தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திருமுறைகளில் தீந்தமிழ் =சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

2 posters

Go down

திருமுறைகளில் தீந்தமிழ் =சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty திருமுறைகளில் தீந்தமிழ் =சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Dr Maa Thyagarajan Sat Mar 05, 2011 3:12 pm

திருமுறைகளில் தீந்தமிழ் =சிங்கை டாக்டர் மா.தியாகராச
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

டாக்டர் மா,தியாகராசன்
துணைப்பேராசிரியர்
ஆசியமொழிகள் மற்றும் பண்பாட்டுத்துறை
தேசியக் கல்விக்கழகம்
நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகம்
சிங்கப்பூர் 677616
மு‎ன்னுரை:

பக்திச்சுவை நனி சொட்டச்சொட்ட ‏இறையடியவர்களால் பாடப்பட்ட ஒப்புயர்வற்ற படைப்புகள் தான் “திருமுறைகள்.” ‏‏இவை கி.பி. 600-900 ஆண்டுகளுக்கிடையே தோன்றி மக்கள் மனதிலே பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தது. அத்தோடு தமிழும் புதுப்பொலிவுப்பெற்றது. பல்லவர்களி‎ன் படையெடுப்பால் தமிழகத்தில், தமிழிலக்கியத்தை, ‏இருண்ட காலமாகக் கருதத்தக்க வகையில், அந்நிலைக்குத் தள்ளிய “களப்பிரர்கள்” அடியோடு மறைந்தார்கள், அவர்கள் காலத்திலே கொடிகட்டிப் பறத்த, சைன, புத்த மதங்களி‎ன் மீது நாட்டு மக்களுக்கு மிகுந்த வெறுப்பு ஏற்பட்டது.

“திருமுறைகள்” உருவாகிய காலத்தில் மக்கள் மனங்களிலும் “தமிழ்” பேரிடம் ‏பிடித்தது. தமிழ்ச்சுவையை மக்கள் நுகரத் தொடங்கினார்கள். பண்டிதர்கள் மத்தியில் மட்டும் வாழ்ந்த தமிழ் பாமரர்கள் நெஞ்சத்திலும் குடியேறியது. திருமுறைகள் பக்தியை மட்டும் வளர்க்கவில்லை. ‏இறைவனின் திருநாமத்தையும், அவனி‎ன் ஈடிணை இல்லாத பெருமைகளையும் பாடிப் பரவசமடைய, தமிழ்தா‎ன் துணைநின்றது. எனவே தமிழையும் வளர்த்தது.

மு‎ன்னர்ப் பழமைக்குப் பழமையாய் – பி‎ன்னர்ப் புதுமைக்குப் புதுமையாய் விளங்கிய இறைவனை அவ்வாறே பழமையும் புதுமையும் கொண்ட தமிழ்தா‎ன் பாடிப் பரவிட துணைக் கருவியாய் அமைந்தது.இறைவனின் பெருமைகளிலெல்லாம், இன்சுவைத் தமிழே இழையோடியது. “ஆ‎ன்ம நேய ஒருமை நம் தமிழ் மொழியை ஓர் உயர்ந்த பக்திமார்க்க மொழியாக மாற்றியது சொல்வளத்தால், உணர்ச்சிப் பெருக்கால், கருத்துக் குவியலால், ‏இசை வெள்ளத்தால், எளிமை நளினத்தால் தமிழ் மொழி புது பெருக்குற்றது. தமிழ் ‏இலக்கியம் செழுமையாகக் கொழுந்தோ தழைத்தது;” (1. தமிழ் ‏இலக்கிய வரலாறு பல்லவர்காலம் (4) பக்- 143/142) என டாக்டர் மூ. வ. அவர்கள் திருமுறைகள் தமிழை எவ்வாறு சூடிக்கொண்டு பெருமை கொள்கிறது எ‎ன்பதனைத் தெளிவாய்க் காட்டுகிறார்.

ப‎ன்னிரு திருமுறைகள்
திருமுறைகள் மொத்தம் ப‎ன்னிரண்டு. இவற்றைத்தா‎ன், ப‎‎ன்னிரு திருமுறைகள் என அழைக்கிறோம். திருஞான சம்பந்தரி‎ன் பாடல்களை, 1.2.3. திருமுறைகளாகவும், அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசரின் திருப்பாடல்களை 4.5.6 திருமுறைகளாகவும் மாணிக்கவாசகப் பொருந்தகை பாடிய திருக்கோவையையும், திருவாசகத்தையும் 8ஆம் திருமுறையாகவும், திருமாணிக்கத்தேவர், சேந்தனார் முதலியோர்களி‎ன் பதிகங்களை ஒ‎ன்பதாம் திருமுறையாகவும், திருமூலரின் திருமந்திரத்தை பத்தாம் திருமுறையாகவும், காரைக்காலம்மையார், நம்பியாண்டார் நம்பி முதலானோர் பாடிய பாடல்களைப்பதினோறாம் திருமுறையாகவும், சேக்கீழார் பெருந்தகையருளிய பெரிய புராணத்தை, பனிரண்தாம் திருமுறையாகவும், திருமுறைகள் வரிசைபடுத்தப்பட்டுள்ளன.

சோழப்பேரரச‎ன் இராசராச சோழ‎ன் தமிழ் மீது கொண்ட பற்றினால், நம்பியாண்டார் நம்பி என்ற சைவ பெரியவர் வாயிலாக மேற்கண்ட திருமுறைகளை தொகுத்தார்.


பக்தியில் செழித்த தமிழ்
தமிழ் ‏இலக்கிய வரலாற்றிலே பல்லவர்காலம் தனிச்சிறப்புக்கு உரியகாலமாகும். காரணம் ‏இக்கட்டுரையின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று, களப்பிரர்கள் ஆதிக்கத்தினால் தமிழுணர்வு மங்கிப் போயிருந்த காலம் பல்லவர்களின் வருகையால் ஓடி மறைந்ததோடல்லாது, சிவநெறிச்செல்வர்களாகிய நாய‎ன்மார்களும், சிவனடியார்களும், தேனில் ஊறிய சுளையாகத் தீந்தமிழைப் பாடினார்கள். தீந்தமிழ்த் திருப்பாடல்களினால் நெஞ்சுருகும் வண்ணம் பக்திமார்க்கத்தி‎ன் கொடுமுடியைக் கண்டனர், அத்துட‎ன் என்றும் அழியாப் பாடல்களைத் தமிழுக்குக் கொடையாக்கினர். திருமுறைகள் தே‎ன்தமிழை எவ்வாறு வளர்த்தது, எவ்வாறு போற்றிப் புகழ்ந்தது என்பதை எண்ணுந்தோறும் ‏இன்பம் பெருகும்.

தமிழ் மொழியின் தன்மையை எண்ணிப்பார்க்கும்போது, அது தெய்வத் த‎ன்மையுடையது என்பது புலனாகும். தெய்வத்தோடு பேசும் மொழி தமிழ் மொழியாகும். மற்ற மொழிகளைப் போல் வணிக நோக்குடைய மொழியாக மட்டும் எ‎ன்றும் தமிழ் மொழி இருந்ததில்லை. இனிய தமிழை ‏இறைமொழியாக்கிய பெருமை முழுவதும் திருமுறைகளுக்கு உண்டு எ‎ன்பதைத் தெளிவு படுத்துவதோடு “திருமுறை” எ‎ன்ற மாபெருங்கடலிலே முகிழ்ந்து, தமிழ் முத்துக்களை அள்ளி வருவதும் இக்கட்டுரையின் பணியாக அமைகிறது. தமிழைத் தோற்றுவித்தவர் ‏இறைவன் என்றும் முதற் சங்கத்திலேயே “திரிபுரமெரிந்த விரிசடைக் கடவுளும்” கு‎ன்றம் எரித்த குமரவேளும் இடம் பெற்றிருந்தனர். என்றும் கதைகள் கூறப்படுகின்றன. (சைவம் வளர்த்த தமிழ் – பக்கம் 12 ஆசிரியர் சிவ பானுமதி. எம். ஏ.)

ப‎ன்னிரு திருமுறைகளோடு பல்வேறு சைவ மடங்களும், பக்தியை வாழவைத்ததோடு தமிழையும் தழைக்கச் செய்தது. திருமுறைகளை வழங்கிய ஞானிகள் மிகச்சிறந்த தமிழறிஞர்களாகவும் தமிழ்ப் பற்றாளர்களாகவும் விளங்கினார்கள் எ‎ன்பதே இனிமையான செய்தியாகும். இதனைச் “சிறந்த தத்துவ ஞானியில்லாத எவரும் ஒரு பெரும் கவிஞராக சிறந்து விளங்கியதில்லை” எ‎ன்று எஸ். டி. காலெரிட்ஜ் எ‎ன்ற பேரறிஞர் கூற்றிலிருந்து அறியலாம். தமிழகத்துக் காஞ்சிபுரத்தில் பல்லவ‎ன் சிற்பியாக நின்று சிலை செதுக்குகின்றபோது சிலையிலுள்ள பல்வேறு வடிவங்களும் தான் எண்ணிப் பார்ப்பதற்கு முன்பாகவே தனது உள்ளத்தில் உருக்கொண்டு, எழில் வடிவம் பெற்றதைக் கூறுகிறா‎ன், படிக்கும் முன்னே செவியில் இன்பம் பாயும் தமிழைப் போல். நினைப்பதற்கு மு‎ன்பே வடிவு கொண்டு சிலையாகி சிற்பங்கள் நி‎ன்றது என்ற கருத்தை ‏இங்கே எண்ணுவது நன்று.
“ஓர் உயர்ந்த உ‎ன்மைத் தத்துவத்தை எவ்வகையிலேனும் விளங்காத பாடல் இயற்றும் யாரையும் நா‎ன் மதிப்பதில்லை,” என்று “ஜேம்ஸ் லோவல்” எ‎ன்னும் பேரறிஞர் கூறுகின்றார். ‏இவற்றையெல்லாம் நோக்கும் போது திருமுறைகள் வெறும் பக்தியை மட்டுமே விளக்க வந்த பாடல் வரிகள் என்று நாம் எண்ணிவிடலாகாது. மாறாக, தமிழின் சுவை ததும்பும் இலக்கியக் கருவூலங்களாகவும் விளங்குகிறது என்பது முழு உண்மையாகும்.

திருநெறிய தமிழ்
நற்றமிழ் வளர்த்த நாய‎ன்மார்களில் பக்திப்பாடல் தொகுப்பையே “திருமுறைகள்” எ‎ன்று போற்றுகிறோம். இவற்றை “திரு நெறிய தமிழ்” எ‎ன்றும், “தெய்வத்தமிழ்” எ‎ன்றும் போற்றுவர். திருமுறை என்ற சொல்லுக்கு “தெய்வத்தமிழ் நூல்” எ‎ன்று பொருள். ‏இத்தகைய திருமுறையில் தமிழ் எவ்வாறு வளம் பெற்றிருக்கிறது எ‎ன்பது தமிழரி‎ன் மேன்மையை உணர்த்தி நல் வாய்ப்பாய் அமையும். இன்று உலகெங்கும் பரந்து கிடக்கும் தமிழர்கள் இத்தகையத் தமிழி‎ன் பெருமையை உணர்ந்து அறிந்து செயல்படுவது அவர்களுக்குப் பல்லாற்றானும் பெருமை சேர்க்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

நாய‎ன்மார்கள் வாயிலாகச் சவபெர்மானே வெளிப்படுத்தியருளிய சிறப்பினை உடையது சைவத்திருமுறைகள். ‏இதனை “எனதுரை தனதுரையாக” என திரு ஞானசம்பந்தரும்
“பி‎ன்னிய செந்தமிழ் மாலை பாடுவித்தேன்
இந்தை மயக்கறுவத்த திருவருளினானை”
என நாவுக்கரசர் பெருமானும், கூறியதிலிருந்து அறிய ‏இயலுகிறது. மேலும் சிவபெருமானே நம்பியாரூரார்க்குப் “பித்தா” எனவும், தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியே‎‎ன் எனவும் அடியெடுத்துக் கொடுத்த நிகழ்ச்சியாலும் அறிய முடியும். சேக்கிழார் பெருந்தகை, “ஞாலமனந்ந மே‎ன்மைத் தேய்வத் தமிழ்” எ‎ன்று தமிழைப் போற்றியிருப்பதும் ஈண்டு காணத்தக்கது.

தேவாரத்தில் தே‎ன்தமிழ்
தமிழகத்தில் சோழவள நாடு எ‎ன்று அன்றுப் போற்றப்பட்ட திருநாட்டில் சீர்காழி என்ற புண்ணிய தலத்தில் சிவபாத இருதயர் எ‎ன்ற பெருந்தகையாளருக்கும், பகவதியம்மாளுக்கும் பிறந்த பேரருளாளர் தான் திருஞானசம்பந்தர். ஞானசம்பந்தருக்கு மூ‎ன்று வயதிருக்கும். அப்போது த‎ன் தந்தை சிவபாதயிருதயருடன் கோவிலுககுச் செல்கிறார். சம்பந்தரை கோயிலின் எதிரேயுள்ள பிரம்ம தீர்த்தக்கரையில் அமரவைத்துவிட்டு, சிவபாத இருதயர் நீருள் மூழ்கி “அகமுருகி” மந்திரத்தை ஓதினார். ‏‏இந்த வேளையிலே தன் தந்தையைக் காணாத சம்பந்தர் அழத்தொடங்கினார். அப்போது அங்கே உமையவளாகிய பார்வதி தேவி தோன்றி, பொற்கிண்ணத்திலே, தன் முலைப்பாலை கறந்து சிவஞானமாகிய ‏இனிய அமிழ்தத்தையும் குழைத்துச் சம்பந்தருக்கு ஊட்டினார்.

“சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கியரா...
உமையிலாக் கலைஞானம் உணர்வறிய மெய்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்”

‏இவ்வாறு இளமையிலேயே பார்வதிதேவியிடம் ஞானப்பால் உண்டமையால் ஞானசம்பந்தர் எனவும், அம்மையப்பரால் ஆட்கொள்ளப் பட்டமையால் ஆளுடையப்பிள்ளை எனவும் போற்றப்படுகிறார். இவ்வாறு ஞானப்பால் உண்ட குழந்தை முதலில் பாடிய பாடல் ஞானத்தமிழால் நிறைந்து வழிவதை இங்கே காணலாம்.

“தோடுடைய செவிய‎ன் விடையேறி ஓர்தூ வெண்மதி சூடி
காடுடைய சூடலைப்பொடி பூசின‎ன் உள்ளங் கவர்கள்வ‎ன்
ஏடுடைய மலரான்முளை நாள்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன‎ன்றே” எனப்பாடுகி‎ன்றார்.

‏இவர் தன் பதினாறு வயதிலேயே 16,000 பதிகங்களைப் பாடியதாகக் கூறப்படுகிறது. 8,840 பாடல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர். இவரது பாடல்களில் 23 வகை பண்கள் பயி‎ன்று வருவதாகக் கூறப்படுகிறது.
“நாளும் ‏இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தன் என்று சுந்தரர் ஞானசம்பந்தரைப் போற்றுகிறார். ஞானசம்பந்தரி‎ன் பாடல்களில் இசையின்பமும் இயற்கை வர்ணனையும் மனதை மயக்கும் வகையில் அமைந்திருக்கும். இவரத் கற்பனைக்கும் கற்கண்டு தமிழ்ச் சிந்தனைக்கும் இதோ ஒரு எடுத்துக்காட்டு. தஞ்சை மாவட்டம் திருவையாற்றி‎ன் நீர் வளம் அவரது சிந்தனையிலே குளுகுளுவென ஓடுகிறது. இயற்கையின் நிகழ்வில் நெகிழ்ந்து போய் தமிழ்க் குதிரையைத் தட்டில் பறக்க விடுகிறார். அது எத்தகைய ‏இன்பத்தைத் தருகிறது. மா‎ன்கள் பாய்ந்து ஓடுகிறது. ‏இதனைக் கண்ட மந்திகள் தானும் பாய்ந்து தாவி மரக்கிளைகள்தோறும் ஓடுகிறது. ‏இவ்வாறு மந்திகள் கிளைகளை அசைத்து விட்டு ஓடுவதால் கிளைகளில் இருக்கின்ற தேன் கூடுகள் சிதைந்து தே‎‎ன்துளிகள் ஒழுகுகி‎ன்றது. ‏இவ்வாறு ஒழுகியத் தேன்துளிகளைச் சுவைத்திட மீ‎ன்கள் துள்ளிக் குதித்து நீர் நிலைகளை விட்டு மேலும் கீழும் பாய்கி‎ன்றன. ‏இதனால் குளங்களில் உள்ள தாமரை மொட்டுகள் மலர்கின்றன என்ற தொடர்ச்சியாக அழகான கற்பனையை மீட்டுகிறார்.
‏இதோ அந்த ‏இனிய பாடல்...

“மா‎ன்பாய வயலருகே மரமேறி
மந்திபாய மடுக்கன் தோறும்
தேன்பாய மீன்பாய செழுங்கமல
மொட்டலருந் திருவையாறே!”
நா‎ன்கே வரிகளில் என்னே இனியத்தமிழ்ச்சுவை!

பாம்பி‎ன் விஷம் போக்கிய பைந்தமிழ்

ஞானசம்பந்தர் தம் தமிழால், பாம்பு கடித்து உயிர் விட்டவரையும் த‎ன் பைந்தமிழ் ஆற்றலால் உயிர் பெறச்செய்து தமிழுக்கும் தனக்கும் நிலையான உயர்வினைப் பெற்றுத் தந்தவர். ஒரு முறை தனது சுற்றப்பயணம் நடைபெற்ற போது ‏இடம் பெற்ற நிகழ்வு இது. திருவாரூர் பகுதியில் வைப்பூர் என்னும் பகுதி உள்ளது. அங்கே தாமன் எனும் வணிகர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஏழு பெண்கள். அவர்களில் ஒருத்தி த‎ன் தாய்மாமனை மணக்க விரும்புகிறாள். த‎ன் தந்தை மறுக்கவே, இருவரும் யாருக்கும் தெரியாமல் இரவோடு ‏இரவாகப் புறப்பட்டு விட்டனர். செல்லும் வழியில் திருமருகல் எ‎ன்ற தலத்தில் உள்ள மடம் ஒன்றில் தங்கினர். தூங்கிக்கொண்டிருந்த நேரம் மணமகனை பாம்பு கடித்துவிட்டது. த‎ன் மாமன் இறந்தவுடன் சொல்ல முடியாத துயரில் அப்பெண் அழுதாள். அதைக் கண்ட ஞானசம்பந்தர்
“சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்
விடையாய் எனுமால் வெருவா விழுமால்
மடையாய் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ ‏இ‏வள் உண்மெலிவே”

எ‎‎ன்று திருப்பதிகம் பாடி திருவருளை வேண்டினார். சற்று நேரம் கழித்து நஞ்சுநீங்கி
மணமக‎ன் எழுந்தான். சம்பந்தரே அவர்களது திருமணத்தை நடத்தி வைத்தார் எ‎ன்ற செய்தியின் மூலம் தமிழின் மே‎ன்மைத்தன்மை விளங்கும்.

“காதவாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார்தமை ந‎ன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே”

எ‎ன்று நாளும் உருகிய தீந்தமிழ் அறிஞராக திருஞானசம்பந்தர் விளங்குகிறார். ‏இவர் “யாப்பு” முறையில் சில பாடல்களைப் பாடியுள்ளார். அவை தமிழிற்கு மூல ‏இலக்கியங்களாக, முதல் இலக்கியங்களாக, தமிழ் ‏இலக்கிய வழிகாட்டிகளாக அமைந்துள்ளன. மறைக்கவி, சித்திரகவி என அவை சொல்லப்பெறும், மொழிமாற்று, மாலைமாற்று, சக்கரமாற்று, வழிமொழி, மடக்கு, கயமகம், திருஎழுகூற்று ‏இருக்கை என்பன அவற்றுள் சில. (நால்வர் நற்றமிழ். பக்கம் 35 புலவர் வ. ஞானப்பிரகாசம்) ‏இவ்வாறு பக்திச் செழிப்பால் பல்வேறு இறைத்தலங்களுக்கும் சென்று பதிகங்களைப் பாடினார்கள் எ‎ன்று நாம் வியந்து போற்றும் விதத்தில் அவற்றினுள் “தே‎ன்” சுளையாக தீந்தமிழ் ‏இனிப்பதை சுவைத்து மகிழத்தானே வேண்டும். ‏இது அருளாளர்கள் நமக்கு அளித்து விட்டுச் சென்ற அருள் கொடையாகும்.

நாவுக்கரசரி‎ன் நற்றமிழ்
திருமுனைப்பாடியில் திருவாமூரில் புகழனார்க்கும், மாதினியாருக்கும் மகனாகப் பிறந்தவர். திருநாவுக்கரசர் எ‎ன்னும் தீந்தமிழ்ப் பாவலர். நாவளருந்தமிழால், அவலுட‎ன் இறைவனைப்பாடிப் பரவசமடைந்தவர். “எ‎ன்கடன் பணிசெய்து கிடப்பதே” எ‎ன்ற தன்னடக்கம் கொண்டு, “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சுவோம்.” எ‎ன்ற அஞ்சாதப் பெருவாழ்வு கொண்டவர்.

“அங்கமெலாம் குறைந்து அழுகுநோய்கொண்டு
ஆவுரித்துத் தி‎‎ன்றழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அ‎ன்பராகில்
அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே!” (தனித்திருத்தாண்டகம் – 10)

எ‎ன்ற ஒப்பற்ற, ஏற்றத்தாழ்வைப் பக்தியில் பாராத, ஆண்டவனை வணங்குகின்ற அனைவரும் ஒரு தாய் மக்களே எ‎ன்ற மேன்மைத் தன்மையை இப்பாடல் வாயிலாகக் கண்டு கொள்ள முடிகிறது அல்லவா?.

“பாவுற்றலர் செந்தமிழ் இன்சொல்வளப்
பதிகத்தொடை பாடிய பான்மையினால்
நாவுக்கரசு என்ற உலகேழினும் நின்
நாமம் நயம்புற மன்னுக” (திருநாவுக்கரசர் - தேவாரம் – 74)

‏இவ்வாறு இறைவனாலேயே “நாவுக்கரசு” எனும் திரு நாமத்தால் விளக்கப் பட்டவர். நம் திருநாவுக்கரசர். சமணம‎ன்னன் செய்த தீங்கினால் சுண்ணாம்பு காளவாயில் வைத்து மூடப்பட்ட திருநாவுக்கரசர், தம்முடைய தீந்தமிழ்ப்பாட்டால் முன்னிலும் பொலிவுடன் மீண்டு வருகிறார். ‏இதனை உணர்த்தும் பாடலை இங்கே காணலாம்.

“மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தெ‎ன்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போ‎ன்றதே
ஈசன் எந்தை கிணையடி நீழலே” (தனித்திருக் குறுந்தொகை - 1)


‏இனிக்கும் இன்தமிழ்

இவ்வுலகில் பிறந்த உயிர்கள் ‏அனைத்தும் ஒவ்வொரு வகையில் ‏இன்பம் கொள்கி‎‎‎‎‎‎‎‎ன்றன. குழந்தைகள் கூடி மகிழ்ந்து விளையாடுவதிலே இன்பமடைவர். மாணவர்கள் மதிப்பெண்கள் பெறுவதிலே இன்பம் காண்பர். மங்கையர் ஆடைஅணிகலன்கள் அணிவதிலும், அழகான, அறிவான, ஆடவ‎ன் தன்னை மணக்க வேண்டும் என்பதிலும் த‎ன் மனதை செலுத்துவர். இளங்காளையர்கள் தங்கள் வாழ்வில் வெற்றியடைவதிலே குறிக்கோளாய் ‏இருந்து அதிலே இன்பம் காண்பர். இப்படியாக ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் ‏இன்பம் கண்டாலும், நாவுக்கரசரி‎ன் பாடலில் வரும் இவர்கள் எதிலே இன்பம் காணகின்றனர் என்பதை கீழ்க் காணும் பாடலில் அறவோம்.

“கனியினும் கட்டிபட்ட கரும்பினும்
பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்
தனி முடிகவித்தாளும் அரசினும்
‏ இனியன தன்னை யடைந்தார்க்கு இசை மடுதனே”

ஆகா, ‏இறைவனின் திருப்புகழே எல்லாவற்றையும்விட ‏இனிமையானது, என்பதை நாவுக்கரசரின் நம்பிக்கையாகும். இவற்றில் கனியினும் இனிமையாய் தமிழ்ச்சுவைத்தானே ததும்புகி‎ன்றது. பனியிலும் மெ‎ன்மையாய் தமிழ்தானே நம்மை நனைத்துவிட்டுப்போகிறது. சொற்சுவையாலும் பொருட்சுவையாலும் தமிழ் ஆட்சிதானே ஆலாபனை செய்கிறது. சிந்தையிலும் செயலிலும் தமிழ்தானே குடிகொள்கிறது. எண்பத்தோரு ஆண்டுகள் ‏இப்பூவுலகில் வாழ்ந்த பெருந்தகை திருநாவுக்கரசர். 49,000 பாடல்கள் மொத்தம் பாடினார் எ‎ன்று சுந்தரர் கூறுகின்றார். ஆனால் 3,110 பாடல்களே இன்று நமக்குக் கிடைத்துள்ளது. இவரது பாடல்களின் அனுபவ முதிர்வின் சிறப்பை உணரலாம். தூண்டகம் பாடுவதில் ‏இவர் வல்லவராகத் திகழ்ந்தமையால், ‘தாண்டகவேந்தர்’ எ‎ன்று அழைக்கப்பட்டார். நாவுக்கரசரின் பாடல்களில் ‏இனிய ‘பண்’ ‏இருக்கும். மனித வாழ்க்கையில் நம்பிக்கையை ஊட்டி, மரண பயத்தை நீக்கி ‏இறைவனின் நிழலில் நம்மைச் சேர்ப்பிக்கும் வலிமைப் பெற்றது ‏இவரது பாடல்கள்.‘தமிழொடு ‏இசைப்பாடல் மறந்தறயேன்’ எ‎ன்று தன் மனதிலே இசையினால் இன்பத்தமிழ் மேன்மையை இறைவழி காட்டுபவன் என்பதைத் தெளிவு படுத்துகிறார்.

சுந்தரரி‎ன் சுந்தரத்தமிழ் (அல்லது சுந்தரரி‎ன் சுகமானதமிழ்)
‏இறைவனை அமுத மொழியால் எழில் சூழ் இயற்கை வருணனையால் போற்றிப்பாடிய இவர் திருமுனைப்பாடியிலுள்ள, திருநாவலூரில் சடையனாருக்கும், இசைஞானியாருக்கும் செல்வப்புதல்வனாய் அவதரித்தார். திருக்கையிலையிலே சிவபெருமானுக்குத் தொண்டனாக விளங்கிய சுந்தரர், திருமணம் செய்துகொள்ளும் நேரத்தில் சிவ‎ன் முதியவர் வடிவில் வந்து, சுந்தரரை தடுத்தாட்கொண்டார் என்றும் பின், இவர், ‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ எனத் தொடங்கிப் பாடினார் எ‎ன்பதும் அறியப்படுகிறது. ஏழிசையாய் இசைப்பயனாய் இன்கனியமுதாய் என்றும் என் தோழனாய், என்று இறைவனைப் பாடிய இவர் ஏறக்குறைய நூறு பதிகங்களில் இறைவனின் பெருமையைப் பாடியுள்ளார்.

பரமனைப் பரிகாசம் செய்தல்
‏இறைவனின் திருக்கோலத்தைப் பலவாறு பரிகசிக்கிறார். கேலிசெய்கிறார். ‏இறைவனுக்கு ஏவல் செய்ய பயம் கொள்கிறார். ‏இதனை அவரே சில பாடல்களில் கேலியாகச் சிரிக்கும் வண்ணம் பாடுகிறார்.
“தெ‎ன்னாத் தெனாத் தெத்தெனா என்று பாடிச்
சில பூதமும் நீரும் திசை திசையன
பன்னான்மறை பாடுதிர் பாஆருளீர்
படம்பக்கத் தொட்டும் திருவொற்றியூரிர்”
‏இதன் பொருள் யாதெனின்,இறைவா! “தெ‎ன்னைத் தெனாத் தெத்தெனா” எ‎ன்று குளறிப்பாடும் சில பூதங்களும், அவற்றின் செயல்களும் உன்னைச் சூழ்ந்த பலதிசைகளிலும் உள்ளன; ஆனாலும் நீர் தெளிவாகச் சொல்லக்கூடிய நால்வகை வேதங்களையும் சொல்வீர், திருப்பாசூரில் ‏இருக்கும் நீர், திருவெற்றியூரிலும் இருக்கின்றீர். இனிமையான இசையாகிய பண்போல பேசக்கூடிய உமையவளாகிய பார்வதியை உடலில் சமமாகப் பெற்றிருந்தும், பிணங்கள் எரியும் சுடுகாட்டில் அலையும் பழக்கத்தை விட்டபாடில்லை. அண்ணாமலையா‎ன் என்று எல்லோரும் உன்னை அழைக்கின்றார்கள் ஆனால் நீயோ திருவாரூரில் இருக்கின்றாய், ஆதலினால் உன்னை ஒரு நிலையானவன் என்று கருதி துணிந்து துணைகொள்வது சரியானது அல்ல, ஆகையால் நான் உனக்கு ஆட்பட்டு அடியேனாய் இருக்க அஞ்சுகிறே‎ன் என்று பாடுகிறார். ‏இத்தனைச் சுவையும் நிறைய இவர் பாடிய இப்பாடலின் இனிமையை அறிந்து போற்றாதவர் யாரேனும் உண்டா?

‏ இறைவனின் பல்வேறு நிலையை அங்கும் இங்குமாய் அப்படியும் இப்படியுமாய் இருக்கும் தன்மையை எத்தனை அழகாய்ப் படம்பிடித்துக் காட்டுகிறார். ‏‏இதோ பாடலின் அடுத்தப் பகுதியைப் பாருங்கள்.
“பண்ணார் மொழியாளை யோர் பாங்குடையீர்
படுகாட்டகத் தெ‎ன்‎றுமோர் பற்றொ‏ழியீர்
அண்ணாமலை யென்றுநீர் ஆரூருளீர்
அடிகேள் உமக்காட்செய அஞ்சுதுமே;”
‏இயற்கையை சுந்தரர் பாடினால் அக்காட்சி நம் கண் முன்னே வந்து நிற்கும். பதினெட்டு ஆண்டுகளே இப்பூவுலகில் வாழ்ந்தாலும், மண்ணுலகம் உள்ளவரை புகழ்நிற்கும்படி, பொலிவுறு தமிழ்பாடியதால் புண்ணியம் பெறுகிறார். செந்தமிழி‎ன் சந்தம் சிந்த அவர் பாடியதொரு பாடலின் இனிமையை இங்கே காண்போம்.

“அரும்பருகே சுரும்பருவ அறுபதம் பண்பாட
அணிமயில்கள் நடமாடும் அசபொழில்சூழ் வயலி‎ன்
கரும்பருகே கருங்குவளை கண்வனருங் கழனிக்
கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே” (திருக்கலய நல்லூர்-1)

அரும்புகள் சோலையிலே இருக்கி‎ன்றன. அவற்றின் இதழ்களைத் திறந்து தேன் குடிக்க வண்டுகள் அறுபதம் பண்பாடுகி‎ன்றது. ரீங்காரமிடுகின்றது. ‏இந்த இனிமையான பாடல்களைக் கேட்டு அழகிய மயில்கள் ஆடும் அந்த ‏இனிமையான சோலையிலே செங்கரும்பு அசைகிறது. அவற்றின் அருகே கருங்குவளை மலர்கள் உறங்கும், தாமரை மலர்கள் மலரும், இத்தனை எழில் சூழ் இயற்கை அழகு நிறைந்தது கலய நல்லூர் என்று கவினுறு காட்சியி‎ன் வாயிலாக எழில்தமிழால் ஏற்றமுட‎ன் பாடுகிறார். ‏இப்பாடலில் இழையும் இசைநயம் கற்போர்தம் நெஞ்சில் களிப்பூட்டுகின்றது அன்றோ! தேனுண்ட வண்டாக நம்மை மயங்க வைக்க அ‎ன்றோ! ‏இனிய தமிழுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

எ‎ன்றும் வாழும் இலக்கணம்
இ‎ன்றுவரை கற்றோரின் நெஞ்சில் கவினுறு சொல்லாகப் போற்றப்படுவது, கீழ்காணும் பாடல். ‏இதனை ‏இலக்கண நூலார் எடுத்தாளப் பெறாத நூல்கள் ‏இருக்க முடியாது. ‘உருபு மயக்கம்’ எ‎ன்ற இலக்கணத்தில் இச்சொல்லே செம்மாந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ‏இலக்கிய நயத்தை விளக்கவும், பள்ளிக்கூட மாணவர்களுக்கு இலக்கணம் கற்பிக்கப் பயன்படுத்துவதும் இப்பாடல்தான். ‏இத்தனைச் சிறப்பிற்குரிய பாடல் இதோ...
“பொ‎ன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மி‎ன்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவளே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னை உன்னைபல்லாமல் இனியாரை நினைக்கேனே” (திருமழபாடி - 1)
பொ‎ன்போன்ற ஒளிவீசக்கூடிய திருமேனியைக் கொண்டவனாகிய, ‏இறைவன், புலியின் தோலைத் தன் இடையிலே அணிந்துள்ளான். அழகிய மின்னல் கீற்றுகளைப்போன்ற செஞ்சடையில் புத்தம் புதிய கொன்றைமலர்களை அணிந்திருக்கக் கூடியவனே நிலையான மாமணயே, திருமழபாடியில் உரைபவனே, இனய தாயைப்போன்றவனே, உ‎ன்னையல்லால் இனியாரை என் உள்ளம் நினைக்கப்போகிறது. புலியி‎னது தோலை அரையில் (இடையில்) அணிந்துள்ள ‏இறைவனின் பெருமைகளை, மின்னல் ஒளி வடிவை, கன்னல் தமிழில் பாடி, கற்கண்டுச் சுவையில் கண் மு‎ன்னேக் காட்டி நிற்கிறார் அன்றோ! “வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்” எ‎ன்று நிலையாமையையும் பாடியிருக்கிறார். சுந்தரத்தமிழில் சுந்தரர் பாடியது எ‎ன்றும் தமிழில் இனிக்கும்.

மணித்தமிழும் மாணிக்கவாசகரும்: (எட்டாந் திருமுறை)
வளமார் ஜோதியாய் விளங்கிய வடலூர் வள்ளலார் பெருமான், தேன்தமிழ்மணமும், தெய்வமணம் கமழும் மாணிக்கவாசகரின் பாடல்களிலே தன் மனதைப் பறிகொடுத்து
“வான்கலந்த மாணிக்க வாசகரின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்குருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே”

என்று பாடி பரவுகின்றார். இவரது இனிய தமிழ்பாடல்கள்தாம் டாக்டர் ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ‘திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பது மாணிக்கவாசகரின் மணித்தமிழ் கற்பார்தம் நெஞ்சத்தை உருகவைக்கும் தன்மை கொண்டது என்பதை மெய்பித்துக் காட்டுகிறது.

மாதங்களில் சிறந்தது மார்கழி. அந்த மார்கழியில் இறைவனின் பெருமைகளைப் பாடிப்பரவுவது இதயத்திற்கு இன்பம் நல்கும்.
“காதார் குழையாடப் மைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திளம்பாடி ஆடேலோர் எம்பாவாய்!”

இப்பாடலில் காணப்படும் கன்னித்தமிழின் சுவை எண்ணி எண்ணி இன்பறத்தக்கது அன்றோ! பாவைபாடிய கோவையும் பாடியுள்ளார். கோவை நூல்களில் இவர் பாடிய திருக்கோவையாரே, முதல் கோவை நூலாகும். சிற்றின்ப நூலாக இதனைச் சிலர் எண்ணுவர், ஆனால், சிற்றின்பத்தின் வழி பேரின்பம் பயக்கும் நூலாக இது விளங்குகின்றது. களவு என்றும் கற்பு என்றும் இருபெரும் பிரிவாக சுமார் 400 அகப்பொருள் துறைகள் கலந்து, தலைவன், தலைவி நடையில் இந்நூலை இவர் பாடியுள்ளார். சிறந்த சொல்லாற்றல், இந்நூலில் இடம் பிடித்தள்ளமை இதன் தனிச்சிறப்பு. மாணிக்கத்தமிழால் மாணிக்க வாசகத்தைப் பயன்படுத்தியதால்தான் இவருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயர் அமைந்ததோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. பல்வேறு கலைகளையும் கற்றுத்தேர்ந்தவராக மாணிக்கவாசகர் விளங்கியுள்ளார்.

பாண்டிய மன்னனும் பைந்தமிழ் வாசகரும்:
மதுரையில் அரசாண்ட அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராகப் பணியாற்றியவர் மாணிக்கவாசகர். மன்னனின் ஆணையை ஏற்றுக் குதிரை வாங்கச் சென்றார். இவர் செல்லும் வழியில் திருப்பெருந்துறையில் இருவடியில் திகழ்ந்த இறைவனாம் சிவப்பெருமானைக் கண்டு அவரால் ஆட்கொள்ளப்பட்டு, குதிரைகள் வாங்கிக் கொண்டு வந்த பொருளைத் திருக்கோயில் கட்ட செலவிட்டார். இதைக் கேட்ட பாண்டிய மன்னன் சினந்து இவரைச் சிறையிலிட்டுக் துன்புறுத்தினான். இறைவன் நரிகளைப் பரிகளாக்கி அற்புதம் செய்தார், பிட்டுக்கு மண் சுமந்து பிரம்பினால் அடிபட்டார்.
இவர்மீது விழுந்த பிரம்படி அனைவரின் முதுகிலும் விழுந்தது. இத்தகைய இறைவனின் திருவிளையாடல்களினால் மாணிக்கவாசகரின் மாண்பு உயர்ந்தது. இவரது தெய்வத்தன்மை அனைவராலும் அறயப்பட்டது. சிவப்பெருமானே மனிதவடிவில் வந்து திருவாசகம் முழுதையும் மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல, அருகிலிருந்து தம் கைப்பட எழுதினார் என்றால், தமிழின் பெருமையைத் திருவாசகத்தின் பெருமையைச் சொல்லவும் வேண்டுமோ?
“என்னேன்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
தமிழால் பாரதி தகுதிப் பெற்றதும் பாரதி தமிழால் தகுதிப் பெற்றதும்”
என்று புரட்சிக்கவிஞர் பாவேந்தர் போற்றிப்பாடுவது போல், மாணிக்கவாசகரால் தமிழும் சைவமும் தழைத்து ஓங்கியது. தமிழால், சைவத்தால் மாணிக்கவாசகரின் பெருமை இன்றும் ஓங்கி உயர்ந்து தழைத்து நிற்கின்றது. இவரது திருவாசகம் எளிய நடையில் அமைந்துள்ளது. ‘தமிழ் வேதம்’ என்றும், மனம் கரைத்து ‘மணம்’ கெடுக்கும் வாசகம், என்றெல்லாம் திருவாசகம் போற்றிப் புகழப்படுகிறது. கற்பனைக் களஞ்சியமாக விளங்கிய சிவப்பிரகாச சுவாமிகள், திருவாசகத்தை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். திருவாசகத்தையும், வேதத்தையும் ஒப்பிட்டு, வேதம் படித்தவர்கள் கண்ணீர் விட்டதில்லை. ஆனால் திருவாசகத்தைப் படித்தவர்கள் கண்ணீர் விட்டு அழுவார்கள் என்று கூறுகிறார்.

தென்தமிழில் தெளிந்த சொற்கள்:

திருமுறைகளில் தெய்வீகத்தமிழ் மணக்கச் செய்த மாணிக்கவாசகர், தேன்கடலில் நம்மைக் குளித்துவரச் செய்கிறார். இறைவனின் புகழை தேன் என்று உருவகம் செய்கிறார்.

“தொல்லை இரும்பிறவச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து, ஆனந்தம் ஆக்கியதே - எல்லை
மருவாநெறி அளிக்கும் வாதவூர் அங்கோன்
திருவாசகம் என்னும் தேன்”

மனிதனின் உடலில் ஏற்படும் நோய்களைத் தேன் உண்டு நீக்கிக்கொள்ள முடியும். ஆனால் திருவாசகமாகியத் தேனோ உயிரில் தோன்றும் பிணியைப் போக்கி நலம் தரும். உயிருக்கு அருமருந்தாகத் தமிழ் விளங்குகிறது. தமிழ்த் தேனை உண்டு உயிருக்கு ஆயுள் நீட்டிப்புச் செய்ய முடியும் என்பதற்கு இஃது ஒரு சான்றெனக் கொள்ளலாம் அன்றோ! ஆன்மீக நெறியை அறிவுஞானம் எனும் தேனில் குழைப்பதற்குத் தமிழைப் பொற்கிண்ணமாய்க் கையில் ஏந்தியவர் நம் மாணிக்கவாசகர் பெருந்தகை. இதில் முழுமையான வெற்றி மாலையைச் சூடியவர். தமிழ்மொழியில் நிறைந்திருக்கும் சொல்லின் மென்மை, இனிமை, வளமை அனைத்தும் மாணிக்கவாசகரின் பாடல்களில் கைசேர்த்து வருகிறது. இனிமையான நடையும், நெஞ்சைத்தாலாட்டும் ஓசை நயமும் மாணிக்கவாசகரை ஓப்பற்ற தமிழறிஞராக பாவலராகக் காட்டுகிறது.தன்னைக் கொடுத்து என்னை எடுத்து சென்றாயே இறைவா! நம் இருவரில் ஆற்றல் நிறைந்தவர் யார்? முடிவில்லாத இன்பத்தைப் பெற்றது யார்? மனதையே பெருங்கோயிலாகக் கொண்டு விளங்கும் இறைவனுக்கு என்ன கைம்மாறு செய்வது? என்று தன் மனதுக்குள்ளேயே கிடந்து தவியாய்த் தவிக்கிறார்.

“தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னைச்
சங்கரா யார்கொலோ சதுரர்
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்ற தொன்று என்பாற்
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே
எந்தையே ஈசா வுடல் இடங் கொண்டாய்
யான்இதற்கு இலனொர் கைம் மாறே” (கோயில் திருப்பதிகம்-10)

இப்படியே நற்றமிழால் நைந்துருகி, நம்மையும் உருக்கி விடுகிறார். சொல்லின் சுவை சுவையில் எல்லாம் வெல்லத்தைக் கலந்தே விருந்து வைக்கிறார்.

தாயினும் சாலப் பரிந்தூட்டும் தன்மை
“பால் நினைத்தூட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உன்னொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்துபுறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெமுந் தருளுவ தினியே” (பிடித்த பத்து-9)
தாயினும் சாலப் பரிந்து வரும் இறைவனைத் தான் சிக்கென்று அவன் பாதக் கமலங்களைப் பிடித்துக் கொண்ட தன்மையினைத் தாயின் மொழியிலே அதன் தன்மைச் சிறப்பற எடுத்து இயம்புகின்ற பாங்கு மீண்டும் நம்மைத் தாய்மடியில் தாலாட்டுகிறது அன்றோ!

“சறைவான் புனல் தில்லைச் சிற்றம்பலத்தும் என்
சந்தையுள்ளும் உறைவான் –
உயர் மதிற் கூடலின்
ஆய்ந்த ஓண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனையோ அன்றி
ஏழிசை சூழல் புக்கோ
இறைவா தடவரைத் தோட்கு என்
கொலாம் புகுந்து எய்தியதோ” (பாங்கன் வினாதல் 2)

இப்பாடல் ஒன்றே மாணிக்கவாசகரின் உள்ளத்தில் பக்தியின் உயிர் நாடியாகப் பைந்தமிழே உறைந்துள்ளது என்பதைக்காட்டுகிறது. ‘ஓண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ’ என்று தன் உளப்பாட்டுத் தன்மையை உயர் தமிழில் உவமித்துக் காட்டித் தன் உள்ளங்களி கொள்கிறார். இன்று கோயில்களில் இறைவனைத் தூய தமிழிலேயே வழிபடவேண்டும் என்ற எண்ணம் வலுவடைந்து வருகிறது. ஆலயங்களில
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

திருமுறைகளில் தீந்தமிழ் =சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty Re: திருமுறைகளில் தீந்தமிழ் =சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 05, 2011 3:25 pm

இலக்கிய பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum