தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இன்பத் தமிழே இறை!
5 posters
Page 1 of 1
இன்பத் தமிழே இறை!
இன்பத் தமிழே இறை!
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
[You must be registered and logged in to see this link.]
மொழி என்பது................
கருதியதை வெளிப்படுத்த உதவிடும் கருவி!
அந்த வகையில் செந்தமிழ் மொழியும்
ஒரு கருவி தான்!
ஆனால் அஃது ஓர் கருவி மட்டும் அன்று,
அருவியுங்கூட
தமிழ் ஓர் அருவி! தேனருவி!
சலசலத்து வரும் சங்கீத ஓசையுடன்
தேனின் சுவையையும் சேர்த்துப் பாய்ந்து
செவி வழி நுழையும் வரை அஃது அருவி!
பின்னர்ச் சிந்தையில் நிறைந்து- உறைந்து
நிலைத்திருக்கும்- இனித்திருக்கும்
கடல் அது!
வங்கக்கடல் அன்று தங்கக் கடல்- நம்
மனங்களில் தங்க வந்த கடல்
இனியதாய்- எளியதாய்- எழில்தாய்- நம்
இதயத்தமர்ந்த இன்னொருதாய்- நம்
எல்லார்க்கும் ஒரே தாய்! தமிழ்தாய்!
அன்னை தமிழை ஆயிரம் புலவர்
ஆயிரம் வகையில் ஆயிரம் பாக்களில்
ஏற்றிப் போற்றினும் இன்னும் புதிதாய்ப்
பாடுதற்கு,
வற்றாத சிறப்பு கொள் மாணிக்கப் பேழை!
ஒண்டமிழ் மொழியை உரைப்பவர், கேடபவர்
எல்லாருக்கும்-
வாழும் நாட்கள் வளர்ந்திடும் என்பதால்
தமிழே அமிழ்தம்! அமிழ்தம் என்பதும்
அருந்தமிழ் மொழியே!
அதனால் தான்
திரும்பத் திரும்ப அமிழ்து அமிழ்து என்றால்
தமிழ் தமிழ் என்றே ஒலித்திடும் வகையில்
பெயர் அமையப் பெற்றது, நம்மொழி! – அதுவே
செம்மொழி !
தமிழ்போல் பண்டைய பெருமை வாய்ந்த மொழிகளில்
பல – இன்று,
உலக வழக்கு இழந்து ஒழிந்தன!
அவையெல்லாம்,
பண்டைய செல்வர்! இன்று இல்லாதவர்!
இன்று சிறப்புற இருக்கும் சிலமொழிகளே
பழமையில் இல்லாதோர்! புதிய செல்வர்கள்!
பழய பெருமை – புதிய பொலிவு – எல்லாம் பெற்று
என்றும் செல்வராய் – அழியாச் செல்வராய்
இருப்பது தமிழ்தான்! – இலக்கியவளம்
சிறப்பது தமிழ் தான்!
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
என்னும் இலக்கணம் ஐந்தில்
பொருள் இலக்கணம் என்பது
மற்றைய மொழிகளில் இல்லாத – தமிழின் தனி இலக்கணம்
அதனால், தமிழே பொருளுடைய மொழி!
ஏனைய மொழிகள் பொருளற்ற மொழிகள்!
தமிழில் வழிபாடு
கூடாது! எனக் கூறுவோரை – நான்
வெறுப்பதும் இல்லை ! மறுப்பதும் இல்லை !
தமிழால் வழிபடுவதன் மேலாகத்-
தமிழையே வழிபட வேண்டம் என்பதே எனக்குப்
பிடிக்கும் மதம்!
இதனை மறுப்பவர் மதமே! யானைக்குப் பிடிக்கும் மதம்!
அவன் அருளால் தான் அவன் தான் வணங்க முடியும்
-என்பது திருவாசகம்!
தமிழ்மொழியால் தானே தமிழ்மொழி நய வழிபட முடியும்
என்பது ஒரு வாசகம்!
தமிழ் வழிபாடு இறை! – தமிழ் வழிபாட்டு மொழி!
இதனை அறியாதார் – ஏதும் அறியாதார்
அதனால்
அறியாத மானிடரிடம் எனக்கு வியப்பும் இல்லை.
வெறுப்பும் இல்லை!
இரக்கம் மட்டுமே எப்போதும் உண்டு!
அகவிருள் போக்க – அறிவொளி ஆக்க
தகதகத்து வரும் தமிழ் ஒரு ஞாயிறு !
இனிய பால் ஒளியை இதமாய் வழங்கும்
கனிந்த தமிழ் ஒரு கவின் நிலா – திங்கள்!
உணர்வுடன் தமிழை உச்சரிக்கும் உதடுகளை எல்லாம்
செவ்வாயாக்கும் தமிழ் ஒரு செவ்வாய்!
புதுமைக் கெல்லாம் புதுமையாய்ப் பொலியும்
தமிழும் புதன் தான்!
கற்பிக்கும் ஆசானுக்கும் கற்பிக்கின்ற ஆசான்
குருவுக்கும் குரு என்பதால் தமிழ் வியாழன்!
தங்கமும் தமிழ்தான் தங்கத்தை அடுத்து
இங்குச் சிறப்புடன் இயங்கும் வெள்ளியும் தமிழ்தான்
சனியை வெல்லும் ஒளிமிகு தனித்தமிழ்
மொழியைக் கண்டு சனியும் அஞ்சும்
என்ற வகையில் தமிழர்களுக்கு
எல்லா நாட்களும் எப்போதும் தமிழே!
எதனையும் இயம்பும் வகையில்
வேர்ச்சொல் மிகுதியாய்ப் பெற்றதுதமிழே என்பதால்
எதனைக் கூறவும் எந்த நிலையிலும்
பிறமொழிச் சொற்களைப் பிச்சை பெறுவதற்காகக்
கையேந்தியதில்லை.
பிச்சை எடுக்கின்ற பிறமொழிக்கெல்லாம் சொற்களை
வழங்கும் வள்ளல் வண்டமிழ் என்பதால்
என் தமிழ்,
பிச்சை எடுக்காத அட்சய பாத்திரம்!
தழைத்திடும் மொழிப்பயிர் காக்க
இலக்கணவேலி தமிழுக்கு இருப்பது போல்
வேறெந்த மொழிக்கும்
இல்லை என்பதும் என் தமிழின் சிறப்பே!
தமிழில்,
அறம் உண்டு, பொருள் உண்டு, இன்பம் உண்டு
இம்மூன்றையும் விளக்கும் முப்பால் நூல் திருக்குறள் உண்டு!
அகம் உண்டு, புறம் உண்டு அனைத்தும் உண்டு!
இல்லாத சிறப்பில்லை தமிழில்,
என்றாலும் தமிழே! உன்னைப் போற்றிட புகழ்வதற்குச்
சொற்கள் போதவில்லை என்பே குறை!
நாளங்காடி, ஆல்லங்காடி, பேரங்காடி, சிற்றல் காடி என எல்லாக்கடைகளிலும் தேடியும் உன் புகழ் போற்றுதற்குப் போதிய சொற்களை வாங்கவும் இயலவில்லை !
என்னும் இந்தக்குறை தவிர வேறு இல்லை தமிழில் குறை!
தமிழே உன்னிடம் மற்ற அனைத்துமே நிறை; ஏனெனில்
தாயே ! நீயே இறை ! நின்திருக்குறளே எம் மறை!
ஏனைய நின் இலக்கியங்கள் எல்லாம் இன்பத்தேன் – நறை;
என வாழ்வதே எம் வாழ்வியல் முறை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
[You must be registered and logged in to see this link.]
மொழி என்பது................
கருதியதை வெளிப்படுத்த உதவிடும் கருவி!
அந்த வகையில் செந்தமிழ் மொழியும்
ஒரு கருவி தான்!
ஆனால் அஃது ஓர் கருவி மட்டும் அன்று,
அருவியுங்கூட
தமிழ் ஓர் அருவி! தேனருவி!
சலசலத்து வரும் சங்கீத ஓசையுடன்
தேனின் சுவையையும் சேர்த்துப் பாய்ந்து
செவி வழி நுழையும் வரை அஃது அருவி!
பின்னர்ச் சிந்தையில் நிறைந்து- உறைந்து
நிலைத்திருக்கும்- இனித்திருக்கும்
கடல் அது!
வங்கக்கடல் அன்று தங்கக் கடல்- நம்
மனங்களில் தங்க வந்த கடல்
இனியதாய்- எளியதாய்- எழில்தாய்- நம்
இதயத்தமர்ந்த இன்னொருதாய்- நம்
எல்லார்க்கும் ஒரே தாய்! தமிழ்தாய்!
அன்னை தமிழை ஆயிரம் புலவர்
ஆயிரம் வகையில் ஆயிரம் பாக்களில்
ஏற்றிப் போற்றினும் இன்னும் புதிதாய்ப்
பாடுதற்கு,
வற்றாத சிறப்பு கொள் மாணிக்கப் பேழை!
ஒண்டமிழ் மொழியை உரைப்பவர், கேடபவர்
எல்லாருக்கும்-
வாழும் நாட்கள் வளர்ந்திடும் என்பதால்
தமிழே அமிழ்தம்! அமிழ்தம் என்பதும்
அருந்தமிழ் மொழியே!
அதனால் தான்
திரும்பத் திரும்ப அமிழ்து அமிழ்து என்றால்
தமிழ் தமிழ் என்றே ஒலித்திடும் வகையில்
பெயர் அமையப் பெற்றது, நம்மொழி! – அதுவே
செம்மொழி !
தமிழ்போல் பண்டைய பெருமை வாய்ந்த மொழிகளில்
பல – இன்று,
உலக வழக்கு இழந்து ஒழிந்தன!
அவையெல்லாம்,
பண்டைய செல்வர்! இன்று இல்லாதவர்!
இன்று சிறப்புற இருக்கும் சிலமொழிகளே
பழமையில் இல்லாதோர்! புதிய செல்வர்கள்!
பழய பெருமை – புதிய பொலிவு – எல்லாம் பெற்று
என்றும் செல்வராய் – அழியாச் செல்வராய்
இருப்பது தமிழ்தான்! – இலக்கியவளம்
சிறப்பது தமிழ் தான்!
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
என்னும் இலக்கணம் ஐந்தில்
பொருள் இலக்கணம் என்பது
மற்றைய மொழிகளில் இல்லாத – தமிழின் தனி இலக்கணம்
அதனால், தமிழே பொருளுடைய மொழி!
ஏனைய மொழிகள் பொருளற்ற மொழிகள்!
தமிழில் வழிபாடு
கூடாது! எனக் கூறுவோரை – நான்
வெறுப்பதும் இல்லை ! மறுப்பதும் இல்லை !
தமிழால் வழிபடுவதன் மேலாகத்-
தமிழையே வழிபட வேண்டம் என்பதே எனக்குப்
பிடிக்கும் மதம்!
இதனை மறுப்பவர் மதமே! யானைக்குப் பிடிக்கும் மதம்!
அவன் அருளால் தான் அவன் தான் வணங்க முடியும்
-என்பது திருவாசகம்!
தமிழ்மொழியால் தானே தமிழ்மொழி நய வழிபட முடியும்
என்பது ஒரு வாசகம்!
தமிழ் வழிபாடு இறை! – தமிழ் வழிபாட்டு மொழி!
இதனை அறியாதார் – ஏதும் அறியாதார்
அதனால்
அறியாத மானிடரிடம் எனக்கு வியப்பும் இல்லை.
வெறுப்பும் இல்லை!
இரக்கம் மட்டுமே எப்போதும் உண்டு!
அகவிருள் போக்க – அறிவொளி ஆக்க
தகதகத்து வரும் தமிழ் ஒரு ஞாயிறு !
இனிய பால் ஒளியை இதமாய் வழங்கும்
கனிந்த தமிழ் ஒரு கவின் நிலா – திங்கள்!
உணர்வுடன் தமிழை உச்சரிக்கும் உதடுகளை எல்லாம்
செவ்வாயாக்கும் தமிழ் ஒரு செவ்வாய்!
புதுமைக் கெல்லாம் புதுமையாய்ப் பொலியும்
தமிழும் புதன் தான்!
கற்பிக்கும் ஆசானுக்கும் கற்பிக்கின்ற ஆசான்
குருவுக்கும் குரு என்பதால் தமிழ் வியாழன்!
தங்கமும் தமிழ்தான் தங்கத்தை அடுத்து
இங்குச் சிறப்புடன் இயங்கும் வெள்ளியும் தமிழ்தான்
சனியை வெல்லும் ஒளிமிகு தனித்தமிழ்
மொழியைக் கண்டு சனியும் அஞ்சும்
என்ற வகையில் தமிழர்களுக்கு
எல்லா நாட்களும் எப்போதும் தமிழே!
எதனையும் இயம்பும் வகையில்
வேர்ச்சொல் மிகுதியாய்ப் பெற்றதுதமிழே என்பதால்
எதனைக் கூறவும் எந்த நிலையிலும்
பிறமொழிச் சொற்களைப் பிச்சை பெறுவதற்காகக்
கையேந்தியதில்லை.
பிச்சை எடுக்கின்ற பிறமொழிக்கெல்லாம் சொற்களை
வழங்கும் வள்ளல் வண்டமிழ் என்பதால்
என் தமிழ்,
பிச்சை எடுக்காத அட்சய பாத்திரம்!
தழைத்திடும் மொழிப்பயிர் காக்க
இலக்கணவேலி தமிழுக்கு இருப்பது போல்
வேறெந்த மொழிக்கும்
இல்லை என்பதும் என் தமிழின் சிறப்பே!
தமிழில்,
அறம் உண்டு, பொருள் உண்டு, இன்பம் உண்டு
இம்மூன்றையும் விளக்கும் முப்பால் நூல் திருக்குறள் உண்டு!
அகம் உண்டு, புறம் உண்டு அனைத்தும் உண்டு!
இல்லாத சிறப்பில்லை தமிழில்,
என்றாலும் தமிழே! உன்னைப் போற்றிட புகழ்வதற்குச்
சொற்கள் போதவில்லை என்பே குறை!
நாளங்காடி, ஆல்லங்காடி, பேரங்காடி, சிற்றல் காடி என எல்லாக்கடைகளிலும் தேடியும் உன் புகழ் போற்றுதற்குப் போதிய சொற்களை வாங்கவும் இயலவில்லை !
என்னும் இந்தக்குறை தவிர வேறு இல்லை தமிழில் குறை!
தமிழே உன்னிடம் மற்ற அனைத்துமே நிறை; ஏனெனில்
தாயே ! நீயே இறை ! நின்திருக்குறளே எம் மறை!
ஏனைய நின் இலக்கியங்கள் எல்லாம் இன்பத்தேன் – நறை;
என வாழ்வதே எம் வாழ்வியல் முறை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: இன்பத் தமிழே இறை!
//செந்தமிழ் மொழியும்
ஒரு கருவி தான்!
ஆனால் அஃது ஓர் கருவி மட்டும் அன்று,
அருவியுங்கூட
தமிழ் ஓர் அருவி! தேனருவி!//
தமிழ்மொழியின் சிறப்பு அருமை!!!
ஒரு கருவி தான்!
ஆனால் அஃது ஓர் கருவி மட்டும் அன்று,
அருவியுங்கூட
தமிழ் ஓர் அருவி! தேனருவி!//
தமிழ்மொழியின் சிறப்பு அருமை!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இன்பத் தமிழே இறை!
அருமையான சொல்பிரவாகம்... தமிழன்னைக்கு இன்னுமோர் மணிமாலை.
//அகவிருள் போக்க – அறிவொளி ஆக்க
தகதகத்து வரும் தமிழ் ஒரு ஞாயிறு !//
அதேதான்...
//அகவிருள் போக்க – அறிவொளி ஆக்க
தகதகத்து வரும் தமிழ் ஒரு ஞாயிறு !//
அதேதான்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: இன்பத் தமிழே இறை!
இத்தனை அழகியகருத்துக்களடங்கியவரிகளுக்கும் என்னால் ஒருவரியில் பாராட்டு முடியாது சார் உங்களுக்கு என் ஒரு கோடி பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெருமைப்படுகிறேன் தொடர்ந்து தாருங்கள் சார்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: இன்பத் தமிழே இறை!
RAJABDEEN wrote:இத்தனை அழகியகருத்துக்களடங்கியவரிகளுக்கும் என்னால் ஒருவரியில் பாராட்டு முடியாது சார் உங்களுக்கு என் ஒரு கோடி பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெருமைப்படுகிறேன் தொடர்ந்து தாருங்கள் சார்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இன்பத் தமிழே இறை!
கவிக்காதலன் wrote://செந்தமிழ் மொழியும்
ஒரு கருவி தான்!
ஆனால் அஃது ஓர் கருவி மட்டும் அன்று,
அருவியுங்கூட
தமிழ் ஓர் அருவி! தேனருவி!//
தமிழ்மொழியின் சிறப்பு அருமை!!!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இன்பத் தமிழே இறை! சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
» தமிழே . . .
» தமிழே தமிழே ...!
» என் தமிழ் [தமிழே உனக்காக]..
» தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
» தமிழே . . .
» தமிழே தமிழே ...!
» என் தமிழ் [தமிழே உனக்காக]..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum