தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இந்திய மாணவர்களை கண்காணிக்கும் கருவி : அமெரிக்காவின் அவமானச் செயல்
2 posters
Page 1 of 1
இந்திய மாணவர்களை கண்காணிக்கும் கருவி : அமெரிக்காவின் அவமானச் செயல்
[You must be registered and logged in to see this image.]
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிரி வேலி பல்கலைக் கழக வழக்கில் சிக்கிக் கொண்டுள்ள இந்திய மாணவர்களின் காலில், "எலக்ட்ரானிக் டேக்' எனப்படும் கருவியைக் கட்டி, அவர்களின் நடமாட்டத்தை அமெரிக்க குடியேற்றத் துறை கண்காணித்து வருகிறது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக புதிய, "இ-மெயில்' முகவரி ஒன்றையும் இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மிகப் பெரிய நகரமான சான்பிரான்சிஸ்கோ நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது டிரி வேலி பல்கலைக் கழகம். அமெரிக்க சட்டப்படி, இப்பல்கலை, ஆண்டுக்கு 144 விசாக்கள் மட்டுமே வெளிநாட்டு மாணவர்களுக்கு அளிக்க முடியும். ஆனால், இந்தாண்டு சட்ட விரோதமாக மாணவர்களிடம் அதிகளவில் பணத்தைக் கறந்து, போலி விசாக்கள் மூலம் மாணவர் சேர்க்கையை பல்கலை நடத்தியுள்ளது.
இப்பிரச்னையில் மாட்டியுள்ள 1,555 இந்திய மாணவர்களில், 750 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர், வேறு வழியில்லாமல் தங்கள் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அங்கேயே தங்கி, வேறு கல்வி நிறுவனங்களில் தங்கள் படிப்பைத் தொடர்வதற்காக முயன்று வருகின்றனர். அமெரிக்க குடியேற்றத் துறை இவர்கள் அனைவரிடமும் விசாரித்து வருகிறது.
இதற்காக இவர்களது காலில், "எலக்ட்ரானிக் டேக்' எனப்படும் மின்னணு கண்காணிப்புக் கருவியை அத்துறை கட்டி விட்டுள்ளது. பாதத்திற்கு மேல் வளையம் போன்ற எலக்ட்ரானிக் தகவல் தரும் கருவி மாட்டப்படுகிறது. மாணவர்கள் எங்குள்ளனர் என்பதை இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள முடியும். இதற்கு, இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி இது பற்றி கூறியிருப்பதாவது: அமெரிக்க கொள்கைப்படி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இந்த விவகாரத்தில் மோசடி செய்தது பல்கலைக் கழகம் தான். மாணவர்கள் ஒன்றும் அறியாத அப்பாவிகள். அதனால், அவர்கள் மீது இரக்கம் கொண்டு இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் கைவிட வேண்டும். நேர்மையான மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பது தான் இந்திய அரசின் கவலை. அதற்காக அமெரிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இவ்விவகாரத்திற்கு காரணம் போலி ஏஜன்டுகள் தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வட அமெரிக்க தெலுங்கு அசோசியேஷன் தலைவர் கோமதி ஜெயராம் கூறுகையில், "இந்தப் பிரச்னையில் அரசியல் ரீதியிலான நடவடிக்கை எடுக்கும்படி இந்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். இந்த மாணவர்களை இங்குள்ள வேறு பல்கலைக் கழகங்களுக்கு மாற்றுவது அல்லது இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது ஆகிய நடவடிக்கைகளை எடுக்கும்படியும் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்' என்றார்.
இ-மெயில் முகவரி : டிரி வேலி பல்கலைக் கழகத்திற்கு படிக்கச் சென்றுள்ள மாணவர்கள், அவர்களது குடும்பத்தினர் இப்பிரச்னையில் இந்தியத் தூதரக உதவிகளைப் பெறுவதற்காக [You must be registered and logged in to see this link.] என்ற இ-மெயில் முகவரியை, வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து, [You must be registered and logged in to see this link.] மற்றும் [You must be registered and logged in to see this link.] என்ற முகவரிகளுக்குக் கடிதம் எழுதி, இந்திய அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பெறலாம்.
அமெரிக்க விளக்கம்:இது குறித்து விளக்கமளித்துள்ள அமெரிக்கா, மாணவர்கள் காலில் கருவிகள் கட்டப்படுவது அமெரிக்காவின் பல இடங்களிலும் நடைமுறையில் உள்ளது. கருவியை கட்டியதால் மாணவர்கள் குற்றவாளிள் எனவோ, சந்தேகப்படும் நபர்கள் எனவோ அர்த்தமள்ள. மாணவர்களை ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக கருவிகள் கட்டப்படுகின்றன என கூறியுள்ளது.
தினமலர்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இந்திய மாணவர்களை கண்காணிக்கும் கருவி : அமெரிக்காவின் அவமானச் செயல்
காரி துப்பினாலும் திரும்பவும் அங்கே செல்லும் நம்மவர்களை முதலில் தண்டிக்க வேண்டும்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» உண்டு உறைவிட பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு
» இந்திய பெருங்கடலில் சீனா ராணுவதளம்! கவலையில் இந்திய கடற்படை!
» மாணவர்களை சிறைக்கைதிகள் போல் நடாத்தும் அதிபர்!
» மாணவர்களை திட்டினால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
» மாணவர்களை நாசமாக்கும் அமைப்புகள்! ஐகோர்ட் நீதிபதி வேதனை
» இந்திய பெருங்கடலில் சீனா ராணுவதளம்! கவலையில் இந்திய கடற்படை!
» மாணவர்களை சிறைக்கைதிகள் போல் நடாத்தும் அதிபர்!
» மாணவர்களை திட்டினால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
» மாணவர்களை நாசமாக்கும் அமைப்புகள்! ஐகோர்ட் நீதிபதி வேதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum