தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எழுச்சியின் தொடக்கம் செம்மொழி மாநாடு
4 posters
Page 1 of 1
எழுச்சியின் தொடக்கம் செம்மொழி மாநாடு
எழுச்சியின் தொடக்கம் செம்மொழி மாநாடு
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
[You must be registered and logged in to see this link.]
கோவையில் அண்மையில்
கோலமிகு மாநாடு!
மாநாட்டுப் பந்தல் அமைப்பில் செம்மை!
மாநாட்டில் பாதுகாப்புப் பணிகள் செம்மை!
பலஇலட்சம் தமிழர்கள் கூடிய போதும்
வரவேற்பில் செம்மை!
வசதிகளில் செம்மை!
மாநாட்டில் இனியவை நாற்பது
ஊர்வலம் செம்மை!
ஆய்வரங்க ஆய்வுரைகள்
அனைத்தும் செம்மை!
கருத்தரங்க உரைகள்
கவின்மிகு செம்மை!
கவியரங்கம் செம்மை!
பட்டிமன்றம் செம்மை!
கலைநிகழ்ச்சிகள் எல்லாம் செம்மை!
தொடக்கமும் செம்மை
நிறைவும் செம்மை
செம்மை! செம்மையைத் தவிர
வேறு ஒன்றும் இல்லை
ஏனென்றால்
கோவையில் நிகழ்ந்தது உலகத் தமிழ் மாநாடு அன்று
உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு!
கோவையில் மாநாடு நிகழ்ந்தது-என்பது தவறு
கோவையே மா, நாடாய்த் திகழ்ந்தது-என்பதே சரி!
கோவை மாநகரில்,
முத்தமிழ் அறிஞர் முதல்வரும்
மற்றைய அமைச்சர் அனைவரும்
சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும்
பல்வேறு இயக்கத் தலைவர்களும்
கலைத்துறை கல்வித்துறை
ஆட்சித்துறை என அனைத்துதுறை
அறிஞர்களும்-நிர்வாகிகளும்
வெள்ளம் போல் தமிழ் மக்களும்
இவற்றுக்கெல்லாம் சிகரமாய்
இந்தியக் குடியரசுத் தலைவரும்
கூடியதால் அது, மா, நாடானது!
கோவையில் மாநாடு நிகழ்ந்தது-என்பது தவறு
கோவையே மா நாடாய்த் திகழ்ந்து-என்பதே சரி!
வேதம் முழங்கும் வேள்விகள் செய்யாமல்,
காட்டுக்கு ஓடிக்கடுந்தவம் இயற்றாமல்
பரமனருள் நாடிப் பக்தியிலே மூழ்காமல்
வீட்டுலகம் வாய்க்காது! இம்
மண்ணுலகில் விண்ணுலக
மகிழ்வு எய்த முடியாது
என்போல் கூற்று,
கோவையில் தோற்றது!
வானுலக இன்பமெல்லாம்
கோவை மாநாட்டில்
மண்ணுலகில் வந்ததனைக்
கண்டு மகிழ்ந்தேன்
கோவையில் கொடி கட்டி விழா நடந்த
கொடீசியா வளாகத்தில் நான் கண்டேன்!
ஐந்து நாட்களும் அமுது பொழிய
கோவைநகல்-தேவ நகர் ஆனது!
“தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமார் சிறப்புக் கண்டார் என்று முழங்கிய நம்
பாட்டன் பாரதியின் பாடல் வரிகளின், பொருளைக்
கோவைதான் புரிய வைத்தது!
கோவையில்,
தமிழ்வாணர் நிகழ்த்திய வாணவேடிக்கையாய்,
கவியரங்கப் பூவாணம் கவினாய்ப் பூச்க்ஷசுழரி•
பட்டிமன்ற அதிர்வெடிகள் பாங்காய் முழங்க,
கருத்தரங்கச் சரவெடிகள் தடதட வென வெடிக்க,
ஆய்வரங்கம் மங்கள இசை வழங்க
பண்டைக் கலை நிகழ்ச்சி வண்ண விளக்கொளியில்
அன்னைத் தமிழ்த்தெய்வம் அழகாய்ப் பவனி வர
காலையில் ஒரு விழா, பெருவிழா
திருவிழா நிகழ்ந்தது! அதனைக் கண்டு என்
நெஞ்சம் நெகிழ்ந்து!
தன் மக்கள்
உண்டு மகிழ்வதைரக்
கண்டு மகிழ்பவள் தாய்! வகைவகையாய் உணவுகளைத்
தந்து மகிழ்பவள் தாய்!
அதனால்தான்
கோவையில் தன்விழாவைக் காணவந்த
தன்மக்களுக்கு-பல இலட்சம் மக்களுக்கு
அன்னை அளித்தாள் அமுத உணவு
ஐந்து நாட்களும்-அனைத்துத் வேளையும்
மாநாட்டுக்கு வந்தோர்
வகை வகையான - சுவைமிக்க உணவுகளை
வயிறு நிறைய-மனம் நிறைய
உண்டார்கள்! பெருமகிழ்வு
கொண்டார்கள்!
மாநாட்டில் அப்படி ஓர் உணவு ஏற்பாடு!
அதனால் மாநாடு அது என்பது மறந்து போனது!
அதுநம் தாய் வீடு என்னும் நினைவே நிலைத்தது!
தமிழர் அனைவர்க்கும் ஒரேதாய் தமிழ்தான் என்பதை
மாநாட்டில் அன்னை காட்டி விட்டாள்! - தாய்மை அன்பை
நாட்டி விட்டாள்.
எல்லா வகையிலும்
செம்மொழி மாநாடு
வெற்றி மாநாடாக விளங்கித் திகழ்ந்தது!
அங்கே
டிசாதிப்பற்று
டிசமயப்பற்று
அவரவர் தனித்தனிக்
கட்சிப்பற்று
அனைத்துப் பற்றும் அற்றுப்போக
ஒரே பற்றாய்,
தமிழ்ப்பற்று மட்டுமே- அங்கே
தலை நிமிர்ந்து நின்றது!
இப்படி, செம்மொழி மாநாடு
செம்மையாய் முடிந்தது! முடிந்தது என்பதே தவறு
முடிவல்ல-அது தொடக்கம்
இனிதமிழ் பெறப்போகும் வெற்றிகளுக்கெல்லாம் அது
தொடக்கம்! இனி, தமிழின் வரலாற்றுப்
பதிவேட்டில் வெற்றிகள் மட்டுமே
வரவு கணக்காக வளர உள்ளது
இரவே வாராத இன்னொரு விடியல்
புலர உள்ளது!
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
[You must be registered and logged in to see this link.]
கோவையில் அண்மையில்
கோலமிகு மாநாடு!
மாநாட்டுப் பந்தல் அமைப்பில் செம்மை!
மாநாட்டில் பாதுகாப்புப் பணிகள் செம்மை!
பலஇலட்சம் தமிழர்கள் கூடிய போதும்
வரவேற்பில் செம்மை!
வசதிகளில் செம்மை!
மாநாட்டில் இனியவை நாற்பது
ஊர்வலம் செம்மை!
ஆய்வரங்க ஆய்வுரைகள்
அனைத்தும் செம்மை!
கருத்தரங்க உரைகள்
கவின்மிகு செம்மை!
கவியரங்கம் செம்மை!
பட்டிமன்றம் செம்மை!
கலைநிகழ்ச்சிகள் எல்லாம் செம்மை!
தொடக்கமும் செம்மை
நிறைவும் செம்மை
செம்மை! செம்மையைத் தவிர
வேறு ஒன்றும் இல்லை
ஏனென்றால்
கோவையில் நிகழ்ந்தது உலகத் தமிழ் மாநாடு அன்று
உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு!
கோவையில் மாநாடு நிகழ்ந்தது-என்பது தவறு
கோவையே மா, நாடாய்த் திகழ்ந்தது-என்பதே சரி!
கோவை மாநகரில்,
முத்தமிழ் அறிஞர் முதல்வரும்
மற்றைய அமைச்சர் அனைவரும்
சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும்
பல்வேறு இயக்கத் தலைவர்களும்
கலைத்துறை கல்வித்துறை
ஆட்சித்துறை என அனைத்துதுறை
அறிஞர்களும்-நிர்வாகிகளும்
வெள்ளம் போல் தமிழ் மக்களும்
இவற்றுக்கெல்லாம் சிகரமாய்
இந்தியக் குடியரசுத் தலைவரும்
கூடியதால் அது, மா, நாடானது!
கோவையில் மாநாடு நிகழ்ந்தது-என்பது தவறு
கோவையே மா நாடாய்த் திகழ்ந்து-என்பதே சரி!
வேதம் முழங்கும் வேள்விகள் செய்யாமல்,
காட்டுக்கு ஓடிக்கடுந்தவம் இயற்றாமல்
பரமனருள் நாடிப் பக்தியிலே மூழ்காமல்
வீட்டுலகம் வாய்க்காது! இம்
மண்ணுலகில் விண்ணுலக
மகிழ்வு எய்த முடியாது
என்போல் கூற்று,
கோவையில் தோற்றது!
வானுலக இன்பமெல்லாம்
கோவை மாநாட்டில்
மண்ணுலகில் வந்ததனைக்
கண்டு மகிழ்ந்தேன்
கோவையில் கொடி கட்டி விழா நடந்த
கொடீசியா வளாகத்தில் நான் கண்டேன்!
ஐந்து நாட்களும் அமுது பொழிய
கோவைநகல்-தேவ நகர் ஆனது!
“தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமார் சிறப்புக் கண்டார் என்று முழங்கிய நம்
பாட்டன் பாரதியின் பாடல் வரிகளின், பொருளைக்
கோவைதான் புரிய வைத்தது!
கோவையில்,
தமிழ்வாணர் நிகழ்த்திய வாணவேடிக்கையாய்,
கவியரங்கப் பூவாணம் கவினாய்ப் பூச்க்ஷசுழரி•
பட்டிமன்ற அதிர்வெடிகள் பாங்காய் முழங்க,
கருத்தரங்கச் சரவெடிகள் தடதட வென வெடிக்க,
ஆய்வரங்கம் மங்கள இசை வழங்க
பண்டைக் கலை நிகழ்ச்சி வண்ண விளக்கொளியில்
அன்னைத் தமிழ்த்தெய்வம் அழகாய்ப் பவனி வர
காலையில் ஒரு விழா, பெருவிழா
திருவிழா நிகழ்ந்தது! அதனைக் கண்டு என்
நெஞ்சம் நெகிழ்ந்து!
தன் மக்கள்
உண்டு மகிழ்வதைரக்
கண்டு மகிழ்பவள் தாய்! வகைவகையாய் உணவுகளைத்
தந்து மகிழ்பவள் தாய்!
அதனால்தான்
கோவையில் தன்விழாவைக் காணவந்த
தன்மக்களுக்கு-பல இலட்சம் மக்களுக்கு
அன்னை அளித்தாள் அமுத உணவு
ஐந்து நாட்களும்-அனைத்துத் வேளையும்
மாநாட்டுக்கு வந்தோர்
வகை வகையான - சுவைமிக்க உணவுகளை
வயிறு நிறைய-மனம் நிறைய
உண்டார்கள்! பெருமகிழ்வு
கொண்டார்கள்!
மாநாட்டில் அப்படி ஓர் உணவு ஏற்பாடு!
அதனால் மாநாடு அது என்பது மறந்து போனது!
அதுநம் தாய் வீடு என்னும் நினைவே நிலைத்தது!
தமிழர் அனைவர்க்கும் ஒரேதாய் தமிழ்தான் என்பதை
மாநாட்டில் அன்னை காட்டி விட்டாள்! - தாய்மை அன்பை
நாட்டி விட்டாள்.
எல்லா வகையிலும்
செம்மொழி மாநாடு
வெற்றி மாநாடாக விளங்கித் திகழ்ந்தது!
அங்கே
டிசாதிப்பற்று
டிசமயப்பற்று
அவரவர் தனித்தனிக்
கட்சிப்பற்று
அனைத்துப் பற்றும் அற்றுப்போக
ஒரே பற்றாய்,
தமிழ்ப்பற்று மட்டுமே- அங்கே
தலை நிமிர்ந்து நின்றது!
இப்படி, செம்மொழி மாநாடு
செம்மையாய் முடிந்தது! முடிந்தது என்பதே தவறு
முடிவல்ல-அது தொடக்கம்
இனிதமிழ் பெறப்போகும் வெற்றிகளுக்கெல்லாம் அது
தொடக்கம்! இனி, தமிழின் வரலாற்றுப்
பதிவேட்டில் வெற்றிகள் மட்டுமே
வரவு கணக்காக வளர உள்ளது
இரவே வாராத இன்னொரு விடியல்
புலர உள்ளது!
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: எழுச்சியின் தொடக்கம் செம்மொழி மாநாடு
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எழுச்சியின் தொடக்கம் செம்மொழி மாநாடு
நல்ல நடை... தமிழ் செறிந்த கவிதை.... பாராட்டுகள்...
ஒரு பகிர்தல்:
உங்கள் பார்வையில் இது வெற்றி மாநாடு. என் பார்வையில் "கட்சி" மாநாடு.
"தமிழின் வரலாற்றுப் பதிவேட்டில் வெற்றிகள் மட்டுமே வரவு கணக்காக வளர உள்ளது..." சரிதான். தமிழனின், தமிழினத்தின் பதிவேட்டில்...????
ஒரு பகிர்தல்:
உங்கள் பார்வையில் இது வெற்றி மாநாடு. என் பார்வையில் "கட்சி" மாநாடு.
"தமிழின் வரலாற்றுப் பதிவேட்டில் வெற்றிகள் மட்டுமே வரவு கணக்காக வளர உள்ளது..." சரிதான். தமிழனின், தமிழினத்தின் பதிவேட்டில்...????
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: எழுச்சியின் தொடக்கம் செம்மொழி மாநாடு
C-Su wrote:நல்ல நடை... தமிழ் செறிந்த கவிதை.... பாராட்டுகள்...
ஒரு பகிர்தல்:
உங்கள் பார்வையில் இது வெற்றி மாநாடு. என் பார்வையில் "கட்சி" மாநாடு.
"தமிழின் வரலாற்றுப் பதிவேட்டில் வெற்றிகள் மட்டுமே வரவு கணக்காக வளர உள்ளது..." சரிதான். தமிழனின், தமிழினத்தின் பதிவேட்டில்...????
அதே தான்...!!! கட்சி மாநாடுதான்!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» தமிழ் செம்மொழி மாநாடு பாடல்
» உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
» சீர்மை மலிந்த செம்மொழி மாநாடு -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» எம் மொழி செம்மொழி!
» அதிரை உமர் தம்பி அவர்களுக்கு கோவை செம்மொழி மாநாட்டில் விருது
» உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
» சீர்மை மலிந்த செம்மொழி மாநாடு -சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» எம் மொழி செம்மொழி!
» அதிரை உமர் தம்பி அவர்களுக்கு கோவை செம்மொழி மாநாட்டில் விருது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum