தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

4 posters

Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி   Empty கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Jan 24, 2011 7:38 pm

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?
காளைகளை இம்சிப்பது இன்று அவசியமா ?
எ .கே 47 துப்பாக்கி உள்ள காலத்தில்
எதற்கு ?இந்த ஜல்லிக்கட்டு சிந்திப்பாயா ?
காளையை அடக்கினால் கன்னியைத் தந்தனர் அன்று
காளையை அடக்கினால் துண்டு தருகின்றனர் இன்று
கோடிப் பணம் கொட்டிக் கொடுத்தாலும்
கொலையான உயிரைத் திரும்பப் பெற முடியுமா ?
வருடா வருடம் உயிர்ப் பலி பெருகுகின்றது
வஞ்சியர் பலர் விதைவை ஆவதும் பெருகுகின்றது
வீரத்தைக் காட்ட எத்தனையோ வழி இருக்க
விவேகமற்ற இந்த ஜல்லிக்கட்டு எதற்கு ?
ஜல்லிக்கட்டு நடக்கட்டும் என்னும் தலைவர்கள்
ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு காளையைப் பிடிப்பார்களா ?
வைப்பு தொகைகள் இழப்பீட்டு தொகைகள்
மாண்டிட்ட வாலிபனின் வாழ்க்கையைத் தருமா ?
அயிந்தறிவு கொண்ட காளையை
ஆறறிவு மனிதன் அடக்குவது வீரமா ?
காயங்களும் உயிர்ப் பலியும் தொடர்வதில்
களிப்புறும் மனிதனே பகுத்தறிவைப் பயன்படுத்து
ஜல்லிக்கட்டில் காளையைப் பிடித்தவர் மட்டுமல்ல
வேடிக்கை பார்த்தவரும் பாலமேட்டில் மடிந்தார்
மது அருந்தி மாடு பிடிக்க வருகின்றனர்
மதுவை மாட்டிற்கும் ஊற்றி விடுகின்றனர்
சாதிக் கலவரத்திற்கு வழி வகுக்கின்றனர்
சதிகள் செய்து அரசியல் சாயம் பூசுகின்றனர்
வீர விளையாட்டு என்ற பெயரில்
உயிரோடு விளையாடும் விளையாட்டு வேண்டுமா?
கணிப்பொறி காலத்திலும் காளையோடு மோதுவது ஏன்?
குடல் சரிந்தவர்கள் பார்க்கப் பரிதாபம்
கட்டாயம் சிந்தித்து செயலை மாற்ற வேண்டும்
வீரத்தைப் பறைசாற்ற வழிகள் பல உண்டு
வீணான உயிர்ப்பலி கேட்க்கும் ஜல்லிக்கட்டை விட்டுவிடு
பெரிய காளை வந்தால் பதுங்குவதும் உண்டு
சிறிய காளை வந்தால் பலரும் பாயிவதும் உண்டு
மாட்டிற்கும் இம்சை மனிதனுக்கும் இம்சை
மாத்தி யோசி தேவையா இந்த இம்சை
வாடிக்கையாக நடக்குது இந்தவேடிக்கை
வழக்காடி நீதிமன்றம் சென்று நடத்தும் கேளிக்கை
மனிதனும் விலங்கும் வதை படுவதை
முண்டியடித்து பார்த்து ரசிக்கும் கூத்து
தமிழர்களின் பெருமை அல்ல ஜல்லிக்கட்டு
தமிழர்களின் சிறுமை அன்றோ ஜல்லிக்கட்டு
தமிழர்களின் எண்ணிக்கை குறைக்கும் ஜல்லிக்கட்டு
தமிழர்களின் உயிரைக் குடிக்கும் ஜல்லிக்கட்டு
தமிழர்களின் அங்கத்தை சிதைக்கும் ஜல்லிக்கட்டு
தமிழச்சிகளை விதைவையாக்கும் கொடிய ஜல்லிக்கட்டு
வாழ வேண்டியவனின் வாழ்க்கையை முடிக்கும் ஜல்லிக்கட்டு
வஞ்சியர் பலரை வேதனையில் வீழ்த்தும் ஜல்லிக்கட்டு
வன்முறைக்கு வித்திட்டு வம்பு வளர்க்கும் ஜல்லிக்கட்டு
நன்மறைக்கு எதிரான முறை இந்த ஜல்லிக்கட்டு
பெற்றோர்களிடம் இருந்து மகனைப் பறிக்கும் ஜல்லிக்கட்டு
பெற்றத் தாயை பாசத்தால் துடிக்க விடும் ஜல்லிக்கட்டு
வாலிபர்களின் உயிரைக்குடிக்கும் ஜல்லிக்கட்டு
வாலிப்பதைச் சிதைத்து அழிக்கும் ஜல்லிக்கட்டு
காட்டுமிராண்டி காலத்தில் நடந்த ஜல்லிக்கட்டு
கணிப்பொறி யுகத்தில் வேண்டாம் மூட்டை கட்டு

avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி   Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by சிசு Mon Jan 24, 2011 8:37 pm

நல்ல கவிதை நடை ரவி... கவனிக்கவும். நல்ல நடை மட்டுமே...

உங்கள் கருத்தோடு முற்றிலும் மாறுபடுகிறேன் ரவி.

1. காளையை அடக்க வருபவரும், வேடிக்கை பார்க்க வருபவரும் அவரவர் சொந்த விருப்பத்தின் பேரிலேயே வருகின்றனர்.
2. காளையும் , அதனை அடக்க முற்படுபவரும் முறையான மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப் படுகின்றனர். (மது உட்பட)
3. கணினி யுகம். ஜல்லிக்கட்டு எதற்கு? என்கிறீர்கள். ஆங்கிலம் உலக (இணைப்பு) மொழி. தமிழ் எதற்கு??
4. இது போன்ற சிந்தனைகள் தமிழனின், தமிழின் அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துக் கொண்டு வருகின்றன...
5. ஜல்லிக்கட்டு தமிழனின் பெருமை மட்டுமல்ல. அடையாளம்.
6. கணினி யுகம் என்ற போர்வையில் நாம் நமது தமிழ், வரலாறு, நீதி போதனைகளை புறந்தள்ளுவது வேதனையான கொடுமை. அது தமிழனின் அடையாளத்தையும் சிதைப்பதை என்னவென்று சொல்வது?

தவறாக என்ன வேண்டாம் ரவி. எனது கருத்தை உங்கள் முன் வைத்திருக்கிறேன்...

உங்களிடமிருந்து ஜல்லிக்கட்டை விடக் கொடுமையான மதுவைக் குறித்து மதுவிலக்கு கவிதை ஒன்றை எதிர்பார்க்கிறேன்.

- சிசு...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி   Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Jan 24, 2011 9:48 pm

டாஸ்மாக் ஹைக்கூ இரா. இரவி

அரசாங்கம் நடத்தும்
அவமானச்சின்னம்
டாஸ்மாக்

பாதை தவறியவர்கள்
போதை வாங்குமிடம்
டாஸ்மாக்

காந்தியடிகளுக்கு பிடிக்காத இடம்
குடிமகன்களுக்கு பிடித்த இடம்
டாஸ்மாக்

குடிமகன்களிடமிருந்து கரந்து
அரசாங்கத்திற்கு வழங்கும்
கற்பக காமதேனு டாஸ்மாக்

வருமானம் பெருகப் பெருக
அவமானம் பெருகுகின்றது
டாஸ்மாக்

பாஸ் மார்க் வாங்கியும்
க்ளாஸ் பாட்டிலுடன் வேலை
டாஸ்மாக்

ஈழம் அழிந்தாலும் கவலையின்றி
தமிழினம் ஒழிந்தாலும் கவலையின்றி
நிரம்பி வழியும் கூட்டம் டாஸ்மாக்

போதை சுகத்தில் குடிமகன்
சொல்லில் அடங்கா சோகத்தில் குடும்பம்
டாஸ்மாக்

விதவைகளின் எண்ணிக்கையை
விரிவாக்கம் செய்யுமிடம்
டாஸ்மாக்

வருங்கால தூண்கள்
வழுக்கி விழுமிடம்
டாஸ்மாக்

இலவசமாய் நண்பன் தருவதாக
இளித்துக் கொண்டு போகுமிடம்
டாஸ்மாக்

இமயமாக உயர வேண்டியவன்
படு பாதாளத்தில் விழுமிடம்
டாஸ்மாக்




--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

[You must be registered and logged in to see this link.]
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com

[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி   Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by சிசு Tue Jan 25, 2011 2:51 pm

அருமை ரவி... இத்தனை விரைவாக, இத்தனை ஹைக்கூ வா???
பொறாமைப்படுகிறேன் ரவி உங்கள் திறமை கண்டு...!
அத்தனையும் உண்மை.

//பாஸ் மார்க் வாங்கியும்
க்ளாஸ் பாட்டிலுடன் வேலை
டாஸ்மாக்//

தலைவிதி...??!!
: :...: :
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி   Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by கவிக்காதலன் Tue Jan 25, 2011 5:04 pm

அருமை அருமை
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி   Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by அரசன் Tue Jan 25, 2011 5:25 pm

வருங்கால தூண்கள்
வழுக்கி விழுமிடம்
டாஸ்மாக்//
அற்புதம் நண்பரே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?     கவிஞர் இரா .இரவி   Empty Re: கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி. ****
» கணினி யுகமா ? காட்டுமிராண்டிக் காலமா ? கவிஞர் இரா .இரவி !
» கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர் நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum