தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெண்கள் உலகின் கண்கள் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Nov 01, 2024 6:43 pm

» உணவே மருந்து
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:05 pm

» மணம் கேட்கும் மலர்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:04 pm

» சுமைக்குள் இருப்பது
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:02 pm

» பக்கத்து இருக்கையில் மனசு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:00 pm

» மகள் இருந்த வீடு- கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:58 pm

» போர் பூமி
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:56 pm

» வேண்டாம் வெறுமை
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:55 pm

» கிறுக்கல்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:55 pm

» வாழ்வதே இலக்கு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:54 pm

» மது விலக்கு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:52 pm

» மனதோடு மழைக்காலம்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:51 pm

» தீபாவளித் திருநாள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:50 pm

» இலக்கைத் தொடு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:49 pm

» தீபாவளி பக்கத்தில் வந்துருச்சுனு அர்த்தம் !
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:20 pm

» போருக்கும் அக்கப்போருக்கும் வித்தியாசம்…
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:19 pm

» நம்பிக்கை இருக்கும் இடத்தில்...
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:16 pm

» வடை, காபி சாப்பிட வாக்கிங் போறவன்….
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:14 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



லியொனார்டோ டா வின்சி

2 posters

Go down

லியொனார்டோ டா வின்சி  Empty லியொனார்டோ டா வின்சி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 12:40 am

(Leonardo da Vinci, ஏப்ரல் 15, 1452 - மே 2, 1519) ஒரு புகழ் பெற்ற
இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும்,
பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக்
கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக
அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (வுhந டுயளவ ளுரிpநச), "மோனா லிசா" (ஆழயெ
டுளைய) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரிய காலத்துக்கு மிக
முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர்
பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை.
அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல் மற்றும் குடிசார் பொறியியல்
துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார்.


இவருடைய
வாழ்க்கை ஜோர்ஜியோ வசாரியின், விட்டே என்னும் வாழ்க்கை வரலாற்று நூலில்
விபரிக்கப்பட்டுள்ளது. லியொனார்டோ, இத்தாலியிலுள்ள, வின்சி என்னுமிடத்தில்
பிறந்தார். இவருடைய தந்தையார் செர் பியரோ டா வின்சி, ஒரு நல்ல
நிலையிலிருந்த நில உரிமையாளர் அல்லது கைப்பணியாளர், தாய் கத்தரீனா ஒரு
விவசாயிகள் குடும்பப் பெண். கத்தரீனா, பியரோவுக்குச் சொந்தமாயிருந்த,
மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒரு அடிமை என்ற கருத்தும் நிலவினாலும் இதற்கான
வலுவான சான்றுகள் இல்லை. இவர் தனது தந்தையாருடன் புளோரன்சில் வளர்ந்தார்.
இவர் வாழ்க்கை முழுதும் ஒரு சைவ உணவுக்காரராகவே இருந்தார். இவர்
புளோரன்சில் ஒரு ஒவியரின் கீழ் பயிற்சியாளராக இருந்து, பின்னர் சுதந்திரமான
ஒவியர் ஆனார்.
இவரது காலம் ஐரோப்பாவில் நவீன பெயரிடு முறை
நடைமுறைக்குவர முன்பாகும். இதனால் இவரது முழுப்பெயர், "லியனார்டோ டி செர்
பியெரோ டா வின்சி" என்பதாகும். இது, "வின்சியைச் சேர்ந்த பியரோவின் மகன்
லியனார்டோ" என்ற பொருளுடையது. இவர் தன்னுடைய ஆக்கங்களில், "லியனார்டோ"
என்றோ அல்லது "நான் லியனார்டோ" (ஐழ, டுநழயெசனழ) என்றோதான்
கையெழுத்திட்டார். இதனால் இவரது ஆக்கங்கள் பொதுவாக "டா வின்சிகள்"
என்றில்லாமல், "லியொனார்டோக்கள்" என்றே குறிப்பிடப்படுகின்றன. இவர் ஒரு
முறைதவறிப் பிறந்த பிள்ளை என்பதால், தந்தை பெயரைப் பயன்படுத்தாமல்
விட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

லியொனார்டோ டா வின்சி  Empty Re: லியொனார்டோ டா வின்சி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 12:41 am

லியொனார்டோவினதாக அறியப்பட்ட மிகப் பழைய ஓவியம், ஆர்னோ பள்ளத்தாக்கு, (1473) - உஃபிசி
லியொனார்டோவின்
தொடக்க காலம் பெரும்பாலும் வரலாற்று ஊகங்களே. 16 ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்தவரும், மறுமலர்ச்சிக் கால ஓவியர்களைப் பற்றிய வரலாறுகளை
எழுதியவருமான வாசரி என்பவர், லியொனார்டோ குறித்த ஒரு குறிப்பை
எழுதியுள்ளார். ஒரு உள்ளூர் குடியானவன், லியனார்டோவின் தந்தையிடம் வந்து,
திறமையான அவரது மகனைக் கொண்டு ஒரு வட்டமான பலகையில் படமொன்று வரைந்து
தருமாறு கோரினானாம். இதற்கிணங்க லியொனார்டோ அப்பலகையில் பாம்புகள் தீயை
உமிழ்வது போன்ற படமொன்றை வரைந்து கொடுத்தாராம். பார்ப்பதற்குப் பயத்தைக்
கொடுத்த அந்த ஓவியத்தை, லியொனார்டோவின் தந்தை புளோரன்சின் கலைப்பொருள்
விற்பனையாளரிடம் விற்றுவிட்டார். அவ்விற்பனையாளர் அதனை மிலானின்
டியூக்கிடம் வெற்றார். இதன் மூலம் நல்ல இலாபம் பெற்ற லியொனார்டோவின் தந்தை
இதயத்தை அம்பு துளைப்பது போன்ற இன்னொரு படத்தை விலைக்கு வாங்கிவந்து
குடியானவனுக்குக் கொடுத்ததாக அக் குறிப்புச் சொல்கிறது.


1466ல்,
14 வயதாக இருக்கும்போது, அக்காலத்தில் மிகவும் வெற்றிகரமான ஓவியராக
விளங்கியவரும், வெரோக்கியோ என அறியப்பட்டவருமான ஆண்ட்ரே டி சியோன் (Andrea
di Cione) என்பவரிடம் லியொனார்டோ தொழில் பழகுவதற்காகச் சேர்ந்தார்.
வெரோக்கியோவின் வேலைத்தலம் புளோரன்சின் அறிவுசார் பகுதியில் இருந்ததால்,
லியொனார்டோவுக்கு கலைத்துறை தொடர்பான அறிவு கிடைத்தது. கிர்லாண்டாயோ,
பெருஜீனோ, பொட்டிச்செல்லி, லொரென்சோ டி கிரெடி போன்ற புகழ்பெற்ற
ஓவியர்களும் இதே வேலைத்தில் தொழில் பழகுவோராகவோ, வேறு வகையில் தொடர்பு
உள்ளவர்களாகவோ இருந்துள்ளனர். லியொனார்டோவுக்குப் பல வகையான தொழில் நுட்பத்
திறன்களின் அறிமுகம் கிடைத்ததோடு, வரைபு, வேதியியல், உலோகவியல், உலோகவேலை,
சாந்து வார்ப்பு, தோல் வேலை, பொறிமுறை, தச்சுவேலை போன்றவற்றோடு வரைதல்,
ஓவியம், சிற்பம் முதலிய பல திறமைகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக்
கிடைத்தது.
வெரோக்கியோவின் வேலைத்தலத்தில் உருவானவற்றுள் பல அவரிடம்
வேலை செய்தவர்களால் செய்யப்பட்டவை. வாசிரியின் கூற்றுப்படி, கிறிஸ்துவின்
ஞானஸ்நானம் என்னும் ஓவியத்தை, வெரோக்கியோவும், லியொனார்டோவும் இணைந்து
வரைந்தனர். யேசுவின் உடையை இளம் தேவதை ஏந்தியிருப்பதை லியொனார்டோ வரைந்த
விதம், அவரது குருவையும் விஞ்சியதாக இருந்ததால், வெரோக்கியோ தனது
தூரிகையைக் கீழே வத்துவிட்டு அதன் பின்னர் வரைவதையே நிறுத்திவிட்டார். இது
ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்கலாம். நெருக்கமாக ஆராயும்போது,
இவ்வோவியம் லியொனார்டோவின் கைவண்ணமாகவே தோற்றுகிறது.
1472 ஆம்
ஆண்டளவில், லியொனார்டோவின் 20 ஆவது வயதில், மருத்துவர்களினதும்,
கலைஞர்களினதும் குழுவான சென். லூக் குழுவில், வல்லுனராகத் தகுதி பெற்றார்.
ஆனால், லியொனார்டோவின் தந்தையார் இவருக்குத் தனியான வேலைத்தலம் ஒன்றை
அமைத்துக் கொடுத்திருந்தும், வெரோக்கியோவுடன் இருந்த நெருக்கம் காரணமாகத்
தொடர்ந்தும் அவருடன் இணைந்து வேலை செய்தார். லியொனர்டோ வரைந்ததாக
அறியப்படும் மிகப் பழைய ஓவியம், பேனாவாலும், மையினாலும் வரையப்பட்ட ஆர்னோப்
பள்ளத்தாக்கு ஓவியம் ஆகும். இது 1473 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதியிட்டு
வரையப்பட்டுள்ளது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

லியொனார்டோ டா வின்சி  Empty Re: லியொனார்டோ டா வின்சி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 12:41 am

நீதிமன்றப் பதிவுகளின்படி, 1476 ஆம் ஆண்டில் சில குற்றச்சாட்டுகளின் பேரில்
இவர்மேல் வழக்குத் தொடரப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 1476
முதல் 1481 ஆம் ஆண்டுவரை இவர் புளோரன்சில் தனது சொந்த வேலைத்தலத்தை
நடத்திவந்ததாகக் கொள்ளப்படினும், 1476 முதல் 1478 ஆம் ஆண்டுவரை இவர் பற்றிய
தகவல்கள் எதுவும் இல்லை. 1478ல், புனித பர்னாட் சிற்றாலயத்தில் வுhந
யுனழசயவழைn ழக வாந ஆயபi என்ற ஓவியத்தை வரையும் பணி இவருக்குக் கிட்டியது.
1482
இலிருந்து, 1499 வரை மிலானின் "டியூக்"கான லுடோவிக்கோ ஸ்போர்ஸா என்பவரிடம்
வேலை பார்த்துவந்ததுடன், பல பயிற்சியாளர்களுடன்கூடிய வேலைத்தலம் ஒன்றையும்
நடத்திவந்தார். 1495ல், சார்ள்ஸ் ஏஐஐஐ இன்கீழான பிரெஞ்சுப் படைகளின்
தாக்குதலிலிருந்து மிலானைக் காப்பதற்காக, லியொனார்டோவின், "கிரான் கவால்லோ"
என்னும் குதிரைச் சிலைக்காக ஒதுக்கப்பட்ட எழுபது தொன் வெண்கலம், ஆயுதங்கள்
வார்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.

1498ல் பிரான்சியர், லூயிஸ்
ஓஐஐஐ இன் கீழ் திரும்பி வந்தபோது, மிலான் எதிர்ப்பெதுவுமின்றி
வீழ்ச்சியடைந்தது. ஸ்போர்ஸா பதவியிழந்தார். ஒரு நாள், தனது "கிரான்
காவல்லோ"வுக்கான முழு அளவு களிமண் மாதிரியை, பிரான்சிய வில்வீரர்கள்,
குறிப்பயிற்சிக்குப் பயன்படுத்தியதைக் காணும்வரை, லியொனார்டோ மிலானிலேயே
தங்கியிருந்தார். பின்னர் அவர் சாலையுடனும், அவரது நண்பரான லூக்கா
பக்கியோலியுடனும் மந்துவாவுக்குச் சென்று இரண்டு மாதங்களுக்குப் பின்
வெனிஸ் சென்றடைந்தார். 1500 ஏப்ப்ரலில் மீண்டும் புளோரன்சுக்கு வந்தார்.

புளோரன்சில்
செஸாரே போர்கியா (போப் அலெக்சாண்டர் ஏஐ இன் மகன், "டூக்கா வலெண்டீனோ"
என்றும் அழைக்கப்பட்டார்) என்பவரிடம் ஆயுதப்படைக் கட்டிடக்கலைஞராகவும்,
பொறியியலாளராகவும் பணியில் அமர்ந்தார். 1506 இல் மீண்டும், சுவிஸ்
கூலிப்படைகளினால் பிரான்சியர் துரத்தப்பட்ட பின், மக்சிமிலியன் ஸ்போர்ஸா
வின் வசம் வந்துவிட்ட, மிலானுக்குத் திரும்பினார். அங்கே அவர், இறக்கும்வரை
அவரது தோழனாகவும், பின்னர் வாரிசாகவும் அமைந்த பிரான்சிஸ்கோ மெல்சியைச்
சந்தித்தார்.

1513 இலிருந்து 1516 வரை அவர் ரோம் நகரில் வாழ்ந்தார்.
அக்காலத்திலேயே, அங்கே ரபாயேலோ சண்டி மற்றும் மைக்கல் ஆஞ்சலோ போன்ற
ஒவியர்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள். எனினும் இவருக்கு அவர்களுடன்
அதிகத் தொடர்பு இருக்கவில்லை.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

லியொனார்டோ டா வின்சி  Empty Re: லியொனார்டோ டா வின்சி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 12:41 am

1515ல் பிரான்சின் பிரான்சிஸ் மிலானைத் திரும்பக் கைப்பற்றிக் கொண்டான்.
பிரான்சின் அரசருக்கும், போப் லியோ ஓக்கும் பொலொக்னாவில் நடைபெறவிருந்த
சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக ஒரு இயந்திரச் சிங்கமொன்றைச் செய்வதற்கு
லியொனார்டோ அமர்த்தப்படார். அப்பொழுதுதான் அரசரை லியொனார்டோ முதன் முதலில்
சந்தித்திருக்கவேண்டும். 1516ல், அவர் பிரான்ஸிசின் பணியில் அமர்ந்தார்.
அரசரின் வாசஸ்தலத்துக்கு அருகில் குளொஸ் லுகே என்னும் மனோர் வீடு அவரது
பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டதுடன், தாராளமன ஓய்வூதியமும் வழங்கப்பட்டது.
அரசர் அவருக்கு நெருங்கிய நண்பரானார்.

1519 ல், பிரான்சிலுள்ள,
குளோக்ஸ் என்னுமிடத்தில், லியொனார்டோ காலமானார். அவருடைய விருப்பப்படி 60
பிச்சைக்காரர்கள் அவரது பிணப்பெட்டியைத் தொடர்ந்து சென்றார்கள். அம்போயிஸ்
கோட்டையிலுள்ள, சென்-ஹியூபெர்ட் சப்பலில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.

புளோரன்ஸ் - லியொனார்டோவின் கலை மற்றும் சமூகப் பின்னணி
லியொனார்டோ
வெரோக்கியோவிடம் தொழில் பழகுவதற்குச் சேர்ந்த 1466 இலேயே வெரோக்கியோவின்
ஆசிரியரான டொனெடெல்லோ (Donatello) இறந்தார். நிலத்தோற்ற ஓவியங்களின்
வளர்ச்சிக்கு உதவிய ஓவியங்களை வரைந்த உக்கெல்லோ (Uccello) மிகவும் வயது
முதிர்ந்தவராக இருந்தார். ஓவியர்களான பியெரோ டெல்லா பிரான்சிஸ்கா (Piero
della Francesca), பிரா பிலிப்போ லிப்பி (Fra Filippo Lippi) லூக்கா டெல்லா
ரோபியா (Luca della Robbia) என்போரும் கட்டிடக்கலைஞரும் எழுத்தாளருமான
ஆல்பர்ட்டியும் அறுபது வயதைத் தாண்டியவர்களாகவும் இருந்தனர். அடுத்த
தலைமுறையின் வெற்றிகரமான ஓவியர்களாக, லியொனார்டோவின் குரு வெரோக்கியோ,
ஆன்டோனியோ பொலையுவோலோ (Antonio Pollaiuolo), சிற்பியான மினோ டா பியெசோலே
(Mino da Fiesole) ஆகியோர் இருந்தனர்.

லியொனார்டோவின் இளமைக்காலம்
மேற்படி ஓவியர்களால் அலங்கரிக்கபட்ட புளோரன்சிலேயே கழிந்தது.
பொட்டிச்செல்லி, கிர்லாண்டாயோ, பெருஜீனோ ஆகியோர் லியொனார்டோவுக்குச்
சமகாலத்தவர்கள். இவர்களை லியொனார்டோ வெரோக்கியோவின் வேலைத்தலத்திலும்,
மெடிசி அக்கடமியிலும் சந்தித்திருக்கக்கூடும். பொட்டிச்செல்லி மெடிசி
குடும்பத்தால் விரும்பப்பட்டவராக இருந்ததால், ஒரு ஓவியராக அவரது வெற்றி
உறுதிப்படுத்தப்பட்டது. கிர்லாண்டாயோ, பெருஜீனோ ஆகியோர் வசதி மிக்கவர்கள்
பெரிய வேலைத்தலங்களை நடத்திவந்தனர். இவர்கள் இருவரும் மிகத் திறமையுடன்
பணிசெய்து தமக்கு வேலை கொடுப்போரைத் திருப்திப்படுத்தினர்.
லியொனார்டோவுக்குக் கிடைத்த முதல் வேலை யுனழசயவழைn ழக வாந ஆயபi என்னும்
ஓவியமாகும். ஆனால் இது எப்போதுமே நிறைவடையவில்லை.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

லியொனார்டோ டா வின்சி  Empty Re: லியொனார்டோ டா வின்சி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 22, 2011 12:41 am

லியோனார்டோ டா வின்சி, 1498ல் வரையப்பட்ட கடைசி விருந்து, மற்றும்
1503-1506ல் வரையப்பட்ட மோனோலிசா போன்ற ஒவியங்களுக்காகப் பெயர் பெற்றவர்.
இவருடைய 17 ஓவியங்கள் மட்டுமே இன்று தப்பியுள்ளன. சிற்பங்கள் எதுவும்
அறியப்படவில்லை. அயர்லாந்தின் லிமெரிக்கிலுள்ள ஹண்ட் நூதனசாலையில்
வைக்கப்பட்டுள்ள, வீடொன்றின் சிறிய சிற்பமொன்று இவர் செய்ததாகக்
கருதப்படுகிறது. தப்பியுள்ள ஒவியங்களில் ஒன்று வட அமெரிக்காவில் உள்ளது.
லியொனார்டோ,
பெரும்பாலும் பெரும் ஓவியங்களாகவே திட்டமிட்டார். அதனால் இத்திட்டங்கள்
முற்றுப்பெறாமல் இடையிலேயே நிற்கவேண்டியேற்பட்டது.

மிலானில்
நிறுவுவதற்கு, 7 மீட்டர் (24 அடி) உயரமுள்ள வெண்கலத்திலான குதிரைச்
சிற்பமொன்றைச் செய்வதற்காக, மாதிரிகளும், திட்டங்களும் வகுப்பதில் பல
வருடங்கள் செலவு செய்யப்பட்டன. எனினும் பிரான்சுடனான போர் காரணமாகத்
திட்டம் முற்றுப்பெறவில்லை. தனிப்பட்ட முயற்சி காரணமாக, டாவின்சியின்
திட்டங்கள் சிலவற்றின் அடிப்படையில் இதைப்போன்ற சிலையொன்று 1999ல்
நியூயோர்க்கில் செய்யப்பட்டு, மிலானுக்கு வழங்கப்பட்டு அங்கே
நிறுவப்பட்டது.

புளோரன்சில், அங்கியாரிப் போர் என்ற தலைப்பில் பொது
மியூரல் ஒன்றைச் செய்வதற்காக இவர் அமர்த்தப்பட்டார். இதற்கு நேரெதிர்ச்
சுவரில், இவரது போட்டியாளரான மைக்கலாஞ்சலோ ஒவியம் வரைவதாக இருந்தது.
பலவிதமான, சிறப்பான ஆரம்ப ஆய்வுப்படங்களை வரைந்த பின்னர் அவர் நகரிலிருந்து
வெளியேறிவிட்டார். தொழில்நுட்பக் காரணங்களால் மியூரல்
பூர்த்திசெய்யப்படவில்லை.


இவருடைய கலைத்துவ வேலைகளிலும் பார்க்க
அதிக கவர்ச்சியுடையனவாக, இவரது, அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுகள்
அமைந்தனவெனலாம். இவ்வாய்வுகள் குறிப்புகளாகவும் படங்களாகவும் சுமார் 13,000
பக்கங்களில், குறிப்புப் புத்தகங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இடதுகையால்
எழுதுபவர், வாழ்நாள் முழுதும் கண்ணாடி விம்ப எழுத்துக்களையே
பயன்படுத்திவந்தார்.

அறிவியல் சம்பந்தமான இவரது அணுகுமுறை
அவதானிப்பு சார்ந்தது. விபரிப்பதன் மூலமும், அவற்றை மிக நுணுக்கமான
விவரங்களுடன் வெளிப்படுத்துவதன் மூலமுமே, தோற்றப்பாடுகளை அவர்
விளங்கிக்கொள்ள முயன்றார். சோதனைகளுக்கும், கோட்பாட்டு விளக்கங்களுக்கும்
அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தனது வாழ்நாள் முழுவதும்,
எல்லாவற்றுக்குமான விபரமான வரைபடங்களைக் கொண்ட ஒரு கலைக்களஞ்சியமொன்றை
உருவாக்கத் திட்டமிட்டுவந்தார். இவருக்கு லத்தீனிலும், கணிதத்திலும்
முறையான கல்வி இல்லாமையால், லியோனார்டோ என்ற விஞ்ஞானி அக்கால அறிஞர்களால்
புறக்கணிக்கப்பட்டார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

லியொனார்டோ டா வின்சி  Empty Re: லியொனார்டோ டா வின்சி

Post by கவிக்காதலன் Tue Feb 22, 2011 2:53 am

நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

லியொனார்டோ டா வின்சி  Empty Re: லியொனார்டோ டா வின்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum