கள் ஜம்பமாக மேடை மீது
ஏறி மலையாள வெறியையும், தமிழ் வெறியையும் கொம்பு சீவி விட்டு விட்டு
போய்விடுவார்கள். அங்கே இருக்கின்ற தமிழனும், இங்கேயிருக்கின்ற
மலையாளியும் மண்டைகளை உடைத்து சாக வேண்டும். உடனே இரங்கல் கூட்டம் போட்டு
நிதி வசூல் செய்து தொப்பையை நிரப்பிக் கொள்ள போட்டா போட்டி போட்டு கொண்டு
வருவார்கள் அரசியல்வாதிகள், பிணத்தின் வாயில் இருக்கும் வாக்கரிசியை கூட
தோண்டி எடுப்பான் கொடியவன் என்று சொல்வார்கள் அந்த கொடியவன் வேறு யாரும்
இல்ல நம்ம ஊர் அரசியல்வாதிகள் தான்.
source http://ujiladevi.blogspot.com/2010/09/blog-post_03.html
sriramanandaguruji- புதிய மொட்டு
- Posts : 73
Points : 201
Join date : 24/08/2010
Age : 64
Re: பெரியாறு அணை உடைந்து விடுமா
தகவலுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
sriramanandaguruji- புதிய மொட்டு
- Posts : 73
Points : 201
Join date : 24/08/2010
Age : 64
Similar topics
» முல்லைப் பெரியாறு.ஒரு பார்வை .
» முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!
» நகங்கள் உடைந்து போகிறதா…
» நகங்கள் உடைந்து போகிறதா…
» தமிழனின் சாபம் ''சும்மா''விடுமா?
» முல்லைப் பெரியாறு- உண்மையை அறிவோம்!!
» நகங்கள் உடைந்து போகிறதா…
» நகங்கள் உடைந்து போகிறதா…
» தமிழனின் சாபம் ''சும்மா''விடுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum