தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Page 18 of 26 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 22 ... 26  Next

Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Fri Feb 04, 2011 2:28 pm

First topic message reminder :

அரபியர்கள் வாழ்ந்த இடங்களும் அரபிய சமுதாயங்களும்
~நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு| என்பது மனித சமுதாயத்திற்காக அவர்கள்
கொண்டு வந்த இறைத்தூதைக் குறிக்கும் சொல்லாகும். தான் கொண்டு வந்த இறைத்தூதை
தங்களின் சொல், செயல், வழிகாட்டல், ஒழுக்க மாண்புகள் ஆகியவற்றின் மூலம் மனித
குலத்திற்கு எடுத்துரைத்தார்கள். அந்த இறைத்தூதுத்துவத்தால் மனித வாழ்வின்
அளவுகோல்களை முற்றிலுமாக மாற்றினார்கள்; தீமைகளைக் களைந்து நன்மைகளை
போதித்தார்கள்; இருளைவிட்டு மக்களை அகற்றி ஒளியை நோக்கி அழைத்து வந்தார்கள்.
படைப்பினங்களை வணங்குவதிலிருந்து மனிதனை முழுமையாக விடுவித்து,
படைப்பாளனாகிய ஒரே இறைவனை வணங்கும்படி செய்தார்கள். சுருங்கக்கூறின்,
இவ்வுலகில் நெறி தவறி வாழ்ந்த மனிதனின் வாழ்க்கைப் பாதையை மாற்றி செம்மையான
அழகிய பாதையில் அவனை வாழச்செய்தார்கள்.
நமது இக்கருத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் முஹம்மது (ஸல்) அவர்கள் தூதராக
அனுப்பப்படுவதற்கு முன் இருந்த நிலைமைகளையும், அவர்கள் தூதராக அனுப்பப்பட்ட
பின் ஏற்பட்ட மாற்றங்களையும் முன் நிறுத்தி பார்ப்பது அவசியம்.
இதனால் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமின் பக்கம் மக்களை அழைப்பதற்கு முன்பிருந்த
அரபிய சமுதாயங்கள், அவர்களது கலாச்சாரங்கள்; மேலும், அக்காலத்தில் இருந்த
சிற்றரசர்கள், பேரரசர்கள், சமுதாய அமைப்புகள், அவர்களது மத நம்பிக்கைகள், சமூக
பழக்க வழக்கங்கள், சடங்குகள் மற்றும் அவர்களது அரசியல், பொருளியல் ஆகியவற்றை
குறித்து சில பிரிவுகளில் சுருக்கமாக ஆய்வு செய்வதும் அவசியம்.
இவற்றுள் ஒவ்வொன்றையும் பற்றி கூறுவதற்கு நாம் தனித்தனி பிரிவுகளை
ஏற்படுத்தியிருக்கின்றோம். இப்போது அந்த பிரிவுகளைப் பார்ப்போம்.
அரபியர்கள் வாழ்ந்த இடங்கள்
~அரப்| என்ற சொல்லுக்கு பாலைவனம், பொட்டல் ப+மி, (மரம், செடி கொடிகள், தண்ணீர்
இல்லாத) வறட்சியான நிலப்பரப்பு எனப் பல அர்த்தங்கள் உள்ளன. நீண்ட காலமாக
அரபிய தீபகற்பத்துக்கும் (இன்றைய ஸவூதி) அங்கு வசிப்பவர்களுக்கும் இப்பெயர்
கூறப்படுகிறது.
அரபிய தீபகற்பத்தின் மேற்கே செங்கடலும் ஸனாஃ நாடும், கிழக்கே அரபிய
வளைகுடாவும் இராக்கின் சில பகுதிகளும், தெற்கே அரபிக் கடலும் (இது இந்தியப்
பெருங்கடல் வரை தொடர்கிறது). வடக்கே ஷாம் (சிரியா) மற்றும் இராக்கின் சில
நகரங்களும் இருக்கின்றன. இதன் பரப்பளவு 10,00,000 சதுர கிலோ மீட்டரிலிருந்து
13,00,000 சதுர கிலோ மீட்டர் வரையிலாகும்.
அரபிய தீபகற்பத்துக்கு புவியியல் ரீதியாகவும் அதன் இயற்கை அமைப்பாலும் மிகுந்த
முக்கியத்துவம் உண்டு. அதன் உட்புற எல்லைகள் நாலா திசைகளிலும் மணற்பாங்கான
பாலைவனத்தால் சூழப்பட்டுள்ளன.
அரபியர் அல்லாத வெளிநாட்டவர்கள் தங்களது ஆதிக்கத்தை அந்நாட்டில் செலுத்துவதற்கு
இப்புவியியல் அமைப்பு பெரும் தடையாக இருந்தது. அதன் காரணமாக அந்நாட்டு மக்கள்
எல்லாக் காலங்களிலும் தங்கள் செயல்பாடுகள் அனைத்திலும் சுதந்திரமானவர்களாகவே
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down


முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:05 pm

இன்னொருவரின் அருகில் வரவே அதே அம்பைக் கொண்டு எய்தேன் அவனும் செத்து
மடிந்தான். நான் சென்று அம்பை எடுத்துக் கொண்டேன். அடுத்து ஒருவன் வர,
அவனையும் அதே அம்பால் கொன்றேன். மூவர் இறந்தவுடன் மற்றவர்கள் ஏற அஞ்சி
இறங்கி விட்டனர். அப்போது நான் 'இந்த அம்பு அல்லாஹ்வின் அருள் பெற்றது" என்று
கூறி அதை என் அம்புக் கூட்டில் பாதுகாத்துக் கொண்டேன்."
இப்படி பல எதிரிகளின் உயிர்களை குடித்த அம்பை ஸஅது (ரழி) தங்களிடம் மரணம்
வரை பாதுகாத்தார்கள். அவர்கள் மரணித்த பின்பு அவர்களது பிள்ளைகள் அதை
பாதுகாத்து வைத்திருந்தனர். (ஜாதுல் மஆது)
போரில் உயிர் நீத்த தியாகிகளைச் சிதைத்தல்
நபி (ஸல்) அவர்களைத் தாக்க வேண்டுமென பல முறை எதிரிகள் முயன்றனர். ஆனால்,
முஸ்லிம்கள் நபியவர்களுக்கு அரணாக விளங்கியதால் எதிரிகளால் ஒன்றும் செய்ய முடிய
வில்லை. இருப்பினும் நபியவர்கள் தங்களின் தாக்குதலில் இறந்திருக்கலாம் என்றும் சற்றே
உறுதியாக எண்ணினர். அதனால் போரை நிறுத்திக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட
தங்களுடைய முகாம்களுக்குத் திரும்பினர். அவ்வாறு திரும்பும் போது சில ஆண்களும்
பெண்களும் போரில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் காது, மூக்கு, மர்ம உறுப்புகள்
போன்றவற்றை அறுத்தனர் வயிறுகளைக் கிழித்தனர் ஹிந்த் பின்த் உத்பா என்பவள்
ஹம்ஜா (ரழி) அவர்களின் ஈரலை அறுத்து மென்று முழுங்க முயற்சித்தாள். அவளால்
முடியாமல் போகவே அதைத் துப்பிவிட்டாள். பின்பு, தியாகிகளின் காதுகளையும்
மூக்குகளையும் அறுத்து தனக்குக் கால் கொலுசாகவும், கழுத்து மாலையாகவும் அணிந்து
கொண்டாள். (இப்னு ஹிஷாம்)
இறுதி வரை சண்டையிட முஸ்லிம்கள் துணிதல்
இந்தக் கடைசி நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் மூலம்
முஸ்லிம்களின் துணிவையும், அல்லாஹ்வின் பாதையில் மரணத்தை சந்திக்க வேண்டும்
என்ற அவர்களுக்கு இருந்த அலாதியான ஆர்வத்தையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.
1) கஅப் இப்னு மாலிக் (ரழி) கூறுகிறார்கள்: 'உஹ{த் போரில் நானும் கலந்து கொண்டேன்.
அப்போது கொல்லப்பட்டுக் கிடந்த முஸ்லிம்களை எதிரிகள் சிதைப்பதைப் பார்த்து
திகைத்து நின்றுவிட்டேன். அங்கே ஒருவன் உறுதியான உருக்குச் சட்டை அணிந்தவனாக
கொல்லப்பட்ட முஸ்லிம்களைப் பார்த்து 'அறுக்கப்பட்ட ஆடுகளைப் போன்று வீழ்ந்து
கிடக்கிறார்கள்" என்று கூறியவனாக முஸ்லிம்களைக் கடந்து சென்று கொண்டிருந்தான்.
அப்போது கவச ஆடை அணிந்த முஸ்லிம் ஒருவர் அவன் தனக்கருகில் வருவதை
எதிர்பார்த்தார். நான் அந்த முஸ்லிமுக்கு பின்புறமாய் நின்றவனாக எனது பார்வையால்
அந்த முஸ்லிமையும் எதிரியையும் கவனித்தேன். எதிரி நல்ல ஆயுதமுள்ளவனாகவும்
வலிமை மிக்கவனாகவும் தெரிந்தான். அவ்விருவரும் சந்திப்பார்களா? என்று நான்
எதிர்பார்த்தேன். அதே போரில் இருவரும் சந்தித்து சண்டையிட்டனர். முஸ்லிம் அந்த
எதிரியை ஒரு வெட்டுதான் வெட்டினார். அந்த வெட்டு அவனது பிரித்தட்டு வழியாக
சென்று, அவனை இரண்டாக பிளந்தது. பின்பு அவர் தனது முகத் திரையை விலக்கி
என்னைப் பார்த்து 'கஅபே! என்ன பார்க்கிறாய். நான்தான் அப+ துஜானா!" என்று
கூறினார்.(அல்பிதாயா)
2) பல முஸ்லிம் பெண்மணிகளும் போர் முடியும் தருவாயில் மைதானத்துக்கு வந்து
போரில் தங்களால் முடிந்த பங்காற்றினார்கள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:05 pm

அனஸ் (ரழி) இதைப் பற்றி கூறுகிறார்கள்: நபியவர்களின் மனைவியான ஆயிஷா பின்த்
அப+பக்ர் (ரழி) அவர்களையும் உம்மு சுலைம் (ரழி) அவர்களையும் பார்த்தேன். அவர்கள்
தங்களது கெண்டைக் கால்கள் தெரியுமளவு ஆடையை உயர்த்தியவர்களாகத் தோல்
துருத்திகளில் தண்ணீர் நிரப்பி, அதை முதுகில் சுமந்து வந்து முஸ்லிம்களுக்குப்
புகட்டினார்கள். தண்ணீர் தீர்ந்துவிடவே மீண்டும் நிரப்பி வந்து புகட்டினார்கள். இவ்வாறு
இறுதி வரை சிரமம் பாராது பல முறை நிரப்பி வந்து காயமடைந்த முஸ்லிம்களுக்கும் மற்ற
வீரர்களுக்கும் தாகம் தீர்த்தார்கள். (ஸஹீஹ{ல் புகாரி)
மேலும் உமர் (ரழி) கூறுகிறார்கள்: உஹ{த் போரில் உம்மு ஸலீத் என்ற அன்சாரிப்
பெண்ணும் தோல் துருத்தியில் தண்ணீர் நிரப்பி வந்து எங்களது தாகம் தீர்த்தார்கள்.
(ஸஹீஹ{ல் புகாரி)
உம்மு அய்மன் (ரழி) என்ற பெண்மணியும் போர் மைதானத்திற்கு வந்தார்கள்.
முஸ்லிம்களில் சிலர் தோற்று மதீனாவுக்கு ஓடுவதைப் பார்த்த அவர், அவர்களின்
முகத்தில் மண்ணை வாரி இறைத்தார். மேலும், அவர்களில் சிலரைப் பார்த்து 'இந்தா!
ஆடை நெய்யும் ராட்டையை வாங்கிக் கொள். வாளை என்னிடம் கொடு!" என்று
ரோஷமூட்டினார். பின்பு, போர்க்களம் வந்து காயமடைந்தவர்களுக்குத் தண்ணீர்
புகட்டினார். அது சமயம் ~ப்பான் இப்னு அரக்கா| எனும் அரக்கன் ஒருவன்
அப்பெண்மணியை நோக்கி அம்பெறிந்தான். அவர்கள் கீழே விழுவே ஆடை விலகியது.
அந்த மூடன் இதைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். இக்காட்சி நபி (ஸல்) அவர்களை
சிரமத்திற்குள்ளாக்கியது. எனவே, கூர்மையற்ற ஓர் அம்பை ஸஅது இப்னு அபீவக்காஸிடம்
கொடுத்து 'ஸஅதே! இந்த அம்பை அவனை நோக்கி எறி!" என்றார்கள். ஸஅது (ரழி)
அவர்கள் அந்த அம்பை அவனை நோக்கி எறிய, அது அவனது கழுத்தைத் தாக்கியது.
அவன் மல்லாந்து விழ, அவனது ஆடையும் அகன்றது. அதைப் பார்த்து நபியவர்கள்
கடைவாய் பல் தெரியுமளவுக்கு சித்துவிட்டு, 'அப்பெண்மணிக்காக ஸஅது பழி தீர்த்து
விட்டார். அல்லாஹ் ஸஅதின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்" என்று கூறினார்கள்.
(அஸ்ஸீரத்துல் ஹல்பிய்யா)
மலைக் கணவாயில்
நபி (ஸல்) அவர்கள் கணவாயில் நல்ல அமைப்பான இடத்தை அடைந்த போது அலீ
இப்னு அப+தாலிப் (ரழி) தங்களது கேடயத்தை எடுத்துச் சென்று அதில் தண்ணீர் நிரப்பி
வந்தார்கள். அத்தண்ணீர் பெரிய குழியுடைய பாறையில் நிரம்பியிருந்த தண்ணீர் என்று
சிலர் கூறுகின்றனர். வேறு சிலர் 'அது ஒரு கிணற்றிலிருந்து எடுத்து வந்த நீர்"
என்கின்றனர். எது எப்படியோ அந்த தண்ணீலிருந்து நபியவர்களுக்கு விருப்பமற்ற வாடை
வீசவே, நபியவர்கள் அதை குடிக்க வில்லை. தனது முகத்திலிருந்த இரத்தக் கரையைக்
மட்டும் கழுவிக் கொண்டார்கள். 'அல்லாஹ்வின் கோபம் அவனது நபியின் முகத்தை
காயப்படுத்தியவன் மீது கடினமாகட்டும்" என்று கூறியவர்களாக தனது தலையின் மீதும்
கொஞ்சம் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள். (இப்னு ஹிஷாம்)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:05 pm

இந்நிகழ்ச்சி குறித்து நபித்தோழர் ~ஸஹ்ல்| (ரழி) நமக்குக் கூடுதல் விவரம் அளிக்கிறார்:
'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களின் காயத்தை யார் கழுவியது யார்
தண்ணீர் ஊற்றியது எதைக் கொண்டு அவர்களுக்கு மருந்திடப்பட்டது என்பதெல்லாம்
எனக்கு நன்றாகத் தெரியும். அதாவது, நபியவர்களின் மகளார் ஃபாத்திமா (ரழி)
கழுவினார்கள். அலீ (ரழி) அவர்கள் கேடயத்திலிருந்து தண்ணீரை ஊற்றினார்கள்.
தண்ணீர் ஊற்றுவதால் இரத்தம் நிற்காமல் அதிகமாகிறது என்பதைப் பார்த்தவுடன்
ஃபாத்திமா (ரழி) பாயின் ஒரு பகுதியை கிழித்து அதை எரித்து அந்த சாம்பலை
அக்காயத்தில் வைத்தார்கள். உடனே, இரத்தம் நின்றுவிட்டது. (ஸஹீஹ{ல் புகாரி)
Pயபந 284 ழக 518
அதற்குள்ளாக முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) மதுரமான நீர் எடுத்து வந்தார். நபி (ஸல்)
அவர்கள் அதைப் பருகி, அவருக்காக நல்ல பிரார்த்தனையும் செய்தார்கள். (ஸீரத்துல்
ஹல்பிய்யா)
இவ்வாறு காலை பொழுதில் தொடங்கிய போர் முதலில் வெற்றி பிறகு சேதம் என்று ஒரு
வழியாக மதிய வேளையில் முடிவுக்கு வந்தது. இப்போரில் நபியவர்களுக்கும்
முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட காயமும் களைப்பும் தெரிந்ததே. எனவே, நபியவர்கள் லுஹர்
(மதிய) நேரத் தொழுகையை உட்கார்ந்து தொழ, தோழர்களும் அவ்வாறே தொழுதார்கள்.
(இப்னு ஹிஷாம்)
அப+ ஸ{ஃப்யானின் மகிழ்ச்சி
எதிரிகள் மக்காவிற்கு திரும்ப முழுமையாக ஆயத்தமாயினர். அதற்குள் முஸ்லிம்களின்
உண்மை நிலைமையை அறிவதற்காக அப+ ஸ{ஃப்யான் மலையின் மீது ஏறி 'உங்களில்
முஹம்மது இருக்கிறாரா?" என்று கூவினார். முஸ்லிம்களில் எவரும் அவருக்கு பதிலளிக்க
வில்லை. பின்பு உங்களில் 'அப+ குஹாஃபாவின் மகன் (அப+பக்ர்) இருக்கிறாரா?" என்று
கூவினார். அப்போதும் முஸ்லிம்கள் பதிலளிக்கவில்லை. பின்பு அவர் 'உமர் இப்னு
கத்தாப் இருக்கிறாரா?" என்று கூவினார். அதற்கும் முஸ்லிம்கள் பதிலளிக்கவில்லை.
காரணம், நபி (ஸல்) பதிலளிக்க வேண்டாமென்று முஸ்லிம்களைத் தடுத்திருந்தார்கள்.
'இஸ்லாமின் வலிமை இம்மூவரால்தான்" என்று அப+ ஸ{ஃப்யானுக்கும் அவரது
கூட்டத்தாருக்கும் தெரிந்திருந்த காரணத்தால்தான், அவர் இம்மூவரைப் பற்றியும்
விசாரித்தார். முஸ்லிம்களிடமிருந்து எந்த பதிலும் வராததால் 'என் மக்களே! அறிந்து
கொள்ளுங்கள். இவர்களையே நீங்கள் கொன்று விட்டீர்கள் அது போதும்!" என்று
அப+ஸ{ஃப்யான் கூறினார்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:06 pm

இதைக் கேட்ட உமர் (ரழி) தன்னை அடக்க முடியாமல் 'ஏய்!
அல்லாஹ்வின் எதிரியே! நீ யாரையெல்லாம் கூறினாயோ அவர்கள் உயிரோடுதான்
இருக்கிறார்கள். அல்லாஹ் என்றும் உனக்குக் கவலையைத்தான் தருவான். எனவே, நீ
மகிழத் தேவையில்லை" என்று பதிலளித்தார்கள். சிறிது அமைதிக்குப் பிறகு அப+
ஸ{ஃப்யான் மீண்டும் பேசினார். 'உங்களில் கொல்லப்பட்டோன் உடல்கள்
சிதைக்கப்பட்டுள்ளன. அப்படி செய்ய வேண்டுமென நான் கட்டளையிடவில்லை.
ஆனாலும், அது எனக்கு எந்த வருத்தமும் அளிக்கவில்லை" என்றார். பின்பு 'ஹ{புல்
எனும் சிலையே! உயர்வு உனக்குத்தான்" என்று கூறினார்.
அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் 'இப்போது நீங்கள் அவருக்கு பதிலளிக்க
மாட்டீர்களா?" என்று கேட்க, 'நாங்கள் என்ன பதிலளிக்க வேண்டும்?" என்று
முஸ்லிம்கள் கேட்டார்கள். அதற்கு 'அல்லாஹ்தான் உயர்ந்தவன் அவனே
கண்ணியமிக்கவன் என்று பதிலளியுங்கள்" என்று நபியவர்கள் கூறினார்கள் அவர்களும்
அவ்வாறே பதிலளித்தார்கள்.
பின்பு 'எங்களுக்கு உஜ்ஜா இருக்கிறது. உங்களுக்கு உஜ்ஜா இல்லையே!" என்றார் அப+
ஸ{ஃப்யான்.
நபி (ஸல்) அவர்கள் 'அவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?" என்று கேட்க
'நாங்கள் என்ன பதிலளிப்பது?" என்று நபித்தோழர்கள் கேட்டனர், 'அல்லாஹ்
எங்களுக்கு எஜமானாக இருக்கிறான். உங்களுக்கு எஜமானன் இல்லையே!" என
பதிலளியுங்கள் என்றார்கள். நபித்தோழர்களும் அவ்வாறே கூறினார்கள்.
அதன் பிறகு, 'எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. இந்நாள் பத்ர் போருக்குப் பகரமாக
ஆகிவிட்டது. போர் இப்படித்தான் கிணற்று வாளியைப் போன்றது" என்றார்
அப+ஸ{ஃப்யான். அதற்கு உமர் (ரழி) 'ஒருக்காலும் சமமாக முடியாது. எங்களில்
கொல்லப்பட்டவர் சுவனத்தில் இருக்கிறார். உங்களில் கொல்லப்பட்டவர் நரகத்தில்
Pயபந 285 ழக 518
இருக்கிறார்" என்று பதிலடி தந்தார்கள். பின்பு அப+ஸ{ஃப்யான் 'உமரே! என்னிடம் வா"
என்று அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் 'உமரே! நீ அவரிடம் சென்று அவர் என்ன
கூறுகிறார் என்று கேட்டு வாருங்கள்" என்றார்கள். உமர் (ரழி) அப+ஸ{ஃப்யானிடம்
வந்தவுடன் 'உமரே! அல்லாஹ்வுக்காக நான் உன்னிடம் கேட்கிறேன். உண்மையில் நாங்கள்
முஹம்மதைக் கொன்று விட்டோமா? இல்லையா?" என்று கேட்டார். அதற்கு உமர் (ரழி)
'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்களை நீங்கள் கொல்ல வில்லை, அவர்கள் உமது
பேச்சை இப்போதும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்" என்றார்கள். அதற்கு 'இப்னு
கமிஆவை விடவும் நல்லவராகவும் உண்மை சொல்பவராகவும் நான் உன்னை
கருதுகிறேன்" என்று அப+ ஸ{ஃப்யான் கூறினார். (இந்த இப்னு கமிஆ என்பவனே நபி
(ஸல்) அவர்களை தான் கொன்றுவிட்டதாக ஊளையிட்டவன்.) (ஸஹீஹ{ல் புகாரி, இப்னு
ஹிஷாம், ஜாதுல் மஆது)
பத்ரில் சந்திக்க அழைத்தல்
மேற்கூறிய உரையாடலுக்குப் பிறகு உமர் (ரழி) திரும்பிவிட்டார்கள். அப+ ஸ{ஃப்யானும்
அவரது படையும் மைதானத்தை விட்டு புறப்படும் போது 'அடுத்த ஆண்டு பத்ர்
மைதானத்தில் ஷஅபான் மாதம் நாம் உங்களைச் சந்திப்போம்" என்று முஸ்லிம்களுக்கு
அறிக்கை விடுத்தார். நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களில் ஒருவருக்கு 'ஆம்!
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:06 pm

அவ்வாறே ஆகட்டும் என்று சொல்" என்றார்கள். இவ்வாறு முடிவு செய்யப்பட்டப் பிறகு
அப+ ஸ{ஃப்யான் படையுடன் மக்கா நோக்கிப் பயணமானார். (இப்னு ஹிஷாம்)
எதிரிகளின் நிலை அறிதல்
பின்பு நபி (ஸல்) அவர்கள் அலீ இப்னு அபீதாலிப் (ரழி) அவர்களை அனுப்பி 'நீ
இவர்களைப் பின்தொடர்ந்து செல் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களது நோக்கம்
என்ன? என்று பார்த்து வர அவர்கள் ஒட்டகத்தில் வாகனித்து குதிரைகளை இழுத்துச்
சென்றால் அவர்கள் மக்காவிற்கு செல்கிறார்கள் என்று பொருள் அவர்கள் குதிரையில்
வாகனித்து ஒட்டகத்தை இழுத்துச் சென்றால் அவர்கள் மதீனாவை நோக்கிச் செல்கிறார்கள்
என்று பொருள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் மதீனா சென்றால் நான் அங்கு
சென்று அவர்களுடன் போர் செய்வேன்" என்றார்கள்.
அலீ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: 'நான் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப்
பார்க்க அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். அவர்கள் ஒட்டகத்தில் வாகனித்துக்
குதிரைகளை இழுத்துச் சென்றார்கள். அவர்களது பயணம் மக்கா நோக்கியே இருந்தது."
(இப்னு ஹிஷாம்)
தியாகிகளை கண்டெடுத்தல்
எதிரிகள் சென்றதற்குப் பின் கொல்லப்பட்டவர்களையும் காயமடைந்தவர்களையும்
தேடுவதில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். இதைப் பற்றி ஜைது இப்னு ஸாபித் (ரழி) இவ்வாறு
கூறுகிறார்:
போர் முடிந்த பின் ஸஅது இப்னு ரபீஆவைத் தேடுவதற்காக நபி (ஸல்) அவர்கள்
என்னை அனுப்பினார்கள். 'நீ அவரைப் பார்த்து விட்டால் அவருக்கு எனது ஸலாம் கூறி,
உனது நிலை என்னவென்று அல்லாஹ்வின் தூதர் விசாரிக்கிறார்கள்" என்று சொல்லுமாறு
என்னைப் பணித்தார்கள். கொல்லப்பட்டவர்களிடையே அவர்களைத் தேடி அலைந்தேன்.
நான் அவரைப் பார்த்த போது அவர் இறுதி மூச்சுகளை எண்ணிக் கொண்டிருந்தார்.
அவருடைய உடலில் அம்பு, ஈட்டி, வாள் ஆகிய ஆயுதங்களால் ஏற்பட்ட எழுபது
காயங்கள் இருந்தன. நான் அவரிடம் 'ஸஅதே! அல்லாஹ்வின் தூதர் உனக்கு ஸலாம்
கூறுகிறார்கள். மேலும், உமது நிலையை விசாரித்து வர என்னை அனுப்பினார்கள்" எனக்
Pயபந 286 ழக 518
கூறினேன். அதற்கு 'அல்லாஹ்வின் தூதர் மீதும் ஸலாம் உண்டாகட்டுமாக¢ அல்லாஹ்வின்
தூதரே! நான் சுவனத்தின் நறுமணத்தை உணர்கிறேன் என நீர் நபியவர்களிடம் சொல்
மேலும், உங்களில் ஒருவர் உயிருடன் இருக்கும் நிலையில் நபியவர்களின் உயிருக்கு
ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் உங்களுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது என்று என்
நண்பர்களாகிய அன்சாரிகளிடம் நீ சொல்" என்று தனது இறுதி வார்த்தைகளை கூறிய
பின் உயிர் நீத்தார். (ஜாதுல் மஆது)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:06 pm

காயமடைந்தவர்களில் உஸைம் என்றழைக்கப்படும் அம்ர் இப்னு ஸாபித் (ரழி) என்பவரும்
ஒருவர். அவர் உயிர் பிரியும் நிலையில் இருந்தார். இதற்கு முன்பு அவருக்கு முஸ்லிம்கள்
பலமுறை இஸ்லாமை எடுத்துக் கூறியும், அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்து
வந்தார். இவரை இந்நிலையில் பார்த்த முஸ்லிம்கள் இந்த உஸைம் ஏன் இங்கு வந்தார்!
நாம் போருக்கு வரும்போது அவருக்கு நமது மார்க்கம் பிடிக்காமல் இருந்ததே! என்று
கூறியவர்களாக அவரிடம் 'உமது இனத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வத்தால்
வந்தீரா? அல்லது இஸ்லாமை ஏற்று அதற்காக போர் புரிய வேண்டும் என்ற ஆர்வத்தில்
வந்தீரா?" என விசாரித்தனர். அதற்கவர் 'இல்லை! இஸ்லாம் மீதுள்ள பிரியத்தினால்தான்
போரில் கலந்து கொண்டேன். நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை
கொண்டேன். அல்லாஹ்வின் தூதரோடு சேர்ந்து எதிரிகளிடம் போர் புரிந்தேன். இப்போது
எனது நிலை என்னவென நீங்கள் பார்க்கிறீர்கள்" என்று தனது பேச்சை முடிக்க மரணம்
அவரை ஆரத் தழுவியது.
இவரது நிலையை நபி (ஸல்) அவர்களிடம் முஸ்லிம்கள் கூறியதற்கு நபியவர்கள் அவர்
சுவனவாசிகளில் ஒருவர் என்றார்கள்.
அப+ஹ{ரைரா (ரழி) கூறுகிறார்: உஸைம் அல்லாஹ்விற்காக ஒரு நேரத் தொழுகை கூட
தொழவில்லை (இருந்தும் நபியவர்களின் நாவினால் சுவனவாசி என்ற நற்செய்தி பெற்றார்.)
(இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
காயமடைந்தவர்களில் ~குஜ்மான்| என்பவரும் ஒருவர். அவர் மிகப்பெரும் வீரராய் போரில்
சண்டையிட்டார். இவர் மட்டும் தனியாக ஏழு அல்லது எட்டு எதிரிகளைக் கொன்றார்.
இவருக்கு ஆழமான காயம் ஏற்படவே, ப+மியில் விழுந்து கிடந்தார். இவரை முஸ்லிம்கள்
ளஃபர் கிளையினரின் வீட்டுக்குத் தூக்கிச் சென்றனர். அவருக்கு முஸ்லிம்கள் நற்செய்தி
கூறினர். அதற்கு அவர் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இன வெறிக்காகத்தான்
போரிட்டேன். இனவெறி மட்டும் இருக்கவில்லையெனில் நான் போரில் கலந்திருக்க
மாட்டேன்" என்றார். பின்பு காயத்தின் வேதனை கடுமையாகவே அவர் தற்கொலை செய்து
கொண்டார். இவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் 'இவர் நரகவாசிகளில் ஒருவர்"
என்றார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
அல்லாஹ{வின் ஏகத்துவக் கலிமாவை உயர்த்த வேண்டும் என்ற நோக்கமில்லாமல்
இனவெறி அல்லது தேசப்பற்றுக்காக போர் புரிபவர்களின் முடிவு இதுதான். இவர்கள்
இஸ்லாமியக் கொடியின் கீழ் போரிட்டாலும் அல்லது அதற்கும் மேலாக நபியவர்களின்
படையிலிருந்தாலும் இவர்கள் செல்லுமிடம் நரகம்தான்.
மேற்க்கூறப்பட்ட நிகழ்ச்சிக்கு மாற்றமாக மற்றொரு நிகழ்ச்சியும் நடந்தது. அதாவது
ஸஅலபா கிளையைச் சேர்ந்த யூதர்களில் ஒருவரும் போரில் கொல்லப்பட்டார். அவரது
பெயர் முகைரீக். அவர் தனது இனத்தவரிடம் 'யூதர்களே! அல்லாஹ்வின் மீது ஆணையாக!
முஹம்மதுக்கு உதவி செய்வது உங்கள் மீது கட்டாயக் கடமை என்பது உங்களுக்கு
நன்றாகத் தெரியும்தானே?" எனக் கூறினார். அதற்கவர்கள் 'இன்றைய தினம் சனிக்கிழமை
அல்லவா நாம் எப்படி போருக்கு செல்ல முடியும்?" என்று எதிர்கேள்வி கேட்டனர்.
'உங்களுக்கு சனிக்கிழமை என்பதே இல்லாமலாகட்டும்!" என்று கோபமாக கூறி தனது
Pயபந 287 ழக 518
வாளையும் ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு 'நான் போரில் கொல்லப்பட்டு விட்டால்
எனது செல்வங்கள் அனைத்தும் முஹம்மது அவர்களைச் சாரும் அதை அவர்கள்
விரும்பியபடி செய்து கொள்ளலாம்" என்று கூறி, போரில் கலந்து வீரமரணமடைந்தார்.
இவரை பற்றிய செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு தெரியவர 'முகைரீக் யூதர்களில் மிகச்
சிறந்தவர்" என்று அவரை பற்றி கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:06 pm

தியாகிகளின் உடல்களை நல்லடக்கம் செய்தல்
போரில் உயிர்நீத்த தியாகிகளை முன்னோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நான்
உங்களுக்கு சாட்சியாக இருப்பேன். அல்லாஹ்வின் பாதையில் காயமடைந்தவரை
மறுமையில் அல்லாஹ் எழுப்பும் போது அவரது காயத்திலிருந்து இரத்தம் வடியும்¢ அதன்
நிறம் இரத்தத்தின் நிறமாகத்தான் இருக்கும்¢ ஆனால் அதன் மணமோ கஸ்தூரி போன்று
இருக்கும்." (இப்னு ஹிஷாம்)
நபித்தோழர்களில் சிலர் தங்கள் குடும்பத்தில் கொல்லப்பட்டவர்களை மதீனாவிற்கு எடுத்து
சென்றிருந்தனர். நபியவர்கள், அவர்களை மீண்டும் உஹ{துக்கு தூக்கி வரும்படி கூறி
'அவர்களை குளிப்பாட்டக் கூடாது¢ அவர்கள் உடலிலுள்ள போருக்குரிய ஆயுதங்களைக்
கழற்றிய பின், அவர்கள் கொல்லப்பட்ட இடங்களிலேயே அவர்களை அடக்க வேண்டும்"
என்று கட்டளையிட்டார்கள். ஒரு கப்ரில் இரண்டு அல்லது மூன்று உடல்களை நபியவர்கள்
அடக்கம் செய்தார்கள். மேலும், ஓரே ஆடையில் இருவரைப் போர்த்தினார்கள். யார்
அதிகமாகக் குர்ஆனை மனனம் செய்தவர் என்று விசாரித்து அவரைப் கப்ரில்
பக்கவாட்டுக் குழியில் முதலாவதாக வைத்தார்கள். அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு
ஹராம், அம்ர் இப்னு ஜமூஹ் (ரழி) ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து வந்ததால்
இருவரையும் ஓரே கப்ரில் அடக்கம் செய்தார்கள். (ஸஹீஹ{ல் புகாரி, ஜாதுல் மஆது)
முஸ்லிம்கள் ஹன்ளலாவைத் தேடிய போது அவரது உடல் ஒரு மூலையில் தண்ணீர்
சொட்டிய நிலையில் இருந்தது. அதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் 'வானவர்கள் அவரை
குளிப்பாட்டுகிறார்கள்" என்று தங்களது தோழர்களிடம் கூறினார்கள். பின்பு 'அவரது
குடும்பத்தாரிடம் சென்று விவரம் அறிந்து வாருங்கள்" என்று கூறி அனுப்பினார்கள்.
தோழர்கள் அவரது மனைவியிடம் விசாரிக்க 'ஹன்ளலா (ரழி) முழுக்குடைய நிலையில்
(குளிக்க வேண்டிய நிலையில்) போரில் கலந்து கொண்டதாக" மனைவி கூறினார். இதன்
காரணமாகத்தான் ஹன்ளலாவிற்கு ~கஸீலுல் மலாயிக்கா~ (மலக்குகள் குளிப்பாட்டியவர்)
என்ற பெயர் வந்தது. (ஜாதூல் மஆது)
தனது சிறய தந்தையும், பால்குடி சகோதரருமாகிய ஹம்ஜாவின் நிலையைப் பார்த்தவுடன்
நபி(ஸல்) அவர்கள் மிகுந்த கவலை அடைந்தார்கள். நபியவர்கள் மாமி ஸஃபிய்யாவின்
மகன் ஜுபைரிடம் 'அவரைத் தடுத்து திரும்ப செல்லுமாறு கூறுங்கள்" என்றார்கள்.
சகோதரருக்கு ஏற்பட்ட நிலைமையை அவர் பார்க்க வேண்டாம் என்பதற்காக நபியவர்கள்
இவ்வாறு செய்தார்கள். ஆனால், அவர் 'நான் ஏன் பார்க்கக் கூடாது? எனது சகோதரர்
சிதைக்கப் பட்டுள்ளார் என்ற செய்தி எனக்கு தெரியும். இன்ஷா அல்லாஹ்! இதற்கான
நன்மையை நான் அல்லாஹவிடம் எதிர்பார்த்திருக்கிறேன்" என்று கூறவே, அவருக்கு
அனுமதி வழங்கப்பட்டது. பிறகு ஸஃபிய்யா (ரழி) தனது சகோதரரை பார்த்து
'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்" (நாங்கள் அல்லாஹ்விற்காக
உள்ளவர்கள். அவனிடமே மீளுபவர்கள்) என்று கூறி, அவரின் நன்மைக்காகவும்
பாவமன்னிப்புக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். இதற்குப் பின் ஹம்ஜா (ரழி)
அவர்களை அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ{ (ரழி) அவர்களுடன் நல்லடக்கம் செய்ய
நபியவர்கள் ஏற்பாடு செய்தார்கள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:06 pm

இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்: 'ஹம்ஜா (ரழி) அவர்களுக்காக நபி (ஸல்) அழுததைப்
போன்று வேறு யாருக்கும் அவர்கள் அழுது நாங்கள் பார்க்கவில்லை. ஹம்ஜா (ரழி)
அவர்களைக் கிப்லாவின் திசையில் வைத்து அவரது ஜனஸாவுக்கு முன் நபியவர்கள்
நின்றார்கள். அப்போது தனது சிறிய தந்தைக்கு ஏற்பட்டதை எண்ணி நபியவர்கள்
அதிகமாக அழுதார்கள்" (முக்தஸர் ஸீரத்துர்ரஸ_ல்)
போரில் உயிர்நீத்த தியாகிகளின் காட்சி முஸ்லிம்களது உள்ளங்களை கசக்கி பிழிந்தது¢
கண்களை குளமாக்கியது¢ தியாகிகளின் உடல்களை மறைப்பதற்குப் போதுமான துணிகள்
கிடைக்கவில்லை. ஹம்ஜா (ரழி) அவர்களைப் போர்துவதற்கு கருப்பு, வெள்ளை நிறக்
கோடுகள் உள்ள ஒரு போர்வையைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அப்போர்வையில்
அவரது தலையை மறைத்தால் பாதங்கள் தெரிந்தன¢ பாதங்களை மறைத்தால் தலை
தெரிந்தது. பிறகு தலை மறைக்கப்பட்டு, கால்கள் 'இத்கிர்" என்ற செடியால் மூடப்பட்டன.
(முஸ்னது அஹ்மது, மிஷ்காத்)
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) கூறுகிறார்கள்: 'முஸ்அப் (ரழி) கொல்லப்பட்டார்.
அவர் என்னை விட மிகக் சிறந்தவர். அவர் உடலை ஒரு சிறிய போர்வையால்தான்
போர்த்தப்பட்டது. அவரது தலைப் பக்கம் துணியை இழுத்தால் கால்கள் தெரிந்தன.
கால்களின் பக்கம் துணியை இழுத்தால் தலை தெரிந்தது. இந்நிலையைப் பார்த்த நபி (ஸல்)
அவர்கள் 'அப்போர்வையால் அவரது தலையை மறைத்து, அவரது காலுக்கு 'இத்கிர்"
என்ற செடியைப் போர்த்தி விடுங்கள்" என்று கூறினார்கள். (ஸஹீஹ{ல் புகாரி)
நபியவர்களின் பிரார்த்தனை
உஹ{த் மைதானத்திலிருந்து எதிரிகள் சென்றுவிட்ட போது எங்களிடம் நபி (ஸல்)
அவர்கள் 'நீங்கள் வரிசையாக நில்லுங்கள்¢ கண்ணியத்திற்கும் மகிமைக்கும் உரித்தான
எனது இறைவனை நான் புகழ வேண்டும்" என்று கூறினார்கள். நாங்கள் நபியவர்களுக்குப்
பின் பல அணிகளாக நின்று கொண்டோம்.
அதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்:
'அல்லாஹ்வே! புகழெல்லாம் உனக்கே உரித்தானது. நீ விரித்ததை மடக்குபவர் யாரும்
இல்லை. நீ மடக்கியதை விரிப்பவர் யாரும் இல்லை. நீ வழிகேட்டில் விட்டவருக்கு
நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை. நீ நேர்வழி காட்டியவரை வழிகெடுப்பவர் யாரும்
இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாரும் இல்லை. நீ கொடுத்ததைக் தடுப்பவர் யாரும்
இல்லை. நீ நெருக்கமாக்கி வைத்ததை தூரமாக்கி வைப்பவர் யாருமில்லை. அல்லாஹ்வே!
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:07 pm

உனது வளங்கள், உனது கருணை, உனது கிருபை, உனது இரணம் ஆகியவற்றை நீ
எங்களுக்கு விசாலமாக வழங்குவாயாக!
அல்லாஹ்வே! நீங்காத, அகன்று போகாத, நிரந்தரமான அருட்கொடையை உன்னிடம்
கேட்கிறேன். அல்லாஹவே! சிரமமான நேரத்தில் உதவியையும், பயத்தின் நேரத்தில்
பாதுகாப்பையும் உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வே! நீ எங்களுக்கு கொடுத்தவற்றின்
தீங்கிலிருந்தும், நீ எங்களுக்கு கொடுக்காதவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு
தேடுகிறேன். அல்லாஹ்வே! எங்களுக்கு ஈமானை (இறைநம்பிக்கையை) பிரியமாக்கி வை.
அதை எங்களது உள்ளங்களில் அலங்கரித்து வை. இறை நிராகரிப்பு, உனது கட்டளைக்கு
மாறுசெய்வது, எனக்குக் கட்டுப்படாமல் விலகிப்போவது ஆகியவற்றை எங்களுக்கு
வெறுப்பாக்கி விடு. எங்களைப் பகுத்தறிவாளர்களில் ஆக்கிவிடு. அல்லாஹ்வே! எங்களை
முஸ்லிம்களாக மரணிக்க வை! முஸ்லிமகளாக எங்களை வாழச் செய்!
நஷ்டமடையாதவர்களாக, சோதனைக்குள்ளாகாதவர்களாக எங்களை நல்லோர்களுடன்
Pயபந 289 ழக 518
சேர்த்து வை! அல்லாஹ்வே! உனது தூதர்களைப் பொய்யாக்கி, உனது வழியிலிருந்து
தடுக்கும் நிராகரிப்பாளர்களை நீ அழித்துவிடு! அவர்கள் மீது உனது தண்டனையையும்
வேதனையையும் இறக்குவாயாக! அல்லாஹ்வே! வேதம் கொடுக்கப்பட்டவர்களில் இருக்கும்
நிராகரிப்பாளர்களை நீ அழித்துவிடு! உண்மையான இறைவனே!" (அல்அதபுல் முஃப்ரத்,
முஸ்னத் அஹ்மது)
மதீனா திரும்புதல் அன்பு மற்றும் தியாகத்தின் அற்புதங்கள்
தியாகிகளை அடக்கம் செய்து, அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனிடம் பிரார்த்தனை புரிந்த
பின், நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பினார்கள். போர் நடந்து கொண்டிருந்த போது
இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள் புறத்தில் நிகழ்ந்ததைப் போன்று, திரும்பும் வழியில்
இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் புறத்திலும் பல அற்புத நிகழ்ச்சிகள் நடந்தன.
ஹம்னா பின்த் ஜஹ்ஷ் எனும் பெண்மணி நபி(ஸல்) அவர்களை வழியில் சந்தித்தார்.
அவரிடம் அவருடைய சகோதரர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் மரணமான செய்தி
கூறப்பட்டது. அவர் 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவ+ன்" என்று கூறி,
அவருக்காக பாவ மன்னிப்புத் தேடினார். பின்பு அன்னாரின் தாய்மாமன் ஹம்ஜா (ரழி)
இறந்த செய்தியும் கூறப்பட்டது. அதற்கும் அவர் 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி
ராஜிவூன்" என்று கூறி பாவ மன்னிப்புத் தேடினார். பின்பு அவரது கணவர் முஸ்அப்
இப்னு உமைர் (ரழி) இறந்த செய்தி கூறப்படவே, அவர் தேம்பி அழலானார். அப்போது நபி
(ஸல்) அவர்கள் 'ஒரு பெண்ணின் கணவன் அவளிடம் நீங்காத இடத்தைப்
பெற்றிருக்கிறான்" என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
தீனார் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை முஸ்லிம்கள் வழியில் சந்தித்தார்கள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:07 pm

அந்தப்
பெண்ணின் கணவரும், சகோதரரும், தந்தையும் போரில் கொல்லப்பட்டிருந்தார்கள்.
இவர்களின் மரணச் செய்தியை முஸ்லிம்கள் அவருக்குக் கூறினார்கள். ஆனால்,
அப்பெண்மணி 'அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்?" என்று கேட்டார்.
முஸ்லிம்கள் 'இன்னாரின் தாயே! நீர் விரும்பியதைப் போன்று நபியவர்கள் நல்ல
முறையில் இருக்கிறார்கள். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!" என்று கூறினார்கள். அதற்கு
அந்தப் பெண் 'எனக்கு அவர்களைக் காட்டுங்கள். நான் அவர்களைப் பார்க்கவேண்டும்"
என்றார். நபியவர்களைக் கண்குளிர பார்த்தப் பிறகு 'உங்களைப் பார்த்தப் பின்னால் எல்லா
துன்பங்களும் எங்களுக்கு இலகுவானதே!" என்று அப்பெண்மணி கூறினார்.
வழியில் நடந்த மற்றொரு நிகழ்ச்சி: நபி (ஸல்) அவர்களை ஸஅது இப்னு முஆதின்
தாயார் சந்தித்தார்கள். ஷஅது நபியவர்களுடைய குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தவாராக
நடந்து வந்து கொண்டிருந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! இதோ... எனது தாய் வருகிறார்"
என்றார். நபியவர்கள் 'நல்லபடியாக வரட்டும்" கூறி அவருக்காக நின்றார்கள. அவர்
அருகே வந்தவுடன் அவரது மகன் அம்ர் இப்னு முஆத் (ரழி) இறந்ததற்கு ஆறுதல்
கூறினார்கள். அதற்கு அப்பெண்மணி 'நபியே! உங்களை நல்ல நிலையில் பார்த்தவுடன்
மற்ற அனைத்து சோதனைகளையும் நான் சிறியதாகவே கருதுகிறேன்" என்று கூறினார்.
பின்பு நபியவர்கள் உஹ{த் போரில் கொல்லப்பட்டவர்களுக்காக பிரார்த்னை செய்துவிட்டு
'ஸஅதின் தாயே! நீர் நற்செய்தி பெற்றுக்கொள்! உஹ{தில் கொல்லப்பட்டவர்களின்
குடும்பத்தார்களுக்கு நற்செய்தி சொல்! அவர்கள் அனைவரும் சொர்க்கத்தில் தோழர்களாக
உலவுகின்றனர். அவர்கள் குடும்பத்தார்களுக்காகவும் அவர்களின் பரிந்துரை
ஏற்றுக்கொள்ளப்படும்" என்றார்கள். இதை கேட்ட ஸஅதின் தாயார் 'அல்லாஹ்வின்
தூதரே! நாங்கள் பொருந்திக்கொண்டோம். மகிழ்ச்சி அடைந்தோம். இதற்க்குப் பின் யார்
அவர்களுக்காக அழுவார்கள்! என்று கூறி, மேலும் 'அல்லாஹ்வின் தூதரே!
எஞ்சியிருக்கும் அவர்களது உறவினர்களுக்காக நீங்கள் பிரார்த்னை புரியுங்கள்" என்றார்.
நபியவர்கள் 'அல்லாஹ்வே! இவர்களின் மனக் கவலையைப் போக்குவாயாக! இவர்களது
Pயபந 290 ழக 518
சோதனைகளை நிவர்த்தி செய்வாயாக! எஞ்சி உள்ளவர்களுக்கு அழகிய பகரத்தைத்
தருவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். (அஸ்ஸீரத்துல் ஹல்பிய்யா)
ஹிஜ்ரி 3 ஷவ்வால் மாதம், பிறை 7 சனிக்கிழமை மாலை நபி(ஸல்) அவர்கள் மதீனா
வந்தடைந்தார்கள்.
பிறகு குடும்பத்தாரைச் சந்தித்து தனது வாளை மகள் பாத்திமாவிடம் கொடுத்து
'இதிலிருந்து இரத்தத்தைக் கழுவி வை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது எனக்கு
இன்று உண்மையாக உழைத்தது" என்றார்கள். பின்பு அலியும் தனது வாளை
பாத்திமாவிடம் கொடுத்து 'இதனை கழுவி இதிலிருந்து இரத்தத்தை அகற்றிவிடு.
அல்லாஹ்வின் மீது ஆனையாக! இன்றைய தினம் இது எனக்கு உண்மையாக
தொண்டாற்றி விட்டது" என்றார்கள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:07 pm

'நீ போரில் உண்மையாக தொண்டாற்றியதைப்
போலவே உன்னுடன் ஸஹ்ல் இப்னு ஹ{னைஃப் மற்றும் அபூ துஜானாவும் உண்மையாக
தொண்டாற்றினார்கள்" என்றார்கள். (இப்னு ஹிஷாம்)
முஸ்லிம்களில் எழுபது நபர்கள் கொல்லப்பட்டார்கள் என்று பெரும்பாலான அறிவிப்புகள்
கூறுகின்றன. அதன் விவரமாவது:
முஹாஜிர்களில் 4 நபர்கள்¢ யூதர்களில் 1 நபர்¢ கஸ்ரஜ் இனத்தவர்களில் 41 நபர்கள்¢
அவ்ஸ் இனத்தவர்களில் 24 நபர்கள். (மொத்தம் 70 நபர்கள்)
இணைவைப்பவர்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை இப்னு இஸ்ஹாக் (ரஹ்)
இருபத்து இரண்டு என்று கூறுகிறார். ஆனால், போர் சம்பந்தபட்ட அறிவிப்புகள்
அனைத்தையும் நன்கு ஆராய்ந்து பார்க்கும்போது முப்பத்து ஏழு பேர்கள்
கொல்லப்பட்டார்கள் என்று தெரிகிறது, உண்மையை அல்லாஹ்வே அறிவான் (இப்னு
ஹிஷாம், ஃபத்ஹ{ல் பாரி)
மதீனாவில் அவசர நிலை
ஹிஜ்ரி 3 ஷவ்வால் 8, ஞாயிறு இரவு உஹ{திலிருந்து திரும்பிய பின் களைப்பும்
அசதியும் எவ்வளவுதான் அதிகமாக இருந்தும் முஸ்லிம்கள் பாதூகாப்புடனே அன்றிரவை
கழித்தனர். அதாவது, மதீனாவின் தெருக்களிலும், அதன் வாயில்களிலும் வீரர்கள்
பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். நபி(ஸல்) அவர்களின் பாதுகாப்பிலும் ஒரு பிரிவினர்
ஈடுபட்டிருந்தனர். எத்திசையிலிருந்தும் எதிரிகள் மூலம் ஆபத்து நிகழலாம் என்று
அவர்கள் சந்தேகப்பட்டதால் இவ்வாறு விழிப்புணர்வுடன் இருந்தனர்.
'ஹம்ராவுல்" அஸத் போர்
நபி(ஸல்) அவர்கள் நிலைமையை யோசித்தவாறே அன்றிரவைக் கழித்தார்கள். போரில்
தங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என குறைஷிகள் சிந்திக்கத் தொடங்கினால்,
அதற்காக கைசேதம் அடைந்து மதீனாவின் மீது இரண்டாவது முறை போர் தொடுக்க
திரும்பி வரலாம் என்று நபியவர்கள் யோசித்தார்கள். எனவே, எதிரிகளைப் பின்தொடர்ந்து
சென்று மதீனாவின் எல்லைகளை விட்டே விரட்டியடிக்க வேண்டுமென்று முடிவு
செய்தார்கள்.
இது குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதின் சுருக்கமாவது:
Pயபந 291 ழக 518
உஹ{த் போர் முடிந்து அடுத்த நாள் காலை, அதாவது ஹிஜ்ரி 3, ஷவ்வால் 8 ஞாயிற்றுக்
கிழமை காலை, நபி(ஸல்) அவர்கள் எதிரிகளைச் சந்திப்பதற்கு முஸ்லிம்கள் ஆயத்தமாக
இருக்க வேண்டுமெனக் கூறினார்கள். மேலும், உஹ{த் போரில் கலந்தவர்கள்தான்
தங்களுடன் வர வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தார்கள். அப்துல்லாஹ் இப்னு உபை
நானும் வருகிறேன் என்றான். நபியவர்கள் வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள்.
முஸ்லிம்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்பட்டிருந்த காயம், களைப்பு எதையும்
பொருட்படுத்தாமல் நபியவர்களின் அழைப்புக்கு 'அல்லாஹ்வின் தூதரே! நாங்கள்
உங்களுக்குக் கட்டுப்பட்டோம். உங்களது கட்டளையை ஏற்றுக் கொண்டோம்" என்று
பதிலளித்தார்கள்.
அப்போது ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) எனும் தோழர் 'அல்லாஹ்வின் தூதரே!
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:07 pm

நீங்கள் கலந்து கொள்ளும் அனைத்து போரிலும் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று
நிச்சயமாக விரும்புகிறேன். ஆனால், எனது தந்தை உஹ{த் போருக்கு செல்லும் போது
எனது சகோதரிகளின் பாதுகாப்புக்காக என்னை விட்டுச் சென்றார்கள். அதனால்தான் நான்
தங்கினேன். எனவே, எனக்கு இப்போது உங்களுடன் போரில் கலந்து கொள்ள அனுமதி
அளியுங்கள்" என்று கூறவே நபியவர்கள் அனுமதி வழங்கினார்கள்.
நபி(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் மதீனாவிலிருந்து 8 மைல்கள் தூரமுள்ள 'ஹம்ராவுல்
அஸத்" என்ற இடத்திற்கு வந்து முகாமிட்டார்கள். அங்கு குஜாஆ வமிசத்தைச் சேர்ந்த
'மஅபத் இப்னு அபூமஅபத்" என்பவர் நபியவர்களிடம் வந்து இஸ்லாமைத் தழுவினார்.
(சிலர் அவர் இணைவைப்பவராகத்தான் இருந்தார். இருப்பினும் குஜாஆ மற்றும் ஹாஷிம்
ஆகிய இரு கிளையினருக்கும் இருந்த நட்பின் காரணமாக நபியவர்களிடம் வந்தார் என்று
கூறுகின்றனர். ஆக) அவர் நபியவர்களிடம் 'அல்லாஹ்வின் மீது ஆனையாக! உமது
தோழர்களுக்கு ஏற்பட்ட நிலை எங்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அல்லாஹ்
உங்களுக்க சுகம் அளிக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நான் ஏதாவது
உங்களுக்கு செய்ய வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் 'நீ அபூ
ஸ{ஃப்யானிடம் சென்று அவரை எங்களை விட்டும் திருப்பிவிடு" என்றார்கள்.
எதிரிகள் மதீனாவிற்குக் திரும்ப வரவேண்டுமென யோசிப்பார்கள் என்று நபி(ஸல்)
அவர்கள் பயந்தது உண்மையாகவே நடந்தது. எதிரிகள் மதீனாவிற்கு 36 மைல்கள்
தொலைவிலுள்ள 'ரவ்ஹா" என்ற இடத்தை அடைந்த போது தங்களுக்குள் ஒருவர்
மற்றவரை பழித்துக் கொண்டனர். சிலர் சிலரைப் பார்த்து 'நீங்கள் என்ன செய்தீர்கள்¢
ஒன்றுமே செய்யவில்லை¢ அவர்களில் சில வீரர்களைத்தான் கொன்றுள்ளீர்கள்¢ அவர்களின்
தலைவர்கள் மீதமிருக்கிறார்கள்¢ அவர்கள் உங்களுடன் போர் செய்ய மக்களை அழைத்து
வரலாம்¢ திரும்புங்கள்¢ நாம் அவர்களிடம் சென்று அவர்களது ஆற்றல் அனைத்தையும்
அடியோடு அழித்து வருவோம்" என்றனர்.
இணைவைப்பவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இரு தரப்பாரின் வலிமையையும்
ஆற்றலையும் சரியாக ஒப்பிட்டு பார்க்காதவர்கள்தான் அவ்வாறு ஆலோசனை சொல்லி
இருப்பார்கள். ஆகவேதான், உண்மை நிலையை புரிந்த அவர்களின் மிக முக்கிய
தலைவர்களில் ஒருவனான ஸஃப்வான் இப்னு உமைய்யா இந்த கருத்தை ஏற்றுக் கொள்ள
மறுத்த 'எனது கூட்டத்தினரே! அவ்வாறு நீங்கள் செய்யாதீர்கள். உஹ{த் போரில் கலந்து
கொள்ளாமல் தங்கிவிட்ட முஸ்லிம்களெல்லாம் ஒன்று சேர்ந்து உங்களைத் தாக்கக்கூடும்
என நான் பயப்படுகிறேன்¢ நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள். வெற்றி உங்களுக்குத்தான்
கிடைத்துள்ளது. நீங்கள் மீண்டும் மதீனா சென்றால் அவர்கள் வெற்றி பெற்று நீங்கள்
தோற்றுவிடுவீர்களோ என் நான் அஞ்சுகிறேன்" என்றான். இவனது ஆலோசனையை
பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்ளவில்லை.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:08 pm

மதீனாவிற்கு மீண்டும் செல்ல வேண்டும் என முடிவெடுத்து அபூ ஸ{ஃப்யான் தனது
படையோடு கிளம்புவதற்கு ஆயத்தமாகும் போது அபூ ஸ{ஃப்யானிடம் மஅபத் இப்னு மஅபத்
வந்தார். அபூ ஸ{ஃப்யானுக்கு அவர் முஸ்லிமானது தெரியாது. அவர் 'மஅபதே! ஏதாவது
செய்தி இருக்கிறதா?" என்றார். அதற்கு மஅபத் ஒரு பெரிய கற்பனையான போரை அபூ
ஸ{ஃப்யானின் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார். அதாவது 'அபூ ஸ{ஃப்யானே!
முஹம்மது தனது தோழர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு மதீனாவை விட்டு
புறப்பட்டு விட்டார். நான் இதுவரை பார்திராத ஒரு ராணுவத்துடன் அவர் உன்னைத் தேடி
வருகிறார். அவர்கள் உன் மீது நெருப்பாய் பற்றி எரிகிறார்கள். அன்றைய உஹ{த் போரில்
கலந்து கொள்ளாதவர்கௌல்லாம் அவருடன் சேர்ந்து இப்போது புறப்பட்டுள்ளனர். தாங்கள்
நழுவவிட்ட ஒரு சந்தர்ப்பத்தை எண்ணி மிகுந்த வருத்தத்துடன் வருகின்றனர். உங்களுக்கு
எதிராக அவர்களிடம் இருக்கும் கோபத்தைப் போன்று நான் பார்த்ததே இல்லை" என்று
கூறினார்.
இதைக் கேட்ட அபூ ஸ{ஃப்யான் 'உனக்கு நாசம் உண்டாகட்டும். நீ என்ன சொல்கிறாய்?"
என்று அதிர்ந்தார். அதற்க்கு அவர் 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ இங்கிருந்து
அவர்களை நோக்கி பயணித்தால் வெகு விரைவில் அவர்களுடைய குதிரைகளைக் காண்பாய்"
என்றார். (அல்லது இந்தக் காட்டுக்குப் பின்புறத்திலிருந்து முஸ்லிம்களுடைய படையின் முதல்
படை வருவதை நீ பார்க்கப் போகிறாய் என்றார்). அதற்கு அபூ ஸ{ஃப்யான் 'அல்லாஹ்வின்
மீது ஆணையாக! அவர்களை வேரோடு அழிக்க வேண்டுமென்று நாங்கள் எங்களின் முழு
ஆற்றலையும் ஒன்று சேர்த்திருக்கிறோம்" என்றார். அதற்க 'அவ்வாறு நீ செய்யாதே! நான்
உனக்கு உனது நன்மையை நாடி இதைக் கூறுகிறேன். நீ திரும்புவதுதான் உனக்கு நல்லது"
என்றார் மஅபத்.
மஅபத் தந்த தகவலால் எதிரிகளின் நம்பிக்கையும் வீரமும் தளர்ந்து, பயமும் திடுக்கமும்
அவர்களை ஆட்கொண்டது. மக்காவிற்குத் திரும்புவதுதான் தங்களுக்கு ஏற்றமானது என்று
கருதினர். இருப்பினும் முஸ்லிம் படைகள் தங்களை விரட்டி வருவதை நிருத்திக் கொள்ள
வேண்டுமென்பதற்காக இஸ்லாமிய படைக்கு எதிராக ஒரு பொய் பிரச்சாரப் போரை அபூ
ஸ{ஃப்யான் தூண்டிவிட்டார். அதாவது, மதீனா சென்று கொண்டிருந்த அப்துல் கைஸ்
கிளையினர் இவர்களை வழியில் பார்த்த போது அவர்களிடம் 'நான் கூறும் செய்தியை என்
சார்பாக முஹம்மதுக்கு எட்ட வைப்பீர்களானால் நீங்கள் மக்கா வரும் போது 'உக்காள்"
கடைத் தெருவில் உங்களின் ஒட்டகம் சுமை தாங்கமளவிற்கு நான் காய்ந்த திராட்சையை
தருவேன்" என்று அபூ ஸ{ஃப்யான் கூற அவர்கள் 'சரி" என்றனர். 'முஹம்மதையும் அவரது
தோழர்களையும் வேரோடு அழிக்க நாங்கள் முழு ஆற்றலையும் ஒன்று திரட்டி வருகிறோம்
என்ற செய்தியை முஹம்மதுக்கு சொல்லிவிடுங்கள்" என்று அபூ ஸ{ஃப்யான் கூறினார்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:08 pm

அந்த வியாபாரக் கூட்டம் நபி(ஸல்) அவர்களிடமும் நபித்தோழர்களிடமும் வந்து அபூ
ஸ{ஃப்யான் தாங்களிடம் கூறி அனுப்பிய செய்தியைக் கூறினர். அப்போது நபியவர்களும்
நபித்தோழர்களும் ஹம்ராவுல் அஸத் என்ற இடத்தில் தங்கியிருந்தனர். இதைப் பற்றித்தான்
அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.
மக்களில் சிலர் அவர்களிடம்¢ 'திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்)
திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று கூறி
(அச்சுறுத்தி)னர்¢ ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது:
'அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்"
என்று அவர்கள் கூறினார்கள். இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும்
(அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்¢ எத்தகைய தீங்கும்
அவர்களைத் தீண்டவில்லை¢ (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப்
பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான். அல்குர்அன்
3:173-174
Pயபந 293 ழக 518
ஆனால், இவர்களுடைய பேச்சை நபியவர்களும் முஸ்லிம்களும் பொருட்படுத்தவில்லை.
எதிரிகளை எதிர்பார்த்து (ஹிஜ்ரி 3) ஷவ்வால் பிறை 9, 10, 11 திங்கள், செவ்வாய், புதன்
ஆகிய மூன்று நாட்கள் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுடன் ஹம்ராவுல் அஸதில்
தங்கியிருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை பிறை 8ல் ஹம்ராவுல் அஸதிற்கு வந்து சேர்ந்தார்கள்
என்பதை நாம் முன்பே கூறியிருக்கின்றோம். அப்போது அபூ இஜ்ஜா அல் ஜுமஹி
என்பவனை நபியவர்கள் கைது செய்தார்கள். ஏற்கனவே பத்ர் போரில் கைது செய்யப்பட்டிருந்த
இவனை நபியவர்கள் அவன் ஏழை, அவனுக்கு பெண் பிள்ளைகள் அதிகம் இருக்கின்றனர்
என்ற காரணத்தால் அவன் மீது கருணை காட்டி அவனை உரிமையிட்டு தனக்கு எதிராக
செயல்படக்கூடாது என்று அவனிடம் ஒப்பந்தம் வாங்கினார்கள். ஆனால், அவன் அந்த
ஒப்பந்தத்தை மீறி உஹ{த் போரிலும் கலந்து கொண்டதால் நபியவர்கள் அவனை கைது
செய்தார்கள். அவன் நபியவர்களிடம் 'முஹம்மதே! என்னை மன்னித்துவிடும். என்மீது
உபகாரம் செய். எனது பெண் பிள்ளைகளுக்காக என்னை நீ விட்டுவிடு. நான் இப்போது
செய்ததைப் போன்று இனி எப்போதும் செய்ய மாட்டேன் என்று உங்களுக்க வாக்குறுதி
தருகிறேன்" என்றான். ஆனால், நபியவர்கள் 'இதற்குப் பின் நீ மக்காவிற்கு சென்று
முஹம்மதை இருமுறை நான் ஏமாற்றிவிட்டேன் என்று கூறும் நிலைமை (எனக்கு)
ஏற்படக்கூடாது. ஏனெனில் இறைநம்பிக்கையாளன் ஒரு புற்றில் இருமுறை தீண்டப்பட
மாட்டான். (அதாவது ஒரு தவறை மறுமுறை செய்யமாட்டார்) என்று கூறிவிட்டு ஜுபைர்
அல்லது ஆஸிம் இப்னு ஸாபித்திடம் அவனது தலையை துண்டிக்கக் கூறினார்கள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:08 pm

இவ்வாறே எதிரிகளின் ஒற்றர்களில் ஒருவனான முஆவியா இப்னு முகீரா இப்னு அபுல்
ஆஸையும் கொன்றுவிட நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (இவன் பிற்காலத்தில் வந்த
முஸ்லிம் மன்னர் அப்துல் மலிக் இப்னு மர்வானின் தாய்வழி பாட்டனாவான்.)
இதன் விவரமாவது: இணைவைப்பவர்கள் உஹ{த் போர் முடிந்து மக்காவிற்கு திரும்புகையில்
இவன் தனது ஒன்றுவிட்ட சகோதரர் உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்களைப் பார்க்க
மதீனாவிற்கு வந்தான். உஸ்மான் (ரழி) நபியவர்களிடம் இவனுக்கு பாதுகாப்புக் கொடுக்கும்படி
கேட்டார்கள். நபியவர்கள் அவனுக்கு பாதுகாப்புக் கொடுத்துவிட்டு மூன்று நாட்கள் மட்டும்
தங்கவேண்டும், அதற்கு மேல் இங்கு தங்கியிருந்தால் கொன்றுவிடுவோம் என்று எச்சரிக்கை
விடுத்தார்கள். இஸ்லாமியப் படை மீண்டும் (அல்லது இரண்டாம் முறை) மதினாவில் இருந்து
வெளியேறியதற்குப் பின் இவன் மூன்று நாட்களுக்கு மேலாகவும் மதீனாவில் தங்கியிருந்து
குறைஷிகளுக்காக உளவு வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இஸ்லாமியப் படை
மதீனாவிற்குத் திரும்ப வருகிறது என்று தெரிந்தவுடன் அவன் மதீனாவிலிருந்து தப்பித்து
ஓடினான். அவனைக் கொலை செய்து வரும்படி நபி(ஸல்) ஜைது இப்னு ஹாரிஸா, அம்மார்
இப்னு யாசிர் (ரழி) ஆகிய இருவரையும் அனுப்பினார்கள். அவ்விருவரும் அவனைக் கொன்று
வந்தார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
ஹம்ராவுல் அஸத் என்ற இந்த போர் ஒரு தனி போரல்ல. மாறாக, உஹ{த் போரின் ஒரு
தொடர்ந்தான். உஹ{த் போரின் ஒரு முடிவுரை என்றும் இதை நாம் சொல்லலாம்.
இதுவரை உஹ{த்ப் போரின் அனைத்து விவரங்களையும் நிலைமைகளையம் நிகழ்வுகளையும்
தேவையான அளவு அலசினோம். இந்த போரின் முடிவு முஸ்லிம்களுக்கு வெற்றியா
தோல்வியா என்பதைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலர் மிக நீண்ட ஆராய்ச்சி
செய்திருக்கின்றார்கள். போரின் இரண்டாவது கட்டத்தில் எதிரிகளின் தாக்குதலே
ஓங்கியிருந்தது. முஸ்லிம்களுக்கு உயிர் சேதம் அதிகம். முஸ்லிம்களில் ஒரு பிரிவினர்
முற்றிலும் தோற்றுவிட்டனர். போரின் அனைத்து நிலைகளும் மக்காவினருக்கே சாதகமாக
அமைந்தன. இருப்பினும் இதை எல்லாம் வைத்து போரில் வெற்றி அவர்களுக்கு கிடைத்து
விட்டது என்று நாம் கூறமுடியாது.
அதற்கான காரணங்கள்: எதிரிகள் முஸ்லிம்களின் ராணுவ முகாம்களை இறுதிவரை கைப்பற்ற
முடியவில்லை. முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் போரிலிருந்து பின்வாங்கவில்லை.
கடினாமான சோதனையும் எதிரிகளின் ஆதிக்கமும் ஏற்பட்டிருந்தும் கூட புறமுதுகுக்
Pயபந 294 ழக 518
காட்டாமல் தங்களது தலைமையின் கீழ் ஒன்று சேர்ந்து வீரத்துடன் எதிர்த்தனர். முஸ்லிம்களை
எதிரிகள் விரட்டியடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை. முஸ்லிம்களிலிருந்து
எவரும் எதிரிகளிடம் கைதியாகவில்லை. எதிரிகள் முஸ்லிம்களின் உடைமைகளில்
எவற்றையும் கைப்பற்ற இயலவில்லை. போர்க் களத்திலிருந்து எதிரிகளே முதலில்
வெளியேறினர். முஸ்லிம்கள் அங்கேயே இருந்தனர். போரில் வெற்றி பெற்றவர்கள் ஒன்றிரண்டு
நாட்கள் அந்த மைதானத்திலேயே அக்கால வழக்கப்படி தங்கியிருப்பது போன்று எதிரிகள்
மைதானத்தில் தங்கியிருக்கவில்லை. மதீனாவில் நுழைந்து அங்குள்ள செல்வங்களையும்
பிள்ளை குட்டிகளையும் சூறையாட அவர்களுக்குத் துணிவு பிறக்கவில்லை.
போர்களத்திலிருந்து மதீனா மிக அருகாமையில் எவ்வித பாதுகாப்புமில்லாமல் காலியாக
இருந்தும் கூட அவர்களுக்கு அங்கு செல்ல துணிவு பிறக்கவில்லை.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:08 pm

இதன் மூலம் நமக்கு உறுதியாக தெரிய வருவது என்னவெனில், முஸ்லிம்களுக்குப் பெரிய
நஷ்டம் ஏற்படுத்தும் அளவுக்குண்டான ஒரு சந்தர்ப்பம்தான் அவர்களுக்குக் கிடைத்தது.
எனினும், முஸ்லிம்களைச் சுற்றி வளைத்து, முற்றிலும் அழித்து, ஒழிக்க வேண்டும் என்ற
தங்களது நேர்க்கத்தில் தோல்வியைத்தான் கண்டார்கள். முஸ்லிம்களுக்காக ஏற்பட்ட
இதுபோன்ற நஷ்டங்கள் பெரும்பாலான சமயங்களில் போரில் வெற்றி பெறும் படையினருக்கும்
ஏற்பட்டிருக்கிறது. ஆனால், முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இந்த நஷ்டத்தைக் கவனித்து
எதிரிகளுக்கு இப்போரில் வெற்றி கிடைத்தது என்று சொல்ல முடியாது.
மேலும், அபூ ஸ{ஃப்யான் போர்க்களத்தை விட்டு விரைவாக திரும்பி செல்வதிலேயே குறியாக
இருப்பது, போர் தொடர்ந்தால் தங்களுக்கு தோல்வியும் இழிவும் ஏற்படும் என்று அவர் பயந்து
விட்டார் என்பதையே நமக்க உறுதி செய்கிறது. அடுத்ததாக ஹம்ராவுல் அஸத் போர்
விஷயத்தில் அபூ ஸ{ஃப்யானின் நிலைமையைப் பாhக்கும் போது இது மேலும் உறுதியாகிறது.
ஆகவே, இந்த போரைப் பொறுத்த வரை இருசாராரில் ஒவ்வொருவருக்கும் ஒரளவு வெற்றியும்
தோல்வியும் ஏற்பட்டது¢ இவ்வாறே இரு படையினரும் மைதானத்திலிருந்து புறமுது காட்டி
ஓடவில்லை¢ தங்களது முகாம்களை எதிரிகள் ஆக்கிரமித்துக் கொள்வதற்குச் சந்தர்ப்பம்
அளிக்காமல் போரிலிருந்து தாங்களாகவே ஒதுங்கிக் கொண்டனர்.
இதைத்தான் அல்லாஹ் பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறான்.
மேலும், (பகைக்) கூட்டத்தைத் தேடிச் செல்வதில் ஊக்கம் குன்றாதீர்கள்¢ நீங்கள் (போரில்)
துன்பப்படுவீர்களானால், நிச்சயமாக அவர்களும் உங்களைப் போன்றே துன்பப்படுகிறார்கள்
- அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காத (நற்கூலியும் வெற்றியும்) நீங்கள்
எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும்
இருக்கின்றான். அல்குர்ஆன் 4:104
இந்த வசனத்தில் இரு படையினரில் ஒவ்வொருவரையும் மற்றவருக்கு ஒப்பாகவே
கூறுகிறான். அதாவது, அவர்களால் உங்களுக்கு எப்படி வேதனை ஏற்பட்டதோ அவ்வாறே
உங்களால் அவர்களுக்கும் வேதனை ஏற்பட்டது. இதிலிருந்து இருவரின் நிலைமைகளும்
ஒன்றுக்கொன்று ஒப்பாகவே இருந்தன. வெற்றியின்றியே இரு சாராரும் மைதானத்திலிருந்து
திரும்பினர் என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்.
இப்போர் குறித்து குர்ஆன் பேசுகிறது
இப்போர் தொடர்பான முக்கியக் கட்டங்கள் ஒவ்வொன்றையும் குர்ஆன் மிகத் தெளிவாக
விவரிக்கிறது. முஸ்லிம்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதற்கான காரணங்களையும்
குர்ஆன் மிகத் தெளிவாக கூறுகிறது. முஸ்லிம்களின் ஒரு சாராரிடம் இருந்த
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:09 pm

பலவீனங்களையும் குர்ஆன் வெளிப்படுத்தியது. இதுபோன்ற இக்கட்டான நிலைமைகளில்
முஸ்லிம்களின் கடமைகள், இந்த சமுதாயம் உருவாக்கப்பட்டதன் உயர்ந்த அடிப்படை
நோக்கங்கள், படைக்கப்பட்ட சமுதாயங்களில் இதுவே மிகச் சிறந்த சமுதாயம் என்பதால்
மற்ற சமுதாயத்தை விட இந்த சமுதாயத்திடம் இருக்க வேண்டிய உயர்ந்த பண்புகள், சில
முஸ்லிம்களிடம் இருந்த பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளையும் குர்ஆன் கோடிட்டது.
(1) இதுபோன்ற கடுஞ்சோதனையின் போது முஸ்லிம்கள் மேற்கொண்டிருக்க வேண்டிய
கடமைகள், (2) இச்சமுதாயம் உருவான உயர்ந்த அடிப்படை நோக்கங்கள், (3) மற்ற
சமுதாயத்தை விட மிகச் சிறந்த சமுதாயமாக விளங்குபவர்களிடம் இருக்க வேண்டிய சீரிய
பண்புகள் ஆகிய இம்மூன்றையும் முன்வைத்து பார்க்கும்போது முஸ்லிம்களிடம் அந்த
குறைபாடுகளும் பலவீனங்களும் இருந்திக்கக் கூடாது என்று குர்ஆன் உணர்த்துகிறது.
இவ்வாறே நயவஞ்சகர்களின் நிலைமையைப் பற்றி குர்ஆன் விவரிக்கிறது. அல்லாஹ்வின்
மீதும், அவனது தூதரின் மீதும், நயவஞ்சகர்கள் உள்ளத்தில் கொண்டிருந்த வஞ்சகத்தை
வெளிப்படுத்தி அவர்களை இழிவடையச் செய்தது. யூதர்களும், நயவஞ்சகர்களும் பரப்பி
வந்த சந்தேகங்களையும், உறுதி குறைந்த முஸ்லிம்களின் உள்ளத்திலிருந்த
சந்தேகங்களையும் குர்ஆன் அகற்றியது. மேலும், இந்த போரினால் ஏற்படவிருக்கும் நல்ல
முடிவுகளையும் அதிலுள்ள நுட்பங்களையும் குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது. இப்போரைப்
பற்றி அத்தியாயம் ஆல இம்ரானில் அறுபது வசனங்கள் அருளப்பட்டன. அதில் போரின்
தொடக்கதிலிருந்து இறுதி வரை நடந்த அனைத்தும் விவரிக்கப்பட்டது. அதன் தொடக்கம்
இவ்வாறு ஆரம்பிக்கிறது.
(நபியே!) நினைவு கூர்வீராகஅடிதான் விழும் ஓ நீர் விடியற்காலையில் உம் குடும்பத்தாரை விட்டுச் சென்று
முஃமின்களைப் போருக்காக (உஹது களத்தில் அவரவர்) இடத்தில் நிறுத்தினீர்¢ அல்லாஹ்
எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன்
3:121
அதன் இறுதி இப்போரின் விளைவுகள் பற்றியும் அதன் நுட்பங்கள் பற்றியும் மிகச்
சரியான விமர்சனங்களுடன் முடிகிறது.
'குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய
வேண்டாம்¢ நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது¢
அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே
நாடுகிறான்¢ அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு. அல்குர்ஆன் 3:176
இப்போரின் அழகிய முடிவுகளும் நுட்பங்களும்
அறிஞர் இப்னு ஹஜர் (ரஹ்) இது குறித்து பின்வருமாறு கூறுகிறார்: உஹ{த் போரிலும்
அதில் முஸ்லிம்களுக்கு நிகழ்ந்தவற்றிலும் பல படிப்பினைகளும் இறை நுட்பங்களும்
உள்ளன். அவற்றில் சிலவற்றைக் கீழே பார்ப்போம்:
1) பாவத்தினால் உண்டாகும் கெட்ட முடிவுகள் மற்றும் தடுக்கப்பட்டதை செய்வதனால்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:09 pm

ஏற்படும் தீய விளைவுகள் குறித்து முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை,
அம்பெறியும் வீரர்கள் அவ்விடத்திலிருந்து விலகக் கூடாது என்று நபி(ஸல்) கூறியதற்கு
மாற்றம் செய்ததால் ஏற்பட்ட விளைவுகளைப் பார்த்து விளங்கிக் கொள்ளலாம்.
2) தூதர்கள் சோதிக்கப்படுவார்கள். ஆனால், இறுதியில் வெற்றி அவர்களுக்குத்தான்
கிடைக்கும். இதில் அடங்கியிருக்கும் நுட்பமாவது: இறைதூதர்களுக்கு எப்போதும்
வெற்றியே கிடைத்துக் கொண்டிருந்தால் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாதவர்களும்
தங்களை அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்கள் என்று பெயரளவில் சொல்லிக்
Pயபந 296 ழக 518
கொள்வர். அதனால் உண்மையானவர் யார்? பொய்யர் யார்? என பிரித்து அறிய முடியாது.
எப்போதும் இறைத் தூதர்களுக்கு தோல்வியே ஏற்பட்டு வந்தால் அவர்களைத் தூதர்களாக
அனுப்பிய நோக்கமும் நிறைவேறாது. எனவே, பொய்யர்களிலிருந்து உண்மையானவர்களைப்
பிரித்து விடுவதற்காக வெற்றி தோல்வி இரண்டையும் சேர்த்து வழங்குவதே சரியானது.
அதாவது, நயவங்சகர்களின் நயவஞ்சகத்தனம் முஸ்லிம்களுக்கத் தெரியாமல் இருந்தது.
இப்போரில் சொல்லிலும் செயலிலும் தங்களின் நயவஞ்சகத் தன்மையை அந்நயவஞ்சகர்கள்
வெளிப்படுத்திய போது அவர்கள் முகத்திரை அகன்று, அவர்கள் யார்? எனத்
தெளிவாகிவிட்டது. மேலும், முஸ்லிம்கள் தங்களின் இல்லங்களுக்குள் இருக்கும்
எதிரிகளைத் தெரிந்துகொண்டு, அவர்களிடமிருந்து விலகி, அவர்களின் தீமையை
எதிர்கொள்ள ஆயத்தமானார்கள்.
3) சில சமயங்களில் அல்லாஹ் உதவியைத் தாமதப்படுத்தி வழங்குவதால் உள்ளத்தின்
பெருமை அகற்றப்பட்டு அதில் பணிவு ஏற்படுத்தப்படுகிறது. ஆகவேதான்
சோதனையின்போது முஸ்லிம்கள் சகித்துக் கொண்டு உறுதியாக இருந்தனர்.
நயவஞ்சகர்களோ பயந்து, அஞ்சி, நடுநடுங்கி நிலைகுலைந்து விட்டனர்.
4) அல்லாஹ் சொர்க்கத்தில் இறைநம்பிக்கையாளர்களுக்காக பல உயர் நிலைகளையும்
அந்தஸ்துகளையும் ஏற்படுத்தியிருக்கின்றான். அதை அவர்கள் வணக்க வழிபாடுகளால்
அடைய முடியாதபோது பல சோதனைகளையும் சிரமங்களையும் அவர்களுக்கு கொடுப்பதன்
மூலம் அவர்கள் அந்த உயர் பதவிகளை அடைந்து கொள்கிறார்கள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:09 pm

5) இஸ்லாமிய போரில் உயிர் தியாகம் செய்வது என்பது இறைநேசர்களின் மிக உயர்ந்த
பதவியாகும் அதை அல்லாஹ் தனது நபி(ஸல்) அவர்களின் தோழர்களுக்கு வழங்கினான்.
6) அல்லாஹ் தனது எதிரிகளை அழிக்க நாடினால் அதற்காக அவர்களிடம் காரணங்களை
ஏற்படுத்துகிறான். அதாவது, அவர்களின் ஓரிறை நிராகரிப்பு, அல்லாஹ்வின் நேசர்களை
நோவினை செய்வது போன்றவற்றைக் காரணமாக்கி அவர்களை அழித்து விடுகிறான்.
மேலும், இறைநம்பிக்கையாளர்களின் பாவங்களை அவர்களுக்கு இழைக்கப்பட்ட
கொடுமைக்குப் பகரமாக ஆக்கி மன்னித்து விடுகிறான். (ஃபதஹ{ல் பாரி)
அறிஞர் இப்னுல் கய்யிமும் தனது ஜாதுல் மஆது என்ற நூலில் இத்தலைப்பின் கீழ்
போதுமான விவரங்களைத் தந்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் அங்கு பார்க்கலாம்.
உஹ{த் போருக்கு பின் அனுப்பட்ட படை பிரிவுகளும் குழுக்களும்.
உஹ{த் போரில் ஏற்பட்ட துக்ககரமான நிகழ்ச்சி இறைநம்பிக்கையாளர்களைப் பற்றி பிற
மக்களிடம் இருந்த நற்பெயருக்கு பெரும் பங்கமாக அமைந்தது. முஸ்லிம்களைப் பற்றி பிறர்
உள்ளத்தில் இருந்த அச்சம் அகன்று விட்டது. உள்நாட்டு வெளிநாட்டு பிரச்சனைகள்
முஸ்லிம்களுக்கு அதிகரித்தன. அனைத்து திசைகளிலிருந்தும் ஆபத்துகள் மதீனாவைச்
சூழ்ந்தன. யூதர்களும், நயவஞ்சகர்களும் கிராமத்து அரபிகளும் தங்களின் பகைமையை
வெளிப்படையாகக் காட்டினர். இவர்களில் ஒவ்வொரு வகுப்பினரும் முஸ்லிம்களுக்குத்
தீங்கிழைக்க நாடினர். மேலும், முஸ்லிம்களை முழுவதுமாக அழித்து விட வேண்டும்
என்றும் ஆசைப்பட்டனர்.
உஹ{த் போர் முடிந்து இரண்டு மாதங்கள்தான் ஆகியிருக்கும். அதற்குள் அஸத்
கோத்திரத்தினர் மதீனாவின் மீது கொள்ளையிட திட்டம் தீட்டினர். இதற்குப் பின் அழல்,
காரா என்ற இரு வமிசத்தினர் ஹிஜ்ரி 4, ஸஃபர் மாதம் ஒரு சதித்திட்டம் தீட்டி 10
நபித்தோழர்களைக் கொன்றனர். மேலும், இம்மாதத்தில் ஆமிர் இப்னு துபைல் என்பவன்
சில கிளையினரை தூண்டிவிட்டு 70 முஸ்லிம்களைக் கொல்ல வைத்தான். இச்சம்பவம்
வரலாற்றில் பிஃரு மஊனா என்ற அறியப்படுகிறது. மேலும், இக்கால கட்டத்தில் நழிர்
Pயபந 297 ழக 518
வமிச யூதர்கள் வெளிப்படையாக தங்களின் எதிர்ப்பைக் காட்டினர். இறுதியாக, ஹிஜ்ரி 4,
ரபீஉல் அவ்வல் மாதம் நபி (ஸல்) அவர்களை கொன்று விடுவதற்கு சூழ்ச்சி செய்தனர்.
இதே ஆண்டு ஜமாத்துல் அவ்வல் மாதத்தில் கத்ஃபான் கோத்திரத்தார் மதீனாவின் மீது
தாக்குதல் நடத்தத் துணிவு கொண்டனர். முஸ்லிம்கள் மீது பிறருக்கு முன்பிருந்த பயம்
உஹ{த் போரினால் அகன்றுவிட்டதால் ஒரு காலம் வரை முஸ்லிம்கள் மாற்றார்கள் மூலம்
பல ஆபத்துகளுக்கும் அச்சுறத்தல்களுக்கும் இலக்காயினர்.
இருப்பினும் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் ஞானமிக்க நுட்பமான நடவடிக்கை
இந்நிலைமையை மாற்றியது. முஸ்லிம்களுக்கு அவர்கள் இழந்த மதிப்பை மீட்டு தந்தது.
உயர்வையும் கண்ணியத்தையும் அவர்களுக்கு புதிதாக அளித்தது. இந்த அடிப்படையில்
நபியவர்கள் எடுத்த முதல் முயற்சி அபூஸ{ஃப்யானின் படையை விரட்டியடிக்க அவர்கள்
எடுத்த நடவடிக்கையாகும். இதன் காரணமாக முஸ்லிம்கள் மதிப்பு சற்று பாதுகாக்கப்பட்டது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:09 pm

அவர்களுக்கு இருந்த உயர்வில் ஓரளவு தக்கவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேலும்
பல தாக்குதல்களை நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள். இத்தாக்குதல்கள்
முஸ்லிம்களுக்கு இழந்த கண்ணியத்தையும் மதிப்பையும் மீட்டு கொடுத்தது மட்டுமல்லாமல்
அதைவிட அதிகமாகவே இப்போது மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தியது. அடுத்து
வரும் பக்கங்களில் முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவர்களுக்கும் இடையில் நடந்த சில
சம்பவங்களை நாம் பார்போம்.
அபூ ஸலமா படைப் பிரிவு (ஹிஜ்ரி 4, முஹர்ரம்)
உஹ{தில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின் முஸ்லிம்களுக்கு எதிராக கிளம்பிய முதல்
கூட்டம் அஸத் இப்னு குஜைமா வமிசமாகும். தல்ஹா இப்னு குவைலித், ஸலமா இப்னு
குவைலித் ஆகிய இருவரும் தங்கள் கூட்டத்தினரையும் தங்களுக்குக்
கட்டுப்பட்டவர்களையும் அழைத்துக் கொண்டு அஸத் இப்னு குஜைமாவினரிடம்
வந்தனர். அவர்களை முஸ்லிம்களின் மீது போர் புரிய தூண்டினர். இந்தச் செய்தி நபி(ஸல்0
அவர்களுக்குக் கிடைத்தவுடன் 150 வீரர்கள் கொண்ட படைப் பிரிவை ஏற்பாடு செய்து
அஸது கிளையினரை எதிர்க்க அனுப்பினார்கள். இப்படையில் முஹாஜிர்களும்
அன்சாரிகளும் பங்கேற்றனர். அப்படைப் பிரிவிற்கு அபூ ஸலமாவைத் தளபதியாக்கி
அவரிடம் கொடியைக் கொடுத்தார்கள். அஸத் கிளையினர் தாக்குதல் நடத்த தயாராகும்
முன் அவர்கள் தங்களுடைய வீடுகளில் இருக்கும் போதே அவர்கள் மீது அபூஸலமா (ரழி)
தனது படையினரை அழைத்துக் கொண்டு திடீரெனத் தாக்கினார்கள். இதைச் சற்றும்
எதிர்பாராத அவர்கள் திக்குமுக்காடி தப்பித்துக் கொள்ள பல பக்கங்களிலும் சிதறி ஓடி
ஒளிந்தனர். முஸ்லிம்கள் அஸதினரின் ஒட்டகங்களையும் ஆடுகளையும் பிடித்துக் கொண்டு
மதீனா வந்தனர். அஸதினர் எதிர்க்காததால் சண்டை ஏதும் நடைபெறவில்லை.
ஏற்கனவே அபூ ஸலமாவிற்கு உஹ{த் போரில் ஏற்பட்ட காயம் பெரிதாகி விடவே
போரிலிருந்து மதீனா வந்தடைந்த சில நாட்களிலேயே அவர்கள் உயிர் பிரிந்தது. (ஜாதுல்
மஆது)
அப்துல்லாஹ் இப்னு உனைஸை அனுப்புதல்
ஹிஜ்ரி 4, முஹர்ரம் மாதம் பிறை 5ல் காலித் இப்னு சுஃப்யான் என்பவன்
முஸ்லிம்களிடம் போர் செய்ய கூட்டம் சேர்ப்பதாக நபியவர்களுக்குச் செய்தி எட்டியது.
இதனை அறிந்த நபியவர்கள், அவனைக் கொன்று வர அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரழி)
அவர்களை அனுப்பினார்கள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:10 pm

அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரழி) அவனைக் கொன்றுவர 18 இரவுகள் எடுத்துக்
கொண்டார்கள். அவர்கள் முஹர்ரம் மாதம் முடிய 7 நாட்கள் இருக்கும் போது
சனிக்கிழமை மதீனாவிற்குத் திரும்பினார்கள். அவர்கள் காலித் இப்னு சுஃப்யானைக்
Pயபந 298 ழக 518
கொன்று அவனது தலையைக் கொய்து வந்தார்கள். அத்தலையை நபி(ஸல்) அவர்களுக்க
முன் வைக்க, நபியவர்கள் மகிழ்ச்சியடைந்து ஒரு கைத்தடியை அவருக்கு வழங்கி 'இது
மறுமையில் எனக்கும் உனக்கும் மத்தியிலுள்ள அடையாளம்" என்றார்கள். நபியவர்களின்
கைத்தடியைத் தனது வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வைத்திருந்த அப்துல்லாஹ் (ரழி)
அதை தனது கஃபனுடன் (மரணித்தவரை போர்த்தும் உடை) சேர்த்து தனது
அடக்கஸ்தலத்தில் வைக்கப்பட வேண்டுமென வஸிய்யா (மரண சாஸனம்) செய்தார்கள்.
(இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
ரஜீஃ குழு
ஹிஜ்ரி 4, ஸஃபர் மாதம் அழல் மற்றும் காரா வமிசத்தை சேர்ந்த ஒரு கூட்டம் நபி (ஸல்)
அவர்களை சந்தித்து தங்களில் பலர் இஸ்லாத்தைத் தழுவ விரும்புகின்றனர். அவர்களுக்கு
இஸ்லாமையும் குர்ஆனையும் கற்றுத் தர தங்களுடன் சிலரை அனுப்புமாறு கோரினர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று 6 நபர்களை நபியவர்கள் அனுப்பினார்கள். அவர்களுக்கு
மர்ஸத் இப்னு அபூமர்ஸத் கனவி (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். இது இப்னு
இஸ்ஹாக்கின் கூற்றாகும்.
'அனுப்பப்பட்டவர்கள் 10 நபர்கள்¢ அவர்களுக்குத் தலைவாரக ஆஸிம் இப்னு ஸாபித்
(ரழி) இருந்தார்கள்" என்பது இமாம் புகாரியின் கூற்றாகும்.
இவர்களை அழைத்துக் கொண்டு ரஜீஃவு என்ற இடத்தை அம்மக்கள் அடைந்தனர்.
இவ்விடம் ராபிக் மற்றும் ஜித்தாவிற்கு மத்தியில் ஹிஜாஸ{ பகுதிக்கு அருகில் ஹ{தைல்
வமிசத்தை சொந்தமான நீர் நிலையாகும். இங்கு வந்தவுடன் லஹ்யான் கிளையினரை
இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டினர். லஹ்யான் கிளையைச் சோந்த 100
அம்பெறியும் வீரர்கள் காலடி காவடி அடையாளங்களை வைத்து இவர்கள் இருக்குமிடம்
வந்தடைந்தனர். தங்களுக்கு மோசடி நடந்துவிட்டது என்று தெரிந்து கொண்ட
நபித்தோழர்கள் ஃபத்ஃபத் என்ற மலைக்குன்றின் மீது ஏறிக்கொண்டனர். அங்கு வந்த
எதிரிகள் 'நாங்கள் உங்களைக் கொலை செய்யோம் என்ற உறுதிமொழி தருகிறோம்,
இறங்கி வாருங்கள்" எனக் கூறினர். ஆனால், ஆஸிம் இறங்கி வர மறுத்துவிட்டு, தங்களது
தோழர்களுடன் சேர்ந்து எதிரிகளை எதிர்த்தனர். ஆனால், எதிரிகள் நபித்தோழர்களில் 7
நபர்களைக் கொன்றுவிட்டனர். மீதம் குபைப், ஜைது இப்னு தஸின்னா (ரழி) இன்னும்
ஒருவர் ஆகிய மூவர் மட்டும் இருந்தனர். அவர்களிடம் இந்த எதிரிகள் கொல்ல
மாட்டோம் என் மீண்டும் வாக்களித்தனர். அம்மூவரும் அவர்களிடம் இறங்கிவரவே
தங்களின் வாக்குக்கு மாறுசெய்து வில்லின் நரம்புகளால் அவர்களைக் கட்டினர்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:10 pm

அந்த மூன்றாவது நபித்தோழர் 'இது இவர்களின் முதல் மோசடி" எனக் கூறி
அவர்களுடன் செல்வதற்கு மறுத்தார். அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் வர
மறுக்கவே அவரைக் கொன்றுவிட்டனர். அதற்கு பின் குபைப், ஜைது (ரழி) இருவரையும்
மக்காவிற்கு அழைத்து வந்து அங்கு அவர்களை விற்றனர். இவ்விருவரும் பத்ர் போரில்
மக்காவின் தலைவர்களில் சிலரை கொன்றிருந்தனர். குபைபை வாங்கியவர்கள் சில காலம்
வரை அவர்களைச் சிறை வைத்திருந்தனர். பின்பு அவரை கொன்றுவிட முடிவு செய்து
மக்காவின் புனித எல்லைக்கு வெளியில் அழைத்து சென்றனர். அங்கு அவரைக் கழு
மரத்தில் ஏற்றி கொன்றுவிடலாம் என முடிவு செய்தனர். அப்போது குபைப் (ரழி) 'நான்
இரண்டு ரக்அத் தொழுதுகொள்ள என்னை விடுங்கள்" என்று கேட்க அவர்களும்
அனுமதித்தனர். தொழுது முடித்தபின் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கு நடுக்கம்,
பயம் ஏற்பட்டுவிட்டது என்று நீங்கள் கூறமாட்டீர்கள் என்றிருப்பின் நான் மேலும்
தொழுதிருப்பேன் என்று கூறிய பிறகு, அல்லாஹ்வே! இவர்களை எண்ணிக்கொள்!
இவர்களை தனித்தனியாக பிரித்து கொன்றுவிடு! இவர்களில் எவரையும் மீதம் விடாதே!"
என்று கூறி பின்வரும் கவிதையை படித்தார்.
Pயபந 299 ழக 518
'எதிரி ரானுவத்தினர் என்னை சூழ்ந்தனர்¢
தங்கள் இனத்தவரை எனக்கெதிராக ஒன்றிணைத்தனர்¢
ஒவ்வொரு சாதியையும் வருமாறு அழைத்தனர்¢
தங்களின் பெண்கள், பிள்ளைகள் என அனைவரையும் இணைத்தனர்¢
ஒரு நீண்ட உறுதிமிக்க கழுமரத்திற்கருகில் நான் நிறுத்தப்பட்டேன்¢
எனது கஷ்டம், தனிமை, அந்நியம்
மேலும் நான் இறக்குமிடத்தில் சூழ்ந்துள்ள ராணுவம்
இவையனைத்தையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன்¢
இறைவனை நான் நிராகரிக்கவேண்டுமென பெரிதும் விரும்பினர்¢
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:10 pm

(எங்ஙனம் அதனைச் செய்வேன்)
மரணம் எனக்கு அதைவிட மிக எளிது¢
என் கண்கள் அழுகின்றன¢ நீர் ஒட இடமில்லை¢
எனக்கிழைத்த துன்பத்தைத் தாங்க
அர்ஷின் அதிபதி எனக்கு பொறுமையளித்தான்¢
அணு அணுவாக அவர்கள் என்னை கொல்கின்றனர்¢
எனக்கு மோசமான உணவு வழங்கப்பட்டது¢
நான் முஸ்லிமாகக் கொலையுறுவதால்
மரணம் ஒரு பொருட்டல்லவே!
எந்த பகுதியில் கொலையுண்டாலும்
அல்லாஹ்வின் பாதையில் என் மரணம் துயில் கொள்ளுமே!
அது, அல்லாஹ் நாடினால், துண்டு துண்டான
சதைகளின் நாள, நரம்புகளிலெல்லாம் அருள்வளம் பொழிவான்"
இந்த கவிதைகளைச் செவிமடுத்தப் பின் அபூஸ{ஃப்யான் குபைபிடம் 'உன்னை உனது
குடும்பத்தாரிடம் விட்டுவிடுகிறோம். ஆனால், முஹம்மதை நாங்கள் கொன்று விடுகிறோம்.
இது உனக்கு விருப்பமா? என்று கேட்டார். அதற்கு 'நான் எனது குடும்பத்தில் இருக்க,
முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நோவினை அளிக்கும் விதமாக அவருக்கு முள்
குத்துவதை கூட நான் விரும்பமாட்டேன்" என குபைப் பதிலளித்தார். இதற்குப் பின்
அவரை கழு மரத்தில் ஏற்றிக் கொன்றனர். அவர்களின் உடலை காவல் காக்க அங்கு
சிலரை நியமித்தனர். ஒரு நாள் இரவில் அம்ர் இப்னு உமையா ழம்ரி என்பவர் அவரை
கழு மரத்திலிருந்து இறக்கி நல்லடக்கம் செய்தார். பத்ர் போரில் குபைப் ஹாரிஸை
கொன்றதால் அதற்குப் பதிலாக அவனின் மகன் உக்பா என்பவன் குபைப் அவர்களை
கொன்றான்.
கொல்லப்படும் தருணத்தில் இரண்டு ரக்அத் தொழும் பழக்கத்தை முதலில் குபைப் தான்
ஏற்படுத்தினார். மக்காவில் பழங்களே இல்லாமல் இருந்த காலத்தில் கைதியாக இருந்த
குபைப் திராட்சைக் குலைகளைச் சாப்பிடுவதையும் மக்கள் பார்த்திருக்கின்றனர். (ஸஹீஹ{ல்
புகாரி)
ஜைது இப்னு தஸின்னாவை ஸஃப்வான் இப்னு உமைய்யா விலைக்க வாங்கி தனது தந்தை
உமைய்யா பத்ரில் கொல்லப்பட்டதற்கு பதிலாக அவரைக் கொன்றான்.
முன்னால் கொல்லப்பட்ட ஆஸிமுடைய உடலின் ஒரு சில பகுதியையாவது எடுத்து வர
குறைஷிகள் சிலரை அனுப்பினர். ஆஸிம் குறைஷிகளின் மிக மதிக்கத்தக்க ஒருவரை
பத்ரில் கொன்றிந்தார். ஆஸிமை பாதுகாப்பதற்கு அல்லாஹ் தேனியைப் போன்ற சில
வண்டுகளை அனுப்பி, வந்தவர்களை விரண்டோடச் செய்தான். 'தான் எந்த
இணைவைப்பவனையும் தொடமாட்டேன்¢ எந்த இணைவைப்பவனும் என்னை தொட்டுவிடக்
கூடாது" என்று ஆஸிம் அல்லாஹ்விடம் வேண்டி இருந்தார். அவரின் இந்த
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:10 pm

வேண்டுதலையும் உறுதியையும் அல்லாஹ் நிறைவேற்றினான். இச்செய்தியைக்
கேள்விப்பட்ட உமர் (ரழி) 'அல்லாஹ் முஃமினான (அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட)
அடியானை உயிருடன் இருக்கும் போது பாதுகாத்தது போன்று அவரின் மரணத்திற்குப்
பின்னும் பாதுகாக்கிறான்" என்று கூறினார்கள். (ஸஹீஹ{ல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல்
மஆது)
பிஃரு மஊனா
ரஜீஃ என்ற இடத்தில் நடைபெற்ற மேற்கூறப்பட்ட துக்கமான நிகழ்ச்சிக்குப் பின்
அதைவிட படுபயங்கரமான, ஒரு துக்கமான சம்பவம் நடந்தது. இதையே வரலாற்றில் பிஃர்
மஊனா அசம்பாவிதம் என குறிப்பிடப்படுகிறது. அதன் சுருக்கமாவது:
ஈட்டிகளுடன் விளையாடுபவன் என்றழைக்கப்படும் அபூபரா என்ற ஆமிர் இப்னு மாலிக்
என்பவன் மதீனாவில் நபி(ஸல்) அவர்களைச் சந்நித்தான். நபியவர்கள் அவனுக்கு
இஸ்லாமிய அழைப்பு கொடுத்தார்கள். அவன் அதை ஏற்கவுமில்லை, அதை
மறுக்கவுமில்லை. அவன் நபியவர்களிடம் 'அல்லாஹ்வின் தூதரே! நஜ்து மக்களை
இஸ்லாமின் பக்கம் அழைக்க என்னுடன் உங்களது தோழர்களை அனுப்புங்கள், அவர்கள்
ஏற்றுக்கொள்வார்கள் என நான் எண்ணுகிறேன்" என்றான். அதற்கு நபியவர்கள்
'நஜ்துவாசிகள் எனது தோழர்களுக்கு ஆபத்து ஏதும் விளைவிக்கலாம் என நான்
அஞ்சுகிறேன்" என்றார்கள். அதற்க அபூபரா 'நான் அவர்களை பாதுகாப்பேன்" என்றான்.
எனவே, நபியவர்கள் நாற்பது தோழர்களை அனுப்பினார்கள். இது இப்னு இஸ்ஹாக் (ரஹ்)
உடைய கூற்று. ஆனால் எழுபது நபர்கள் என ஸஹீஹ{ல் புகாரியில் வந்துள்ள
எண்ணிக்கையே சரியானதாகும். இவர்களுக்கு ஸாயிதா குடும்பத்தைச் சேர்ந்த முன்திர்
இப்னு அம்ர் என்பவரை நபியவர்கள் தலைவராக்கினார்கள். பிற்காலத்தில் இவர் 'முஃனிக்
லியமூத்" மரணமாக விரைந்தவர் என்று இவர் அழைக்கப்பட்டார். அதற்குக் காரணம்,
அவர் இந்நிகழ்ச்சியில் வீரமரணம் அடைய முதலாவதாக விரைந்தார். அனுப்பப்பட்ட
தோழர்கள் அனைவரும் முஸ்லிம்களில் மிகச் சிறந்தவர்களாகவும், குர்ஆனைக் கற்றுத்
தேர்ந்தவர்களாவும் இருந்தனர். இவர்கள் பகலில் விறகு பொறுக்கி அதை விற்று திண்ணைத்
தோழர்களுக்கு உணவு வாங்கி வருவர். இரவில் குர்ஆன் ஓதுவதும், தொழுவதுமாக
தங்களது வாழ்வைக் கழித்து வந்தனர்.
இவர்கள் அவனுடன் புறப்பட்டு பிஃரு மஊனா என்ற இடத்தை அடைந்தனர். இந்த இடம்
ஆமிர் கிளையினருக்குச் சொந்தமான நிலத்திற்கும் ஸ{லைம் கிளையினருக்கு சொந்தமான
விவசாயக் களத்திற்கும் மத்தியலுள்ள நீர் நிலையாகும். அங்கு அனைவரும்
தங்கிக்கொண்டு ஹிராம் இப்னு மில்ஹான் என்ற தோழரை நபி (ஸல்) அவர்களின்
கடிதத்தைக் கொடுத்து ஆமிர் இப்னு துiஃபல் என்பவனிடம் அனுப்பினர். இந்த
அல்லாஹ்வின் எதிரி அக்கடிதத்தை படிக்கவில்லை. அவன் சாடைக்காட்ட, ஒருவன் சிறு
ஈட்டியால் ஹிராமைப் பின்புறத்திலிருந்து குத்தினான். தான் குத்தப்பட்டதையும், தனது
உடம்பில் இரத்தம் வருவதையும் பார்த்த ஹிராம் 'அல்லாஹ{ அக்பர். அல்லாஹ் மிகப்
பெரியவன், கஅபாவின் இறைவின் மீது சத்தியம்! நான் வெற்றி பெற்றுவிட்டேன்" என்று
கூறினார்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by RAJABTHEEN Tue Apr 26, 2011 3:10 pm

அல்லாஹ்வின் எதிரியான அவன் எஞ்சிய மற்ற நபித்தோழர்களைக் கொல்வதற்கு ஆமிர்
கிளையினரை அழைத்தான். ஆனால், அபூபரா இவர்களுக்கப் பாதுகாப்பு அளித்திருப்பதால்
ஆமிர் கிளையினர் அதற்கு மறுத்து விட்டனர். பின்பு ஸ{லைம் கிளையினரை
அழைத்தான். ஸ{லைமினரில் உஸைய்யா, ரிஃல், தக்வான் என்ற மூன்று வகுப்பினர்
அவனது அழைப்பை ஏற்று அவனுடன் கிளம்பினர். இவர்கள் அனைவரும்
நபித்தோழர்களைச் சுற்றி வளைத்து நபித்தோழர்களுடன் சண்டையிட்டனர். இதில்
தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஆனால், கஅபு இப்னு ஜைது இப்னு நஜ்ஜார்
என்ற தோழர் மட்டும் படுகாயங்களுடன் பூமியில் சாய்ந்தார். இவர் இறந்துவிட்டதாக
எதிரிகள் எண்ணினர். எதிரிகள் சென்ற பிறகு அவ்விடத்தில் இருந்து தப்பித்து மதீனா
வந்தார். இவர் பின்னால் நடந்த அகழ் போரிலும் கலந்தார். அதில் எதிரிகளால்
கொல்லப்பட்டார்.
தோழர்களில் அம்ர் இப்னு உமைய்யா ளம்ரி, முன்திர் இப்னு உக்பா இப்னு ஆமிர் ஆகிய
இருவரும் முஸ்லிம்களின் வாகனங்களை மேய்த்து வருவதற்க்காகச் சென்றிருந்தனர்.
அங்கிருந்து முஸ்லிம்கள் தங்கியிருந்த இடத்திற்கு மேல் பிணந்தின்னி பறவைகள்
வட்டமிடுவதை பார்த்து முஸ்லிம்களுக்கு ஏதோ ஆபத்து நிகழ்ந்து விட்டதை உணர்ந்தனர்.
உடனே அவ்விருவரும் அங்கு விரைந்தனர். எதிரிகள் தங்கள் தோழர்களை வஞ்சித்ததைப்
பார்த்து பொங்கி எழுந்தனர். தாங்கள் இருவர் மட்டுமே இருக்கிறோம் என்பதையும்
பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் எதிரிகளை எதிர்த்தனர். நீண்ட நேர சண்டைக்குப் பின்
முன்திர் எதிரிகளால் கொல்லப்பட்டார். அம்ர் இப்னு உமையா கைதியாக்கப்பட்டார். அம்ர்
முழர் குடும்பத்தைச் சார்ந்தவர் என்று தெரியவந்ததும் அவரின் முன்னந்தலையை
சிரைத்துவிட்டு எதிரிகளின் தலைவனான ஆமிர் தனது தாய் செய்திருந்த நேர்ச்சைக்காக
அவரை உரிமையிட்டு விட்டான். அம்ர் இப்னு உமைய்யா ழம்ரி (ரழி) முஸ்லிம்களில்
மிகச் சிறந்தவர்களான இந்த எழுபது தோழர்கள் கொல்லப்பட்ட, மிகக் கவலையூட்டும்
செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் கூறவதற்காக மதீனா நோக்கி விரைந்தார். இந்நிகழ்ச்சி
உஹ{த் போரில் ஏற்பட்ட வேதனையை மீண்டும் முஸ்லிம்களுக்கு நினைவூட்டியது.
ஆனால் போரில் சண்டையிட்டு இறந்தனர். இவர்கள் வஞ்சகமாகத் தாக்கப்பட்டு
மரணமடைந்தனர்.
அம்ர் இப்னு உமையா (ரழி) மதீனா திரும்பும் வழியில் கனாத் என்ற பள்ளத்தாக்கில்
உள்ள கர்கரா என்ற இடத்தில் ஒரு மர நிழலில் தங்கினார். அப்போது கிலாப்
கோத்திரத்தை சேர்ந்த இருவரும் அதே இடத்தில் வந்து தங்கினர். அம்ர் அவ்விருவரையும்
எதிரிகளைச் சேர்ந்தவர்கள் என்றெண்ணி அவ்விருவரும் நன்கு கண் அயர்ந்துவிட்ட பின்
தனது தோழர்களுக்காக பழிவாங்கும் நோக்கத்தில் அவ்விருவரையும் கொன்று விட்டார்.
ஆனால், கொன்று முடித்தபின் அவ்விருவரிடமும் நபி(ஸல்) அவர்களின் ஒப்பந்தக் கடிதம்
இருப்பதை பார்த்தார். அது அவருக்கு முன்னதாக தெரியாது. மதீனா வந்தடைந்ததும் தனது
செயலை நபியவர்களிடம் கூறி வருந்தினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீ கொலை
செய்த இருவருக்காக நான் நிச்சயம் தியத் (கொலைக் குற்றத்திற்குரிய பரிகாரத் தொகை)
கொடுக்க வேண்டியது கடமையாகிவிட்டது எனக் கூறி, முஸ்லிம்கள் மற்றும்
முஸ்லிம்களின் ஒப்பந்தகாரர்களான யூதர்களிடம் இந்த தியத்தை வசூல் செய்து
கொடுத்தார்கள். (ஸஹீஹ{ல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - Page 18 Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 26 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 22 ... 26  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum