தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி?

Go down

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? Empty ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 27, 2011 9:26 pm

சாறி கட்டுமுன் கவனத்தில் கொள்ளவும்


1. சில சாறிகளில் உள்பக்கம்
வெளிப்பக்கம் என இரு பக்கங்களிலும் வித்தியாசம் இருக்கும். அதாவது
வெளிப்பக்கம் இருக்கவேண்டிய பக்கம் பகட்டாக இருக்கும். மற்றப் பக்கம்
மங்கலாக இருக்கும். இதனை அவதானித்துக் கொள்ளவும்.


2. சாறியின்
ஒரு முனையில் முகதலையும் மறுமுனையில் சில சாறிகளில் சட்டைக்கான துணியும்
இருக்கும். சட்டை தைப்பதற்கான் துணி இருந்தால் அதனை வெட்டி எடுத்து
விடவும். இல்லையேல் நீளம் கூடியதாக இருக்கும்.

3. சாறி கட்டுவதற்கு முன் அதனை அயன் செய்து கொள்ளுங்கள்.

சாறி கட்டுவது எப்படி?

சாறி பல விதமாக கட்டுகிறார்கள். ஆனால் பொதுவான ஒரு முறை பற்றி இங்கே விளக்கம் தரப்படுகின்றது.







சாறியின்
வெளிப்பக்கம்(அழகான பக்கம்) வெளியே தெரியக்கூடியதாக, சாறியின் முகதலை அற்ற
முனையைப் வலது கையால் பிடித்து (அகலமான கரை கீழே இருக்கக் கூடியதாக) மேல்
கரைத்தலப்பில் இரண்டு மூன்றுமுறை கொய்து சிறிய மடிப்புகள் மடித்து அதனை
கட்டியிருக்கும் உள்பாவாடைக்குள் வலது பக்க இடுப்போரமாக செருகுங்கள்.
(செருகும்போது சாறியின் கீழ் உயரத்தை அவதானித்துக் கொள்ளுங்கள்) அனேகமானோர்
நுனியில் ஒரு சிறு முடிச்சுப் போட்டு அதனைச் செருகுவர்.

2.
அதன்பின் சாறியின் மேல்கரைப் பகுதியை சுருக்கிப் பிடித்து இடப்பக்கமாக
எடுத்து உடம்பை ஒருமுறை சுற்றியபின் சாறியின் மேல்கரையைப் பிடித்து
திரும்பவும் வலது வயிற்ரடியில் உள்பாடைக்குள் இறுக்கமாகச் செருகுங்கள்.
சாறியின் உயரத்தைக் கவனித்து அதற்கு ஏற்றாப்போல் உயர்த்தியோ இறக்கியோ
செருகி விடுங்கள். இப்போது உடம்பைச் சுற்றிய சாறியின் மேல் விளிம்பு
பாவாடைக்கு மேல் தெரியலாம். அவற்றையும் உடம்பைச் சுற்றிவர பாவாடைக்குள்
செருகி விடுங்கள்.

3. இப்போது மிகுதியாக இருக்கும் சாறியை
திரும்பவும் இடது பக்கமாகச் எடுத்து உடம்பை மீண்டும் ஒருமுறை சுற்றி இடது
தோழின்மீது போட்டுவிடுங்கள். இம் நிலையில் நீங்கள் விரும்பும் உயரத்தில்
தாவணி தொங்கக் கூடியதாக உயரத்தை (உயரமாகவோ, பதிவாகவோ) சரிசெய்து
கொள்ளுங்கள்.

இப்போது சேலையின் முன் பக்கத்தில் சேலையின் ஒரு பகுதி
தொய்வாக தொங்கிக்கொண்டு இருக்கும். அதில்தான் கொய்யகம் அமைக்க வேண்டும்.
சேலையை முதல் சுற்று சுற்றி இடுப்பில் செருகிய இடத்தில் இருந்து சுமார்
நான்கு விரல்கள் அகலத்திற்கு மடிப்புகளாக மடித்து (தொய்ந்த சாறி
இறுக்கமாகும்வரை) கொய்து கொண்டு அதனை வலது பக்க வயிறரடியில் முதல் செருகிய
இடத்தில் ஒழுங்காகாகவும் இறுக்கமாகவும், கரைகள் வெளியில் தெரியாதபடி,
முழுமடிப்பும் உள்ளே ஒழுங்காக இருக்கக்கூடியதாக செருகுங்கள்.(இல்லையேல்
அவ்விடம் முன்னுக்கு தள்ளி அசிங்கமாக இருக்கும்).


இப்போது
கொய்து செருகிய இடத்தில் இருந்து மேல்கரையை உடம்பைச் சுற்றி அணைத்துப்
பிடித்து (நெஞ்சை மறைத்து) கொஞ்சம் இறுக்கமாக தோழ்மூட்டடியில் வைத்து
ப்ளவ்சுடன் பின் செய்து விடுங்கள்

இப்போது சாறியின் கீழ்க்கரை
சுற்று ஒழுங்காக இருக்கின்றனவா என பார்த்துக் கொள்ளுங்கள். சில வேளைகளில்
ஒருபக்கம் உயர்ந்தும் பதிந்தும் காணப்படும். அப்போது கரையைக் கொஞ்சம் கீழ்
இழுத்து சரிப்படுத்திக் கொள்ளலாம்.

இரண்டாவது சுற்றில் பின்பக்கச்
சாறி வலதுபக்கமாக உயந்து சென்று வலது கமக்கட்டுக்குக் கீழால் நெஞ்சை
மூடிக்கொண்டு இடது தோழ்மூட்டுவரை சென்றிருக்கும். இந்த நிலையில் இளம்
பெண்கள் தாவணியயை பின்னால் தொங்க விடாது இடது கையில் முழங்கையில் ஏந்தி
பரவி விட்டு பிடித்திருப்பார்கள்.

வயது வந்தோர் தாவணியின் மேல்கரை
தோழின் உட்பகுதியிலும், கீழ்க்கரை மேற்பக்கமாகவும் வருமாறு மடித்து
ப்ளவ்சுடன் பின் பண்ணி பின்னால் தொங்க விடுவார்கள். இவ்வாறு செய்யும்போது
சாறியின் மேற்கரை நெஞ்சின் உள்பக்கத்தில் மறைக்கப்பட்டுவிடும்.

அத்துடன்
கொய்து முன்னுக்ககு செருகப்பெற்ற மடிப்புகள் ஒழுங்காகவும், நீற்ராகவும்
இருக்கின்றனவா என பார்த்து சரிசெய்து கொள்ளுங்கள். அவற்றின் மடிப்புகள்
விலகாது இருப்பதற்காக மடிப்புகளின் உள்புறமாக ஒரு சேவ்ரி பின்னால் வெளியே
தெரியாதபடி பின் செய்து கொள்ளுங்கள்.

முன்னால் எடுத்து இடது தோழில்
இடப்பெற்ற (தாவணியை) முகதலையை எடுத்து கீழ்க் கரை மேல் பக்கமாக இருக்கக்
கூடியதாக் சுமார் ஒரு சாண் அகலத்தில் அடுக்காக மடித்து விட்டு இரண்டு
மூன்று இடத்தில் விலகாது இருக்க பின் செய்யுங்கள்.

இப்போது தாவணியை இடது தோழில் போட்டு கீழே தூங்கும் உயரத்தை சரிசெய்யுங்கள்.

தாவணி
சரியாக அமைந்தால் மடிக்கப் பெற்ற தாவணியை தோழ்ப்பகுதியில் வைத்து
ப்ளவ்சின் உள்பகுதியின் கீழ் ஊசியைக் குடுத்தி வெளியே ஊசி தெரியாதபடி
பின்பண்ணி விடுங்கள்.

தோழில் பின் செய்யப்பெற்ற மடிப்புகளுக்கு
ஏற்றவாறு நெஞ்சுப் பகுதியில் இருக்கும் சாறியின் சுருக்கங்கள் ஒழுங்காக
உள்ளனவா என்பதனையும் கவனித்து கொள்ளுங்கள். ப்ளவ்சோடு அமைந்திருக்கும்
மடிப்பு விலகாது இருப்பதற்காக ப்ளவ்சின் நெஞ்சுப்பகுதில் உள்பக்கமாக பின்
செய்து விடுங்கள். கீழே உள்ள படங்கள் சிலவற்றில் மேல்கரை வெளியே
தெரிவதையும் மற்றையவற்றில் கீழ்க்கரை வெளியே தெரிவதையும் அவதானிக்கலாம்.

குறிப்பு:
சாறி
கட்டுவதற்கு முன் அதனை உடம்பில் சுற்றி அளவிட்டு மடிப்புகள் வரும் இடங்களை
குறிப்பெடுத்து அவ்விடங்களில் முன் கூட்டியே பின்பண்ணி வைத்தால் சாறி
கட்டுவது சுலபமாக இருக்கும்.

முகதலைப்பகுதியை மடிக்கும்போது முகதலை
விளிம்புகள் ஒழுங்காக இருக்குமாறு பாத்து மடித்து மூன்று நான்கு இடங்களில்
பின்பண்ணி வைத்திருங்கள். சாறி கட்டியபின் தேவையில்லாதவற்றைக்
கழற்றிவிடலாம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? Empty Re: ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 27, 2011 9:26 pm

ஆள் பாதி... ஆடை பாதி என்பது பழமொழி. இப்போதெல்லாம் ஆடைதான் அனைத்தையுமே
தீர்மானிக்கிறது. ஒருவரை பார்க்கும்போது அவர் அணிந்திருக்கும் ஆடையை வைத்தே
நாம் அவரை மதிப்பிடுகிறோம்.

கோடைகாலம் பிறந்தாச்சு
கொண்ட்டாட்டங்களுக்கும் கோயில் திருவிழாக்களுக்கும் குறைவே இல்லை. தங்கள்
அழகை எடுப்பாக காட்ட இதுதான் நல்ல சந்தற்பம் என சொப்பிங் செல்லும் பெண்கள்
கூட்டம். இதுவே நாட்டு நடப்பகிவிட்டது.

சில பெண்கள் அணிந்துள்ள
ஆடைகளைப் பார்க்கும்போது சம்பந்தமே இல்லாமல் இருக்கும். அது புடைவையாக
இருந்தாலும் அல்லது சுடிதார், ஜீன்ஸ் போன்ற மொடர்ன் உடைகளாக இருந் தாலும்
உடலமைப்பு சரியாக இல்லாத போது அது பொருத்தமாக இருக்காது. அவரவருக்குப்
பொருத்தமான ஆடை களை பொருத்தமான முறையில் அணிந்தால் கண்டிப்பாக எல்லோரையும்
கவரலாம்.

அதாவது கந்தையான ஆடையாக இருந்தாலும் அதை துவைத்து, அயர்ன்
செய்து அணிந்தால் அழகாகவே இருக் கும். நிறத்திற்கும், தோற்றத்திற்கும்,
உயரத் திற்கும் பருமனுக்கும் மற்றும் பருவத்திற் கும் தகுந்தபடி ஆடைகளை
அணிந்தால் கண்டிப்பாக நாம் அழகாகத் தெரிவோம். ஒல்லியும் உயரமுமாக இருக்கும்
பெண்கள் கோடு அல்லது கட்டம் போட்ட உடைகளை அணியக்கூடாது. முடியை
கழுத்துக்கு மேல் தூக்கி முடி அலங்காரம் செய்யவும் கூடாது.

சிறிய
போர்டர் புடைவை அல்லது நீள வாக்கில் பூவேலை செய்த சுடிதார் அணிய வேண் டாம்.
சற்று பெரிய பூக்கள் போட்ட பளிச் சென்ற புடைவைகள் அல்லது சுடிதாரும்
போட்டமும், பூப்போட்ட சுடிதாரும் அணியலாம். நீளமான அகலமான டிசைன் எதுவும்
இல்லாத பிளைன் துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கறுப்பு
நிறங்களில் அணியலாம்.

உயரமான ஒல்லியான பெண்கள் கறுப்பு அல்லது
மாநிறமாக உள்ளவர்கள் கடும் நிறங்களில் ஆடைகள் தேர்ந் தெடுக்கக் கூடாது.
அப்படியே தேர்ந்தெடுத் தாலும் அடர்த்தி மற்றும் வெளிர் நிறங்கள் மாறிமாறி
வருவது போல் இருந்தால் நன்றாக இருக்கும். அதில் ஏதாவது ஒரு நிறத்தில்
முடிந்தால் ஆடையில் உள்ள லைட் நிறப் ப்ளவுசோ அல்லது துப்பட்டாவோ
அணியவேண்டும். உயரமானவர்கள் கழுத்தில் நீளமாகத் தொங்கும் ஆபரணங்கள்
அணியாமல் கழுத்தை ஒட்டி இருக்கும் சிறிய நெக்லஸ் அணியலாம்.

நல்ல
நிறமான சிகப்பாக இருப்பவர்கள், குட்டையாக, ஒல்லியாக இருந்தால் பிளேனாக
டிசைன் இல்லாத நிறத்தில் ஆடை அணிய வேண்டாம். அப்படி புடைவை அணியும்போது
ஜாக்கெட் அடர்த்தியான நிறத்தில் டிசைன்களுடன் இருக்கலாம். கருப்பாக,
குள்ளமாக இருப்பவர்கள் மெல்லிய சரிகை போர்டர் வைத்தோ அல்லது மெல்லிய
போர்டருடனோ சேலை அணிய லாம். பெரும்பாலும் போர்டரும், சேலையின் தலைப்பும்
உள்ள புடைவைகளை தவிர்த்திட வேண்டும். கடும் நிறத்தில் உள்ள சேலைகளை
கறுப்பாக இருப்ப வர்கள் அணிய வேண்டாம்.

அப்படி அணியும்போது அதில்
சிறிய வெளிர் நிறத்தில் பூக்கள் அல்லது புள்ளிகள் இருந்தால் நன்றாக
இருக்கும். குண்டாக இருப்பவர்கள் உடலுடன் ஒட்டியவாறு ஆடைகளை அணியக் கூடாது.
டொப்பும், பொட்டமும் வெவ் வேறு நிறத்தில் இருக்குமாறு சுடிதார் அணியலாம்.
துப்பட்டாவை தவிர்க்க லாம். அல்லது கணுக்கால் வரை மிடி அணிந்து நீண்ட கைகளை
உடைய டொப்ஸை இன் செய்து அணியலாம்.

மிடியில் கூட முன்பக்கம்
பட்டையாக தைத்து அதில் அடி நுனி வரை பூவேலை அமைந்திருந்தால் தோற் றத்தை
சிறிது உயரமாகக் காட்டும். ஆடையும் அழகாக இருக்கும். முடிந்த அளவு உயரமான
செருப்பு அணிந்து கொள்ள வேண்டும்.

குட்டையான கழுத்து இருந்தால், அதை
இறுக்கமாக சுற்றும் பட்டையான அணிகலன்கள் அணிந்தால் நன்றாக இருக்காது.
நெக்லெஸ் கூட சிறிது தளர மார்பில் படும்படியாக அணியலாம். மெல்லிய நீளமான
சங்கிலி அணிய லாம். கைகளில் மெல்லிய கம்பிகளாக மோதிரங்கள் அணியலாம். காதில்
நீண்டு தொங்கும் காதணிகள் அணியலாம்.

காதைத் தாண்டி முடியில்
மாட்டும் நீள மாட்டல்களை அணியலாம். காதைச் சுற்றிலும் துளையிட்டு நிறைய
ஆபரணங்களை அணியலாம். அவை தட்டையாக அகலமாக இல்லாமல் இருப்பது அவசியம்.
ஒல்லியாக இருப்பவர் கள் சுருக்கு வைத்த ஆடைகளை அணிந்தால் சிறிது குண்டாகத்
தெரிவார்கள். இறுகிய உடைகளையும் தவிர்க்க வேண்டும்.

பேண்ட், டீ
ஷேர்ட் அணிபவர்கள் டீ ஷேர்ட்டை இன் செய்யாமல் அணியவும். பேண்ட், ஷேர்ட்
அணிபவர்கள் ஷேர்ட்டில் டிசைன்கள் இருந்தால் இன்னும் அழகாகக்
காணப்படுவார்கள்.

சீசனுக்கு தகுந்த மாதிரி துணிகளை தேர்வு செய்வது எப்படி?
இப்போதெல்லாம்
குறிப்பிட்ட கம்பெனி பெயரைச் சொல்லி பிரான்டட் ஆடைகளை வாங்குவது வழக்கமாகி
விட்டது. அது நல்லதுதான். தரம் இருக்கும். ஆனால் அது சீசனுக்கு ஏற்ற உடையா
என்பதையும் பார்க்க வேண்டும். கம்பெனிகள் தள்ளுபடி என்ற பெயரில் ஆடைகளை
விற்கும் போது சீசனுக்கு பொருத்தமில்லாத ஆடைகளை வாங்கி அணிந்து
தேவையில்லாமல் கஷ்டப்படுகிறோம்.

ஃபேஷன் டிசைனர்கள் ஆடைகளைப்
பொறுத்தவரை இரண்டு சீசன்களாக பிரிக்கிறார்கள். வெயில் காலம் ஆரம்பித்து
வசந்த காலம் வரை (மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) ஒரு சீசனாகவும்,
இலையுதிர் காலம் ஆரம்பித்து குளிர்காலம் வரை (செப்டம்பர், அக்டோபர்,
நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி) இன்னொரு சீசனாகவும்
பிரித்திருக்கிறார்கள். வெயில் காலத்திற்குத் தயாரிக்கப்படும் ஆடைகள் வசந்த
காலம் வரையிலும், இலையுதிர் காலத்தில் தயாரிக்கப்படும் ஆடைகள் குளிர்காலம்
வரைக்கும் பொருந்துமாறும் ஆடைகளைத் தயாரிக்கிறார்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? Empty Re: ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 27, 2011 9:27 pm

வெயில் காலம் முதல் வசந்த காலம் வரைக்கும் பொருத்தமானவை:

பிரைட்
கலர்களில் பெரிய பிரின்ட் போட்ட டிசைன்களில் மிருதுவான துணிகளைத்
தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த சீசனுக்கு, காட்டன் உடைதான் உடலுக்கு இதமாக
இருக்கும். குர்தா, சல்வார், சேலை, பைஜாமா, வேட்டி சட்டை எல்லாமே காட்டனில்
கிடைக்கும் போது கவலையே படாமல் விதவிதமாகத் தேர்ந்தெடுத்து அணியலாம்.


காஞ்சி
காட்டன் சேலைகள், சுங்கிடி காட்டன் சேலைகள், ஜெய்புரி, ராஜஸ்தானி, சில்க்
காட்டன் என்று விதவிதமாக கிடைக்கிறது. காட்டன் மெட்டீரியல் வாங்கி
சுடிதார், சல்வார், ஷார்ட் டாப் என தைத்துக் கொள்ளலாம்.


ஓப்பன் நெக், ஸ்லீவ்லெஸ் ஆடைகள் வியர்க்காமல் ஃப்ரீயாக இருக்கும்.







வெயில்
காலங்களில் ஏற்படும் கசகசப்பை மீறி கல்யாண வீடுகளுக்கு, பார்ட்டிகளுக்கு
போகும்போது பட்டுச் சேலைதான் உடுத்திச் செல்லவேண்டும் என்றில்லை. ரிச்சான
புடவைகள், காக்ரா சோளி போன்ற உடைகள் காட்டனிலேயே கிடைக்கிறது. பட்டுப்
புடவையை விட அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.


ஆண்களுக்கு காட்டன்
வேட்டி, அரைக்கை சட்டை அலுவலகத்திற்கு செல்லும் ஆண்களுக்கு காட்டன் பேன்ட்,
சட்டை வசதி, கை வைக்காத, ஓப்பன் நெக் பனியன் போடலாம்.


காட்டன் குர்தா, பைஜாமாவும் பொருத்தமாக இருக்கும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? Empty Re: ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 27, 2011 9:27 pm

உயரமானவர்களுக்கான உடை அலங்காரங்கள்

புடவை:

பருமனாக இருந்தால் டார்க் கலர்ஸ் பொருந்தும்.
மாநிறம்,
கருப்பு நிறத்தவர்களுக்கு டார்க் கலர் வேண்டாம். அழுத்தமான காம்பினேஷன்
(கருப்பு-வெள்ளை, பச்சை-மஞ்சள்). பெரிய டிசைன் பூக்கள், குறுக்கு கோடுகள்
தைரியமாக செலக்ட் பண்ணலாம்.


அகலமான கரை வைத்த புடவைகள்,
முப்போகம் (சேலையின் மொத்த உயரத்தை மூன்றாகப் பிரித்து 2 அல்லது 3 கலரில்
வரும்) புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை.


பெரிய உடம்பும், பெரிய மார்பகங்களும் இருந்தால் மெல்லிய ஆடைகளே வேண்டாம். உருவமும் உடல்பாகங்களும் மேலும் பெரிதாகத் தோற்றம் தரும்.




பட்டு,
கஞ்சி போட்ட காட்டன், ஆர்கன்டி, ஆர்கன்ஸா, டஸ்ஸர் சில்க் போன்றவை ஒல்லியாக
இருப்பவர்களை ஓரளவு பூசினாற்போல காட்டும். நீளத் தலைப்பு வைத்துக்
கொள்ளுங்கள். ஒல்லி என்பதால் நிச்சயமாக 6 முதல் 8 ப்ளீட்ஸ் வரும்.
குஜராத்தி ஸ்டைலில் கலக்கலாம். உயரத்தைக் குறைத்து, அகலமாகக் காட்டும்.
அகலமான பார்டர், நல்ல கான்ட்ராஸ்ட் கலர் புடவையை செலக்ட் செய்யுங்கள்.


பிரின்டட்
புடவைகளை அணியும்போது அதற்கு கான்ட்ராஸ்டான பிளவுஸ் போடுங்கள். அகல
பார்டர் புடவை நல்லது. உயரத்துக்கு அழகான தோற்றம் தரும்.


பெரிய உருவங்கள் அச்சிடப்பட்ட புடவை கட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? Empty Re: ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 27, 2011 9:28 pm

பிளவுஸ்:

ஒல்லியானவர்கள் ஹை காலர் நெக் அல்லது பின்புறம் க்ளோஸாக
வந்து முன்புறம் பாட் நெக் அல்லது யு-நெக் மாதிரி தைத்துக் கொண்டால்
பொருத்தம். பாதி காலர் நெக் என்றால் முன்பக்கம் யு, ப வடிவில் தைத்துக்
கொள்ளலாம். ரொம்ப லோ நெக் வேண்டாம். எலும்பு துருத்திக் கொண்டு, மேலும்
உங்களை ஒல்லியாகக் காட்டும்.


கை மட்டும் ஒல்லியாக இருப்பவர்கள்
கஃப் ஸ்லீவ், பட்டர்ஃப்ளை ஸ்லீவ் வைத்துத் தைத்துக் கொள்ளலாம். கை சற்று
குண்டாகக் காண்பிக்கும். கழுத்தின் முன் அல்லது பின்புறம் டிசைன் வைத்த
பிளவுஸ் தைத்துக் கொள்ளலாம்.

சற்று சதைப் பிடிப்பு இருப்பவர்களுக்கு
லோ நெக் அழகாக இருக்கும். பிளவுஸ் முழுக்கை, முக்கால் கை, நடுத்தர கை
எல்லாமே உங்களுக்கு கச்சிதமாக பொருந்தும். ஸ்லீவ் லெஸ், ஷார்ட் ஸ்லீவ்,
மெகா ஸ்லீவ் ஓகே. ஷார்ட் ஸ்லீவ் சற்று லூசாக தையுங்கள்.

குச்சி போல
கை உள்ளவர்கள் ஷார்ட் ஸ்லீவ் அணிய வேண்டாம். அகல ஜரிகை, ரெட்டை பேட்டு
ஜரிகை ஆகியவற்றை நீங்கள் அணிந்து கொள்ளும் உடைக்கேற்ப தைத்துக் கொள்ளலாம்.


ப்ளைய்ன்
பிளவுஸூக்கு கையில் மட்டும் லேஸ் வைத்து தையுங்கள். பிளவுஸின் உயரம்
உங்கள் புடவையின் உயரத்திலிருந்து 4 இன்ச் வரை இருக்கலாம். டிசைன்
பிளவுஸில் ஜரிகை, ஜம்கி, மணி போன்றவை வைத்து தைத்தால் மேலும் அழகூட்டும்.
சற்றே புடவையை இறக்கிக் கட்டினாலும் அழகாகவே இருக்கும்.


உயரமானவர்கள்

சுடிதார் டாப்ஸை சற்று இறக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உயரத்தை சற்ற குறைத்து காண்பிக்கும்.
லைட் கலரில் திக்கான உடைகளைத் தேர்ந்தெடுங்கள்.


நிறைய பூக்கள் வைத்த டாப்ஸ் லைனிங் கொடுத்த லேஸ் கமீஸ், ஜரிகை வைத்து தைத்த பட்டு கமீஸ் உங்களுக்கு நன்றாக இருக்கும்.

டாப்ஸின் சைடு டீப் ஸ்லிட் அற்புதமாக பொருந்தும்.


கழுத்து, தோளின் இருபக்கங்களிலும், ஸ்லிட்டின் ஓரத்திலும் லேஸ், ஜரிகை, ஜம்கி எம்ப்ராய்டரி வேலைப்பாடு செய்து தைக்கலாம்.

முன் பக்கம் அகலமான ஜரிகை, அடர்த்தியான எம்ப்ராய்டரி இடுப்புவரை வருமாறு தைத்து போடலாம்.


நல்ல கான்ட்ராஸ்ட் கலராக பார்த்து அணியலாம். கருப்பு-ஆரஞ்ச், அரக்கு-மஞ்சள் போன்ற பளீர் கலர்கள் எடுப்பாக இருக்கும்.
முழு கை, முக்கால் கை உங்களுக்கு மிக அழகாக இருக்கும்.


டார்க் நிறத்தில் கான்ட்ராஸ்ட் பார்டர், குறுக்கு கோடுகள் உள்ள சல்வார் உங்களுக்கு பொருந்தும்.

துப்பட்டா:

ஷிபான் துப்பட்டாவை கழுத்தோடு அல்லது கழுத்தை சுற்றி போட்டு கொள்ளுங்கள்.

ஸ்டார்ச் துப்பட்டாவை ஒரு பக்கமாக தோளுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்படி போட்டுக் கொள்ளலாம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? Empty Re: ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 27, 2011 9:28 pm

பிரா - அறிய வேண்டிய உண்மைகள்.

பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும்
மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய்
திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில்
இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன. சிறிய மார்பகத்தை எடுப்பாக
காண்பிப்பது, தளர்ந்த மார்பகத்தை தாங்கி நிறுத்துவது, முன்னழகை இன்னும்
கவர்ச்சிக்கரமாக காட்டுவது... என்று இன்றைய பிராவின் சேவை இளம்பெண்களுக்கு
அவசியம் தேவைப்படுகிறது.


திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள்,
தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டதுதானா? என்பதை பெற்றத் தாயிடம்
கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலைதான் உள்ளது. ஆனால், திருமணம் ஆகிவிட்டால்,
கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறிவிடுகிறார்கள். மேலும், இன்றைய பெண்களில் பலர்
சரியான சைஸ் பிராவை அணிவதில்லை. ஏதோ குத்துமதிப்பாக வாங்கி அணிந்து
கொள்கிறார்கள். உள்ளே அணிவதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற அவர்களது
எண்ணம்தான் இதற்கு காரணம். இப்படி, தப்பு தப்பாக பிராவை அணிந்தால் என்னென்ன
பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ள மறந்து விடுகிறர்கள்.


அதனால்,
என்னென்ன பிராக்கள் இன்றைய மார்க்கெட்டில் உள்ளன? எப்படி சரியான பிராவை
தேர்வு செய்து அணிவது? சரியான அளவு தெரியாமல் அணிவது என்ன பாதிப்புகளை
ஏற்படுதத்தும்?


இதுபோன்ற கேள்விகளுக்கான விடையை இங்கே காண்போம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? Empty Re: ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 27, 2011 9:29 pm

முதலில் என்னென்ன பிராக்கள் இப்போது மார்க்கெட்டில் வலம் வருகின்றன என்று பார்த்து விடுவோம்...


டி-சர்ட் பிரா:

இன்றைய
இளம்பெண்களில் பலர் டி-சர்ட், துப்பட்டா இல்லாத டாப்ஸ் ஆகியவற்றையே
அணிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். வழக்கமாக அணியும் பிராவை அணிந்து கொண்டு
டி-சர்ட் போட்டுக்கொண்டால், என்ன டிசைன் பிரா அணிந்து இருக்கிறோம், முதல்
கொக்கியில் பிராவை மாட்டி இருக்கிறோமா அல்லது இரண்டாவது கொக்கியிலா? -
இதுபோன்ற புள்ளிவிவரங்கள் பார்ப்பவர் கண்களுக்கு தெரிந்துவிடும். இந்த
பிரச்சினையை போக்க வந்ததுதான் டி&சர்ட் பிரா. கப்பில் தையல் இல்லாமல்
காணப்படும் இந்த பிராவை அணிந்துகொண்டால் நல்ல லுக் கிடைக்கும்.

டீன்-ஏஜ் பிரா:

டீன் ஏஜின் (13 முதல் 19 வயது வரை) ஆரம்பத்தில்தான்
மார்பகங்களின் வளர்ச்சி ஆரம்பமாகிறது. அந்தநேரத்தில், சரியான பிராவை தேர்வு
செய்து அணிய வேண்டும். அந்த சரியான பிராதான் இது. எந்தவொரு பிட்டிங்கும்,
கப் ஷேப்பும் இல்லாமல் இருக்கும் இந்த பிராவை டீன்-ஏஜ் வயது பெண்கள்
அணிந்து வந்தால் மார்பகங்களை இறுக்காமல் இருக்கும். பிரா அணிவது அவசியம்
என்ற எண்ணமும் அவர்களிடம் உருவாக உதவும்.



புல் போர்ட் பிரா

வழக்கமாக
எல்லாப் பெண்களும் அணியும் பிரா இதுதான். இந்த வகை பிரா வாங்கும் போது,
பிராவின் கப் சைசானது மார்பகத்தை முழுவதுமாக மறைத்து, தாங்கிப் பிடிக்கிறதா
என்று மட்டும் பார்த்துக் கொண்டால் போதுமானது.


நாவல்டி பிரா:

திருமணத்தன்று
பெண்கள் அணிவதற்கு உகந்த பிரா இது. பேப்ரிக், லெதர், லேஸ், சாட்டின் என்று
பலவித மெட்டீரியல்களில் கிடைக்கும் இந்த பிராவை அணிந்தால் மென்மையான
உணர்வை அனுபவிக்கலாம்.


ஸ்போர்ட்ஸ் பிரா:

விளையாடும் போது
அணிந்து கொள்ள ஏற்ற பிரா இது. இந்த வகை பிராவில் வழக்கமான பிராக்களில்
தோள்பட்டையில் காணப்படும் ஸ்ட்ராப் இருக்காது. விளையாடும் போது உறுத்தலான
உணர்வும் ஏற்படாது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? Empty Re: ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 27, 2011 9:30 pm

மெட்டர்னிட்டி பிரா:

கருவுற்ற பெண்களுக்கான பிரத்யேக பிரா இது.
கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணின் மார்பக அளவு அதிகரித்துக் கொண்டே வரும்.
அதற்கு ஏற்ற வகையில் இந்த பிராவும் விரிந்து கொடுக்கும்

நர்சிங் பிரா:

கைக்குழந்தை உள்ள பெண்களுக்கான பிரா இது. இதில், கப்பின் இணைப்பை மட்டும் உயர்த்தி விட்டு, குழந்தைக்குப் பால் கொடுத்து விடலாம்.


கன்வர்டபுள் பிரா:

பார்ட்டிகளில்
கலந்து கொள்ளும் பெண்களுக்கு என்றே உருவாக்கப்பட்டது இது. தோள்களை
மறைக்காத மேற்கத்திய நவீன ரக ஆடைகளை அணிந்து கொள்ளும் போது இதை அணிந்து
கொள்ளலாம்.

இப்படி பல வகைகள் பிராக்களில் உண்டு.


அடுத்ததாக,
சிறிய மார்பகத்தை பெரிதாக்க, பெரிய மார்பகத்தை சிறிய மார்பகமாக காட்ட,
தளர்ந்த மார்பகத்தை நார்மலாக்க உதவுகள் பிராக்கள்...


மினி மைஸர்:

இவ்ளோ
பெரியதாக இருக்கே... என்று தங்களது மார்பகத்தைப் பார்த்து வருந்தும்
பெண்களுக்கு உதவும் பிரா இது. இது, மார்பகத்தை சற்று அழுத்தி அளவை சிறியது
போன்று காட்டும். அவ்வளவுதான்.


பேடட் பிரா:

அடுத்த
பெண்களின் பெரிய மார்பகத்தைப் பார்த்து ஏங்கும் சின்ன மார்பகப் பெண்களின்
ஏக்கத்தை தணிக்க உதவும் பிரா இது. சிறிய மார்பகத்தால் தாழ்வுமனப்பான்மைக்கு
ஆளான ஒல்லி பெண்கள் இந்த பிராவை அணிந்து கொண்டால், தராளமாக நிமிர்ந்து
நடக்கலாம். எங்களுக்கும் பெருசுதான்... என்று சொல்லாமல் சொல்லி வாலிபர்களை
கிரங்க வைக்கலாம். உங்களது பிரா சைஸ் 30 என்றால், 32 சைஸ் பேடட் பிரா
வாங்கி அணிய வேண்டும்.

புஷ் அப் பிரா:

சில பெண்கள்
பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என்று இருப்பார்கள். இவர்களது மார்பகமும்
பெரியதாகவே இருக்கும். இப்படிப்பட்ட மார்பகம் கொண்டவர்களுக்கு சீக்கிரமே
மார்பகம் தளர்ந்து போய்விடும். அவ்வாறு தளர்ந்து போன மார்பகத்தை நார்மலாக்க
உதவுவது இந்த பிரா. இந்த பிராவின் அடிப் பாகத்தில் உள்ள ஜெல் நிரப்பப்பட்ட
பேக், தளர்ந்த மார்பகங்களை சற்று நிமிர்த்த உதவுகிறது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? Empty Re: ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 27, 2011 9:31 pm

அண்டர் ஒயர் பிரா:

இதுவும், புஷ் அப் பிராவைப் போன்று, தளர்ந்த
மார்பகங்களுக்கு உதவுவதுதான். ஆனால், இதில் ஜெல் பேக் கிடையாது. இந்த வகை
பிராவின் அடிப் பகுதியில் இருக்கும் ஒயர், தளர்ந்து போன மார்பகத்திற்கு
கூடுதல் சப்போர்ட் கொடுக்கும். அவ்வளவே.


கியூட் வெட்டிங் பிரா:

மேல்நாட்டு
கிறிஸ்தவ திருமணங்களில் மணப்பெண், மார்பகத்திற்கு மேலே தோள் பகுதி
முழுவதும் தெரியுமாறு விசேஷ ஆடை அணிந்திருப்பாள். அவ்வாறு ஆடை அணியும்போது
இந்த வகை பிரா அணிவதுதான் பாதுகாப்பானது. இந்த பிரா பெரிய ஸ்ட்ராப்களுடன்
இடுப்பு வரை நீண்டும் ஸ்லிப் போல இருக்கும். இந்தப் பிராவை அணிந்துகொண்டு
க்ளோஸ் நெக் சுடிதாரோ, சல்வாரோ அணிந்து கொண்டால், அவ்வளவு அழகாக இருக்கும்.
தோற்றமும் கவர்ச்சியாகத் தெரியும்.


மெசக்டமி பிரா:

கேன்சர்
காணமாக மார்பகங்களை பறிகொடுத்த பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. இதில்,
கப்களுக்குள் சிலிகான் ஜெல் பேக்குகள் இருக்கும். இதை அணிந்து கொண்டால்,
மார்பகம் இல்லை என்ற உணர்வே தெரியாது. அசல் மார்பகம் போன்ற தோற்றத்தையும்,
உணர்வையும் தரக்கூடியது இந்த பிராவின் தனிச்சிறப்பு. இந்த வகை பிராக்களை,
ஆர்டர் செய்தால் மாத்திரமே வாங்க முடியும். விலை அதிகமாகவே இருக்கும்.

இனி, பிரா தொடர்பான சில சந்தேகங்களும், அதற்கான பதில்களும்...

கேள்வி: அணிந்து வருவது தவறான பிரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?


பதில்:
உங்கள் உடலில் பிராவின் ஸ்ட்ராப் பதிந்த இடங்கள் சிவந்து போய்
காணப்பட்டால் நீங்கள் அணிந்திருக்கும் பிரா இறுக்கமானது, அதாவது தவறான சைஸ்
என்பதை தெரிந்து கொள்ளலாம். முதுகு பக்கம் உள்ள ஸ்ட்ராப் ஒரே இடத்தில்
இருக்காமல் மேலே ஏறிக்கொண்டு வந்தாலும் நீங்கள் சரியான பிராவை அணியவில்லை
என்று அர்த்தம். மார்பகத்தின் அளவைவிட, பிராவின் கப் சைஸ் சிறிதாக
இருந்தால் மார்பகம் ஒன்றின் மேல் ஒன்று இருப்பது போல் இரண்டாகத் தோன்றும்.
அதனால், இதுவும் தவறான சைஸ் பிராதான்.


கேள்வி: மார்பகங்களின் கீழே கறுப்பாக உள்ளது. ஏன் இப்படி ஏற்படுகிறது?
பதில்: தவறான சைஸ் பிராவை அணிந்தால் இந்த பிரச்சினை வரும். அணியும் பிராவின் சைஸை மாற்றுவதுதான் இதற்கு சரியான தீர்வு.

கேள்வி: கொழுக்மொழுக் என்று உள்ள பெண்கள் (36 சைஸ் உள்ளவர்கள்) எலாஸ்டி’ ஸ்ட்ராப் வைத்த பிரா அணியலாமா?
பதில்: நிச்சயம் அணியக்கூடாது. உங்களது மார்பகம் இன்னும் தளர்வடையவே இது வழி வகுக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? Empty Re: ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 27, 2011 9:31 pm

கேள்வி: முதுகுவலி வர பிராவும் காரணமாக இருக்கலாமா?
பதில்: கண்டிப்பாக.
தோள் பட்டை வலி, முதுகு வலி வந்தால், உங்கள் பிரா சைஸ் சரியானதுதானா என்பதை
உறுதி செய்யுங்கள். சரியில்லை என்றால், சரியானதை தேர்வு செய்யுங்கள்.
இல்லையென்றால், டாக்டரிடம் செல்லுங்கள்.

கேள்வி: கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிரா அணியலாமா?
பதில்:
இது தவறான அணுகுமுறை. கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிராவும், வெள்ளை நிற ஆடைக்கு
கறுப்பு நிற பிராவும் அணிந்தால், அந்த பிரா பளிச்சென்று பிறருக்கு
தெரியும். அதனால், பிளாக், ஒயிட் பிராக்களுடன் ஸ்கின் கலர் பிராவையும்
வாங்கி வைத்து, அணியும் ஆடைக்கு ஏற்ப மாற்றி மாற்றி அணிந்து அழகு
பாருங்கள். புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு என்றே கவர்ச்சியான விதவிதமான
கலர்களில் பிராக்கள் கிடைக்கின்றன. அவர்கள் அதை அணிந்து என்ஜாய் பண்ணலாம்.
இளம்பெண்கள் விரும்பினால், இந்த வகை பலர் பிராக்களை அணிந்து அழக
பார்க்கலாம்.

கேள்வி: இரவில் பிரா இல்லாமல் தூங்கலாமா?
பதில்:
பெரும்பாலான பெண்களுக்கு இந்த சந்தேகம் உள்ளது. இரவில் பிரா அணியலாமா?
வேண்டாமா? என்பது உங்கள் சவுகரியத்தைப் பொறுத்ததுதான். 34 மற்றும் அதற்கு
மேற்பட்ட அளவுகளில் மார்பகம் கொண்ட பெண்களுக்கு, கனமான மார்பகத்தால் அவை
தளர்ந்துபோய்தான் இருக்கும். இவர்கள் பிராவுடன் உறங்குவதே நல்லது.
அதைவிட்டுவிட்டு, பிரா இன்றி உறங்கினால் மார்பகம் இன்னும் தளர்ந்து
போய்விடும். சில பெண்கள், பகல் முழுவதும் பிரா அணிந்திருப்பதால், இரவில்
அதை கழற்றி விடலாமே என்று எண்ணுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வேண்டுமானால்
பிராவை கழற்றி வைத்துவிடலாம். சிறிய மார்பகம் உள்ளவர்கள் இரவில் பிரா அணிய
வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அணிந்தாலும் பிரச்சினை இல்லை.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? Empty Re: ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 27, 2011 9:32 pm

நகைகள்:

நீண்ட கழுத்து, வட்ட முகம், நீண்ட காது மடல் என்று கழுத்து,
காது பகுதிகளின் அமைப்பை வைத்தே என்னென்ன நகை பொருத்தமாக இருக்கும்
என்பதைத் தெளிவாக சொல்லிவிடமுடியும். உங்கள் முக வடிவமைப்பு, கழுத்தின் நீள
அகலத்தை பொருத்து நகைகளைத் தேர்ந்தெடுங்கள். பொதுவாகவே ஒல்லியும்,
உயரமுமாக இருப்பவர்களுக்கு கழுத்து சற்று நீளமாகத்தான் இருக்கும்.


அகலமான நெக்லஸ், சோக்கர், குந்தன் ஜூவல்லரி ஆகியவை அணியலாம். கூடவே ஒரு நீளமான செயின் அணியுங்கள்.


குட்டை கழுத்து பகுதி உள்ளவர்கள் ஒற்றைக்கல் நெக்லஸ் அல்லது தடிமனான சங்கிலியில் டாலர் வைத்து அணியலாம்.


குண்டாகவும்,
குள்ளமாகவும் இருப்பவர்களுக்கு கழுத்து நீளம் குறைவாக இருக்கும். பட்டையான
நெக்லஸ், சோக்கர் போட்டால் அது கழுத்தை இன்னும் அகலமாகக் காட்டுவதுடன்
இருக்கிற கொஞ்சநஞ்ச இடத்தையும் அடைத்துக் கொள்ளும்.


மெல்லிய
சங்கிலி, சின்ன சைஸ் முத்து, மெல்லியதான பீட்ஸ் இவற்றை ப்ளெய்ன் ஆகவோ
அல்லது சிறிய டாலருடனோ அணிந்து கொண்டால் எடுப்பாக இருக்கும். மெல்லிய,
நீண்ட செயின்கள் நிச்சயம் உங்களுக்கு அழகுதான். டாலர் இல்லாமல் அணிந்தால்
இன்னும் அழகாக இருக்கும்.


கழுத்தைச் சுற்றி செயின்
படர்ந்திருக்கும் பகுதிகளில் அதிக கற்கள் இல்லாமல் பார்த்துக்
கொள்ளவேண்டும். கழுத்துக்கு கீழே தொங்கும் செயின் பகுதியில் கற்கள்
பதித்திருந்தால் தப்பில்லை. அதிக நகைகள் போடாமல் மெல்லிய செயின், சிறிய
காதணிகள் போட்டால் அம்சமாக இருக்கும்.


அகலமான நகைகளைத் தவிர்த்துவிடுங்கள். உடலின் நிறத்துக்கு ஏற்ப உடை மற்றும் நகைகளைத் தேர்ந்தெடுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? Empty Re: ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 27, 2011 9:32 pm

சிவப்பு நிறம் உள்ளவர்கள்:

ரூபி, பச்சை, நீலம் போன்ற கற்கள், மணிகள் உள்ள நகை அணியலாம்.


கறுப்பு நிறம் உள்ளவர்கள்:
வைர நகைளை அணிந்தால் அவ்வளவு அழகாக இருக்கும்!


முத்து வகைகள், வெள்ளை, பிளாக் மெட்டல் நகைகள் உங்களுக்கு மிகமிக அழகாக பொருந்தும்.


அதிகப்படியான
நகைகளை அணியவேண்டாம். சின்னதாக ஐந்து கல் பதித்த அமெரிக்கன் டயமண்ட் தோடு,
மெலிதான செயினில் பதக்கம், ஒரு துளி தெறித்தது போன்ற ஒற்றைக் கல்
மூக்குத்தி போன்றவை உங்கள் முக அழகை பிரகாசமாகக் காட்டும்.


முத்து செட்டும் அம்சமாக இருக்கும்.
தங்கத்திலும் பட்டை பட்டையாக இல்லாமல் மெல்லிய நகைகள் அணியுங்கள்.


ஒல்லியானவர்கள நிறைய வளையல் அணிந்து கொள்ளுங்கள்.
பட்டையான ஜரிகை போட்ட புடவைகள் அணிந்து கொண்டால், நகை சற்று சிம்பிளாக இருக்க வேண்டும்.


சிம்பிள்
புடவையாக இருக்கும்பட்சத்தில் குந்தன், டெம்பிள் போன்ற நகைகள் அணியலாம்.
இது எல்லோருக்குமே பொருந்தும். டல் ஒயிட், க்ரே, ஸ்கை ப்ளூ, பேபி பிங்,
அல்ட்ரா லைட் ப்ரவுன் போன்றவை எந்த டிசைன் நகைகளுக்கும் பொருத்தமான ஆடை
வண்ணங்கள்.


கால்களின் கணுக்கால் பகுதி ஒல்லியாக இருந்தால் பட்டையான கொலுசு போடுங்கள்.


குண்டான கால்களுக்கு மெல்லிய ஒரே சலங்கை வைத்த கொலுசு அழகாக இருக்கும்.


நடுத்தரமான கால்களுக்கு மெல்லிய, பட்டையான கொலுசு இரண்டுமே பொருத்தமாக இருக்கும்.


மெல்லிய விரலுக்கு பட்டையான சலங்கை வைத்த மெட்டி அழகாக இருக்கும்.


விரல்கள் கொழுகொழுவென்று இருந்தால் மெல்லிய மெட்டிகள் போடலாம். குறிப்பாக இரண்டாவது விரலில் மெட்டி போட்டால் அழகுக் கூடும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? Empty Re: ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 27, 2011 9:33 pm

குள்ளமானவர்களுக்கான உடை
புடவை:
கம்பீரத்தையும் கண்ணியத்தையும் கலந்துகட்டி வெளிப்படுத்துவது புடவை மட்டுமே.


டார்க் கலர்களைவிட வெளிர் நிறங்களே அழகு.


தலைப்பின் நீளம் குறைவாக இருப்பது நல்லது.


காட்டன், பேப்பர் சில்க், ஆர்கண்டி, டஸ்ஸர் சில்க் புடவைகளைத் தவிர்க்கவும்.


கையளவு பார்டர் உள்ள புடவை அணியுங்கள். நேர் கோடுகள் உள்ள ஆடைகளை அணிவதாலும் உயரத்தை அதிகமாக்கிக் காட்டலாம்.

சாய்வான கோடுகள் உள்ள ஆடை அணியவேண்டாம். இன்னும் குட்டையாகக் காட்டும்.


இயன்றவரை
பிளெய்ன் புடவை, சிறிய பூக்கள் உள்ள புடவை கட்டுங்கள். பேபி பிங்க், லோ
வயலட், வெளிர் நீலத்தில் வெள்ளைப்பூக்கள்... இதெல்லாம் ஓகே.


ஷிபான்,
ஜார்ஜெட், மைசூர் சில்க், பின்னி சில்க், பிரின்டட் சில்க் டிசைன்
புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ரகங்கள். இதில் ஜரிகை ரகங்களை
விழாக்களுக்கு அணியலாம். இது காஞ்சிப் பட்டுக்கு ஈடுகொடுக்கும்.


சின்னச்
சின்ன பூக்கள், டிசைன்கள் உள்ளதை எடுங்கள். பெரிய பூக்கள், பெரிய டிசைன்
வேண்டாம். சின்ன பார்டர் போதும், அதிக டிசைன் தேவையில்லை.


குண்டாக
இருப்பவர்கள் குஜராத்தி டைப்பில் புடவை உடுத்தவேண்டாம். மேலும் குண்டாக
காட்டும். ஒரு பக்க கரை போட்ட புடவை அழகு. இரண்டு பக்க ஜரிகை போட்ட புடவை
கட்ட ஆசையாக இருந்தால் சிறிய பார்டர் ஓகே. குள்ளம், பருமனை குறைத்துக்
காட்டும். டார்க் நிற உடைகளை அணியுங்கள். ஒல்லியான தோற்றத்தைக் கொடுக்கும்.
லோ ஹிப் வேண்டாம்.


ஒல்லியாக சற்று குள்ளமாக இருப்பவர்
அழுத்தமான கலர்களில் உடை அணிவதைத் தவிருங்கள். (ஆனால் கருப்பு, மெரூன்
போன்றவை யாருக்கும் பொருந்தும்) சின்ன பார்டர் புடவையைத் தேர்ந்தெடுங்கள்.
கங்கா, யமுனா சேலை போல் ஒரு பக்கம் டிசைன் உள்ள புடவை சற்று
பூசினாற்போலவும் உயரமாகவும் காட்டும். பிரைட் டிசைன், பெரிய பூ டிசைன்களை
தவிர்த்துவிடுங்கள். புடவைகளில் நீளவாட்டு கோடுகளும், நீள வாட்டு
டிசைன்களும் உங்களுக்குப் பொருத்தம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? Empty Re: ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 27, 2011 9:34 pm

சுடிதார்:

வயதை குறைத்துக்காட்டும் டிரஸ் என்றால் அது சுடிதார்,
சல்வார்-கமீஸ்தான். வயது, உருவ அமைப்பைப் பார்த்து துணி எடுத்துக் கொள்வது
நல்லது.

பிளெய்ன் துணியில் மிகச் சிறிய டிசைன், கழுத்து, ஓரங்களில் மெல்லிய எம்ப்ராய்ட்ரி டிசைன், சைடு ஸ்லிட்டில் டிசைன் அம்சமாக இருக்கும்.

நீளவாக்கில் கோடு, மெல்லிய கொடி போன்ற டிசைன் உயரமாக காட்டும்.


ஜரிகை
வைத்து தைத்தால், சல்வாரின் முன் பக்க முழு நீளத்துக்கும் வைத்துக்
கொள்ளுங்கள். ஒன்று அல்லது ஒன்றரை இன்ச்சுக்கு மேல் வேண்டாம்.


குண்டாக இருப்பவர்கள்:


ஸ்லிட்டில் ஜரிகை வைத்து தைக்காதீர்கள். அது சுற்றளவை கூட்டி காண்பிக்கும்.


எந்த டிசைனும் மெல்லியதாக இருக்கட்டும். அடர்த்தி டிசைன்களே வேண்டாம்.


முழுக்கை டாப்ஸ், மிகவும் குறைந்த கையுள்ள டாப்ஸ் உங்களுக்கு பொருந்தாது. நடுத்தர நீளம், முக்கால் கை பொருந்தும்.


ரொம்ப டைட் வேண்டாம். லூசாகவும் வேண்டாம். இடுப்பு மட்டும் சற்று லூசாக இருக்கட்டும். அது மடிப்புகளை மறைக்கும்.


அகலமான சல்வார், பஞ்சாபி பைஜாமா உங்களுக்கு சரிவராது. காலை ஒட்டின, அகலம் குறைவான சல்வார் நன்றாகப் பொருந்தும்.


சுருக்கம் வைத்த பைஜாமா வேண்டாம். இடுப்பு அளவை மேலும் அதிகரித்துக் காட்டும்.


மேல்புறம்
சுருக்கம் கொடுத்துத் தைக்காமல், ஒரு ஜாண் பட்டி கொடுத்து அதற்கு
கீழிருந்து சல்வார் வரும்படி தைத்து கொள்ளுங்கள். இடுப்பு இளைத்த மாதிரி
காட்டும்.


பார்டர் அழுத்தமான டிசைன், திக் லைன் போட்ட மெட்டீரியல் வேண்டவே வேண்டாம்.


காட்டன்
லைனிங் கொடுத்து தைக்கக்கூடிய லேஸ், ஷிபான் துணிகள் வேண்டாம். குண்டாக
காட்டும். ஜீன்ஸ் அணிவதை தவிர்த்து விடுங்கள். குளிர் பிரதேசங்களுக்கு
போனாலும் ஓவர்கோட் இருக்குதே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? Empty Re: ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 27, 2011 9:34 pm

ஒல்லியாக இருப்பவர்களுக்கான உடை:

இப்போதைய ஃபேஷனான ஷார்ட் டாப்ஸ் உங்களுக்கு நன்றாகப் பொருந்தும்.
பளீர் நிறமாகத் தேர்ந்தெடுங்கள்.


குட்டை ஸ்லீவ் அல்லது மீடியம் ஸ்லீவ் ஓகே.


ஸ்லீவ் லெஸ் டாப்ஸ் உங்களை உயரமாகக் காட்டும்.


லூசான சல்வார், பேன்ட் போன்ற சல்வார், ஜீன்ஸ் உங்களுக்குப் பொருந்தும்.


காட்டன் துப்பட்டா என்றால் ஒரு பக்கமாக, தோள் பட்டைக்கு வெளியில் வராதபடி அணிந்து கொள்ளுங்கள்.


ஷிபான் துப்பட்டாவாக இருந்தால் இரு பக்கமாக மார்பு வரை இறக்கி போடுங்கள்.


ஜீன்ஸ்,
டி-ஷர்ட் உங்களுக்குப் பிரமாதமாக இருக்கும். டைட் ஜீன்ஸ் என்றால் லூஸ்
ஷர்ட் நல்லது. அகலமாகக் காட்டும். லூசான ஜீன்ஸ் என்றால் ஷார்ட் டாப்ஸ்
போடலாம்.


கண்களை அழகாக காட்ட

சென்சிடிவான பாகம் கண்
ஆகும். தூக்கமின்மை, கடின உழைப்பு, சத்துக்குறைவு, கண்களுக்கு அதிக
வேலை.... இவற்றால் கருவளையம் வந்து கண் அதான் ஜீவனையே இழந்துவிடும்.

கண்களுக்கு நிறைய ஓய்வு கொடுங்கள்.

குறைபாடுகள்
இருந்தால் உடனே பரிசோதித்து உரிய சிகிச்சை பெறுங்கள். பார்வை பாதித்தால்
வயதான தோற்றம் தருமே என்று கண்ணாடி போடாமல் இருக்காதீர்கள். கண்ணாடியும்
அழகுதான். வட்ட முகத்துக்கு மெல்லிய சிறிய சதுர வடிவ கண்ணாடி பொருத்தமாக
இருக்கும். ஓவல் முகத்துக்கு சற்று அகலமான சதுர கண்ணாடி பொருந்தும். நீள
முகத்துக்கு வட்ட கண்ணாடி பொருந்தும்.


கண்களை சிறிதாகவும் பெரிதாகவும் மாற்றிக் காட்ட ஐலைனர் பயன்படுத்துங்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? Empty Re: ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 27, 2011 9:35 pm

பெரிய கண் உள்ளவர்கள் மெல்லிய கோடாகவும், சிறு கண் உடையவர்கள் அழுத்தமாகவும் ஐலைனர் போடவேண்டும்.


விழி துருத்திக் கொண்டு இருப்பது போல் தோற்றம் உள்ளவர்கள் பழுப்பு நிற ஐஷேடோ பயன்படுத்தலாம்.


கருமையான விழி உடையவர்கள் புருவத்துக்கும் இமைக்கும் நடுவில் சாக்லெட், நீலம், பச்சை நிற ஐஷேடோ பயன்படுத்தலாம்


முக அழகிற்கு தகுந்த மாதிரி புருவத்தை மாற்ற
முகத்தின்
ஒட்டு மொத்த அழகைக் காட்டுவதில் புருவத்துக்கு ஈடு இணையில்லை என்றே
சொல்லலாம். வில் போன்ற புருவம், அடர்த்தியான புருவம், தடிமனான புருவம்,
கீற்று போன்ற புருவம் என்று வகைப்படுத்தி கூறலாம். முகத்துக்கு ஏற்ப,
கண்களுக்கு ஏற்ப புருவத்தை ட்ரிம் செய்து கொள்ளுங்கள்.
குறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி அதிகம் இருக்கட்டும்.


நீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக இடைவெளி தேவையில்லை.


ஓவல் முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன் இருந்தால் வசீகரமாக இருக்கும்.


அகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள்.


புருவங்கள் நெருங்கி இருந்தால் முகம் குறுகி, கண்கள் சிறிதாக தெரியும்.


சதுர முகம் உள்ளவர்கள் பெரிய வளைவாக பிறை வடிவில் மாற்றிக் கொள்ளுங்கள். முகம் ஓவல் வடிவமாகத் தெரியும்.


புருவத்தின் முடிவு மிகவும் கீழ் நோக்கி இருந்தால் வயதான தோற்றம் தரும். மாற்றிக்கொள்ளுங்கள்.


கருப்பு நிறம், அழகிய முகம் உள்ளவர்கள் புருவத்தை சரி செய்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.


வட்ட முகம் உள்ளவர்கள் புருவம் கீழ் நோக்கி வருவதுபோல் அமைத்துக் கொள்ளவும்.


நீண்ட, ஓவல் முகம் உள்ளவர்கள் சிறிய புருவத்தை அமையுங்கள்.


நீளமூக்கு உள்ளவர்களுக்கு புருவம் தழைத்தே இருக்கட்டும். தினம் விளக்கெண்ணெய் தடவுங்கள். முடி நன்றாக வளரும்.


வீட்டிலேயே
புருவத்தை சீர் செய்பவர்கள் பிளேடால் எடுக்காதீர்கள். அதிகமாக வளர
ஆரம்பித்துவிடும். எதிர்த்திசையில் எடுத்தால் முரட்டுத்தனமாக வளரும்.
அடுத்த முறை நூலினால் எடுக்கும்போது அந்த இடத்தில் ஆழப்புள்ளி உண்டாகலாம்.


உடைக்கு மேட்சான நிறத்தில் ஐ ஷேடோ எடுங்கள். கண்களை மூடி புருவம் மீது ப்ரஷ்ஷால் தடவுங்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி? Empty Re: ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பட்டுப் புடவை உடுத்தின பிறகு அவற்றை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்...
» Online இல்லாமல் எப்படி webpage பார்ப்பது எப்படி?
» எப்படி இருந்த பயலை எப்படி மாத்திட்டாங்க பாத்தீங்களா...
» எப்படி எப்படி - சிறுவர் கதை
» எல்லாரும் எப்படி இருக்கீங்க ,, யூஜின் அண்ணா , கலை அக்கா , ரமேஷ் அண்ணா , ஹிசாலீ அக்கா , பகீ அண்ணா , ஐயா , ராஜப்டீன் அண்ணா , மற்றும் எல்லா உறவுகளும் எப்படி இருக்கீங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum