தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

காலத்தைக் வென்று நிற்கும் பொன்மொழிகள்

4 posters

Go down

காலத்தைக் வென்று நிற்கும்  பொன்மொழிகள் Empty காலத்தைக் வென்று நிற்கும் பொன்மொழிகள்

Post by ponsivap Thu Sep 09, 2010 3:18 pm

காலத்தைக் வென்று நிற்கும் பொன்மொழிகள்

உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

*-விவேகநந்தர்.-*

மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன.

*-நபிகள் நாயகம்.-*

தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரியபலவீனம்.

*-சிம்மன்ஸ்.–*

உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வரவேண்டும்.

*-மான்ஸ்பீல்டு.-*

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்துகொள்வது அவசியம்.

*-அன்னை தெரசா.-*

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது

*-ஜேம்ஸ் ஆலன்.-*

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரியசுமையாகிவிடும்.
*-பெர்னார்ட்ஷா.-*

இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம். ஏனெனில்உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது.

*-ஸ்ரீசாரதாதேவி.-*

நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையைமேற்கொள்கிறான்.

*-ஜான்மில்டன்.-*

உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை.

*-வோல்டன்.-*

அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.

*-ஜெபர்சன்.-*

தங்கள் கால்களால் பறவை சிக்கிக் கொள்ளும்;தன் நாவினால் மனிதன் சிக்கிக் கொள்வான்

*-தாமஸ் புல்லர் –*

உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும்; உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும்

*-சாக்ரடீஸ்-*

ஆர்வம்தான் எல்லா முன்னேற்றங்களின் ஆதாரம். அது இருந்தால் சாதனை; இல்லாவிட்டால் சாக்குப்போக்கு…

*-ஹென்றி போர்டு-*

மனநிம்மதி, ஆனந்தம், அன்பு, தியாகம், அடக்கம் என்ற ஐம்பெரும் குணங்கள் பணத்தால் வருவதில்லை.

*-விவேகானந்தர்.-*

மனிதனுக்கு நல்லது செய்வதுதான், நாம் கடவுளுக்கு செய்யும் மிகச் சிறந்த தொண்டாகும்.

*-பிராங்களின்-*

அறிவுத் தேவையை விட , கவனக்குறைவுதான் நமக்கு அதிக துன்பங்களை உண்டாக்குகிறது .

*-பிராங்க்ளின்.–*

என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல, என்ன செய்கிறாய் என்பதுதான் முக்கியம் .

*-ஜவஹர்லால் நேரு.–*

உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும்; உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும்

*-சாக்ரடீஸ்–*

உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வரவேண்டும்.

*-மான்ஸ்பீல்டு.-*

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.

*-அன்னை தெரசா.-*

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது.
*-ஜேம்ஸ் ஆலன்-*

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.

*-பெர்னார்ட்ஷா.-*

மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.

*-சாணக்கியர்.-*

நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.

*-ஜான்மில்டன்.-*

உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை.

*-வோல்டன்.-*

அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.

*–ஜெபர்சன்-*

நீங்கள் செய்யும் தொழில்கள் அனைத்திலும் மகிழ்ச்சி கொள்ளவேண்டும்.

எப்படி வாழ்வது என்பது தெரிந்துவிட்டால், வாழ்க்கை முழுவதும் அன்பு மயமாகும்.

எப்படிப்பட்ட சூழ்நிலயிலும் அமைதி காத்திட வேண்டும். அதுதான் சிறந்தது.
அற்புதமான பேச்சைவிட, ஒரு துளி அன்பினால் அதிகம் சாதிக்க முடியும்.

எதிலும் தீமையைப் பார்க்கிற பழக்கத்தையும், குற்றம் காணும் குணத்தையும் தவிற்க வேண்டும்.

உண்மையான அன்பு, எல்லாத் தடைகளையும் குறைபாடுகளையும் தகர்த்தெறிந்து வெற்றி கொள்ளும்.

அன்பினால் மட்டுமே உலகத் துயரங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

நமது தேவைகளை இறைவன் ஒருனால்தான் நிறைவேற்றி வைக்க முடியும்.

உள்ளத்தின் ஆழத்தில் அன்பு அமைதியாக இருக்கிறது. அதை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

அன்பு மனிதர்களில்மட்டும் வெளிப்படுவதில்லை. அது எங்கும் நிறைந்துள்ளது.

வாழ்க்கையின் இலட்சியம், அடையவேண்டிய குறிக்கோள் ஆகியவற்றை மறக்கக் கூடாது.

இலட்சியத்தை அடந்திடக் குறுக்கு வழி ஒன்று உள்ளது. அது உண்மையான – இடையறாத ஆர்வமே ஆகும்.

செய்யும் வேலையே உடலாகிய இறைவனுக்குச் செலுத்தும் ஒப்பற்ற பிரார்த்தனை ஆகும்.

*-அன்னை-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------
நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்!
தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!

*-நெப்பொலியன்ஹில்-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------
கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!

*-சுபாஷ்சந்திரபோஸ்-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------
தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.

*-கன்ப்யூஷியன-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------
காதலையும் இருமலையும் மறைக்க முடியாது.

*-ஜார்ஜ் ஹெர்பர்ட்-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------
சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும்.

*-காத்தரின் ஹெப்பர்ன்-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------
காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.

*-பிரயன் வாங்-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.

*-டி.ஹெச். லாரன்ஸ்-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------

காதல் : ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும்.

*-ஆம்புரோஸ் பியர்ஸ்-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------
காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது.

*-ஜூல் ரெனா-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------
காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல்.

*-ஆல்ஃப்ரெட் டென்னிசன் -*
---------------------------------------------------------------------------------------------------------------------------------
காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள்.

*-டக்ளஸ் யேட்ஸ்-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------

உணர்வுகள் மாறலாம், நினைவுகள் மாறுவதில்லை

*-ஜோயல் அலெக்சாண்டர்-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு சிறிய இன்பத்தைத் துறப்பதன் மூலம் ஒரு பெரிய இன்பத்தை அடைய முடியுமெனில் பெரியதற்காகச் சிறியதை விட்டுக் கொடுப்பவன் அறிவாளி.

*-புத்தர்-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------
வலிமை, உடலினின்று வருவது இல்லை. அசைக்க முடியாத மன உறுதியிலிருந்து வருகிறது. நமது மனத்தின் தூய்மை அதிகமாக இருந்தால் நமது வலிமையும் அதிகமாக இருக்கும். அவ்வளவுக்கவ்வளவு வெற்றி இன்னும் வேகமாகக் கிடைக்கும்.

*-காந்தியடிகள்-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

*-வில்லியம் ஷேக்ஸ்பியர்-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்

*-சுவாமி விவேகானந்தர்-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

*-அப்ரஹாம் லிங்கன்-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------
தீமைகள் உங்களை அணுகாமலிருக்க, உங்கள் எண்ணங்களில் தீமைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

*-சாக்ரடீஸ்-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் அம்மாவிடம் சொல்லிப் பெருமைப்பட முடியாத எந்த ஒரு செயலையும் செய்யாதீர்கள்.

*-எஸ். சர்மா-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------
தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

*–லெனின்-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------
செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான்.

*-கர்னல் கீல்-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க்கை என்கிற ஆடையில் நன்மை தீமை என்ற இரு நூல்களும் இருக்கும்.

*–ஷேக்ஸ்பியர்-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------

தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு.

*-பிரையண்ட்-*
---------------------------------------------------------------------------------------------------------------------------------

ponsivap
ponsivap
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 15
Points : 41
Join date : 22/06/2010
Location : UAE

Back to top Go down

காலத்தைக் வென்று நிற்கும்  பொன்மொழிகள் Empty Re: காலத்தைக் வென்று நிற்கும் பொன்மொழிகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 13, 2010 10:36 am

அருமை, மிகவும் பயனுள்ள பொன்மொழிகள், வாழ்த்துக்கள் பொன்சிவா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காலத்தைக் வென்று நிற்கும்  பொன்மொழிகள் Empty Re: காலத்தைக் வென்று நிற்கும் பொன்மொழிகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 04, 2011 8:12 pm

தொடருங்கள் உங்கள் படைப்புகளை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காலத்தைக் வென்று நிற்கும்  பொன்மொழிகள் Empty Re: காலத்தைக் வென்று நிற்கும் பொன்மொழிகள்

Post by RAJABTHEEN Mon Apr 04, 2011 8:17 pm

மிகவும் சிறந்த பொன்மொழிகளை அள்ளிவழங்கிமைக்கு அன்புபாராட்டுக்கள் தோழரே தொடர்ந்து இணைந்திருந்து உங்கள் அருமையான படைப்புகளைத்தந்து கொண்டே இருங்கள் :héhé:
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காலத்தைக் வென்று நிற்கும்  பொன்மொழிகள் Empty Re: காலத்தைக் வென்று நிற்கும் பொன்மொழிகள்

Post by கவிக்காதலன் Tue Apr 05, 2011 12:20 am

உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம் உணர்வதில்லை.

*-வோல்டன்.-*

காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.

*-பிரயன் வாங்-*

காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல்.

*-ஆல்ஃப்ரெட் டென்னிசன் -*

உங்கள் அம்மாவிடம் சொல்லிப் பெருமைப்பட முடியாத எந்த ஒரு செயலையும் செய்யாதீர்கள்.

*-எஸ். சர்மா-*

அருமை அருமை !!

தொகுப்பிற்கு நன்றி!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காலத்தைக் வென்று நிற்கும்  பொன்மொழிகள் Empty Re: காலத்தைக் வென்று நிற்கும் பொன்மொழிகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum