தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆன்மிக வெங்காயத்தை உறிக்கலாமா? - Dr.ருத்ரன்
Page 1 of 1

இன்று ஒரு பதிவைப்படிக்க நேரிட்டது, அதில், சாமியார்களும் சைக்யாட்ரிஸ்ட்களும் ஒன்றுதான், இரண்டில் எங்குபோனாலும் பரவாயில்லை, வாழ்வுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று எழுதியிருந்தது.இரண்டு நாட்களுக்கு முன்தான் யாரையும் திட்டாமல், கோபப்படாமல் பதிவு எழுத வேண்டும் என்று தீர்மானித்தேன், அதற்குள் இது கண்ணில் பட்டுவிட்டது!
பதிவுலகம் தனியொரு பிரசுரப்பெட்டகம். யார் வேண்டுமானாலும் அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆசிரியர்க்குக் கடிதம் என்ற பாவனையில் ஆஹா பேஷ் பேஷ் என்று எழுதினால்கூடப் பிரசுரம் ஆகாத எழுத்துத்திறன் கொண்டவர்கள் கூட கருத்துக்களை அள்ளித்தெறிக்கலாம்.
மக்கள்முன் தன் கருத்துக்களைச்சொல்ல தைரியம் இல்லாதவர்கள் கூட அநாமதேயங்களாக வந்து கருத்து சொல்லலாம்..கருத்துச்சுதந்திரம் நிச்சயம் வரவேற்று வளர்க்கப்படவேண்டியது தான், ஆனால், கருத்துக்கள் சரியோ தவறோ சில மனங்களைச் சென்றடையும். படிக்கும் நேரத்தில், வாழ்வின் நிர்ப்பந்தத்தில் தவிக்கும் மனங்கள் தவறா சரியா என்று பார்க்காமல், திசைதவறிப் போகும். இதற்காகத்தான், குறையுள்ள கருத்தோ முரணான கருத்தோ பதிவு செய்யப்பட்டால் அதற்கு மாற்றாக நம் கருத்துக்களையும் பதிவு செய்வது அவசியமாகிறது.
சாமியார்கள் எனப்படுபவர்கள் சிலநேரங்களில் சரியான விஷயங்களைச் சொல்வது போல் தோன்றும். அடிப்படையில் அனைவருக்கும் உள்ள சுயபுத்தி என்பது சொல்லாத விஷயத்தை அவர்கள் கூறிவிடுவதில்லை, ஆனால் அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்களைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் அற்புதவிளம்பர வர்ணஜோடனை, அவர்கள் சொல்வதாய் காசு வாங்கிக்கொண்டு விவரிக்கும் நிழலெழுத்தாளர்கள் மனநல நிபுணர்களுக்குக் கிடையாது. ஆனால் மனநல மருத்துவர்களிடம் அடிப்படையாக அறிவியல் இயங்குகிறது.
பூஜ்யத்திலிருந்து பூஜ்யம் போனால் மீதி ஒரு பூஜ்யம் இருக்கும் என்பதை நிரூபிக்க எதை நம்புவீர்கள்? உபநிஷத்தையா algebraவையா? சாமியார்களைப்பற்றி விட்டுவிடுவோம் எங்கள் அறிவுக்கொம்புகள் நன்கு முளைத்துக் கூராக இருக்கின்றன என்று சிலர் சொல்லிக்கொள்ளலாம், அவர்கள் சாமியார் என்பதை வெட்டி அங்கே குரு என்பதை cut and replace மாற்றிவைத்துப் பேசுவார்கள். அறிவுஜீவித்வ நிறத்திலொரு கண்ணாடி அணிந்து பார்த்தால் இதுவும் சரியென்றே தோன்றும். 'சாமி கும்பிடு" என்று நேரடியாகச் சொல்லாத சாமியார்கள் பலர்' தாங்களே சாமி' என்று ஆகிவிடுவதை உற்று அல்ல, மேலோட்டமாகப் பார்த்தால் கூடத் தெரியும்.
"இவர்களை சந்தித்த பின்பு தற்கொலை எண்ணங்களிலிருந்து மீண்டவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். தனது கர்வம், பேராசை மற்றும் தீய பழக்கங்களால் தனது வாழ்க்கையை தானே அழித்துக்கொண்டவர்கள் எல்லாம் இது போன்ற குருக்களிடம் சென்று மீண்டு வந்திருக்கிறார்கள்." என்று அந்தப்பதிவில் எழுதப்பட்டுள்ளது!
அப்படியா? எத்தனைபேர்? என்ன சதவிகிதம்? மேலும் இந்தக்கதைகளைச் சொன்னது யார்? பாதிக்கப்பட்டவரா அல்லது பாதிப்பின் மூலம் ஏதோ ஒரு லாபத்தைப் பார்த்தவரா? இந்தக் கதைகள் எந்த அறிவியல் தொகுப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளன? ஒரு திறமையான விளம்பர நிறுவனம் என் கைவசம் இருந்தால் நான் கூட ஒபமாவைத் தற்கொலை செய்துகொள்வதிலிருந்து மீட்டு அமெரிக்க அதிபர் ஆக்கினேன் என்று மக்களிடையே கதை பரப்பமுடியும். இப்படிச் சொன்னால் என் மீது வழக்கு வரும் நான் சிறைக்குப்போவேன், ஆனால் இப்படி சாமியார்கள் கூறிகொண்டு திரிவதை யாரும் கேள்வி கேட்பதில்லை!
“எனவே எதையும் அறிவியல்ரீதியாக சிந்திப்பவன் என்று கூறிக்கொண்டு மட்டையடியாக, ஆன்மிக குருக்களிடம் செல்பவர்களை கிண்டலடிக்க வேண்டியதில்லை. மூட நம்பிக்கைகளை வலியுறுத்தாமல், நெருக்கடி மிக்க மனித மனத்திற்கு ஒரு அமைதியை தந்தால், தனி மனித வாழ்க்கையில் ஆக்கபூர்வமான மாற்றங்களை கொண்டுவந்தால், அது ஒரு ஞானத் தேடல் என்ற அளவோடு நின்றுவிட்டால், இன்றைய உலகத்தில் ஆன்மிக குருக்களுக்கும் ஒரு பெரும் தேவை இருக்கத்தான் செய்கிறது.” இதுவும் அந்தக்கட்டுரையிலிருந்துதான்!
இந்த ஆன்மிகத்தேடல் ஒரு சிக்கலான வியாபாரம். வாங்க முடிவு செய்துவிட்டால் வாங்கிவிடவேண்டும், கேள்விகள் இங்கு தடை செய்யப்பட்டுள்ளன. பேரங்களும் சாத்தியமில்லை! வாங்கியதைப் பரிசோத்தித்துப் பார்த்துவிட்டுத் திரும்பத்தரவும் அனுமதியில்லை! இந்தப் பொருளை நான் வாங்கினேன் அது வேலை செய்யவில்லை என்று பிறரிடம் கூறுவதும் சாத்தியமில்லை. ஒரு மருத்துவரிடம் சென்று சரியாகவில்லை என்றால் இன்னொரு மருத்துவரை நாடலாம், அல்லது தெரிந்தவர்களிடம் 'அவனிடம்போகாதே' என்று அறிவுறுத்தலாம். சாமியார்/குரு விஷயத்தில் வாங்கிக்கொண்ட சமாச்சாரம் வேலை செய்யவில்லை என்றால், உனக்கு அதைப் பயன் படுத்தும் தகுதி இல்லை என்றே மீதி முட்டாள்கள் அனுமானிப்பார்கள்.
ஒரு மனநல மருத்துவன் உருவாக பள்ளியிறுதி தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்று முதலில் MBBS பெறவேண்டும், பிறகு நான்கரை ஆண்டுகள் படித்துப் பட்டம் பேற்று முதுகலை படிப்பில் நுழைய வேண்டும். அதன்பிறகு ஒழுங்காகப் படித்தால் தான் அதிலும் தேர்வாகி ஒரு மனநல மருத்துவனாக வெளியில் சொல்லிக்கொள்ளவே முடியும். இதைவிடச் சுலபமாகவும் விரைவாகவும் ஒரு குருவாகக் காட்டிக்கொள்ள முடியும். காட்டிக்கொள்ள என்று குறிப்பிடக்காரணம் உண்மையான நேர்மையான குரு தன்னைக் காட்டிக்கொள்வதில்லை.
சாமியார்கள், ஆன்மிக குருமார்கள் ஆகியோர் சாதாரணமாகப்பேசும் போது பெரிய தவறுகள் வெளிப்படையாகத் தோன்றுவதில்லை, ஆனால் அவர்களே மனவியல் பற்றிப்பேசும் போது நிறைய உளறுவார்கள். ஓஷோ ஜேகே போன்ற மேதைகளானாலும்! சுருக்கமாக சொல்வதென்றால் மனநல நிபுணர்கள் செய்வது ஒரு அறிவியல் சார்ந்த தொழில், சாமி/ குரு செய்வது நேர்மையில்லாத வியாபாரம். ஆரம்பத்தில் இலவசமாக உரைகளை வழங்கிய குருமார்களின் இன்றைய நிதிநிலையைச் சிந்தியுங்கள்.
ஒருமுறை 1986ல் நான் அசல் (அவர் விட்டுச்சென்ற நிறுவனத்தில் இப்போதிருப்பவை அவரது நகல்கள்)குரு என் முதுகைத்தொட்டு ஒரு மணியடித்தார். குண்டலினி எழும்பும் என்றார். முதுகின் மேல் தோல் அவர் தொட்டதால் குறுகுறுப்படைந்ததைத்தவிர வேறெதுவும் நடக்கவில்லை.
இன்னொரு (இன்று பிரபலமாக பல நிழலெழுத்தாளர்கள் உதவியுடன் வசீகரமாக வியாபாரம் செய்யும்) 'குரு' 1996ல் அப்போது நான் தொலைகாட்சியில் சற்று பிரபலமாக இருந்ததால் இரண்டு மணிநேரம் என்னிடம் தன் ஆன்மிகச்சக்தியைக் காட்ட முயன்றார்.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் சந்திக்காமலோ சிந்திக்காமலோ நம்மிடையே ஆன்மிடம் விற்கும் 'குரு'மார்களை நான் சாடவில்லை. நம்பிக்கை தவறில்லை, நம்புமுன்னோ நம்பும்போதோ கேள்விகளைக் கேட்காமல் இருந்தால் அது தவறாக முடியும். இங்கே நான் குறிப்பிட்டப் பதிவின் எழுத்தாளரைப்போல.
அவர் குறிப்பிட்டதைப்போல் 'அவர்களும்' தேவை என்று எப்படி எடுத்துக்கொள்வது? கரப்பான்பூச்சி கூடத்தான் சுழலில் ஒரு தேவைக்காக இருக்கிறது, அதைச் செல்லப்பிராணியாக வளர்த்துக் கொஞ்சலாமா?
- ருத்ரனின் பார்வை

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?
» மனநல மருத்துவர் ருத்ரன் - புத்தகங்கள்
» ருத்ரன்’ படத்தில் இணைந்த ‘காஞ்சனா’ கூட்டணி
» வாழ நினைத்தால் வாழலாம் - மனநல நிபுணர் டாக்டர் ருத்ரன்
» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum