தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Page 13 of 26 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19 ... 26  Next

Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Fri Feb 04, 2011 2:28 pm

First topic message reminder :

அரபியர்கள் வாழ்ந்த இடங்களும் அரபிய சமுதாயங்களும்
~நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு| என்பது மனித சமுதாயத்திற்காக அவர்கள்
கொண்டு வந்த இறைத்தூதைக் குறிக்கும் சொல்லாகும். தான் கொண்டு வந்த இறைத்தூதை
தங்களின் சொல், செயல், வழிகாட்டல், ஒழுக்க மாண்புகள் ஆகியவற்றின் மூலம் மனித
குலத்திற்கு எடுத்துரைத்தார்கள். அந்த இறைத்தூதுத்துவத்தால் மனித வாழ்வின்
அளவுகோல்களை முற்றிலுமாக மாற்றினார்கள்; தீமைகளைக் களைந்து நன்மைகளை
போதித்தார்கள்; இருளைவிட்டு மக்களை அகற்றி ஒளியை நோக்கி அழைத்து வந்தார்கள்.
படைப்பினங்களை வணங்குவதிலிருந்து மனிதனை முழுமையாக விடுவித்து,
படைப்பாளனாகிய ஒரே இறைவனை வணங்கும்படி செய்தார்கள். சுருங்கக்கூறின்,
இவ்வுலகில் நெறி தவறி வாழ்ந்த மனிதனின் வாழ்க்கைப் பாதையை மாற்றி செம்மையான
அழகிய பாதையில் அவனை வாழச்செய்தார்கள்.
நமது இக்கருத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் முஹம்மது (ஸல்) அவர்கள் தூதராக
அனுப்பப்படுவதற்கு முன் இருந்த நிலைமைகளையும், அவர்கள் தூதராக அனுப்பப்பட்ட
பின் ஏற்பட்ட மாற்றங்களையும் முன் நிறுத்தி பார்ப்பது அவசியம்.
இதனால் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமின் பக்கம் மக்களை அழைப்பதற்கு முன்பிருந்த
அரபிய சமுதாயங்கள், அவர்களது கலாச்சாரங்கள்; மேலும், அக்காலத்தில் இருந்த
சிற்றரசர்கள், பேரரசர்கள், சமுதாய அமைப்புகள், அவர்களது மத நம்பிக்கைகள், சமூக
பழக்க வழக்கங்கள், சடங்குகள் மற்றும் அவர்களது அரசியல், பொருளியல் ஆகியவற்றை
குறித்து சில பிரிவுகளில் சுருக்கமாக ஆய்வு செய்வதும் அவசியம்.
இவற்றுள் ஒவ்வொன்றையும் பற்றி கூறுவதற்கு நாம் தனித்தனி பிரிவுகளை
ஏற்படுத்தியிருக்கின்றோம். இப்போது அந்த பிரிவுகளைப் பார்ப்போம்.
அரபியர்கள் வாழ்ந்த இடங்கள்
~அரப்| என்ற சொல்லுக்கு பாலைவனம், பொட்டல் ப+மி, (மரம், செடி கொடிகள், தண்ணீர்
இல்லாத) வறட்சியான நிலப்பரப்பு எனப் பல அர்த்தங்கள் உள்ளன. நீண்ட காலமாக
அரபிய தீபகற்பத்துக்கும் (இன்றைய ஸவூதி) அங்கு வசிப்பவர்களுக்கும் இப்பெயர்
கூறப்படுகிறது.
அரபிய தீபகற்பத்தின் மேற்கே செங்கடலும் ஸனாஃ நாடும், கிழக்கே அரபிய
வளைகுடாவும் இராக்கின் சில பகுதிகளும், தெற்கே அரபிக் கடலும் (இது இந்தியப்
பெருங்கடல் வரை தொடர்கிறது). வடக்கே ஷாம் (சிரியா) மற்றும் இராக்கின் சில
நகரங்களும் இருக்கின்றன. இதன் பரப்பளவு 10,00,000 சதுர கிலோ மீட்டரிலிருந்து
13,00,000 சதுர கிலோ மீட்டர் வரையிலாகும்.
அரபிய தீபகற்பத்துக்கு புவியியல் ரீதியாகவும் அதன் இயற்கை அமைப்பாலும் மிகுந்த
முக்கியத்துவம் உண்டு. அதன் உட்புற எல்லைகள் நாலா திசைகளிலும் மணற்பாங்கான
பாலைவனத்தால் சூழப்பட்டுள்ளன.
அரபியர் அல்லாத வெளிநாட்டவர்கள் தங்களது ஆதிக்கத்தை அந்நாட்டில் செலுத்துவதற்கு
இப்புவியியல் அமைப்பு பெரும் தடையாக இருந்தது. அதன் காரணமாக அந்நாட்டு மக்கள்
எல்லாக் காலங்களிலும் தங்கள் செயல்பாடுகள் அனைத்திலும் சுதந்திரமானவர்களாகவே
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down


முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 19, 2011 10:51 pm

3) பொதுவாக இறைநம்பிக்கையாளர்கள் தங்களுக்கு மத்தியில் சிரமத்தில் இருப்பவர்களுக்கு
~ஃபித்யா| அல்லது ~தியத்| விஷயத்தில் அழகிய முறையில் கொடுத்து உதவ வேண்டும்.
4) தங்களில் கிளர்ச்சி செய்பவர்கள், முஃமின்களுக்கு மத்தியில் அநியாயம் செய்பவர்கள்,
பாவமான காரியம் செய்பவர்கள், வரம்பு மீறுபவர்கள், விஷமத்தனம் செய்பவர்கள்
இவர்களை இறையச்சம் உள்ள முஃமின்கள் (இறைநம்பிக்கையாளர்கள்) ஒன்றுகூடி எதிர்க்க
வேண்டும்.
5) மேற்கூறப்பட்டவர்களில் (பொதுவாக முஸ்லிம்களில்) வழிதவறிய ஒருவர் தங்களைச்
சார்ந்த ஒருவரின் பிள்ளையாக இருப்பினும் சரியே! அவருக்கு எதிராக முஸ்லிம்கள்
அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
6) ஓர் இறைநம்பிக்கையாளர் ஒரு காஃபிருக்காக மற்றொரு இறைநம்பிக்கையாளரை கொலை
செய்யக்கூடாது. அதாவது வாரிசில்லாத காஃபிர் கொலையுண்டதற்காக அந்த காஃபிருடைய
முஸ்லிமான நண்பர், கொலையாளியான முஸ்லிமைக் கொல்லக் கூடாது.
7) ஓர் இறைநம்பிக்கையாளருக்கு எதிராக ஒரு காஃபிருக்கு உதவி செய்யக் கூடாது.
8) அல்லாஹ்வின் பொறுப்பு சமமான ஒன்றே. முஃமின்களில் தாழ்ந்த நிலையில் உள்ள
ஒருவர் பிறருக்கு கார்மானம் (பாதுகாப்பு) கொடுக்கலாம். தங்களில் ஒருவர் கொடுக்கும்
கார்மானத்தை மற்ற அனைத்து இறைநம்பிக்கையாளர்களும் நிறைவேற்ற வேண்டும். அதில்
பங்கம் இழைக்கக்கூடாது.
9) யூதர்களில் யார் நம்மை பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு உதவி செய்யப்படும்.
அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளப்படும். அவர் மீது எவ்வித
அநியாயமும் இழைக்கப்படமாட்டாது. அவருக்கு எதிராக பிறருக்கு உதவி செய்யக்கூடாது.
10) சமாதான உடன்படிக்கை செய்துகொள்வது முஃமின்கள் அனைவரின் உரிமையாகும்.
அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும்போது, நீதமின்றி ஓர் இறைநம்பிக்கையாளரை
விட்டுவிட்டு அன்னியருடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளக்கூடாது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 19, 2011 10:52 pm

11) இறைநம்பிக்கையாளர்களில் யாரொருவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும்போது
தவறுதலாக தங்களில் ஒருவரைக் கொன்று விடுவாரோ அவருக்கு அனைத்து இறை
நம்பிக்கையாளர்களும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்.
12) நமக்கு இணக்கமான எவரும் குறைஷிகளின் உயிர், பொருளுக்குக் கார்மானம்
(பாதுகாப்பு) கொடுக்க முடியாது. மேலும், ஓர் இறைநம்பிக்கையாளருக்கு எதிராக ஒரு
இணைவைப்பவரை பாதுகாக்க முடியாது.
13) ஒரு முஃமின் மற்றொரு முஃமினை குற்றமின்றி கொலை செய்து விட்டதற்கு தக்க
ஆதாரமிருப்பின் அவரையும் பழிக்குப்பழி கொலை செய்யப்படும். ஆனால். கொலை
செய்யப்பட்டவன் உறவினர் மன்னித்துவிட்டால் அவரை விடுவிக்கப்படும்.
14) இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் கொலை செய்தவனுக்கு எதிராக ஒன்றுசேர
வேண்டும். கொலை செய்தவனுக்கு எவ்வகையிலும் உதவி செய்யக் கூடாது.
15) இறைநம்பிக்கையாளர் ஒரு விஷமக்காரனுக்கு, கலகம் செய்பவனுக்கு உதவி செய்யக்
கூடாது, அவனுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது எவர் ஒருவர் ஒரு விஷமக்காரனுக்கு
உதவி செய்கிறாரோ அல்லது அடைக்கலம் கொடுக்கிறாரோ அவருக்கு மறுமையில்
அல்லாஹ்வின் சாபமும், கோபமும் உண்டு. அவருடைய கடமையான, உபரியான எந்த
வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
Pயபந 191 ழக 518
16) உங்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை
அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் இறுதித் தீர்ப்புக்காக விட்டுவிட வேண்டும். (இப்னு
ஹிஷாம்)
ஆன்மீகப் புரட்சிகள்
இதுபோன்ற நுட்பமிக்க சட்டங்களால் நபி (ஸல்) புதிய சமூகத்தின் அஸ்திவாரங்களை
உறுதியுடன் நிறுவினார்கள். அந்த சமூகத்தின் வெளித்தோற்றம் அது கொண்டிருந்த
ஆன்மீக சிறப்புகளின் பிரதிபலிப்பாக இருந்தது. இந்த உயர்வான ஆன்மீக சிறப்புகளை
அந்த மேன்மக்கள் நபி (ஸல்) அவர்களின் தோழமையால் பெற்றிருந்தனர். மேலும், நபி
(ஸல்) அவர்களும் அவ்வப்போது அவர்களுக்கு மார்க்கச் சட்டங்களையும், சமூக
உயர்வுக்கு வழிகாட்டும் நல்லொழுக்கங்களையும் போதித்து வந்தார்கள். அவர்களின்
உள்ளங்களை ஒவ்வொரு அசுத்தத்திலிருந்தும் தூய்மைப்படுத்தியதுடன் உயர் பண்புகளைக்
கடைபிடிக்கவும் அவர்களுக்கு ஆர்வமூட்டினார்கள். அன்பு, சகோதரத்துவம், கண்ணியம்,
இறைவணக்கம், கீழ்ப்படிதல் போன்ற நல்லொழுக்கப் பயிற்சியும் அளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் சில ஒழுக்கப் பயிற்சிகளையும், போதனைகளையும் பின்வரும்
வரிகளில் நாம் பார்ப்போம்:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் 'இஸ்லாமில் சிறந்த அமல் எது?" என்று கேட்டதற்கு நபி
(ஸல்) அவர்கள் 'உணவளிப்பது, தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் சொல்வது"
என்று கூறினார்கள். (ஸஹீஹ{ல் புகாரி)
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 19, 2011 10:52 pm

வந்தவுடன் நான் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். அவர்களது முகத்தை நன்கு உற்று
நோக்கியபோது அது பொய்யன் முகம் அல்ல என்பதை மிகத் தெளிவாக அறிந்து
கொண்டேன். நபி (ஸல்) அவர்களின் பேச்சில் முதலாவதாக பின்வரும் உபதேசங்களே
இடம் பெற்றன. 'மக்களே! ஸலாம் சொல்லும் பழக்கத்தை உங்களுக்குள் பரவலாக்குங்கள்
உணவளியுங்கள் உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள் இரவில் மக்கள் உறங்கும்போது
நீங்கள் எழுந்து தொழுங்கள் நீங்கள் நிம்மதியாக சுவனம் செல்வீர்கள்." (ஸ{னனுத்
திர்மிதி, இப்னு மாஜா)
மேலும் கூறினார்கள்: யாருடைய தீங்குகளால் ஒருவன் அண்டை வீட்டார் நிம்மதியற்று
போவாரோ அவர் சுவனம் செல்லமாட்டார். (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) கூறினார்கள்: எவன் நாவு, கையின் தீங்கிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்புப்
பெற்றார்களோ அவரே முஸ்லிமாவார். (ஸஹீஹ{ல் புகாரி)
நபி (ஸல்) கூறினார்கள்: தனக்கு விரும்புவதை தனது சகோதரனுக்கும் விரும்பும் வரை
நீங்கள் இறைநம்பிக்கையாளராக மாட்டீர்கள்.
நபி (ஸல்) கூறினார்கள் 'அனைத்து முஃமின்களும் ஒரே மனிதரைப் போலாவர். அவன்
கண்ணுக்கு வலி என்றால் அவன் உறுப்புகள் அனைத்தும் வருந்துகின்றன. அவருக்கு
தலைவலி ஏற்பட்டால் அனைத்து உறுப்புகளும் அதனால் வேதனை அடைகின்றன."
(ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) கூறினார்கள்: 'ஒரு முஃமின் (இறைநம்பிக்கையாளர்) மற்றொரு முஃமினுக்கு ஒரு
கட்டடத்தைப் போன்றாவார். கட்டடத்தின் ஒரு பகுதி மற்ற பகுதிக்கு வலு சேர்க்கிறது."
(ஸஹீஹ{ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 19, 2011 10:52 pm

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்: 'பகைமை கொள்ளாதீர்கள் பொறாமை கொள்ளாதீர்கள்
புறக்கணிக்காதீர்கள் சகோதரர்களாக, அல்லாஹ்வின் அடிமைகளாக வாழுங்கள் ஒரு
முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து ஒதுக்கிட வேண்டாம்."
(ஸஹீஹ{ல் புகாரி)
மேலும் கூறினார்கள்: 'ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரராவார். அவருக்கு
அநியாயம் செய்யக் கூடாது அவரை எதிரியிடம் ஒப்படைக்கக் கூடாது யாரொருவர் தனது
சகோதரன் தேவையை நிறைவேற்ற ஈடுபடுகிறாரோ அல்லாஹ் அவன் தேவையை
நிறைவேற்றுகிறான்! யார் ஒருவர் ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை அகற்றுகிறாரோ அவருக்கு
அல்லாஹ் மறுமையின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை அகற்றுகிறான். யார் ஒருவர்
முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவருடையக் குறையை மறுமையில்
மறைத்துவிடுவான்." (ஸஹீஹ{ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
மேலும் கூறினார்கள்: 'ப+மியிலுள்ளவர்களின் மீது கருணை காட்டுங்கள். வானத்தில்
உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்." (ஸ{னன் அப+தாவூது, ஸ{னனுத் திர்மிதி)
மேலும் கூறினார்கள்: 'தனது அருகிலுள்ள அண்டைவீட்டார் பசியோடு இருக்க வயிறு
நிரம்ப சாப்பிடுபவர் முஃமினாக இருக்க மாட்டார்." (பைஹகி)
மேலும் கூறினார்கள்: 'இறைநம்பிக்கையாளரை ஏசுவது பெரும் பாவமாகும். அவரிடம்
சண்டை செய்வது இறைநிராகரிப்பாகும்." (ஸஹீஹ{ல் புகாரி)
மேலும், 'பாதையில் இடையூறு தருவதை அகற்றுவது தர்மம் என்றும், அதை இறை
நம்பிக்கையின் ஒரு பகுதி" என்றும் கூறினார்கள். (ஸஹீஹ{ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
மேலும் கூறினார்கள்: 'தர்மம் பாவங்களை அழித்துவிடுகிறது, தண்ணீர் நெருப்பை
அழிப்பது போல!'(முஸ்னது அஹ்மது, ஸ{னனுத் திர்மிதி, இப்னு மாஜா)
மேலும் கூறினார்கள்: 'எந்த ஒரு முஸ்லிம் ஆடையின்றி இருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கு
ஆடை அணிவிப்பாரோ அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தின் பச்சை பட்டாடைகளிலிருந்து
ஓர் ஆடையை அணிவிப்பான்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 19, 2011 10:53 pm

எந்த ஒரு முஸ்லிம் பசியுடன் இருக்கும் மற்றொரு
முஸ்லிமுக்கு உணவளிப்பாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையில் சொர்க்கத்தின்
கனிகளிலிருந்து உணவளிப்பான். எந்த ஒரு முஸ்லிம் தாகத்துடன் இருக்கும் மற்றொரு
முஸ்லிமுக்கு நீர் புகட்டுவாரோ அல்லாஹ் அவருக்கு மறுமையில் 'முத்திரையிடப்பட்ட
சுவன மது"வைக் குடிக்கக் கொடுப்பான்." (ஸ{னனுத் திர்மிதி)
மேலும் கூறினார்கள்: 'ஒரு பேரீத்தம் பழத்தின் ஒரு பகுதியை தர்மம் செய்தாயினும்
நரகத்தைவிட்டு உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதுவும் உங்களுக்கு
கிடைக்கவில்லை என்றால் நல்ல வார்த்தைகளை பேசுவதின் மூலமாவது நரகத்திலிருந்து
உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்." (ஸஹீஹ{ல் புகாரி)
பிறரிடம் கையேந்துவதிலிருந்தும், யாசகம் கேட்பதிலிருந்தும் தன்னைப் பேணிக் கொள்ள
வேண்டுமென்று ஒவ்வொருவருக்கும் ஆர்வமூட்டியதுடன் பொறுமையின் சிறப்புகள்,
போதுமென்ற மனப்பான்மையின் சிறப்புகள் பற்றி தங்களின் தோழர்களுக்கு அறிவுரைக்
கூறினார்கள். நிர்பந்தமின்றி யாசகம் கேட்பவர் நாளை மறுமையில் எழுப்பப்படும்போது
முகம் சிதைந்தவராக இருப்பார் என்றும் எச்சரித்தார்கள். (ஸ{னன் அப+தாவூது, ஸ{னனுத்
திர்மிதி, ஸ{னன் நஸாம், இப்னு மாஜா)
மேலும், அல்லாஹ்வை வணங்கி வழிப்படுவதில் கிடைக்கும் நன்மைகளையும்,
உயர்வுகளையும், சிறப்புகளையும் தங்களின் தோழர்களுக்கு விரிவாக விளக்கிக்
கூறினார்கள். தங்களின் தோழர்களை அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறங்கும் குர்ஆனுடன்
Pயபந 193 ழக 518
எப்போதும் தொடர்புடையவர்களாக ஆக்கினார்கள். எந்நேரமும் தங்களின் தோழர்களுக்கு
அழைப்புப் பணியின் கடமைகளையும், தூதுத்துவத்தை எடுத்து வைக்கும்போது ஏற்படும்
சிரமங்களையும் தெளிவாக உணர்த்துவதற்காக அல்லாஹ்வின் அருள்மறையை
அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பர்கள். தோழர்களும் அனுதினமும் குர்ஆன் ஓதும்படிச்
செய்தார்கள். மேலும், குர்ஆனை விளங்க வேண்டும் அதை புரிந்துகொள்ள வேண்டும்
அதை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தங்களது தோழர்களுக்கு வலியுறுத்தினார்கள்.
இவ்வாறே தங்கள் தோழர்களின் சிந்தனையைச் சீர்படுத்தி, அவர்களின் ஆற்றல்களை
விழித்தெழச் செய்து அவர்களின் ஆன்மீக நிலையை உயர்த்தி, உயர்ந்த பண்புகளை
அவர்களிடம் வளரச் செய்தார்கள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 19, 2011 10:53 pm

இதன்மூலமே இறைத்தூதர்களுக்கு அடுத்தபடியாக மனித
வரலாற்றில் ஒரு முழுமைத்துவம் அடைந்த சமுதாயமாக நபித்தோழர்கள் விளங்கினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள்: யார் ஒருவர் பிறரின் வழிமுறையை
பின்பற்ற நாடுகிறாரோ அவர் இறந்துவிட்டவர்களின் (நபித்தோழர்களின்) வழிமுறையை
பின்பற்றட்டும். ஏனெனில், உயிருடன் இருப்பவர் மீது குழப்பங்கள் ஏற்படுவதை அச்சமற்று
இருக்க முடியாது. இறந்துவிட்டவர்களில் நீங்கள் பின்பற்ற வேண்டியவர்கள் யாரெனில்
முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களாவர். அவர்களே இந்த சமுதாயத்தில்
சிறந்தவர்கள் மிக்க நல்லுள்ளம் கொண்டவர்கள் மிக ஆழமான கல்வியறிவு பெற்றவர்கள்
பகட்டை விரும்பாதவர்கள். அல்லாஹ் தனது நபியவர்களின் தோழமைக்காகவும், தனது
மார்க்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும் அவர்களைத் தேர்வு செய்தான். அவர்களது சிறப்பை
அறிந்து கொள்ளுங்கள். அவர்களது வழியில் அவர்களை நீங்களும் பின்தொடருங்கள்.
அவர்களது நற்பண்புகளிலும், வாழ்க்கையிலும் உங்களுக்கு முடிந்ததை உறுதியாக பிடித்துக்
கொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் சரியான நேர்வழியில் இருந்தார்கள்.
(ரஜீன்-மிஷ்காத்)
மேலும், மகத்தான வழிகாட்டியான அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும்
உள்ளரங்கமான, வெளிரங்கமான அனைத்து சிறப்புகளையும் பண்புகளையும் சிறந்த
நல்லொழுக்கங்களையும் பெற்றுத் திகழ்ந்தார்கள். அனைத்து உள்ளங்களும் அவர்களை
நேசித்தன அவர்களுக்காக அர்ப்பணமாயின் அவர்கள் எந்த ஒரு வார்த்தையைப்
பேசினாலும் அதற்கு அவர்களின் தோழர்கள் முழுமையாகப் பணிந்தார்கள். நபி (ஸல்)
அவர்களின் வழிகாட்டுதல், நற்போதனைகள் அனைத்தையும் முழுமையாக ஏற்று
நடந்தார்கள்.
இதன் மூலமாகவே வரலாறு காணாத, மிகச் சிறந்த, நேர்த்திமிக்க புதிய சமூகத்தை நபி
(ஸல்) மதீனாவில் அமைக்க முடிந்தது. மேலும், பல காலங்களாக வழிகேட்டிலும், அறியாமை
என்ற இருள்களிலும் சிக்கித் தவித்து, தீர்வு தெரியாமல் திகைத்திருந்த சமூகத்தின்
அனைத்து விஷயங்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் தீர்வு கண்டார்கள்.
இதுபோன்ற மிக உயர்ந்த உளப்ப+ர்வமான, உள்ளரங்கமான பயிற்சிகளின் மூலம் இந்த
சமூகத்தின் அனைத்து அடிப்படை அம்சங்களும் முழுமை பெற்றன. மேலும், இந்த சமூகம்
காலத்தின் சவால்களைச் சந்தித்து சாதனை கண்டது மட்டுமல்லாமல் வரலாற்றையே மாற்றி
அமைத்தது.
யூதர்களுடன் ஒப்பந்தம்
நபி (ஸல்) மதீனாவில் அரசியல் அமைப்பு, சட்ட ஒழுங்கு ஆகிய அனைத்திலும் முதன்
முதலாக முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலைத் தன்மையையும் ஒருமைப்பாட்டையும்
நிறுவினார்கள். அதன் மூலம் மதீனாவில் புதிய இஸ்லாமிய சமுதாயத்திற்கும்,
சமூகத்திற்குமான அடித்தளத்தை மிக ஆழமாக உறுதிப்படுத்தினார்கள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 19, 2011 10:54 pm

இரண்டாம் கட்டமாக, முஸ்லிம் அல்லாதவர்களுடன் தங்களது சமூகத் தொடர்புகளை
முறைப்படுத்தத் துவங்கினார்கள். அதற்குக் காரணம், முழு மனித சமுதாயமும் நிம்மதி,
பாதுகாப்பு, நற்பயன்கள், நல்லுறவுகள் கிடைக்கப்பெற வேண்டும். ஒரே ஒருமைப்பாட்டுக்குக்
கீழ் நாட்டு மக்களை கொண்டுவர வேண்டும் என்பதுதான். ஆகவே சுயநோக்கங்களும்,
இனவெறியும் நிரம்பி இருந்த அக்காலத்தில் எங்கும் காணப்படாத மன்னித்தல்,
பெருந்தன்மையுடன் நடத்தல், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக்
கொண்ட சட்டங்களை நபி (ஸல்) அமைத்தார்கள்.
மதீனாவிற்கு அருகில் யூதர்கள்தான் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தார்கள். இவர்கள்
முஸ்லிம்களின் மீது உள்ளத்தில் பகைமையை மறைத்து வைத்திருந்தாலும் வெளிப்படையாக
முஸ்லிம்களை எதிர்க்கவுமில்லை அவர்களிடத்தில் சண்டை, சச்சரவு செய்யவுமில்லை.
எனவே நபி (ஸல்) யூதர்களுடன் நன்மையான நல்ல உடன்படிக்கையை ஏற்படுத்திக்
கொண்டார்கள். அவர்களுக்கு அவர்களது செல்வத்திலும், மதத்திலும் முழு சுதந்திரம்
அளித்தார்கள். அவர்களை மதீனாவை விட்டு விரட்ட வேண்டுமென்றோ அல்லது
அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டுமென்றோ அவர்கள் நாடவுமில்லை
அதைச் செய்யவுமில்லை.
நபி (ஸல்) யூதர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் அம்சங்களை இப்போது நாம்
பார்ப்போம்:
1) அவ்ஃப் கிளையினரைச் சேர்ந்த யூதர்கள், முஃமின்களுடன் இணைந்த ஒரே
சமுதாயத்தினராக கருதப்படுவர். இந்த யூதர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் முழு உரிமை
உண்டு. முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் நட்பு கொண்டவர்களுக்கும் அவர்களின்
மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு. இவ்வாறே அவ்ஃப் கிளையினரை சாராத மற்ற
யூதர்களுக்கும் அவர்களது மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு.
2) யூதர்கள் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாவர். அவ்வாறே
முஸ்லிம்களும் தங்களின் செலவுகளுக்கு தாங்களே பொறுப்பாளிகளாவர்.
3) இந்த உடன்படிக்கை உடையவர்களிடம் யார் போர் தொடுத்தாலும் அவருக்கு எதிராக
முஸ்லிம்களும், யூதர்களும் தங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துகொள்ள
வேண்டும்.
4) யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு - நலம் நாடுதல்,
ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்தல், உபகாரம் புரிதல் - என்ற அடிப்படையில்
அமைந்திருக்க வேண்டும். குற்றம் புரிவதில் துணை போவது கூடாது.
5) தனது நண்பன் குற்றத்திற்காக மற்றவர் குற்றவாளியாக மாட்டார்.
6) அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
7) பிறருக்கு எதிரானப் போரில் முஸ்லிம்களுடன் யூதர்கள் கலந்துகொள்ளும் போது
யூதர்களும் போர் செலவுகளில் பங்கெடுக்க வேண்டும்.
8) இவ்வுடன்படிக்கையில் கலந்து கொள்பவர்கள் மதீனாவில் குழப்பம் விளைவிப்பதோ,
விஷமத்தனம் செய்வதோ, இரத்தம் ஓட்டுவதோ முற்றிலும் தடுக்கப்பட்டதாகும்.
9) இந்த உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களுக்கு மத்தியில் ஆபத்தான சண்டை,
சச்சரவுகள் அல்லது ஏதும் பிரச்னைகள் நிகழ்ந்தால் அதற்குரிய முடிவை அல்லாஹ்வும்
அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே கூறுவார்கள்.
Pயபந 195 ழக 518
10) குறைஷிகளுக்கும், குறைஷிகளுக்கு உதவி செய்பவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கக்
கூடாது.
11) யாராவது மதீனாவின் மீது முற்றுகையிட்டால் அவர்களுக்கெதிராக அனைவரும் போர்
புரிய வேண்டும். தங்களுக்குள் உதவி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும்
தாங்கள் இருக்கும் பகுதியைப் பாதுகாக்க வேண்டும்.
12) இந்த உடன்படிக்கை, அநியாயக்காரனையும், குற்றவாளியையும் தண்டனையிலிருந்து
பாதுகாக்காது.
இந்த உடன்படிக்கையும், ஒப்பந்தமும் உறுதிபெற்றதால் மதீனாவும், மதீனாவைச் சுற்றியுள்ள
பகுதிகளும் ஒற்றுமை மிக்க நாடாக மாறி அதற்குத் தலைநகரம் மதீனாவாக விளங்கியது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 19, 2011 10:54 pm

அந்த நாட்டின் தலைவராக (இவ்வாறு நாம் கூறுவது சரியாக இருப்பின்) அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) இருந்தார்கள். அந்நாட்டில் முழுமையான அதிகாரமும் பேச்சுரிமையும்
முஸ்லிம்களுக்கே இருந்தன.
அமைதியும், பாதுகாப்புமுடைய சூழலை விரிவுபடுத்துவதற்காகத் தேவைக்கேற்ப மற்ற
சமூகத்தவர்களுடனும் நபி (ஸல்) இதற்குப்பின் உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.
அதன் சில விவரங்களை அடுத்துவரும் பக்கங்களில் காண்போம்.
ஆயுதமேந்தித் தாக்குதல்
குறைஷியர்களின் அச்சுறுத்துதலும் இப்னு உபையுடன் தொடர்பும்
மக்காவில் முஸ்லிம்களுக்கு நிராகரிப்பாளர்கள் அளவிலா துன்பங்களைக் கொடுத்து
வந்தார்கள். முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்குச் செல்ல நாடிய போது அவர்களைப்
பல விதத்திலும் தடுத்தார்கள். முஸ்லிம்களுக்குச் சொல்லிலடங்கா கொடுமைகளை
அளித்தனர். உண்மையில் அவர்களுடைய குற்றங்களுக்காக அவர்களிடம் போர்
செய்வதும், அவர்களுடைய சொத்துகளைச் சூறையாடுவதும் தகும் என்று இதற்கு
முன்னுள்ள பக்கங்களில் கூறியிருக்கிறோம். முஸ்லிம்கள் மதீனாவிற்கு வந்த பிறகும் அந்த
நிராகரிப்போர் முஸ்லிம்கள் மீது அத்துமீறுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. தங்களது
அடாவடி அழிச்சாட்டியங்களை முடித்துக் கொள்ளவில்லை. முஸ்லிம்கள் தங்களிடமிருந்து
தப்பித்து மதீனாவில் நிம்மதியான, பாதுகாப்பான இருப்பிடத்தை அமைத்துக்
கொண்டார்களே என்ற கோபத்தால் கொதித்தெழுந்தார்கள். எப்படியாவது முஸ்லிம்களை
மதீனாவிலிருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார்கள். இதற்காக
அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூலுக்குக் கடிதம் எழுதினார்கள். அவன்
அந்நேரத்தில் இணைவைப்பவனாக இருந்தான். அவனுடன் மக்காவாசிகள் தொடர்பு
கொண்டதன் காரணம் என்னவெனில், நபி (ஸல்) மதீனா வருவதற்கு முன் அவன்தான்
மதீனாவாசிகளின் தலைவனாக இருந்தான். மதீனாவாசிகள் அவனையே தங்களது அரசனாக
ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வராமல்
இருந்திருந்தால் அவனே அவர்களின் அரசனாகியிருப்பான். இதனால் அவனுக்கு நபி (ஸல்)
அவர்கள் மீதுள்ள கோபத்தை அறிந்த மக்காவாசிகள், அப்துல்லாஹ் இப்னு உபைக்கும்
அவனுடன் இருந்த இணைவைப்போருக்கும் கடிதம் எழுதினர். அதில் அவர்கள்
கூறியதாவது:
'நீங்கள் எங்கள் ஊரைச் சார்ந்தவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளீர்கள். இது
அல்லாஹ்வின் மீது சத்தியம்! நிச்சயமாக நீங்கள் அவரிடம் போர் செய்ய வேண்டும்
அல்லது அவரை வெளியாக்கி விட வேண்டும். அல்லது நாங்கள் (மக்காவாசிகள்)
அனைவரும் ஒன்று சேர்ந்து உங்கள் மீது போர் தொடுத்து உங்களின் போர் வீரர்களைக்
Pயபந 196 ழக 518
கொன்று குவித்து, உங்கள் பெண்களின் கற்புகளைச் சூறையாடுவோம்"- இவ்வாறு
அக்கடிதத்தில் கூறியிருந்தனர். (ஸ{னன் அப+தாவூது)
ஏற்கனவே, நபி (ஸல்) தனது ஆட்சியைப் பறித்துக் கொண்டார் என்று அப்துல்லாஹ்
இப்னு உபை எண்ணி வந்ததால், நபியவர்களின் மீது கடுமையான வகையில் பகைமை
கொண்டிருந்தான். எனவே, மக்கா முஷ்ரிக்குகள் கூறிய வார்த்தையை உடனடியாகச்
செயல்படுத்தினான். இது சம்பந்தமாக அப்துர் ரஹ்மான் இப்னு கஅப் (ரழி) கூறுகிறார்கள்:
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 19, 2011 10:54 pm

குறைஷிகளின் செய்தி அப்துல்லாஹ் இப்னு உபைம்க்கும், அவனுடன் இருந்த சிலை
வணங்கிகளுக்கும் கிடைத்த போது அவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களிடம் போர்
செய்வதற்கு ஆயத்தமானார்கள். அவர்கள் ஆயத்தமாகும் இந்தச் செய்தி நபி (ஸல்)
அவர்களுக்குக் கிடைத்தவுடன் அவர்களை சந்திக்கப் போனார்கள். அப்போது
அவர்களிடம், 'குறைஷிகள் உங்களை எச்சரித்ததால் நீங்கள் மிக பயந்துவிட்டீர்களோ!
அவர்கள் உங்களுக்கு செய்யும் சூழ்ச்சியை விட நீங்கள் உங்களுக்குச் செய்யும்
சூழ்ச்சிதான் மிக மோசமானது. என்ன! அவர்களின் சொல்லுக்கிணங்க உங்களது
பிள்ளைகளிடமும், சகோதரர்களிடமும் நீங்கள் போர் புரிய எண்ணுகிறீர்களா?" என்று
சிந்தனையைத் தூண்டும் விதத்தில் நபி (ஸல்) கேட்டதும், கூடி இருந்தவர்கள் மறுப்பின்றி
பிரிந்து சென்றனர். (ஸஹீஹ{ல் புகாரி)
அந்நேரத்தில் தனது தோழர்களிடம் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்து போர் செய்வதிலிருந்து
இப்னு உபை விலகிக் கொண்டாலும், சமயமேற்படும் போதெல்லாம் குறைஷிகளுடன்
சேர்ந்து கொள்வான். அத்துடன் தனது உதவிக்காக யூதர்களையும் சேர்த்துக் கொள்வான்.
ஆனால், அல்லாஹ்வின் அருளால் அவர்களது வஞ்சகத் தீ மூழும்போதெல்லாம் நபி
(ஸல்) அவர்களின் ஞானமிக்க நடவடிக்கை அதை அணைத்துக் கொண்டே இருந்தது.
அப+ஜஹ்லின் அச்சுறுத்தல்
இந்நிகழ்ச்சிக்குப் பின்பு ஸஅது இப்னு முஆத் (ரழி) உம்ரா செய்வதற்காக மக்கா சென்று
உமய்யா இப்னு கலஃபிடம் தங்கினார்கள். உமய்யாவிடம் 'நான் கஅபாவை வலம்
வருவதற்காக மக்கள் யாருமில்லாத நேரமாகப் பார்த்து அழைத்துச் செல்" என்று
கூறினார்கள். உமய்யா மதிய நேரத்திற்குச் சற்று முன் அவர்களை அழைத்துக் கொண்டு
கஅபாவிற்குச் சென்றான்.
அந்த இருவரையும் வழியில் அப+ஜஹ்ல் சந்தித்தான். அவன் உமய்யாவிடம் 'அப+
ஸஃப்வானே!" உன்னுடன் இருப்பவர் யார்?" என்று கேட்டான். அதற்கு உமய்யா 'இவர்
ஸஅது" என்றான். அப்போது அப+ஜஹ்ல் ஸஅதிடம் 'நீ மக்காவில் நிம்மதியாக தவாஃப்
செய்ய வந்துவிட்டாயா? மதீனாவாசிகளாகிய நீங்கள் மதம் மாறியவர்களுக்கு அடைக்கலம்
கொடுத்திருக்கின்றீர்கள். அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு உதவியும் ஒத்துழைப்பும்
செய்வோம் என்றும் கூறுகின்றீர்களா? அறிந்து கொள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ
அப+ ஸஃப்வானுடன் வந்திருக்கவில்லை என்றால் உனது குடும்பத்திற்கு நீ பாதுகாப்புடன்
திரும்ப முடியாது" என்று கூறினான். இதைக் கேட்ட ஸஅது, அவனது சப்தத்தை விட
தனது சப்தத்தை உயர்த்தி 'நீ அறிந்துகொள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ தவாஃப்
செய்வதிலிருந்து என்னைத் தடுத்தால், இதை விட உமக்கு மிகக் கடினமாக இருக்கும்
ஒன்றை நான் தடுத்து நிறுத்துவேன். நீ வியாபாரத்திற்காக மதீனாவின் வழியை பயன்படுத்த
விடமாட்டேன்" என்று எச்சரித்தார். (ஸஹீஹ{ல் புகாரி)
குறைஷிகளின் மிரட்டல்
உண்மையில், குறைஷிகள் இதைவிட மிகப் பெரிய தீமை ஒன்றைச் செய்ய வேண்டுமென்ற
உறுதியில் இருந்தனர். அதாவது, அனைத்து முஸ்லிம்களையும் குறிப்பாக நபி (ஸல்)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 19, 2011 10:54 pm

அவர்களையும் ஒழித்துக்கட்ட வேண்டுமென்று தீவிரமாக ஆலோசித்தனர். இது வெறும்
கற்பனையோ அல்லது யூகமோ அல்ல! குறைஷிகளின் இந்த வஞ்சக சூழ்ச்சியினால் நபி
(ஸல்) அவர்கள் இரவில் தூக்கமில்லாமல் இருந்தார்கள் அல்லது தங்களின் தோழர்களின்
பாதுகாப்பில் இரவைக் கழித்தார்கள்.
இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது: நபி (ஸல்) மதீனாவுக்கு வந்த காலத்தில் ஓரிரவு
விழித்திருந்தார்கள். அப்போது 'எனது தோழர்களில் நல்லவர் ஒருவர் இன்று இரவு
என்னை பாதுகாக்க வேண்டுமே" என்றார்கள். அங்கு ஆயுதத்தின் சப்தத்தை நாங்கள்
கேட்டோம். நபி (ஸல்) அவர்கள் 'அது யார்?" என்று கேட்கவே, வந்தவர் 'நான்தான்
ஸஅது இப்னு அபீவக்காஸ்" என்றார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் 'நீர் ஏன் வந்தீர்?"
என்று வினவினார்கள். அதற்கவர் 'நபி (ஸல்) அவர்களுக்கு ஏதும் ஆபத்து நிகழ்ந்து
விடுமோ என்ற அச்சத்தால் அவர்களைப் பாதுகாக்க வந்திருக்கிறேன்" என்றார். அதன்
பிறகு, நபி (ஸல்) அவர்கள் ஸஅதுக்காக துஆ (பிரார்த்தனைச்) செய்து விட்டு
தூங்கினார்கள். (ஸஹீஹ{ல் புகாரி)
தோழர்கள் நபி (ஸல்) அவர்களைப் இவ்வாறு பாதுகாத்தது சில இரவுகளில் மட்டுமல்ல
மாறாக, மதீனா வந்ததிலிருந்து தொடர்ந்து நபித்தோழர்களில் யாராவது ஒருவர் இரவில்
கண் விழித்து நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தார்.
இதைப் பற்றி ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள்: இரவில் நபி (ஸல்) அவர்களின்
தோழர்களில் யாராவது ஒருவர் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாப்பார்.
(நம்முடைய) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதை (எந்த
குறைவுமின்றி மக்களுக்கு) அறிவித்து விடுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யா விட்டால்
அவனுடையத் தூதை நீங்கள் நிறைவேற்றியவராக மாட்டீர்கள். (இதில் எவருக்கும்
அஞ்சாதீர்கள்!) மனிதர்(களின் தீங்கு)களில் இருந்து அல்லாஹ் உங்களைக் காப்பாற்றுவான்.
நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்.
(அல்குர்ஆன் 5:67)
என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கியவுடன் நபி (ஸல்) தாங்கள் தங்கியிருந்த
கூடாரத்திலிருந்து தலையை வெளியே நீட்டி 'மக்களே! என்னிடமிருந்து திரும்பிச்
செல்லுங்கள்! அல்லாஹ் என்னை நிச்சயமாகப் பாதுகாத்து விட்டான்" என்று கூறினார்கள்.
(ஸ{னனுத் திர்மிதி)
ஆபத்து நபி (ஸல்) அவர்களின் உயிருக்கு மட்டுமல்ல அனைத்து முஸ்லிம்களுக்கும்
இருந்தது. இதைப் பற்றி உபை இப்னு கஅப் (ரழி) கூறுகிறார்கள்:
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 19, 2011 10:55 pm

நபி (ஸல்) அவர்களும் முஹாஜிர் தோழர்களும் மதீனாவில் அன்சாரிகளின் ஆதரவைப்
பெற்றுக் கொண்டதைச் சகித்துக்கொள்ள முடியாமல் குறைஷிகளும், மற்ற அரபுகளும்
ஒன்று சேர்ந்து அவர்களை எதிர்த்தனர். இதன் காரணமாக நபித்தோழர்கள் இரவு தூங்கும்
போதும் காலையில் விழிக்கும் போதும் தற்காப்புக்காக ஆயுதங்களைத் தங்களுடன்
வைத்திருந்தனர்.
போர் புரிய அனுமதி
முஸ்லிம்கள் மதீனாவில் கடுமையான ஆபத்துகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை
ஏற்பட்டது. மேலும், குறைஷிகள் தங்களின் வழிகேட்டிலிருந்து விலகிக் கொள்ளாமல்
வம்புத்தனத்தையும், அழிச்சாட்டியத்தையும் தொடர்ந்து கொண்டே சென்றனர். இதன்
காரணமாக அல்லாஹ் முஸ்லிம்களுக்கு நிராகரிப்பவர்களை எதிர்த்துப் போர் புரியலாம்
என்று அனுமதி வழங்கினான். ஆனால், போரைக் கடமையாக்கவில்லை. நிராகரிப்பவர்கள்
சண்டையிட்டால், அவர்களை எதிர்த்து போர் புரிய மட்டும் அனுமதிக்கப்பட்டது.
Pயபந 198 ழக 518
(நிராகரிப்பவர்களால்) அநியாயத்தில் சிக்கி, போருக்கு நிர்பந்திக்கப்பட்ட (நம்பிக்கை
கொண்ட)வர்களுக்கு அவர்களை எதிர்த்து போர் புரிய அனுமதி அளிக்கப்பட்டு விட்டது.
நிச்சயமாக அல்லாஹ் இவர்களுக்கு உதவி செய்ய பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 22:39)
மேலும், இவ்வாறு அறப்போர் செய்வது அனுமதிக்கப்பட்டதற்குரிய காரணத்தையும்
அடுத்துள்ள வசனங்களில் அல்லாஹ் விவரித்தான். அதாவது, அசத்தியத்தை அழித்து
அல்லாஹ்வின் கட்டளைகளை நிலை நிறுத்துவதற்காகத்தான் போர் செய்வது
அனுமதிக்கப்பட்டது.
அவர்கள் எத்தகையவரென்றால், நாம் அவர்களுக்குப் ப+மியில் ஆட்சியைக் கொடுத்தால்
தொழுகையைக் கடைப்பிடித்துத் தொழுவார்கள் ஜகாத்தும் கொடுப்பார்கள்
நன்மையானவற்றை ஏவி, பாவமானவற்றைத் தடை செய்வார்கள். எல்லா காரியங்களின்
முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (அல்குர்ஆன் 22:41)
இந்த அனுமதி குறைஷிகளிடம் போர் செய்வதற்கு மட்டும் வழங்கப்பட்டது. ஆனால்,
அதற்குப் பின்பு தேவைக்கேற்ப போருக்கான சட்டம் மாற்றப்பட்டு, பொதுவாக போர்
செய்வது கட்டாயமாக்கப்பட்டது. குறைஷிகளுடனும் இனணவைக்கும் மற்றவர்களுடனும்
போர் செய்வதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இக்கட்டளைக்குப் பிறகு ஏற்பட்ட
போர்களில் நடந்த சம்பவங்களைக் கூறுவதற்கு முன் இப்போர்கள் ஏன்
கடமையாக்கப்பட்டன என்பதற்கான காரணங்களை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.
1) முதல் காரணம்: இணைவைக்கும் குறைஷிகளை எதிரிகளாகக் கருதியது. ஏனெனில்,
அவர்கள்தான் முஸ்லிம்களிடம் முதன் முதலாக பகைமையைத் தொடங்கினர். எனவே,
முஸ்லிம்கள் குறைஷிகளை எதிர்த்து போர் செய்வது மட்டுமில்லாமல் குறைஷிகளின்
சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று எண்ணுவது நியதியே! ஆனால்,
குறைஷிகளைத் தவிர மற்ற அரபிகள் முஸ்லிம்களுக்கு இடையூறு செய்யாததால்
அவர்களை எதிரிகளாகக் கருத வேண்டியதில்லை. எனவே, அவர்களிடம் போர் செய்ய
வேண்டிய அவசியமுமில்லை.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 19, 2011 10:55 pm

2) இரண்டாவது காரணம்: இணைவைக்கும் அரபிகளில் யார் குறைஷிகளுடன் இணைந்து
முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறார்களோ அவர்களிடமும், வேறு யாராவது
முஸ்லிம்களைப் பகைத்தால் அவர்களிடமும் போர் செய்ய வேண்டும்.
3) மூன்றாவது காரணம்: உடன்படிக்கை செய்து கொண்ட யூதர்களில் எவர்
உடன்படிக்கைக்கு மோசடி செய்கிறாரோ அல்லது முஸ்லிம்களின் எதிரிகளாகிய இணை
வைப்பாளருக்கு ஆதரவு தருகிறாரோ, அத்தகைய யூதர்களின் உடன்படிக்கையை முறித்துக்
கொள்வதுடன் அவர்களிடமும் போர் செய்ய வேண்டும்.
4) நான்காவது காரணம்: வேதம் கொடுக்கப்பட்டவர்களில் யார் முஸ்லிம்களைப்
பகைப்பார்களோ, முஸ்லிம்களிடம் சண்டையிடுவார்களோ அவர்களிடம் போர் செய்ய
வேண்டும். அவர்கள் இழிவுபட்டு வரி செலுத்தும் வரை இந்தப் போர் நீடிக்கும். 'வேதம்
கொடுக்கப்பட்டவர்" என்றால் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைப் போன்று.
5) ஐந்தாவது காரணம்: முஷ்ரிக்கு (இணைவைப்பவர்) அல்லது யூதர் அல்லது கிறிஸ்தவர்
அல்லது எவராக இருப்பினும் அவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய சட்ட
திட்டங்களுக்கு முரண்படாமல் இருக்கும் வரை அவருடைய உயிர், பொருள், மானம்
அனைத்தும் காக்கப்படும். அவருடைய கேள்வி கணக்கு அல்லாஹ்வைச் சார்ந்ததாகும்.
அதாவது, உள்ளரங்கமான அல்லது மறைமுகமான அவரது செயல்களைப் பற்றி அல்லாஹ்
விசாரணை செய்து கொள்வான். அதைக் கண்காணிக்க வேண்டியது நமது கடமையல்ல!
Pயபந 199 ழக 518
(இஸ்லாமிய சட்டங்களுக்கு முரண்படுவது என்றால், எடுத்துக்காட்டாக -கொலை செய்வது,
கொள்ளை அடிப்பது, கிளர்ச்சி செய்வது- போன்ற செயல்களில் ஈடுபடுவது. அப்படி
ஈடுபட்டால், அதற்குரிய தண்டனை உலகிலேயே அவருக்குக் கிடைக்கும்.)
போருக்கான அனுமதி அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைத்தவுடன் குறைஷிகளின்
வியாபார வழித்தடமான மக்காவிலிருந்து ஷாம் செல்லும் முக்கிய வழியைத் தங்களது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்று நபி (ஸல்) விருப்பப்பட்டார்கள். இதற்காக
இரண்டு திட்டங்களை வகுத்தார்கள்.
முதலாவது திட்டம்:-
மக்காவாசிகளின் முக்கிய வியாபார வழித்தடத்திற்கு அருகில் வசிக்கும்
கோத்திரத்தாருடனும், இந்த வியாபார வழித்தடத்திற்கும் மதீனாவிற்குமிடையில் வசிக்கும்
கோத்திரத்தாருடனும் நபி (ஸல்) உடன்படிக்கை செய்து கொள்வது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Sun Apr 24, 2011 6:49 pm

அதாவது, அந்தக் கோத்திரத்தார் முஸ்லிம்களுடன் நட்புறவோடு நடந்து கொள்ள
வேண்டும். அப்படி நட்புறவோடு நடந்து கொள்ளவில்லை என்றாலும் முஸ்லிம்களுடன்
பகைமை காட்டக் கூடாது. இவ்வகையில் போர் சம்பந்தமான ராணுவ நடவடிக்கைகளை
எடுப்பதற்கு முன் ஜுஹைனா கிளையினருடனும் ஓர் உடன்படிக்கையை நபி (ஸல்)
அவர்கள் செய்து கொண்டார்கள். இந்த ஜுஹைனா கிளையினரின் வீடுகள் மதீனாவைச்
சுற்றி மூன்று இடங்களில் இருந்தன. போரின் நடவடிக்கைகளைத் தொடங்கிய பின்
இன்னும் பல கோத்திரத்தாருடனும் உடன்படிக்கைகளைச் செய்து கொண்டார்கள்.
இதனுடைய விவரங்கள் பின்னால் வர உள்ளன.
இரண்டாவது திட்டம்:-
மக்காவாசிகளின் இந்த வியாபாரப் பாதையை நோக்கி ஒன்றுக்குப் பின் ஒன்றாக பல
படைப் பிரிவுகளை அனுப்பி வைப்பது.
(நபி (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போருக்கு அரபியில் ~கஸ்வா| என்றும் அவர்கள்
கலந்து கொள்ளாமல் தோழர்கள் மட்டும் சென்று வந்த போர்களுக்கு ~ஸய்யா| என்றும்
கூறப்படும். நாம் இந்த தமிழாக்கத்தில் கஸ்வாவை ~போர்| என்றும் ஸய்யாவை ~படைப்
பிரிவு| என்றும் குறிப்பிடுகிறோம்.)
இக்காலத்தில் நபியவர்கள் நிகழ்த்திய போர்களும் அனுப்பிய படைப் பிரிவுகளும்
போர் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட பின், மேற்கூறப்பட்ட இரண்டு திட்டங்களையும்
அமல்படுத்துவதற்காக ராணுவ நடவடிக்கைகளை நபி (ஸல்) தொடங்கினார்கள். அதாவது,
இந்த நடவடிக்கைகள் ஒரு கண்காணிப்பு ரோந்துப் பணிகளைப் போன்று அமைந்திருந்தன.
இதனுடைய அடிப்படை நோக்கங்கள் என்னவெனில்:
மதீனாவைச் சுற்றியுள்ள அனைத்து தரை மார்க்கங்களையும், பொது வழிகளையும் நன்கு
அறிந்து கொள்ளுதல் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் அவ்வாறே மக்காவை நோக்கி
செல்லும் அனைத்து வழிகளையும் அறிந்து கொள்ளுதல்.
இந்த வழிகளில் குடியிருக்கும் அனைத்துக் கோத்திரத்தாருடனும் சமாதான ஒப்பந்தம்
செய்துகொள்ளுதல்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Sun Apr 24, 2011 6:49 pm

முஸ்லிம்கள் இப்போது பலமடைந்து விட்டார்கள் வலுபெற்றுவிட்டார்கள் பழைய
இயலாமையிலிருந்து விடுதலையடைந்து விட்டார்கள் என்று மதீனாவில் உள்ள இணை
வைப்பவர்களுக்கும், யூதர்களுக்கும் அதைச் சுற்றியுள்ள கிராம அரபிகளுக்கும்
உணர்த்துதல்.
Pயபந 200 ழக 518
அத்துமீறி நடந்து கொண்டிருந்த குறைஷிகளுக்கு அவர்களின் முடிவு என்னவாகும்
என்பதை எச்சரிக்கை செய்தல். ஏனெனில், இந்த எச்சரிக்கையின் விளைவாக தொடர்ந்து
தீவிரமாக செயல்படுத்தி வரும் தங்களது அழிச்சாட்டியங்களை விட்டு அவர்கள் விலகிக்
கொள்ளலாம். தங்களதுப் பொருளாதார வழிகளும் பொருளாதாரங்களும் வெகு விரைவில்
மிகப் பயங்கரமாக பாதிக்கப்படும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்படலாம். மேலும்,
முஸ்லிம்கள் அவர்களது நாட்டுக்குள் இருக்கும் போது அவர்களுடன் போர் செய்யும்
எண்ணத்தை கைவிடலாம். பிறரை அல்லாஹ்வின் மார்க்கத்திலிருந்து தடுக்காமல்
இருக்கலாம். மேலும், மக்காவிலுள்ள அப்பாவி முஸ்லிம்களை வேதனை செய்வதிலிருந்து
விலகிக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, அரேபிய தீபகற்பத்தில் அல்லாஹ்வின்
மார்க்கத்தைச் சுதந்திரமாக எடுத்து வைக்கும் வாய்ப்பை முஸ்லிம்கள் பெறுவார்கள்.
படைப் பிரிவுகளின் விவரங்களைச் சுருக்கமாகக் காண்போம்:"
1) ~ஸய்ஃபுல் பஹர்|
ஹிஜ்ரி 1, ரமழான் (கி.பி. 623 மார்ச்) மாதம் ஒரு படைப் பிரிவை நபி (ஸல்) அவர்கள்
அனுப்பினார்கள். 30 முஹாஜிர்கள் இந்தப் பிரிவில் இடம்பெற்றனர். அவர்களுக்கு ஹம்ஜா
(ரழி) அவர்களைத் தலைவராக ஆக்கினார்கள். ஷாமிலிருந்து மக்காவை நோக்கி வந்து
கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் குழுவை வழி மறிப்பதற்காக இவர்கள்
சென்றார்கள். இந்த வியாபாரக் கூட்டத்தில் முந்நூறு நபர்களும் அவர்களுக்குத்
தலைமையேற்று அப+ஜஹ்லும் வந்து கொண்டிருந்தான். ~ஈஸ்| என்ற நகரத்தின் ஓரத்தில்
உள்ள ~ஸய்ஃபுல் பஹ்ர்| எனும் இடத்தை இரு கூட்டத்தினரும் அடைந்த போது
சண்டையிடுவதற்காக அணிவகுத்தனர். ஆனால், இரு கூட்டதினருக்கும் நண்பராக இருந்த
மஜ்தி இப்னு அம்ர் அல்ஜுஹனி என்பவர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி போரைத்
தவிர்க்கச் செய்தார்.
இப்போல் நபி (ஸல்) ஹம்ஜாவுக்கு வெள்ளை நிறக் கொடியைக் கொடுத்தார்கள். இதுதான்
நபி (ஸல்) அவர்கள் நிறுவிய முதல் கொடியாகும். இக்கொடியை அப+ மர்ஸத் கன்னாஸ்
இப்னு ஹ{ஸைன் அல்கனவி (ரழி) ஏந்தியிருந்தார்கள்.
2) ~ராபிக்|
ஹிஜ்ரி 1, ஷவ்வால் (கி.பி. 623 ஏப்ரல்) மாதம் நபி (ஸல்) அவர்கள் ~ராபிக்| என்ற
இடத்தை நோக்கி ஒரு படைப் பிரிவை அனுப்பினார்கள். இதற்குத் தலைவராக உபைதா
இப்னுல் ஹாரிஸ் இப்னுல் முத்தலிப் (ரழி) இருந்தார். இப்படையில் 60 முஹாஜிர்கள்
கலந்து கொண்டார்கள். இவர்கள் ~பத்தன் ராபிக்| என்ற இடத்தில் அப+ஸ{ஃப்யானைச்
சந்தித்தார்கள். இரு கூட்டத்தார்களும் ஒருவரை நோக்கி ஒருவர் அம்பெய்து கொண்டனர்.
மற்றபடி, உக்கிரமான சண்டை ஏதும் நடைபெறவில்லை.
காஃபிர்களின் படையிலிருந்த அல்மிக்தாத் இப்னு அம்ர் அல்பஹ்ரானி, உத்பான் இப்னு
கஸ்வான் அல்மாஜினி ஆகிய இருவர் முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டனர். இவர்கள்
முஸ்லிமாகத்தான் இருந்தனர். என்றாலும், ஹிஜ்ராவிற்காக மக்காவிலிருந்து வெளியேற
முடியாத காரணத்தால், காஃபிர்களுடன் சேர்ந்திருந்தனர். எப்பொழுதாவது சந்தர்ப்பம்
கிடைத்தால் தப்பித்து முஸ்லிம்களிடம் சேர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த
வியாபாரக் கூட்டத்துடன் வந்திருந்தனர்.
இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிஸ்தஹ் இப்னு உஸாஸா
இப்னு அல்முத்தலிப் இப்னு அப்து மனாஃப் ஏந்தியிருந்தார்கள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Sun Apr 24, 2011 6:49 pm

ஹிஜ்ரி 1, துல்கஅதா (கி.பி. 623 மே) மாதம் ~கர்ரார்| என்ற இடத்திற்கு ஸஅது இப்னு அபீ
வக்காஸ் (ரழி) தலைமையில் படைப் பிரிவு ஒன்றை நபி (ஸல்) அனுப்பினார்கள்.
குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடைமறிப்பதற்காகப் புறப்பட்ட இவர்களிடம்
~கர்ரார்| என்ற இடத்தை தாண்டிச் செல்லக் கூடாது என நபி (ஸல்) அவர்கள்
வலியுறுத்தினார்கள். இந்தப் படை கால்நடையாகவே சென்றது. பகலில் பதுங்குவதும் இரவில்
நடப்பதுமாக வியாழன் காலை கர்ராரை அடைந்தது. ஆனால், அந்த வியாபாரக் கூட்டமோ
இவர்கள் சென்றடைவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அந்த இடத்தைக் கடந்து சென்று
விட்டிருந்ததால், இவர்கள் சண்டையின்றித் திரும்பினர்.
இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிக்தாத் இப்னு அம்ர் (ரழி)
ஏந்தியிருந்தார்கள்.
4) ~அப்வா| (அ) ~வத்தான்|
ஹிஜ் 2, ஸஃபர் (கி.பி. 623 ஆகஸ்டு) மாதம் நபி (ஸல்) அவர்கள் 70 முஹாஜிர்களுடன்
குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடை மறிப்பதற்காக ~அல்அப்வா| அல்லது
~வத்தான்| என்ற இடத்தை நோக்கிச் சென்றார்கள். ஆனால், சண்டை ஏதும்
நடைபெறவில்லை. இந்தப் போருக்குச் செல்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் ஸஅது
இப்னு உபாதாவை மதீனாவில் தனக்குக் கலீஃபாவாக (பிரதிநிதியாக) ஆக்கினார்கள். இந்த
போரின் போது ~ழம்ரா| கிளையினரின் தலைவரான அம்ர் இப்னு மக்ஷி என்பவருடன்
நட்பு உடன்படிக்கை செய்தார்கள். அந்த உடன்படிக்கையில் எழுதப்பட்டதாவது:
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Sun Apr 24, 2011 6:49 pm

'இது அல்லாஹ்வின் தூதராகிய முஹம்மது ~ழம்ரா| கிளையினருடன் செய்யும் ஒப்பந்தம்.
ழம்ரா கிளையினர் தங்களது உயிர், பொருள் அனைத்திலும் பாதுகாப்புப் பெற்றவர்களே!
அவர்களிடம் சண்டை செய்பவர்களை நாங்களும் எதிர்ப்போம். சண்டை செய்பவர்களுக்கு
எதிராக அவர்களுக்கு உதவி செய்வோம். இவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக
போரில் ஈடுபடக் கூடாது. அவ்வாறே நபி (ஸல்) உதவிக்காக அழைத்தால் அவர்களும்
உதவ வரவேண்டும். கடல் வற்றினாலும் இந்த உடன்படிக்கை நிலைத்திருக்கும்."
இதுதான் நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட முதல் போராகும். நபி (ஸல்) அவர்கள்
இந்தப் பயணத்தில் பதினைந்து நாட்கள் மதீனாவிற்கு வெளியில் இருந்தார்கள். இந்தப்
போரிலும் வெள்ளைக் கொடியே பயன்படுத்தப்பட்டது. அதை ஹம்ஜா இப்னு அப்துல்
முத்தலிப் (ரழி) ஏந்தியிருந்தார்.
5) ~ப+வாத்'
ஹிஜ் 2, ரபீவுல் அவ்வல் (கி.பி. 623 செப்டம்பர்) மாதம் நபி (ஸல்) தங்களது 200
தோழர்களுடன் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை வழிமறிப்பதற்காகச் சென்றார்கள்.
இந்த வியாபாரக் கூட்டத்தில் உமய்யா இப்னு கலஃபும் நூறு குறைஷிகளும் இருந்தனர்.
இவர்களுடன் 2500 ஒட்டகங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் ~ரழ்வா| என்ற
மலைக்கருகில் உள்ள ~ப+வாத்| என்ற இடம் வரை சென்றார்கள். ஆனால், வியாபாரக்
கூட்டம் அந்த இடத்தை முன்கூட்டியே கடந்து விட்டதால் சண்டை ஏதும்
நடைபெறவில்லை.
இந்தப் போருக்கு நபி (ஸல்) செல்லும் போது மதீனாவில் ஸஅது இப்னு முஆதை
பிரதிநிதியாக நியமித்தார்கள். இப்போரிலும் வெள்ளை நிறக் கொடியே பயன்படுத்தப்பட்டது.
அதை ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.
Pயபந 202 ழக 518
6) ~ஸஃப்வான்'
ஹிஜ் 2, ரபீவுல் அவ்வல் (கி.பி. 623 செப்டம்பர்) மாதம் ~குருஸ் இப்னு ஜாபிர் அல்ஃபஹ்|
என்பவன் சில முஷ்ரிக் வீரர்களுடன் மதீனாவின் மேய்ச்சல் நிலங்கள் மீது தாக்குதல்
நடத்தி அங்கிருந்த கால்நடைகளில் சிலவற்றைக் கொள்ளையடித்துச் சென்றான். இதை
அறிந்த நபி (ஸல்) அவர்கள் தங்களின் எழுபது தோழர்களை அழைத்துக் கொண்டு
அவனை விரட்டிப் பிடிப்பதற்காக விரைந்தார்கள். பத்ருக்கு அருகிலுள்ள ~ஸஃப்வான்|
என்ற இடம் வரை சென்றும் குருஸையும் அவனது ஆட்களையும் பிடிக்க முடியாததால்
சண்டையின்றி திரும்பினார்கள். இந்தப் போருக்கு ~முதல் பத்ர் போர்| என்றும் பெயர்
கூறப்படுகிறது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Sun Apr 24, 2011 6:50 pm

இந்தப் போருக்கு நபி (ஸல்) செல்லும் போது மதீனாவில் தனது பிரதிநிதியாக ஜைது இப்னு
ஹாஸாவை நியமித்தார்கள். இப்போரிலும் வெள்ளை நிறக் கொடியே பயன்படுத்தப்பட்டது.
அதை அலீ இப்னு அப+தாலிப் (ரழி) ஏந்தியிருந்தார்.
7) ~துல் உஷைரா'
ஹிஜ் 2, ஜுமாதா அல்ஊலா அல்லது ஜுமாதா அல் ஆகிரா (கி.பி. 623 நவம்பர் அல்லது
டிசம்பர்) மாதம் நபி (ஸல்) அவர்கள் தமது 150 அல்லது 200 முஹாஜிர் தோழர்களுடன்
இந்தப் போருக்காக புறப்பட்டர்கள். இப்போரில் கலந்து கொள்ளும்படி எவரையும்
நிர்பந்திக்கவில்லை. இந்த 150 (அல்லது) 200 தோழர்களும் 30 ஒட்டகங்களில் ஒருவர் மாறி
ஒருவராக பயணித்தனர். மக்காவிலிருந்து வியாபாரச் சாமான்களுடன் ஷாம் நோக்கி சென்று
கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தினரை வழிமறிப்பதே நபி (ஸல்)
அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால், நபி (ஸல்) அவர்கள் ~துல் உஷைரா| என்ற
இடத்தை அடைவதற்குப் பல நாட்களுக்கு முன்னதாகவே அக்கூட்டம் அந்த இடத்தைக்
கடந்து விட்டது தெரியவந்தது. இதே வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து திரும்ப
வரும்போது அதை வழிமறிப்பதற்காகச் செல்லும் போதுதான் பிரபலமான இரண்டாவது பத்ர்
போர் (பத்ர் அல் குப்ரா) நடைபெற்றது.
நபி (ஸல்) ஜுமாதா அல்ஊலா கடைசியில் இப்போருக்காக வெளியேறி ஜுமாதா
அல்ஆகிரா தொடக்கத்தில் மதீனாவிற்குத் திரும்பி வந்தார்கள்.
முஸ்லிம்கள் மீது அத்துமீறக் கூடாது என முத்லிஜ், ழம்ரா மற்றும் அவர்களுடைய நட்பு
கிளையினருடன் இப்பயணத்தில் நபி (ஸல்) ஒப்பந்தம் செய்தார்கள்.
இப்போருக்கு நபி (ஸல்) சென்ற போது மதீனாவில் அப+ஸலமா இப்னு அப்துல் அஸத்
அல்மக்ஜூமி (ரழி) என்பவரைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். இப்போரிலும் வெள்ளை
நிறக் கொடியே பயன்படுத்தப்பட்டது. இதை ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி)
ஏந்தியிருந்தார்கள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Sun Apr 24, 2011 6:50 pm

8) ~நக்லா'
ஹிஜ் 2, ரஜப் (கி.பி. 624 ஜனவ) மாதம் நபி (ஸல்) 12 முஹாஜிர்களுடன் அப்துல்லாஹ்
இப்னு ஜஹ்ஷ் அல்அஸதி (ரழி) அவர்களை ~நக்லா| என்ற இடத்திற்கு அனுப்பி
வைத்தார்கள். இருவருக்கு ஓர் ஒட்டகம் வீதமாக இவர்கள் ஒருவர் மாறி ஒருவர் பயணம்
செய்தனர்.
நபி (ஸல்) ஒரு கடிதத்தை எழுதி இரண்டு நாட்கள் கழிந்த பின்தான் கடிதத்தைப் படித்துப்
பார்க்க வேண்டும் என்று கூறி, அதை அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷிடம் கொடுத்தார்கள்.
அப்துல்லாஹ் (ரழி) அப்படையை அழைத்துக் கொண்டு மதீனாவிலிருந்து புறப்பட்டு
இரண்டு நாட்கள் கழித்து, கடிதத்தைப் படித்துப் பார்த்தார்கள்.
Pயபந 203 ழக 518
அக்கடிதத்தில் 'நீர் எனது இந்தக் கடிதத்தைப் படித்த பிறகு, மக்கா மற்றும் தாம்ஃபிற்கு
மத்தியிலுள்ள ~நக்லா| என்ற இடத்தை அடையும் வரை தொடர்ந்து செல்லுங்கள். அந்த
இடத்தை அடைந்து விட்டால் அங்குத் தங்கி குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை
எதிர்பார்த்திருங்கள், அவர்களின் வருகையை அறிந்து எனக்கு செய்தி அனுப்புங்கள்"
என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் படித்த அப்துல்லாஹ் (ரழி) 'செவிமடுத்தோம்
வழிப்பட்டோம்!" என்று கூறியவராக, இச்செய்தியை தங்கள் தோழர்களுக்கு
அறிவித்தார்கள்.
'நான் உங்களை நிர்பந்திக்கவில்லை. யார் வீரமரணம் அடைய விரும்புகிறாரோ அவர்
என்னுடன் வரலாம். யார் மரணிப்பதை வெறுக்கிறாரோ அவர் திரும்பிவிடலாம். ஆனால்,
நான் போர் செய்யத் தயாராக இருக்கிறேன்" என்று அப்துல்லாஹ் (ரழி) தங்கள்
தோழர்களிடம் கூறினார். அவர்களது தோழர்கள் 'போருக்கு நாங்களும் தயாராக
இருக்கிறோம்" என்று கூறினார்கள். இவ்வாறு இவர்கள் தங்களதுப் பயணத்தைத் தொடர்ந்து
கொண்டிருந்த போது வழியில் ஸஅது இப்னு அபீவக்காஸ{ம், உத்பா இப்னு கஸ்வானும்
தாங்கள் வாகனித்த ஒட்டகத்தைத் தவற விட்டதால், அதைத் தேடுவதில் ஈடுபட்டு
படையிலிருந்து பின்னடைந்து விட்டனர்.
அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) படையுடன் ~நக்லா| என்ற அந்த இடத்தை
வந்தடைந்தார்கள். அங்குக் குறைஷிகளில் அம்ர் இப்னு ஹழ்ரமீ, உஸ்மான் இப்னு
அப்துல்லாஹ் இப்னு முகீரா, நவ்ஃபல் இப்னு அப்துல்லாஹ் இப்னு முகீரா மற்றும் முகீரா
கிளையினரின் அடிமையான ஹகம் இப்னு கைஸான் ஆகியோருடன் வியாபாரக் குழு
ஒன்று உலர்ந்த திராட்சை, பதனிடப்பட்ட தோல் மற்றும் வியாபாரப் பொருட்களுடன்
சென்று கொண்டிருந்தது. அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் தங்களது தோழர்களுடன்
ஆலோசனை செய்தார்கள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Sun Apr 24, 2011 6:51 pm

'நாம் சங்கைமிக்க மாதமாகிய ரஜப் மாதத்தின் கடைசித்
தேதியில் இருக்கிறோம். இப்போது அவர்களுடன் நாம் சண்டையிட்டால் சங்கைமிக்க
மாதத்தின் கண்ணியத்தைப் பாழ்படுத்தியவர்களாகி விடுவோம். ஆனால், போர் செய்யாமல்
இன்றிரவு விட்டுவிட்டால் இவர்கள் ஹரம் பகுதிக்குள் நுழைந்து விடுவார்கள்" - இவ்வாறு
விவாதம் நடைபெற்ற பின்பு, அவர்களிடம் சண்டையிடலாம் என்று முடிவானது. அதன்
பிறகு முஸ்லிம்களில் ஒருவர் அம்ர் இப்னு ஹழ்ரமியை அம்பெய்துக் கொன்றார்.
அடுத்து, முஸ்லிம்கள் உஸ்மான் மற்றும் ஹகம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
ஆனால் நவ்ஃபல் தப்பித்துவிட்டார். பின்பு இரண்டு கைதிகள், வியாபாரப் பொருட்கள்
அனைத்தையும் எடுத்துக்கொண்டு மதீனா வந்தனர். இந்த கனீமாவில்" அல்லாஹ்விற்கும்
அவனது தூதருக்கும் ஐந்தில் ஒரு பங்கை ஒதுக்கினார்கள். இதுதான் இஸ்லாமில்
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் ஒதுக்கப்பட்ட முதல் கனீமா பங்காகும்.
இப்போரில்தான் முதன் முதலில் ஒரு எதிரி கொலை செய்யப்பட்டான். மேலும்,
இப்போரில்தான் முதன் முதலாக எதிரிகள் கைது செய்யப்பட்டனர்.
நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக வெறுத்தார்கள்.
மேலும், 'சங்கைமிக்க மாதத்தில் போர் செய்ய நான் உங்களுக்குக்
கட்டளையிடவில்லையே!" என்று கண்டித்து விட்டு கைதிகள் மற்றும் வியாபாரப்
பொருட்கள் விஷயத்தில் மௌனம் காத்தார்கள்.
இந்நிகழ்ச்சியை முஸ்லிம்கள் மீது பழிசுமத்த நல்லதொரு சந்தர்ப்பமாக இணைவைப்போர்
பயன்படுத்தினர்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Sun Apr 24, 2011 6:51 pm

முஸ்லிம்கள் மீது பலவாறு பழி சுமத்தினாலும் அந்த அனைத்துப்
பழிகளையும் பொய்யான கூற்றுகளையும் முற்றிலும் தகர்த்தெறியும்படி ஒரு வசனத்தை
அல்லாஹ் குர்ஆனில் இறக்கினான். அந்த வசனத்தில் முஸ்லிம்கள் செய்ததை விட
இணைவைப்போரின் செயல் மிகப்பெரிய மன்னிக்க முடியாத குற்றம் என்று
தெளிவுபடுத்தினான்.
Pயபந 204 ழக 518
(நபியே! துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இச்)சிறப்புற்ற மாதங்களில் போர்
செய்வதைப் பற்றி உங்களிடம் அ(ந்நிராகரிப்ப)வர்கள் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள்
கூறுங்கள்: 'அவற்றில் போர் புரிவது பெரும் பாவம்(தான்.) ஆனால், (மனிதர்கள்)
அல்லாஹ்வுடைய மார்க்கத்(தில் சேருவ)தை (நீங்கள்) தடுப்பதும், அல்லாஹ்வை (நீங்கள்)
நிராகரிப்பதும், (ஹஜ்ஜுக்கு வருபவர்களை) மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரவிடாது தடுப்பதும்,
அதில் வசிப்போரி(ல் நம்பிக்கை கொண்டோ)ரை அதிலிருந்து வெளியேற்றுவதும்
அல்லாஹ்விடத்தில், (அதை விட) மிகப் பெரும் பாவங்களாக இருக்கின்றன. தவிர
(நம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் செய்துவரும்) விஷமம் கொலையை விட மிகக் கொடியது.
(அல்குர்ஆன் 2:217)
அதாவது, முஸ்லிம்கள் விஷயத்தில் இணைவைப்போர் ஏற்படுத்திய இந்தக் குழப்பங்களும்
கூச்சல்களும் அடிப்படையற்றவை. ஏனெனில், முஸ்லிம்கள் விஷயத்தில் இவ்வாறு
கூறுவதற்கு அந்த இணைவைப்போருக்குத் தகுதியே கிடையாது. இஸ்லாமை எதிர்ப்பதற்கும்
முஸ்லிம்கள் மீது அநியாயமிழைப்பதற்கும் இந்த இணைவைப்போர் எவ்விதத்திலும்
தயக்கம் காட்டவில்லை. முஸ்லிம்கள் சங்கைமிக்க மக்காவில் தங்கியிருந்த போது
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Sun Apr 24, 2011 6:52 pm

அவர்களது பொருட்கள் அபகரிக்கப் பட்டன. நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்ய
வெறியுடன் அலைந்தனர். இன்னும் புனிதமிக்க எத்தனையோ கடமைகளையும்
உரிமைகளையும் பாழாக்கிய இவர்களுக்கு புனிதத்தைப் பற்றி பேசுவதற்கு என்ன அருகதை
இருக்கிறது? புனிதங்களையே மதிக்காத இவர்களுக்கு இப்பொழுது மட்டும் புனிதத்தைப்
பற்றி பேசுவதற்கு தகுதி எங்கிருந்து வந்தது? எனவே, முஸ்லிம்கள் இந்தப் புனிதத்தைப்
பாழாக்கியது எந்த வகையிலும் அசிங்கமோ குற்றமோ இல்லை. ஆகவே,
இணைவைப்பவர்கள் பரப்பிய இந்த வதந்திகள் முற்றிலும் கேவலமான ஒன்றே!
இவ்வசனம் இறக்கப்பட்டதற்குப் பின்பு நபி (ஸல்) அவர்கள் இரண்டு கைதிகளையும்
விடுவித்தார்கள். மேலும், கொலை செய்யப்பட்டோன் குடும்பத்தினருக்கு நஷ்டஈடும்
வழங்கினர்கள். (ஜாதுல் மஆது)
மேற்கூறப்பட்ட (கஸ்வா, ஸய்யா) போர்கள் அனைத்தும் பத்ர் போருக்கு முன்
நிகழ்ந்தவையாகும். இறுதியில் கூறப்பட்ட போரைத் தவிர வேறெதிலும் பொருட்கள்
சூறையாடப்படவுமில்லை உயிர்கள் கொலை செய்யப்படவுமில்லை. ஆனால், குருஸ் இப்னு
ஜாபிர் அல்ஃபஹ்யீன் தலைமையின் கீழ் இணைவைப்பவர்கள் முஸ்லிம்களின்
பொருட்களை கொள்ளையடித்த பின்பே முஸ்லிம்கள் பதில் நடவடிக்கை எடுத்தனர்.
அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) அவர்கள் படையின் மூலம் நிகழ்ந்த சம்பவத்தைப்
பார்த்த மக்கா முஷ்ரிக்குகள் பயந்து நடுங்கினர். மிகப்பெரிய ஆபத்து தங்களுக்கு முன்
உருவாகி விட்டதை உணர்ந்தனர். முஸ்லிம்கள் மதீனாவில் அடைக்கலம் புகுந்துவிட்டால்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Sun Apr 24, 2011 6:52 pm

எத்தகைய ஆபத்து நிகழும் என்று பயந்தனரோ அந்த ஆபத்தில் இப்போது சிக்கிக்
கொண்டனர். மதீனாவாசிகள் மிகுந்த விழிப்புடனும் கண்காணிப்புடனும் இருக்கிறார்கள்
தங்களின் வணிகப் பயணங்கள் ஒவ்வொன்றையும் முழுமையாகக் கண்காணிக்கின்றனர்
முஸ்லிம்கள் 300 மைல்கள் கூட படையெடுத்து வந்து தங்களைக் கொலை செய்யவோ,
சிறைபிடிக்கவோ, தங்களின் செல்வங்களை அள்ளிக்கொண்டு நிம்மதியாக திரும்பவோ
முழு ஆற்றல் பெற்றுவிட்டனர் என்பதை இப்போது இந்த இணைவைப்பவர்கள் நன்கு
விளங்கிக் கொண்டனர்.
மேலும், தங்களின் ஷாம் தேசத்தை நோக்கிய வியாபார வழித்தடம் மிகுந்த
ஆபத்திற்குள்ளாகி இருப்பதையும் நன்கு உணர்ந்து கொண்டனர். இருந்தும் தங்களின்
வழிகேட்டிலிருந்து விலகி ஜுஹைனா மற்றும் ழம்ரா கிளையினர் செய்ததைப் போன்று
சமாதான வழியைக் கையாள் வதற்குப் பதிலாக மீண்டும் முன்பை விட அதிகமாக பகைமை
கொள்ளலானார்கள். இதற்கு முன்னர் முஸ்லிம்களை அவர்களது நாட்டுக்குள் வைத்தே
Pயபந 205 ழக 518
அழித்து விடுவோம் என்று எச்சரிக்கை செய்து கொண்டிருந்ததை இப்போது நிறைவேற்றியே
ஆகவேண்டும் என்று உறுதி ப+ண்டனர். மடத்தனமான இந்த எண்ணம்தான் இவர்களை
பத்ர் போருக்கு அழைத்து வந்தது.
அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) அவர்களின் இந்த சம்பவத்திற்குப் பின்பு ஹிஜ்ரி 2,
ஷஅபான் மாதத்தில் அல்லாஹ் முஸ்லிம்களுக்குப் போர் புரிவதை கடமையாக்கினான்.
இவ்விஷயத்தில் பல தெளிவான வசனங்களை இறக்கினான்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Sun Apr 24, 2011 6:52 pm

உங்களை எதிர்த்துப் போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும்
எதிர்த்துப் போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் (எல்லை) அத்துமீற வேண்டாம்.
ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை.
ஆகவே (உங்களை எதிர்த்துப் போர் புரிய முற்பட்ட) அவர்களை கண்ட இடமெல்லாம்
வெட்டுங்கள். உங்களை (உங்கள் ஊரிலிருந்து) அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும்
அவர்களை வெளியேற்றி விடுங்கள். (அவர்கள் செய்யும்) கலகம் கொலையை விட மிகக்
கொடியது. ஆனால் (அவர்களில்) எவரேனும் அபயம் தேடி மஸ்ஜிதுல் ஹராமில்
இருந்தால், அங்கு அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிய முற்படும் வரையில் நீங்கள்
அவர்களை வெட்டாதீர்கள். (அவ்விடத்திலும்) அவர்கள் உங்களை எதிர்த்துப் போர்
புரிந்தால் நீங்களும் அவர்களை வெட்டுங்கள். அந்த நிராகரிப்பவர்களுக்கு (உரிய) கூலி
இதுவே!
(இதன்) பின்னும் அவர்கள் (உங்களை எதிர்த்துப் போர் புரியாது) விலகிக் கொண்டால்
(நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும்,
நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.
அன்றி, (இஸ்லாமிற்கு எதிராகச் செய்யப்படும்) கலகம் (முற்றிலும்) நீங்கி, அல்லாஹ்வுடைய
மார்க்கம் உறுதியாக நிலைபெறும் வரையில் அவர்களை எதிர்த்துப் போர் புரியுங்கள்.
ஆனால், அவர்கள் (கலகம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுக்கு மன்னிப்பு
உண்டு), அநியாயம் செய்பவர்களைத் தவிர (மற்றவர்கள் மீது) அறவே அத்து மீறக்கூடாது.
(அல்குர்ஆன் 2:190-193)
மேற்கூறப்பட்ட வசனங்களைத் தொடர்ந்து மேலும் பல வசனங்களை இறக்கினான்.
அவ்வசனங்களில் போர் முறைகளைக் கற்றுக் கொடுத்து, போருக்கு ஆர்வமூட்டி அதன்
சட்டங்களை விவரித்தான்.
(நம்பிக்கையாளர்களே! உங்களை எதிர்த்துப் போர் புரியும்) நிராகரிப்பவர்களை நீங்கள்
சந்திப்பீர்களாயின், (தயக்கமின்றி) அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள். அவர்களை
முறியடித்துவிட்டால், (மிஞ்சியவர்களைச் சிறை) பிடித்துக் கட்டுங்கள் அதன் பின்னர்,
அவர்களுக்குப் பதிலாக யாதொரு ஈடு பெற்றேனும் அல்லது (ஈடின்றி அவர்கள் மீது)
கருணையாகவேனும் விட்டுவிடுங்கள்.
இவ்வாறு, (எதிரிகள்) தம் ஆயுதத்தைக் கீழே வைக்கும் வரையில் (போர் செய்யுங்கள்.)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Sun Apr 24, 2011 6:52 pm

இது
அல்லாஹ்(வின் கட்டளை. அவன்) நாடியிருந்தால், (அவர்கள் உங்களுடன் போர் புரிய
வருவதற்கு முன்னதாகவே) அவர்களைப் பழி வாங்கியிருப்பான். ஆயினும், (போரின்
மூலம்) உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்.
ஆகவே, அல்லாஹ்வுடைய பாதையில் எவர்கள் வெட்டப்பட்டு (இறந்து) விடுகின்றார்களோ,
அவர்களுடைய நன்மைகளை அவன் வீணாக்கி விட மாட்டான். (தக்க கூலியையே
கொடுப்பான்.) அவர்களை நேரான பாதையில் செலுத்தி அவர்களுடைய நிலைமையையும்
சீர்படுத்தி விடுவான்.
Pயபந 206 ழக 518
அன்றி, அவன் அவர்களுக்கு அறிவித்திருந்த சுவனபதியிலும் அவர்களைப் புகுத்துவான்.
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால், அவனும் உங்களுக்கு
உதவி புரிந்து உங்களுடைய பாதங்களை உறுதியாக்கிவிடுவான். (அல்குர்ஆன் 47:4-7)
பின்பு, போர் கடமையாக்கப்பட்டதை கேள்விப்பட்டு உள்ளம் நடுங்கியவர்களை மிக
வன்மையாக பழித்து குர்ஆன் வசனங்களை இறக்கினான்:
நம்பிக்கை கொண்டவர்களிலும் சிலர், (போரைப் பற்றி) யாதொரு (தனி அத்தியாயம்
இறக்கப்பட வேண்டாமா? என்று கூறுகின்றனர். அவ்வாறே (தெளிவான) ஒரு திட்டமான
அத்தியாயம் இறக்கப்பட்டு, போர் செய்யுமாறு அதில் கூறப்பட்டிருந்தால், எவர்களுடைய
உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அவர்கள், மரண அவஸ்தையில் சிக்கி மயங்கிக்
கிடப்பவர் பார்ப்பதைப் போல் (நபியே!) உங்களை அவர்கள் நோக்குவார்கள். ஆகவே,
அவர்களுக்குக் கேடுதான். (அல்குர்ஆன் 47:20)
போர் கடமையாக்கப்பட்டதும், அதற்கு ஆர்வமூட்டப்பட்டதும், அதற்குரிய தயாரிப்புகளைச்
செய்ய வேண்டுமென்று கட்டளையிடப்பட்டதும் அக்காலச் சூழ்நிலையின் தேவையாகவும்
கட்டாயமாகவும் இருந்தது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Sun Apr 24, 2011 6:53 pm

சூழ்நிலைகளை நன்கு அலசிப்பார்க்கும் ஆற்றலுள்ள தலைவர்
யாராக இருப்பினும் அக்கால அவசியத்தைக் கருதி திடீர் நிகழ்வுகளை எதிர்கொள்ள
தயாராக இருக்க வேண்டுமென தனது படைகளுக்கு நிச்சயம் கட்டளையிட்டிருப்பார்.
விஷயம் இவ்வாறிருக்க அனைத்தையும் அறிந்தவனும் மிகைத்தவனுமான அல்லாஹ்
இக்கட்டளைகளை முஸ்லிம்களுக்கு பிறப்பிக்காமல் இருப்பானா? அக்கால சூழ்நிலையோ
முற்றிலும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் மத்தியில் கடும் மோதல்களை ஏற்படுத்திக்
கொண்டிருந்தது. அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ{டைய படையின் நிகழ்ச்சி
இணைவைப்போரின் ரோஷத்திற்கும் இன பெருமைக்கும் மிகப் பெரிய அடியாக இருந்தது.
இந்நிகழ்ச்சி இவர்களுக்கு மிகுந்த நோவினை அளித்தது மட்டுமல்லாமல் நெருப்புக்
கங்குகளில் புரள்பவர்களாக இவர்களை ஆக்கி விட்டது.
போர் சம்பந்தமான இறைவசனங்களின் கருத்துக்களை ஆழ்ந்து சிந்திக்கும் போது பெரிய
போர் சமீபத்தில் நடக்கப்போகிறது, அதன் முடிவில் அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும்
முஸ்லிம்களுக்கே கிடைக்கும் என்பதை நன்கு தெரிந்து கொள்ளலாம். பாருங்கள்! எவ்வாறு
முஸ்லிம்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். 'மக்கா இணைவைப்பாளர்கள் உங்களை
உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றியது போன்று நீங்களும் அவர்களை வெளியேற்றி
விடுங்கள்" என்று அல்லாஹ் முஸ்லிம்களுக்குக் கட்டளை பிறப்பித்தான். (பார்க்க
மேற்கூறப்பட்டுள்ள அல்குர்ஆன் 2:191).
மேலும், வெற்றி பெற்ற ராணுவத்தினர் கைதிகளிடம் எந்த முறையில் நடந்துகொள்ள
வேண்டுமென்ற சட்டங்களை மேற்கூறப்பட்ட வசனங்களில் அல்லாஹ் எவ்வாறு
விவரித்திருக்கின்றான் என்பதைப் பாருங்கள். ஆக, இவை அனைத்தும்
முஸ்லிம்களுக்குத்தான் இறுதியில் வெற்றி கிடைக்கும் என்பதைத் தெளிவாகச் சுட்டிக்
காட்டுகின்றன. இருப்பினும் முஸ்லிம்களின் ஒவ்வொரு வீரரும் அல்லாஹ்வின் பாதையில்
தனது வீரத்தை வெளிப்படுத்திக் காட்டவேண்டும் என்பதற்காக இந்த நற்செய்திகளை
அல்லாஹ் (உடனே வெளிப்படுத்தாமல்) சற்று மறைத்தே வைத்தான்.
இந்த நாட்களில்தான் ஹிஜ்ரி 2, ஷஅபான் மாதம் (கி.பி. 624 பிப்ரவயில்) அல்லாஹ்
~பைதுல் முகத்தஸின்| திசையிலிருந்து கஅபாவின் பக்கம் கிப்லாவை மாற்றிக்
கொள்ளுங்கள் என கட்டளையிட்டான். இதன் விளைவு, பிளவுகளை உண்டாக்க
வேண்டுமென்பதற்காக முஸ்லிம்களின் அணியிற்குள் புகுந்து கொண்ட நயவஞ்சகர்களும்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 13 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 26 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19 ... 26  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum