தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Page 19 of 26 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 22 ... 26  Next

Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Fri Feb 04, 2011 2:28 pm

First topic message reminder :

அரபியர்கள் வாழ்ந்த இடங்களும் அரபிய சமுதாயங்களும்
~நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு| என்பது மனித சமுதாயத்திற்காக அவர்கள்
கொண்டு வந்த இறைத்தூதைக் குறிக்கும் சொல்லாகும். தான் கொண்டு வந்த இறைத்தூதை
தங்களின் சொல், செயல், வழிகாட்டல், ஒழுக்க மாண்புகள் ஆகியவற்றின் மூலம் மனித
குலத்திற்கு எடுத்துரைத்தார்கள். அந்த இறைத்தூதுத்துவத்தால் மனித வாழ்வின்
அளவுகோல்களை முற்றிலுமாக மாற்றினார்கள்; தீமைகளைக் களைந்து நன்மைகளை
போதித்தார்கள்; இருளைவிட்டு மக்களை அகற்றி ஒளியை நோக்கி அழைத்து வந்தார்கள்.
படைப்பினங்களை வணங்குவதிலிருந்து மனிதனை முழுமையாக விடுவித்து,
படைப்பாளனாகிய ஒரே இறைவனை வணங்கும்படி செய்தார்கள். சுருங்கக்கூறின்,
இவ்வுலகில் நெறி தவறி வாழ்ந்த மனிதனின் வாழ்க்கைப் பாதையை மாற்றி செம்மையான
அழகிய பாதையில் அவனை வாழச்செய்தார்கள்.
நமது இக்கருத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் முஹம்மது (ஸல்) அவர்கள் தூதராக
அனுப்பப்படுவதற்கு முன் இருந்த நிலைமைகளையும், அவர்கள் தூதராக அனுப்பப்பட்ட
பின் ஏற்பட்ட மாற்றங்களையும் முன் நிறுத்தி பார்ப்பது அவசியம்.
இதனால் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமின் பக்கம் மக்களை அழைப்பதற்கு முன்பிருந்த
அரபிய சமுதாயங்கள், அவர்களது கலாச்சாரங்கள்; மேலும், அக்காலத்தில் இருந்த
சிற்றரசர்கள், பேரரசர்கள், சமுதாய அமைப்புகள், அவர்களது மத நம்பிக்கைகள், சமூக
பழக்க வழக்கங்கள், சடங்குகள் மற்றும் அவர்களது அரசியல், பொருளியல் ஆகியவற்றை
குறித்து சில பிரிவுகளில் சுருக்கமாக ஆய்வு செய்வதும் அவசியம்.
இவற்றுள் ஒவ்வொன்றையும் பற்றி கூறுவதற்கு நாம் தனித்தனி பிரிவுகளை
ஏற்படுத்தியிருக்கின்றோம். இப்போது அந்த பிரிவுகளைப் பார்ப்போம்.
அரபியர்கள் வாழ்ந்த இடங்கள்
~அரப்| என்ற சொல்லுக்கு பாலைவனம், பொட்டல் ப+மி, (மரம், செடி கொடிகள், தண்ணீர்
இல்லாத) வறட்சியான நிலப்பரப்பு எனப் பல அர்த்தங்கள் உள்ளன. நீண்ட காலமாக
அரபிய தீபகற்பத்துக்கும் (இன்றைய ஸவூதி) அங்கு வசிப்பவர்களுக்கும் இப்பெயர்
கூறப்படுகிறது.
அரபிய தீபகற்பத்தின் மேற்கே செங்கடலும் ஸனாஃ நாடும், கிழக்கே அரபிய
வளைகுடாவும் இராக்கின் சில பகுதிகளும், தெற்கே அரபிக் கடலும் (இது இந்தியப்
பெருங்கடல் வரை தொடர்கிறது). வடக்கே ஷாம் (சிரியா) மற்றும் இராக்கின் சில
நகரங்களும் இருக்கின்றன. இதன் பரப்பளவு 10,00,000 சதுர கிலோ மீட்டரிலிருந்து
13,00,000 சதுர கிலோ மீட்டர் வரையிலாகும்.
அரபிய தீபகற்பத்துக்கு புவியியல் ரீதியாகவும் அதன் இயற்கை அமைப்பாலும் மிகுந்த
முக்கியத்துவம் உண்டு. அதன் உட்புற எல்லைகள் நாலா திசைகளிலும் மணற்பாங்கான
பாலைவனத்தால் சூழப்பட்டுள்ளன.
அரபியர் அல்லாத வெளிநாட்டவர்கள் தங்களது ஆதிக்கத்தை அந்நாட்டில் செலுத்துவதற்கு
இப்புவியியல் அமைப்பு பெரும் தடையாக இருந்தது. அதன் காரணமாக அந்நாட்டு மக்கள்
எல்லாக் காலங்களிலும் தங்கள் செயல்பாடுகள் அனைத்திலும் சுதந்திரமானவர்களாகவே
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down


முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:11 pm

சில நாட்களுக்குள் நடந்த ரஜீஃ, பிஃரு மஊன் ஆகிய இவ்விரு நிகழ்ச்சிகள் நபி(ஸல்)
அவர்களுக்குப் பெரும் கவலை அளித்தன. நபியவர்கள் மிகுந்த சஞ்சலத்திலும்
துக்கத்திலும் ஆழ்ந்தார்கள். தங்களின் தோழர்களுக்கு மோசடி செய்த கூட்டத்தினருக்கு
எதிராக நபியவர்கள் பிரார்தித்தார்கள். (இப்னு ஸஆது)
அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: தங்களின் தோழர்களை பிஃரு மஊனா வில் கொன்றவர்களை
நபி(ஸல்) அவர்கள் முப்பது நாட்கள் சபித்தார்கள். ஃபஜ்ரு தொழுகையில் ரிஃலு, தக்வான்,
லஹ்யான், உஸய்யா ஆகிய கோத்திரத்தினருக்கு எதிராக நபியவர்கள் பிரார்த்தனை
(குனூத் நாஜிலா) செய்தார்கள். மோசடி செய்த ஒவ்வொரு வகுப்பாரின் பெயரை கூறி
வரும்போது 'உஸய்யா வமிசத்தினர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு
செய்தனர்" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆன்
வசனம் ஒன்றை இறக்கினான். ஆனால், அதை அல்லாஹ் பிற்காலத்தில் குர்ஆனிலிருந்து
எடுத்துவிட்டான். 'நாங்கள் எங்களது இறைவனை சந்தித்தோம், அவன் எங்களை
பொருந்திக் கொண்டான். நாங்களும் அவனை பொருந்திக் கொண்டோம் என்ற செய்தியை
Pயபந 302 ழக 518
எங்களது கூட்டத்தினருக்கு எடுத்து சொல்லிவிடுங்கள்" என்பதே அவ்வசனம். அதற்குப்
பின் நபி(ஸல்) அவர்கள் தங்களது இந்த பிரார்த்தனையை நிறுத்திக் கொண்டார்கள்.
(ஸஹீஹ{ல் புகாரி)
நழீர் இனத்தவருடன் போர் (ஹிஜ்ரி 4 ரபீஉல் அவ்வல், கி.பி. 625 ஆகஸ்டு)
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வளர்ச்சியைப் பார்த்து யூதர்கள் உள்ளுக்குள் எரிந்தனர்.
முஸ்லிம்களை எதிர்க்க ஆற்றலும் துணிவும் இல்லாததால் சூழ்ச்சி செய்வதிலும்,
சதித்திட்டம் தீட்டுவதிலும் ஈடுபட்டு வந்தனர். தங்களின் பகைமை மற்றும் குரோதத்தையும்
அவ்வப்போது வெளிப்படுத்தினர். போர் புரியாமல் வேறு பலவகை தந்திரங்களைக் கொண்டு
முஸ்லிம்களுக்கு தொந்தரவு கொடுத்தனர். தங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில்
உடன்படிக்கை மற்றும் ஒப்பந்தங்கள் இருந்தும் அதையெல்லாம் சிறிதும் மதிக்காமல்
நடந்தனர். கைனுகா குடும்பத்தைச் சேர்ந்த யூதர்களுக்கு நேர்ந்த கதியையும், கஅபு இப்னு
அஷ்ரஃபுக்கு நேர்ந்த கதியையும் பார்த்ததும் இவர்கள் தங்களின் அட்டூழியங்களை
அடக்கிக்கொண்டு விஷமத்தனங்களை நிறுத்திக் கொண்டனர்.
ஆனால், உஹ{த் போருக்குப்பின் இவர்களுக்குத் துணிவு பிறந்தது. பகைமை மற்றும்
மோசடியையும் வெளிப்படையாக செய்யத் துவங்கினர். மக்காவிலுள்ள
இணைவைப்பவர்களுடனும், மதீனாவிலுள்ள நயவஞ்சகர்களுடனும் தங்களின் தொடர்பை
வலுப்படுத்திக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களில் குதித்தனர். (ஸ{னன்
அபூதாவூது)
நபி (ஸல்) இந்த யூதர்கள் குறித்து மிகுந்த பொறுமையைக் கடைப்பிடித்தார்கள். ஆயினும்,
ரஜீஃ, பிஃரு மஊன் ஆகிய நிகழ்ச்சிகளுக்குப் பின் இவர்களுக்கு புது துணிவு பிறந்தது.
அதனால் நபியவர்களைக் கொன்றுவிட திட்டம் தீட்டினர்.
நபி (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்கள் சிலரை அழைத்துக் கொண்டு இவர்களிடம்
வந்தார்கள். 'அம்ர் இப்னு உமையா ழம்ரி என்ற தனது தோழரால் தவறுதலாக
கொல்லப்பட்ட கிலாப் குலத்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
அதற்காக தங்களால் ஆன உதவிகளைச் செய்யும்படி" நபியவர்கள் கோரினார்கள்.
யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் இதற்குமுன் செய்யப்பட்ட
உடன்படிக்கையின்படி நஷ்டஈடு கொடுக்கும் விஷயத்தில் முஸ்லிம்களுக்கு யூதர்கள் உதவி
செய்ய வேண்டும் என்பதும் ஒன்று. காலங்காலமாக சூழ்ச்சிக்கு பெயர் போன வஞ்சக
யூதர்கள் நபியவர்களிடம் 'இங்கு அமருங்கள்! நீங்கள் வந்த தேவையை நாங்கள்
நிறைவேற்றித் தருகிறோம்" என்றனர்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:11 pm

இவர்கள், கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள் என்று
எதிர்பார்த்து நபியவர்கள் அவர்களின் வீட்டுச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தார்கள். நபி (ஸல்)
அவர்களுடன் அபூபக்ர், உமர், அலீ (ரழி) மற்றும் சில தோழர்களும் இருந்தனர்.
யூதர்கள் தங்களுக்குள் தனிமையில் சந்தித்தனர். அவர்கள் மீது விதிக்கப்பட்ட கேட்டை
ஷைத்தான் அவர்களுக்காக அலங்கரித்து அதை செய்யத் தூண்டினான். எனவே, அவர்கள்
நபியவர்களை கொன்றுவிட சதித்திட்டம் தீட்டினர். திருகைக் கல்லை எடுத்து வீட்டுக்
கூரைக்கு மேல் ஏறி முஹம்மதின் தலை மீது போட்டு தலையை நசுக்கி கொன்றுவிடலாம்
என ஒருவன் ஆலோசனைக் கூறினான். அதை அனைவரும் ஆமோதித்தனர். இதைச்
செய்ய வழிகேடன் அம்ர் இப்னு ஜஹாஷ் என்ற விஷமி ஆயத்தமானான். ஆனால்
ஸலாம் இப்னு மிஷ்கம் என்பவர் 'அவ்வாறு செய்ய வேண்டாம்" என்று அவர்களைத்
தடுத்தார். மேலும் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் தீட்டும் திட்டம் அவருக்கு
அறிவிக்கப்பட்டு விடும். அது நமக்கும் அவருக்குமிடையில் உள்ள உடன்படிக்கையை
முறிப்பதாகி விடும்" என்று எச்சரித்தார். எனினும், தங்களது சதிதிட்டத்தை
நிறைவேற்றுவதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.
Pயபந 303 ழக 518
அவர்களின் இந்தச் சதித்திட்டத்தை அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வின்
புறத்திலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல்(அலை) அறிவித்தார். உடனடியாக
அங்கிருந்து எழுந்து நபியவர்களும் அவர்களது தோழர்களும் மதீனா வந்தடைந்தனர்.
'நபியே! நீங்கள் எழுந்தது எதற்காக என்பதை நாங்கள் அறிந்து கொள்ளவில்லையே" என
வினவினார்கள். நபியவர்கள் யூதர்கள் செய்த சதியைத் தோழர்களுக்கு அறிவித்தார்கள்.
இச்சம்பவத்திற்குப் பின் நபி(ஸல்) அவர்கள் தனது தோழர் முஹம்மது இப்னு மஸ்லமாவை
நழீர் இனத்தவரிடம் அனுப்பி, 'மதீனாவிலிருந்து வெளியேறிவிடுங்கள்¢ எங்களுடன்
மதீனாவில் நீங்கள் தங்கக் கூடாது¢ இனி மதீனாவில் வசிக்கக் கூடாது¢ பத்து நாட்கள்
மட்டும் நான் உங்களுக்கு அவகாசம் தருகிறேன்¢ அதற்கு மேலும் யாராவது மதீனாவில்
தங்கியிருந்தால் அவரது கழுத்தை வெட்டி விடுவேன்" என்று கூறும்படி சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்களின் இக்கட்டளையை யூதர்கள் ஏற்றே ஆகவேண்டி இருந்தது.
மதீனாவை விட்டுச் செல்ல தேவையான தயாரிப்புகளைச் செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நயவஞ்சகர்ளின் தலைவன் இப்னு உபை யூதர்களிடம் தூது அனுப்பி,
'நீங்கள் உங்களது இல்லங்களில் இருந்து கொண்டு உங்களைப் பாதுகாத்து கொள்ளுங்கள்.
உங்களது இல்லங்களிலிருந்து வெளியேறவேண்டாம். என்னுடன் இரண்டாயிரம் வீரர்கள்
தயாராக உள்ளனர். முஹம்மது உங்கள் மீது போர் தொடுத்தால் அந்த வீரர்கள் உங்களுடன்
சேர்ந்து கொண்டு உங்கள் உயிரைக் காக்க தங்களின் உயிரையும் தியாகம் செய்யத்
தயாராக உள்ளனர். மேலும், குரைளா மற்றும், கத்ஃபான் கோத்திரத்தில் உள்ள உங்களது
நண்பர்களும் உங்கள் உதவிக்கு வருவார்கள்" என்று கூறினான்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:11 pm

இப்னு உபைபின் மேற்கூறப்பட்ட கூற்றை விவதித்து, இந்த குர்ஆன் வசனம் இறங்கியது.
(நபியே!) நயவஞ்சகம் செய்வோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை
உடையோரிலுள்ள நிராகரித்துக் கொண்டிருப்போரான தம் சகோதரர்களிடம் 'நீங்கள்
வெளியேற்றப்பட்டால், உங்களுடன் நாங்களும் நிச்சயமாக வெளியேறுவோம்¢ அன்றியும்,
(உங்களுக்கெதிராக) நாங்கள் எவருக்கும், எப்பொழுதும் நாம் வழிப்பட மாட்டோம்¢ மேலும்,
உங்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவி
செய்வோம்" என்று கூறுகின்றனர்¢ ஆனால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று
அல்லாஹ் சாட்சியங் கூறுகிறான். அல்குர்ஆன் 59:11
மதீனாவை விட்டு வெளியேறிவிடலாம் என்றிருந்த யூதர்களுக்கு இதனால் துணிவு பிறந்தது.
எதிர்த்து போரிடுவோம் என்று முடிவு செய்தனர். நயவஞ்சகர்களின் தலைவன் கூறியதைக்
கேட்டு நப்பாசை கொண்ட யூதர்களின் தலைவன் ஹை இப்னு அக்தப் நபி (ஸல்)
அவர்களிடம் ஆளனுப்பி 'நாங்கள் எங்களின் இல்லங்களிலிருந்து வெளியேற மாட்டோம்.
உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்துகொள்!" என்று கூறினான்.
உண்மையில் இந்நிலைமை முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகச் சிக்கலானதாகவே
இருந்தது. முஸ்லிம்களின் மிகச் சிரமமான இக்காலகட்டத்தில் எதிரிகளிடம் மோதுவதும்,
சண்டை செய்வதும் ஆபத்தான முடிவை உண்டாக்கலாம்¢ மற்ற அரபுகள் ஒருபக்கம்
தங்களைத் தாக்குகிறார்கள். மேலும், தங்களின் அழைப்புப் பணிக்காக அனுப்பப்படும்
குழுக்களையும் சதி செய்து கொன்று விடுகிறார்கள் என்பதை முஸ்லிம்கள்
உணர்ந்திருந்தனர். இதுமட்டுமின்றி நழீர் கோத்திரத்தைச் சேர்ந்த யூதர்கள் ஓரளவுக்கு
தேவையான வலிமையுடன் விளங்கியதால் அவர்கள் சரணடைவது அடிபணிவது சற்று
கடினமான விஷயம்தான். அவர்களுடன் போரிடுவது பல இன்னல்களை சந்திக்கக்
காரணமாகலாம். ஆயினும், இதற்கெல்லாம் முஸ்லிம்கள் தளர்ந்து விடவில்லை. பிஃரு
மஊனாவின் நிகழ்ச்சியும் அதற்கு முன் நடந்த நிகழ்ச்சியும் முஸ்லிம்களின் உணர்ச்சிகளை
அதிகம் தூண்டின. தங்களின் தனி நபர்களுக்கும் குழுக்களுக்கும் ஏற்படும் மோசடி மற்றும்
Pயபந 304 ழக 518
வஞ்சகச் செயல்களை முடிவுக்குக் கொணடு வந்து அதை செய்பவர்களுக்கும், செய்யத்
தூண்டுபவர்களுக்கும் நல்ல பாடம் புகட்ட வேண்டும்¢ நபி (ஸல்) அவர்களையே கொல்லத்
துணிந்த நழீர் இனத்தவரிடம் போர் செய்தே தீர வேண்டும் என்று முடிவு செய்தனர்.
அதனால் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கத் துணிந்தனர்.
நபி (ஸல்) அவர்களுக்கு ஹை இப்னு அக்தப் கூறிய பதில் கிடைத்தவுடன் தக்பீர்
(அல்லாஹ் அக்பர் என்று) முழங்கினார்கள். தோழர்களும் தக்பீர் முழங்கினர். பின்பு நழீர்
இனத்தவரிடம் சண்டையிட ஆயத்தமானார்கள். மதீனாவில் இப்னு உம்மு மக்தூம் (ரழி)
அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அலீ (ரழி) படையின் கொடியை ஏந்தியிருக்க
நபியவர்கள் படையுடன் புறப்பட்டுச் சென்று யூதர்களை முற்றுகையிட்டார்கள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:11 pm

நழீர்
இனத்தவர் தங்களின் கோட்டைகளுக்குள் புகுந்து கொண்டனர். முஸ்லிம்களை நோக்கி
அம்புகளையும், கற்களையும் வீசி எறிந்து தாக்கினர். இதற்கு, அவர்களது தோட்டங்களும்
பேரீத்த மரங்களும் அவர்களுக்கு சாதகமாக இருந்தன. எனவே, அவர்களின்
தோட்டங்களையும் பேரீத்த மரங்களையும் வெட்டி எரித்து விடும்படி நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். இதைப் பற்றியே ஹஸ்ஸான் கூறுகிறார்.
புவைராவில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிவது
பனூ லுஅய் கூட்டத் தலைவர்களுக்கு மிக எளிதாகிவிட்டது.
இவர்களின் பேரீத்த தோட்டத்தின் பெயர்தான் புவைரா என்பது. அல்லாஹ் இதுகுறித்தே
இந்த வசனத்தை இறக்கினான்.
நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் வேர்களின்
மீது அவை நிற்கும்படியாக விட்டு விட்டதோ அல்லாஹ்வின் அனுமதியாலும், அந்த
ஃபாஸிக்குகளை(ப் பாவிகளை) அவன் இழிவு படுத்துவதற்காகவுமே தான். அல்குர்ஆன்
59:5
குரைளா யூதர்கள் உதவிக்கு முன் வரவில்லை. அவ்வாறே இவர்களின் நண்பர்கள்
கத்ஃபான் கிளையைச் சேர்ந்தவர்களும் மற்றும் அப்துல்லாஹ் இப்ன உபைய்யும் உதவிக்கு
வராமல் விலகிக் கொண்டனர். எனவேதான் இவர்களின் இந்த நடத்தையை அல்லாஹ்
உவமானத்துடன் கூறுகிறான்.
(இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது¢ (அவன்)
மனிதனை நோக்கி: 'நீ (இறைவனை) நிராகரித்து விடு" என்று கூறுகிறான். அவ்வாறு
மனிதன் நிராகரித்ததும் 'நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்¢ (ஏனெனில்) நான்
அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்" என்றான்.
அல்குர்ஆன் 59:16
முற்றுகை 6 அல்லது 15 இரவுகள் நீடித்தது. அல்லாஹ் யூதர்களின் உள்ளத்தில் பயத்தையும்
நடுக்கத்தையும் போட்டான். 'ஆயுதங்களைக் கீழே போட்டு நாங்கள் பணிந்து விடுகிறோம்¢
நாங்கள் மதீனாவை விட்டு வெளியேறி விடுகிறோம்" என்று நபியவர்களிடம்
தூதனுப்பினார்கள்.
அதற்க நபி(ஸல்) அவர்கள் 'உங்களையும் உங்கள் பிள்ளை குட்டிகளையும் அழைத்துக்
கொண்டு இங்கிருந்து சென்று விடுங்கள்¢ ஒட்டகங்கள் சுமக்கும் அளவுள்ள
சாமான்களையும் உங்களுடன் நீங்கள் எடுத்துச் செல்லலாம்¢ ஆயுதங்களை எடுத்துச்
செல்லக் கூடாது" என்று கூறினார்கள்.
இந்த நிபந்தனைக்கு அவர்கள் அடிபணிந்தனர். தங்களுக்குப் பிறகு தங்கள் வீடுகளை
எவரும் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக அவற்றை அழித்தனர். வீட்டு கதவுகளையும்
ஜன்னல்களையும் பெயர்த்து தங்களுடன் எடுத்து கொண்டனர். அவர்களில் சிலரோ
Pயபந 305 ழக 518
ஆணிகளையும், முகட்டில் இருந்த பலகைகளையும், முளைக் கம்புகளையும் கூட
தங்களுடன் எடுத்துக் கொண்டனர். பின்பு பெண்கள், சிறுவர்கள் அனைவரையும்
அழைத்துக் கொண்டு 600 ஒட்டகைகளில் புறப்பட்டனர். ஹை இப்னு அக்தப், ஸல்லாம்
இப்னு அபூஹ{கைக் போன்ற தலைவர்களும் மற்றும் பெரும்பாலான யூதர்களும் கைபர்
சென்று தங்கினர். மற்றவர்கள் ஷாம் நாட்டிற்குச் சென்றனர். அவர்களில் இருவர் மட்டும்
இஸ்லாமை ஏற்றுக் கொண்டதால் தங்களது சொத்து செல்வங்களுடன் மதீனாவில் தங்க
அனுமதிக்கப்பட்டனர்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:12 pm

நபி (ஸல்) அவர்கள் இம்மக்களின் ஆயுதங்கள், வீடுகள், நிலங்கள், செல்வங்கள் என
அனைத்தையும் கைப்பற்றினார்கள். மொத்தம் 50 கவச ஆடைகளும், 50 தலைக்
கவசங்களும், 340 வாட்களும் இருந்தன.
இந்த யூதர்களின் செல்வங்கள், சொத்துகள், வீடுகள், நிலங்கள் அனைத்தையும் அல்லாஹ்
நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் அருளினான். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதை
செய்து கொள்ள முழு அனுமதியளித்தான். அதை ஐந்து பங்காக ஆக்க வேண்டும் என்று
நபியவர்களுக்கு கட்டளையிடவில்லை. ஏனெனில், இது சண்டையின்றி கிடைத்த
பொருளாகும். இப்பொருட்களை முந்திய முஹாஜிர்களுக்கு (மக்காவிலிருந்து மதீனாவில்
குடியேறியவர்களுக்கு) மட்டும் நபியவர்கள் பங்கு வைத்தார்கள். ஆனால், அன்சாரிகளில்
ஏழையாக இருந்த அபூ துஜான, ஸஹ்ல் இப்னு ஹ{னைஃப் (ரழி) இருவருக்கும் அதில்
பங்கு கொடுத்தார்கள். அதிலிருந்துதான் நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினருக்கு
ஓராண்டுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து வந்தார்கள். மீதமிருந்ததை அல்லாஹ்வின்
பாதையில் போருக்குப் பயன்படுத்தினார்கள்.
இப்போர் குறித்த விவரங்களை முழுவதுமாக ஹஷ்ர் என்ற அத்தியாயத்தில் அல்லாஹ்
இறக்கினான். இந்த அத்தியாயத்தில் 'யூதர்கள் எவ்வாறு விரட்டியடிக்கப்பட்டனர்¢
நயவஞ்சகர்களின் கொள்கையும் பழக்கமும் எவ்வாறனது? போரின்றி கிடைக்கும்
செல்வத்தின் சட்டம் என்ன?" போன்ற விவரங்கள் கூறப்பட்டன. மேலும் முஹாஜிர்கள்,
அன்சாரிகள் குறித்து இந்த அத்தியாயத்தில் புகழ்ந்து கூறியிருக்கிறான். போர் நலன்களை
கருத்தில் கொண்டு எதிரிகளுக்குச் சொந்தமான மரங்களை வெட்டுவதும், கொளுத்துவதும்
சரியானதே¢ இது விஷமத்தனமாக ஆகாது என்ற அல்லாஹ் இந்த அத்தியாயத்தில்
கூறியுள்ளான். அத்துடன் முஸ்லிம்கள் எப்போதும் இறையச்சத்தைக் கடைப்பிடித்து,
மறுமைக்கான நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு இறுதியாக
தனது புகழ்ச்சியைக் கூறி உயர்வுமிக்க தனது பெயர்களை விவரித்து அத்தியாயத்தை
நிறைவு செய்கிறான்.
இந்த அத்தியாயத்தில் நழீர் இன யூதர்களை குறித்து முழுவதுமாக கூறப்பட்டிருப்பதால்
இந்த அத்தியாயத்தை நழீர் என்றும் கூறலாம் என இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்.
(ஸஹீஹ{ல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) மற்றும் பெரும்பான்மையான வரலாற்று ஆசிரியர்கள் இப்போர்
குறித்து கூறியதை நாம் இதுவரை பார்த்தோம்.
அபூதாவது, அப்துர் ரஜாக் (ரஹ்) மற்றும் பல அறிஞர்கள் இச்சம்பவத்திற்க்கு வேறு பல
காரணங்களைக் கூறுகின்றனர். அஃதாவது: பத்ர் போருக்குப் பின் குறைஷிகள் நழீர் இன
யூதர்களுக்கு கடிதம் எழுதினர்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:12 pm

அதில் 'நீங்கள் மதீனாவில் நல்ல பாதுகாப்புடன்
வாழ்கிறீர்கள். உங்களிடம் கோட்டைகளும் அரண்களும் உள்ளன. எனவே, அங்கு
இருக்கும் எங்களுடைய ஊர்வாசிகளிடம் நீங்கள் போர் செய்யுங்கள். அவ்வாறு
செய்யாவிட்டால் நாங்கள் உங்களுக்கு பல வகையில் தொல்லைகள் தருவோம். உங்களின்
Pயபந 306 ழக 518
பெண்களை எங்களை விட்டும் நீங்கள் காப்பாற்றிக் கொள்ள முடியாது." இவ்வாறு
அக்கடிதத்தில் குறைஷிகள் குறிப்பிட்டனா.
இக்கடிதத்தைப் பார்த்தவுடன் நழீர் கிளையினர் நபி (ஸல்) அவர்களுடன் செய்த
உடன்படிக்கைக்குத் துரோகம் செய்ய முடிவெடுத்தனர். அவர்கள் நபியவர்களிடம் தூது
அனுப்பி, 'நீங்கள் உங்களுடைய 30 தோழர்களுடன் எங்களிடம் வாருங்கள். நாங்கள்
எங்களுடைய 30 அறிஞர்களை அழைத்துக் கொண்டு வருகிறோம். குறிப்பிட்ட ஓர்
இடத்தில் நாம் சந்திப்போம். நீங்கள் கூறுவதை எங்களது பாதிரிகள் கேட்பார்கள். அவர்கள்
நீங்கள் கூறுவதை உண்மை என்று ஆமோதித்து உங்களை நம்பிக்கை கொண்டால் நாங்கள்
அனைவரும் உங்களை நம்பிக்கை கொள்வோம்" என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள் 30 தோழர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். யூதர்களும்
தங்களது 30 பாதிரிகளுடன் வந்தனர். இரு குழுக்களும் ஒரு திறந்த வெளி மைதானத்திற்கு
வந்தவுடன் யூதர்கள் தங்களுக்குள், 'இப்போது எப்படி இவரை (முஹம்மதை) நாம் கொல்ல
முடியும். இவரைச் சுற்றி 30 தோழர்கள் உள்ளனர். அந்த தோழர்கள் இவருக்காக தங்களது
உயிரையும் அர்ப்பணிக்கத் துணிந்தவர்களாயிற்றே! எனவே, நாம் இப்போது நமது
திட்டத்தை நிறைவேற்றுவது சரியன்று" என்று யோசித்தனர். ஒரு வழியாக வேறு
முடிவெடுத்து திரும்ப நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'நாம் இப்போது 60 நபர்களாக
இருக்கும் போது நீங்கள் கூறுவதை எங்களால் சரியாக புரிந்து கொள்ள முடியாது. நாங்கள்
கூறுவதையும் உங்களால் சரியாக புரிந்து கொள்ள முடியாது. எனவே, மூன்று தோழர்களை
மட்டும் அழைத்துக் கொண்டு வாருங்கள். நாங்களும் மூன்று அறிஞர்களை மட்டும்
அழைத்து வருகிறோம். அந்த அறிஞர்கள் நீங்கள் கூறுபவற்றை கேட்பார்கள். அவர்கள்
உங்கள் மீது நம்பிக்கை கொண்டால் நாங்களும் உங்கள் மீது நம்பிக்கை கொள்வோம்.
உங்களை உண்மையாளர் என்று ஏற்றுக் கொள்வோம்" என்றனர்.
இதற்கும் நபி (ஸல்) அவர்கள் இணங்கி மூன்று தோழர்களை மட்டும் அழைத்துக் கொண்டு
சந்திக்கப் புறப்பட்டார்கள். யூதர்கள் தங்களுடன் வீச்சரிவாளை எடுத்துக் கொண்டு
நபியவர்களைத் திடீரென பாய்ந்து கொன்றுவிட வேண்டும் என்ற முடிவில் வந்தனர்.
ஆனால், நழீர் கோத்திரத்தில் உள்ள ஒரு பெண் முஸ்லிமான தன் உறவினர் ஒருவருக்கு
சதித்திட்டத்தைப் பற்றி அறிவித்தார். அவர் நபியவர்கள் அங்கு செல்வதற்கு முன்
அவர்களைச் சந்தித்து செய்தியைக் கூறினார். இதைக் கேட்டவுடன் நபியவர்கள் போகாமல்
பாதி வழியிலேயே திரும்பிவிட்டார்கள்.
அதற்கடுத்த நாள் நபி (ஸல்) அவர்கள் படையுடன் யூதர்களை முற்றுகையிட்டார்கள்.
அப்போது அவர்களிடம் 'நீங்கள் எனக்கு ஒப்பந்தம் செய்து கொடுக்காத வரை உங்களுக்கு
என்னிடம் எவ்வித பாதுகாப்பும் நிச்சயம் இல்லை" என்று கூறினார்கள். ஆனால், நழீர்
யூதர்கள் அதற்கு ஒத்துவரவில்லை. ஆகவே, நபியவர்களும் முஸ்லிம்களும் அன்றைய
தினம் அவர்களுடன் போர் புரிந்தனர். பின்பு இரண்டாம் நாள் அவர்களுடன் போர்
செய்யாமல் அவர்களை அவர்களின் நிலைமையிலேயே விட்டு அவர்களுக்கருகில் உள்ள
குரைளா யூதர்களிடம் நபி (ஸல்) படையுடன் சென்று அவர்களிடம் 'நீஙகள் எனக்கு ஓர்
ஒப்பந்தத்தைச் செய்து கொடுத்தால் நான் உங்களுடன் போர் செய்ய மாட்டேன்"
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:12 pm

என்றார்கள். குரைளா யூதர்களும் அதற்கு இணங்கி நபியவர்களிடம் ஒப்பந்தம் செய்தனர்.
பின்பு நபி (ஸல்) மீண்டும் நழீர் இனத்தவரிடம் சென்று அவர்களுடன் சண்டையிட்டார்கள்.
அவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் இறுதியாக நபியவர்களிடம் சரணடைந்ததனர். அதாவது
'மதீனாவைவிட்டு வெளியேற வேண்டும் ஆயுதங்களைத் தவிர மற்ற பொருட்களை
ஒட்டகம் சுமக்கும் அளவிற்கு எடுத்துச் செல்லலாம்" என்ற நிபந்தனைக்கும் கட்டுப்பட்டு
போரை முடித்துக் கொண்டனர். பின்பு தங்களின் வீடுகளை நாசப்படுத்தினர். அதை
இடித்துத் தள்ளி அதிலிருந்த மரப்பலகைகளையும் எடுத்துக் கொண்டனர். இதுதான்
Pயபந 307 ழக 518
முதன்முறையாக யூதர்களை நாடுகடத்திய சம்பவமாகும். இவர்களை மதீனாவிலிருந்து ஷாம்
தேசத்திற்கு நாடு கடத்தப்பட்டது. (முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக், ஸ{னன் அபூதாவது)
'நஜ்து'; போர் (ஹிஜ் 4, ரபீவுல் ஆகிர் (அ) ஜுமாதா அல்ஊலா)
சண்டையும், உயிர்ப் பலியுமின்றி நழீர் போரில் முஸ்லிம்களுக்குக் கிடைத்த வெற்றி
முஸ்லிம்களின் வலிமையை மீண்டும் மதீனாவில் நிலைநாட்டியது. நயவஞ்சகர்கள் தங்களது
சூழ்ச்சிகளை வெளிப்படுத்துவதைக் கைவிட்டனர். அதனால் முஸ்லிம்களுக்கு
உள்நாட்டுக் குழப்பம் குறைந்தது. ஆகவே, இப்போது மதீனாவிற்கு வெளியில் விஷமம்
செய்து வந்த கிராம அரபிகளின் அக்கிரமத்தை அடக்க நபி (ஸல்) அவர்கள் நடவடிக்கை
எடுத்தார்கள். இந்த கிராம அரபிகள்தான் உஹ{த் போருக்குப் பின் முஸ்லிம்களுக்கு
பெரும் இன்னல்கள் விளைவித்து வந்தனர். அழைப்புப் பணிக்காக அனுப்பப்படும்
குழுக்களை வஞ்சகமாகக் கொன்று குவித்தனர். இவ்வாறு செய்து வந்த இவர்களுக்கு,
அடுத்தபடியாக மதீனாவில் தாக்குதல் நடத்தும் அளவுக்குத் துணிவும் பிறந்தது.
முஸ்லிம் குழுக்களுக்கு மோசடி செய்து வந்த அந்தக் கிராம அரபிகளைத் தண்டிப்பதற்கு
முன் கத்ஃபான் கோத்திரத்தைச் சேர்ந்த ~பனூ ஸஅலபா| என்ற பிரிவினரும், ~பனூ
முஹாப்| என்ற பிரிவினரும் மதீனாவின் மீது படையெடுக்க ஒன்று சேருகின்றனர் எனும்
செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. இந்த செய்தி கிடைத்ததும் உடனடியாக
நபியவர்கள் படையை திரட்டிக்கொண்டு நஜ்து பகுதியிலுள்ள கிராமங்களுக்குச்
சென்றார்கள். அங்குள்ள அனைத்து இடங்களையும், கிராமங்களையும் படையுடன் சுற்றி
வந்தார்கள்.
முஸ்லிம்களின் வருகையை அறிந்த அந்த ஊர்வாசிகள், தங்களின் இல்லங்களிலிருந்து
வெளியேறி மலை உச்சிக்குச் சென்று தப்பித்துக் கொண்டனர். இவ்வாறு அழிச்சாட்டியம்
செய்யும் இந்தக் கூட்டங்களையெல்லாம் முஸ்லிம்கள் பதிலுக்கு மிரட்டி அவர்களது
உள்ளங்களில் தங்களைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்திவிட்டு பாதுகாப்புடன் மதீனா
திரும்பினர்.
மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக நடந்த குறிப்பிட்ட ஒரு போரைப் பற்றி வரலாற்று
ஆசிரியர்கள் கூறியிருப்பதின் விவரமாவது: ஹிஜ்ரி 4, ரபீஉல் ஆகிர் அல்லது ஜுமாதா
அல்ஊலா மாதம் ஒரு போர் நடைபெற்றது. அதற்கு ~தாதுர் காஃ| என்று கூறப்படும். இந்தப்
போர் காலத்தின் சூழ்நிலைக்கேற்ப அவசியமான ஒன்றாக இருந்தது. ஏனெனில்,
உஹ{திலிருந்து திரும்பச் செல்லும் போது அப+ஸ{ஃப்யான் அடுத்த வருடம் (ஹிஜ்ரி 4ல்)
பத்ரு மைதானத்தில் சந்திப்போம் என்று கூறி சென்றிருந்தார். அந்த நாளும் மிக
நெருக்கமாக இருந்தது. இந்நேரத்தில் மதீனாவை முற்றிலுமாக காலி செய்துவிட்டு செல்வதும்
உசிதமானதல்ல. ஏனெனில், கிராம வாசிகளின் அட்டகாசம் அத்துமீறி இருந்தது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:12 pm

இவர்களின் கொடுக்கை நறுக்காமல், இவர்களின் விஷமத்தனத்திற்கு முடிவு கட்டாமல்
மதீனாவை காலியாக விட்டுச் செல்வது நல்லதல்ல. இவர்கள் மதீனா காலியாகி விட்டதை
தங்களுக்கு வாய்ப்பாகக் கருதி மதீனாவின் மீது கொள்ளையிட அல்லது தாக்குதல் நடத்த
வரலாம். எனவே, அப+ஸ{ஃப்யானின் படையைப் பத்ரில் சந்திக்க செல்லும் முன்
இவர்களுக்குச் சரியான பாடம் புகட்டி இவர்களை அடக்க வேண்டும் என நபியவர்கள்
முடிவெடுத்தார்கள். அதற்குப் பின் கிராமவாசிகளை அவர்களது கிராமங்களுக்குச் சென்று
அச்சுறுத்திவிட்டு நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பினார்கள். இப்பயணத்தில் சண்டை
ஏதும் நடைபெறவில்லை. ஆக, இந்தப் போருக்கு வரலாற்று ஆசிரியர்கள் ~தாதுர் காஃ|
என்று கூறுகின்றனர்.
ஆனால், இக்கூற்று சரியல்ல! இப்போருக்கு ~தாதுர் காஃ| என்று சொல்வது தவறாகும்.
ஏனெனில் ~தாதுர் காஃ| போரில் அப+ஹ{ரைராவும் அப+மூஸாவும் (ரழி) கலந்து
Pயபந 308 ழக 518
கொண்டனர். அப+ஹ{ரைரா (ரழி) கைபர் போருக்கு சில நாட்கள் முன்புதான்
முஸ்லிமானார்கள். அவ்வாறே அப+மூஸாவும் நபி (ஸல்) அவர்களை கைபர் போரில்தான்
சந்தித்தார்கள்.
கைபர் போருக்கு பின்புதான் ~தாதுர் காஃ| நடைபெற்றது என்பது இதிலிருந்து தெரிய
வருகிறது. கைபர் போர் ஹிஜ்ரி 7ஆம் ஆண்டில் நடைபெற்றது. எனவே, ஹிஜ்ரி 4ல்
நடைபெற்ற யுத்தத்தை ~தாதுர் காஃ| என்று சொல்வது தவறாகும். இதற்கு மேலும் ஓர்
ஆதாரத்தைப் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் தாதுர் காஃ போரில்தான் ~ஸலாத்துல் கவ்ஃப்| (அச்சம் ஏற்படும்போது
தொழுதல்) முறைப்படி தொழுகை நடத்தினார்கள். இத்தொழுகை அஸ்ஃபான் போரில்தான்
முதன் முதலில் அனுமதிக்கப்பட்டது. அஸ்ஃபான் போர் அகழ்ப் போருக்குப் பின்
நடைப்பெற்றது. அகழ்ப் போர் ஹிஜ்ரி 5ன் இறுதியில் நடைபெற்றது. இதிலிருந்து ஹிஜ்ரி
4ல் நடந்த போரை தாதுர் காஃ என்று குறிப்பிடுவது தவறாகும். தாதுர் காஃ போர் வேறு,
ஹிஜ்ரி 4ல் நடைபெற்ற போர் வேறு.
இரண்டாம் பத்ர் போர் (ஹிஜ்ரி 4, ஷஃபான் மாதம், கி.பி. 626, ஜனவரி)
இவ்வாறு முஸ்லிம்கள் கிராமவாசிகளின் கொடுக்கை வெட்டி, அவர்களது விஷமத்தை
ஒழித்து விட்டார்கள். இதற்குப் பின் பெரிய எதிரியான அப+ ஸ{ஃப்யானையும்
குறைஷிகளையும் சந்திக்கத் தயாராகினர். ஏனெனில், உஹ{த் போரில் குறிப்பிடப்பட்ட
காலம் நெருங்கி விட்டது. அதன்படி மீண்டும் ஒருமுறை போர் செய்து, சத்தியவான்கள்
யார்? யாருக்கு அல்லாஹ்வின் உதவி? என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவைப் பிரதிநிதியாக
நியமித்தார்கள். பிறகு 1500 தோழர்கள் மற்றும் 10 குதிரைகளுடன் பத்ரை நோக்கி
புறப்பட்டார்கள். படையின் கொடி அலீ (ரழி) அவர்களிடம் இருந்தது. பத்ரில் சென்று
குறைஷிகளின் வருகையை எதிர்பார்த்து தங்கியிருந்தார்கள்.
அப+ஸ{ஃப்யான் 2000 மக்காவாசிகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார். இவர்களிடம் 50
குதிரைகள் இருந்தன. அப+ஸ{ஃப்யான் மக்காவிலிருந்து ஒரு நாள் பயண தூரமுள்ள
~மர்ருள் ளஹ்ரான்| என்ற பகுதியிலுள்ள ~மஜன்னா| என்ற கிணற்றருகில் தங்கினார்.
அப+ஸ{ஃப்யான் மக்காவிலிருந்து புறப்படும் போதே போரின் முடிவு எப்படி அமையும்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:13 pm

என்று ஆழ்ந்து சிந்தித்தவராகவே பயணித்துக் கொண்டிருந்தார். இவரது உள்ளத்தில்
அச்சம் குடிகொண்டது. இறுதியாக ~மர்ருள் ளஹ்ரான்| வந்தவுடன் அவரது உறுதி முற்றிலும்
நிலைகுலைந்து விட்டது. அவர் திரும்பிவிட முடிவு செய்தவராக தனது தோழர்களிடம்
'குறைஷியர்களே நல்ல பசுமையான செழிப்பான காலத்தில் நாம் போர் செய்யலாம். இது
மிக பஞ்சமான ஆண்டு. எனவே இவ்வாண்டு நமக்கு ஏற்றமாகாது. நான் திரும்பிவிட
நாடுகிறேன். நீங்களும் திரும்பி விடுங்கள்" என்று கூறினார்.
பொதுவாக, படையினர் அனைவரும் பயத்தால் உள்ளுக்குள் நடுங்கி கொண்டுதான்
இருந்தனர். எனவேதான், அப+ஸ{ஃப்யான் இந்த யோசனையைக் கூறியவுடன் பிடிவாதம்
பிடிக்காமல், ஆட்சேபனை ஏதும் செய்யாமல் அனைவரும் திரும்பி விட்டனர்.
முஸ்லிம்கள் பத்ர் மைதானத்தில் 8 நாட்கள் தங்கி வியாபாரம் செய்தனர். ஒரு
திர்ஹத்திற்கு இரண்டு திர்ஹம் அவர்களுக்கு இலாபமாக கிடைத்தது. அதற்குப் பின்
எதிரிகள் மைதானத்திற்கு வராததால் சண்டையின்றி திரும்பி விட்டனர். மீண்டும்
முஸ்லிம்கள் மீது மக்களுக்கு பயமும் மரியாதையும் ஏற்பட்டது. நிலைமைகள்
அனைத்தையும் முஸ்லிம்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.
Pயபந 309 ழக 518
இப்போருக்கு, 'இரண்டாம் பத்ரு, சிறிய பத்ரு, மற்றொரு பத்ரு, வாக்களித்துச் சென்ற
பத்ரு" என பல பெயர்கள் வரலாற்றில் கூறப்படுகின்றன. (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
தூமத்துல் ஜன்தல் போர் (ஹிஜ் 5, ரபீஉல் அவ்வல் 25)
நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் பத்ரில் இருந்து திரும்பிய பிறகு, மதீனாவிலும் அதைச்
சுற்றியுள்ள இடங்களிலும் அமைதி மற்றும் பாதுகாப்பு மிக்க சூழ்நிலை நிலவியது.
முஸ்லிம்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆகவே, இப்போது அரபு நாடு முழுவதும்
முஸ்லிம்களின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்காகவும், முஸ்லிம்களை நேசிப்பவர்களும்
எதிர்ப்பவர்களும் முஸ்லிம்களின் பலத்தை அறிந்து கொள்வதற்காகவும் எல்லாப்
பகுதிகளுக்கும் சென்று வர நபியவர்கள் இந்த அவகாசத்தைப் பயன்படுத்தினார்கள்.
இரண்டாம் பத்ர் போரிலிருந்து திரும்பிய பிறகு மதீனாவில் 6 மாதங்கள் நபி (ஸல்)
அவர்கள் தங்கியிருந்தார்கள். இந்நிலையில் ஷாம் நாட்டிற்கருகில் உள்ள ~தூமத்துல்
ஜன்தல்| என்ற இடத்தைச் சுற்றி வாழும் கோத்திரத்தினர் வழிப்பறி, கொள்ளையடிப்பது
போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் மேலும், மதீனாவின் மீது திடீர் தாக்குதல் நடத்த
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:13 pm

பெரும் கூட்டம் ஒன்றையும் தயார் செய்து வருகிறார்கள் என்ற செய்தி நபியவர்களுக்கு
எட்டியது. எனவே, நபியவர்கள் மதீனாவில் ~ஸிபா இப்னு உர்ஃபுத்தா கிஃபா| என்ற
தோழரைப் பிரதிநிதியாக நியமித்து விட்டு 1000 முஸ்லிம்களுடன் ஹிஜ்ரி 5, ரபீஉல்
அவ்வல், பிறை 25ல் தூமத்துல் ஜன்தல் நோக்கி கிளம்பினார்கள். உத்ரா கிளையைச்
சேர்ந்த ~மத்கூர்| என்ற நபரைத் தனக்கு வழிகாட்டியாக நபியவர்கள் அழைத்துச்
சென்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இரவில் பயணிப்பதும் பகலில் பதுங்குவதுமாக பயணத்தைத்
தொடர்ந்தார்கள். எதிரிகள் கொள்ளையிடும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது
அவர்களைத் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நபியவர்கள் பயணத்தை இவ்வாறு
தொடர்ந்தார்கள். நபியவர்கள் அங்கு சென்ற போது அம்மக்கள் அங்கு இல்லை, வெளியில்
சென்றிருந்தார்கள். நபியவர்கள் அவர்களின் கால்நடைகளைக் கைப்பற்றினார்கள்.
அங்கிருந்த சிலர் தப்பித்து விட்டனர் மற்ற சிலர் எதிர்த்து மடிந்தனர்.
இதற்குப் பின் ~தூமத்துல் ஜன்தல்| என்ற இடத்திற்கு சென்ற போது அங்குள்ள
அனைவரும் தங்கள் இல்லங்களைக் காலி செய்து விட்டு தப்பித்து ஓடிவிட்டனர்.
நபியவர்கள் அங்கு பல நாட்கள் தங்கியிருந்து, சுற்றியுள்ள இடங்களுக்குப் படைகளை
அனுப்பித் தேடியும் எவரும் காணக் கிடைக்கவில்லை. ஆகவே, மதீனாவிற்குத் திரும்ப
ஆயத்தமானார்கள். நபி (ஸல்) அவர்கள் இப்போருக்குச் சென்றிருந்த சமயத்தில் அங்குள்ள
~உயய்னா இப்னு ஸ்னு| என்பவருடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். ~தூமா|
என்பது ~மஷாஃபுஷ் ஷாம்| என்ற இடத்திலுள்ள புகழ்பெற்ற இடமாகும். இங்கிருந்து
~திமஷ்க்| நகரம் ஐந்து இரவுகள் பயணித்துச் செல்லும் தூரத்தில் உள்ளது. இந்நகரம்
மதீனாவிலிருந்து 15 இரவுகள் பயணித்துச் செல்லும் தூரத்தில் உள்ளது.
இதுபோன்ற மதிநுட்பமான, தீர்க்கமான நடவடிக்கைகளினால் அமைதி மற்றும் பாதுகாப்பை
அனைத்து பகுதிகளிலும் நிறுவி, நிலைமையைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வருவதில் நபி (ஸல்) அவர்கள் வெற்றி கண்டார்கள். மேலும், இதன் மூலம்
முஸ்லிம்களுக்குச் சாதகமான நல்ல சூழ்நிலையை உருவாக்கினார்கள். பல
பக்கங்களிலிருந்து முஸ்லிம்களுக்கு வந்து கொண்டிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச்
சிரமங்களை அகற்றினார்கள். நயவஞ்சகர்களும் அடங்கி அமைதியாகி விட்டார்கள்.
யூதர்களில் ஒரு முக்கிய பிரிவினரான ~நழீர்| என்ற கோத்திரத்தினரை மதீனாவிலிருந்து
முற்றிலும் நாடு கடத்தப்பட்டதை பார்த்து பயந்துபோன மற்றொரு கோத்திரத்தினர், தாங்கள்
நபியவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் ஒழுங்காக
Pயபந 310 ழக 518
நிறைவேற்றினர். கிராம அரபிகளும் தங்களது அட்யூழியங்களையும் வம்புத்தனங்களையும்
அடக்கிக் கொண்டு முஸ்லிம்களுக்குப் பணிந்து நடந்தனர். மக்காவிலிருந்த குறைஷிகளும்
முஸ்லிம்களைத் தாக்கும் திட்டத்தைக் கைவிட்டு ஒதுங்கிக் கொண்டனர். இதுபோன்ற
சாதகமான நல்ல சூழ்நிலை ஏற்பட்டதால் இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செம்மையாக
நிறைவேற்றுவதற்குரிய நல்ல வாய்ப்பை முஸ்லிம்கள் பெற்றனர்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:13 pm

அல்அஹ்ஜாப் போர்
அஹ்ஜாப் என்று அறியப்படும் இப்போர் ஹிஜ்ரி 5, ஷவ்வால் மாதத்தில் நடைபெற்றது.
ஓராண்டு காலமாக நபியவர்கள் எடுத்த ராணுவ நடவடிக்கைகளால் மதீனாவிலும் அதைச்
சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிம்மதியான சூழ்நிலை முழுமையாக
நிலவியது. இந்த நடவடிக்கைகளில் பெரிதும் இழிவையும் கேவலத்தையும் அடைந்தவர்கள்
யூதர்களே! அதற்குக் காரணம், அவர்கள் செய்த மோசடி, துரோகம், சதித்திட்டம் மற்றும்
சூழ்ச்சிகள்தான். இவ்வாறு கேவலப்பட்டும் அவர்கள் படிப்பினை பெறவில்லை. தங்களது
விஷமத்தனங்களை விட்டும் முற்றிலும் விலகிக் கொள்ளவுமில்லை. கைபருக்குக்
கடத்தப்பட்ட அந்த நழீர் இன யூதர்கள் முஸ்லிம்களுக்கும் இணைவைப்பவர்களுக்கும்
நடைபெரும் போர்களில் முஸ்லிம்களின் நிலை என்னவாகும் என்று எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், வெற்றி முஸ்லிம்களுக்குக் கிட்டி முஸ்லிம்களின் ஆதிக்கம் நிலை பெற்றிடவே,
அதைத் தாங்க இயலாமல் அந்த யூதர்கள் எரிச்சலைடைந்தனர் நெருப்பாய் எரிந்தனர்.
அப்போது, முஸ்லிம்களுக்கு எதிராகப் புதிய திட்டம் ஒன்று தீட்டினர். முஸ்லிம்களை
முற்றிலும் அழிக்கும் ஒரு போரைத் தூண்டிவிட ஏற்பாடு செய்தனர். தங்களால்
முஸ்லிம்களை நேரடியாக தாக்க ஆற்றல் இல்லை என்பதை உணர்ந்த அவர்கள் இதற்காக
ஒரு சூழ்ச்சி செய்தனர்.
அதாவது, நழீர் கோத்திரத்தின் தலைவர்கள் மற்றும் சிறப்புமிக்கவர்களில் 20 யூதர்கள்
மக்கா குறைஷிகளிடம் வந்தனர். அவர்களை நபியவர்களுக்கு எதிராக போர் புரிய தூண்டி,
அதற்கு உதவியும் செய்வதாக வாக்களித்தனர். பத்ர் மைதானத்திற்கு அடுத்த ஆண்டு
வருகிறோம் என்று உஹ{த் போர்க்களத்தில் சொல்லிச் சென்று, அதை நிறைவேற்றாமல்
வாக்கை மீறிவிட்ட அந்த குறைஷிகள் தற்போது தங்களது பெருமையைத் தக்கவைத்துக்
கொள்ள விரும்பி யூதர்களின் தூண்டுகோலுக்கு இரையானார்கள்.
பின்பு இக்குழுவினர் அங்கிருந்து கத்ஃபான் கிளையினரிடம் சென்றனர். அவர்களிடமும்
குறைஷிகளிடம் கூறியதுபோல் கூறியதும், உடனே அவர்களும் போருக்கு ஆயத்தமாயினர்.
மேலும், இக்குழு பல அரபு கோத்திரத்தினரை நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக போர்
புரிய தூண்டிவிட்டனர். பல சமுதாயத்தவர் இதை ஏற்று போருக்கு ஆயத்தமானார்கள்.
இறுதியாக இந்த யூத அரசியல் தலைவர்கள், நபியவர்களுக்கு எதிராக அனைத்து
அரபுகளையும் ஒன்று திரட்டுவதில் வெற்றி கண்டனர்.
இந்த முயற்சிக்குப் பின், மேற்கிலிருந்து குறைஷிகளும், திஹாமாவைச் சேர்ந்த கினானா
மற்றும் அவர்களின் நட்புக் கிளையினர் என மொத்தம் 4000 நபர்கள் அப+ஸ{ஃப்யானின்
தலைமையில் புறப்பட்டனர். ~மர்ருள் ளஹ்ரான்| என்ற இடத்திற்கு இப்படை வந்தடைந்த
போது அங்குள்ள ஸ{லைம் கோத்திரத்தினர் இவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பின்பு
மதீனாவிற்குக் கிழக்கில் கத்ஃபான், ஃபஜாரா கிளையினர் உயைனா இப்னு ஸ்னு
தலைமையில் புறப்பட்டனர். மேலும், ஹாரிஸ் இப்னு அவ்ஃப் என்பவனின் தலைமையின்
கீழ் முர்ரா கிளையினரும் மிஸ்அர் இப்னு ருஹைலாவின் தலைமையின் கீழ் அஷ்ஜஃ
கிளையினரும், இதைத் தவிர அஸத் மற்றும் பல கோத்திரத்தினரும் ஒன்றுசேர்ந்து
புறப்பட்டனர்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:13 pm

இந்தப் படையினர் அனைவரும் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கிணங்க
குறிப்பிட்ட தவணையில் அனைவரும் மதீனா சென்று ஒன்றுகூடினர். இவர்கள் 10,000
வீரர்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை மதீனாவிலுள்ள பெண்கள், சிறுவர்கள்,
வாலிபர்கள், வயோதிகர்கள் என அனைவரின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது.
எதிரிகளின் இந்த ராணுவங்கள் அனைத்தும் திடீரென மதீனாவைத் தாக்கினால் நிச்சயம்
முஸ்லிம்களில் ஒருவர்கூட மிஞ்சாமல் அழிந்துவிடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும்
இல்லை. ஆனால், மதீனா நகரத்தின் தலைமைத்துவமோ முற்றிலும் விழித்த நிலையிலேயே
இருந்தது. மதீனாவின் செய்தி சேகரிப்பாளர்கள் பல இடங்களில் தங்கி மிகுந்த
கண்காணிப்புடன் செயல்பட்டு, அங்குள்ள செய்திகளை மதீனாவுக்கு அனுப்பியபடி
இருந்தார்கள். எனவே, எதிரிகளின் இவ்வளவு பெரிய படை புறப்பட்டதும் முஸ்லிம்
ஒற்றர்கள் இப்படையைப் பற்றிய விவரங்களைத் தங்களின் தலைமைக்கு அனுப்பி
வைத்தனர்.
இச்செய்திகள் கிடைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் உடனடியாக ஓர் உயர்மட்ட
ஆலோசனைக் குழுவைக் கூட்டினார்கள். மதீனாவையும் முஸ்லிம்களையும் எப்படி
தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசனை நடத்தினார்கள்.
ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு மத்தியிலும் தளபதிகளுக்கு மத்தியிலும் ஏற்பட்ட
பல கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் சங்கைக்குரிய நபித்தோழராகிய ஸல்மான் ஃபார்ஸி
(ரழி) முன் வைத்த கருத்து முடிவாக ஏற்கப்பட்டது.
'அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பாரசீக நாட்டில் இருந்த போது எங்களை எதிரிகள் தாக்க
வருவதாக இருந்தால் எங்களைச் சுற்றி அகழ் தோண்டிக் கொள்வோம். அவ்வாறே இங்கும்
செய்யலாம்" என ஸல்மான் ஃபார்ஸி (ரழி) கூறினார்கள். இதற்கு முன் இது
அரபியர்களுக்குத் தெரியாத ஒரு புதிய திட்டமாக இருந்தது.
இத்திட்டத்தை கேட்டவுடன் இதை அங்கீகரித்து, அதை நிறைவேற்ற நபி (ஸல்) அவர்கள்
ஆர்வம் காட்டினார்கள். 'ஒவ்வொரு 10 நபர்கள் கொண்ட குழு 40 முழம் அகழ் தோண்ட
வேண்டும்" என்று நபியவர்கள் பணித்தார்கள். முஸ்லிம்கள் மிகுந்த உற்சாகத்துடன் அகழ்
தோண்டுவதில் ஈடுபட்டார்கள். நபியவர்கள் முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டி வந்தார்கள்.
ஸஹ்லு இப்னு ஸஅது (ரழி) கூறுகிறார்: நாங்கள் நபியவர்களுடன் அகழியில் இருந்தோம்.
பலர் குழி தோண்டுவதில் ஈடுபட்டிருந்தார்கள். நாங்கள் மண்ணைத் தோளில் சுமந்து
சென்று வெளியில் போட்டுக் கொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள் கூறினார்கள்:
'அல்லாஹ்வே! மறுமை வாழ்வைத் தவிர வேறு வாழ்வு இல்லை!
முஹாஜிர்கள் அன்சாரிகளை மன்னித்து அருள்வாயாக!" (ஸஹீஹ{ல் புகாரி)
அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: ஒரு நாள் காலை நபி (ஸல்) அவர்கள் அகழ் தோன்றும்
இடத்திற்கு வந்தார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் கடினமான குளிரில்
அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் இக்காரியத்தைச் செய்வதற்கு
அவர்களுக்குச் சொந்தமான அடிமைகள் இருக்கவில்லை. தங்களின் தோழர்களுக்கு
ஏற்பட்ட சிரமத்தையும் பசியையும் பார்த்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'அல்லாஹ்வே! நிச்சயமாக வாழ்க்கை என்பது மறு உலக வாழ்க்கையே!
அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் நீ மன்னித்தருள்வாயாக!"
இதற்கு நபித்தோழர்கள் பதில் கூறும் விதமாக கூறினார்கள்:
'நாங்கள் வாழும் காலமெல்லாம் அறப்போர்
புரிவோமென்று முஹம்மது (ஸல்) அவர்களிடம்
வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள்." (ஸஹீஹ{ல் புகாரி)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:14 pm

பரா இப்னு ஆஜிப் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அகழியிலிருந்து
மண்ணை சுமந்து சென்று வெளியில் போட்டுக் கொண்டிருந்தார்கள். புழுதி அவர்களது
வயிற்றை மறைத்திருந்தது. அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவின் கவி ஒன்றை
அதிகம் சொல்லிக் கொண்டே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அல்லாஹ்வே! நீ இல்லையென்றால்
நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்,
தர்மம் செய்திருக்க மாட்டோம்,
தொழுதும் இருக்க மாட்டோம்.
எங்கள் மீது நீ அருள் பொழிவாயாக!
எதிரிகளை நாங்கள் சந்திக்கும்போது
பாதங்களை நிலைபெறச் செய்வாயாக!
இவர்கள் (குறைஷிகள்) எங்கள் மீது
அக்கிரமம் புரிந்துள்ளார்கள். இவர்கள்
எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால்
அதற்கு நாங்கள் இடம்தர மாட்டோம். (ஸஹீஹ{ல் புகாரி)
இக்கவிதைகளைக் கூறிவிட்டு கடைசி வரியை மட்டும் சப்தத்துடன் மீண்டும் ஒரு முறை
கூறுவார்கள்.
கடுமையான பசி பட்டினிக்கு ஆளாகி இருந்தும் முஸ்லிம்கள் சுறுசுறுப்பாக அகழ்
தோண்டுவதில் ஈடுபட்டிருந்தனர்.
இதைப் பற்றி அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: அகழ் தோண்டிக் கொண்டிருந்தவர்கள் தங்கள்
இரு கை நிரம்ப தொலி கோதுமையை எடுத்து வருவார்கள். அது பழைய எண்ணெயைக்
கொண்டு சமைக்கப்பட்டு, தோழர்களுக்கு முன் வைக்கப்படும். அதனை எளிதில் உண்ண
முடியாமல் தொண்டையில் சிக்கிக் கொள்ளும். அதிலிருந்து மனதிற்கு ஒவ்வாத வாடையும்
வீசும். (ஸஹீஹ{ல் புகாரி)
அப+ தல்ஹா (ரழி) கூறுகிறார்கள்: எங்களின் பசியைப் பற்றி நாங்கள் நபி (ஸல்)
அவர்களிடம் முறையிட்டோம். எங்களது வயிற்றில் ஒரு கல்லைக் கட்டி இருந்ததைக்
காட்டினோம். நபி (ஸல்) அவர்களோ தங்களது வயிற்றில் இரண்டு கற்கள் கட்டி
இருந்ததைக் காட்டினார்கள். (ஸ{னனுத் திர்மிதி, மிஷ்காத்)
மேலும், நபித்துவத்தின் பல அத்தாட்சிகளும் அகழ் தோண்டிக் கொண்டிருக்கும் போது
ஏற்பட்டன. நபி (ஸல்) அவர்கள் கடுமையான பசியில் இருப்பதைப் பார்த்த ஜாபிர் இப்னு
அப்துல்லாஹ் ஒரு சிறிய ஆட்டை அறுத்தார்கள். அவன் மனைவி ஒரு படி தொலி
கோதுமையை அரைத்து ரொட்டி சுட்டார்கள். பின்பு ஜாபிர் நபியவர்களைச் சுந்தித்து
தங்களின் சில தோழர்களுடன் உணவருந்த வருமாறு கூறினார்கள். ஆனால், நபியவர்கள்
ஆயிரத்திற்கு மேற்பட்ட தோழர்களுடன் ஜாபின் வீட்டுக்கு வருகை தந்தார்கள்.
அனைவரும் உணவருந்திச் சென்றனர். ஆனால், சமைக்கப்பட்ட சட்டியில் இருந்த
ஆணமும் குறையவில்லை, சுட்ட ரொட்டியும் குறையவில்லை. (ஸஹீஹ{ல் புகாரி)
நுஃமான் இப்னு பஷீன் சகோதரி சிறிதளவு பேரீத்தம் பழத்தைத் தனது தந்தைக்காகவும்
தாய்மாமாவுக்காகவும் எடுத்து வந்தார். அவர் நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றபோது,
நபியவர்கள் அவரைத் தன்னருகில் அழைத்து அவரிடம் இருந்த பேரீத்தம் பழத்தை
வாங்கி ஒரு துணிக்குமேல் பரத்தினார்கள். பின்பு அகழ் தோண்டிக் கொண்டிருந்தவர்களை
அழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தார்கள்.
பேரீத்தம் பழம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அனைவரும் சாப்பிட்டு
சென்று விட்ட பின்பும் அது குறைவின்றி இருந்தது. (இப்னு ஹிஷாம்)
Pயபந 313 ழக 518
மேற்கூறப்பட்ட இரண்டு சம்பவங்களைவிட ஜாபிர் (ரழி) அறிவிக்கும் மகத்தான ஒரு
சம்பவத்தை இமாம் புகாரி (ரஹ்) பதிவு செய்துள்ளார்கள். 'நாங்கள் அகழ் தோண்டிக்
கொண்டிருந்த போது கடுமையான, இறுக்கமான ஒரு பாறை குறுக்கிட்டது. அப்போது மக்கள்
நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'நபியே! ஒரு பாறை அகழில் குறுக்கிட்டுள்ளது"
என்றார்கள். நபியவர்கள் 'நான் இறங்குகிறேன்" என்று கூறி பாறை இருக்கும் இடத்திற்கு
வந்தார்கள். பசியின் காரணமாக அவர்களுடைய வயிற்றில் கல்லைக் கட்டியிருந்தார்கள்.
நாங்கள் மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இருந்தோம். நபியவர்கள் கடப்பாறையால்
வேகமாக அதை அடிக்கவே அது தூள் தூளாகியது. (ஸஹீஹ{ல் புகாரி)
பரா இப்னு ஆஜிப் (ரழி) கூறுகிறார்கள்: அகழ் தோண்டும்போது ஒரு பகுதியில் எந்த
கடப்பாறையாலும் உடைக்க முடியாத ஒரு பாறை குறுக்கிட்டது. அதைப் பற்றி நபி (ஸல்)
அவர்களிடம் நாங்கள் முறையிட்டோம். நபியவர்கள் கடப்பாறையால் ~பிஸ்மில்லாஹ்| என்று
கூறி ஓர் அடி அடித்துவிட்டு 'அல்லாஹ் மிகப்பெரியவன்!
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:14 pm

ஷாம் தேசப் பொக்கிஷங்கள்
எனக்கு அருளப்பட்டன. நான் இப்போது அங்குள்ள செந்நிறக் கோட்டைகளைப்
பார்க்கிறேன்" என்றார்கள். பின்பு இரண்டாவது முறையாக அப்பாறையை அடித்தார்கள்.
'அல்லாஹ் மிகப் பெரியவன்! பாரசீகத்தின் பொக்கிஷங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டன.
அல்லாஹ்வின் மீது ஆணையாக! அங்குள்ள மதாயின் நகரத்தின் வெள்ளை மாளிகையை
இப்போது பார்க்கின்றேன்" என்றார்கள். பின்பு மூன்றாவது முறையாக ~பிஸ்மில்லாஹ்|
என்று கூறி அடித்தார்கள். மீதமுண்டான கல்லும் உடைக்கப்பட்டது. அப்போது நபியவர்கள்
'அல்லாஹ் மிகப் பெரியவன்! எனக்கு யமன் தேசத்து பொக்கிஷங்கள் கொடுக்கப்பட்டன.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனது இந்த இடத்திலிருந்து ஸன்ஆ நகரத்தின்
தலைவாயில்களைப் பார்க்கின்றேன்" என்றார்கள். (ஸ{னன் நஸாம், முஸ்னது அஹ்மது)
இதுபோன்ற சம்பவம் ஸல்மான் ஃபார்ஸி (ரழி) அவர்கள் மூலமாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது. (இப்னு ஹிஷாம்)
மதீனாவைச் சுற்றி மலைகளும், பேரீத்த மரத்தோட்டங்களும், விவசாய அறுவடைகளை
உலர வைக்கத் தேவையான களங்களும் சூழ்ந்திருந்தன. ஆனால், மதீனாவின் வடக்குப்
பகுதி மட்டும் போக்குவரத்திற்குரிய வழியாக இருந்தது. எனவே, இதுபோன்ற பெரும் படை
வருவதற்கு வடக்குப் பகுதி மட்டும் வழியாக அமைய முடியும் என்பதால் அகழை
வடக்குப் பகுதியில் தோண்டுமாறு கூறியிருந்தார்கள். (இப்னு ஹிஷாம்)
முஸ்லிம்கள் தொடர்ந்து அகழ் தோண்டுவதில் மும்முரமாக ஈடுபட்டனர். பகலெல்லாம்
அகழ் தோண்டி மாலையில் வீடு திரும்புவார்கள். முடிவு செய்யப்பட்ட திட்டத்திற்கேற்ப
அகழ் தோண்டும் பணி எதிரிகளின் படை வருவதற்கு முன்பதாகவே முடிவடைந்தது.
குறைஷிகள் 4000 நபர்களுடன் ~ஜுர்ஃப்| மற்றும் ~ஜகாபா'விற்கு மத்தியிலுள்ள ~ரூமா|
என்ற இடத்தில் ஓடைகள் ஒன்று சேரும் பகுதியில் தங்கினர். கத்ஃபான் மற்றும் நஜ்து
பகுதியைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 6000 நபர்கள் உஹ{திற்கு அருகிலுள்ள ~தனப் நக்மா|
என்ற இடத்தில் தங்கினர்.
நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவத்தைக் கண்டபோது '(இதுதான்) அல்லாஹ்வும்
அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்
உண்மையையே கூறினார்கள்" என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்)
அவர்களுடைய நம்பிக்கையையும் வழிபாட்டையும் அன்றி வேறொன்றையும் அவர்களுக்கு
அதிகப்படுத்தி விடவில்லை. (அல்குர்ஆன் 33:22)
நயவஞ்சகர்களும் பலவீனமான உள்ளம் உள்ளவர்களும் இந்த படையைப் பார்த்து அஞ்சி
நடுங்கினர். இவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
Pயபந 314 ழக 518
'அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குச் சதி செய்வதற்காகவே (வெற்றி நமக்கே
கிடைக்குமென்று) வாக்களித்தார்கள்" என்று எவர்களுடைய உள்ளங்களில் நோயிருந்ததோ
அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதையும் நினைத்துப் பாருங்கள்.
(அல்குர்ஆன் 33:12)
நபி (ஸல்) அவர்கள் பெண்களையும் சிறுவர்களையும் மதீனாவிலிருந்த கோட்டையில்
பாதுகாப்பாக வைத்து அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களைப்
பிரதிநிதியாக நியமித்தார்கள். அதன் பிறகு மூவாயிரம் முஸ்லிம்களுடன் எதிரிகளைச்
சந்திக்கப் புறப்பட்டார்கள். அங்கு ~ஸல்உ| என்ற மலையைத் தங்களது முதுகுப்புறமாகவும்,
எதிரிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் அகழைத் தடையாகவும் ஆக்கிக்
கொண்டார்கள். முஸ்லிம்களுக்கிடையில் அடையாள வார்த்தையாக ~ஹாமீம், லா
யுன்ஸரூன்| என்ற வசனம் நிர்ணயிக்கப்பட்டது.
எதிரிகள் முஸ்லிம்களைத் தாக்கவும், மதீனாவில் நுழையவும் நாடிய போது அதற்குத்
தடையாக அகழ் இருப்பதைப் பார்த்தனர். வேறு வழியின்றி முஸ்லிம்களை
முற்றுகையிடுவோம் என்ற முடிவில் அனைவரும் அகழைச் சூழ்ந்து கொண்டனர்.
இப்படிப்பட்ட ஒரு திட்டத்தை அவர்கள் எதிர்பாராததால் அதற்கான எவ்வித தயாரிப்பும்
செய்திருக்கவில்லை. அகழியைப் பார்த்த அவர்கள் 'இது மாபெரும் ஒரு சூழ்ச்சி;
அரபியரல்லாத ஒருவர்தான் இதைக் கூறியிருக்க வேண்டும்" என்று தங்களுக்குள்
புலம்பினார்கள்.
இணைவைப்பவர்கள் மிகக் கோபத்துடன் அகழைச் சுற்றி வந்தார்கள். எங்காவது ஒரு சிறு
வழி கிடைத்தால் அதன் மூலம் சென்று விடலாம் என்று முயன்றனர். ஆனால்,
முஸ்லிம்கள் அகழின் பக்கம் எதிரிகளை நெருங்கவிடாமல் அம்பால் தாக்கினர். அகழை
நெருங்குவதோ அல்லது அகழில் இறங்குவதோ அல்லது அகழை மண்ணால் மூடி பாதை
அமைப்பதோ எதிரிகளால் முடியாத அளவிற்கு முஸ்லிம்கள் அம்பு மழை பொழிந்தனர்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:14 pm

குறைஷி குதிரை வீரர்களில் சிலர் முற்றுகையின் முடிவை எதிர்ப்பார்த்து அகழைச் சுற்றி
நின்று கொண்டிருப்பதை வெறுத்து அகழியில் குதிப்பதற்குப் புறப்பட்டனர். அம்ர் இப்னு
அப்து உத், இக்மா இப்னு அப+ஜஹ்ல், ழரார் இப்னு கத்தாப் போன்றோர் அகழின் ஒரு
குறுகிய இடத்தைத் தேடி அதில் இறங்கினர். பின்பு அகழிக்கும் ~ஸல்உ| மலைக்கும்
மத்தியிலுள்ள சதுப்பான இடத்தில் அவர்களது குதிரைகள் சிக்கித் தடுமாறின. இதைப்
பார்த்த அலீ இப்னு அப+தாலிப் (ரழி) முஸ்லிம்கள் சிலரை அழைத்துச் சென்று எதிரிகள்
திரும்ப ஓட முடியாதவாறு அவர்கள் வந்த வழியை அடைத்து விட்டார்கள். இப்போது
எதிரிகளும் முஸ்லிம்களும் நேருக்கு நேர் சந்தித்தனர். அம்ர், 'தன்னிடம் நேருக்கு நேர்
யார் மோதுவது?" என்று கேட்க, அலீ (ரழி) 'நான்" என்றார்கள். அம்ருக்கு முன் நின்ற
அலீ (ரழி), அவன் கோபமடையும்படி சில வார்த்தையைக் கூறவே அவன்
கொதித்தெழுந்தான். தனது குதிரையின் காலை வெட்டி அதன் முகத்தில் வாளால் அறைந்து
விட்டு அலீயை நோக்கி சீறினான். இருவரும் தங்களின் வாளை சுழற்ற சில நொடிகளில்
அலீ (ரழி) அவர்களின் வாள் அம்ரின் தலையைச் சீவியது. ஆயிரம் வீரர்களுக்குச்
சமமானவன் என்று பெயர் பெற்ற அம்ரை பிண்டமாகப் பார்த்த மற்றவர்கள் பயந்து
அகழைத் தாண்டி ஓட்டம் பிடித்தனர். மாபெரும் வீரராக விளங்கிய இக்மா கூட பயத்தால்
தனது ஈட்டியையும் போட்டுவிட்டு ஓடினார்.
எதிரிகள் அங்கு முற்றுகையிட்டிருந்த சில நாட்களில் பலமுறை அகழியில் இறங்குவதற்கும்,
அதன் மீது பாதை அமைப்பதற்கும் மிகத் தீவிரமாக முயன்றனர். ஆனால், முஸ்லிம்களின்
அம்பு மழைக்கு எதிராக அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.
இதுபோன்ற தற்காப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் நபி (ஸல்) அவர்களுக்கும்
முஸ்லிம்களுக்கும் சில நேரத் தொழுகைகள் தவறின.
Pயபந 315 ழக 518
ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: அகழ் போரின் போது நபி (ஸல்) அவர்களை உமர் (ரழி)
சந்தித்து குறைஷிகளை ஏசினார். பிறகு 'அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையப்
போகிறது. ஆனால், இன்னும் நான் அஸ்ர் தொழுகவில்லை" என்றார். அதற்கு நபியவர்கள்
'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நானும் அஸ்ரைத் தொழவில்லை" என்றார்கள். பின்பு
நாங்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களுடன் ~புத்ஹான்| என்ற இடத்திற்குச் சென்று
உழுச் செய்து சூரியன் மறைந்த பின் அஸ்ரை முதலில் தொழுது பிறகு மக்ரிப்
தொழுகையைத் தொழுதோம். (ஸஹீஹ{ல் புகாரி)
தொழுகைகள் தவறியதற்குக் காரணமாயிருந்த இணைவைப்பவர்களுக்கு எதிராக நபி (ஸல்)
அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். இது குறித்து அலீ (ரழி)
கூறுகிறார்கள்:
'யா அல்லாஹ்! இவர்களின் இல்லங்களையும், புதைக்குழிகளையும் நெருப்பால்
நிரப்புவாயாக! எங்களை சூரியன் மறையும் வரை அஸர் தொழவிடாமல் இவர்கள்
தடுத்தனர்" என்று நபி (ஸல்) அவர்கள் வேண்டினார்கள். (ஸஹீஹ{ல் புகாரி)
முஸ்னது அஹ்மது மற்றும் முஸ்னது ஷாபிஈ ஆகிய நூற்களில் ளுஹர், அஸ்ர், மஃரிப்,
இஷா ஆகிய தொழுகைகளைத் தொழவிடாமல் தடுத்தனர் என்றும் வந்துள்ளது. ஸஹீஹ{ல்
புகாரியில் அஸ்ர் தொழுகை மட்டும் என்று கூறப்பட்டுள்ளதை இதற்கு முன்பு பார்த்தோம்.
இதற்கு விளக்கத்தை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:
'அகழ்ப்போர் பல நாட்களாக நடந்தது. அதில் சில நாட்களில் அஸ்ர் மட்டும் தொழாமல்
இருந்திருக்கலாம். சில நாட்களில் மற்றும் பல தொழுகைகளையும் தொழ முடியாமல்
ஆகியிருக்கலாம்." (ஷரஹ் முஸ்லிம்)
இதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவெனில்: எதிரிகள் அகழைக் கடக்க முயற்சி
செய்ததும், முஸ்லிம்கள் அதை எதிர்த்ததும் பல நாட்களாக நீடித்தது. ஆனால் இரு
படைகளுக்கும் இடையில் அகழ் தடையாக இருந்ததால் நேரடியான சண்டையோ, பலத்த
சேதமோ யாருக்கும் ஏற்படவில்லை. இரு தரப்பிலிருந்தும் அம்பெறிந்தே தாக்குதல் நடந்தது.
இவ்வாறு இருதரப்பினரும் அம்பெய்து கொண்டதில் விரல்விட்டு எண்ணும் அளவுக்கு இரு
தரப்பிலும் ஒரு சிலர் கொல்லப்பட்டனர். அதாவது, முஸ்லிம்களில் ஆறு பேரும் இணை
வைப்பவர்களில் பத்து பேரும் கொல்லப்பட்டனர். இதில் ஒரு சிலர் வாளாலும்
கொல்லப்பட்டனர்.
ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களை ஓர் அம்பு தாக்கியதில் அவர்களது
குடங்கையிலுள்ள நரம்பு துண்டிக்கப்பட்டது. ஹப்பான் இப்னு அக்கா என்பவன்தான் இந்த
அம்பை எறிந்தான். இந்தக் காரியம் ஸஅது (ரழி) அவர்களை அதிகம் வருத்தவே
அவர்கள் அல்லாஹ்விடம் 'அல்லாஹ்வே! உனது தூதரைப் பொய்யாக்கி, அவர்களை
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:14 pm

வெளியாக்கிய கூட்டத்தினரைத் தவிர வேறு எவரிடமும் உனக்காக நான் போர் புரிவது
எனக்கு விருப்பமாக இல்லை என்பதை நீ நன்கு அறிவாய். அல்லாஹ்வே! எங்களுக்கும்
அவர்களுக்குமிடையில் போரை நீ இத்துடன் முடித்துவிட்டாய் என்றே நான் கருதுகிறேன்.
அல்லாஹ்வே! குறைஷிகளிடம் போர் புரிய வேண்டிய நிலை மீண்டும் ஏற்படும்
என்றிருந்தால், உனக்காக நான் அவர்களிடம் போர் புரிவதற்கு என்னை உயிருடன் வாழ
வை! நீ போரை முடித்துவிட்டாய் என்றிருப்பின் இக்காயத்திலேயே எனக்கு மரணத்தை
ஏற்படுத்தி விடு" என்று வேண்டினார்கள். (ஸஹீஹ{ல் புகாரி)
'பனூ குரைளா யூதர்கள் குறித்து என் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் வரை என் உயிரை
கைப்பற்றிவிடாதே" என்றும் வேண்டினார்கள் என ~தாரீக் இப்னு ஷாமி'ல்
கூறப்பட்டிள்ளது.
Pயபந 316 ழக 518
முஸ்லிம்கள் இப்போரில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருந்த சமயத்தில்
பொந்துகளிலிருந்த விஷப் பாம்புகள் (யூதர்கள்) தங்களின் விஷத்தைக் கக்குவதற்குத்
துடித்தன. நழீர் வமிச யூதர்களின் மிகப் பெரிய விஷமி ஹை இப்னு அக்தப், குரைளா
இன யூதர்களின் இல்லங்களுக்குச் சென்றான். முதலில் கஅப் இப்னு அஸதிடம் வந்தான்.
இவன்தான் குரைளா இன யூதர்களின் தலைவன். ஹை இவனது வீட்டுக் கதவை
தட்டினான். ஆனால், கஅப் கதவை ப+ட்டிக்கொண்டு திறக்க மறுத்துவிட்டான். ஹய்
அதிகம் வற்புறுத்தவே கஅப் கதவைத் திறந்தான். அப்போது ஹை, கஅபிடம், 'கஅபே!
நான் உன்னிடம் உனக்கு நிரந்தரமாக கண்ணியம் தரும் ஒன்றையும், கடல் அலை போன்ற
பெரிய படையையும் கொண்டு வந்திருக்கிறேன். அதாவது, குறைஷிகளை அவர்களது
தலைவர்கள், தளபதிகளுடன் அழைத்து வந்து ரூமாவில் உள்ள ~மஜ்மஉல் அஸ்யாலில்|
தங்க வைத்துள்ளேன். அவ்வாறே கத்பான் கிளையினர்களை அவர்களது தலைவர்கள்,
தளபதிகளுடன் அழைத்து வந்து உஹ{துக்கு அருகில் உள்ள ~தனப் நக்மா'வில் தங்க
வைத்துள்ளேன். இவர்களெல்லாம் முஹம்மதையும் அவரைப் பின்பற்றியவர்களையும்
ப+ண்டோடு அழிக்காத வரை இங்கிருந்து திரும்ப மாட்டோம் என என்னிடம் ஒப்பந்தமும்,
உடன்படிக்கையும் செய்துள்ளனர்" என்றான்.
இதைக் கேட்ட கஅப்: 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ காலமெல்லாம் இழிவு தரும்
செயல்களையே என்னிடம் செய்யச் சொல்கிறாய். அதுமட்டுமல்ல, நீ என்னிடம் கூறிய
காரியம் எப்படியெனில் வெறும் இடிஇடித்து, மின்னல் வெட்டி மழை தராத ஒரு மேகத்தைப்
போன்றதுதான். ஹய்யே! உனக்கு நாசம் உண்டாகட்டும்! என்னை எனது நிலையில்
விட்டுவிடு. நான் முஹம்மதிடம் உண்மை, வாக்கை நிறைவேற்றும் தன்மை இவற்றைத்
தவிர வேறு எதையும் பார்க்கவில்லை" என்றான்.
ஆனால் ஹய், கஅபைத் தொடர்ந்து மூளைச் சலவை செய்தான். இறுதியாக அல்லாஹ்வின்
மீது சத்தியம் செய்து ஓர் உடன்படிக்கையையும் செய்தான். அதாவது 'முஹம்மதை
அழிக்காமல் குறைஷிகள் மற்றும் கத்ஃபானியர்கள் தோல்வியுற்று திரும்பிவிட்டாலும் நான்
உன்னை விட்டும் பிரிய மாட்டேன். உன்னுடன் உனது கோட்டைக்குள் நானும் இருப்பேன்.
முஹம்மதாலும் அவருடைய படையாலும் உனக்கு ஏற்படும் கதி எனக்கும் ஏற்படட்டும்.
நான் உன்னை விட்டு ஒருக்காலும் பிரியமாட்டேன்." இந்த வாக்குறுதியை ஹை
கூறியவுடன் கஅப் முஸ்லிம்களுக்கும் தனக்குமிடையிலுள்ள உடன்படிக்கையை முறித்துக்
கொண்டான். அதை அடுத்து முஸ்லிம்களுக்கு எதிராகச் சண்டை செய்வதற்காக அவன்
இணைவைப்பவர்களுடன் சேர்ந்து கொண்டான். (இப்னு ஹிஷாம்)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:15 pm

இதைத் தொடர்ந்து, உடனடியாக குரைளா இன யூதர்கள் முஸ்லிம்களுடன் போர்
நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை இப்னு இஸ்ஹாக் (ரஹ்)
கூறுகிறார்:
ஹஸ்ஸான் இப்னு ஸாபிதுக்கு சொந்தமான ~ஃபாஉ| என்ற கோட்டையில் நபியவர்களின்
மாமியான ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிபும் மற்ற முஸ்லிம் பெண்களும்
சிறுவர்களும் பாதுகாக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்குத் துணையாக ஹஸ்ஸான்
இப்னு ஸாபித் (ரழி) இருந்தார்.
ஸஃபிய்யா (ரழி) கூறுகிறார்: அப்போது ஒரு யூதன் அக்கோட்டையைச் சுற்றி சுற்றி
வந்தான். பனூ குரைளா யூதர்கள் நபியவர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை
முறித்துவிட்டு போருக்குத் ஆயத்தமாகி விட்டனர் என்பது எங்களுக்குத் தெரியவந்து,
அவர்கள் எங்களைத் தாக்க நாடினால்கூட எங்களைப் பாதுகாப்பதற்கு ஹஸ்ஸானைத் தவிர
யாரும் இல்லை. ஏனெனில், நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் தங்களது எதிரிகளுடன்
மிகத் தீவிரமாக போரில் ஈடுபட்டிருந்தனர். எங்களைத் தாக்குவதற்கு யாராவது வந்தாலும்
அவர்களால் எதிரிகளை விட்டுவிட்டு எங்களைக் காப்பாற்றுவதற்காக மதீனாவிற்குள் வர
Pயபந 317 ழக 518
இயலாது. எனவே, நான் ஹஸ்ஸானிடம் 'ஹஸ்ஸானே! இந்த யூதன் கோட்டையைச் சுற்றி
வருவதை நீ பார்க்கிறாய். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாம் பாதுகாப்பின்றி இருப்பதை
நமக்குப் பின்னால் இருக்கும் மற்ற யூதர்களுக்கு இவன் கூறிவிடுவானோ என நான்
அஞ்சுகிறேன். நபியவர்களும் நபித் தோழர்களும் நமது நிலையை அறிந்து கொள்ள
முடியாமல் இருக்கிறார்கள். எனவே, நீ இறங்கி சென்று அவனைக் கொன்றுவா!" எனக்
கூறினேன்.
அதற்கு ஹஸ்ஸான் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அது என்னால் முடியாது என்பது
உனக்கு நன்றாகவே தெரியும்" எனக் கூறிவிட்டார். உடனே நான் எனது இடுப்புத் துணியை
இறுக்கிக் கட்டிக் கொண்டு ஒரு தடியைக் கையில் எடுத்தேன். பின்பு கோட்டையிலிருந்து
வெளியேறிச் சென்று அந்த யூதனை நான் வைத்திருந்த கைத்தடியால் அடித்துக்
கொன்றேன். பின்பு கோட்டைக்குள் வந்து 'ஹஸ்ஸானே! இறங்கிச் சென்று அவனது
உடைமைகளை எடுத்து வா! அவன் ஆண் என்பதால்தான் அவனது உடைமைகளை
என்னால் எடுக்க முடியவில்லை" என்றேன். அது எனக்குத் தேவையில்லையென
ஹஸ்ஸான் கூறிவிட்டார். (இப்னு ஹிஷாம்)
நபி (ஸல்) அவர்களின் மாமி ஸஃபிய்யா (ரழி) அவர்கள் செய்த இந்த வீரச்செயலினால்
பெண்களும், சிறுவர்களும் பாதுகாக்கப்பட்டார்கள். அதாவது, கோட்டைகளை வேவு
பார்ப்பதற்காக சென்ற யூதன் திரும்ப வரவில்லை என்பதை அறிந்த மற்ற யூதர்கள்
மதீனாவில் உள்ள கோட்டைகள் அனைத்தும் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளன என்று
எண்ணினர். ஆகையால் மற்றொரு முறை இதுபோன்று துணிவு கொள்ள அவர்கள்
முன்வரவில்லை. இருப்பினும் யூதர்கள் போரில் ஈடுபட்டுள்ள இணைவைப்பவர்களுக்கு
உணவுகள் அனுப்பி வைத்தனர். இது யூதர்கள் முஸ்லிம்களிடம் செய்துகொண்ட
ஒப்பந்தத்திற்கு எதிராக இணைவைப்பவர்களுடன் இணைந்து கொண்டனர் என்பதற்கு
ஆதாரமாக இருந்தது. இவ்வாறு அனுப்பப்பட்ட உணவுகளில் இருபது ஒட்டகங்களை
முஸ்லிம்கள் பறிமுதல் செய்தனர்.
யூதர்கள் இணைவைப்பவர்களுடன் இணைந்துவிட்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்கும்
முஸ்லிம்களுக்கும் கிடைத்தது. இதனால் அவர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்காக
இச்செய்தியை உறுதி செய்து கொள்ள நபியவர்கள் தீவிரம் காட்டினார்கள். ஸஅது இப்னு
முஆத், ஸஅது இப்னு உபாதா, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, கவ்வாத் இப்னு ஜுபைர்
(ரழி) ஆகியோரை உண்மை நிலையை அறிந்து வர நபியவர்கள் அனுப்பினார்கள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:15 pm

நபி
(ஸல்) தங்கள் தோழர்களிடம், 'நீங்கள் அவர்களிடம் செல்லுங்கள். அவர்களைப் பற்றி
நமக்குக் கிடைத்த செய்தி உண்மைதானா? என்று பாருங்கள். நாம் கேள்விப்பட்டது
உண்மையாக இருப்பின் என்னிடம் நான் அறிந்து கொள்ளும் விதமாக சைகை மட்டும்
செய்யுங்கள். மக்களிடம் அந்தச் செய்தியை பரப்பி விடாதீர்கள். அவர்கள் வாக்குறுதி
மாறாமல் இருந்தால் அதை மக்கள் அனைவருக்கும் தெரியும் படி சொல்லுங்கள்"
என்றார்கள்.
இதற்குப் பின் நபித்தோழர்கள் யூதர்களிடம் வந்தனர். யூதர்கள் இவர்களுக்கு மிகக் கெட்ட
பதிலைக் கூறியதுடன் நபி (ஸல்) அவர்களை வசைபாடினர். 'அல்லாஹ்வின் தூதர்
என்றால் யார் அவர்? எங்களுக்கும் முஹம்மதுக்கும் எவ்வித உடன்படிக்கையும்
ஒப்பந்தமும் இல்லை" என்றனர். இந்தப் பதிலைக் கேட்டு நபியவர்களிடம் திரும்பிய
தோழர்கள் ~அழல், காரா| என்றனர். (அதாவது ~ரஜீஃ| என்னும் இடத்தில் நபித்தோழர்களை
அழல், காரா கிளையினர் வஞ்சகமாகக் கொன்றது போல் யூதர்களும் நம்முடன் வஞ்சகம்
செய்கின்றனர் என்று பொருள்.)
நபி (ஸல்) அவர்களைத் தவிர இந்த உண்மை பிறமக்களுக்குத் தெரியாமல் இருக்க
நபித்தோழர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் இல்லை. யூதர்களின் மோசடி
Pயபந 318 ழக 518
உண்மைதான் என்பதை மக்களும் அறிந்து கொண்டனர். இதனால் தங்களுக்கு முன்
பெரும் ஆபத்து வந்து விட்டதை மக்கள் உணர்ந்து கொண்டனர்.
முஸ்லிம்களுக்கு இது மிக இக்கட்டான நிலையாக இருந்தது. குரைளா யூதர்கள்
பின்புறத்திலிருந்து தாக்குதல் நடத்தினால் அதைத் தடுக்கவும் முடியாது. எதிர் திசையிலோ
மிகப் பெரிய படை. அதை விட்டு எங்கும் செல்லவும் முடியாது. துரோகம் இழைத்த
யூதர்களுக்கு அருகில்தான் முஸ்லிம்களின் பெண்களும் சிறுவர்களும் எவ்வித உரிய
பாதுகாப்புமின்றி இருந்தனர். இவர்களது நிலை அல்லாஹ் குர்ஆனில் கூறியது போன்றே
இருந்தது.
உங்களுக்கு மேற்புறமிருந்தும் கீழ்ப்புறமிருந்தும் (உங்களைச் சூழ்ந்துகொண்டு) அவர்கள்
வந்த சமயத்தில் உங்களுடைய திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து உங்களுடைய
உள்ளங்கள் உங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து (நீங்கள் திக்குமுக்காடி)
அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் (தவறாகப்) பலவாறு எண்ணிய சமயத்தையும் நீங்கள்
நினைத்துப் பாருங்கள். அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்குள்ளாகி
மிக்க பலமாக அசைக்கப்பட்டனர். (அல்குர்ஆன் 33:10,11)
முஸ்லிம்களுடன் இருந்த சில நயவஞ்சகர்களின் வஞ்சகத்தனம் அப்போது வெளிப்பட்டது.
'நாங்கள் கிஸ்ரா, கைஸருடைய கஜானாக்களை அடைவோம் என்று முஹம்மது எங்களுக்கு
வாக்குக் கொடுக்கிறார். ஆனால், இன்று எங்களால் சுயதேவையை நிறைவேற்றுவதற்குக் கூட
செல்ல முடியவில்லை. அந்த அளவு பயத்தில் இருக்கிறோம்" என்று சிலர் கூறினர்.
'எங்களின் வீடு பாதுகாப்பின்றி இருக்கின்றது. எனவே, நாங்கள் போரிலிருந்து திரும்பி
விடுகிறோம். எங்களது வீடுகள் மதீனாவிற்கு வெளியில் இருக்கின்றன" என்று சிலர்
கூறினர். ஸலமா கிளையினர் கூட போரிலிருந்து திரும்பிட எண்ணினர். இவர்களைப்
பற்றியே பின்வரும் குர்ஆன் வசனம் இறக்கப்பட்டது.
நயவஞ்சகர்களும் உள்ளங்களில் நோய் உள்ளவர்களும் 'அல்லாஹ்வும் அவனது தூதரும்
எங்களுக்கு ஏமாற்றத்தைத் தவிர வேறொன்றையும் வாக்களிக்கவில்லை." என்று
கூறுகின்றனர். அவர்களில் ஒரு கூட்டத்தினர் (மதீனாவாசிகளை நோக்கி) 'யஸ்ப் வாசிகளே!
(எதிரிகள் முன்) உங்களால் நிற்க முடியாது. ஆதலால், நீங்கள் திரும்பிச் சென்று
விடுங்கள்" என்று கூறியதையும், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவர்களுடைய வீடுகள்
அபாயகரமான நிலைமையில் இல்லாமல் இருந்தும் 'நிச்சயமாக எங்களுடைய வீடுகள்
அபாயகரமான நிலைமையில் இருக்கின்றன" என்று கூறி (போர்க்களத்திலிருந்து சென்றுவிட
நமது) நபியிடம் அனுமதி கோரியதையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் (போரிலிருந்து)
தப்பி ஓடிவிடுவதைத் தவிர (வேறொன்றையும்) விரும்பவில்லை. (அல்குர்ஆன் 33:13)
குரைளா யூதர்கள் தங்களுக்கு மோசடி செய்து விட்டனர் என்ற செய்தி கிடைத்ததும் நபி
(ஸல்) அவர்கள் தங்களது முகத்தை போர்வையால் மூடிக்கொண்டு நீண்ட நேரம் சாய்ந்து
படுத்து சிந்தனையில் ஆழ்ந்தார்கள். இங்கு முஸ்லிம்கள் கடும் சோதனைக்கும்,
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:15 pm

துன்பத்திற்கும் ஆளாகினர். பிறகு நபியவர்கள் எழுந்து 'அல்லாஹ் மிகப் பெரியவன்.
முஸ்லிம்களே! அல்லாஹ் வுடைய வெற்றியும் உதவியும் உங்களுக்குண்டென நற்செய்தி
பெற்றுக் கொள்ளுங்கள்" என்றார்கள். இதற்குப் பின் நிலைமையைச் சமாளிப்பதற்கு
நபியவர்கள் திட்டங்களைத் தீட்டினார்கள். அதில் முதல் கட்டமாக மதீனாவிலுள்ள
பெண்களும் சிறுவர்களும் தாக்கப்படாமல் இருப்பதற்காக அங்கு பாதுகாப்புப் பணியில்
ஈடுபட உடனடியாக சில வீரர்களை அனுப்பினார்கள்.
இது மட்டுமல்லாமல், எதிர்த்தரப்பு படையில் இருக்கும் குறைஷி அல்லாத கூட்டத்தனரிடம்
ஒப்பந்தம் செய்து கொண்டால் அவர்களைப் போர்முனையிலிருந்து திருப்பி விடலாம்.
பிறகு முஸ்லிம்களின் பரம எதிரியான குறைஷிகளைப் போர்க்களத்தில் ஒரு கை
Pயபந 319 ழக 518
பார்த்துவிடலாம் என்று எண்ணி, இது குறித்து அன்சாரிகளின் தலைவர்களான ஸஅது
இப்னு முஆத், ஸஅது இப்னு உபாதா (ரழி) ஆகிய இருவரிடமும் நபி (ஸல்) அவர்கள்
ஆலோசனை நடத்தினார்கள். 'எதிரிப் படையிலுள்ள கத்ஃபான் குலத் தலைவர்களான
உயைனா இப்னு ஹிஸ்ன், ஹாரிஸ் இப்னு அவ்ஃப் ஆகியோருக்கு தூதனுப்பி மதீனாவின்
விளைச்சல்களில் மூன்றில் ஒரு பகுதியை உங்களுக்குத் தருகிறோம், நீங்கள் எங்களுடன்
சண்டையிடுவதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென கேட்போமா? என்று நபி (ஸல்)
ஆலோசனை கேட்டார்கள். அதற்கு அவ்விருவரும் 'நபியே! நீங்கள் கூறும் இந்த
ஆலோசனை அல்லாஹ்வின் கட்டளையாக இருந்தால் நாங்கள் அதற்குக் கட்டுப்படுகிறோம்.
அதே சமயம் இது எங்களின் நலனுக்காக நீங்கள் செய்வதாக இருந்தால் நிச்சயம் நாங்கள்
அதனை விரும்பவில்லை. காரணம், மதீனாவில் விளையும் பழங்களை நாங்கள் விற்றாலோ
அல்லது விருந்தளித்தாலோ மட்டுமே கத்ஃபான் குலத்தினர் உண்ண முடியும். இதைத் தவிர
வேறு வழியில் மதீனாவின் பழங்களை அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது.
நாங்கள் இஸ்லாமை ஏற்பதற்கு முன்பே இந்நிலையென்றால், இன்று அல்லாஹ் எங்களை
இஸ்லாமின் மூலம் கண்ணியப்படுத்தி எங்களுக்கு நேர்வழியையும் தந்துவிட்டான்.
இப்போது பணிந்து நாங்கள் எங்களது செல்வங்களை அவர்களுக்குக் கொடுப்பதா?
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! வாளைத் தவிர வேறு எதையும் நாங்கள் அவர்களுக்குக்
கொடுக்க மாட்டோம். (அதாவது பணிய மாட்டோம்) இறுதிவரை போரிடுவோம்" என்று
அவ்விருவரும் கூறினார்கள். இவ்விருவரின் கருத்தையும் ஏற்றுக் கொண்ட நபியவர்கள்
'அரபிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து உங்களைத் தாக்குகிறார்களே என்ற நிலை கருதி
உங்களின் நன்மைக்காக இந்த ஆலோசனையை முன் வைத்தேன்" என்று விளக்கினார்கள்.
அன்சாரிகளின் இந்த உறுதி, நிலை குலையாமை, துணிவு, மற்ற எல்லாத் தோழர்களின்
பொறுமை, தியாகம் - இவை அனைத்தும் அல்லாஹ்விற்கு பிடித்துவிட்டது. அல்லாஹ{த்
தஆலா தன் புறத்திலிருந்து உதவியை இறக்கினான். எதிரிகளைத் தோற்கடித்து அவர்களது
ராணுவங்களை புறமுதுகு காட்டி ஓடச் செய்தான். இதற்காக அல்லாஹ் செய்த ஏற்பாட்டில்
இந்நிகழ்ச்சியும் ஒன்றாகும். கத்ஃபான் கோத்திரத்தில் நுஅய்ம் இப்னு மஸ்வூத் இப்னு
ஆமிர் என்பவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து 'அல்லாஹ்வின் தூதரே! நான்
முஸ்லிமாகி விட்டேன். ஆனால், நான் முஸ்லிமானது எனது கூட்டத்தினருக்குத் தெரியாது.
எனவே, நீங்கள் முஸ்லிம்களுக்குச் சாதகமாக ஏதாவது செய்யச் சொன்னால், நான்
அதன்படி செய்கிறேன்" என்றார்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:16 pm

தனியாக என்ன செய்து விட
முடியும்? உன்னால் முடிந்தால் எங்களை விட்டும் எதிரிகளைத் திசை திருப்பும் தந்திரம்
எதையாவது செய். ஏனெனில், போர் என்பதே ஒரு சூழ்ச்சிதான்" என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றுக்கினங்க அவர் குரைளாவனரிடம் சென்றார். இவர்
குரைளாவினன் நண்பராக இருந்ததால், அவர்களிடம் சென்று 'நான் உங்களை எந்தளவு
விரும்புகிறேன் என்பதையும் எனக்கும் உங்களுக்குமிடையிலுள்ள வலுவான தொடர்பையும்
நீங்கள் நன்கு அறிவீர்கள்தானே?" என்றார். அதற்கவர்கள் 'ஆம்! என்றனர். இந்த ஊர்
உங்களுடைய ஊராகும். இதில்தான் உங்களுடைய சொத்துகளும், பிள்ளைகளும்,
பெண்களும் இருக்கின்றனர். நீங்கள் இந்த ஊரைவிட்டு வேறு எங்கும் தப்பித்துச் செல்ல
முடியாது. ஆனால், குறைஷிகள் உங்களைப் போன்றல்ல. அவர்களும் கத்ஃபான்களும்
முஹம்மதிடம் போர் செய்வதற்காக இங்கு வந்திருக்கின்றனர். நீங்களும் முஹம்மதுக்கு
எதிராக அவர்களுக்கு உதவி செய்கிறீர்கள். ஆனால், அவர்களது ஊர் இதுவல்ல.
அவர்களது செல்வங்களும் பிள்ளைகளும் இங்கு இல்லை. அவர்களுக்கு நல்ல வாய்ப்பு
கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படி வாய்ப்பு கிட்டவில்லை
என்றாலோ அல்லது போரில் தோல்வியுற்றாலோ அவர்கள் தங்களது ஊர்களுக்குத்
திரும்பச் சென்று தப்பித்துக் கொள்வார்கள். நீங்கள் முஹம்மதிடம் வசமாக மாட்டிக்
கொள்வீர்கள். அவரோ உங்களிடம் பழிதீர்த்துக் கொள்வார். நீங்கள் என்ன செய்ய
முடியும்" என்று கேட்டார். அதற்கு யூதர்கள் 'நுஅய்மே! நாங்கள் என்ன செய்ய வேண்டும்
Pயபந 320 ழக 518
என்று நீ கூறுகிறாய்" எனக் கேட்டனர். அதற்கவர் 'நீங்கள் அவர்களிடம் அவர்களின்
சில நபர்களை உங்களிடம் அடைமானமாக வைத்துக்கொள்ள கேளுங்கள். அவர்கள்
சிலரை ஒப்படைக்காத வரை நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக போர் புரியாதீர்கள்" என்று
கூறினார். அதற்கு யூதர்கள் 'நீ எங்களுக்குச் சரியான ஆலோசனை கூறிவிட்டாய்" என்று
கூறினர்.
இதற்குப் பின் நேரடியாக நுஅய்ம் குறைஷிகளைச் சந்தித்தார். அவர்களிடம் 'உங்களை
நான் நேசிப்பதையும் உங்களுக்கு நான் நல்லதையே செய்வேன் என்பதையும் நீங்கள் நன்கு
அறிவீர்கள் தானே" என்று கேட்டார். அதற்கு அவர்கள் 'ஆம்!" அப்படித்தான் என்றனர்.
அப்போது குறைஷிகளிடம் நுஅய்ம், 'யூதர்கள் முஹம்மதுக்கும் அவரது தோழர்களுக்கும்
செய்து கொடுத்த உடன்படிக்கையை முறித்தது பற்றி மிகவும் கைதேசமடைந்துள்ளனர்.
அதனால் உங்களிடமிருந்து உங்களின் சில நபர்களை அடைமானமாக உங்களிடமிருந்து
வாங்கி, அவர்களை முஹம்மதிடம் கொடுத்துத் தாங்கள் செய்த குற்றத்திற்கு பரிகாரம்
தேடிக்கொள்ள எண்ணுகின்றனர். ஆகையால், அவர்கள் உங்களிடம் உங்களின் ஆட்களை
அடைமானமாகக் கேட்டால் நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள்" என்று கூறினார். அவ்வாறே
கத்ஃபானியரைச் சந்தித்து குறைஷிகளிடம் கூறியது போன்று கூறினார்.
ஹிஜ் 5, ஷவ்வால் மாதம் சனிக்கிழமை இரவு குறைஷிகள் யூதர்களிடம் ஒரு செய்தி
அனுப்பினர். அதாவது 'நாங்கள் இப்போது அந்நிய ஊருக்கு வந்திருக்கிறோம். எங்களின்
குதிரைகளும், ஒட்டகங்களும் அழிந்துவிட்டன. நீங்களும் எங்களுடன் புறப்படுங்கள். நாம்
அனைவரும் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்" என்பதுதான் அந்தச் செய்தியின்
சுருக்கம்.
குறைஷிகளின் இக்கோரிக்கையை யூதர்கள் நிராகரித்ததுடன் 'இன்று சனிக்கிழமை.
இந்நாளில் நாங்கள் செய்த குற்றத்திற்காக எங்களுக்கு ஏற்பட்ட தண்டனை என்னவென்று
உங்களுக்குத் தெரியும். எனவே, நீங்கள் உங்களின் ஆட்களை அடைமானமாக எங்களிடம்
தரும் வரை நாங்கள் உங்களுக்கு ஆதரவாக சண்டையிட மாட்டோம்" என்று கூறினர்.
இச்செய்தியைத் தூதுக்குழு குறைஷிகளிடம் கூறியவுடன் 'நுஅய்ம் உங்களுக்கு
உண்மைதான் கூறியிருக்கிறார்" என்று குறைஷிகளும் கத்ஃபான்களும் கூறினர்.
இதற்குப் பின் இவர்கள் மீண்டும் யூதர்களிடம் தங்களின் குழுவை அனுப்பி 'நாங்கள்
உங்களிடம் எங்கள் ஆட்களில் எவரையும் அனுப்ப மாட்டோம். நீங்கள் எங்களிடம்
வாருங்கள். நாம் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்" என்றனர். இதைக் கேட்ட
யூதர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நுஅய்ம் நம்மிடம் உண்மையைத்தான்
கூறினார்" என்று தங்களுக்குள் கூறி விட்டு வந்த குறைஷித் தூதர்களைத் திருப்பி
அனுப்பி விட்டனர். இதன்மூலம் இரு தரப்பினருக்குமிடையில் பிரிவினை ஏற்பட்டது.
யூதர்கள் குறைஷிகளுக்கு உதவுவதைக் கைவிட்டனர். இதனால் குறைஷிகளின் உறுதி
குலைந்தது. முடிவு என்னவாகுமோ என அவர்கள் பயந்தனர்.
முஸ்லிம்கள் அல்லாஹ்விடம்,
'அல்லாஹ்வே! எங்களுடைய அவயங்களை மறைத்திடு எங்களின் பயங்களை போக்கி
அபயம் அளி" என்று வேண்டினர்.
அடுத்து நபி (ஸல்) அவர்களும்,
வேதத்தை இறக்கியவனே! விரைவாக கணக்கு தீர்ப்பவனே! இப்படையினரைத்
தோற்கடிப்பாயாக! இவர்களை ஆட்டம் காணச் செய்வாயாக! என அல்லாஹ்விடம்
வேண்டினார்கள். (ஸஹீஹ{ல் புகாரி)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:17 pm

அல்லாஹ் தனது தூதரின் வேண்டுதலையும் முஸ்லிம்களின் இறைஞ்சுதலையும் ஏற்றுக்
கொண்டான். எதிரிகளின் அணிகளில் பிரிவினை ஏற்பட்டு அவர்கள் தங்களுக்குள் உதவி
செய்வதைக் கைவிட்டனர். அத்துடன் அல்லாஹ் அவர்களை விரட்ட பலத்த காற்றை
அனுப்பினான். அக்காற்று அவர்களின் கூடாரங்களைக் கழற்றி வீசியது. அவர்களின்
பாத்திரங்களை தலைகீழாகப் புரட்டியது. கூடாரத்தின் கயிறுகளை அறுத்தது. எதிரிகள் நிலை
தடுமாறினர். அல்லாஹ் வானவர்களின் படையை இறக்கினான். அவர்கள் எதிரிகளின்
உள்ளங்களில் பயத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி, அவர்களை நிலை குலைய
வைத்தனர்.
நபி (ஸல்) அவர்கள் இந்தக் கடுமையான குளிர் நிறைந்த இரவில் தோழர் ஹ{தைஃபாவை
எதிரிகளின் செய்திகளைத் தெரிந்து வர அனுப்பினார்கள். எதிரிகள் மக்கா திரும்ப
ஆயத்தமாகி இருந்தனர். இச்செய்தியை நபியவர்களிடம் ஹ{தைஃபா (ரழி) கூறினார்.
அல்லாஹ்வின் உதவியால் எதிரிகள் காலை விடிவதற்குள் தங்களின் இடங்களைக் காலி
செய்து கொண்டு ஓடி விட்டனர். அவர்கள் இப்போரின் மூலம் தாங்கள் விரும்பிய எந்த
நோக்கத்தையும் அடைய முடியவில்லை. அல்லாஹ் நபியவர்களைப் பாதுகாத்தான். அவனது
வாக்கை உண்மைப் படுத்தினான். தனது இஸ்லாமியப் படைக்குக் கண்ணியத்தையும்
வெற்றியையும் வழங்கினான். தனது அடியாருக்கு உதவி செய்தான். எதிரி ராணுவங்களை
அவனே தோற்கடித்தான். நபியவர்கள் தங்களது படையுடன் மதீனா திரும்பினார்கள்.
இந்த அகழ் யுத்தம் ஹிஜ்ரி 5, ஷவ்வால் மாதம் நடைபெற்றது. இதுவே மிகச் சரியான
கூற்றாகும். எதிரிகள் நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் முற்றுகையிட்ட காலம்
ஏறக்குறைய ஒரு மாதமாகும். பல மூலநூல்களின் கருத்துகளை ஒருங்கிணைத்துப் பார்க்கும்
போது இப்போர் ஷவ்வால் மாதம் தொடங்கி துல்கஅதா மாதத்தில் முடிவுற்றது எனத்
தெரிய வருகிறது. அறிஞர் இப்னு ஸஅது, 'நபியவர்கள் அகழ் போர் முடிந்து துல்கஅதா
பிறை 23 புதன்கிழமை மதீனா திரும்பினார்கள்" என்று கூறுகிறார்:
இந்த அகழ்ப்போரில் பெரும் நஷ்டங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதில் கடுமையான
மோதலும், சேதங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் இது இஸ்லாமிய வரலாற்றில் மிக
முக்கியமான போராக விளங்குகிறது. இப்போரின் இறுதியில் இணைவைப்பவர்கள்
நிராசையாகி, தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பி விட்டனர். இணைவைப்பவர்கள் எவ்வளவு
பெரிய பலமுள்ள ராணுவங்களை ஒன்று திரட்டி மதீனாவில் வளர்ந்து வரும் இந்த சிறிய
இஸ்லாமிய ராணுவத்தை அழித்துவிட முயன்றாலும் அது ஒருக்காலும் முடியாது என்பது
இப்போரிலிருருந்து நன்கு தெரியவந்தது. இம்முறை இப்போருக்கு அரபிகள் ஒன்றுதிரட்டி
வந்த படைகளைப் போல் இனி ஒருக்காலும் அவர்களால் ஒன்று திரட்டிவர முடியாது.
ஆகவேதான் எதிரிகளை அல்லாஹ் வெளியேற்றிய பின் 'இனிமேல் நாமே அவர்கள் மீது
போர் தொடுப்போம். அவர்கள் நம்மீது போர் தொடுக்க முடியாது. நாமே அவர்களிடம்
செல்வோம்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ{ல் புகாரி)
பனூ குரைளா போர்
பனூ குரைளா என்று அறியப்படும் இப்போர் ஹிஜ்ரி 5, துல்கஅதா மாதத்தில் நடைபெற்றது.
அகழ்ப்போர் முடிந்து நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குத் திரும்பினார்கள். அன்று
அவர்கள் தனது மனைவி உம்மு ஸலமாவின் வீட்டில் மதிய வேளையில் குளித்துக்
கொண்டிருந்த போது வானவர் ஜிப்ரீல் (அலை) நபியவர்களை சந்தித்து 'என்ன நீங்கள்
உங்களது ஆயுதத்தைக் கீழே வைத்து விட்டீர்களா? நிச்சயமாக வானவர்கள் தங்களின்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:17 pm

ஆயுதங்களை இன்னும் கீழே வைக்கவில்லை. நான் இப்போதுதான் எதிரிகளை
விரட்டிவிட்டு வருகிறேன். நீங்கள் உங்கள் தோழர்களுடன் குரைளாவினர்களை நோக்கிப்
புறப்படுங்கள். உங்களுக்கு முன் நான் சென்று அவர்களுடைய கோட்டைகளை
Pயபந 322 ழக 518
அசைக்கிறேன். அவர்களின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துகிறேன்" என்று கூறிவிட்டு
அங்கிருந்து வானவர்களின் ஒரு கூட்டத்துடன் புறப்பட்டார்.
நபி (ஸல்) அவர்கள் ஒருவரை அனுப்பி மக்களுக்கு மத்தியில் அறிவிக்கக் கூறினார்கள்:
'யார் கட்டளையைக் கேட்டு கீழ்ப்படிந்து நடக்கிறாரோ அவர் அஸ்ர் தொழுகையை
குரைளாவனரிடம் சென்றுதான் தொழ வேண்டும்" (அதாவது உடனடியாக இங்கிருந்து
குரைளாவினரை நோக்கி புறப்பட வேண்டும்) என்று கூறினார்கள். மதீனாவில்
அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமை பொறுப்பாளராக நியமித்துவிட்டு நபியவர்கள்
புறப்பட்டார்கள். போர்க் கொடியை அலீயிடம் வழங்கி அவரை அவசரமாக முன்கூட்டி
அனுப்பி வைத்தார்கள். அலீ (ரழி) படையுடன் குரைழாவினன் கோட்டையைச்
சென்றடைந்தார்கள். அங்கிருந்த யூதர்கள், அலீ (ரழி) காதில் படும்படியாக நபி (ஸல்)
அவர்களைக் கடுமையாக ஏசினர்.
நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிகளின் சில குறிப்பிட்ட நபர்களுடன்
மதீனாவிலிருந்து புறப்பட்டு குரைளாவினன் ஒரு கிணற்றுக்கு அருகில் வந்து
இறங்கினார்கள். அக்கிணற்றுக்கு ~அன்னா கிணறு| என்று கூறப்படும்.
மீதமுள்ள முஸ்லிம்கள் உடனடியாக குரைளாவினரை நோக்கிப் புறப்பட்டார்கள். வழியில்
அஸ்ர் தொழுகையின் நேரம் வந்தவுடன்: 'அஸ்ர் தொழுகையை நேரம் தவறுவதற்குள்
வழியிலேயே தொழுது விடுவதா அல்லது நேரம் தவறினாலும் குரைளா சென்று தொழுவதா"
என அவர்களுக்கு மத்தியில் இரு கருத்துகள் நிலவின. மதீனாவிலேயே அஸ்ர் தொழுது
விட்டு புறப்படலாமென யாரும் தாமதித்துவிடக் கூடாது என்ற கருத்தில்தான் நபி (ஸல்)
அவர்கள் குரைளா சென்று அஸ்ர் தொழ வேண்டுமென கூறினார்கள். தொழுகை
நேரத்தைத் தவறவிடுவது நபியவர்களின் நோக்கமல்ல என்று கூறிவிட்டு சிலர் வழியிலேயே
அஸ்ர் தொழுகையை நிறைவேற்றினர். இவர்களைத் தவிர மற்றவர்கள் நபியவர்கள்
கூறியபடி குரைளா சென்று அஸ்ர் தொழுகையை நிறைவேற்றினர். அப்போது மக்ரிப்
நேரமாக இருந்தது. இன்னும் தாமதமாக வந்து சேர்ந்த சிலர் இஷா நேரத்தில் அஸ்ர்
தொழுதனர்.
நபி (ஸல்) அவர்கள் இரு கூட்டத்தார்களின் செயல்களைப் பற்றி ஏதும் கடிந்துகொள்ள
வில்லை. இவ்வாறு இஸ்லாமியப் படை ஒன்றன்பின் ஒன்றாக மதீனாவிலிருந்து புறப்பட்டு
நபியவர்கள் தங்கியிருந்த இடத்தை வந்தடைந்தது. இஸ்லாமியப் படையில் மொத்தம்
மூவாயிரம் வீரர்களும், முப்பது குதிரைகளும் இருந்தன. குரைளாவினன் கோட்டைகளைச்
சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். முஸ்லிம்களின் முற்றுகை கடுமையாக இருந்ததைக்
கண்ட குரைளாவினன் தலைவன் கஅப் இப்னு அஸது தனது மக்களிடம் மூன்று
கருத்துகளை முன் வைத்தான்.
1) அனைவரும் முஸ்லிமாகி முஹம்மதுடைய மார்க்கத்தில் சேர்வது. அப்படி சேர்ந்தால்
நாம் நமது உயிர், பொருள், பிள்ளைகள், பெண்கள் அனைவரையும் பாதுகாத்துக்
கொள்ளலாம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முஹம்மது அல்லாஹ்வின் புறத்திலிருந்து
அனுப்பப்பட்ட தூதர் என்பதும், அவரைப் பற்றி தவ்றாத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பதும்
உங்களுக்கு தௌ;ளத் தெளிவாக தெரியும்.
2) நமது பிள்ளைகளையும் பெண்களையும் நாமே நமது கரத்தால் கொன்றுவிடவேண்டும்.
பிறகு வாளை உருவி முஹம்மதுடன் போர் புரிவோம் நாம் அவர்களை வெற்றி
கொள்வோம் அல்லது நாம் அனைவரும் மரணமாகும் வரை அவருடன் போர் புரிவோம்.
Pயபந 323 ழக 518
3) சனிக்கிழமை வருவதை எதிர்பார்ப்போம். அன்று நாம் போர் புரியமாட்டோம் என்று
முஸ்லிம்கள் எண்ணிக் கொண்டிருப்பார்கள். அந்நேரத்தில் அவர்களைத் திடீரெனத்
தாக்குவோம்.
இவ்வாறு மூன்று கருத்துகளை கஅப் முன்வைத்தும் அதில் எந்த ஒன்றையும் யூதர்கள்
ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கஅப் கடும் கோபமடைந்து, 'உங்களில் ஒருவர் கூட
வாழ்நாளில் ஒரு நாளும் உறுதியுடன் வாழந்ததில்லை" என்று கடுகடுத்தார். குரைளாவினர்
இவ்வாறு தங்களது தலைவர் கஅபுடைய எந்த ஆலோசனையையும் ஏற்றுக்
கொள்ளவில்லை. இறுதியாக நபியவர்கள் கூறும் தீர்ப்பையே ஏற்றுக் கொள்ள வேண்டிய
நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர்.
இருப்பினும் சரணடைவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு என்ன
தீர்ப்பளிப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள தங்களுக்கு நண்பர்களாக இருந்த சில
முஸ்லிம்களுடன் தொடர்பு கொண்டு அறிய விரும்பினர். ஆகவே, நபியவர்களிடம்
தூதனுப்பி அப+லுபாபாவை தங்களிடம் அனுப்பும்படி கேட்டுக் கொண்டனர். அப+லுபாபா
யூதர்களின் நட்புரீதியான ஒப்பந்தக்காரராக இருந்தார். இவருடைய பொருட்களும்,
பிள்ளைகளும் யூதர்களின் பகுதியில் இருந்தன. அப+லுபாபா யூதர்களைச் சந்தித்தவுடன்
அவரிடம் பெண்களும், சிறுவர்களும் எழுந்து வந்து அழுதனர். இதைப் பார்த்து அவரது
உள்ளம் இளகிவிட்டது. அவர்கள் 'அப+லுபாபாவே! நாங்கள் நபியவர்களின் தீர்ப்பை
ஏற்றுக் கொண்டால் நபியவர்கள் எங்களுக்கு என்ன தீர்ப்பளிப்பார்கள்?" என்றனர்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:17 pm

அப்போது அப+லுபாபா 'தனது கழுத்தைச் சீவுவது போல் செய்து காட்டி, அந்தத் தீர்ப்பு
கொலை!" என்று சூசகமாகக் கூறினார்.
நபி (ஸல்) அவர்களின் இந்த இரகசிய முடிவை வெளிப்படுத்தி தவறு செய்து விட்டோம்
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மோசடி செய்து விட்டோம் என்று அப+லுபாபா
உணர்ந்தார் வருந்தினார். எனவே, நபியவர்களைச் சந்திக்கச் செல்லாமல் மஸ்ஜிதுந்
நபவிக்குச் சென்று தன்னை ஒரு தூணுடன் கயிற்றால் பிணைத்துக் கொண்டார்.
நபியவர்கள்தான் தன்னை அவிழ்த்துவிட வேண்டும், இனி ஒருக்காலும் குரைளாவினன்
ப+மிக்கு செல்லவே மாட்டேன் என்று சத்தியம் செய்து கொண்டார். நபியவர்கள்
அப+லுபாபாவின் வருகையை எதிர்பார்த்திருந்தார்கள். இவன் செய்தி நபியவர்களுக்கு
கிடைத்தவுடன் 'அப+லுபாபா என்னிடம் நேரடியாக வந்து விஷயத்தை கூறியிருந்தால் நான்
அவருக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டிருப்பேன். ஆனால், எப்போது அவர்
அவருடைய விருப்பப்படி நடந்து கொண்டாரோ அல்லாஹ் அவரது பிழை பொறுப்பை
ஏற்றுக் கொள்ளும் வரை நான் அவரை அவிழ்த்துவிட முடியாது" என்றார்கள்.
அப+லுபாபா தெளிவாகக் கூறிய பின்பும் வேறு வழியின்றி நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பை
ஏற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு யூதர்கள் வந்தனர். யூதர்கள் பெருமளவு
உணவுகளையும் தேவையான பொருட்களையும் சேகரித்து வைத்திருந்தனர். கிணறுகளும்
பலமிக்க கோட்டைகளும் அவர்களிடம் இருந்தன. ஆனால், முஸ்லிம்களோ யூதர்களின்
கோட்டைக்கு வெளியே திறந்த வெளியில் கடுங்குளிரால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர்.
உணவுப் பற்றாக்குறையால் கடுமையானப் பசிக்கு ஆளாகி, துன்பத்தில் சிக்கித் தவித்துக்
கொண்டிருந்தனர். போரில் தொடர்ந்து ஈடுபட்டிருந்ததால் அதிகமான களைப்புற்றிருந்தனர்.
ஆக, இந்த சூழ்நிலையில் முஸ்லிம்களின் மீது முற்றுகையை நீடித்தாலும் அதைத் தாங்கும்
சக்தி யூதர்களிடம் இருந்தும் அவர்கள் அதற்குத் துணியவில்லை. அவர்களுடைய
உள்ளத்தில் அல்லாஹ் பயத்தை ஏற்படுத்தினான். அவர்கள் நிலைகுலைந்தனர். அலீ இப்னு
அப+தாலிப், ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) இருவரும் முஸ்லிம்களுக்கு முன் நின்று
வீரமூட்டினர். அலீ (ரழி) முஸ்லிம்களைப் பார்த்து 'அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட
படைகளே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஹம்ஜாவுக்கு ஏற்பட்டதை நானும்
Pயபந 324 ழக 518
அனுபவிப்பேன் அல்லது அவர்களது கோட்டையை வெற்றி கொள்வேன்" என்று
சபதமிட்டார்கள்.
முஸ்லிம்களின் உணர்வுகளையும் வீரத்தையும் ஆவேசத்தையும் யூதர்கள்
புரிந்துகொண்டனர். இனியும் காலதாமதம் செய்வது உசிதமல்ல என்பதை உணர்ந்தனர்.
ஆகையால் நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதற்கு தீவிரம் காட்டினர்.
தங்களது கோட்டைகளிலிருந்து வெளியேறி நபியவர்களுக்கு முன் சரணடைந்தனர்.
நபியவர்கள் ஆண்களைக் கைது செய்யுமாறு கட்டளையிட்டார்கள். முஹம்மது இப்னு
மஸ்லமாவின் தலைமையின் கீழ் ஆண்கள் அனைவரும் விலங்கிடப்பட்டனர். பெண்களும்
சிறுவர்களும் ஆண்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு ஓரமான இடத்தில் அமர்த்தி
வைக்கப்பட்டனர். அப்போது அவ்ஸ் கூட்டத்தினர் நபியவர்களை சந்தித்து
'அல்லாஹ்வின் தூதரே! கைனுகா இன யூதர்கள் விஷயத்தில் நீங்கள் எப்படி நடந்து
கொண்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் எங்கள் சகோதரர்களாகிய கஸ்ரஜ்
இனத்தவன் நண்பர்களாவர். இந்த குரைளா இன யூதர்கள் (அவ்ஸ்களாகிய) எங்களிடம்
உடன்படிக்கை செய்து கொண்டவர்கள். நீங்கள் இவர்களிடம் நல்ல முறையில் நடந்து
கொள்ள வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்" என்றார்கள். அதற்கு நபியவர்கள்
'உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இவர்கள் விஷயத்தில் தீர்ப்பளித்தால் அதை நீங்கள்
ஏற்றுக் கொள்கிறீர்களா?" எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'நாங்கள் அதை ஏற்றுக்
கொள்கிறோம்" என்றனர். நபியவர்கள் 'இவர்கள் குறித்து தீர்ப்பளிக்கும் உரிமையை
ஸஅது இப்னு முஆதிடம் ஒப்படைக்கிறேன்" என்றவுடன் அவ்ஸ் கூட்டத்தினர் அதை
முழுமையாக ஏற்றுக் கொண்டனர்.
நபி (ஸல்) அவர்கள் ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களை அழைத்து வர
ஆளனுப்பினார்கள். ஸஅது இப்னு முஆது (ரழி) அகழ்ப்போல் காலில் அம்பு
தைத்துவிட்டதின் காரணமாக நபியவர்களுடன் வர முடியாமல் மதீனாவில்
தங்கிவிட்டார்கள். அவர்கள் ஒரு கழுதையில் நபியவர்களிடம் அழைத்து வரப்பட்டார்கள்.
அவர் வந்து கொண்டிருக்கும் போதே அங்கிருந்தவர்கள் அவரைச் சுற்றி 'ஸஅதே!
உம்மிடம் ஒப்பந்தம் செய்திருந்த இந்த யூதர்கள் விஷயத்தில் அழகிய தீர்ப்பைக்
கூறுவாயாக! அவர்களுக்கு உதவி புரிவாயாக! நீ அவர்களுக்கு ஏற்ற தீர்ப்பு வழங்க
வேண்டும் என்பதற்காகத்தான் நபியவர்கள் உன்னை தீர்ப்பளிக்கும்படி
அழைத்திருக்கிறார்கள்" என்று கூறினார்கள். ஆனால், ஸஅது (ரழி) அவர்களின் எந்த
பேச்சுக்கும் பதிலளிக்கவில்லை.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:17 pm

குழுமியிருந்த மக்கள் ஸஅதை மிக அதிகமாகத் தொந்தரவு
செய்தவுடன் ஸஅது (ரழி) 'இப்போதுதான் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்களின்
பழிப்பை பொருட் படுத்தாமல் இருக்க இந்த ஸஅதுக்கு நேரம் வந்துள்ளது" என்றார்.
ஸஅத் (ரழி) அவர்களின் இந்த துணிவுமிக்க சொல்லால் குழுமியிருந்த மக்கள் யூதர்களின்
விஷயத்தில் ஸஅது (ரழி) அவர்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதைப்
புரிந்துகொண்டனர். அதாவது, யூதர்களை கொல்ல வேண்டும் என்ற உறுதியில் ஸஅது (ரழி)
இருக்கிறார் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிய வந்தது. இதனால் ஸஅது (ரழி)
தங்களது தீர்ப்பை வெளிப்படையாக கூறுவதற்கு முன்பாகவே யூதர்கள் கொல்லப்படப்
போகிறார்கள் என்ற செய்தியை மக்கள் மதீனாவாசிகளுக்குத் தெரிவித்தனர்.
ஸஅது (ரழி), நபி (ஸல்) அவர்கள் இருக்கும் இடத்தை அடைந்த போது நபியவர்கள்
தங்களது தோழர்களிடம் 'உங்களது தலைவரை எழுந்து சென்று அழைத்து வாருங்கள்"
என்று கூறினார்கள். நபித்தோழர்கள் ஸஅதைக் கழுதையிலிருந்து இறக்கி அழைத்து
வந்தவுடன் 'ஸஅதே! இந்த யூதர்கள் உமது தீர்ப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக
இருக்கின்றனர்" என்றார்கள். அப்போது ஸஅது (ரழி) 'எனது தீர்ப்பு அவர்கள் (யூதர்கள்)
மீது செல்லுபடி ஆகுமா?" என்று கேட்டார்கள். அதற்கு மற்றவர்கள் 'ஆம்!
செல்லுபடியாகும்" என்றனர். பிறகு ஸஅது (ரழி) 'முஸ்லிம்களின் மீது எனது தீர்ப்பு
Pயபந 325 ழக 518
செல்லுபடியாகுமா?" என்று கேட்டார்கள். மக்கள் 'ஆம்!" என்றனர். அப்போது 'இங்குள்ள
மற்றவர் மீதும் - அதாவது தனது முகத்தால் நபியவர்களை சுட்டிக்காட்டி - எனது தீர்ப்பு
செல்லுபடியாகுமா?" என்று கேட்டார்கள். அப்போது நபியவர்கள் 'ஆம்! நானும்
உங்களுடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்வேன்" என்றார்கள். இதற்குப் பின் ஸஅது (ரழி)
அந்த யூதர்கள் விஷயத்தில் தீர்ப்பு கூறினார்கள்:
'ஆண்களைக் கொன்றுவிட வேண்டும். சிறுவர்களையும் பெண்களையும் கைதிகளாக்க
வேண்டும். இவர்களின் சொத்துகளையும் பொருட்களையும் பங்கு வைத்துவிட வேண்டும்.
இதுதான் எனது தீர்ப்பு" என ஸஅது (ரழி) கூறினார். இத்தீர்ப்பைக் கேட்ட நபியவர்கள்
'ஏழு வானங்களுக்கு மேலிருக்கும் அல்லாஹ்வின் தீர்ப்பை நீங்கள் இவர்கள் விஷயத்தில்
வழங்கி விட்டீர்கள்" என்று கூறினார்கள்.
உண்மையில் ஸஅது (ரழி) கூறிய தீர்ப்பு மிக நீதமானதே! முற்றிலும் நேர்மையானதே!
ஏனெனில், குரைளா இன யூதர்கள் தங்களது உடன்படிக்கையை முறித்தது மட்டுமல்லாமல்
முஸ்லிம்களை அழிக்க வேண்டுமென்பதற்காக 1500 வாட்களையும், 2000 ஈட்டிகளையும்,
300 கவச ஆடைகளையும், 500 இரும்புக் கேடயங்களையும், ஒரு தோலினாலான
கேடயத்தையும் சேகரித்து வைத்திருந்தனர். இவற்றை முஸ்லிம்கள் அவர்களுடைய
இல்லங்களை வெற்றி கொண்ட பின் கைப்பற்றினர்.
இத்தீர்ப்புக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜார் கிளையைச் சேர்ந்த பின்துல் ஹாரிஸ்
என்ற பெண்ணின் வீட்டில் யூதர்களை அடைத்து வைக்க கட்டளையிட்டார்கள். அதற்குப்
பின் அவர்களுக்காக மதீனாவின் கடைத் தெருவில் பெரும் அகழ் தோண்டப்பட்டது.
பின்பு ஒவ்வொருவராக அழைத்து வரப்பட்டு அக்குழியில் வைத்து தலை வெட்டப்பட்டது.
பிறகு அதிலேயே புதைக்கப்பட்டனர். இவ்வாறு ஒவ்வொருவராக அழைத்துச்
செல்லப்படும்போது அடைபட்டிருந்த சிலர் தங்களது தலைவன் கஅபிடம் 'தலைவரே!
எங்களை அழைத்துச் சென்று இவர்கள் என்ன செய்கின்றார்கள்!" என்றனர். அதற்கு கஅப்
'என்ன! உங்களுக்கு எந்நேரத்திலும் எதுவும் விளங்காதா? அழைப்பவர் வந்து அழைத்துக்
கொண்டே இருக்கின்றார். அழைத்துச் செல்லப்பட்டவர் திரும்பி வருவதில்லை. இப்போது
கூட புரியவில்லையா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது கொலைதான் என்பது
உங்களுக்கு விளங்கவில்லையா?" என்றார். அவர்கள் 600லிருந்து 700 பேர் வரை
இருந்தனர். அனைவரும் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர்.
இவ்வாறு மோசடி மற்றும் வஞ்சக குணமுள்ள விஷப் பாம்புகள் முற்றிலும்
அழித்தொழிக்கப்பட்டன. இவர்கள் முஸ்லிம்களுடனான ஒப்பந்தங்களை முறித்தது
மட்டுமல்லாமல் முஸ்லிம்களை அழிப்பதற்காக குவிந்த ராணுவங்களுக்கும் உதவியும்
செய்தனர். அந்நேரம் முஸ்லிம்களுக்கு மிகச் சிரமமான நேரமாக இருந்தது. ஆகவே,
யூதர்கள் இந்த செயல்பாடுகளின் காரணமாக மாபெரும் குற்றவாளிகளாவர். எனவே,
அவர்களை முற்றிலும் கொன்று விடுவதுதான் சரியான தீர்ப்பாக இருந்தது.
இந்த குரைளா யூதர்களுடன் நளீர் யூதர்களைச் சேர்ந்த கொடிய ஷைத்தான் ஹய் இப்னு
அக்தப் என்பவனும் கொலை செய்யப்பட்டான். இவன் நமது அன்னை ஸஃபிய்யா (ரழி)
அவர்களின் தந்தையாவான். இவன்தான் இப்போரின் போது முஸ்லிம்களுடனான
ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளும்படி கஅப் இப்னு அஸ்அதைத் தூண்டினான். இதன்
விவரத்தை முன்பே நாம் கூறியிருக்கிறோம். குறைஷி மற்றும் கத்ஃபான் இனத்தவர்கள்
போரிலிருந்து திரும்பிச் சென்ற பின் ஹய் இப்னு அக்தப், தான் கொடுத்த வாக்கை
நிறைவேற்றுவதற்காக குரைளா யூதர்களின் கோட்டைக்குள் புகுந்து கொண்டான்.
மற்றவர்களுடன் இவனும் கைது செய்யப்பட்டு, கைகள் கழுத்துடன் சேர்த்து கட்டப்பட்ட
நிலையில் அழைத்து வரப்பட்டான். தன்னை கொன்றதற்குப் பின் தனது ஆடைகளை
முஸ்லிம்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக அனைத்து பக்கங்களிலும்
Pயபந 326 ழக 518
விரல்களின் நுனி அளவிற்கு கிழித்து ஓட்டையிட்டுக் கொண்டான். நபியவர்களுக்கு
அருகில் இவனை அழைத்து வந்த போது அவன் நபியவர்களைப் பார்த்து 'உன்னைப்
பகைத்துப் கொண்டதற்காக நான் என்னை இகழவில்லை. இருப்பினும் அல்லாஹ்வுடன்
மோதியவன் தோற்றுவிடுவான் என்பது எனக்குத் தெரியும்" என்று கூறிவிட்டு 'மக்களே!
அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இதுபோன்ற
சோதனைகளையும் போர்களையும் அல்லாஹ் இஸ்ரவேலர்கள் (யூதர்கள்) மீது விதித்து
விட்டான்" என்று கூறினான். பிறகு அவனது தலை வெட்டப்பட்டது.
கல்லாத் இப்னு சுவைத் (ரழி) என்ற நபித்தோழரை ஒரு யூதப் பெண் மாவாட்டும்
திருகையால் கொன்று விட்டாள். எனவே, அப்பெண்ணையும் பழிக்குப் பழி
கொல்லப்பட்டது.
முடி முளைத்த அனைவரையும் கொன்று, முடி முளைக்காதவர்களை விட்டு விடும்படி நபி
(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். முடி முளைக்காதவர்களில் ~அத்தியா| என்ற ஒரு
சிறுவர் இருந்தார். பிற்காலத்தில் அவர் இஸ்லாமை ஏற்று நபியவர்களின் தோழராக
மாறினார். (முடி முளைத்தவர்கள் என்பது (மேஜர்) பருவமடைந்தவர்களையும் முடி
முளைக்காதவர் என்பது (மைனர்) பருவமடையாதவர்களையும் குறிக்கும்).
ஸாபித் இப்னு கைஸ் (ரழி) என்ற நபித்தோழர் ஜுபைர் இப்னு பாத்தா என்ற யூதரையும்
அவரது குடும்பத்தார்கள் மற்றும் பொருட்களையும் தனக்கு தந்துவிடுமாறு நபியவர்களிடம்
கோரினார். நபியவர்களும் அவர் கேட்டவாறே கொடுத்து விட்டார்கள். நபித்தோழர்
ஸாபித்துக்கு இதற்கு முன் இந்த யூதர் உதவி புரிந்திருந்தார். ஸாபித் அவரிடம்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:18 pm

'உன்னையும் உமது பொருளையும், உமது குடும்பத்தார்களையும் நபியவர்கள் எனக்கு
அன்பளிப்பாக கொடுத்து விட்டார்கள். நான் அவற்றைத் திரும்ப உனக்கே கொடுத்து
விடுகிறேன்" என்றார். ஆனால், அந்த ஜுபைர் இப்னு பாத்தா என்ற யூதன் 'ஸாபித்தே
நான் உனக்கு செய்த உதவியின் பொருட்டால் கேட்கிறேன். என்னைக் கொன்று
என்னுடைய சகோதரர்களுடன் சேர்த்துவிடு" என்றான். ஸாபித் அவனது கழுத்தைச் சீவி
அவனது நண்பர்களுடனேயே சேர்த்து விட்டு, அவனது மகன் அப்துர் ரஹ்மான் இப்னு
ஜுபைரை உயிரோடு விட்டுவிட்டார். இவர் பிறகு இஸ்லாமை ஏற்று நபியவர்களின்
தோழராகி விட்டார்.
உம்முல் முன்திர் ஸல்மா பின்த் கைஸ் (ரழி) என்ற ஸஹாபிப் பெண்மணி ~ஃபாஆ இப்னு
ஸம்வால்| என்ற யூதரைத் தனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கும்படி நபியவர்களிடம்
கேட்டார். நபியவர்கள் கொடுத்துவிடவே அப்பெண்மணி அவரை உயிரோடு விட்டுவிட்டார்.
அந்த யூதர் இஸ்லாமை ஏற்று நபியவர்களின் தோழராகி விட்டார்.
அன்றிரவு கோட்டையிலிருந்து கீழே இறங்குவதற்கு முன் சிலர் இஸ்லாமை ஏற்றனர்.
எனவே, அவர்களைக் கைது செய்யவில்லை. அவர்களது பொருட்களும் குடும்பங்களும்
பாதுகாக்கப்பட்டன.
அம்ர் இப்னு ஸஅதி என்ற ஒரு யூதர் இருந்தார். நபியவர்களுக்குத் தனது இனத்தவர்
செய்த மோசடியில் அவர் கூட்டு சேரவில்லை. அன்றிரவு அவர் கோட்டையில் இருந்து
வெளியேறியதை பாதுகாப்புப் படையின் தளபதியாக இருந்த முஹம்மது இப்னு மஸ்லமா
பார்த்தார். அவரைப் பற்றி முஹம்மது இப்னு மஸ்லமாவிற்கு தெரிய வரவே அவர்
தப்பித்துச் செல்வதற்கு வழிவிட்டார். ஆனால் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்?
என்ற விவரம் வரலாற்றில் அறியப்படவில்லை.
குரைளாவினன் பொருட்களில் ஐந்தில் ஒன்றை நபி (ஸல்) அவர்கள் ஒதுக்கிவிட்டு
மீதத்தை தங்களின் தோழர்களுக்குப் பங்கிட்டார்கள். அதாவது, குதிரை வீரர்களுக்கு
மூன்று பங்கும் (ஒரு பங்கு அவருக்கும் மற்ற இரு பங்கு குதிரைக்கும்) காலாட்படையைச்
சேர்ந்தவர்களுக்கு ஒரு பங்கும் என நபியவர்கள் பங்கு வைத்தார்கள். ஸஅது இப்னு ஜைது
(ரழி) என்ற அன்சாரி தோழன் தலைமையில் கைதிகளை விற்று வர ஒரு குழுவை
நபியவர்கள் நஜ்துக்கு அனுப்பினார்கள். அவர்கள் அங்கு சென்று கைதிகளை விற்று
குதிரைகளையும் ஆயுதங்களையும் வாங்கி வந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கைதியாக இருந்த பெண்களில் தனக்கென ரைஹானா பின்த் அம்ர்
இப்னு குனாஃபா என்பவரை எடுத்துக் கொண்டார்கள். இவர் நபியவர்களின் வாழ்நாள்
வரை அவர்களுடன் இருந்தார் என இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். (இப்னு ஹிஷாம்)
ஆனால், வேறு சிலர் கூறுவதாவது: நபி (ஸல்) இவரை விடுதலை செய்து, பின்பு ஹிஜ்ரி
6ல் திருமணம் செய்து கொண்டார்கள். நபியவர்கள் இறுதி ஹஜ்ஜிலிருந்து திரும்பி
வரும்போது இவர் இறந்துவிட்டார். நபியவர்கள் இவரை பகீஃ மண்ணறையில் அடக்கம்
செய்தார்கள். (தல்கீஹ்)
குரைளாவின் பிரச்சனை முடிந்தவுடன் ஸஅது இப்னு முஆத் (ரழி) தன் விஷயத்தில்
செய்த வேண்டுதலை அல்லாஹ் அங்கீகத்தான். ஸஅதின் வேண்டுதல் என்ன என்று
இதற்கு முன் நாம் கூறியிருக்கிறோம். நபி (ஸல்) அவர்கள் இவருக்கென பள்ளிவாசலில்
ஒரு கூடாரத்தை அமைத்திருந்தார்கள். நபியவர்கள் அவரை அங்கு தங்க வைத்து
அடிக்கடி நலம் விசாரித்து வந்தார்கள். சில நாட்களில் அவரது காயம் வீங்கி உடைந்தது.
அதிலிருந்து வழிந்த இரத்தம் கிஃபார் கிளையினருக்காக பள்ளியில் கட்டப்பட்டிருந்த
கூடாரத்தில் பரவியது. அதைப் பார்த்து அக்கூடாரத்தில் இருந்தவர்கள் 'இது என்ன!
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 19 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 26 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 22 ... 26  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum