தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஓநாயின் ஓலம்

3 posters

Go down

ஓநாயின் ஓலம் Empty ஓநாயின் ஓலம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 12:16 am

[You must be registered and logged in to see this image.]


ஒரு ஊரிலே ஒரு பெரிய முல்லா இருந்தார். அவருக்கு ஏராளமான
சீடர்களும் இருந்தனர். அவர் தன் சீடர்களோடு ஆண்டுக்கு ஒரு முறையாவது
மக்கா, மதீனாவரை யாத்திரை (ஹஜ்ஜூ) செய்வது வழக்கம்.


ஒரு சமயம், அவர் யாத்திரை செய்யப் புறப்படுங் காலத்தில்,
உலகெங்கும் கோரப்போர் நடந்து கொண்டிருந்தது. அப்போருக்குப் பயந்து அவர்
தனது யாத்திரையை நிறுத்திவிட விரும்பவில்லை.


முல்லாவின் புகழ் உலகமெல்லாம் பரவியிருந்தமையால், கோரப்
போர்க்களத்தின் ஊடே யாத்திரை செய்த முல்லாவுக்கும், அவர்களது
சீடர்களுக்கும் ஒரு விதத் தீங்கும் நேராததோடு போரில் மாண்ட பிணங்களின்
நாற்றங்கூட அவர்களைப் பாதிக்காமல் உல்லாசமாகப் பல்லக்குகளில் செல்ல
முடிந்தது.


இரு தரப்பு சேனாதிபதிகளும் முல்லாவின் கீர்த்தியைத்
தெரிந்திருந்தனர். ஆதலால், அவரைச் சீடர்களோடு தத்தம் எல்லைக்குள் தக்க
மரியாதையோடு வரவேற்று, மிக்க பாதுகாப்போடு அனுப்பும் போது, அவரவர் படைகளே
வெற்றி அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லா ஹூத்தாலாவிடம் பிரார்த்தனை
(துவா) செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். அதற்காகப் பொன் நாணயங்களைக்
காணிக்கைகளாகவும் கொடுத்தனர்.


முல்லாவும் அப்பொன் நாணயக் குவியலை ஏற்றுக் கொண்டு
அவரவர்களிடம் அவரவர் படைகளே வெற்றியுறுமாறு அல்லா ஹூத்தாலாவிடம் சிபார்சு
செய்வதாகக் கூறிவிட்டுச் சென்றார்.


போர்க்களத்தின் இடையே பாலைவனமும் வந்தது. பகல்
பன்னிரெண்டுமணிக்குப் பாலைவனத்தில் நடக்கும் ஒட்டகங்கள்கூடக் களைத்துவிடும்
என்றால், பாவம்! முல்லாவும் சீடர்களும் களைக்காமல் இருக்க முடியுமா?
நல்ல வேளையாக அவர்கள் அந்நேரத்தில் ஒரு பாலைவனச் சோலையை அடைந்தனர்.


பாலைவனச் சோலையில் ஒரு சிறு ஊற்றுநீரும், கொஞ்சம் பசும் புல்
தரையும், சில பேரீச்ச மரங்களும் இருந்தன. அச்சோலையில் தங்கிய முல்லா தன்
சீடர்களுடன் கொஞ்சம் பேரீச்சங் கனிகளையும், ஊற்று நீரையும் அருந்திக்
களைப்புத் தீர்த்துக் கொண்டதும், பகல் தொழுகையை ஆரம்பித்தார்.


தொழுது முடிந்தவுடன் ஆகாயத்தை நோக்கித் தம் கரங்களை ஏந்தி, ஏ!
அல்லாஹூத்தாலாவே! உன் கருணையை என்னென்று புகழ்வேன்! சூரியனின் கொடிய
வெப்பத்தால் உருகும் மணல் வெளியாகிய இப்பாலைவனத்தில்கூட உன்னுடைய
படைப்புகளாகிய நாங்கள் களைப்பாறுவதற்கென்று குளிர்ந்த சோலையும், கனிந்த
கனியும், தெளிந்த நீரும் தந்திருக்கிறாயே! இதுபோலவே, துன்பமயமான இவ்வுலக
வாழ்க்கையில் இடைஇடையே எங்களுக்கு இன்பமும் அருள்வாயாக! என்று வேண்டிக்
கொண்டிருந்தனர்.


அப்போது, அப்பிரார்த்தனையைக் காதில் கேட்டுக் கொண்டே அங்கு
வந்து சேர்ந்த பாரசீக தேசத்து வழிப்போக்கன் ஒருவன், சாராயக் கிண்ணம்போல்
கவிழ்ந்திருக்கும் ஆகாயத்தை நோக்கிக் கரங்களை ஏந்தும் அறிவீனர்களே!
ஆகாயத்திலிருந்து வரக்கூடியது, வெயிலும், மழையும், காற்றும் அன்றி வேறே
என்ன இருக்கிறது? என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.


அதைக் கவனித்த முல்லா அவனை நோக்கி, நீ யார்? என்று கேட்டார்.
நான் பாரசீகக் கவிஞர் உமர்கய்யாமின் உண்மைச் சீடன் என்றான்
அவ்வழிப்போக்கன். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த முல்லா அவனையும் தன்னோடு
வருமாறு அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.


சில தினங்கள் கழிந்தன. முல்லாவின் வழியில் ஒரு சிறு மலங்காடு
குறுக்கிட்டது. அம் மலங்காட்டில் ஆங்காங்கு ஏராளமான வீரர்களுடைய
பிணக்குவியல்கள் தென்பட்டன. அவ்வழியே முல்லா தன்சீடர்களோடு சென்று
கொண்டிருக்கும் போது, ஓநாயின் ஓலம் பலமாகக் கேட்க ஆரம்பித்தது.


முல்லா, பாரசீக தேசத்து வழிப்போக்கனை நோக்கி உமர்கய்யாமின்
உண்மைச் சீடனே! இங்கு இவ்வாறு ஊளையிடும் ஓநாயின் ஓலம் எதைக் குறிக்கிறது?
உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்.


அப்போது அவ்வழிப்போக்கன் ஆகா! எனக்கு நன்றாகத் தெரியும்! அது
நம் அல்லாஹூத்தாலாவை நோக்கிப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது
என்றான்.


என்ன ஆச்சரியம்! அந்த ஓநாயின் ஓலமும் ஒரு பிரார்த்தனையா! அது எப்படி உண்மையாக இருக்க முடியும்? என்றார் முல்லா.


அதற்கு அவ்வழிப்போக்கன், உண்மையோ! பொய்யோ!! அந்த ஓநாயின்
ஓலமாவது: _ ஏ! அல்லாஹூத்தாலாவே! உன் கருணையை என்னென்று புகழ்வேன்! என்
வயிறு நிறையப் புசிப்பதற்குச் சரியான உணவு கிடைக்காமல் நான் எவ்வளவோ காலம்
இந்தக் காட்டில் திண்டாடித் திரிந்தேன். ஆனால், இப்போது என்னைக்
காப்பாற்றுவதற்கென்று சுத்த வீரர்களின் இரத்தமும், சுவையுள்ள இறைச்சியாகிய
வாலிப வீரர்களின் பிணங்களையும் தந்திருக்கிறாயே! இதுபோலவே துன்பமயமான
இக்காட்டு வாழ்க்கையில், இடைஇடையே எனக்கு இன்பமும் அருள்வாயாக! என்றுதானே
பிரார்த்தனை செய்யும் எனக்கேட்டான்.


முல்லாவின் மூளையில் சுரீரென ஒரு உணர்ச்சி
பாய்ந்ததுபோலிருந்தது. அவர் பாலைவனச் சோலையில் செய்த பிரார்த்-தனையை
மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தார்.


பாரசீக தேசத்து வழிப்போக்கன் அவ்வள-வோடு முல்லாவிடம் விடைபெற்றுக் கொண்டு திரும்பிப் போய்விட்டான்.


சிறுவர்களே! இயற்கை உலகில் ஆச்சரியப்-படக்கூடிய விதமான இன்ப
துன்பங்கள் நிறைந்திருக்கலாம்! ஆனால், கருணையே உருவான ஒரு சக்தியோ அல்லது
உலக பரிபாலனமோ இல்லை என்பதைத்தான் இக்கதையிலிருந்து நீங்கள் உணர்ந்து
கொள்ளவேண்டும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஓநாயின் ஓலம் Empty Re: ஓநாயின் ஓலம்

Post by RAJABTHEEN Wed Feb 23, 2011 7:20 pm

சிறந்த ஒருகதையை சொன்னமைக்கு மிக்க நன்றி தோழா
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ஓநாயின் ஓலம் Empty Re: ஓநாயின் ஓலம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 23, 2011 7:27 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஓநாயின் ஓலம் Empty Re: ஓநாயின் ஓலம்

Post by priyamudanprabu Sat Feb 26, 2011 10:17 am

சிறப்பன கதை
avatar
priyamudanprabu
மல்லிகை
மல்லிகை

Posts : 109
Points : 217
Join date : 13/09/2010
Age : 40

Back to top Go down

ஓநாயின் ஓலம் Empty Re: ஓநாயின் ஓலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum