தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Page 22 of 26 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24, 25, 26  Next

Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Fri Feb 04, 2011 2:28 pm

First topic message reminder :

அரபியர்கள் வாழ்ந்த இடங்களும் அரபிய சமுதாயங்களும்
~நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு| என்பது மனித சமுதாயத்திற்காக அவர்கள்
கொண்டு வந்த இறைத்தூதைக் குறிக்கும் சொல்லாகும். தான் கொண்டு வந்த இறைத்தூதை
தங்களின் சொல், செயல், வழிகாட்டல், ஒழுக்க மாண்புகள் ஆகியவற்றின் மூலம் மனித
குலத்திற்கு எடுத்துரைத்தார்கள். அந்த இறைத்தூதுத்துவத்தால் மனித வாழ்வின்
அளவுகோல்களை முற்றிலுமாக மாற்றினார்கள்; தீமைகளைக் களைந்து நன்மைகளை
போதித்தார்கள்; இருளைவிட்டு மக்களை அகற்றி ஒளியை நோக்கி அழைத்து வந்தார்கள்.
படைப்பினங்களை வணங்குவதிலிருந்து மனிதனை முழுமையாக விடுவித்து,
படைப்பாளனாகிய ஒரே இறைவனை வணங்கும்படி செய்தார்கள். சுருங்கக்கூறின்,
இவ்வுலகில் நெறி தவறி வாழ்ந்த மனிதனின் வாழ்க்கைப் பாதையை மாற்றி செம்மையான
அழகிய பாதையில் அவனை வாழச்செய்தார்கள்.
நமது இக்கருத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் முஹம்மது (ஸல்) அவர்கள் தூதராக
அனுப்பப்படுவதற்கு முன் இருந்த நிலைமைகளையும், அவர்கள் தூதராக அனுப்பப்பட்ட
பின் ஏற்பட்ட மாற்றங்களையும் முன் நிறுத்தி பார்ப்பது அவசியம்.
இதனால் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமின் பக்கம் மக்களை அழைப்பதற்கு முன்பிருந்த
அரபிய சமுதாயங்கள், அவர்களது கலாச்சாரங்கள்; மேலும், அக்காலத்தில் இருந்த
சிற்றரசர்கள், பேரரசர்கள், சமுதாய அமைப்புகள், அவர்களது மத நம்பிக்கைகள், சமூக
பழக்க வழக்கங்கள், சடங்குகள் மற்றும் அவர்களது அரசியல், பொருளியல் ஆகியவற்றை
குறித்து சில பிரிவுகளில் சுருக்கமாக ஆய்வு செய்வதும் அவசியம்.
இவற்றுள் ஒவ்வொன்றையும் பற்றி கூறுவதற்கு நாம் தனித்தனி பிரிவுகளை
ஏற்படுத்தியிருக்கின்றோம். இப்போது அந்த பிரிவுகளைப் பார்ப்போம்.
அரபியர்கள் வாழ்ந்த இடங்கள்
~அரப்| என்ற சொல்லுக்கு பாலைவனம், பொட்டல் ப+மி, (மரம், செடி கொடிகள், தண்ணீர்
இல்லாத) வறட்சியான நிலப்பரப்பு எனப் பல அர்த்தங்கள் உள்ளன. நீண்ட காலமாக
அரபிய தீபகற்பத்துக்கும் (இன்றைய ஸவூதி) அங்கு வசிப்பவர்களுக்கும் இப்பெயர்
கூறப்படுகிறது.
அரபிய தீபகற்பத்தின் மேற்கே செங்கடலும் ஸனாஃ நாடும், கிழக்கே அரபிய
வளைகுடாவும் இராக்கின் சில பகுதிகளும், தெற்கே அரபிக் கடலும் (இது இந்தியப்
பெருங்கடல் வரை தொடர்கிறது). வடக்கே ஷாம் (சிரியா) மற்றும் இராக்கின் சில
நகரங்களும் இருக்கின்றன. இதன் பரப்பளவு 10,00,000 சதுர கிலோ மீட்டரிலிருந்து
13,00,000 சதுர கிலோ மீட்டர் வரையிலாகும்.
அரபிய தீபகற்பத்துக்கு புவியியல் ரீதியாகவும் அதன் இயற்கை அமைப்பாலும் மிகுந்த
முக்கியத்துவம் உண்டு. அதன் உட்புற எல்லைகள் நாலா திசைகளிலும் மணற்பாங்கான
பாலைவனத்தால் சூழப்பட்டுள்ளன.
அரபியர் அல்லாத வெளிநாட்டவர்கள் தங்களது ஆதிக்கத்தை அந்நாட்டில் செலுத்துவதற்கு
இப்புவியியல் அமைப்பு பெரும் தடையாக இருந்தது. அதன் காரணமாக அந்நாட்டு மக்கள்
எல்லாக் காலங்களிலும் தங்கள் செயல்பாடுகள் அனைத்திலும் சுதந்திரமானவர்களாகவே
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down


முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:41 pm

இவரைப் பற்றி நபி (ஸல்) 'தனது இரு
விரல்களையும் ஒன்று சேர்த்தவர்களாக இவருக்கு இரு கூலிகள் உண்டு. நிச்சயமாக இவர்
உயிரைப் பொருட்படுத்தாத வீரமிக்க தியாகியாவார். இவரைப் போன்ற வீரமிக்கவர்
அரபியர்களில் மிகக் குறைவானவரே" என்று கூறினார்கள். (ஸஹீஹ{ல் புகாரி, ஸஹீஹ்
முஸ்லிம்)
Pயபந 386 ழக 518
இதற்குப் பின் மர்ஹப் மீண்டும் தன்னுடன் சண்டையிட தனது கவியைப் பாடிக்கொண்டே
முஸ்லிம்களை அழைத்தான். அப்போது அவனுடன் சண்டையிட,
'என் அன்னை எனக்கு சிங்கமென பெயர் சூட்டினாள்!
காண அஞ்சும் கானகத்தில் சீறும் சிங்கத்தைப் போன்றவன் நான்!
இன்று மரக்காலுக்குப் பதிலாக ஈட்டியால்
அவர்களுக்கு அளந்து கொடுப்பேன்!"
என்ற பாடியவராக அலீ (ரழி) முன் வந்தார்கள். மர்ஹப் அலீயுடன் மோத, அலீ (ரழி)
அவனது தலையைத் துண்டாக்கி விட்டார்கள். பின்பு அவன் மூலமாகவே அல்லாஹ்
முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்கினான்.
அலீ (ரழி) அவர்கள் யூதர்களின் கோட்டைக்கு மிக அருகில் சென்றுவிட்ட போது
கோட்டையின் மேலிருந்து ஒருவன் 'நீ யார்?" என்றான். அதற்கு 'நான் அலீ இப்னு
அபீதாலிப்" என்று பதில் கூறினார்கள். அப்போது அந்த யஹ{தி 'மூஸாவிற்கு
இறக்கப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக! நீங்கள் வெற்றி கொள்வீர்கள்" என்றான்.
இதற்குப் பின் மர்ஹபின் சகோதரன் யாசிர் 'என்னுடன் சண்டை செய்பவன் யார்?" என்று
கொக்கரித்தவனாக படைக்கு முன் வந்தான். ஜுபைர் (ரழி) அவனை எதிர்க்கத் தயாரானார்.
அதைப் பார்த்த அன்னாரின் தாயார் ஸஃபியா (ரழி) 'அல்லாஹ்வின் தூதரே! அவன்
எனது மகனைக் கொன்று விடுவானே" என்று கலங்கினார். அதற்கு நபி (ஸல்) 'இல்லை
உமது மகன் தான் அவனைக் கொல்வார்" என்று கூறினார்கள். அவ்வாறே ஜுபைர் (ரழி)
அவனைக் கொன்றார்கள். இவ்வாறு அன்று முழுவதும் நாயிம் கோட்டையைச் சுற்றிக்
கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது. யூதர்களின் பல தலைவர்கள் கொல்லப்பட்டதால்
அவர்களின் வீரம் குறைந்து துவண்டு விட்டனர். எனினும், போர் மிகக் கடுமையாக பல
நாட்கள் நீடித்தது. இறுதியில் முஸ்லிம்களை எதிர்க்க முடியாது என்பதை உறுதியாக
அறிந்து கொண்ட யூதர்கள் அந்தக் கோட்டையிலிருந்து இரகசியமாக வெளியேறி ~ஸஅப்|
என்ற கோட்டையில் நுழைந்து கொண்டனர். இறுதியாக, முஸ்லிம்கள் நாயிம்
கோட்டையைத் தங்களது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்தார்கள்.
ஸஅப் கோட்டையை வெற்றி கொள்ளுதல்
நாயிம் கோட்டைக்கு அடுத்து இக்கோட்டை மிகவும் பலமுள்ளதாக, வலிமை மிக்கதாக
இருந்தது. அல் ஹ{பாப் இப்னு அல் முன்திர் அல் அன்ஸா (ரழி) அவர்களின்
தலைமையின் கீழ் இக்கோட்டையை முஸ்லிம்கள் மூன்று நாட்கள் முற்றுகையிட்டனர்.
மூன்றாவது நாள் இக்கோட்டையை வெற்றி கொள்வதற்காக நபி (ஸல்) தனிப்பட்ட
முறையில் பிரார்த்தனை செய்தார்கள்.
இதைப் பற்றி இப்னு இஸ்ஹாக் (ரஹ்) விவரிக்கிறார்:
அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஸஹ்ம் கிளையினர் நபியவர்களிடம் 'அல்லாஹ்வின்
தூதரே! நாங்கள் மிகச் சிரமத்திற்குள்ளாகி விட்டோம். எங்களது கையில் ஒன்றுமே
இல்லை" என்று முறையிட்டார்கள். அதாவது, தங்களது இயலாமையையும், பசியையும்
இவ்வாறு நபியவர் களிடம் வெளிப்படுத்தினார்கள். இந்த கிளையினர்தான் கோட்டையை
வெற்றி கொள்வதற்காக அனுப்பப்பட்ட படைகளில் முக்கியப் பங்காற்றினார்கள்.
அவர்களின் இந்த கோரிக்கைக்கிணங்க 'அல்லாஹ்வே! நிச்சயமாக இவர்களின்
நிலைமையை நீ நன்கு அறிந்திருக்கிறாய். அவர்களிடம் எவ்வித ஆற்றலும்
இல்லையென்பதையும், அவர்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை
Pயபந 387 ழக 518
என்பதையும் நீ நன்கறிந்திருக்கிறாய். எனவே, கைபரின் கோட்டைகளில் அதிக செல்வமும்
உணவுப் பொருட்களும் நிறைந்த கோட்டையை வெற்றி கொள்ள இவர்களுக்கு
உதவுவாயாக" என நபி (ஸல்) பிரார்த்தனை புரிந்தார்கள். நபியவர்களின்
இப்பிரார்த்தனைக்குப் பின்பு முஸ்லிம்கள் அக்கோட்டையை நோக்கிப் புறப்பட்டனர்.
கைபரிலுள்ள கோட்டைகளில் ~ஸஅப்| கோட்டையில்தான் அதிகச் செல்வங்களும்
உணவுகளும் இருந்தன.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:41 pm

நபி (ஸல்) இக்கோட்டையின் மீது தாக்குதல் நடத்த முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டி
அழைத்துச் சென்றார்கள். இதில் அஸ்லம் கிளையினர், படைக்கு முதல் வரிசையில்
இருந்தனர். கோட்டைக்கு வெளியில் யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கடுமையான
தாக்குதல் மாலை வரை நீடித்தது. இறுதியாக, சூரியன் மறைவதற்கு சற்று முன்
அக்கோட்டையை முஸ்லிம்கள் வெற்றி கொண்டனர். அக்கோட்டையில் இருந்த
மின்ஜசனீக்" கருவிகளையும், இக்கால பீரங்கி போன்ற கருவிகளையும் முஸ்லிம்கள்
கைப்பற்றினர். இப்போரில் ஏற்பட்ட கடுமையான பசியின் காரணமாக படையில் இருந்த
சில வீரர்கள் கழுதையை அறுத்து சமைப்பதற்கு அடுப்பை மூட்டினர். இதை அறிந்த நபி
(ஸல்) 'நாட்டுக் கழுதைகளை அறுக்க வேண்டாம்" என தடை விதித்தார்கள்.
ஜுபைர் கோட்டையை வெற்றி கொள்ளுதல்
நாயிம், ஸஅப் ஆகிய கோட்டைகளை வெற்றி கொண்டதற்குப் பின் நதா பகுதியிலிருந்து
யூதர்கள் வெளியேறி ஜுபைர் கோட்டைக்குள் புகுந்து கொண்டனர். இக்கோட்டை ஒரு
மலை உச்சியில் அமைந்திருந்ததுடன், மிக வலிமை மிக்கதாகவும் இருந்தது. அம்மலை மீது
குதிரை வீரர்களோ காலாட் படையினரோ ஏறிச் செல்வது சிரமமாக இருந்தது. எனவே, நபி
(ஸல்) அவர்கள் அக்கோட்டையை முற்றுகையிடுவதில் ஈடுபட்டார்கள். இந்த முற்றுகை
மூன்று நாட்கள் நீடித்தது.
அப்போது யூதர்களில் ஒருவன் நபியவர்களிடம் வந்து 'ஓ அபுல் காசிமே! நீங்கள்
இவ்வாறு ஒரு மாத காலம் இவர்களை முற்றுகையிட்டாலும் இவர்கள் அதைப்
பொருட்படுத்த மாட்டார்கள். ஏனெனில், இப்ப+மிக்கு கீழ் அவர்கள் குடிப்பதற்குத்
தேவையான நீர் ஊற்றுகள் இருக்கின்றன. அவர்கள் இரவில் கோட்டையிலிருந்து
வெளியேறி தேவையான நீரை எடுத்துக் கொண்டு மீண்டும் கோட்டைக்குள் சென்று
விடுகின்றனர். எனவே, இவர்கள் தண்ணீர் பிடிக்க வருவதை தடுத்தால் தான் மைதானத்தில்
உங்களுடன் போர் செய்ய இறங்குவார்கள்" என்று ஆலோசனைக் கூறினார். அவன்
யோசனைக்கிணங்க நபியவர்கள் தண்ணீர் எடுக்க வருவதைத் தடுத்து விட்டார்கள்.
இதனால் யூதர்கள் கோட்டையிலிருந்து வெளியேறி, முஸ்லிம்களுடன் கடுமையான யுத்தம்
புரிந்தார்கள். போரில் சில முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் சுமார் பத்து யூதர்களும்
கொல்லப் பட்டனர். இறுதியாக, முஸ்லிம்கள் கோட்டையை வெற்றி கொண்டனர்.
உபை கோட்டையை வெற்றி கொள்ளுதல்
ஜுபைர் கோட்டையை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட பின் அங்கிருந்து யூதர்கள்
வெளியேறி உபை கோட்டைக்குள் புகுந்து கொண்டனர். முஸ்லிம்கள் அக்கோட்டையை
முற்றுகையிட்டனர். இரண்டு யூதர்கள் ஒருவர்பின் ஒருவராக 'தன்னிடம் சண்டை
செய்பவர்கள் யார்?" என்று மைதானத்தில் இறங்கினர். அவ்விருவரையும் முஸ்லிம்
வீரர்கள் வெட்டிச் சாய்த்தனர். அதில் இரண்டாவதாக வந்த யஹ{தியைச் சிவப்பு
தலைப்பாகை உடைய அப+துஜானா ஸிமாக் இப்னு கரஷா (ரழி) என்ற வீரத்தில் பிரசித்தி
பெற்ற நபித்தோழர் வெட்டி வீழ்த்தினார். இரண்டாவது வீரனை வெட்டிய பின் அப+துஜானா
(ரழி) கோட்டைக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டார். அவருடன் முஸ்லிம் வீரர்களும்
அதற்காக முயற்சித்தனர். அந்நேரத்தில் கடுமையான போர் நடைபெற்றது. பின்பு
Pயபந 388 ழக 518
அங்கிருந்து யூதர்கள் தப்பித்து ~நஜார்| கோட்டைக்குச் சென்றனர். பிறகு இந்த உபை
கோட்டையும் முஸ்லிம்கள் வசமானது.
நஜார் கோட்டையை வெற்றி கொள்ளுதல்
நத்தா பகுதியிலிருந்த கோட்டைகளில் மிக வலிமையானது இக்கோட்டையே ஆகும்.
எவ்வளவு முயற்சி செய்தாலும், உயிர் தியாகம் செய்தாலும் முஸ்லிம்களால்
இக்கோட்டையை வெற்றி கொள்ள முடியாது என்று யூதர்கள் உறுதியாக நம்பியிருந்தனர்.
எனவேதான் இக்கோட்டையில் தங்களது மனைவி மக்களை தங்க வைத்திருந்தனர்.
மேற்கூறிய நான்கு கோட்டைகள் எதிலும் தங்களது மனைவி மக்களைத் தங்க
வைக்கவில்லை.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:43 pm

இக்கோட்டையைச் சுற்றி முஸ்லிம்கள் முற்றுகையிட்டு யூதர்களுக்கு மிகக் கடுமையான
நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். இக்கோட்டை உயரமான மலை மீது இருந்ததால்
முஸ்லிம்களால் அதற்குள் நுழைய முடியவில்லை. யூதர்கள் கோட்டையிலிருந்து வெளியேறி
முஸ்லிம்களுடன் நேருக்கு நேர் மோதுவதற்குத் துணிவு இல்லாமல் கோட்டையை விட்டு
வெளியே வராமலிருந்தனர். கோட்டைக்குள் இருந்தவாறே முஸ்லிம்கள் மீது அம்புகளாலும்
கற்களாலும் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.
இக்கோட்டையை வெற்றி கொள்வது முஸ்லிம்களுக்குச் சிரமமாகி விடவே, மின்ஜனிக்
கருவிகளைப் பயன்படுத்தி கற்களை எறிந்து, கோட்டை மதில்களைத் தகர்க்குமாறு நபி
(ஸல்) கட்டளையிட்டார்கள். முஸ்லிம் படையினரும் அவ்வாறே செய்தனர். கோட்டை
மதில்களில் ஓட்டைகள் ஏற்பட்டதும் முஸ்லிம்கள் அதன் வழியாக கோட்டைக்குள்
நுழைந்து யூதர்களுடன் கடும் போர் புரிந்தார்கள். இதில் யூதர்கள் பெரும் தோல்வியைத்
தழுவினார்கள். மற்ற கோட்டைகளிலிருந்து தப்பித்துச் சென்றது போன்று
இக்கோட்டையிலிருந்து அவர்களால் தப்பிக்க முடியவில்லை. தங்களது மனைவி மக்களை
விட்டுவிட்டு கோட்டையை விட்டு வெருண்டோடினர். இக்கோட்டையும் முஸ்லிம்களின்
கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கைபரின் முதல் பகுதியிலுள்ள அனைத்து பெரிய
கோட்டைகளும் இத்துடன் முழுமையாக முஸ்லிம்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.
மற்ற சிறிய கோட்டைகளுக்குள் இருந்த யூதர்களும் அவற்றைக் காலி செய்துவிட்டு ஊரின்
இரண்டாவது பகுதிக்கு வெருண்டோடினர்.
இரண்டாவது பகுதியை வெற்றி கொள்ளுதல்
நபியவர்கள் ~நத்தா| பகுதியிலுள்ள கோட்டைகளை முழுமையாக வெற்றி கொண்டபின்
இரண்டாவது பகுதியான ~கத்தீபா'விற்கு தங்களது படையுடன் வந்தார்கள். அங்கு
யூதர்களின் கமூஸ், அப+ ஹ{கைக் குடும்பத்தினர் கோட்டை, வத்தீஹ் சுலாலிம் ஆகிய
மூன்று கோட்டைகள் இருந்தன. நத்தா பகுதியில் தோல்வியுற்று ஓடிய யூதர்களெல்லாம்
இக்கோட்டைகளுக்குள் புகுந்து கொண்டனர்.
நபி (ஸல்) அவர்கள் செய்த போர்களைப் பற்றி குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர்கள்
இம்மூன்று கோட்டைகளை வெற்றி கொள்வதில் சண்டை ஏதும் நடந்ததா? இல்லையா?
என்பதில் பல கருத்துகள் கூறுகிறார்கள். இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுவதிலிருந்து ~கமூஸ்|
கோட்டையை மட்டும் பேச்சுவார்த்தையின்றி முழுமையாக சண்டையைக் கொண்டே வெற்றி
கொள்ளப்பட்டது என்று தெரியவருகிறது.
'அல்வாகிதி| (ரஹ்) என்ற வரலாற்று ஆசிரியர் கூறுவதாவது: இம்மூன்று கோட்டைகளும்
பேச்சுவார்த்தைக்குப் பின்தான் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. ~கமூஸ்|
கோட்டையைத் தவிர மற்ற இரண்டு கோட்டைகளும் எவ்வித சண்டையுமின்றி
பேச்சுவார்த்தையைக் கொண்டே முஸ்லிம்களிடம் சரணடைந்தன. கமூஸ் கோட்டைக்கு
Pயபந 389 ழக 518
மட்டும் முதலில் சண்டை நடந்தது. அதற்குப் பிறகு பேச்சுவார்த்தை நடந்து கைவசமாகி
இருக்கலாம்.
ஆக, கருத்து எதுவாக இருப்பினும் நபி (ஸல்) இப்பகுதியை சுற்றி மட்டும் பதினான்கு
நாட்கள் முற்றுகையிட்டிருந்தார்கள். யூதர்கள் கோட்டையை விட்டு வெளியேறவில்லை.
இறுதியாக, நபி (ஸல்) அவர்கள் மின்ஜனிக் கருவிகளை நிறுவி தாக்குதல் நடத்தத்
திட்டமிட்டார்கள். இதையறிந்த யூதர்கள் நிச்சயமாக நாம் அழிந்தே தீருவோம் என்பதை
அறிந்துகொண்ட பின்புதான் ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்தார்கள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:43 pm

பேச்சுவார்த்தை
இப்னு அப+ஹ{கைக் என்ற யூதர் 'நீங்கள் வாருங்கள் நான் உங்களிடம் பேசுகிறேன்"
என்று நபியவர்களிடம் தூதனுப்பவே, அவர்களும் பேச்சு வார்த்தைக்கு ஒப்புக்
கொண்டார்கள்.
'கோட்டைக்குள் உள்ள வீரர்களின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் அவர்களது
குடும்பத்தார்களை அவர்களுடன் விட்டுவிட வேண்டும் அந்த வீரர்கள் தங்களின் மனைவி
மக்களுடன் கைபர் ப+மியிலிருந்து வெளியேறி விடுவார்கள் கைபர் ப+மியும் அதிலுள்ள
செல்வங்களும், பொருட்களும், தங்கங்களும், வெள்ளிகளும், ஆயுதங்களும்,
கால்நடைகளும் முஸ்லிம்களுக்குச் சொந்தமாகும் தேவையான துணிமணிகளை மட்டும்
எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்" என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். நபி
(ஸல்) அவர்கள் அனைத்து அம்சங்களையும் ஒப்புக் கொண்டார்கள்.
'ஒப்பந்தம் செய்து கொடுத்த பின் நீங்கள் ஏதாவதொரு பொருளை மறைத்தால்
அல்லாஹ்வும் அவனது தூதரும் கொடுத்த இந்தப் பொறுப்பு நீங்கிவிடும்" என்று
கூறினார்கள். இந்த ஒப்பந்தத்திற்குப் பின் கோட்டைகள் முஸ்லிம்கள் வசம்
ஒப்படைக்கப்பட்டன.
அப+ ஹ{கைகின் மகன்களைக் கொல்லுதல்
மேற்படி ஒப்பந்தத்திற்குப் பிறகும் அபுல் ஹ{கைகின் இரண்டு மகன்களும் அதிகமான
செல்வங்களை மறைத்து விட்டனர். ஒரு தோல் பையில் நிறைய பொருட்களையும், ஹையிப்
இப்னு அக்தப்பிற்கு சொந்தமான நகைகளையும் மறைத்து வைத்திருந்தனர். இந்த ~ஹை|
என்பவர் நளீர் வமிச யூதர்களின் தலைவராவார். நபி (ஸல்) இவரை மதீனாவிலிருந்து நாடு
கடத்திய போது அந்த நகைகளுடன் இங்கு வந்து தங்கியிருந்தார்.
இந்நிகழ்ச்சியைப் பற்றி இப்னு இஸ்ஹாக் (ரஹ்) குறிப்பிடுவதாவது: நபியவர்களிடம்
~கினானா அர்ரபீ| என்பவன் அழைத்து வரப்பட்டான். அவனிடம்தான் நளீர் வமிச
யூதர்களுக்குச் சொந்தமான பொக்கிஷங்கள் இருந்தன. நபி (ஸல்) அவனிடம் அதைப் பற்றி
விசாரிக்கவே, அவன் 'அந்தப் பொக்கிஷம் உள்ள இடம் எனக்குத் தெரியாது" என்று
பொய்யுரைத்தான். அப்போது மற்றொரு யூதன் நபியவர்களிடம் வந்து 'கினானா ஒவ்வொரு
நாள் காலையிலும் இந்த பாழடைந்த வீட்டிற்கு வந்து போவதை நான் பார்த்திருக்கிறேன்"
என்று கூறினான். உடனே நபி (ஸல்) அவர்கள் கினானாவிடம் 'அவர் கூறுவது போன்று
அப்பொருள் உம்மிடம் இருந்தால் நான் உன்னை கொன்று விடட்டுமா?" என்று கேட்க
அவன் 'சரி!" என்றான். நபியவர்களின் கட்டளைக்கிணங்க அந்த பாழடைந்த வீடு
தோண்டப்பட்டு அதில் பொக்கிஷங்களின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது. நபி (ஸல்)
'மீதமுள்ள பொக்கிஷங்கள் எங்கே?" என்று கேட்க, அவன் அதைக் கொடுப்பதற்கு மறுத்து
விட்டான். அவனை நபியவர்கள் ஜுபைடம் கொடுத்து 'இவனிடமுள்ள அனைத்தையும்
வாங்கும் வரை இவனை வேதனை செய்யுங்கள்" என்று கூறினார்கள். ஜுபைர் (ரழி)
அம்பின் கூரிய பகுதியால் அவனது நெஞ்சில் குத்தினார்கள். அவனது உயிர் போகும்
Pயபந 390 ழக 518
தருவாயில் அவனை முஹம்மது இப்னு மஸ்லமாவிடம் ஜுபைர் கொடுத்து விட்டார்கள்.
முஹம்மது இப்னு மஸ்லமாவின் சகோதரர் மஹ்மூத், நா" கோட்டையின் சுவல் நிழலுக்காக
அமர்ந்திருந்த போது கோட்டையின் மேலிருந்து திருகைக் கல்லைத் தள்ளிவிட்டு
யூதர்களால் கொல்லப்பட்டார். எனவே, முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) இவனைக் கொலை
செய்தார்.
அபுல் ஹ{கைகின் இரண்டு மகன்களும் பொருட்களை மறைத்து வைத்திருந்ததால்
அவர்களை கொல்லும்படி நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.
புதுமணப் பெண்ணாக இருந்த ஹையின் மகள் ஸஃபிய்யாவை நபியவர்கள் சிறை
பிடித்தார்கள். இவரைக் ~கினானா இப்னு அப+ ஹ{கைக்| மணந்திருந்தான்.
கனீமத்தை பங்கு வைக்கப்படுதல்
நபி (ஸல்) யூதர்களைக் கைபரிலிருந்து வெளியேற்றி நாடு கடத்தத் திட்டமிட்டார்கள்.
ஆனால் அவர்கள், 'முஹம்மதே எங்களை இப்ப+மியில் தங்கவிடுங்கள் நாங்கள்
இப்ப+மியை சீர்படுத்துகிறோம் உங்களைவிட இந்த ப+மியைப் பற்றி நாங்கள் நன்கு அறிந்து
வைத்திருக்கிறோம்." என்று கூறினார்கள். நபியவர்களுக்கும், அவர்களது தோழர்களுக்கும்
இப்ப+மியைச் சீர்செய்வதற்கு அடிமைகள் யாரும் இல்லை. சீர் செய்வதற்கு ஓய்வோ
அவகாசமோ இவர்களுக்கும் இல்லை. எனவே, விவசாயத்திலும் தோட்டங்களிலும் மகசூலில்
ஒரு பகுதியைத் தர வேண்டும் என்ற நிபந்தனையிலும், நபி (ஸல்) கூறும் காலம் மட்டுமே
இங்கு தங்கவேண்டும் என்ற நிபந்தனையிலும் கைபர் ப+மியை நபி (ஸல்) யூதர்களிடம்
கொடுத்தார்கள். அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) கைபருடைய விளைச்சல்களின்
கண்காணிப்பாளராக இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கைபர் ப+மியை 36 பங்காகப் பிரித்தார்கள். பின்பு ஒவ்வொரு
பங்கையும் 100 பங்காகப் பிரித்தார்கள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:43 pm

ஆக மொத்தம் 3600 பங்குகளாயின. அதிலிருந்து
சமப்பாதி பங்கு நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகும். அதாவது 1800
பங்குககளில் மற்ற முஸ்லிம்களுக்குக் கிடைப்பதைப் போன்றே நபியவர்களுக்கும் ஒரு
பங்கு என்று முடிவானது. மீதமுண்டான 1800 பங்குகளைப் பொதுவாக முஸ்லிம்களுக்கு
ஏற்படும் பிரச்சனைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் நபி (ஸல்) தனியாக ஒதுக்கி
விட்டார்கள். நபி (ஸல்) இதை 1800 பங்குகளாக ஆக்கியிருந்ததற்குக் காரணம்: இந்த
கைபரின் வெற்றி அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஹ{தைபிய்யாவில் கலந்து
கொண்டவர்களுக்காக வழங்கப்பட்டதாகும். அவர்கள் இங்கு இருப்பினும் சரி, இல்லை
என்றாலும் சரி. ஹ{தைபிய்யாவில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் 1400 நபர்களாவர்.
இவர்களில் 200 பேர் குதிரை வீரர்கள். ஒவ்வொரு குதிரைக்கும் இரண்டு பங்குகள், குதிரை
வீரருக்கு ஒரு பங்கு என மொத்தம் மூன்று பங்குகள் கொடுக்கப்பட்டன. அதாவது 600
பங்குகள் 200 குதிரை வீரர்களுக்கும், 1200 பங்குகள் 1200 காலாட்படை வீரர்களுக்கும்
வழங்கப்பட்டன. (ஜாதுல் மஆது)
ஸஹீஹ{ல் புகாரியில் இடம் பெற்றுள்ள இப்னு உமரின் அறிவிப்பின் மூலம் கைபரில்
அதிகம் கனீமத்து பொருட்கள் கிடைக்கப் பெற்றன என்று தெரிய வருகிறது.
இப்னு உமர் (ரழி) கூறினார்கள்: 'கைபரை வெற்றி கொள்ளும் வரை நாங்கள் வயிறாற
உண்டதில்லை. கைபர் வெற்றி கொள்ளப்பட்டதற்கு பிறகுதான் நாங்கள் வயிறாற பேரீத்தம்
பழம் சாப்பிடுகிறோம்." (ஸஹீஹ{ல் புகாரி)
முஹாஜிர்களுக்குக் கைபரில் பேரீத்த மரங்களும், சொத்துகளும் கிடைத்துவிட்டதால் மதீனா
திரும்பியவுடன் அன்சாரிகள், முஹாஜிர்களுக்குக் கொடுத்திருந்த பேரீத்த
Pயபந 391 ழக 518
மரங்களையெல்லாம் அவர்களிடமே நபியவர்கள் திரும்பக் கொடுத்தார்கள். (ஸஹீஹ்
முஸ்லிம், ஜாதுல் மஆது)
ஜஅஃபர் மற்றும் அஷ்அரி கிளையினர் வருகை
இப்போர் முடிந்த பின்னர் ஜஅஃபர் (ரழி) அவர்களும், அப+மூஸா அல்அஷ்அரி (ரழி)
அவர்களும் தங்கள் தோழர்களுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.
இதைப் பற்றி அப+மூஸா (ரழி) கூறுகிறார்கள்: 'நாங்கள் யமனில் வசித்து வந்தோம்.
முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த செய்தியை நாங்கள் அறிந்தோம்.
நானும் எனது சகோதரர்களும், 50க்கும் மேற்பட்ட எங்களது கூட்டத்தினரும்
நபியவர்களைச் சந்திக்கப் புறப்பட்டோம். ஆனால், எங்களது கப்பல் திசைமாறி ~ஹபஷா|
சென்று விட்டது. அங்கு நஜ்ஜாஷியிடம் ஜஅஃபர் (ரழி) அவர்களும் அவரது தோழர்களும்
இருக்கக் கண்டோம். அவர் எங்களை இங்கு தங்குமாறு 'நபி (ஸல்) அனுப்பி
இருக்கிறார்கள். எனவே, நீங்களும் எங்களுடன் தங்குங்கள்" என்று கூறினார். நாங்களும்
அவருடன் தங்கியிருந்தோம்.
பிறகு அவர் நபியவர்களை சந்திக்கப் புறப்பட்டபோது நாங்களும் அவருடன் புறப்பட்டோம்.
நாங்கள் நபியவர்களை சந்திக்க மதீனா வந்தபோது அவர்கள் மதீனாவிலிருந்து கைபருக்கு
புறப்பட்டு விட்டார்கள். நாங்களும் கைபர் சென்றோம். கைபர் போரில் கலந்து கொள்ளாத
எவருக்கும் கைபரில் கிடைத்த கனீமத்தில் பங்கு கொடுக்கவில்லை. ஆனால், எங்களுக்கும்
ஜஅஃபர் மற்றும் அவரது தோழர்களுக்கும் நபி (ஸல்) கைபரின் கனீமத்தில் பங்கு
கொடுத்தார்கள். (ஸஹீஹ{ல் புகாரி)
ஜஅஃபர் (ரழி) வந்தபோது அவரை வரவேற்று அவரது இரு கண்களுக்கிடையில் நபி (ஸல்)
அவர்கள் முத்தமிட்டார்கள். பின்பு 'எனது அதிக மகிழ்ச்சிக்கு என்ன காரணம்? கைபரின்
வெற்றியா? ஜஅஃபன் வருகையா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அறியேன்"
என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி, ஜாதுல் மஆது)
குறிப்பு: நபி (ஸல்) அவர்கள் அம்ர் இப்னு உமைய்யா ழம் (ரழி) அவர்களை
நஜ்ஜாஷியிடம் அனுப்பி ஜஅஃபரையும் அவரது தோழர்களையும் அழைத்து வருமாறு
கூறினார்கள். நஜ்ஜாஷி அவர்களை நபியவர்களிடம் அனுப்பி வைத்தார். அந்நேரத்தில்
அவர்கள் மொத்தம் 16 நபர்கள் இருந்தனர். மற்றவர்களெல்லாம் இதற்கு முன்னதாகவே
மதீனா வந்து விட்டனர். இந்த சமயத்தில் தான் அப+ மூஸாவும் ஜஅஃபருடன் வந்தார்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:44 pm

ஸஃபிய்யாவுடன் திருமணம்
இவர் கணவர் கினானா இப்னு அப+ ஹ{கைக் மோசடி செய்த குற்றத்தால் கொல்லப்பட்டார்.
ஆகவே, இவர் கைதியானார். கைதிகள் ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்பட்டனர். திஹ்யா
இப்னு கலீஃபா (ரழி) என்ற தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின்
தூதரே! கைதிகளில் இருந்து எனக்கு ஒரு பெண்ணைத் தாருங்கள்" என்று கேட்டார்.
அதற்கு நபியவர்கள் 'உனக்கு விருப்பமான ஒரு பெண்ணை அழைத்துச் செல்!" என்று
கூறினார்கள். அவர் கைதிகளிலிருந்த ஸஃபிய்யா பின்த் ஹையை அழைத்துச் சென்றார்.
அதைப் பார்த்த மற்றொரு தோழர் நபியவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே!
குரைளா, நளீர் ஆகிய இரண்டு கிளையினருக்கும் தலைவியான ஸஃபிய்யாவை நீங்கள்
திஹ்யாவிற்கு கொடுத்தீர்களா? அப்பெண் உங்களைத் தவிர வேறு யாருக்கும்
தகுதியானவரல்ல" என்று கூறினார். அதற்கு நபியவர்கள் 'அவரை ஸஃபிய்யாவுடன்
அழைத்து வாருங்கள்" என்றார்கள். திஹ்யா ஸஃபிய்யாவுடன் வரவே நபி (ஸல்)
ஸஃபிய்யாவைப் பார்த்தார்கள். பின்பு திஹ்யாவிடம் 'கைதிகளில் வேறொரு பெண்ணை
நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அதற்குப் பின் ஸஃபிய்யாவுக்கு
Pயபந 392 ழக 518
இஸ்லாமைப் பற்றி எடுத்துக் கூற, அவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபியவர்கள்
ஸஃபிய்யா (ரழி) அவர்களை உரிமைவிட்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவரை
உரிமைவிட்டதையே அவருக்குரிய மஹராக" ஆக்கினார்கள்.
நபி (ஸல்) மதீனா திரும்பும் வழியில் ~ஸத்துஸ்ஸஹ்பா| என்ற இடத்தில் ஸஃபிய்யா (ரழி)
துடக்கிலிருந்து தூய்மையடைந்தார்கள். உம்மு ஸ{லைம் (ரழி) ஸஃபிய்யாவை அலங்கரித்து
இரவில் நபியவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். மறுநாள் பேரீத்தம் பழம், நெய், மற்றும்
சத்துமாவினால் செய்யப்பட்ட ஒருவகை பாயாசத்தைக் கொண்டு நபி (ஸல்) வலிமா"
விருந்து அளித்தார்கள். மூன்று நாட்கள் ஸஃபிய்யா (ரழி) அவர்களுடன் நபி (ஸல்)
தங்கினார்கள். (ஸஹீஹ{ல் புகாரி, ஜாதுல் மஆது)
நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவுடைய கன்னத்தில் அடியின் வடுவைப் பார்த்து 'இது
என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்கள்
ஊர் வருவதற்கு முன் முழுநிலா தனது இடத்திலிருந்து விலகி எனது மடியில் விழுவதாகக்
கனவு கண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களைப் பற்றிய எவ்விஷயத்தையும்
நான் நினைக்கவில்லை. இக்கனவை எனது கணவனிடம் கூறியபோது எனது கன்னத்தில்
வேகமாக அறைந்து, மதீனாவில் இருக்கும் அரசரையா நீ ஆசைப்படுகிறாய்? என்றார்.
அதன் காரணமாக ஏற்பட்ட வடுதான் இது" என்று கூறினார். (ஜாதுல் மஆது, இப்னு
ஹிஷாம்)
நஞ்சு கலந்த உணவு
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:44 pm

கைபரை முழுமையாக வெற்றி கொண்டு நபி (ஸல்) அவர்கள் முழு நிம்மதி அடைந்தார்கள்.
அப்போது ஸல்லாம் இப்னு மிஷ்கம் என்பவனின் மனைவி ~ஜைனப் பின்த் ஹாரிஸ்|
என்பவள், நபி (ஸல்) அவர்களுக்கு விருந்து ஒன்று ஏற்பாடு செய்தாள். விருந்தில் ஓர்
ஆட்டை விஷத்துடன் சமைத்தாள். குறிப்பாக, நபி (ஸல்) அவர்கள் விரும்பி உண்ணும்
பகுதி முன் சப்பை என்பதை தெரிந்து அதிலே அதிக விஷத்தை ஏற்றினாள்.
நபியவர்கள் அதிலிருந்து ஒரு துண்டை எடுத்துக் கடித்தார்கள். ஆனால் அதை
விழுங்காமல் துப்பிவிட்டார்கள். 'இந்த எலும்பு தன்னில் விஷமேற்றப்பட்டுள்ளது என்று
என்னிடம் கூறுகிறது" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்பு அப்பெண்ணை
அழைத்து விசாரிக்கவே அவள் உண்மையை ஒப்புக் கொண்டாள். 'இவ்வாறு செய்ததற்கான
காரணம் என்ன?" என்று நபி (ஸல்) விசாரித்தார்கள். அதற்கு அவள், 'நீங்கள் அரசராக
இருந்தால் உங்களைக் கொல்வதில் எங்களுக்கு நிம்மதி கிடைக்கலாம். நீங்கள் தூதராக
இருந்தால் உண்மை உங்களுக்கு தெரிந்து விடும். அதனால்தான் அவ்வாறு செய்தேன்"
என்று கூறினாள். நபியவர்கள் அவளை மன்னித்து விட்டு விட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களுடன் பிஷ்ர் இப்னு பரா (ரழி) என்ற தோழரும் சாப்பிட்டார். அவர்
அந்த ஆட்டிலிருந்து ஒரு துண்டை முழுமையாகச் சாப்பிட்டதால் அந்த விஷம் அவரது
உடலில் கலந்து மரணித்து விட்டார்.
அப்பெண் முற்றிலும் மன்னிக்கப்பட்டாளா? அல்லது கொல்லப்பட்டாளா? என்பதைப் பற்றி
பல மாறுபட்ட அறிவிப்புகள் வந்துள்ளன.
இதைப் பற்றி அறிஞர்கள் கூறுவதாவது: நபியவர்கள் ஆரம்பத்தில் அப்பெண்ணை
மன்னித்து விட்டார்கள். அடுத்து, அவள் தந்த விஷத்தால் பிஷ்ர் (ரழி) இறந்துவிடவே
அவளைக் கொல்லும்படி கூறினார்கள். (ஸஹீஹ{ல் புகாரி, ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
Pயபந 393 ழக 518
கைபர் போரில் இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்
இப்போரில் முஸ்லிம்களில் பதினாறு நபர்கள் கொல்லப்பட்டார்கள். அதில் நான்கு நபர்கள்
குறைஷிகள். ஒருவர் அஷ்ஜாஃ கிளையைச் சேர்ந்தவர் மற்றும் ஒருவர் அஸ்லம்
கிளையைச் சேர்ந்தவர், மற்றொருவர் கைபரைச் சேர்ந்தவர். மீதமுள்ள 9 பேர்கள்
அன்சாரிகளாவர். சிலர் முஸ்லிம்களில் கொல்லப்பட்டவர்கள் பதினேழு பேர்கள் என்றும்
கூறுகின்றனர்.
அறிஞர் மன்சூர்ஃப+ (ரஹ்) கூறுவதாவது: 'ஷஹீதானவர்கள் மொத்தம் பத்தொன்பது
நபர்களே. நான் பல மூல நூல்களை ஆராய்ச்சி செய்து பார்த்த போது இப்போரில்
கொல்லப்பட்டவர்களின் 23 பெயர்களைப் பார்த்தேன். அதாவது, அந்த 23 பெயர்களில்
ஒரு பெயர் ~தப்ரி'யில் மட்டும் இடம் பெற்றுள்ளது. இன்னும் ஒரு பெயர் ~வாகிதி'யில்
மட்டும் இடம் பெற்றுள்ளது. மற்றொருவர் சமைக்கப்பட்ட ஆட்டை சாப்பிட்டு
மரணித்தவராவார். மற்றொருவர் பத்ரில் கொல்லப்பட்டாரா? அல்லது கைபரில்
கொல்லப்பட்டாரா? என்பது பற்றி இரு கருத்துகள் உள்ளன. ஆனால், அதில் சரியானது
அவர் பத்ரில் கொல்லப்பட்டார் என்பதுதான். ஆகவே, முஸ்லிம்களில் 19 நபர்கள்
கொல்லப்பட்டார்கள் என்பதுவே ஏற்றமானது. யூதர்களில் 93 பேர்கள் கொல்லப்பட்டார்கள்."
(ரஹ்மத்துல் லில் ஆலமீன்)
ஃபதக்
நபி (ஸல்) கைபருக்கு வந்தபோது முஹய்ம்ஸா இப்னு மஸ்ஊது (ரழி) என்பவரை ~ஃபதக்|
என்ற இடத்திலுள்ள யூதர்களிடம் அனுப்பி, இஸ்லாமை ஏற்குமாறு அழைத்தார்கள்.
ஆனால், அவர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதில் தாமதம் காட்டினர். நபியவர்களின்
கைபர் வெற்றியைப் பார்த்த இவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் பயத்தை ஏற்படுத்தினான்.
இதனால் ~ஃபதக்| யூதர்கள் நபியவர்களிடம் தூது அனுப்பி கைபர்வாசிகளிடம் ஒப்பந்தம்
செய்தவாறு தங்களிடமும் ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு வேண்டினர். அதாவது
ஃபதக்கின் விளைச்சலில் சரிபாதியைத் தர அவர்கள் ஒப்புக் கொண்டனர். அதை
நபியவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். ஃபதக் சண்டையின்றி வெற்றி கொள்ளப்பட்டதால்
அதன் விளைச்சல் அனைத்தும் நபியவர்களுக்கு மட்டும் சொந்தமாயிற்று. (இப்னு ஹிஷாம்)
வாதில் குரா
நபி (ஸல்) அவர்கள் கைபர் போரை முடித்து அங்கிருந்து ~வாதில் குரா| என்ற இடத்தை
நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு யூதர்களின் ஒரு கூட்டமும், அரபுகளின் ஒரு கூட்டமும்
சேர்ந்து கொண்டனர். நபியவர்கள் முஸ்லிம்களுடன் அங்கு சென்ற போது அங்கிருந்த
யூதர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்ததால் முஸ்லிம்களை நோக்கி அம்பெறிந்து
தாக்குதல் நடத்தினர். இதில் நபியவர்களின் ~மித்அம்| என்ற அடிமை கொல்லப்பட்டார்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:45 pm

அவருக்கு சொர்க்கம் உண்டென மக்கள் நற்செய்தி கூறினர். ஆனால் நபி (ஸல்)
'ஒருக்காலும் அவ்வாறு இல்லை. எனது உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது
சத்தியமாக! கைபர் போரின் கனீமத்து பொருட்களை பங்கு வைப்பதற்கு முன் அவர்
எடுத்துக்கொண்ட போர்வை இப்போது அவர் மீது நெருப்பாக எரிந்து கொண்டு
இருக்கிறது" என்று கூறினார்கள். நபியவர்களின் இந்த எச்சரிக்கையை கேள்விப் பட்ட
மக்கள், தாங்கள் அற்பமாக நினைத்து எடுத்து வைத்திருந்த பொருட்களையெல்லாம்
கொண்டு வந்து கொடுத்தனர். ஒருவர் செருப்பிற்குரிய ஒன்று (அல்லது) இரண்டு வார்களை
நபியவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார். அதற்கு நபியவர்கள் 'இது நரக நெருப்பின்
ஒரு வாராக இருக்கும் அல்லது இரண்டு வாராக இருக்கும்" என்று கூறினார்கள்.
(ஸஹீஹ{ல் புகாரி)
Pயபந 394 ழக 518
யூதர்களின் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நபியவர்கள் உடனடியாக தங்களது
தோழர்களைப் போருக்கு தயார்படுத்தி அணிவகுப்பை நடத்தினார்கள். மேலும், முழு
படைக்குள்ள பெரிய கொடியை ஸஅது இப்னு உபாதாவிடம் கொடுத்தார்கள். அதற்குப் பின்
மற்ற சிறிய கொடிகளில் ஒன்றை ஹ{பாப் இப்னு முன்திடமும், மற்றொரு கொடியை ஸஹ்ல்
இப்னு ஹ{னைஃபிடமும், மற்றொரு கொடியை அப்பாத் இப்னு பிஷ்ர் இடமும்
கொடுத்தார்கள்.
இதையெடுத்து இஸ்லாமை ஏற்க நபி (ஸல்) யூதர்களை அழைத்தார்கள். ஆனால், அவர்கள்
ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். அவர்களிலிருந்து ஒருவன் வெளியேறி சண்டைக்கு
வந்தான். அவனை ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) கொன்றார். பின்பு மற்றொருவன்
சண்டையிட வந்தான். அவனையும் ஜுபைர் (ரழி) கொன்றார். பின்பு மற்றொருவன் வந்தான்.
அவனை அலீ இப்னு அபீதாலிப் (ரழி) கொன்றார். இவ்வாறு அவர்களில் பதினொரு
நபர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒவ்வொருவர் கொல்லப்பட்ட பின்பும் நபியவர்கள்
மீதமுள்ளவர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தார்கள்.
இந்நிலையில் தொழுகையுடைய நேரம் வரும்போதெல்லாம் தங்களது தோழர்களுடன்
தொழுகையை நிறைவேற்றிவிட்டு, மீண்டும் யூதர்களிடம் வந்து அவர்களுக்கு இஸ்லாமிய
மார்க்கத்தை எடுத்துக் கூறி அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். இவ்வாறு மாலை வரை
சண்டை தொடர்ந்தது. மறுநாள் காலை நபியவர்கள்,
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:45 pm

அவர்களிடம் சென்ற போது சூரியன்
உதயமாகி சற்று நேரத்திற்குள்ளாகவே யூதர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு
சரணடைந்தார்கள். நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏராளமான பொருட்களை
அல்லாஹ் வழங்கினான்.
இங்கு நபி (ஸல்) நான்கு நாட்கள் தங்கியிருந்து கிடைத்த பொருட்களை தோழர்களுக்குப்
பங்கு வைத்துக் கொடுத்தார்கள். ஆனால், மற்ற நிலங்களையும் பேரீத்தம்
தோட்டங்களையும் யூதர்களிடமே கொடுத்து கைபர் யூதர்களிடம் செய்து கொண்டதைப்
போன்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். (ஜாதுல் மஆது)
தைமா
கைபர், ஃபதக், வாதில் குரா ஆகிய இடங்களிலிருந்த யூதர்களெல்லாம் பணிந்து விட்டனர்
என்ற செய்தி தைமாவிலுள்ள யூதர்களுக்குக் கிடைத்தது. அவர்கள் முஸ்லிம்களுக்கு
எதிராக எந்த போர் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. மாறாக, அவர்களே முன் வந்து
சமாதானம் செய்து கொள்வதற்கு நபி (ஸல்) அவர்களிடம் தூது அனுப்பினார்கள்.
நபியவர்களும் அதை ஏற்றுக் கொண்டு அவர்களது சொத்துகளை அவர்களிடமே கொடுத்து
விட்டார்கள். (ஜாதுல் மஆது)
நபி (ஸல்) ஓர் உடன்படிக்கை பத்திரத்தையும் அவர்களுக்கு எழுதிக் கொடுத்தார்கள்.
அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாவது:
'அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பனூ ஆதியா என்ற யூதர்களுக்கு எழுதிக் கொடுக்கும்
ஒப்பந்தம். இவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு அளிக்கப்படும். இவர்களுக்கு வரி
விதிக்கப்படும். இவர்கள் மீது அநீதி இழைக்கப்பட மாட்டாது. இவர்களை நாடு கடத்தப்பட
மாட்டாது. இது நிரந்தரமான ஒப்பந்தமாகும்."
இதை காலித் இப்னு ஸஈது (ரழி) எழுதினார். (இப்னு ஸஅத்)
மதீனாவிற்குத் திரும்புதல்
இதற்குப் பின் நபியவர்கள் மதீனா திரும்பினார்கள். திரும்பும் வழியில் ஒரு
பள்ளத்தாக்கை கடந்து சென்ற போது மக்கள் சப்தமிட்டு 'அல்லாஹ{ அக்பர், அல்லாஹ{
Pயபந 395 ழக 518
அக்பர், லாஇலாஹஇல்லல்லாஹ்" என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) 'நீங்கள்
நிதானத்தைக் கையாளுங்கள். நீங்கள் செவிடனையோ அல்லது மறைவாக இருப்பவனையோ
அழைக்கவில்லை. நீங்கள் நன்கு கேட்கும் ஆற்றல் உள்ளவனையும், சமீபத்தில்
இருப்பவனையுமே அழைக்கின்றீர்கள்" என்று கூறினார்கள். (ஸஹீஹ{ல் புகாரி)
மதீனா திரும்பும் வழியில் ஓர் இரவு முற்பகுதியில் பயணித்து விட்டு பிற்பகுதியில்
ஓய்வெடுத்தார்கள். ஓய்வெடுப்பதற்கு முன் பிலாலிடம் 'இன்றிரவு தூங்காமல் எங்களுக்கு
பாதுகாப்பாய் இருங்கள்" என்று கூறினார்கள். ஆனால், வாகனத்தில் சாய்ந்தவராக
அமர்ந்திருந்த பிலாலுக்குத் தூக்கம் மிகைத்து விட்டது. சூரியன் உதயமாகும் வரை யாரும்
விழிக்கவில்லை. முதன்முதலாக நபியவர்களே விழித்தார்கள். அங்கிருந்து புறப்பட்டு
வேறோர் இடத்திற்கு வந்து ஃபஜ்ர் தொழுதார்கள். சிலர் இச்சம்பவம் வேறொரு
சந்தர்ப்பத்தில் ஏற்பட்டது என்றும் கூறுகின்றனர். (ஜாதுல் மஆது)
கைபர் போரின் பல நிகழ்வுகளைக் கவனித்துப் பார்க்கும்போது நபி (ஸல்) அவர்கள்
ஸஃபர் மாதம் இறுதி அல்லது ரபீஉல் அவ்வல் ஆரம்பத்தில் மதீனாவை நோக்கித்
திரும்பியிருக்க வேண்டும் என்றே தெரிய வருகிறது.
அபான் இப்னு ஸஈத் படைப்பிரிவு
சங்கைமிக்க மாதங்கள் முடிந்ததற்குப் பின், வீரர்கள் யாருமின்றி மதீனாவைக் காலியாக
வைப்பது முறையல்ல என்பதை ஒரு ராணுவத் தலைவர் அறிந்து வைத்திருப்பதை விட நபி
(ஸல்) நன்றாகவே அறிந்திருந்தார்கள். ஏனெனில், மதீனாவைச் சுற்றியிருந்த கிராம
அரபிகள், முஸ்லிம்கள் எப்பொழுது அயர்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர்.
எனவேதான் கைபருக்கு போய்க் கொண்டிருக்கும் வழியிலேயே அபான் இப்னு ஸஈதின்
தலைமையின் கீழ் நஜ்தில் உள்ள கிராம அரபிகளை அச்சுறுத்துவதற்காக ஒரு படையை
நபி (ஸல்) அனுப்பி விட்டார்கள். நபியவர்கள் கொடுத்த கடமையை நிறைவேற்றிவிட்டு
கைபர் நோக்கி அபான் இப்னு ஸஈத் (ரழி) திரும்பினார். அதற்குள் நபியவர்கள் கைபரை
வெற்றி கொண்டு விட்டார்கள்.
அநேகமாக இப்படையை ஹிஜ்ரி 7, ஸஃபர் மாதத்தில் அனுப்பியிருக்க வேண்டும்.
இப்போரைப் பற்றிய சில குறிப்புகள் புகாரியில் இடம் பெற்றுள்ளது. ஆனால், புகாரியின்
விரிவுரையாளர் இப்னு ஹஜர் (ரஹ்) 'இப்போரைப் பற்றிய சரியான தகவல் தனக்குத்
தெரியவில்லை" என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.(ஸஹீஹ{ல் புகாரி, ஃபத்ஹ{ல் பாரி)
அடுத்தக்கட்ட போர்களும் படைப் பிரிவுகளும் (ஹிஜ்ரி 7)
தாதுர் ரிகா
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:45 pm

இஸ்லாமிற்கு எதிரான மூன்று மாபெரும் ராணுவங்களில் பலம் வாய்ந்த இரண்டு
ராணுவங்களை முற்றிலும் முறியடித்ததற்குப் பின் மூன்றாவது எதிரியின் பக்கம் தங்களது
கவனத்தை முழுமையாகத் திருப்பினார்கள். நஜ்தின் கிராமப்புறங்களில் பரவியிருந்த
நாடோடி வம்பர்களான அரபிகளே அந்த மூன்றாவது எதிரிகள். அந்த அரபிகள்
சந்தர்ப்பங்களையும் அவகாசங்களையும் எதிர்பார்த்திருந்து அவ்வப்போது மதீனாவின் மீது
தாக்குதல் நடத்தி கொள்ளையடிப்பது, வழிப்பறி செய்வது, திருடுவது போன்ற குற்றச்
செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நாடோடிகள் ஒரு குறிப்பிட்ட ஊரிலோ நகரத்திலோ வசிக்கவில்லை. இவர்களது
இல்லங்கள் பெரும் கோட்டைகளோ அரண்களோ இல்லை. மாறாக, முகவரியின்றி, பாலை
வனங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் வசித்து வந்த காரணத்தால் இவர்களை அடக்குவதோ,
இவர்களின் அட்டூழியத்தை அணைப்பதோ, முந்திய இரு எதிரிகளை அடக்கியதைவிட
சற்றுச் சிரமமாகவே இருந்தது. ஆகவே, அவர்களை அச்சுறுத்தும் படி தாக்குதல்கள்
Pயபந 396 ழக 518
நடத்துவது அவசியமாயிற்று. அதைத் தவிர வேறு நடவடிக்கை ஏதும் அவர்களுக்குப்
பலனளிப்பதாக இல்லை. அதனால் முஸ்லிம்கள் அவர்கள் மீது பலமுறை திடீர் திடீரென
தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த அரபிகளுக்கு பாடம் கற்பிப்பதற்காக நபியவர்கள் எடுத்த ஒரு போர் நடவடிக்கைக்கு
'தாதுர் ரிகா" என்று சொல்லப்படுகிறது.
பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் இப்போர் நான்காம் ஆண்டு நடந்தது என்று
கூறுகின்றனர். ஆனால், இப்போரில் அப+ மூஸா அஷ்அரி (ரழி) மற்றும் அப+ஹ{ரைரா
(ரழி) கலந்து கொண்டதிலிருந்து இப்போர் கைபர் போருக்கு பின்னர்தான் நடந்தது என்று
உறுதியாக சொல்ல முடிகிறது. ஆகவே, ஹிஜ்ரி 7, ரபீஉல் அவ்வல் மாதத்தில்தான் இது
நடந்திருக்க வேண்டும்.
இப்போர் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதின் சுருக்கமாவது: கத்ஃபான்
கோத்திரத்தைச் சேர்ந்த அன்மார், ஸஅலபா மற்றும் முஹாப் ஆகிய இம்மூன்று
கிளையினரும் ஒன்று சேர்ந்து முஸ்லிம்களைத் தாக்கத் தயாராகின்றனர் என்று
நபியவர்களுக்குத் தெரிந்தவுடன் 400 அல்லது 700 தோழர்களை அழைத்துக் கொண்டு
விரைந்தார்கள். மதீனாவில் அப+தர் அல்லது உஸ்மானைப் பிரதிநிதியாக நியமித்தார்கள்.
தங்களது படையுடன் அவர்களது ஊர்களுக்குள் நீண்ட தூரம் வரை நபி (ஸல்) ஊடுருவிச்
சென்றார்கள். மதீனாவிலிருந்து இரண்டு நாட்கள் பிரயாண தூரமுள்ள ~நக்ல்| என்ற
இடத்தை அடைந்தார்கள். அங்குக் கத்ஃபான் கிளையினரின் ஒரு கூட்டத்தினரைச்
சந்தித்து ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக ஆகி, ஒருவர் மற்றவரை அச்சுறுத்திக்
கொண்டனர். ஆனால், சண்டை ஏதும் நடைபெறவில்லை. எனினும், நபி (ஸல்) அன்றைய
பொழுது ~ஸலாத்துல் கவ்ஃப்'" முறைப்படி அனைத்து தொழுகைகளையும் தொழ
வைத்தார்கள்.
ஸஹீஹ{ல் புகாரியில் வருவதாவது: (படை இரண்டாக பிரிக்கப்பட்டது) தொழுகைக்கு
இகாமத் சொல்லப்படவே நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரிவினருக்கு இரண்டு ரக்அத்
தொழுகை நடத்தினார்கள். இரண்டு ரக்அத்துகளை முடித்துக் கொண்டு அப்பிரிவினர்
பாதுகாப்பிற்குச் சென்றுவிட, மற்றொரு பிரிவினர் பிந்திய இரண்டு ரக்அத்தில் நபியுடன்
சேர்ந்து தொழுதனர். ஆக, நபி (ஸல்) நான்கு ரக்அத்தும், மற்ற இரண்டு பிரிவினரும்
இரண்டு இரண்டு ரக்அத்துகள் தொழுதனர் (ஸஹீஹ{ல் புகாரி)
அப+ மூஸா அஷ்அ (ரழி) அறிவிக்கின்றார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன்
இப்போருக்காக புறப்பட்டோம். ஓர் ஒட்டகத்தில் ஆறு நபர்கள் வீதம் மாறி மாறி சவாரி
செய்தோம். இதனால் எங்களது கால்கள் வெடித்து விட்டன. எனது கால்களிலும் வெடிப்பு
ஏற்பட்டு நகங்கள் எல்லாம் பெயர்ந்து விட்டன. அதனால் துண்டுத் துணிகளை எடுத்து
எங்களது கால்களைச் சுற்றிக் கொண்டோம். எனவேதான் இப்போருக்குப் பெயர் ~தாதுர் கா|
(துண்டுத் துணிகள் உடையது) என்று அழைக்கப்பட்டது. (ஸஹீஹ{ல் புகாரி, ஸஹீஹ்
முஸ்லிம்)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:45 pm

ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ~தாத்துர் கா| போருக்கு
சென்றிருந்தோம். ஓர் அடர்த்தியான நிழல் தரும் மரத்தருகில் வந்த போது அதில் நபி
(ஸல்) ஓய்வு எடுப்பதற்காக ஏற்பாடு செய்தோம். மக்கள் பிரிந்து சென்று ஆங்காங்கிருந்த
மற்ற மர நிழல்களில் ஓய்வெடுக்க, நபி (ஸல்) அவர்கள் ஒரு மரநிழலில் தங்கினார்கள்.
அம்மரத்தில் தனது வாளைத் தொங்க விட்டுவிட்டு அதன் நிழலில் தூங்கினார்கள்.
நாங்களும் சிறிது தூங்கினோம். ஒரு முஷ்ரிக் அங்கு வந்து நபியின் வாளை உருவிக்
கொண்டார். நபி (ஸல்) கண் விழித்து பார்த்தபோது 'நீ எனக்குப் பயப்படுகிறாயா?" என்று
அவர் கேட்டார். நபி (ஸல்) 'இல்லை" என்றார்கள். அவர் 'யார் உன்னை என்னிடமிருந்து
Pயபந 397 ழக 518
பாதுகாக்க முடியும்!" என்றார். நபியவர்கள் 'அல்லாஹ்" என்றார்கள். இதற்குப் பின் நபி
(ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். நாங்கள் நபியவர்களிடம் சென்ற போது அங்கு
கிராமவாசி ஒருவர் உட்கார்ந்திருந்தார். நபியவர்கள் 'நான் தூங்கிக் கொண்டிருந்த போது
எனது வாளை இவர் எடுத்துக் கொண்டார். நான் விழித்துப் பார்த்தபோது அது அவரது
கையில் உருவப்பட்ட நிலையில் இருந்தது. இவர் 'உன்னை என்னிடமிருந்து யார்
பாதுகாப்பார்?" என்று கேட்டார். 'அல்லாஹ்" என்று நான் கூறினேன். இதோ... அவர்
உட்கார்ந்து இருக்கிறார் என்று நபி (ஸல்) கூறினார்கள். அவரைத் தண்டிக்காமல்
விட்டுவிட்டார்கள். (முக்தஸர் ஸீரத்திர்ரஸ_ல்)
இச்சம்பவத்தைப் பற்றி வரும் மற்றொரு அறிவிப்பில் வருவதாவது, 'அல்லாஹ்" என்று நபி
(ஸல்) பதில் கூறியவுடன் அவரது கையிலிருந்து வாள் வீழ்ந்துவிட்டது. அதை நபி (ஸல்)
எடுத்துக் கொண்டு 'என்னிடமிருந்து உன்னை யார் பாதுகாப்பார்?" என்று கேட்டார்கள்.
அவர் 'வாளை எடுத்தவர்களில் சிறந்தவராக நீங்கள் இருங்கள்" என்றார்.
'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை நான் அல்லாஹ்வின்
தூதர் என்று நீ சான்று கூறுவாயா?" என்று நபி (ஸல்) அவரிடம் கேட்டார்கள். அவர்
'நான் உங்களிடம் போர் செய்யவோ, உங்களிடம் போர் புரியும் கூட்டத்தினருடன்
சேரவோ மாட்டேன் என்று நான் உங்களிடம் ஒப்பந்தம் செய்கிறேன்" எனக் கூறினார். நபி
(ஸல்) அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார்கள். அவர் தனது கூட்டத்தனரிடம்
சென்று 'நான் மக்களில் சிறந்தவரிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறினார்.
(ஃபத்ஹ{ல் பாரி, முக்தஸர் ஸீரத்திர்ரஸ_ல்)
'இந்த கிராமவாசியின் பெயர் கவ்ரஸ் இப்னு ஹாரிஸ்" என்று ஸஹீஹ{ல் புகாரியில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிஞர் வாகிதியின் நூலில் 'இந்த கிராமவாசியின் பெயர் துஃஸ_ர் இவர் இஸ்லாமை
ஏற்றுக் கொண்டார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கருத்து வேற்றுமைக்கு ஸஹீஹ{ல் புகாரியின் விரிவுரையாளர் இப்னு ஹஜர்
'இரண்டும் வௌ;வேறு நிகழ்ச்சிகளாக இருக்கலாம்" என்று விளக்கம் அளிக்கிறார்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன். (ஃபத்ஹ{ல் பாரி)
இப்போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த வழியில் இணைவைப்பாளர் ஒருவன்
மனைவியை முஸ்லிம்கள் சிறை பிடித்தனர். அவளது கணவன் 'அதற்குப் பகரமாக ஒரு
நபித்தோழரைக் கொல்வேன்" என்று நேர்ச்சை செய்து கொண்டு, இரவில் முஸ்லிம்கள்
இருந்த இடம் நோக்கி வந்தான். நபி (ஸல்) முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகவும்
எதிரிகளைக் கண்காணிப்பதற்காகவும் அப்பாது இப்னு பிஷ்ர், அம்மார் இப்னு யாஸிர் (ரழி)
ஆகிய இரு வீரர்களை நியமித்தார்கள். அப்பாது (ரழி) தொழுகையில் ஈடுபட்டார்கள்.
(அம்மார் (ரழி) தூங்கி விட்டார்) அப்போது அவன் அப்பாத் (ரழி) அவர்களை நோக்கி
அம்பெறிந்தான். அவர் அதை பிடுங்கி எறிந்துவிட்டு தொழுகையை முறிக்காமல்
தொடர்ந்தார்கள். இவ்வாறு மூன்று அம்புகள் எறிந்தும் தொழுகையை முறிக்கவில்லை.
இறுதியாக ஸலாம் கொடுத்த பின்னர் தனது தோழரை எழுப்பினார். அவர்
'ஸ{ப்ஹானல்லாஹ்! என்னை நீங்கள் எழுப்பியிருக்கலாமே?" என்றார். அதற்கு அவர்
'நான் ஒரு சூராவை ஓதிக்கொண்டு இருந்தேன். அதை உடனே முறிப்பதை
விரும்பவில்லை" என்றார். (ஃபத்ஹ{ல் பாரி, ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
வம்பர்களாக இருந்து வந்த கிராமப்புற அரபுகளின் உள்ளங்களில் இப்போர் பெரும்
அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியது
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:46 pm

. இப்போருக்குப் பின் நபி (ஸல்) அனுப்பிய
படையெடுப்புகளின் விவரங்களை நாம் அலசிப்பார்க்கும் போது இப்போருக்குப் பின்
கத்ஃபான் கிளையினர் முற்றிலும் துணிவை இழந்து, சிறிது சிறிதாகப் பணிந்து, இறுதியில்
Pயபந 398 ழக 518
இஸ்லாமை ஏற்றுக் கொண்டு விட்டனர் என்பது நமக்குத் தெரியவருகிறது. மேலும், இந்தக்
கிராமவாசிகளில் பல குடும்பத்தினர், நபி (ஸல்) அவர்களுடன் மக்காவை வெற்றி கொள்ள
வந்தனர். அதற்குப் பிறகு ஹ{னைன் போரிலும் கலந்து கொண்டனர். அதன் கனீமத்தும்
இவர்களுக்குக் கிடைத்தது. மக்கா வெற்றிக்குப் பின் இவர்களிடம் ஜகாத் வசூல் செய்ய நபி
(ஸல்) தங்களது ஆட்களை அனுப்பினார்கள். அவர்களும் ஜகாத்தை நிறைவேற்றினார்கள்
என்பதையும் நாம் பார்க்கிறோம்.
ஆகவே, இதன் மூலம் அகழ் போரில் கலந்து கொண்ட மூன்று எதிரி ராணுவங்களையும்
நபி (ஸல்) தோற்கடித்து விட்டார்கள். மதீனாவிலும், சுற்றுப்புறங்களிலும் அமைதியும்
பாதுகாப்பும் நிலவியது. இதற்குப் பின் சில பகுதிகளில் கோத்திரங்கள் சிலவற்றால்
ஏற்பட்டிருந்த பிரச்சனைகளைத் தீர்க்க முஸ்லிம்கள் ஆற்றல் பெற்றனர். உள்ளுக்குள்
பிரச்சனைகள் முடிவடைந்து, நிலைமைகள் இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் சாதகமாக
மாறுமளவு முன்னேறிவிட்டதால் இப்போருக்குப் பின் பல பெரிய நாடுகளையும்,
நகரங்களையும் வெற்றி கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர்.
இப்போரிலிருந்து திரும்பிய பின் மதீனாவில் நபி (ஸல்) ஹிஜ்ரி 7, ஷவ்வால் வரை தங்கி
இருந்தார்கள். அக்காலக் கட்டத்தில் பல படைப் பிரிவுகளை நபி (ஸல்) பல இடங்களுக்கு
அனுப்பினார்கள். அதன் விவரங்கள் பின்வருமாறு:
1) காலிப் இப்னு அப்துல்லாஹ் படைப் பிரிவு
ம்குதைத்| என்ற இடத்தில் வசிக்கும் ~முலவ்விஹ்| என்ற கூட்டத்தார், பஷீர் இப்னு
சுவைத் (ரழி) எனும் நபித்தோழன் அன்பர்களைக் கொன்று விட்டனர். அக்கூட்டத்தாரைப்
பழி தீர்க்க ஹிஜ்ரி 7, ஸஃபர் அல்லது ரபிஊல் அவ்வல் மாதத்தில் காலிப் இப்னு
அப்துல்லாஹ் (ரழி) தலைமையில் குதைத் நோக்கி ஒரு படையை நபி (ஸல்)
அனுப்பினார்கள்.
இப்படை இரவு நேரத்தில் சென்று அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தி, பலரைக்
கொன்றுவிட்டு கால்நடைகளை ஓட்டி வந்தனர். விழித்துக் கொண்ட எதிரிகள் பெரும்
படையை திரட்டிக் கொண்டு முஸ்லிம்களைத் தாக்கப் பின்தொடர்ந்தனர். மிகச் சமீபத்தில்
எதிரிகள் வந்துவிட்ட பொழுது கடுமையான மழை ஒன்றை அல்லாஹ் இறக்கினான். சிறிது
நேரத்தில் பயங்கர வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதும் எதிரிகளிடமிருந்து முஸ்லிம்கள்
தப்பித்து மதீனா வந்து சேர்ந்தனர்.
2)ஹிஸ்மா படைப் பிரிவு
ஹிஜ்ரி 7, ஜுமாதல் ஆகிராவில் இப்படை அனுப்பப்பட்டது. 'அரசர்களுக்கும்
ஆளுநர்களுக்கும் கடிதம் எழுதுதல்" என்ற தலைப்பின் கீழ் இப்படையெடுப்பின்
விவரங்கள் கூறப்பட்டு விட்டன.
3) உமர் இப்னு கத்தாப் படைப் பிரிவு
ஹிஜ்ரி 7, ஸஅபான் மாதத்தில் முப்பது நபர்களுடன் உமர் (ரழி) அவர்களை ~துர்பா| என்ற
இடத்துக்கு நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இப்படை இரவில் பயணிப்பதும் பகலில்
மறைந்திருப்பதுமாக தங்கள் பயணத்தைத் தொடர்ந்தது. துர்பாவில் வசித்து வந்த ஹவாஸின்
கிளையினருக்கு இச்செய்தி எட்டியவுடன் இடங்களைக் காலி செய்து தப்பித்து
ஓடிவிட்டனர். உமர் (ரழி) தங்கள் படையுடன் அங்கு சென்று பார்த்த பொழுது யாரும்
இல்லாததால் மீண்டும் மதீனாவிற்குத் திரும்பி விட்டார்கள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:46 pm

4) பஷீர் இப்னு ஸஅது படைப் பிரிவு
ஹஜ் 7, ஷஅபான் மாதத்தில் பஷீர் (ரழி) அவர்களை முப்பது வீரர்களுடன் நபி (ஸல்)
~ஃபதக்| மாநிலத்தின் ஓர் எல்லையில் வசிக்கும் முர்ரா கிளையினர் மீது தாக்குதல்
நடத்துவதற்கு அனுப்பி வைத்தார்கள். இப்படை அங்கு சென்று தாக்குதல் நடத்தி,
அவர்களின் கால்நடைகளை எல்லாம் ஓட்டிக் கொண்டு திரும்பினர். இரவு நேரத்தில்
எதிரிகள் படையாக வந்து இவர்களுடன் போர் புரிந்தனர். பஷீர் (ரழி) அவர்களும்
அவருடைய தோழர்களும் எதிரிகளை அம்பால் எறிந்து தாக்கினர். இவர்களின் அம்புகள்
அனைத்தும் தீர்ந்து விட்டன. இறுதியாக நடந்த வாள் சண்டையில் பஷீரைத் தவிர
அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். பஷீர் (ரழி) தனக்கு ஏற்பட்ட காயங்களுடன்
அங்கிருந்து ஃபதக்குக்குச் சென்றார். காயங்கள் குணமாகும் வரை யூதர்களிடம்
தங்கியிருந்து விட்டு மதீனா வந்து சேர்ந்தார்.
5) காலிபு இப்னு அப்துல்லாஹ் படைப் பிரிவு
ஹிஜ்ரி 7, ரமழான் மாதத்தில் 130 வீரர்களுடன் ~மைஃபஆ| என்ற இடத்திலுள்ள உவால்,
அப்து இப்னு ஸஅலபா ஆகியோர் மீது தாக்குதல் நடத்த காலிப் இப்னு
அப்துல்லாஹ்வுடன் ஒரு படையை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். அந்தப் படை
எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி எதிர்த்தவர்களைக் கொன்றுவிட்டு கால்நடைகளை ஓட்டி
வந்தனர். இப்படையெடுப்பின் போதுதான் ~நஹ்க் இப்னு மிர்தாஸ்| என்பவர் கலிமாவை
மொழிந்தும் உஸாமா இப்னு ஸைது (ரழி) என்ற நபித்தோழரால் கொல்லப்பட்டு விட்டார்.
படை மதீனா வந்தடைந்ததும் அச்செய்தி நபியவர்களுக்குத் தெரிய வரவே
'லாயிலாஹஇல்லல்லாஹ் என்று கூறிய பின்னரா நீ அவரைக் கொலை செய்தாய்?" எனக்
கோபத்துடன் கேட்டார்கள். அதற்கு, 'தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் அதைக்
கூறினார்" என்று உஸாமா (ரழி) பதிலளிக்க, 'அவர் உண்மையாளரா? பொய்யரா? என நீ
அறிய அவரது உள்ளத்தை பிளந்து பார்த்தாயா?" என்று நபி (ஸல்) வன்மையாகக்
கண்டித்தார்கள்.
6) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா படைப் பிரிவு
அஸீர் இப்னு ஜாம் அல்லது பஷீர் இப்னு ஜாம் என்பவர் முஸ்லிம்களின் மீது தாக்குதல்
நடத்த சில கத்ஃபானியரை ஒன்று சேர்க்கிறார் என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு
எட்டியது. இதனால் நபி (ஸல்) ஹிஜ்ரி 7, ஷவ்வால் மாதத்தில் 30 வீரர்களை அப்துல்லாஹ்
இப்னு ரவாஹா (ரழி) தலைமையில் கைபரை நோக்கி அனுப்பி வைத்தார்கள். இப்படை
அஸீடம் வந்து எங்களுடன் 'நீர் உமது தோழர்களுடன் வாரும் நபி (ஸல்) உம்மையே
கைபருக்கு ஆளுநராக ஆக்கி விடுவார்கள் என்று ஆசை வார்த்தைக் கூறினர். அவரும்
தயாராகவே, அஸீரையும் அவரது 30 தோழர்களையும் அழைத்துக் கொண்டு அப்துல்லாஹ்
மதீனா நோக்கிப் புறப்பட்டார். வழியில் ~கற்கறா நியார்| என்ற இடத்தில் தங்கியிருந்தபோது
இரு கூட்டத்தினருக்குமிடையில் பிரச்சனை வரவே, அஸீரையும் அவரது 30
தோழர்களையும் முஸ்லிம்கள் கொன்று விட்டனர். வரலாற்று ஆசிரியரான வாக்கிதி,
'ஹிஜ்ரி 6, ஷவ்வால் மாதம் கைபர் போர் நடப்பதற்கு சில மாதங்கள் முன்னதாக
இச்சம்பவம் நடந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
7) பஷீர் இப்னு ஸஅத் படைப் பிரிவு
300 வீரர்களுடன் பஷீர் இப்னு ஸஅதை யமன், ஜபார் என்ற இடங்களுக்கு நபி (ஸல்)
அனுப்பினார்கள். இவை கத்ஃபான் கிளையினருக்குச் சொந்தமான இடங்களாகும். சிலர்
இந்த இடம் பஜாரா மற்றும் உத்ரா கிளையினருக்குச் சொந்தமான இடம் என்றும்
கூறுகின்றனர். பல இடங்களிலிருந்து வந்து ஒன்றுகூடி மதீனாவைத் தாக்க இருந்தவர்களை
எதிர்ப்பதற்காக இப்படை புறப்பட்டது. இரவில் பயணித்தும் பகலில் மறைந்திருந்தும்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Wed Apr 27, 2011 3:06 pm

இவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர். பஷீன் வருகையை அறிந்த எதிரிகள்,
இடங்களைக் காலிசெய்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். பஷீர் (ரழி) அங்கு சென்று
எதிரிகளின் ஏராளமான கால்நடைகளை ஓட்டிக் கொண்டு இருவரையும் கைது செய்து
மதீனா திரும்பினார். கைதிகள் இருவரும் மதீனா வந்ததும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர்.
8) அப+ ஹத்ரத் படைப் பிரிவு
'ஜுஸம் இப்னு முஆவியா கிளையைச் சேர்ந்த ஒருவன் பெரும் கூட்டத்தை அழைத்துக்
கொண்டு ~காபா| என்ற இடத்திற்கு வந்திருக்கிறான், அங்கிருக்கும் கைஸ் கிளையினருடன்
சேர்ந்து முஸ்லிம்களின் மீது போர் தொடுக்க உள்ளான்" என்ற தகவல் நபி (ஸல்)
அவர்களுக்கு எட்டியது. அதை விசாரித்து உறுதியான செய்தியை அறிந்து வர, அப+
ஹத்ரதையும் (ரழி) அவருடன் இரண்டு தோழர்களையும் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள்.
அப+ ஹத்ரத் (ரழி) சூரியன் மறையும் நேரத்தில் காபா வந்து சேர்ந்தார். அவர் ஊரின் ஓர்
ஓரத்தில் மறைந்து கொண்டு மற்ற இரு தோழர்களை மற்றொரு புறத்தில் மறைந்து
கொள்ளும்படிக் கூறினார். அன்று கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றிருந்த
அக்கூட்டத்தினரின் இடையர் வருவதற்கு தாமதமானது. நன்கு இருட்டிய பின்பு அந்த
இடையரைத் தேடி அக்கூட்டத்தின் தலைவர் தனியாகப் புறப்பட்டார். அத்தலைவர்
அருகில் வந்த போது அப+ ஹத்ரத் (ரழி) அவரது நெஞ்சை குறிவைத்து அம்பெறிந்தார்.
அம்பு குறி தவறாது நெஞ்சைத் துளைக்கவே, அவர் எந்தவித சப்தமுமின்றி இறந்து
விட்டார்.
அவன் தலையைக் கொய்து, அக்கூட்டத்தினர் தங்கியிருந்த ராணுவ முகாம் அருகே அப+
ஹத்ரத் (ரழி) கட்டித் தொங்க விட்டார். பின்பு பெரும் சப்தத்துடன் தக்பீர் முழங்கினார்.
அவன் சப்தத்தைக் கேட்ட மற்ற இரு தோழர்களும் உரத்த குரலில் தக்பீர் முழங்கினர்.
இதனைச் செவிமடுத்து, தொங்கும் தலையையும் பார்த்தவுடன் கூட்டத்தினர் தலை தெறிக்க
ஓடினர். இந்த மூன்று முஸ்லிம்கள் அதிகமான ஒட்டகங்களையும் ஆடுகளையும் ஓட்டிக்
கொண்டு மதீனா வந்து சேர்ந்தனர். இப்படையெடுப்பு அடுத்துக் கூறப்பட உள்ள
'உம்ரத்துல் கழா"வுக்கு முன்பதாக நடந்தது என்று இப்னுல் கைய்" (ரஹ்) குறிப்பிடுகின்றார்.
(ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
உம்ராவை நிறைவேற்றப் புறப்படுதல் (உம்ரத்துல் கழா)
அறிஞர் ஹாகிம் (ரஹ்) கூறுகிறார்: துல்கஅதா பிறை உதயமானதும், 'சென்ற ஆண்டு
(ஹ{தைபிய்யாவில்) தவறிப்போன உம்ராவை நிறைவேற்ற வேண்டியிருப்பதால், இடைப்பட்ட
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Wed Apr 27, 2011 3:06 pm

காலங்களில் (ஷஹீத்) வீரமரணம் அடைந்தவர்களைத் தவிர ஹ{தைபிய்யாவில் கலந்து
கொண்ட (ஒருவர்கூட பின்தங்கி விடாமல்) அனைவரும் புறப்பட வேண்டும்" என நபி
(ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள்.
நபியவர்களின் கட்டளைக்கிணங்க ஹ{தைபிய்யாவில் கலந்து கொண்ட தோழர்கள்
அனைவரும் உம்ராவை நிறைவேற்ற புறப்பட்டனர். இவர்களுடன் உம்ராவில் ஆர்வம்
கொண்ட மற்றும் பலரும் புறப்பட்டனர். இவர்களில் பெண்கள், சிறுவர்கள் தவிர ஆண்கள்
மட்டும் மொத்தம் இரண்டாயிரம் பேர் இருந்தனர்." (ஃபத்ஹ{ல் பாரி)
மதீனாவில் உவைஃப் இப்னு அழ்பத் அத்தய்லி அல்லது அப+ ரூஹ{ம் அல்கிஃபாயை
பிரதிநிதியாக நியமித்துவிட்டு குர்பானிக்காக அறுபது ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு நபி
(ஸல்) புறப்பட்டார்கள். இந்த ஒட்டகங்களுக்குப் பொறுப்பாளராக நாஜியா இப்னு ஜுன்துப்
அஸ்லமியை நியமித்தார்கள். துல்ஹ{லைபா வந்தவுடன் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து
கொண்டு தல்பியா கூறினார்கள். முஸ்லிம்களும் நபியவர்களைப் பின்பற்றி தல்பியா
கூறலானார்கள். குறைஷிகள் மோசடி செய்யலாம் அல்லது ஒப்பந்தத்தை மீறலாம் என்ற
அச்சத்தில் போர் வீரர்கள், ஆயுதங்கள் சகிதம் எதற்கும் ஆயத்தமாகவே நபி (ஸல்)
Pயபந 401 ழக 518
புறப்பட்டார்கள். ~யஃஜுஜ்| என்ற இடத்தை அடைந்தவுடன் தங்களிடமிருந்த ஈட்டிகள்,
அம்புகள், கேடயங்கள் அனைத்தையும் அங்கு வைத்துவிட்டு, அவற்றிற்கு அவ்ஸ் இப்னு
கவ்லி அன்சாரியை 200 வீரர்களுடன் அதன் பாதுகாப்புக்கு நியமித்தார்கள். ஒரு பயணி
வைத்திருக்கும் ஆயுதத்தை மட்டும் அதாவது, உறையிலிடப்பட்ட வாட்களை மட்டும்
எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள். (ஃபத்ஹ{ல் பாரி, ஜாதுல் மஆது)
நபி (ஸல்) தனது கஸ்வா ஒட்டகத்தில் வாகனிக்க, முஸ்லிம்கள் நபியவர்களை சுற்றி படை
சூழ வாளேந்தியவர்களாக தல்பியாவையும் முழங்கிக் கொண்டு மக்காவிற்குள்
நுழைந்தார்கள். இணைவைப்பாளர்கள் கஅபாவின் வடப் பகுதியில் இருந்த ~குஐகிஆன்|
என்ற மலையின் மீது ஏறி நின்று முஸ்லிம்களை வேடிக்கை பார்க்கலானார்கள். மதீனாவின்
காய்ச்சலால் பாதிப்படைந்த ஒரு குழுவினர் இப்போது நம்மிடம் வர இருக்கின்றனர் என்று
கிண்டலாக தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இதனைக் கேள்விப்பட்ட நபி (ஸல்)
அவர்கள் தங்களது தோழர்களிடம் 'வலது தோள்பட்டை வெளியில் தெரியும்படி
இஹ்ராமுடைய ஆடையை அணிந்து கொள்ளுங்கள் தவாஃபுடைய முதல் மூன்று
சுற்றுகளில் மட்டும் குதித்து ஓடுங்கள் ஆனால், இரண்டு ருகூன்களுக்கு மத்தியில்
சாதாரணமாக நடந்துச் சுற்றுங்கள் மீதமுள்ள நான்கு சுற்றுகள் முழுவதும் சாதாரணமாக
நடந்தே சுற்றுங்கள்!" எனக் கட்டளையிட்டார்கள். தங்களது தோழர்கள் மீதுள்ள
கருணையினால் ஏழு சுற்றுகளிலும் தோள்களை உயர்த்தி ஓட வேண்டுமென்று நபி (ஸல்)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Wed Apr 27, 2011 3:07 pm

கூறவில்லை. இணைவைப்பாளர்களுக்குத் தங்களது பலத்தைக் காட்டுவதற்காகவே நபி (ஸல்)
இவ்வாறு கட்டளையிட்டார்கள். (ஸஹீஹ{ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ஹஜுனுக்கு அருகிலுள்ள மலைக் கணவாயின் வழியாக நபி (ஸல்) மக்காவுக்குள்
நுழைந்தார்கள். இணைவைப்பாளர்கள் வரிசையாக நின்று கொண்டு நபியவர்களை
வேடிக்கை பார்த்தனர். நபி (ஸல்) தல்பியா கூறிக்கொண்டே பள்ளிக்குள் நுழைந்து தனது
தடியால் ஹஜ்ருல் அஸ்வத்தைத் தொட்டுவிட்டு தவாஃபைத் தொடங்க, முஸ்லிம்களும்
தங்களது தவாஃபைத் தொடங்கினார்கள். அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) பின்வரும்
கவிகளைப் பாடிக்கொண்டு வாளேந்தியவர்களாக நபியவர்களுக்கு முன் சென்று
கொண்டிருந்தார்கள்.
'இறைமறுப்போரின் பிள்ளைகளே!அகன்றுபோய் வழிவிடுங்கள்!
இறைத்தூதரிடத்தில் நன்மைகள் அனைத்தும் இருக்கின்றன.
வழிவிடுங்கள்! திட்டவட்டமாக ரஹ்மான் அவன் தன் திருமறையில்...
தனது தூதருக்கு ஓதிக்காட்டப்படும் ஏடுகளில் இறக்கினான்.
இறைவா! அவர் கூற்றை ஏற்கிறேன்.
அவரை ஏற்பதில் உண்மைதனை நிச்சயம் நான் பார்க்கிறேன்.
வெட்டுவதில் சிறந்த வெட்டு இறைப்பாதையில் நிகழ்வதுதான்
இறைமறை கட்டளை, இன்று உங்களை வெட்டுவோம்
அது தலை தனி, முண்டம் தனி ஆக்கிடும் வெட்டு
அது நண்பனை விட்டு நண்பனைப் பிரித்திடும் வெட்டு.
உமர் (ரழி), 'ஏ! ரவாஹாவின் மகனே! அல்லாஹ்வின் தூதருக்கு முன், அதுவும்
அல்லாஹ்வின் புனிதப் பள்ளிக்குள் நீ கவிதை பாடுகிறாயா?" என்று அதட்டினார்கள்.
அதற்கு நபியவர்கள் 'உமரே! அவரை விட்டுவிடுங்கள். அம்பால் எறிவதைவிட இந்தக்
கவிதை குறைஷிகளுக்கு மிக விரைவாக ரோஷத்தை ஊட்டக் கூடியது" என்று
கூறினார்கள். (ஜாமிவுத் திர்மிதி)
நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் முதல் மூன்று சுற்றுகளை (முன் கூறியவாறு) ரமல்
செய்தவர்களாகச் சுற்றினார்கள். இதை பார்த்து ஆச்சரியமடைந்த இணைவைப்பாளர்கள்
'என்ன! மதீனாவின் காய்ச்சல் இவர்களை மிகப் பலவீனப்படுத்தி விட்டது என்றல்லவா
Pயபந 402 ழக 518
எண்ணியிருந்தோம். ஆனால், இவர்களோ இவ்வளவு வீரமுள்ளவர்களாக இருக்கிறார்களே"
என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் முதலில் தவாஃபை முடித்தார்கள். அதற்குப் பின் ~ஸஃபா, மர்வா|
என்ற இரு மலைகளுக்கு மத்தியில் ~ஸயீ'" செய்தார்கள். அதற்குப் பின் மர்வா மலைக்கு
வந்தார்கள். அங்குதான் நபியவர்களின் ஒட்டகங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
நபியவர்கள் 'இந்த இடத்திலும் குர்பானி பிராணியை அறுக்கலாம். மக்காவின் அனைத்து
தெருக்களிலும் குர்பானி பிராணியை அறுக்கலாம்" என்று அனுமதி வழங்கிவிட்டு, தங்களது
குர்பானியை மர்வாவில் வைத்து அறுத்தார்கள். அதற்குப் பின் தங்களது தலைமுடியை
சிரைத்து (மொட்டை அடித்து)க் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி
முஸ்லிம்களும் அவ்வாறே செய்தார்கள். உம்ராவை முடித்த தோழர்களில் சிலரை
ஆயுதங்களை வைத்துவிட்டு வந்த ~யஃஜுஜ்| என்ற இடத்திற்கு அனுப்பிவிட்டு,
அங்கிருந்தவர்களை மக்கா வந்து உம்ராவை நிறைவேற்ற அழைத்தார்கள். நபியவர்களின்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Wed Apr 27, 2011 3:07 pm

சொல்லுக்கிணங்க இக்கூட்டத்தினர் அங்குச் சென்று ஆயுதங்களைப் பாதுகாப்பதில் ஈடுபட,
அங்கிருந்தவர்கள் மக்கா வந்து உம்ரா செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். குறைஷிகள்
நான்காவது நாள் காலையில் அலீயிடம் வந்து, 'தவணை முடிந்துவிட்டது. உமது தோழரை
வெளியேறும்படி சொல்" என்று கூறினர். நபியவர்கள் மக்காவிலிருந்து வெளியேறி ~ஸஃப்|
என்ற இடத்தில் தங்கினார்கள்.
நபியவர்கள் மக்காவிலிருந்து வெளியேறிய போது ஹம்ஜா (ரழி) அவர்களின் மகளார்,
'எனது சிறிய தந்தையே! எனது சிறிய தந்தையே!" என கூவிக்கொண்டு நபியவர்களை
நோக்கி ஓடிவந்தார்கள். அவரை அலீ (ரழி) தூக்கி அணைத்துக் கொண்டார்கள். அவரை
வளர்ப்பதற்காக அலீ, ஜஅஃபர், ஸைது (ரழி) மூவரும் தங்களுக்குள் போட்டியிட்டுக்
கொண்டனர். ஆனால், நபியவர்கள் அச்சிறுமியை வளர்க்கும் உரிமையை ஜஅஃபருக்குக்
கொடுத்தார்கள். காரணம், இச்சிறுமியின் தாயின் சகோதரியைத்தான் ஜஅஃபர் (ரழி) மணம்
முடித்திருந்தார்கள்.
இப்பயணத்தில் நபியவர்கள் மைமூனா பின்த் அல்ஹாரிஸ் அல்ஆமியாவைத் திருமணம்
செய்தார்கள். நபியவர்கள் மக்கா நுழையும் முன்பே இது விஷயமாக ஜஅஃபர் இப்னு
அப+தாலிபை மைமூனாவிடம் அனுப்பி வைத்தார்கள். மைமூனா (ரழி) இந்த உரிமையைத்
தனது சகோதரியின் (உம்முல் ஃபழ்லின்) கணவர் அப்பாஸ் (ரழி) அவர்களிடம்
ஒப்படைத்தார்கள்.
அப்பாஸ் (ரழி) நபியவர்களின் விருப்பத்தை ஏற்று அவர்களுக்கு மைமூனாவை மணம்
முடித்து வைத்தார்கள். நபியவர்கள் உம்ராவை முடித்துவிட்டு மக்காவிலிருந்து
வெளியேறியபோது மைமூனாவை அழைத்து வருவதற்காக அப+ராஃபியை விட்டு வந்தார்கள்.
நபி (ஸல்) ஸஃபில் தங்கியிருந்தபோது அப+ராபிஃ, மைமூனாவை அழைத்துக் கொண்டு
அங்கு வந்து சேர்ந்தார்கள். (ஜாதுல் மஆது)
இந்த உம்ராவிற்கு ~உம்ரத்துல் கழா| என்று கூறப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று, சென்ற ஆண்டு உம்ராவை நிறைவேற்ற முடியாமல் போனதற்குப் பகரமாக இந்த
ஆண்டு நிறைவேற்றப்பட்டதால் இப்பெயர் வந்தது. இரண்டாவது, ஹ{தைபிய்யாவின் போது
செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஏற்ப இந்த உம்ரா அமைந்திருந்ததால் இந்தப் பெயர் வந்தது.
மார்க்க அறிஞர்கள் இரண்டாவது காரணமே மிக ஏற்றமானது எனக் கூறுகின்றனர். (ஜாதுல்
மஆது, ஃபத்ஹ{ல் பாரி)
Pயபந 403 ழக 518
இந்த உம்ராவிற்கு வரலாற்றில் நான்கு பெயர்கள் கூறப்படுகின்றன. 1) உம்ரத்துல் கழா, 2)
உம்ரத்துல் கழிய்யா, 3) உம்ரத்துல் கிஸாஸ், 4) உம்ரத்துல் சுல்ஹ். (ஜாதுல் மஆது,
ஃபத்ஹ{ல் பாரி)
இந்த உம்ராவிலிருந்து மதீனாவிற்குத் திரும்பியதற்குப் பின் நபி (ஸல்) பல சிறிய
படைகளை அனுப்பி வைத்தார்கள். அதன் விவரங்கள் வருமாறு:
1) இப்னு அபுல் அவ்ஜா படைப் பிரிவு: ஹிஜ்ரி 7, துல்ஹஜ் மாதத்தில் 50 வீரர்களுடன்
இவரை இஸ்லாமிய அழைப்பு விடுப்பதற்காக சுலைம் கிளையினரிடம் நபி (ஸல்) அனுப்பி
வைத்தார்கள். இவர்கள் சுலைமனரிடம் சென்று, அவர்களை இஸ்லாமின் பக்கம்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Wed Apr 27, 2011 3:07 pm

அழைத்தபோது 'உங்களது அழைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய எந்தத் தேவையும்
எங்களுக்கு இல்லை" என்று அவர்கள் மறுத்து விட்டனர். அதனால், இரு
சாராருக்குமிடையில் கடுமையான சண்டை நடைபெற்றது. அதில் அப+அவ்ஜா (ரழி)
காயமடைந்தார். இரண்டு எதிரிகள் முஸ்லிம்களால் சிறைபிடிக்கப்பட்டனர்.
2) காலிபு இப்னு அப்துல்லாஹ் படைப் பிரிவு: ~ஃபதக்| என்ற இடத்திற்கு அனுப்பப்பட்ட
பஷீர் இப்னு ஸஅது அன்சாரியின் தோழர்கள் கொல்லப்பட்டனர் அல்லவா, அதற்குப்
பழிக்குப் பழி வாங்குவதற்காக 200 வீரர்களை காலிபு இப்னு அப்துல்லாஹ் (ரழி)
தலைமையில் ஹிஜ்ரி 8, ஸஃபர் மாதத்தில் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள்
அங்கு சென்று ஏராளமானவர்களை கொன்றுவிட்டு அதிகமான கால்நடைகளை ஓட்டி
வந்தனர்.
3) கஅபு இப்னு உமைர் அன்சாரி படைப் பிரிவு: ஹிஜ்ரி 7, ரபீஉல் அவ்வல் மாதத்தில்
இப்படை அனுப்பப்பட்டது. குழாஆ கிளையினர் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த
பெருமளவில் கூட்டங்களைச் சேர்க்கின்றனர் என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்குக்
கிடைத்தது. அதனால் கஅபு இப்னு உமைர் அல்அன்சாரியின் தலைமையில் பதினைந்து
தோழர்களை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் எதிரிகளைச் சந்தித்து
அவர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தனர். ஆனால், அவர்கள் ஏற்க மறுத்து
முஸ்லிம்களை நோக்கி அம்பெறிந்தனர். இதில் அனைத்து முஸ்லிம்களும் கொல்லப்பட்டு
விட்டனர். ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். (ரஹ்மத்துல் லில்
ஆலமீன்)
4) ஷ{ஜா இப்னு வஹபு அல்அசதி படைப் பிரிவு: ~ஹவாஸின்| என்ற கிளையினர்
முஸ்லிம்களின் எதிரிகளுக்குப் பலமுறை உதவி செய்து வந்தனர். இதனால் அவர்களைக்
கண்டிப்பதற்காக ஹிஜ்ரி 8, ரபீஉல் அவ்வல் மாதம், 25 வீரர்களுடன் ஷ{ஜா இப்னு வஹப்
என்ற தோhழரை ~தாத் இர்க்| என்ற இடத்திற்கு நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள்.
முஸ்லிம்கள் எதிரிகளின் ஏராளமான கால்நடைகளை ஓட்டிக் கொண்டு மதீனா வந்து
சேர்ந்தனர். அங்கு சண்டை ஏதும் நடக்கவில்லை. (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)
முஃதா யுத்தம்
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் சந்தித்த மிகப் பயங்கரமான போர்
இதுவேயாகும். கிறிஸ்துவ நாடுகளையும் நகரங்களையும் முஸ்லிம்கள் வெற்றி கொள்ள இது
ஒரு தொடக்கமாக அமைந்தது. இப்போர் ஹிஜ்ரி 8, ஜுமாதா அல்ஊலா, கி.பி. 629
ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடைபெற்றது.
'முஃதா| என்பது ஷாம் நாட்டின் பல்கா மாநிலத்தின் கீழ் பகுதியிலுள்ள ஓர் ஊர்.
இங்கிருந்து பைத்துல் முகத்தஸ், இரண்டு நாட்கள் நடக்கும் தொலைதூரத்தில் உள்ளது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Wed Apr 27, 2011 3:07 pm

யுத்தத்திற்கான காரணம்
நபி (ஸல்) அவர்கள் புஸ்ராவின் மன்னருக்குக் கடிதம் ஒன்றை எழுதி அல்ஹாரிஸ் இப்னு
உமைர் அல்அஸ்தி (ரழி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஆனால், போகும்
வழியில் பல்கா மாநிலத்தின் கவர்னராக இருந்த ஷ{ரஹ்பீல் இப்னு அம்ரு அல்கஸ்ஸானி
என்பவன் அவரைக் கைது செய்து கொன்று விட்டான்.
தூதர்களைக் கொலை செய்வது அரசியல் குற்றங்களில் மிகக் கடுமையானதாகும். பகிரங்க
மாகப் போருக்கு அழைப்பு விடுப்பதைவிட தூதரைக் கொலை செய்வது மிகக் கொடிய
ஒன்றாக கருதப்பட்டது. தனது தூதர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நபி (ஸல்)
பெரும் கவலைக் குள்ளானார்கள். 3000 வீரர்கள் கொண்ட பெரும் படை ஒன்றைத் தயார்
செய்து அவர்களிடம் சண்டையிட அனுப்பி வைத்தார்கள். (ஜாதுல் மஆது, ஃபத்ஹ{ல்
பாரி)
அஹ்ஸாப் போரைத் தவிர வேறு எந்தப் போரிலும் முஸ்லிம் வீரர்களின் எண்ணிக்கை
இந்தளவு அதிகம் இருந்ததில்லை.
படைத் தளபதிகள்
நபி (ஸல்) அவர்கள் இப்படைக்கு முதலாவதாக ஜைது இப்னு ஹாஸாவை (ரழி) தளபதியாக
ஆக்கிவிட்டு 'ஜைது கொல்லப்பட்டால் ஜஅஃபர் தளபதியாக இருப்பார் ஜாஃபரும்
கொல்லப் பட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தளபதியாக இருப்பார்" என்று கூறி
வெள்ளை நிறக் கொடியை ஜைது இப்னு ஹாஸா (ரழி) கையில் கொடுத்தார்கள். (ஸஹீஹ{ல்
புகாரி)
நபியவர்களின் அறிவுரை
பின்பு நபி (ஸல்) அவர்கள் தோழர்களுக்கு வழங்கிய அறிவுரையாவது: நீங்கள்
அல்ஹாரிஸ் இப்னு உமைர் கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்று அங்குள்ளவர்களை
இஸ்லாமின் பக்கம் அழையுங்கள். அவர்கள் ஏற்றுக் கொண்டால் நல்லது. ஏற்காவிட்டால்
அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி தேடி அவர்களுடன் போர் செய்யுங்கள்.
அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் பெயர் கூறி அல்லாஹ்வை
நிராகரித்தவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள். மோசடி செய்யாதீர்கள், பதுக்காதீர்கள்,
குழந்தை, பெண், வயது முதிர்ந்தவர், சர்ச்சுகளில் இருக்கும் சன்னியாசிகள் ஆகியோரைக்
கொல்லாதீர்கள். பேரீத்த மரங்கள் மட்டுமல்ல, வேறு எந்த மரங்களையும் வெட்டாதீர்கள்
கட்டடங்களை இடிக்காதீர்கள். (ஸஹீஹ{ல் புகாரி, ஸ{னன் அப+தாவூது, ஸ{னனத் திர்மிதி,
இப்னு மாஜா)
படையை வழியனுப்புதல், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அழுதல்
இஸ்லாமியப் படை புறப்படத் தயாரானபோது அவர்களை வழியனுப்புவதற்காக
மக்களெல்லாம் ஒன்று கூடினர். படைக்கும் அதன் தளபதிகளுக்கும் பிரியா விடை
கொடுத்து ஸலாம் கூறினர். தளபதிகளில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி)
அழலானார். 'மக்கள் ஏன் அழுகிறீர்?" என்று கேட்க, 'எனக்கு உலகத்தின் மீதுள்ள
ஆசையினாலோ அல்லது உங்கள் மீதுள்ள பாசத்தினாலோ நான் அழவில்லை. எனினும்,
நரகத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் ஒரு குர்ஆன் வசனத்தை நபி (ஸல்) ஓத, நான்
கேட்டிருக்கின்றேன். அந்த வசனமாவது:
அதனைக் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது. இது உங்களது இறைவனிடம்
முடிவு கட்டப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும். (அல்குர்ஆன் 19:71)
Pயபந 405 ழக 518
அந்தப் பாலத்தை கடக்கும் போது எனது நிலைமை என்னவாகுமோ என்று எனக்குத்
தெரியவில்லையே!" என்று அப்துல்லாஹ் (ரழி) பதில் கூறினார். 'அல்லாஹ் உங்களைப்
பாதுகாப்பானாக! அல்லாஹ் அவனது அருளுடன் உங்களுக்குத் துணையாவானாக! வெற்றி
பெற்று நல்ல நிலையில் அல்லாஹ் உங்களை எங்களிடம் திரும்பக் கொண்டு வருவானாக!"
என்று வாழ்த்துகள் கூறி மக்கள் அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள். அதற்கு
அப்துல்லாஹ் (ரழி) கூறிய பதிலாவது:
மன்னிப்பு,நுரை தள்ளும் பலத்த அடி
அல்லது இரத்தவெறி கொண்ட
ஒருத்தனின் கையால் குடல்களையும் ஈரலையும்
ஊடுருவிச் செல்லும் குறு ஈட்டியால்
நான் குத்தப்பட ரஹ்மானிடம் கேட்கிறேன்.
என் மண்ணறையருகே நடப்போர்,
'அல்லாஹ் நேர்வழி காட்டிய வீரரே!
நேர்வழி பெற்றவரே!| என்று சொல்ல வேண்டும்.
பின்பு நபியவர்களும் மக்களும் ~ஸனியத்துல் விதா| என்ற இடம்வரை சென்று படையை
வழியனுப்பி விட்டு இல்லம் திரும்பினார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
இஸ்லாமியப் படை புறப்படுதலும் திடுக்கமான சூழ்நிலையும்
ஜாஸின் வடப்புறமாக ஷாம் நாட்டை நோக்கி இஸ்லாமியப் படை புறப்பட்டு ~மஆன்|
என்ற இடத்தை அடைந்தது. 'பல்கா மாநிலத்தின் ~மாப்| என்ற இடத்தில் ஹிர்கல் ஒரு
லட்சம் ரோம் நாட்டு வீரர்களுடன் வந்திருக்கின்றான் லக்ம், ஜுதாம், பல்கய்ன், பஹ்ரா,
பலிய் ஆகிய கோத்திரத்தாலிருந்து மேலும் ஒரு லட்சம் வீரர்கள் ரோமர்களுடன்
இணைந்து கொண்டார்கள் என்ற ஓர் அதிர்ச்சி தரும் செய்தியை இஸ்லாமியப் படையின்
ஒற்றர்கள் அறிந்து வந்தனர்.
ஆலோசனை சபை
இதுபோன்ற பெரும் படையைச் சந்திக்க நேரிடும் என்று முஸ்லிம்கள் ஒருக்காலும்
எண்ணவில்லை. 3000 பேர் கொண்ட ஒரு படை இரண்டு இலட்சம் வீரர்கள் கொண்ட
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Wed Apr 27, 2011 3:08 pm

படையை எதிர்ப்பது என்பது சாதாரண விஷயமா? முஸ்லிம்கள் திகைத்து பயணத்தைத்
தொடரலாமா? வேண்டாமா? என்று எண்ணி நின்றுவிட்டனர். இப்போது என்ன செய்யலாம்?
நபி (ஸல்) அவர்களுக்கு கடிதம் எழுதுவோம் நமது எதிரிகளின் எண்ணிக்கையைப் பற்றி
அவர்களுக்கு அறிவிப்போம் அவர்கள் நமக்கு உதவ மேலும் பல வீரர்களை அனுப்பலாம்
அல்லது வேறு யோசனைக் கூறலாம் நாம் அதற்கேற்ப நடந்து கொள்ளலாம் என்று
ஆலோசனை செய்தனர். இதே நிலைமையில் இரண்டு நாட்கள் கடந்தன.
ஆனால், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) இந்த யோசனைக்கு மறுப்புத் தெரிவித்து
மக்களுக்கு வீரமூட்டி உரையாற்றினார்: 'எனது கூட்டத்தினரே! அல்லாஹ்வின் மீது
ஆணையாக! நீங்கள் இப்போது வெறுக்கும் வீரமரணத்தைத் தேடித்தானே மதீனாவிலிருந்து
புறப்பட்டீர்கள். நாம் எதிரிகளிடம் போரிடுகிறோம். நமது ஆயுதங்களைக் கொண்டா?
அல்லது ஆற்றலைக் கொண்டா? அல்லது எண்ணிக்கையைக் கொண்டா? இவற்றில்
எதுவுமில்லை. பின்னர் ஏன் எண்ணிக்கையை வைத்து யோசிக்க வேண்டும். அல்லாஹ்
நமக்கு எந்த மார்க்கத்தின் மூலம் கண்ணியம் வழங்கியிருக்கின்றானோ அந்த
மார்க்கத்திற்காகவே நாம் அவர்களிடம் போர் புரிகின்றோம். எனவே, தயக்கம் வேண்டாம்
புறப்படுங்கள்! இரண்டு பாக்கியங்களில் ஒன்று நிச்சயம் உண்டு. ஒன்று வெற்றி அல்லது
வீரமரணம்."
Pயபந 406 ழக 518
இப்னு ரவாஹாவின் இந்த வீர உரையை கேட்ட மக்கள் ரோமர்களை எதிர்த்து போரிட
முடிவு செய்தனர்.
எதிரியைக் களம் காண இஸ்லாமியப் படை புறப்படுகிறது
~மஆன்| என்ற இடத்தில் இரண்டு நாட்கள் கழித்த பின் முஸ்லிம்கள் எதிரிகளின்
நாட்டை நோக்கிப் புறப்பட்டனர். இறுதியாக, பல்காவின் கிராமங்களில் ஒன்றான ~மஷாஃப்|
என்ற இடத்தில் இரு படைகளும் சந்தித்தன. எதிரிகள் நெருங்கி வர முஸ்லிம்கள் சற்று
பின்வாங்கி ~முஃதா| என்ற இடம் வந்து அங்கு தங்களது முகாம்களை அமைத்துக்
கொண்டனர். அங்கிருந்து போருக்கான தயாரிப்புகளை செய்யத் தொடங்கினர். முஸ்லிம்கள்,
படையின் வலப்பக்கத்திற்கு குத்பா இப்னு கதாதாவை தளபதியாகவும், இடப்பக்கத்திற்கு
உபாதா இப்னு மாலிக்கை தளபதியாகவும் ஆக்கினர்.
யுத்தத்தின் ஆரம்பம்
~முஃதா| என்ற இடத்தில் இரு படைகளும் சண்டையிட்டன. மூவாயிரம் பேர் இரண்டு
லட்சம் வீரர்களுக்குச் சமமாக சண்டையில் ஈடுபட்டனர். என்ன ஆச்சரியம்! உலகமே
திகைப்புடன் பார்க்க ஆரம்பித்தது. ஆம்! ஈமானியப் புயல் வீச ஆரம்பித்தால்
இப்படித்தான் ஆச்சரியங்கள் நடக்கும்.
நபியவர்களின் விருப்பத்திற்குரிய தோழரான ஜைது (ரழி) முதலில் கொடியை ஏந்தி
கடுமையான யுத்தம் புரிந்தார். அவர் அன்று காட்டிய வீரத்திற்கு என்ன உதாரணம் சொல்ல
முடியும்! அவரைப் போன்ற இஸ்லாமிய வீரனிடமே தவிர வேறு எங்கும் அந்த
வீரதீரத்தைப் பார்க்க முடியாது. இறுதியில் எதிரிகளின் ஈட்டிக்கு இரையாகி வீரமரணம்
எய்தினார்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Wed Apr 27, 2011 3:08 pm

அடுத்து இஸ்லாமியப் படையின் கொடியை ஜஅஃபர் (ரழி) கையில் எடுத்துக் கொண்டு
மின்னலாகப் போர் புரிந்தார். போர் உச்சக்கட்டத்தை அடைந்தவுடன் தனது ~ஷக்ரா| என்ற
குதிரையிலிருந்து கீழே இறங்கி, அதை வெட்டி வீழ்த்திவிட்டு, படைக்குள் புகுந்து
எதிரிகளின் தலைகளை வாளால் சீவலானார். அவரது வலது கை வெட்டப்பட்டு விட்டது.
கொடியை இடது கையில் பிடித்தார். இடது கையும் வெட்டப்படவே புஜத்தால் பிடித்தார்.
பின்பு எதிரி ஒருவனால் கொல்லப்பட்டு வீரமரணம் எய்தினார். அவரை ரோமைச் சேர்ந்த
எதிரி ஒருவன் இரண்டாக பிளந்து விட்டான் என்று வரலாற்றில் கூறப்படுகிறது.
அல்லாஹ் அவர்களுக்கு வெட்டப்பட்ட இரு கரங்களுக்குப் பகரமாக சுவனத்தில் இரண்டு
இறக்கைகளை வழங்கினான். அதன் மூலமாக அவர்கள் தாங்கள் நாடிய இடமெல்லாம்
சுற்றித் திரிகிறார்கள். இதனை முன்னிட்டே இவர்களுக்கு ~ஜஅஃபர் அத்தய்யார்| (பறக்கும்
ஜஅஃபர்), ~ஜஅஃபர் துல்ஜனாஹைன்| (இரு இறக்கைகளை உடைய ஜஅஃபர்) என்றும்
கூறப்படுகிறது.
இப்னு உமர் (ரழி) அறிவிக்கிறார்கள்: 'வெட்டப்பட்டுக் கிடந்த ஜஅஃபரை நான்
பார்த்தேன். அவரது உடம்பில் ஈட்டி மற்றும் வாளின் 50 காயங்கள் இருக்கக் கண்டேன்.
அதில் எந்தக் காயமும் உடம்பின் பிற்பகுதியில் இல்லை." (ஸஹீஹ{ல் புகாரி)
மற்றொரு அறிவிப்பில் இப்னு உமர் (ரழி) கூறியதாக வருவதாவது: 'நானும் ~முஃதா|
போரில் கலந்து கொண்டேன். போர் முடிந்த பிறகு ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரழி)
அவர்களின் உடலைத் தேடினோம். அப்போது கொல்லப்பட்டவர்களில் இருந்த அவர்
உடலில் 90க்கும் மேற்பட்ட அம்பு மற்றும் ஈட்டிகளின் காயங்கள் இருந்தன." மற்றொரு
வழியாக வரும் இதே அறிவிப்பில் 'அந்த அனைத்துக் காயங்களும் அவரது உடலின்
முன்பகுதியில்தான் இருந்தன" என்று வந்துள்ளது. (ஸஹீஹ{ல் புகாரி)
Pயபந 407 ழக 518
இவ்வளவு வீரமாக போர் புரிந்து இறுதியில் ஜஅஃபர் (ரழி) வீர மரணமடைந்த பின்னர்
கொடியை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) ஏந்தினார். தனது குதிரையின் மீதிருந்து
போர்க் களத்தை நோக்கி முன்னேறிய அவர் சிறிது தாமதிக்கலானார். அதற்குப் பின்,
'சத்தியமாக என் உயிரே! விருப்போ வெறுப்போ
போரில் நீ குதித்தே ஆக வேண்டும்!
மக்கள் போருக்கு ஆயத்தமாகி ஈட்டிகளை
ஏந்தி நிற்கும் போது சுவனத்தை நீ வெறுப்பவனாக
உன்னை நான் காணுவதேன்?"
இக்கவிதையை பாடிவிட்டு குதிரையிலிருந்து கீழிறங்கி, போர்க்களத்தை நோக்கி ஓடிய
போது அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஓர் இறைச்சித் துண்டை கொண்டு வந்து,
'இதன்மூலம் உங்களது முதுகிற்கு வலுசேர்த்துக் கொள்ளுங்கள் இந்நாட்களில் நீங்கள்
மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி விட்டீர்" என்று கூறினார். அவரது கையிலிருந்த இறைச்சித்
துண்டை வாங்கி ஒரு கடி கடித்துவிட்டு மீதமுள்ளதை வீசி எறிந்து விட்டார். பின்பு தனது
வாளை உருவிக் கொண்டு போர்க்களத்தில் குதித்தவர் இறுதிவரை போரிட்டு
வீரமரணமடைந்தார்.
அல்லாஹ்வின் வாள் கொடியை ஏந்தியது
அப்துல்லாஹ் (ரழி) வீரமரணமடைந்து கீழே விழும் நேரத்தில் அஜ்லான் கிளையைச்
சேர்ந்த ஸாபித் இப்னு அக்ரம் (ரழி) என்ற வீரர் கொடியை ஏந்திக் கொண்டு
'முஸ்லிம்களே! உங்களில் ஒருவரை உடனே தலைவராகத் தேர்ந்தெடுங்கள்" என்று
கூறினார். மக்கள் 'நீர்தான் அவர்" என்று கூறினர். அதற்கவர் 'அது என்னால் முடியாது"
என்று கூறிவிட்டார். மக்கள் காலித் இப்னு வலீத் (ரழி) அவர்களைத் தலைவராகத்
தேர்ந்தெடுத்தனர். கொடியைக் கையில் எடுத்த காலித் (ரழி) காஃபிர்களுக்கு எதிராகக்
கடுமையானப் போரை நிகழ்த்தினார்.
காலித் (ரழி) கூறுகிறார்: 'முஃதா போரின் போது எனது கையால் ஒன்பது வாட்கள்
உடைந்தன. யமன் நாட்டில் செய்யப்பட்ட ஒரு பட்டை வாள் மட்டும் எனது கையில்
நிலைத்திருந்தது. (ஸஹீஹ{ல் புகாரி)
முஃதா போர்க்களச் செய்திகளை அல்லாஹ் வஹியின் மூலமாக நபியவர்களுக்கு
உடனுக்குடன் தெரிவித்தான். போரின் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'முதலில்
கொடியை ஜைது ஏந்தினார் அவர் கொல்லப்பட்டார் இரண்டாவதாக ஜஅஃபர் ஏந்தினார்
அவரும் கொல்லப்பட்டார் மூன்றாவதாக அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ஏந்தினார் அவரும்
கொல்லப்பட்டார் -இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போது நபியவர்களின்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Wed Apr 27, 2011 3:08 pm

கண்களிலிருந்து நீர் வழிந்தோடியது- இதற்குப் பின் கொடியை அல்லாஹ்வின் வாள்களில்
ஒரு வாள் ஏந்தியது அல்லாஹ் அவர் மூலமாக முஸ்லிம்களுக்கு வெற்றியளித்தான்."
(ஸஹீஹ{ல் புகாரி)
சண்டை ஓய்கிறது
முஸ்லிம் வீரர்கள் தங்களது முழு வீரத்தையும், திறமையையும், துணிவையும் வெளிக்
கொணர்ந்தாலும் கடல் போன்ற மிகப் பயங்கரமான எதிரிப் படைகளைச் சமாளிப்பது மிகச்
சிரமமாகவே இருந்தது. இதையறிந்த காலித் இப்னு அல்வலீது (ரழி) முஸ்லிம்களை
ஆபத்திலிருந்து தந்திரமாகப் பாதுகாக்க சரியான திட்டம் ஒன்றைத் தீட்டினார்.
போரின் முடிவைப் பற்றி பலவிதமான கருத்துகள் கூறப்படுகின்றன. அந்த அனைத்து
அறிவிப்புகளையும் ஒன்று திரட்டி நாம் ஆய்வு செய்யும்போது நமக்குப் புலப்படுவதாவது:
கொடியை ஏந்திய அன்றைய தினம் மாலை வரை ரோம் நாட்டுப் படைக்கு முன்பாக மிகத்
Pயபந 408 ழக 518
துணிச்சலாக காலித் (ரழி) எதிர்த்து நின்றார். முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கு ஒரு போர்
தந்திரத்தைக் கையாண்டார். அது ரோமர்களின் உள்ளங்களில் கடுமையான பயத்தை உண்டு
பண்ணியது. அதாவது, முஸ்லிம்கள் பின்னோக்கிச் செல்லும்பொழுது ரோமர்கள் விரட்ட
ஆரம்பித்தால் அவர்களிடமிருந்து தப்பிப்பதென்பது மிகக் கடினமே என காலித் (ரழி)
நன்கு விளங்கியிருந்தார்.
எனவே, மறுநாள் படைக்கு முற்றிலும் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கினார். படையின்
முற்பகுதியை பிற்பகுதியாகவும், வலப்பக்கத்தில் உள்ளவர்களை இடப்பக்கத்திலும் மாற்றி
அமைத்தார். மறுநாள் காலை போர் தொடங்கியபோது முஸ்லிம்களின் புதிய அமைப்பைப்
பார்த்த எதிரிகள் தங்களுக்கு முன் நேற்று இல்லாத புதிய படை இருப்பதைப் பார்த்தவுடன்
இவர்களுக்கு உதவிப்படை வந்திருக்கின்றது என்று கூற ஆரம்பித்தனர். சிறுகச் சிறுக
அவர்களது உள்ளத்தை அச்சம் ஆட்கொண்டது.
சிறிது நேரம் இரு தரப்பினரும் சண்டையிட்டு கொண்டிருக்கும் போதே தனது படையில்
எவ்வித மாற்றமும் ஏற்படாத அளவிற்கு முற்றிலும் பாதுகாப்புடன் படையை பின்னோக்கி
அழைத்துச் சென்றார். முஸ்லிம்கள் ஏதோ சதி செய்ய நாடுகின்றனர் என்று எண்ணிய
ரோம் வீரர்கள் முஸ்லிம்களைப் பின்தொடர்வதை விட்டுவிட்டு அவர்களும் பின்வாங்கினர்.
இவ்வாறு முஸ்லிம்களை விரட்டும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு தங்களது நாடுகளுக்கு
எதிரிகள் திரும்பி விட்டனர். இவ்வாறு முஸ்லிம்கள் எவ்வித ஆபத்துமின்றி மதீனா வந்து
சேர்ந்தனர். (ஃபத்ஹ{ல் பாரி, ஜாதுல் மஆது)
இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்
12 முஸ்லிம்கள் இப்போரில் வீரமரணம் அடைந்தனர். ரோமர்களில் எத்தனை நபர்கள்
கொல்லப்பட்டனர் என்ற விவரம் சரிவரத் தெரியவில்லை. இருந்தாலும் போரின் முழு
விவரங்களை ஆய்வு செய்து பார்க்கும்போது அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்க
வேண்டுமெனத் தெரிகிறது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Wed Apr 27, 2011 3:08 pm

யுத்தத்தின் தாக்கம்
எந்தப் பழிவாங்கும் நோக்கத்துக்காக முஸ்லிம்கள் இவ்வளவு பெரிய சிரமங்களைச்
சகித்தார்களோ! அந்த நோக்கத்தை முஸ்லிம்கள் இப்போரில் அடைந்து கொள்ளவில்லை
என்றாலும், இப்போர் முஸ்லிம்களுக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. அரபியர்களின்
உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றிய பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதுடன், அவர்களை
வியப்பிலும் ஆழ்த்தியது. ரோமர்கள் அக்காலத்தில் பேராற்றல் மிக்கவர்களாக இருந்தனர்.
அவர்களை எதிர்ப்பது தற்கொலைக்குச் சமமானது என அரபிகள் எண்ணியிருந்தனர். 3000
பேர்கள் கொண்ட ஒரு சிறிய படை இரண்டு லட்சம் வீரர்கள் கொண்ட பெரும் படையுடன்
மோதுவதும், பின்பு எந்த பெரிய சேதமும் இன்றி நாட்டுக்குத் திரும்புவதென்பதும் மகா
ஆச்சரியமான விஷயமாக இருந்தது.
முஸ்லிம்கள் இதுவரை அரபியர்கள் பார்த்திராத ஓர் அமைப்பில் இருக்கின்றனர்
அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது அவர்களது தலைவர்
உண்மையில் அல்லாஹ்வின் தூதரே என்பதற்கு இச்சம்பவம் மிகப்பெரிய சான்றாக
அமைந்தது. எனவேதான், எப்போதும் முஸ்லிம்களுடன் வம்பு செய்து வந்த பெரும்பாலான
அரபு கோத்திரத்தினர், இப்போருக்குப் பின் பணிந்து இஸ்லாமை ஏற்றுக் கொள்ள
ஆரம்பித்தனர். சுலைம், அஷ்ஜஃ, கத்ஃபான், துப்யான், ஃபஜாரா ஆகிய
கோத்திரங்களெல்லாம் இஸ்லாமைத் தழுவினர்.
Pயபந 409 ழக 518
பிற்காலத்தில் ரோமர்களுடன் முஸ்லிம்கள் செய்த போர்களின் தொடக்கமாக இப்போர்
இருந்தது. முஸ்லிம்கள் ரோமர்களின் நகரங்களையும் தூரமான நாடுகளையும் வெற்றி
கொள்வதற்கு முன்மாதிரியாக இப்போர் அமைந்தது.
தாதுஸ்ஸலாசில் படைப் பிரிவு
ஷாம் நாட்டின் மேற்புறங்களில் வசிக்கும் அரபியர்களின் நிலைப்பாட்டை நபி (ஸல்)
அவர்கள் இப்போர் வாயிலாக நன்கு விளங்கிக் கொண்டார்கள். ஏனெனில்,
இவர்களெல்லாம் ரோமர்களுடன் சேர்ந்து கொண்டு இப்போரில் முஸ்லிம்களைத் தாக்கினர்.
எனவே, ரோமர்களை விட்டு இவர்களைப் பிரித்து முஸ்லிம்களோடு இணக்கமாக்க
வேண்டும். அப்போதுதான் மற்றொரு முறை நம்மை எதிர்ப்பதற்கு இது போன்ற
பெருங்கூட்டம் ஒன்று திரளாது என்று நபி (ஸல்) முடிவு செய்தார்கள்.
இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நபி (ஸல்) அம்ரு இப்னு ஆஸைத் தேர்வு செய்தார்கள்.
ஏனெனில், இவரது தந்தையின் தாய் அப்பகுதியில் வசிக்கும் ~பலிய்| கிளையினரைச்
சேர்ந்தவராவார். எனவே, அவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள இவரைத்
தேர்ந்தெடுத்து முஃதா போர் முடிந்தவுடனேயே ஹிஜ்ரி 8, ஜுமாதல் ஆகிராவில் நபி (ஸல்)
அனுப்பி வைத்தார்கள். இப்படை அனுப்பப்பட்டதற்கு மற்றொரு காரணமும்
சொல்லப்படுகிறது. அதாவது: ~குழாஆ| கிளையினர் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்த
ஒன்று திரள்கின்றனர் என்ற செய்தி ஒற்றர்கள் மூலம் நபியவர்களுக்குத் தெரிய வர,
அவர்களை எதிர்ப்பதற்காக இப்படையை நபி (ஸல்) அனுப்பினார்கள். ஒரு வேலை
இரண்டு காரணங்களை முன்னிட்டும் நபியவர்கள் இப்படையை அனுப்பி இருக்கலாம்.
அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்களுக்கு நபி (ஸல்) வெள்ளை நிறத்தில் ஒரு பெரிய
கொடியையும், கருப்பு நிறத்தில் ஒரு சிறிய கொடியையும் வழங்கி 300 முக்கிய
வீரர்களுடன் அனுப்பினார்கள். இரவில் பயணிப்பதும் பகலில் பதுங்குவதுமாக
அப்படையினர் சென்றனர். எதிரி கூட்டத்தினர் தங்கியிருக்கும் இடத்தை நெருங்கிய
போது, அங்கு மிக அதிகமான எண்ணிக்கையில் எதிரிகள் இருக்கிறார்கள் என்ற செய்தி
அம்ருக்கு தெரிய வந்தது. உடனே அவர் ராஃபி இப்னு மக்கீஸ் என்பவரை
நபியவர்களிடம் உதவி கேட்டு அனுப்பி வைத்தார். நபி (ஸல்) அப+ உபைதாவுக்கு ஒரு
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Wed Apr 27, 2011 3:09 pm

கொடியைக் கொடுத்து 200 தோழர்களுடன் அனுப்பினார்கள். இத்தோழர்களில் அப+பக்ர்,
உமர் (ரழி) மற்றும் முஹாஜிர், அன்சாரிகளில் கீர்த்திமிக்க தோழர்கள் இடம்
பெற்றிருந்தனர். அம்ர் (ரழி) அவர்களுடன் அப+ உபைதா (ரழி) வந்து சேர்ந்து
கொண்டார்கள். தொழுகை நேரம் வந்த போது அப+ உபைதா (ரழி) மக்களுக்குத் தொழ
வைக்க நாடினார். 'நான்தான் அமீர் (படைத் தலைவன். நானே தொழவைப்பேன்) நீர்
எங்களுக்கு உதவிக்காகத்தான் வந்திருக்கின்றீர்" என்று அம்ரு (ரழி) கூற, இதை அப+
உபைதா (ரழி) ஏற்றுக் கொண்டார்கள். அதற்குப் பின் அம்ருதான் மக்களுக்குத் தொழுகை
நடத்தி வந்தார்கள். அம்ரு (ரழி) படையை அழைத்துக் கொண்டு ~குழாஆ| கோத்திரத்தினர்
வசிக்கும் பகுதி அனைத்தையும் சுற்றினார்கள்.
இறுதியில், முஸ்லிம்களை எதிர்க்கத் தயாராக இருந்த எதிரிகளின் ஒரு கூட்டத்தினரைக்
கண்ட போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தி நாலாபுறமும் அவர்களைச் சிதறடித்தனர்.
எடுத்துக் கொண்ட பணியை வெற்றிகரமாக முடித்து திரும்பிக் கொண்டிருக்கிறோம் என்ற
மகிழ்ச்சியான செய்தியையும் மற்றும் போர்க்கள தகவல்களையும் நபி (ஸல்) அவர்களிடம்
கூறும்படி அவ்ஃப் இப்னு மாலிக் அஷ்ஜம்யை அம்ரு இப்னு ஆஸ் (ரழி)
அனுப்பினார்கள்.
~தாத்துஸ் ஸலாசில்| என்பது ~வாதில் குரா| என்ற பகுதிக்குப் பின்னுள்ள இடமாகும்.
அதற்கும் மதீனாவுக்கும் மத்தியில் பத்து நாட்கள் நடை தூரம் உள்ளது.
Pயபந 410 ழக 518
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுவதாவது: ஜுதாம் கோத்திரத்தினர் வசிக்கும் இடத்திலுள்ள
ஒரு கிணற்றருகில் முஸ்லிம்கள் தங்கினர். அக்கிணற்றின் பெயர் ~ஸல்சல்| என்பதால்
இப்படைக்கு பெயர் ~தாத்துஸ் ஸலாசில்| என வந்தது. (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
அப+கதாதா படைப் பிரிவு
கத்ஃபான் கிளையினர் ~கழீரா| என்ற இடத்தில் ஒன்றுகூடி மதீனாவின் மீது தாக்குதல்
நடத்துவதற்காக திட்டமிடுகின்றனர் என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது.
~கழீரா| என்பது நஜ்து மாநிலத்தில் ~முஹாப்| கோத்திரத்தினர் வசிக்கும் இடம். எனவே,
நபி (ஸல்) அவர்கள் 15 வீரர்களுடன் அப+ கதாதாவை அனுப்பி வைத்தார்கள். அங்கு
சென்ற அப+கதாதா (ரழி) பல எதிரிகளைக் கொன்று விட்டு சிலரைச் சிறைபிடித்து, கனீமா
பொருட்களுடன் மதீனா திரும்பினார்கள். மொத்தம் 15 நாட்கள் இவர்கள் மதீனாவை விட்டு
வெளியே இருந்தனர். (தல்கீஹ்)
மக்காவை வெற்றி கொள்வது
அறிஞர் இப்னுல் கைய்" (ரஹ்) கூறுகிறார்: மக்காவின் வெற்றிதான் மிக மகத்தான வெற்றி.
இதன் மூலம் அல்லாஹ் அவனது மார்க்கத்திற்கும், தூதருக்கும், நம்பிக்கைக்குரிய அவனது
கூட்டத்தினருக்கும், படையினருக்கும் கண்ணியத்தை வழங்கினான். மேலும், தனது
ஊரையும் மக்களின் நேர்வழிக்குக் காரணமாகிய தன் வீட்டையும் முஷ்ரிக்குகள் மற்றும்
காஃபிர்களின் கையிலிருந்தும் காப்பாற்றினான். இவ்வெற்றியினால் வானத்தில்
உள்ளவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமா? மக்களெல்லாம் கூட்டம் கூட்டமாக
அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணைந்தனர். ப+மியாவும் இவ்வெற்றியால் பிரகாசமடைந்தது.
(ஜாதுல் மஆது)
உடன்படிக்கையை மீறுதல்
ஹ{தைபிய்யாவில் நடைபெற்ற ஒப்பந்தங்களில் ஒன்று: 'நபியவர்களுடன் சேர
விரும்பியவர்கள் நபியவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் குறைஷிகளுடன் சேர
விரும்பியவர்கள் குறைஷிகளுடன் சேர்ந்து கொள்ளலாம். யார் எந்த கூட்டத்தினருடன்
சேருகிறார்களோ, அவர் அந்தக் கூட்டத்தினல் ஒருவராகக் கணிக்கப்படுவார். அவர் மீது
யாராவது அத்துமீறினால் அது அந்தக் கூட்டத்தினர் மீதே அத்துமீறியதாகும்." இந்த
விவரத்தை இதற்கு முன்பே நாம் கூறியிருக்கிறோம்.
இந்த ஒப்பந்தத்திற்கு ஏற்ப குஜாஆ கோத்திரத்தினர் நபியவர்களுடன் சேர்ந்து
கொண்டனர். பக்ர் கோத்திரத்தினர் குறைஷிகளுடன் சேர்ந்து கொண்டனர். அறியாமைக்
காலத்திலிருந்தே பரம்பரை பரம்பரையாக இவ்விரு கோத்திரத்தினரும் தங்களுக்குள்
சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இஸ்லாம் வந்து, இந்த உடன்படிக்கை ஏற்பட்டதற்குப்
பின் இரு சாராரும் தங்களுக்குள் சண்டையிடுவதை நிறுத்திக் கொண்டனர்.
சில காலங்கள் இவ்வாறு கழிய, இந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்
கொண்ட பக்ர் கிளையினர் குஜாஆ கோத்திரத்தாரிடமிருந்து தங்களது பழைய
பகைமைக்குப் பழி தீர்த்துக் கொள்ள விரும்பினர்.
ஹிஜ்ரி 8, ஷஅபான் மாதம் பக்ர் கோத்திரத்தினரின் ஒரு கூட்டத்தினரை அழைத்துக்
கொண்டு ~நவ்ஃபல் இப்னு முஆவியா அத்தியலி| என்பவன் புறப்பட்டான். அன்று குஜாஆ
கிளையினர் ~அல்வத்தீர்| என்ற கிணற்றுக்கருகில் ஒன்றுகூடியிருந்தனர். நவ்ஃபல், தான்
அழைத்து வந்தவர்களைச் சேர்த்துக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினான். குஜாஆ
கிளையினரில் சிலர் கொல்லப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களுடன் கடுமையான சண்டை
நடந்தது. குறைஷிகள் பக்ரு கிளையினருக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதுடன்,
அவர்களில் சிலரும் இரவின் இருளை பயன்படுத்திக் கொண்டு குஜாஆவினரைத்
தாக்கினர்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Wed Apr 27, 2011 3:09 pm

சண்டைசெய்து கொண்டே குஜாஆ கோத்திரத்தினர் ஹரம் எல்லைக்குள் நுழைந்து
விட்டனர். அப்போது பக்ர் கிளையினர் 'நவ்ஃபலே! நாம் நிறுத்திக் கொள்வோம். நாம்
ஹரம் எல்லைக்குள் நுழைந்து விட்டோம். உமது இறைவனைப் பயந்துகொள்! உமது
இறைவனை பயந்துகொள்!" என்று கூறினர். ஆனால், சதிகாரன் நவ்ஃபல் மிகக் கடுமையான
வார்த்தையைக் கூறினான். 'பக்ர் இனத்தாரே! இன்றைய தினம் எந்த இறைவனும் இல்லை.
உங்களது பழியைத் தீர்த்துக் கொள்ளுங்கள். என்மீது சத்தியமாக! ஹரம் எல்லையில்
திருடும் நீங்கள் அதில் ஏன் கொலை செய்யக் கூடாது?" என்றான். குஜாஆவினர் புதைல்
இப்னு வரகா மற்றும் ராபிஃ என்ற தங்களது நண்பர்கள் வீட்டில் சென்று அடைக்கலம்
தேடினர்.
குஜாஆவைச் சேர்ந்த அம்ரு இப்னு ஸாலிம் மக்காவிலிருந்து மதீனாவிற்கு விரைந்தார்.
அங்கிருந்து நபியவர்களின் பள்ளிவாயிலை நோக்கி நடந்த அவர், பள்ளிக்குள்
நுழைந்ததும் நபியவர்கள் முன்னிலையில் நின்று கொண்டார். நபியவர்கள் மக்களுக்கு
மத்தியில் அமர்ந்திருந்தார்கள். அம்ரு நடந்த துக்கத்தை கவிதைகளில் பாடிக் காட்டினார்.
இறைவா! நான் முஹம்மதிடம் எங்களின் ஒப்பந்தத்தையும்
அவர் தந்தையின் பழமையான ஒப்பந்தத்தையும்
கேட்டு வந்திருக்கின்றேன். நீங்கள் பிள்ளைகள்
நாங்கள் பெற்றோர்கள் பின்பு நாம் முஸ்லிமானோம்
பின்வாங்கவில்லை முழுமையாக உதவுங்கள்
அல்லாஹ் உமக்கு வழிகாட்டுவான்.
அல்லாஹ்வின் அடியார்களை அழை
உதவிக்கு அவர்களும் வருவார்கள்
அவர்களில் ஆயுதம் ஏந்திய அல்லாஹ்வின்
தூதரும் இருக்கின்றார். அவர் வானில் நீந்தும்
முழு நிலா போல் அழகுள்ளவர்.
அவருக்கு அநீதமிழைத்தால் முகம் மாறிவிடுவார்.
நுரை தள்ளும் கடல்போன்ற படையுடன் வருவார்
குறைஷிகள் உன் வாக்கு மாறினர்.
உன் வலுவான ஒப்பந்தத்தை முறித்து விட்டனர்.
கதாவில் எனக்குப் பதுங்கு குழி வைத்துள்ளனர்.
ஒருவரையும் உதவிக்கு அழையேன்
என நினைத்துக் கொண்டனர். அவர்கள் அற்பர்கள்
சிறுபான்மையினர் வதீல் இரவு எங்களைத் தாக்கினர்.
நாங்கள் இறைவனை... பணிந்து குனிந்து வணங்கிய போது
எங்களை அவர்கள் வெட்டினர்.
அவன் கவிதைகளைக் கேட்ட நபி (ஸல்) 'உனக்கு உதவி செய்யப்படும்" என்று ஆறுதல்
கூறினார்கள். அந்நேரத்தில் வானத்திலிருந்து ஒரு மேகம் அங்கு வந்தது. நபி (ஸல்)
அவர்கள் 'இம்மேகம் குஜாஆ கிளையினர் உதவி பெற்று விட்டனர் என்பதற்கு முன்
அறிவிப்பு" என்றார்கள்.
பிறகு ஃபுதைல் இப்னு வரகா அல்குஸாம் தனது கோத்திரத்தினர் சிலரை அழைத்துக்
கொண்டு நபி (ஸல்) அவர்களது சமூகம் வந்து, தங்களில் பலர் கொல்லப்பட்டதையும்,
குறைஷிகள் பலர் தங்களுக்கு எதிராக பக்ரு குலத்தவருக்கு உதவி செய்ததையும்
கூறிவிட்டு மக்கா திரும்பினார்.
Pயபந 412 ழக 518
அப+ ஸ{ஃப்யான் ஓடி வருகிறார்
குறைஷிகளும், அவர்களது தோழர்களும் செய்தது ஒப்பந்தத்தை முறிக்கும் செயலாகும்
மிகப்பெரிய மோசடியாகும். எவ்விதத்திலும் இச்செயலை நியாயப்படுத்த முடியாது என்பதில்
எந்த சந்தேகமும் இல்லை. தங்களின் இத்தீய செயலுக்குப் பின் அதன் விபரீதத்தை
அறிந்து கொண்ட குறைஷிகள் உடனடியாக அவசர ஆலோசனை சபையைக் கூட்டினர்.
ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்குத் தங்களின் தளபதி அப+ஸ{ஃப்யானை மதீனாவுக்கு அனுப்ப
வேண்டுமென்று அதில் முடிவெடுத்தனர்.
'தங்களின் மோசடி செயலுக்குப் பின் குறைஷிகள் என்ன செய்வார்கள்" என்று நபி (ஸல்)
அவர்கள் தங்களது தோழர்களுக்கு முன்கூட்டியே அறிவித்தார்கள். அநேகமாக
ஒப்பந்தத்தை உறுதிசெய்து, அவகாசத்தை நீட்டித் தருவதற்காக அப+ ஸ{ஃப்யான்
உங்களிடம் வருவார்" என்று நபி (ஸல்) கூறினார்கள்.
குறைஷிகள் முடிவு செய்தவாறே அப+ ஸ{ஃப்யான் மக்காவிலிருந்து புறப்பட்டார். வழியில்
மதீனாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த புதைல் இப்னு வரகாவை ~உஸ்ஃபான்| என்ற
இடத்தில் சந்தித்து 'புதைலே எங்கு போய் வருகிறீர்?" என்றார். அவர், 'நான் எனது
கோத்திரத்தாருடன் இந்த கடற்கரை மற்றும் இந்தப் பள்ளத்தாக்கை சுற்றிப் பார்க்க
வந்தேன்" என்று கூறினார். அப+ ஸ{ஃப்யான் 'நீ முஹம்மதிடம் சென்று வரவில்லையா?"
என்று கேட்டார். அவர் 'இல்லையென்று" கூறிவிட்டார். புதைல் அந்த இடத்தை விட்டு
மக்கா நோக்கிப் புறப்பட்டு போன பின்னர் அப+ ஸ{ஃப்யான், 'புதைல் மதீனாவுக்குச்
சென்றிருந்தால் அங்கு தனது ஒட்டகங்களுக்கு தின்பதற்கு பேரீத்தம் கொட்டைகளைக்
கொடுத்திருக்க வேண்டும்" என்று கூறிவிட்டு அவரது ஒட்டகம் படுத்திருந்த இடத்திற்கு
வந்து, அதன் சாணத்தைக் கிளறினார்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 22 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 26 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24, 25, 26  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum