தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கொழும்பு வழியே ஒரு பயணம்..

3 posters

Go down

கொழும்பு வழியே ஒரு பயணம்..  Empty கொழும்பு வழியே ஒரு பயணம்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Apr 09, 2011 10:48 am

காற்று வீசிடாத வான் கிழித்து, பசுமை பூத்திருந்த தரை நோக்கி விரைந்தது நான் பயணிக்கும் அந்த ஸ்ரீலங்கன் விமானம்.

என் தாயின் மடி தொடும் உணர்வில் – விமானம்
நெருங்க நெருங்க ஆசை பூரித்து, வாசலின் முன்வந்து, தரையிறங்கியதும்
திறக்கவிருக்கும் கதவு நோக்கிச் நின்றுக் கொண்டேன். விமானம் அறிவித்திருந்த
நேரப் படி தாமதமின்றி கொழும்பு விமானதளம் நோக்கி தரையிறங்கியது.

விமானப் பணிப்பெண் ஒருவள் அவசரமாக
என்னருகில் ஓடிவந்து, விமானம் தரையிரங்குகையில் அமர்ந்துக் கொள்ளவேண்டும்
நிற்கக் கூடாது என்று கட்டளையிட்டாள்.

என் தேசத்தின் சுவாசக் காற்றினை முதன்
முதலாக சுவாசிக்கும் தருணத்திற்குக் காத்திருப்பவனாய், இரண்டு கைகளையும்
இறுக்கிக் கட்டிக் கொண்டு ஜன்னலின் வழியே கொழும்பு நகரத்தின் இயற்கை
வளங்களை பார்தாவரே; அருகிலிருந்த இருக்கை ஒன்றினில் அமர்ந்துக் கொண்டேன்.

சற்று நேரத்தில் விமானம்
விமானநிலையத்திலிருந்து சற்று தூரத்திலேயே நின்றுவிட, எல்லோரும் அவசர
அவசரமாக தற்காலிக படிக்கட்டின் வழியே இறங்கி அங்கு வெளியே நின்று
கொண்டிருந்த ஒரு பேருந்தினுள் ஏறிக் கொண்டிருந்தார்கள்., நானும் மெல்ல என்
ஈழத்து மண்ணை முதல்முதலாய் தாயை பார்ப்பவனைப் போல பார்த்துக்கொண்டே
இறங்கினேன்.

மேலிருந்து கீழிறங்குகையில் உள்ளே ஒரு
படபடப்புப் பற்றிக் கொண்டது. ‘ஏனோ என் தாயின் தலை மேல் பதம் பதிக்கப்
போகிறோமோ எனும்போல் ஒரு மரியாதை அது. என் தாய்மண்ணின் உடல் தொட்டுப்
பூரிக்கப் போகிறோமோ எனும் படபடப்பு அது.

பின்னால் வருபவர்கள் என் தயக்கம் பார்த்து
நகர்ந்து எனை கடந்து முன்னே சென்று விட, நான் தரை தொடும் முன்
சற்றமர்ந்தவாறு கீழே குனிந்து முதலில் ஒரு கைப்பிடி மண்ணெடுத்து என் ஈழத்
தாயே என கண்களில் ஒற்றிக் கொண்டு ‘கால் பதித்தேன். அருகில் எனை கடந்து
சென்றவர் ஒருவர் சிரித்துக் கொண்டே போனார்.

அதை பற்றி எல்லாம் எனக்கு யோசிக்கவே
தோணவில்லை. உள்ளே இம்மண்ணின் விடுதலைக்கென இத்தனை வருடங்களாய் சிந்திய
ரத்தம் அனைத்தும் ஒரு நொடி மண்ணைத் தொட்டதும் எனக்குள்ளே சுட்டு
குளிர்ந்தது.

வெகு நாளின் ஆசை இது. ஈழத்திற்கு
வரவேண்டுமெனக் காத்திருந்த வெகுநாளின் கனவு இது. எப்படியோ இன்று அது
நிகழ்ந்துவிட்ட மகிழ்வில் திளைத்து நடக்கிறேன்..
‘எங்கோ என்றோ பிரிந்து போன உறவுகளின்
ஸ்பரிசம் என்னுள்ளே பட, ஊரெல்லாம் சுற்றியலைந்த நான் இன்று எனக்கான ஒரு
தேசத்தில் கால் பதித்து விட்டதாய் எண்ணி மகிழ, என் இத்தனை வருட
காத்திருப்பிற்கு எனக்கு வெகுமதியாகக் கிடைத்தது வெறும் நான்கு மணி நேர
தங்கும் அவகாசம் தான்.
——————————————————————————————-(வித்தியாசாகர்)

(தொடரும்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கொழும்பு வழியே ஒரு பயணம்..  Empty Re: கொழும்பு வழியே ஒரு பயணம்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Apr 09, 2011 10:48 am

நானொருலண்டன்
செல்லவிருக்கும் பயணி. இடையில் நான்கு மணிநேரம் கொழும்பு விமானத்தில்
விமானம் தரையிறங்கி காத்திருக்க வேண்டுமென்பது ஸ்ரீலங்கன் விமானத்தின்
நிர்வாக பயணத் திட்டம். அதன்மூலம் என் மண்ணினைத் தொட்டுக் கடந்து போக இந்த
பதினேழு வருட வெளிநாட்டுப் பயணத்தில் இன்றுதான் இப்படி ஒரு வாய்ப்பமைந்தது.

விமான நிலையம் மிக சுத்தமாகவும், காண
கலாச்சார பார்வை பொருந்தியதாகவும், புத்தர் இருந்துச் சென்ற வாசத்தை
காற்றில் மிச்சம் வைத்துக் கொண்டும் ‘அழகாக காட்சியளித்தது.

ஒரு பரவசத்தோடு இயற்கை வளம் பொருந்திய
அந்த அழகிய கொழும்பு நகரத்தின் நாலாப்புறமும் சுற்றிப் பார்க்கிறேன்.
கண்ணாடிகளின் வழியே தென்படும் மலைப்பாங்கு பிரதேசங்களும்; மரங்களின் ஏற்ற
இறக்க அமைப்புக்களோடு கண்ணைப் பறிக்கும் பசுமையின் கொள்ளை அழகும் ஒரு
ரசனையான மனப்பான்மைக்கு இட்டுச் செல்லும் காட்சிகளையும் கண்டு அதனூடே என்
மூதாதையர் வாழ்ந்த பெருமையை எல்லாம் எண்ணி நிறைவடைந்துக் கொள்கிறேன்.
அடுத்த ஒரு அரை மணி நேரத்திற்கு, இங்குமங்குமாய் விமான நிலையத்தினுள்
சுற்றித் திரிந்துவிட்டு, எங்கேனும் அமைதியாக உட்கார எண்ணி, ஆட்கள் குறைவாக
உள்ள ஓர் அமைதியான இருக்கைப் பார்த்து அமர்ந்துக் கொண்டேன்.

மனதிற்குள், வருவதற்கு முன் நடந்த அத்தனை
நிகழ்வுகளும், ஒவ்வொன்றாய் நினைவில் வந்து இழையோடிக் கொண்டிருந்தன. ஏதோ
பெயருக்கு வாழ்வதாய் எண்ணிக் கொள்ளுமொரு வாழ்க்கை தானே இது. போன மாதமெலாம்,
என்று போய் என் ஊர் உறவு மக்களோடு புழங்கிக் கிடப்பேனோ என்று ஏங்கிக்
கிடந்தேன்.

பின், விடுமுறை கிடைத்து ஊருக்கு சென்று
யாரை பார்த்தேன் யாரை பார்க்க வில்லை, என்ன செய்தோம், என்ன செய்யவில்லை
என்று கூட யோசிக்கும் முன், ஒரு மாத விடுமுறை முடிந்து, என் கை பிடித்தழுத
உறவுகள் நண்பர்கள் என எல்லோரையும் விட்டுவிட்டு இப்படி தனியே வந்தமர்ந்துக்
கிடப்பதும், மீண்டும் ஊர் செல்லவிருக்கும் அந்நாளுக்காய் வருடங்களை
நோக்கிக் காத்துக் கிடப்பதும் ‘ச்ச..’ ஓர் வாழ்வா ன்று தோன்றியது..

எதையோ இழக்கிறோம், ஏதோ கிடைக்கிறதென்று;
அவ்வளவுதான் வாழ்க்கை. வாழ்க்கை முழுதும் இப்படித் தான் நாமெல்லாம், என்று
உள்ளே மனம் நொந்து, கண்ணிமை நனைய, அக்கம்பக்கம் திரும்பி யாரேனும்
பார்க்கிறார்களா என்று பார்த்துவிட்டு கண்களை துடைத்துக் கொண்டேன்.

கண்கள் வெறிக்க சில மணித்துளிகள் வரை
தூரத்தில் காற்றினால் ஆடிக் கொண்டிருக்கும் மரங்களை பார்த்துக்
கொண்டிருக்கையில், மீண்டும் தனக்குள்ளே தான் நொந்துப்போக
வேண்டிதானிருந்தது. அங்கே வசந்தமும் மரம் செடி கொடிகளும் இருக்கத் தான்
செய்கின்றன, ஆனால் காற்று வீசுவதை கண்ணாடிக்குள்ளிருந்து பார்க்க மட்டுமே
நாம் விதிக்கப் பட்டிருக்கிறோம். நம் வாழும் வாழ்க்கையும் இப்படித் தானே;
எல்லாமிருந்தும் இடையே பணம் எனும் ஒரு கண்ணாடி எல்லாவற்றையும் மறைத்துக்
கொண்ட வாழ்க்கை தானே நம் வாழ்க்கையும் என்று எண்ணிக் கொள்ள, மனது மீண்டும்
விக்கித்தது.
இனம்பாரா வருத்தத்தில் கண்களை மூடிக்
கொள்ள, எதேச்சையாய் யாரோ என்னை நோக்கி வருவதாய் உணர்ந்து எதிர்புறம்
நோக்கித் திரும்பினேன், இரண்டு பேர் ஆர்மி காரர்கள் துப்பாக்கியோடு என்னை
பார்த்து ஓடி வந்துக் கொண்டிருந்தனர்.
——————————————————————————————–(வித்தியாசாகர்)

(தொடரும்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கொழும்பு வழியே ஒரு பயணம்..  Empty Re: கொழும்பு வழியே ஒரு பயணம்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Apr 09, 2011 10:48 am

இருவரும், என்னருகில்
வந்து நின்று துப்பாக்கியை சரி செய்து வைத்துக் கொண்டு. யார் நீ
என்றார்கள். லண்டன் செல்லவிருக்கும் ஒரு பயணி என்றென். அப்படியா விமானச்
சீட்டு காட்டு என்றார்கள், காட்டினேன். கடவுசீட்டு காட்டு என்றார்கள்,
காட்டினேன். அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து, சிங்கள மொழியில் ஏதோ
பேசிக் கொண்டனர்.

நான் ஒன்றும் புரியாதவனாய் அவர்களையே
பார்க்க, பையில் என்ன வைத்திருக்கிறாய் பிரி என்றார்கள், பிரித்து உள்ளே
வைத்திருந்த மடிக் கணினியினை காட்டினேன். சரி சரி போ என்று ஆங்கிலத்தில்
சொல்லிவிட்டு, முகத்தை சற்று சந்தேக தொனியோடு வைத்துக் கொண்டு என்னைப்
பார்க்க, நான் எங்கும் போக விரும்பவில்லை, என் விமானம் புறப்பட இன்னும்
அவகாசங்கள் உள்ளன என்றென்.

அவர்கள், ஒன்றும் பேசிக் கொள்ள வில்லை.
எப்படியோ கிட என்பது போல் ஜாடை செய்துவிட்டு, சட்டெனத் திரும்பி
அவர்களுக்குள் என்னவோ விவாதித்துக் கொண்டு வந்த வழியே போயினர். நான்
ஒன்றும் புரியாதவனாய், சற்று பின்னோக்கி தலைதிருப்பி என் இருக்கைக்கு
பின்னால் இட்டிருந்த கண்ணாடிக்குள்ளிருந்து தெரியும் என் தோற்றத்தினை
பார்த்தேன்.

லேசாக வளர்ந்து; வரும் அவசரத்தில் வெட்டாத
தாடியும், அழுத கண்ணீரில் நனைந்து; பின்னரும் கவலையில் கழுவாத முகமும்,
ஆங்காங்கே கசங்கிய கருப்பு கலந்த அடர் நீலச் சட்டையும், தோளில் மாட்டிவந்த
மடிக்கணினிப் பையும், எல்லாவற்றையும் விட; பார்த்த உடனே தெரியும் ‘தமிழன்’
என்னும் முகமும்தான் அவர்களின் சந்தேகத்திற்கு காரணம் போலென்று எண்ணிக்
கொண்டேன்.

அவர்கள் விமான நிலையத்தின் வெளியே தமிழரை
பார்க்கும் பார்வையின் நம்பிக்கையற்ற தன்மை; விமான நிலையத்தின் உள்ளே
'தெள்ளெனத் தெளிந்த நீர்போல்' புரிந்தது. எம் நிலை என்று மாறும் இறைவா
என்றெண்ணி கண்களை அழுந்த மூடி, பின்னால் தலை சாய்த்துக் கொண்டேன்.

நேற்றைய ஞாபகங்கள் மீண்டும் வந்து
நினைவைத் தீண்டின. நேற்று விமான சீட்டு வாங்க சென்றதும், வாங்க சென்ற
இடத்தில் இந்த தேசம் பற்றி பேசிக் கொண்டதுமெல்லாம் நினைவிற்கு வர,
கிராமத்து நடுவே அமர்ந்து வெளிநாடு போக விமான சீட்டு பதிந்துக் கொடுக்கும்
அந்த அண்ணன் மேகநாதனும் நினைவிற்கு வந்தார்.

அவர் ஈழம் பற்றியும் அதற்கான போராட்டம்
பற்றியும் இன்றைய நிலவரங்கள் பற்றியுமெல்லாம் பேசியது, கேட்டது, நான்
கோபமுற்றது பின்பு கைகுலுக்கிப் பிரிந்தது என எல்லாம் ஒவ்வொன்றாய்
கோர்வையாக நினைவில் வந்தது.

திடிரென யாரோ எதிரில் நிற்பது போல் தெரிய,
பட்டென கண்களை திறந்தேன், வேறு மூன்று ஆர்மி காரர்கள் நின்றிருந்தனர்.
சற்று பதட்டமாக எழுந்து நின்றேன்..

பரவாயில்லை பரவாயில்லை அமர்ந்துக் கொள்
என்றனர். பின் சிரித்து கைகுலுக்கி பெயரென்ன என்றார்கள், சொன்னேன்.
எங்கேயிருந்து வருகிறாய், எங்கேப் போகிறாய் என்றார்கள்; மொத்த விவரமும்
சொன்னேன். ஒருமாதிரி இருக்கிறாயே பார்க்க; உடம்பிற்கு ஏதேனும் முடியலையா
என்றார்கள். இல்லை, வீட்டை நினைத்துக் கொண்டேன், அதான் சற்று வருத்தம்
என்றேன். அதற்காக கவலைப் பட்டால் பின் மனிதன் தன் பயணத்தை உலக எல்லைவரை
எட்டித் தொடுவதெப்படி என்றார்கள். என்னைப் பொருத்தவரை உலகமே என் வீட்டார்
தான் என்றென். உறவுகளை பார்த்துப் பிரிவது பெரிய வருத்தம் தான், இரண்டு
நாளானால் சரியாகும் கவலைபடாதே என்றார்கள்.

அதுவரை அமைதியாக நின்றிருந்த மூன்று
பேரில் ஒருவர், இன்னும் எத்தனை மணிநேரம் தங்கிப் போக வேண்டும் என்றார்.
நான் மறதியாக தமிழில், நான்கு மணிநேரம் என்றென். அவர் மன்னிக்கவும் எனக்கு
தமிழ் அத்தனை புரியாது என்று ஆங்கிலத்தில் சொன்னார். உடனே அருகிலிருந்த
இருவரும் உடன் சேர்ந்து நாங்கள் சிங்களவர்கள் என்று சொல்லி புன்னகைத்தனர்
நயமான ஆங்கிலத்தில்.

நானும் மனிதரிடையே வேற்றுமை காட்டிக்
கொள்ளவேண்டாமே என்றெண்ணி, அப்படியா நல்லது நல்லது, விமானநிலையம் அழகாக
சுத்தமாக உள்ளது, ஆங்காங்கே தமிழில் கூட எல்லாமே எழுதி இருக்கிறதே என்றென்.

அவர்கள், ஆம் ஆம், தமிழ் எமது இரண்டாம்
ஆட்சி மொழி என்றார்கள். எனக்கு அந்த இரண்டாம் என்பது சற்று வலிக்கத் தான்
செய்தது. யாரை வந்து யார் இரண்டாம்பட்சமாக்குவது என்று எண்ணிக் கொண்டாலும்
அதை காட்டிக் கொள்ளவேண்டிய மனிதர்களல்ல இவர்கள் என்று நினைத்துக் கொண்டு,
அப்படியா மகிழ்ச்சி என்றென்.

சாப்பிட்டாயா என்று கேட்டார்கள் மூவருமாக.
இல்லை, பசி தெரியவில்லை என்றென். தேனீர் ஏதேனும் வேண்டுமா என்றார்கள்.
எழுந்து அவர்களின் கை பற்றிக் கொண்டேன். மிக்க நன்றி அதலாம் ஒன்றும்
வேண்டாம், மனசு கொஞ்சம் கனத்து கிடக்கிறது, உங்களின் உபசரிப்புக்களுக்கு
நன்றி. தனியாக அமர்ந்திருந்தால் போதுமென்றேன்.

அவர்கள் சிரித்துக் கொண்டே
கைகுளுக்கிவிட்டு, எங்களின் விமானத்தில் பயணிப்பதற்கு நன்றி, மீண்டும்
அடுத்த பயணத்தில் சந்திபோம் என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே என்னைக்
கடந்து போயினர். அதில் ஒருவர்வேறு சற்று தூரம் சென்று வளைவில்
திரும்பும்முன் நின்று என்னைத் திரும்பிப்பார்த்து சிரித்தவாறே கையசைத்துச்
சென்றார்.

பாறைக்குள் நீரில்லாமல் இல்லை, தமிழருக்குத் தான் தக்க இடமும்; போதிய விடுதலையும் இன்னும் கிடைக்கவில்லை' என்று எண்ணிக் கொண்டேன்..
-------------------------------------------------------------------------------------------வித்தியாசாகர்
தொடரும்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கொழும்பு வழியே ஒரு பயணம்..  Empty Re: கொழும்பு வழியே ஒரு பயணம்..

Post by சிசு Sat Apr 09, 2011 12:03 pm

பயணத்தைத் தொடர நானும் காத்திருக்கிறேன்...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

கொழும்பு வழியே ஒரு பயணம்..  Empty Re: கொழும்பு வழியே ஒரு பயணம்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Apr 09, 2011 2:36 pm

சற்று நேரத்திற்கெல்லாம், எதைஎதையோ யோசித்து அசை போட்டவாறே அயர்ந்து போனவனாக கண்களை மூடிக் கொண்டு இருக்கையின் மீது அமர்ந்தவாறே சாய்ந்து படுத்துக் கொள்ள, அந்த அண்ணன் மேகநாதன் நினைவிற்கு வந்தார். அவரோடு பேசியதெல்லாம் கூட நினைவிற்கு வந்தன. கைகளை மேலே உயர்த்தி உடம்பை சற்று முறுக்கி ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். ஒவ்வொன்றாய் எல்லாம் நினைவில் ஊரின...

"வாங்க சத்யா.., எங்க சொன்னீங்க துபாய்தானே"

"இல்லைண்ணே, லண்டன் போகணும் துபாய் வழியா இருந்தாலும் பரவாயில்லை"

"லண்டனா...., என்னைக்கு போனோம்..?”

“நாளைக்குண்ணே, முன்பே தொலைபேசியில் அழைத்து சொன்னேனே”

“ஓ.. மறந்து போனேன்யா..., நீ வருவியோ மாட்டியோன்னு யார் கண்டா...?”

“அதெப்படிண்ணே சொல்லிட்டு வராம, எப்பவும் எடுக்குறவக தானே..”

“சரி, என்னைக்கு வேணும்?”

“நாளைக்கு..”

“நாளைக்கா??!!!!!!! நாளைக்கு லண்டனுக்கு சீட்டு இல்லைன்னு சொன்னாப்ப்லையேப்பு..."

"பாருங்கண்ணே.., வேறு வழி மாறி போற மாதிரி ஏதாவது இருக்கான்னு பாருங்க”

“செத்த இரு, நான் எங்க பார்க்கிறது, கேட்டு தான் சொல்லணும்”

“சரி கேட்டு தான் சொல்லுங்க..”

அவர் சற்று சலிப்பாகவும் வீம்பாகவும் கொஞ்சம் பின்னால் நகர்ந்து தொலைபேசியை எடுத்து நகரத்து டிராவல்ஸ் ஒன்றின் தொடர்பு எண்களை அழுத்தி யாரிடமோ பேசினார். நலமெல்லாம் விசாரித்துப் பின் விவரம் சொன்னார். இவ்வளவு குசலாம் விசாரிப்பதிலேயே தெரிந்தது இவர் எத்தனைப் பேருக்கு இங்கே பயணச் சீட்டு பதிந்துக் கொடுக்கிறார் என்று.

இருந்தாலும் எனக்கும் இவரை விட்டால் வேறு வழியில்லை. நம்மால் நகரத்து தூரம் வரைச் சென்று விமானச் சீட்டு வாங்க இயலாது. நேரமும் போதுமானதாக இல்லை. போனமுறை இவர் எடுத்துக் கொடுத்த நம்பிக்கையில் தான் இம்முறையும் வந்தேன். அதற்குள் பேசிக் கொண்டே இருந்த அவர் என் பக்கம் பார்த்து தொலைபேசியின் ஒரு முனையை கையில் மூடிக் கொண்டு -

"ஸ்ரீலங்கா வழியா தான் இருக்காம் பரவாயில்லையா...?" என்றார். கண்ணாடி அவருடைய மூக்கின் மேல் இறங்கி அவரின் கண்களே என்னை கேள்வி கேட்டன. இருந்தாலும் ஸ்ரீலங்கா என்றதும் கொஞ்சம் பரபரப்பு கூடியது.

"ஸ்ரீலங்காவா!!!!!!!!!!!!!!!!? பரவாயில்லையாவா!!!!!!!!!!!? என்னண்ணே நீங்க, தாரளாமாக போடுங்க, புண்ணியமா போகும் உங்களுக்கென்றேன்.

"இல்லைப்பா, அங்க வேற சண்டை, பிரச்சனை, அது இதுன்றான்களே அதான் கேட்டேன்"

"ஆமாம், சண்டை தான் நடக்கிறது, காலங்காலமாய் போராடும் மண்ணிற்கான, உரிமைக்கான சண்டைண்ணே அது.. "

"அதான், அதனால தான், வேணுமான்னு கேக்குறேன்.., பொதுவா சிலபேர் இலங்கை வழி இல்லாம போடுங்கன்னு தான் கேட்டு வாங்குறாங்க"

"உண்மையாவா சொல்றீங்க???"

அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவரிடம் எதற்கோ சரியென்று சொல்லிவிட்டு இணைப்பினை துண்டித்து வைத்துவிட்டு -

"உண்மையைத்தான் சொல்றேன், பொய் சொல்ல எனக்கென்ன ஆசையா. அவன்தான் சண்டை போடுறானாமே அவனோட நாட்டுக்கு ஏன் வருமானம் தரதுன்னு தான்"

"ஆமாம்ணே; அதுவும் யோசிக்கவேண்டிய விஷயம் தான்"

"இருந்தாலும் நம்ம கிட்ட வரதே ஒன்னோ ரெண்டோ கஸ்டமர்தானேப்பு, அதுக வேணாம்னு சொல்லும்..? எதுக்கோ என்னவோ யார் கண்டா, போவ பயமோ என்னவோ; தமிழன்னு சொல்லி ஆர்மி காரன் அடிச்சிப் புட்டானா?”

அவர் நெக்கலாக என்னைப் பார்த்து கண் சிமிட்டினார். எனக்கு அந்த கண்ணைப் பார்த்து ஓங்கி ஒரு குத்து விடலாமா என்று கோபம் வந்தது.

"ஏன் அப்பு உன்னை அடிச்சிப் பிடுவான்னு பாக்குறியா?"

"மேல கைபட்டா தலைய திருவி; தமிழன்னா யாருன்னு காட்டுவேன்"

"இந்த வாய் ஒண்ணுதான் தமிழனுக்கு"

"ஒட்டுமொத்தமும் அப்படி இல்லைண்ணே"

"ஒட்டுமொத்தமும்னா ?"

"உன் போராட்டமும் என் போராட்டமும் சோத்துக்கும் தன் பிழைப்புக்கும் தான், அவர்கள் தமிழ் தேச உணர்வுக்காகவும்; தன் விடுதலைக்காவும் போராடுறவுங்கண்ணே "

"இலங்கை காரங்களா..., எல்லாம் ஒரு குட்டையில ஊறின மட்டை தானே?"

"என்னண்ணே பேசுற நீயி, தமிழன்னா உனக்கு என்ன நீயும் நானும்னு மட்டும் நினைச்சியா? உன்னை மாதிரி என்னை மாதிரி தன் வயித்துக்கு சாவுறவன்னு நினைச்சியா? காலங்காலமா தனகுன்னு ஒரு தேசமும் தன்னிடமிருந்து பறித்துக் கொண்ட மண்ணின் சுதந்திரத்தையும் வாங்க ரத்தமும் உயிரும் கொடுத்துப் போராடும் இனம்.."

மண்ணைப் பற்றி மண்ணுரிமை பற்றி பேச எழ சற்று உணர்ச்சிவயப் பட்டுப் போனேன். அதையும் அவர் கண்டுபிடித்து விட்டார் போல். “சரி, அதுக்கு நீ ஏன்பா இப்படி உணர்ச்சிவசப் படுற?"

"பின்ன என்னண்ணே; என்னமோ நீங்க நம்ம குழாயடிச் சண்டை மாதிரி அவுங்களையும் நினைச்சிப் பேசுறீங்க”

“வேறென்னவாம்; அவன் சண்டை போட்டா நமக்ககென்னப்பு???”

“அண்ணே, அது ஒரு இனத்தின் விடுதலைக்கான சண்டைண்ணே? அறுபது வருடமா தன் உரிமைகளை மீட்பதற்காக நடக்கும் போர் அது.. "

"ஆமா LTTE - க்கும் ஸ்ரீலங்கா காரனுக்கும் சண்டை நடக்கும்னுவாங்களே, அதானே"

"என்னங்க, எல்.டி.டி.ன்னு என்னமோ யாரையோ சொல்றா மாதிரி சொல்றீங்க"

“ஆமா. அவனுங்க எல்.டி.டீ தானே??????????”

“அப்போ அவர்கள் எல்.டி.டீ.ன்னா நீங்களும் எல்.டி.டீ இல்லையா?”

“அட ஏய்யா வெறுப்ப கிளப்பாம நான் ஏன் எல்.டி.டீ யாவனும்? என்ன புடிச்சி உள்ளே போடறதுக்கா??? நீ ஒரு காரியம் செய்யி; இங்க நம்மா மூனாவட்டம் தெருவு இருக்குல்ல அதுல போயி தலையில முக்காடு போட்டுக்குனு ஒரு ஸ்ரீலங்கா பொம்பளை இருக்கா, அவகிட்ட நீ என்ன எல்.டி.டீ.யான்னு கேளு காரி மூஞ்சில துப்புவா. நான் கேட்டேன், கேட்டதுக்கு என் மேல எப்படி சீறி வந்தான்னு எனக்குள்ள தெரியும். அந்த எல்.டி.டீ. காரங்க தான் எங்களை இப்படி நாடுகெட்டு அலைய விட்டானுங்கன்னு அவதான் சொன்னா(ள்)”

எனக்குக் கோபம் தலைக்கேறியது. இருந்தாலும் இதுபோன்ற மனிதரிடம் இனியும் பேசுவதில் எந்த அர்த்தமுமில்லை போல் தோன்றியது. "சரி விடுங்க சீட்டு இருக்கான்னு பார்த்து சொல்லுங்க நான் போறேன்"

"என்னப்பா நீயி லண்டன்லாம் போறவர, விவரம் போதலையே..., ஆமா நான் தெரியாம தான் கேட்கிறேன் ‘அவனுங்க சும்மா அடிச்சிக்கினு வெட்டிக்கினா நாமளா அதுக்கு பொறுப்பு?"

ஓங்கி ஒரு அரை விடலாமா என்றிருந்தது எனக்கு. பெரியவர் ஆயிற்றே என்று அடக்கிக் கொண்டேன்.

"ஏன்யா என்னைய முறைக்கிற?"

"வேற..." தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன் நான்.

"என்னய்யா, உனக்கு ஏன் இம்புட்டு கோபம் வருது, நாம என்ன இலங்கைக்கு பொறுப்பு சுமந்தா கெடக்குறவ....இங்க??????????????"

இதற்குமேல் என்னால் தாங்கமுடியவில்லை.

"ஆமாய்யா.........., பொறுப்பு தான். நாம பக்கத்துலயே இருந்தும் நம்ம மக்கள் சாவுதே, நாம அதுக்கு பொறுப்பில்லையா? நாம் பொறுப்பில்லாம என்ன பக்கத்து நாட்டானா பின்ன வருவான். பக்கத்து வீட்டான் சண்டை போட்டா போய் கேட்குறியே எங்கயோ இருந்து வந்தவன் அடிக்கிறானே; பொறுப்பில்லாம எங்க போயிட்டோம்??? உன் மக்கள், உன் இனம், உன்னைய நம்பின சனங்க அடிபட்டா நீ தான்யா கேட்க போவனும்" கோபத்தில் எழுந்து மேஜை மேல் தட்டி கத்தியே விட்டேன்.

அவரும் சாதாரண ஆளில்லை. அவர் என்னைப்போல் நிறைய பேரிடம் இப்படி சண்டை போட்டிருப்பார் போல். சாவுதானமா எழுந்து நின்று -

"அடப் போப்பா நீயி.." என்றார். என்னை உசுப்பேத்துறாரோ என்றொரு எண்ணம். நான் சற்று பொறுத்துக் கொண்டு,

“'என்னண்ணே, நம்ம தமிழன்ண்ணே, நம்ம தமிழன் தான் அங்க நமக்குன்னு ஒரு நாடு கேட்டு செத்துக் கொண்டிருக்கிறாண்ணே. கொஞ்சம் கூட அத்தனை பேர் சாவறான்ற எண்ணம் கூட உங்களுக்கில்லையா?"

"அட ஏன்பா நீ வேற காலையில வந்து மனுசனை இப்படி படுத்துற. நீ வேணும்னா பாரு இவுங்க மட்டும் நீ சொல்ற ஈழத்தை புடிச்சிட்டா நாளைக்கே தமிழ்நாட்டை சல்லி காசுக்கு மதிக்கிறாங்களா பார், வேணும்னா நல்லா தூத்திப் பேசுவாங்க, நடக்குதா இல்லையான்னு பாரு. பெறவு இந்த அண்ணனை வந்து ஏன் சொன்னேன்னு கேளு.."

அவர் அவரை சரியாக மட்டுமே எண்ணிக் கொண்டு பேசினார். நிறைய பேர் இப்படி தான்; மண்ணை நனைத்த ரத்தத்தின் காரணம் புரியாமலே; அதன் இழப்பு புரியாமலே; உயிர்குடிக்கும் கயவர்களின் தந்திரம் புரியாமல், மோசடித்தனம் புரியாமல் பேசிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்த போராட்டத்தின் காரணம் புரிந்துவிட்டால் பின் நிற்பவர்களில் முதலாய் ஆவார்கள் என்று சற்று நிதானித்துப் புரிந்துக் கொண்டேன். அவரையே அமைதியாக பார்த்தேன். அவர் –
---------------------------------------------------------------------------------------------------------------------- வித்தியாசாகர்
தொடரும்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கொழும்பு வழியே ஒரு பயணம்..  Empty Re: கொழும்பு வழியே ஒரு பயணம்..

Post by RAJABTHEEN Sat Apr 09, 2011 4:25 pm

அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கொழும்பு வழியே ஒரு பயணம்..  Empty Re: கொழும்பு வழியே ஒரு பயணம்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 15, 2011 5:09 pm

வர் சற்றும் சலிக்காமல் சவால் விட்டவராகவே எதிரே நின்றிருந்தார். நான் மனதை அடக்கிக் கொண்டு -

“அப்படி இல்லைண்ணே. நீங்க சொல்ற மாதிரி
எல்லாம் கற்பனை பண்ணிக்க இது சமயமில்லைண்ணே. அங்கே எத்தனை உயிர்கள் செத்து
மடிந்துக் கொண்டிருக்கு அது உங்க கண்ணையே உருத்தலையா???”

“விடு தம்பி விட்டுட்டு சீட்டு வாங்குற
வழிய பாரு, என் வாயக் கிளராத, ஏதோ எப்பவும் வர, தம்பியாச்சேன்னு
பார்க்கிறேன், இவனுங்க எடம் புடிச்சானுங்கனா நாளைக்கென்ன எனக்கு வீடு
போட்டா தரப் போறானுங்க இலங்கையில? போவியளா…” என்னால் இந்த சுயநலத்தை
பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அண்ணனாவது மண்ணாவது எழுந்து சட்டையை
பிடித்துக் கொண்டேன்.

“யோவ்… யோவ்.. மனுசனாயா நீ? மனுசனா நீ?
சிந்திக்கவே தெரியாம, வரலாறே புரியாம, உன்னை எல்லாம் பெரியமனுசன்னு
சொல்லிக்கவே வெட்கமாயிக்கு. ஒரு இனத்தோட பற்றுன்னு எதனா இருக்கா உனக்கு?
உலகமெலாம் ஆளும் தேசங்களுக்கு மத்தியில ஒரு துண்டு மண்னை ஒரு தமிழன்
ஆண்டான்னா அது எப்படி இருக்கும்னு காட்றதுக்கான ஒரு போர்-யா அது. ஏன்; என்
பாட்டன்முப்பாட்டன் ஆண்ட மண்ணுல கொஞ்சத்தை தமிழருக்குன்னு கொடுத்தா இந்த
உலகம் என்ன சுருங்கியா போயிடும்???? “

“தோ பார், இதலாம் என்கிட்ட வாணாம், முதல்ல
நீ சட்டையில இருந்து கையை எடு, எடுய்யான்னா!!!!!!!! நான் என்ன டை
கட்டிக்குனு தனியா உட்கார்ந்திருக்கேன்னு நினைச்சியா??? நான் மோசமானவன்
பார்த்துக்கோ. ஒரு போன் பண்ணா போதும் தெருவெல்லாம் ஆட்டோ வந்து நிக்கும்
பார்க்குரியா, பார்க்குரியா..” அவர் எகுறி குதித்தார் வானத்திற்கும்
பூமிக்குமாய்.

“ச்சி … அற்ப மனிதனே” வாயாற சொல்லியே விட்டேன்.

“என்ன அற்ப மனிதனே???????? நீ என்ன தெய்வ
பிறவியா? எவன பத்தியோ சொன்னா உனக்கேய்யா இப்படி கோபம் பொத்துக்குனு வருது?
இப்படி எவவனுக்கோ வக்காலத்து வாங்கித் தான் தமிழ்நாடு இப்படிக்
குட்டிச்சுவுரா போயிடுச்சி”

அவர் கோபப் பட்டாலும், ஒருபுறம் மிகக்
கலவரப் பட்டும் போனார். சட்டையைப் பிடித்திருக்கக் கூடாது தான். வயதானவர்
வேறு. கோபத்தாலா அல்லது பயத்தாலா தெரியவில்லை, கைகால் சற்று படபடத்து
ஆடியது அவருக்கு. பேச வார்த்தைகள் முழுதாக வராமல் சட்டையை பிடித்துவிட்ட
அவுமனத்தில் மட்டும் கொதித்துப் போனார்.

ஒரு சிறு அறை, ஒரு கணினி மட்டும்
வைத்துக் கொண்டு தூரத்திலிருக்கும் விமான போக்குவரத்து அலுவல்கள் மூலம்
தொடர்பு கொண்டு, உள்ளூரில் கொஞ்சம் கூடுதலான விலை வைத்து, விமானப் பயண
சீட்டு பதிந்தும் வாங்கியும் கொடுத்து தொழில் செய்யும் ஒரு சாதாரண லட்சியமே
இல்லாத ஒரு மனிதர் இவர். இவருக்கு என் ஈழம் சார்ந்த பேச்சு அத்தனை
ஈடுபாடினைத் தரவில்லை என்பது முன்பிளிருந்தே புரியாமலில்லை. என்றாலும்,
பேச்சுக்கு பேச்சு விடமுயாமல் சட்டை பிடிக்கும் வரை போச்சே என்று
எண்ணினேன். கடைக்கு வந்ததும் வா சத்யான்னு வாஞ்சையா வரவேற்று வீடு
சவுகரியம் விசாரித்து, உடனே ஓடி போய் தேனீர் வாங்கி வந்து, மேஜை மேல்
இருக்கும் மின் விசிறியை கூட என் பக்கம் திருப்பி வைக்கும் மனிதர்.

வருமானம் குறைவு, வந்ததை தின்று காலத்தை
போக்க கணினியும் ஒரே ஒரு டை’யும் கட்டிக் கொண்டு சோத்துக்கு நாட்களை
கழிக்கும் பிழைப்பு. நான் வேறு இடையில் வந்து சட்டையை பிடித்து மிரட்டி
விட்டதும் அவரால் தாள முடியவில்லை. அவரை என்னுடைய கோபம் சற்றிற்கு
அதிகமாகவே பாதித்திருக்கவேண்டும் போல் தெரிந்தது. படபடத்துப் போனார்.
கோபத்தில் பயத்தில் கண்கள் கொஞ்சம் சிவந்தே போனது.

கொஞ்ச நேரம் அவர் விருப்பத்திற்கு
வாய்க்கு வந்தவாறு ஏதேதோ பேசினார். நான் அதை செய்வேன் இதை செய்வேன்,
குத்திப் போடுவேன் வெட்டிச் சாய்ப்பேன் என்று குதித்தார். நான் சற்று
யோசித்தேன், அவரின் அவஸ்தையை பார்த்து சுதாரித்துக் கொண்டேன்.

ஆரம்பமே தெரியவில்லை அவருக்கு, ஈழம் என்றாலே என்னவென்று தெரியவில்லை அவருக்கு. என் உறவுகள் என்றாலே யார் என்று கேட்கும் ரக மனிதர்.

இலங்கைப் பிரச்சனை தானே’ என்று தெரிந்தவர்களுக்கு, ஈழம் என்று தெரியாதவர்களுக்கு, ஈழம் அந்நியமாகத் தானே இருக்கும்.

பிறகு, இவரிடம் கோபப் பட்டு பயனில்லை.
நான் செய்ததுதான் தவறு. அவர் பாவம். இப்படி தவித்து போனாரே!!. நான் தான்
உணர்ச்சிவயப் பட்டுவிட்டேன் என்று நினைத்துக் கொண்டு, என்னை ஆசுவாசப்
படுத்திக் கொண்டு -

அவர் கத்தியடங்கும்வரை அவர்முன்னிருந்த
நாற்காலியில் அமர்ந்துக் கொண்டேன். அவர் வெளியே போய் ஒரு ஐந்து நிமிடம்
கழித்து வந்து என் எதிரே நின்றார். நான் எழுந்து நின்று அண்ணா மனதார
மன்னித்து விடுங்கள் என்றேன்.

அதற்குள், சப்தம் கேட்டு அக்கம்
பக்கத்தில் இருந்தெல்லாம் ஓடிவந்து கதவுதிறந்து என்ன என்ன என்றார்கள்.
அதலாம் ஒன்றுமில்லை நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்றார் அவர். அப்போ
தான் அவரை புரிந்தது. அவர் வேண்டுமெனில் இவன் இப்படி செய்தான் சட்டையை
படித்து அடித்தான் என்று சொல்லி இருக்கலாமே, செய்யவில்லையே.

நாம் தான் அவசரப் பட்டுவிட்டோமோ என்று எண்ணி, அமைதியாக அவரையே பார்த்தேன். அவர் என்னையே பார்த்து முறைத்தார்.

“பரவாயில்லைண்ணே விடுங்கண்ணே..” என்றேன்.

“என்ன விடுங்க??????????????? லண்டன்
போயிட்டு வந்துட்டா பெரிய்ய்ய்ய மயி…..ரா நீ” அந்த அரை காந்துக் கேட்கும்
அளவிற்குக் கத்தினார். மீண்டும் கோபம் வந்தது. அடக்கிக் கொண்டேன்.

“கோபப் படாதீங்க உட்காருங்க. உட்கார்ந்து பேசுங்க”

“சட்டைய புடிக்கிற.. அடிக்க வர.. நான் யாரு தெரியுமா???????????”

“தெரிஞ்சிடுச்சி. தப்புதாண்ணே சொல்றேன்ல. வேணும்னா ஒரு அடி அடிச்சிடுங்க மனசாரட்டும். அண்ணன் தானேன்னு நினைச்சிக்கிறேன்”

அப்படி சொன்னது தான் தாமதம், மனுஷன் உருகிவிட்டார்.

“இப்படிப் பேசையில மட்டும் அண்ணன்னு சொல்ற, அப்புறமா சட்டையை புதிப்ப”

“இல்லைண்ணே இனி செய்ய மாட்டேன் தப்புதான்.., மன்னிச்சிடுங்க”

உண்மையிலேயே நான் பணிவா பேசியது அவருக்கு
கொஞ்சம் அமைதியை தந்ததுபோல். சற்று மௌனமாகி என்னையேப் பார்த்தார். வேகமாக
வாங்கிய மூச்சு மெல்ல மெல்ல சமாதானம் கொண்டது.

நானே லேசாக புன்னகைத்தவாறு “சரிண்ணே, பயண சீட்டு கிடைக்குமா கிடைக்காதா? கேளுங்க நான் புறப்படனும்” என்றேன்.

“கிளம்பு கிளம்பு.. உனக்கு சீட்டெல்லாம் கிடைக்காது.. நீ போகலாம்”

“மன்னிச்சிடுங்கண்ணே. தவறுதான். உங்களிடம்
கோபப் பட நியாயமில்லை. தமிழருக்கு தன் தமிழ் இனத்து உறவுகள் பற்றி
முழுமையாக தெரியாத கதை’ என்னவோ; ஆங்கிலம் தெரியவில்லை என்று ஒரு தமிழ்
மாணவனை தமிழ் ஆசிரியரே அடிப்பதற்கு சமமாக, ஆகிவிட்டது. அத்தனை நாம்
ஈழத்திலிருந்து அந்நியமாகி விட்டோம்.

தமிழருக்கு தமிழரையே அந்நியமாக்கும் ஓர்
அரசியல் சூழ்ச்சி சூழ்ந்த தேசத்தில் வளரப் பட்டுவிட்டோம். அதற்குத் தக்க
நம் மண்ணைப் பற்றிக் கூட நமக்கு சரியாக தெரியாத ஒரு வரலாறே நமக்குப்
பாடமாக்கப் பட்டுள்ளது. பிறகு, உங்களைப் போன்றோரிடத்தில் கோபப்பட்டு
மட்டும் பயனில்லை தானே? ஒரு தலைமுறை மாறிப் போனப் பிறகு எல்லாம்
மறக்கடிக்கவும், மறைக்கவும் பட்டுவிடுகிறது. பிறகு, உங்களிடம் இத்தனை
உணர்ச்சிவசப் பட்டிருக்கக் கூடாது தான். தப்பு தான்ணே. நான் அபப்டி
நடந்திருக்கக் கூடாது தான்”

மன்னிப்பென்ற வார்த்தைக்கு தான் எத்தனை
சக்தி!! தன் தவறு தான் என்றதும், அவர் சற்று நிமிர்ந்து அமர்ந்தார்.
மன்னித்துக் கொள்ள கேட்டதும் ‘அட ஏம்பா என்பது போலும், அவர் என்னை என்னவோ,
ஒரு குற்றவாளியை மன்னித்து விடும் நிரபராதி போலவும், அதேநேரம் சற்று
உருக்கமாகவும் பார்த்தார்.

“சட்டைய பிடிச்சியா, அதான் கஷ்டமா போச்சி, ஒரு பைய இங்க என்னைய இப்படி செய்ய மாட்டான் தெரியுமா” என்றார்

“தப்பு தான்ண்ணே, விடுங்கண்ணே”

“யார்னா பார்த்திருந்தா என் மானம் மரியாதை என்னாயிருக்கும்???”

“க்குக்கும்…. பெரிய…..” என்று மனதில் எண்ணி நிறுத்திக் கொண்டேன்.

“மன்னிச்சிக்கண்ணே”

“சரி.. சரி.. விடுங்க.. அதுக்கெதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு..”

“வயசுல பெரியவரு தான்-னாலும் தேசத்தை பத்தி குறையா சொல்லிடவே.. கொஞ்சம் கோபமாயிடுச்சி”

“பாத்தீங்களா, இப்பயும் அதை தான் தேசம்னு
சொல்றீங்க. மறுபடிக்கும் என்னையே முட்டாளாக்குறீங்க பாருங்க.., நாம
இந்தியரு அவங்க இலங்கைங்க.”

இப்போ என்ன செய்வது இவரை????

யோசித்து வையுங்கள். நாளை எழுதுகிறேன்…
————————————————————————————————-
(தொடரும்)

வித்தியாசாகர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கொழும்பு வழியே ஒரு பயணம்..  Empty Re: கொழும்பு வழியே ஒரு பயணம்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 15, 2011 5:09 pm

நான் ஒன்றும் பேசவில்லை.

பேசாமல் அவரையே பார்த்தேன். என் அமைதியில் நான் அடக்கிக்கொள்ளும் கோபத்தினை அவர் கண்டிருப்பார் போல் -

“எனக்கென்ன சீட்டை வாங்கிக் கொடுத்தோமா போனோமான்னு இருக்கனும், ஆனா, தனியா அறைப் போட்டு, ஏசி போட்டு, கூட மேஜைமேல் கூடுதலாக ஒரு மின்விசிறியும் வெச்சு, சுத்துப்பட்டு கிராமத்துல டை கட்டின ஆளா திரியிறேனா, அதான் கோபம் சுருக்குனு வந்துட்டுது” என்று அவர் தன்னை பொருமைப் படுத்திக்கொண்டு பேசினார்.

என்றாலும் அவர் இத்தனை விளக்கிக் கூறியப் பின்பும் ‘அதென்ன நம் தேசமா? நாம் இந்தியர், அவர்கள் இலங்கையர் தானே? என்றதும், குறிப்பாக அதென்ன நம் தேசமா நாம் வக்காலத்து வாங்க என்றதும்; எனக்கு முகம் பாராத ஒரு கோபம் சுள்ளென வந்தது.

“என் மக்கள் வாழ்ந்த, என் உறவுகள் வாழும் அந்த மண்ணை என் தேசமென்று சொல்லாமல் வேறெப்படிண்ணே சொல்வது?

சரி அதை விடுங்க, உங்களிடம் பேசி ஒரு பயனும் இல்லை. இனியும் இது தொடர்ந்தால் எனக்கு மீண்டும் கோபம் தான் வரும். கொழும்பு வழியாவே ஒரு பயணச் சீட்டு இருக்குன்னீங்களே அதையே பதிஞ்சி கொடுங்க நான் போறேன் “

“சரி தம்பி……, அண்ணன்னு சொல்லிப்புட்டு ஏன் இத்தனை கோபப் படுறிய? நான் தெரிஞ்சிக்கத் தானேக் கேட்கிறேன்? அது ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கீங்க, மூச்சுக்கு முன்னூறு தரம் ஈழம் ஈழம்றீங்க, அது நம்ம மக்கள் வாழ்ந்த தேசம்னு சொல்றீங்க, உண்மையாவே தெரிந்துக் கொள்ளனும்னு ஒரு அவா; இலங்கை என்ன நம்ம தேசமா?”

“ஆமாம்னே, இலங்கைன்றது நம்ம மக்கள் வாழ்ந்த இடம்ண்ணே, வரலாற்றுப் படி பார்த்தோம்னா ‘இலங்கைன்னு ஒரு பெயரே அங்கு முன்பு கிடையாது. இலங்கைன்றது இப்போ இருநூறு ஆண்டுகளுக்கு முன் வைத்த பெயர். லங்கா என்றால் தீவு என்று அர்த்தம். அதோடு நம் தமிழர் முறை படி ‘இ’ சேர்த்து இலங்கை ஆனது. மங்களகரம் வேண்டி ஸ்ரீ சேர்த்து ஸ்ரீலங்காவாக மாற்றம் கொள்ளப் பட்டது. ஆனால்; ஈழம் என்பதற்கு கிட்டத்தட்ட நான்காயிரத்து முன்னூறு வருடத்திற்கும் மேலான வரலாறு உண்டு.

இப்பவும் வடமேற்குப் பகுதியில் புத்தளத்திலிருந்து, கிழக்கே அம்பாறை மாவட்டம் துவங்கி வடக்கே யாழ்ப்பாணம் வரை நம்ம மக்கள் தான் இருக்காங்க, நடுவில் புகுத்தி வளர்க்கப்பட்ட சிங்களந்தான் தன் அரசபலத்தால் நகர்ந்து நகர்ந்து நம்மை ஈழம் விட்டே விரட்டப் பார்க்கிறான்”

“அபப்டியா???!!! அப்போ நீ போறியே கொழும்பு வழி; அதலாம் ஈழம் நாட்டை சேர்ந்தது தானா?”

“இப்போ இருக்குற ஈழம்னு எடுத்துக்குட்டீங்கன்னா கொழும்பு தாண்டி போகனும்ண்ணே. கொழும்பு, கொழும்பு தாண்டினா கம்பகா, கம்பகா தாண்டி புத்தளம், அப்புறம் அங்கிருந்து ஈழம் துவங்குது”

“அப்படியா!! சரி சரி..”

“ஆனா, மொத்தமாவே நம்ம வளர்ச்சி புடிக்காம சிங்களன் ஒரு பக்கம் ஆடுறான்னா, கூட சேர்ந்து வல்லரசு நாடுகளுமில்ல நிக்குது. எங்க ஈழம்னு ஒரு தனிதேசம் வந்தா நாளை தமிழகமும் அதோடு சேர்ந்துக் கொள்ளுமோ; பிறகு அதை பார்த்து பிற மாநிலங்கள் தனி தேசம் கேட்கத் துவங்குமோன்ற ஒரு அரசியல் நோக்கு இந்தியாவிற்கே உண்டு”

“ஓ… அதனால தான் இந்தியா இலங்கைக்கு, மன்னிக்கணும் சிங்களனுக்கு துணை போவுதா?”

“அதனாலையா இல்லை ஆள்பவர்களுக்கு அதையும் கடந்து சுய விருப்புவெருப்புக்கள் உண்டான்னு கடவுளுக்குத் தான் தெரியும்”

“இவனுங்க என்னத்த நினைத்து என்ன பண்ண? அதது கிடைக்கவேண்டியவர்களுக்கு கிடைக்கும் தம்பி”

“அந்த பயம் தான் அவர்களுக்கு, எங்கு நாம் நம் தேசமென்று ஈழத்தை பிடித்துக் கொண்டு; பிறகு மெல்ல மெல்ல அவர்களை விரட்டி விடுவோமோ எனும் பயம்.

அதற்கு உடன்பட்டுவிடக் கூடாதே நம்ம பகுதியிலிருந்து நம்மைச் சார்ந்த இனத்திலிருந்து உருவான இனமாயிற்றே சிங்கள இனமெனும் சுயநலம் கொண்ட பாகுபாடுகளும்; உள்ளே நம் இந்திய நாட்டவரான வடநாட்டவர்களுக்கு உண்டு. அதின்றி; எப்படி எல்லாம் நம்மை அழிக்கலாம் என்று கங்கணம் கட்டித் திரியும் நம் அண்டை மாநிலத்து சதிகாரர்களும் இதற்கு இன அழிப்பிற்கு உடந்தை.

மத்தியில் வீரியமில்லாத, எங்கு அதை கேட்கப் போய்; தன் இருக்கை பறிபோகுமோ என்று பயந்துக் கிடக்கும் நம் அரசியல்வாதிகளின் சுயநலக் கயமைத் தனம்; அவனுக்கு பலகாரம் செய்ய சர்க்கரை கிடைத்தது போல் ஆயிற்று.

உள்ளுக்குள்ள கூட்டுச் சேர்ந்துகே கொண்டு, ஊர் பார்வைக்கு சிங்களன் அடிச்சான்னு வீர வசனங்கள் வேற. எல்லாத்துக்கும் மத்தியில நம்ம உடைமைகளை பிடுங்கிக் கொண்டு; நம்மை அவர்களின் அடிமை போல, இரண்டாம்பட்சமாவே வைத்து அடக்கி ஆளப் பார்க்கிறான் நம்ம பின்னால வந்து நம்ம மண்ணுல புகுந்தவனால் உருவானவன்”

“யாரு?”

“சிங்களன் தான்..”

“இப்பயும் அடிக்கிறானா?”

“இனிமேலாவது கண்களை கொட்ட திறந்து ஈழம் பற்றிய செய்திகளை படிங்கண்ணே. கொத்து கொத்தா அழிக்கிறான். ஒரு நாயி நாதி ஏன்னு கேட்கலை. ஊர் உலகமெலாம் தமிழர் இருந்தும் என்ன புண்ணியம்? கேவலமா இருக்குண்ணே நம்மை நினைத்தாலே”

“வாஸ்தவந் தே(ன்)…”

“அதான் எனக்கு கோவம். வெட்டி முறிக்கனும்னு கோபம்”

“பின்ன வராத பின்ன??”

“அப்படி வாடி ஆத்தி; இப்போ புரிதில்ல; அப்போ கூட நாம் இலகிடுவோம்ண்ணே. நம்ம மனசு அதலாம் மன்னிச்சிடும். ஆனா, அவனுங்க போனாப்போகட்டும்; நம்ம மக்களை நாம மறக்கக் கூடாது இல்லையா? அவர்களுக்கு எதாச்சும் நம்மால முடிந்ததை செய்யனுமால்லையா?”

“கண்டிப்பா செய்யணும் தம்பி”

“நம்ம ஈழம்ண்ணே அது, நம்ம தமிழீழம்ணே அது. நம்ம தமிழர் வாழ்ந்த, வாழும் மண்ணுண்ணே அது. அதை எப்படின்னா மீட்கனும்ண்ணே. எல்லாத்தையும் நீ கொண்டு போ; என் பாட்டன்முப்பாட்டன் வாழ்ந்த மண்ணுல, என் சனம் வாழுற இடத்தையாவது மீட்டு; தாடான்னு பிடிங்கியாவது; தமிழர்னா என்னன்னு அவனுக்கும், தமிழன் வாழ்ந்தா எப்படி வாழ்வான்னு இந்த உலகத்திற்கும் ஆண்டு காட்டனும்ண்ணே.

நினைச்சாலே, சிலதை எல்லாம் படிச்சாலே மனசு உருகிப் போகுதுண்ணே. நம் எத்தனை வீரதீர செயல்களுக்கு முன்னால்; நாகரீகம் போதித்த இனத்திற்குப் பின்னால் வந்தும் இப்படி தலைகுனியும் சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டோம்னா அது நம் பாடம் வழியா நமக்கு இழைக்கப்பட்ட துரோகமன்றி வேறில்லை.

நம்ம வரலாறையே நம்மக் கண்ணுலக் காட்டாம எப்படி நம்மை இருட்டடிப்பு செய்திருக்காங்களேன்னு நினைத்தால்; ரத்தம் பொங்கிக் கொதிக்கிறது. எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறோம் தெரியுமா நாம?

அந்த மண்ணுல புதைக்கப்பட்டு வருகிற நம்ம வரலாறு எப்படிப் பட்ட வரலாறு தெரியுமா?

எத்தனை நம் தமிழ் மன்னர்களால் அன்றிலிருந்தே ஆளப் பட்ட மண்ணது தெரியுமா?

பண்டார வன்னியன் வீரசாகசம் புரிந்து வெற்றிகொண்டு மீட்ட மண்ணது. அதற்கும் முன், இராஜேந்திரச் சோழன் போரில் வென்று ஆண்ட மண்ணது. அதற்கும் முன்னால் எல்லாளன்ற மன்னனால ஆளப் பட்டிருக்கு…, அதுக்கும் முன்னாடி நாகர்கள் என்ற பெயரில் தமிழர்களே அங்கு வாழ்ந்திருக்கிறாங்க.

அது தவிர, இயக்கர்கள் என்ற பெயரில் சிங்களரல்லாதவர்களும் வாழ்ந்து வந்த சமயம் இடையே வந்து அக்குடியில் மணம் முடித்து சிங்களக் குடிக்கு முதல் விதை தூவி; இன்று நான் தான் நாட்டுக்கே அரசன்னு சொன்னா அது தவறு தானே???”

“ஆமாமா…”

“அப்படியே நீ அரசனா கூட இருந்துட்டுப் போ; எங்களை ஏன் சீன்டனும்?”

“வேற??!!!”

“அதுதான்ண்ணே கோபம், அதுக்காக புல்லு பூண்டு வரை எங்கல்லாம் தமிழ் கேட்குதோ அங்கல்லாம் அவன் தந்திரமா வெளிய ஒண்ணு காமிச்சு உள்ளே ஒண்ணு செய்து எல்லாத்தையும் அழிச்சிகிட்டு வரான்..”

“சரி தம்பி, நம்ம தானே முதல்ல இருந்தே இருக்கோம் பிறகு எப்படி நம்ப தேசம் மொத்தமும் அவனுக்கு கைமாறி போச்சி?”

“அது ஒரு காலக் குறைண்ணே. ஒண்ணு வெள்ளைக்காரன் செய்த ஒரு பெரிய அநியாயம்னு சொல்லலாம். அதை பிறகு சொல்றேன். அதுக்கும் முன்னால – நம் நாடு என்னும் இந்தியாவின்’ வடதேசத்தில் இருந்து போன விஜயன்னு ஒருத்தன் போய் உருவாக்கிய இனம் தான் சிங்கள இனம். இதை அவர்களின் மகாவம்சம் எனும் ஒரு பாளி மொழியில் எழுதப் பட்ட வரலாற்று நூலே உறுதி செய்கிறது”

“ஓஹோ.. பிறகு ஏன் இவர்களுக்கு இந்த கொள்ளை அநியாயம்???”

“அதுதான்ண்ணே என் கேள்வியும். நான் அடிக்கடி இப்படி நினைத்துக் கொள்வதுண்டு; ஒருவேளை விஜயன்னு ஒருத்தன் (அப்போதைய மகத நாடான பிகாருக்கும், கலிங்கத்து தேசமான ஒரிஸ்ஸாவுக்கும் இடையேயான வங்கப் பகுதியிலிருந்து) வட இந்தியாவிலிருந்து ஈழத்திற்குப் போகலைன்னா, கலிங்கத்தை வென்ற பின் பௌத்தத்திற்கு மாறிய அசோக சக்ரவர்த்தியோட மகன் மகிந்தன் அங்க வந்து புத்த மதத்தை பரப்பலைன்னா, புத்தமதத்தை பரப்ப புத்த பிக்குகள் பாளி மொழியில் எழுதிய மகாவம்ச நூலை தனக்கென்று ஒரு தனி இனம் வேண்டிய அவசியம் கருதி சிங்களரை ஆதரித்து உணர்ச்சி ஊட்டி விடலைன்னா; அங்க சிங்களன்னு ஒருத்தன் இன்னைக்கு இருந்திருப்பனா? ன்றது கூட சந்தேகம் தான்”

“காலத்தை யாரால மாத்தமுடியுது தம்பி? அது என்ன நினைக்குதோ அதைத்தானே அதன் விருபத்திற்கு நகற்றிக் கொள்ளுது”

“மனிதர் மட்டுமில்லைண்ணே, இந்த இயற்கை கூட நமக்கு சதிண்ணே.”

“அதெப்படி”

“போரோட அதுவும் ஒண்ணுமா இன்னைக்கு வந்து அழித்த கடல்கோளிலிருந்து அன்னைக்கு நீரில் மூழ்கிய லெமூரியா கண்டம் வரை, இயற்கையின் சதி தானே?

அன்னைக்கு மட்டும் அந்த லெமூரியா கண்டம்னு ஒண்ணு கடல்ல மூழ்கலைன்னா; இன்று ஈழம் இன்னொரு தேசமா ஆயிருக்குமா?

உலகாளும் ஒரு தமிழ்பெருங்குடியா இருந்திருப்போம்!!”

“அப்படியா?!!!! சரி, அதென்ன லெமூரியா கண்டம்?”

“அது முன்பு இருந்த நாகரிகம் வளர்ந்திருந்த ஒரு கண்டம்ண்ணே. தமிழர்கள் தான் மூலக் குடியினர் என்பதற்கு உலகின் சான்றாக இல்லாமல் இயற்கையினால் கடல்கோல் வந்து கொண்டுசெல்லப் பட்ட, மூழ்கப் பட்ட ஒரு கண்டம். தற்காலிகமாக அதை அறிந்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதற்கு லெமூரியா கண்டம் என்று பெயர் வைத்துள்ளனர்.

இயற்கையும் அதன் பின் வந்த மனிதர்களும் செய்த சதி; இன்று ஆண்ட தமிழனையே வாழ ஒரு மண்ணின்றி போராட வைத்துவிட்டது பார்த்தீர்களா?

தன் மக்களை இழந்து, உறவுகளை இழந்து, தாயின்றி தந்தையின்றி, பெற்றக் குழந்தைகள் கூட வயிற்றின் கர்ப்பத்திலேயே கொள்ளப் பட்டு, ஆண்டாண்டு காலமாக ரத்தம் சிந்தி; உயிர்விட்டு; வருந்த வைத்துவிட்டது பார்த்தீர்களா? அறுபது வருடத்துக்கும் மேலாக எத்தனை உயிர்? எத்தனை குழந்தைகள்; எத்தனை பெண்கள்? எவ்வளவு தியாகம்? எவ்வளவு பொது ஜனம்ண்ணே சாவறது???”

“அப்படியா, அதலாம் நமக்கு தெரியாதே தம்பி………”

“தெரிந்துக் கொள்ளனும்ணே. இதலாம் தெரியாம பேசுறோமே, பெரிய இவரு மாதிரி கிழிக்கிறோமே; மேஜைக்கு கீழ தர நாலு காசு லஞ்சத்துக்கும், அதை தொடர்ந்து கொடுக்கிற அரசியல் இருக்கைக்கும் மனித மரியாதயினை எல்லாம் விட்டு கீழிறங்கிவந்து; மானங் கேட்டு போய் நிக்கிறோமே; தப்பில்ல அது?”

“இவ்வளவு இருக்குன்னா தப்புதான்.. தம்பி, கண்டிப்பா தப்பு”

“மெல்ல சொல்லாதீங்க; நம்ம இனம் அழிய நாமே அமைதி கொண்டு இப்படி பார்த்துக் கொண்டிருந்தா கண்டிப்பா அது தவறு தான் தவறு தான் தவறு தான்னு உரக்கச் சொல்லுங்க”

“நீங்க இதலாம் படிக்கிறீங்க தெரியுது, நமக்கெங்க?”

“சும்மா படிக்கலைண்ணே; வலி. கொத்து கொத்தா மக்கள் சாவுறதை பார்த்துட்டு வந்த வலி, வலிச்சி, தனியா யாரு இல்லாதப்போ தொலைகாட்சியில் செய்தியில் வருவதை எல்லாம் பார்த்துவிட்டு ஓ’ன்னு கத்தியழுத வலி. தடுக்க முடியாத கோபம். ஒத்தையாப் போயி ‘நிறுத்துங்கடா போரைன்னு’ நிறுத்திட முடியாத வெறுமை. நம் கையாலாகாத் தனத்தால நாணிக் கிடந்த தருணத்தின் வெம்மை. ஏன் இப்படி நடக்குது, எங்கே தவறு நிகழ்ந்ததுன்னு தேடி தேடி பார்த்ததுல படித்ததுல தெரிந்துகிட்ட கொஞ்சநஞ்ச பாடம்”

“அப்போ, சுத்தி வளச்சி யோசிச்சா; நம்ம இலங்கையை நமக்கே கொடுக்கணும்றீங்க, அதானே?”

“அவ்வளவு வேணாம்ண்ணே, அங்கிருக்கறதும் அப்பாவி ஜனங்க தானே? நமக்கெதுக்குண்ணே அவன் சுதந்திரம் பறிக்கும் ஆசை எல்லாம்? அவர்களும் மனிதர்கள் தானே? அங்கும் குழந்தையும் பெண்களும் பொதுமக்களும் வாழ்கிறார்கள் தானே? அவர்கள் வாழும் இடத்தில் அவர்கள் வாழ்ந்துக் கொண்டு போகட்டும்.

நம்ம ஆதிகாலத்துல இருந்தே ஆண்ட இடத்தைக் கூட விட்டுட்டு வெளியே வந்து பார்த்தா தெரியுதுபார்; இப்போ நம் மக்கள் வாழும் மண்ணு, அது நமக்கு கிடைத்தா போதும். ஓடி ஓடி நாட்டை பிடித்து கோடி நட்ட தமிழன், வாழ ஒரு குடிசை தேடி; நாடு நாடா அலைந்து கப்பலில் திருப்பி யனுப்பப் படும் சோகங்கள் நிகழாம இருந்தால் அது போதும். நம்ம இடம் மட்டும் நமக்குக் கிடைத்தால் போதும்ண்ணே.

ஆனால், வருத்தம் பார்த்தீங்கன்னா ‘இது யாருக்குமே தெரியவோ புரியவோ மாட்டேங்குது. நாம இப்பக் கூட அவனுடைய இடத்தையா கேட்கிறோம்; நாங்க ஆளும் வரை எங்களுக்கு கொடுங்கடா, நாங்க தனியா வாழ்ந்துக்குறோம்னு தானே கேட்கிறோம்? அதை கொடுக்கமறுத்து நம்மையே அழிக்கவும் பார்த்தால்; தமிழன் சும்மா இருப்பானா?”

“அதெப்படி??”

“அதான் அடிக்கிறான். அதனால தான் சண்டை வருது. அதனாலத் தான் அன்னைக்கும் வந்தது, இன்னைக்கும் நடக்குது, இத்தனை வருடங்களா அதுக்குத் தான் போராடவும் செய்யுறோம்.

இதை, கூட நாம் அபுரிந்துக் கொள்ளாமல் விட்டுவிட்டு தூர நின்று வேடிக்கை பார்க்க அவர்கள் யாரு யாரோ வேற்று மக்களா? போகட்டும்னு விட.

வேற்று மக்கள்னாலே விடமாட்டோம், அப்படிப் பட்ட தமிழர் பரம்பரை நம்ம பரம்பரை. அதுக்கே என்னடா இப்படி பன்றானுவளேன்னு மனசு இளகும், கேட்கும் உரிமை அற்றுப் போயும் தவிக்கும். பிறகு, இவர்கள் நம் குடிகளாயிற்றே; ஏன்டா ன்னு ஒரு குரல் நாம கொடுத்திருந்தா அவனுக்கு இப்படி ஏறிவந்து விஷ குண்டு போட்டு நம்மை அழிக்க; நம் அடையாளங்களை அழிக்க; நம்மை வரலாற்றிலிருந்தே அகற்ற எண்ணம் கொள்வானா?

அதிலும், இன்றைய சூழ்நிலை பார்த்தீங்கன்னா; நாம தொலைத்த சில நம்மோட பழந்தமிழர் அடையாளங்களை கூட மாறாம அதிகபட்சம் வைத்துக் கட்டிக் காப்பதும், அழகிய தமிழ் பேசி தமிழுக்காகவும் தமிழருக்காகவும் வீருகொண்டெழுவதும்; தமிழ்மண்ணின் புகழை உலக அரங்கில் நிறுத்த முயல்வதும் அந்த நம்ம ஈழ மக்கள் தான்ணே.

நாம் இந்தியா எனும் ஒரு வட்டத்தில் நின்றுக்கொண்டு வெறும் இந்தியராகத் தான் இருக்கிறோம். அவர்கள் தான் இன்னும் தமிழராய், தமிழீழ தேசத்தின் விடுதலைக் காற்றாகத் தன்னையே தன் தேசத்திற்கென இழந்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் நம்ம பழமை பாரம்பரியங்களை தொலைக்காம பத்திரமா வைத்திருக்க அவுங்க வாழனும்ணே”

“கண்டிப்பா கண்டிப்பாப்பா, கண்டிப்பா வாழனும்பா. அவர்களை அழிய விடக் கூடாது, அவர்களை கொள்ள விடக் கூடாது. அவர்களுக்கு ஏதேனும் செய்யனும் சத்யா….., அதுக்கு என் தலையை கொடுக்கணும்னா கொடுப்பேன்!!!!!!
—————————————————————————————————————
தொடரும்..

வித்தியாசாகர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கொழும்பு வழியே ஒரு பயணம்..  Empty Re: கொழும்பு வழியே ஒரு பயணம்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 15, 2011 5:10 pm

அவர் உணர்வுகளால் தகித்திருந்தார்.

“தலையை எல்லாம் கொடுக்க வேண்டாம்ண்ணே. தலையை பயன்படுத்தனும். அவர்களின் விடிவிற்கு எது சரின்னு பார்க்க ஒரு தலைமையை தேர்ந்தெடுத்து, எந்த அரசியல் நிறமும் சேர்த்துக் கொள்ளாத ஓர் தலைமையின் கீழ் நின்று; அவசியமெனில் எல்லோரும் புறப்படத் தயாராகனும்.

அப்படி ஒரு தலைமை வேண்டுமே முதலில்!! என்று யோசனை வரலாம், வருமெனில்; போகும் நூறு பேரில் ஒருவரை தேர்ந்தெடுப்போம். உடனிருக்கும் ஆயிரம் பேரில் ஒருவரை நம்பி நிற்கவைப்போம். அவர் கீழ் பணியாளனாக நிற்பதற்கு பதிலாக இணையாக நின்று தோள் கொடுப்போம்.

தோள் கொடுப்போர் அவருக்கு நிகராக நின்று சிந்திப்போம், எது நம் தமிழரின் மதிப்பினை கூட்டுமோ, எது நமக்கு நம் செல்வாக்கினை, நிலையான ஒரு பிடி மண்ணினை மீண்டும் பெற்றுத் தருமோ, அடிமை நிலையிலிருந்து எது நம்மை நிலைமாறச் செய்யுமோ, இரண்டாம் பட்ச இடத்தை தூக்கி எறிந்துவிட்டு தனக்கான சுதந்திரத்தோடு வாழ, எந்த நிலைப்பாடு நம்மை மாற்றித் தருமோ, வாழ்விக்குமோ, நம் விடுதலைக் காற்றினை சுவாசிக்க எது தக்க வழிவகையின செய்யுமோ; அதற்கென சிந்திக்கனும். புதிய உத்திகளோடு நாம் நம் பழைய இடத்தினை அடையனும். அதற்கு தலை வேணும்ண்ணே”

“அப்போ நாமோ பழையமாதிரி இல்லாம மாறிட்டோம்ங்றியா?”

“கண்டிப்பா. நிறைய இடத்தில் நாம் மாறிவிட்டோம். எத்தனை அந்த மாற்றம் நமக்கு நல்லது செய்கிறது, கெட்டதாக அமைகிறது என்பதை விட, அதனால் நாம் இழந்தவை எத்தனை, என்னென்ன என்று யோசித்தால் கவலை வந்துவிடுகிறது.

எப்போ; வெள்ளைக்காரனின் வாழ்க்கை நமக்கு உயர்வாக பட்டுவிட்டதோ; அன்றிலிருந்தே சிறுமை பட்டுப் போனோம்ண்ணே. ஆங்கிலத்திற்கு ஆசைப் பட்டு தமிழை விற்கும் கயமைத் தனத்தை வேறெந்த இனமும் இத்தனை வேகமாக செய்திருக்காது.

வாட்சை தமிழென்றும், பக்கெட்டை தமிழென்றும், ஷூவை தமிழென்றும், லோன் தமிழென்றும், கரண்ட் தமிழென்றும், லெட்டர் தமிழென்றும், லெப்ட்டும் ரைட்டும் சரியென்று நினைத்தும் வளரும் குழந்தைகளுக்கு கைகடிகாரம், வாளி, பாதுகை, கடன், மின்சாரம், கடிதம், இடது, வலது என்று சொல்லித்தந்தால் என்ன மானம் குறைந்தா போய்விடும்?

ஆனால், இனி ‘எல்லோரும்’ அப்படி தெரிந்துக் கொள்ளவோ பழக்கி விடவோ தூய தமிழில் பேச தன்னை தயார்படுத்தவோக் கூட மீண்டும் ஒரு பிறப்புதான் தேவை என்று அஞ்சும் நிலை ஏற்பட்டுவிட்டதே; அது நம் குறை தானே???

தொலைக்காட்சி நாம் கண்டுபிடிக்கவில்லை போகட்டும், ரேடியோ நாம்கண்டு பிடிக்கவில்லை போகட்டும், கார் பஸ்சு ஏரோபிளேன் நாம் கண்டுபிடிக்கவில்லை போகட்டும், நன்றி வணக்கம் மன்னிப்பு போன்ற சொற்கள் கூட அற்றுப் போன ஓர் இழி பிறப்பா நாம்?

வாட்ச் கட்டு, டீ.வி போடு, போன் கொடு, பக்கெட்ல ஊத்து, அண்ணாக்கு பாய் சொல்லு, மாமாக்கு கிஸ் பண்ணு…னு’ இப்படி ஆங்கிலத்தை கலந்து கலந்து மழலையில் சிரிக்கும் பார்க்கும் தவழும் போதிலிருந்தே நாம் சொல்லிக் கொடுத்து குழந்தைகளை கெடுத்துவிட்டால், பிறகு தமிழில் இதற்கெல்லாம் என்ன வார்த்தையென்று எப்படி அவர்களுக்கு சரியாக தெரியவரும்ண்ணே?”

“ஏன்பா அதுக்குன்னு தொலைபேசியில் பேசு, மகிழுந்தில் போ’ கார்மேகம் சூழ்ந்து மழை பெய்யும் நேரம்’ என்றெல்லாம் பேசினால்; கேட்கிறவன் சிரிப்பானேப்பா!!!”

“சிரிக்கிறவனை அடிக்கனும்ண்ணே………., தமிழரிடத்தில் தமிழில் பேசினால் ஒருத்தன் சிரிப்பான்னா அவனை உதைக்கனும். ஆனால் அவனை அடிக்கும் முன்னாடி யோசிக்கவும் செய்ய வேண்டிய கட்டாயவாதிகள் தான் நாமெல்லோரும். காரணம், அவனை அப்படி வளர்த்ததே நாம் தானே???

பிறகு சிரிக்கிறவனை திருத்துவதும் நம் கடமை இல்லையா? சிரிக்கிறவனை சிரிக்கிறவனுக்கு புரியவைத்துவிட்டால் பிறகு சிரிப்பனா?

தெருவுல குடிச்சிட்டு விழுந்து புரளும் போது சிரிக்குதே மக்கள், குடிக்கிறதை விட்டுட்டோமா? அடுத்தவன் ஒரு இனத்தையே அழிக்கிறான், உலகமே தமிழகத்தின் மௌனத்தை எண்ணி சிரித்ததே; பொங்கி எழுந்துட்டோமா? பிறகு இதுக்கு மட்டும் எங்கிருந்துண்ணே வந்தது மானமும் வெட்கமும் அசிங்கமும்???

தமிழன் தமிழில் பேசினால் ஒருத்தன் சிரிச்சான்னா அவன் சிரிக்கட்டும், அவனை முட்டாள் என்று எண்ணிவிட்டு போவோம்ண்ணே.

ஒரு ஆங்கிலம் பேசும்போது இடையில் தமிழில் பேசுறோமா? ஹிந்தி பேசுகையில் இடையில் தமிழில் பெசுறோமா? பிறகு தமிழில் பேசுகையில் ஆங்கிலம் கலந்துப் பேசுவது மட்டும் எப்படி அழகும் நாகரிகமும் ஆனது?

கேட்டால், ஆங்கிலமே பேசலைன்னா உச்சரிப்பு வராதாம். வராதுதான். அதற்குத் தனியே அமர்ந்து ஆங்கிலத்தில் மட்டும் பேசி பயிற்சி எடு. ஏன், தமிழரிடம் தமிழில் பேசிவிட்டு தனியே ஆங்கிலத்தில் பேச அவசியம் ஏற்படும் போது, துல்லியமாக தெளிந்த ஆங்கிலத்தில் பேசு; யார் அதை மறுப்பார். அதைவிடுத்து; தமிழில் ஆங்கிலம் கலந்து பேசிவிட்டு பின் தமிழுக்கே தமிழன் பயிற்சி எடுப்பது என்பது எத்தனைப் பெரிய குறை இல்லையா நமக்கு?

மொழி என்பது முக்கியம்ண்ணே. ஒரு இனத்தின் உயிர், மொழி தான். மொழி தான் நம் அடையாளம். தாய் மொழியை தாய்மொழியாக மட்டுமே கருதனும். தமிழனாகிய என் தாய்மொழி தமிழ் மட்டும்தானேத் தவிர, தமிழும் ஆங்கிலமுமல்ல’ என்று உறுதியினை மனதில் கொண்டு, தமிழரிடத்தில் பேசுகையில் நாம் தமிழில் மட்டுமே பேசவேண்டும்.

ஏன் பேசாவிட்டாலென்ன? தமிழ் பேசாவிட்டால் என்ன சோறா கிடைக்காது என்றெண்ணுகின்றனர் சிலர். சோறு கிடைக்கும், அதைத் தின்னும் நாம் தமிழராய் தின்னமாட்டோம். மொழி அழிந்தால் இனம் அழியும் என்று புரியாத வரை; தமிழர் தன்னை ஆதிப் பெருமைக்கு உரிய முதல் மனிதராய் எக்காலத்திலும் அடையாளப் படுத்திக் கொள்ளப் போவதில்லை.

பல மொழி கற்றவன் பல மனிதனுக்கு சமம் என்பார்கள். வரவேற்போம். ஆயிரம் மொழி கற்போம். அந்தந்த இனத்தவரிடம் அவருடைய மொழியில் பேசுவோம். அதற்கு முன் தமிழரிடத்தில்; தமிழில் பேசுவோம்ண்ணே…

தேங்க்ஸ் என்று பல முறை சொல்லும் இடத்தில் நன்றி ஐயா, நன்றி மணி, நன்றி துரை என்று சொல்லிப் பழகட்டுமே; பற்களா கொட்டிப் போகும்?

‘சாரி’ சொல்லச் சொல்ல சாரி சொல்லத் தயாராகிறான் ஒவ்வொரு தமிழனும். மன்னித்து விடச் சொல்லிக் கேட்டுப் பாருங்கள்; செய்த தவறுக்காய் வெட்கி நாணிப் போவீர்கள்.

தவறுகள் திருத்தப் படனும்னா தவறை எண்ணி வெட்கப்படனும் வருந்தனும். தனை திருத்திக் கொள்ள அறிவு மனசை உறுத்தனும். தவறு செய்யக் கூடாதேன்னு உள்ளே உரைக்கனும். அப்படி உரைக்கனும்னா மன்னித்துக் கொள் என்று சொல்லிப் பாருங்கள்.

தவறு நிகழும்போதெல்லாம், மன்னித்துக் கொள் என்றே சொல்லுங்கள். அப்படி ஒவ்வொரு முறை சொல்லும் முன்பும் இனி சொல்லக் கூடாதென்றும் யோசிக்கத் தயாரவீர்கள். அப்படி யோசிக்கும் இடத்திற்கு மொழி நம்மை அழைத்துச் செல்கிறது. தமிழரினம் தமிழராய் தன்னை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டுமெனில், முதலில் நாம் தமிழராய் நம் இன உணர்வோடு பண்பு மாறாது வாழனும்ண்ணே..”

“பண்பு மாறாம வாழனும் தான், ஆனால், எவன்பா வாழறான்?”

“யாரும் இதில் ஒருவரை ஒருவர் எதிர்பார்த்தோ அல்லது குற்றம் சொல்லியோப் பயனில்லை. பிறரை கைகாட்டும் முன் தன்னை பற்றி மட்டுமே ஒவ்வொரு தமிழரும் சிந்திக்கவேண்டும். இது ஒரு காலநகர்தலின், வளர்ச்சி வேகத்தின் இடையே இடைசொருகளாய் நிகழ்ந்துவிட்ட குற்றம். ஆனால் அந்த காலநகர்த்தலின் குற்றத்திற்கு நாமும் காரணமானோம் என்பதே வருந்தத் தக்கது.

கடைசியாய் வெள்ளைக்காரன் விட்டுப்போகும் போது எல்லோரையும் இந்தியர்னு சொல்லிப் பிரித்து, தனியே இலங்கைன்னு சொல்லிப் பிரித்துச் சென்றதில்லாமல், அதற்கு முன்னதாகவே; சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட தேசத்தை, பின் களப்பிரர்கள், களப்பிரர்களுக்குப் பின் பல்லவர்கள், பல்லவர்களோடு இடையாக சாளுக்கியர்கள், விஜயநகர பேரரசுகள், மொகலாயர்கள், மராட்டியர்கள் இடையே வந்து வந்துப் போன டச்சுக் காரர்கள், போர்ச்சுக் கீசியர்கள், பிரெஞ்சு காரர்கள் என்று கொஞ்சம் கொஞ்சம்னு; அவரவர் பங்குக்கு அவரவர் புகுந்து, நான் தான் நாட்டுக்கு ராசான்னு நடந்து போன பாதையில் விழுந்த நம் வீரதீரத்தால், நேரிட்ட மாற்றங்களால் நமக்குள் புது விதைகள் பல நன்மையையும் தீமையுமாய் இரைக்கப் பட்டுவிட்டது.

ஆனால்; அவைகளிலிருந்தெல்லாம் விலகி நின்று நாம் யார்? எப்படி வாழ்ந்தவர்கள்? எங்கு நிற்கிறோம்? இனி எப்படி வாழப் போகிறோம் என்று சிந்திக்க வேண்டிய பிறப்பு நம் தமிழ் பிறப்பில்லையா?

270 வருடம் நம்மை முழுமையாய் அடிமை படுத்தி ஆண்ட வெள்ளைக் காரானிலிருந்து எல்லாருக்குமே சென்னைனா வசதியான துறைமுகம் மட்டிமில்லாம தமிழ்நாடுன்னா வரப் போக வெல்லம் மாதிரியாச்சே!! இவுங்களுக்கு மத்தியிலெல்லாம் நம்ம பண்பும் வாழ்க்கை முறையும் பேச்சு வழக்கும் சற்று மாறத் தானே செய்யும், ஆனால் முற்றும் மாறிவிடுவது தவறில்லையா?

இதுல சமஸ்கிருத கலப்பு, வடமொழி திணிப்பு, ஆங்கில ஆசைன்னு நம்மள சற்று ஒழுங்கும்; நிறைய நாசமும் பண்ணின சக்திகள் நம்மை கடந்து போகவில்லை, தமிழினத்தை தந்திரமாய் மிதித்துப் போயிருக்கிறது..

இதுல வேற தெலுங்கு, சவ்ராஸ்ட்ரம், மலையாலம்னு எல்லாம் சேர்த்துக் குழப்பி நம்ம அடையாளத்தையே நாம் மெல்ல மெல்ல நமக்கே தெரியாமல்; மொழி, பண்பாடு, கலாச்சாரம், வாழ்வின் தேவை, தேடுதல்கள் என எல்லாவற்றிலுமே முறைகேடான மாற்றத்தை சந்திக்கும் நிலைக்கு ஆட்பட்டுவிட்டோம்.

என்ன ஒன்னு, என்னதான் யார் வந்து யார் போனாலும் கடைசியா எப்படியோ தமிழர்கள் வாழும் பகுதியென; தமிழ்நாடுன்னு ஒரு பேரு மட்டுமே நமக்குன்னு மிச்சப் பட்டிருக்கு. ஆனால், அதற்கு வைக்கப்பபட்ட பெயர் பலகைகள் கூட ஆங்காங்கே ஆங்கிலத்தில் வைக்கப்படுகிறதே; அதை பற்றியேனும் சிந்திக்கவேண்டாமா??!!!

“நம் இனத்தை பற்றிச் சிந்திக்க இவ்வளவு தகவல்களை வைத்துக் கொண்டு வெறும் டிக்கெட் மட்டும் இல்லை இல்லை பயணச் சீட்டினை மட்டும் போட்டுக் கொடுத்து காலத்தை கழித்து விட்டேனே சத்யா? சரிப்பா; வேற யாராவது வரதுக்கு முன்ன “ஸ்ரீலங்கா பத்தி சொல்லேன், வேற கஸ்டமர் யாராவது வந்துடப் போறாக..”

“வேறென்னண்ணே, நாம வாழ்ந்த மண்ணு, அதில்லாம நாம் வியர்வை சிந்தி உருவாக்கின மண்ணு, அதை நாம தான் காக்க வேணும், அதுக்கு என்ன வழின்னு பார்க்கணும்”

“அதென்ன உருவாக்கின மண்ணு? “

“ம்ம்.., அங்கே நாம் உருவாக்கின மண்ணும் இடங்களும் கூட உண்டுண்ணே. அது நாம் வாழ்ந்த இடம் என்பதில்லாம காட்டினை அழித்து உருவாக்கின உழைப்பும் அந்த மண்ணில் உண்டுண்ணே.., இந்த நூற்றாண்டுல சுதந்திரம் வேண்டி ரத்தம் சிந்தினோம், இதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் ரத்தத்தை வியர்வையாய், உயிராய் – விட்டு ஊர் அமைத்து, விவசாயம் செய்துக் கொடுத்தோம். எல்லாவற்றையுமே செய்தோம்; இழந்தோம்; இழந்ததை எவனோ அனுபவிக்க, தமிழர் ஏமாளியாயினர்”

“அதை பத்தி சொல்லுங்களேன்…?
—————————————————————————————————————
தொடரும்..

வித்தியாசாகர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கொழும்பு வழியே ஒரு பயணம்..  Empty Re: கொழும்பு வழியே ஒரு பயணம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum