தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கருவேல மரங்கள்...

3 posters

Go down

கருவேல மரங்கள்... Empty கருவேல மரங்கள்...

Post by எஸ்.கே Sat Mar 03, 2012 7:49 pm

[URL="http://www.terrorkummi.com/2012/03/blog-post.html"]கருவேலம் உண்மையில் கருங்காலியா...? பிரச்சாரங்களும் உண்மைகளும்....![/URL]

நாம் அடிக்கடி சொல்வதுதான், எல்லோர்க்கும் விழிப்புணர்வு தருகிறேன் என்ற பெயரில் ஆதாரமற்ற, அபத்தமான விசயங்களை எழுதுபவர்கள் திருந்தினால் நல்லது என்று. அப்படியே அவர்கள் எழுதினாலும் படிப்பவர்கள் என்ன சொல்லி இருக்கிறது, அது சரியா என்றெல்லாம் ஆராய்ந்து பார்ப்பது இல்லை. ஆஹா அருமை என்று டெம்ப்ளேட் கமெண்ட்டுகளை போட்டு அதற்கு துணைபோய் அதே விசயம் மென்மேலும் பரவ காரணமாகிவிடுகின்றனர். இதுதான் இந்த மாதிரி எழுதுபவர்களுக்கு இன்னும் பலம். இன்னும் சிலர் அடிப்படை அறியாமல் அவர்கள் சொல்வதை முழுதும் நம்பி விடுகின்றனர்.

அண்மையில் ஒரு விசயம் மிக பிரபலமாக இணையத்தில் வளம் வந்தது. அதுவும் மரங்களை வெட்டுங்கள் என்ற தலைப்பில். இதை எழுதியவர் அதனை ஒரு வருடம் முன்பே வெளியிட்டு இருந்தார். அந்த நேரத்தில் சிலர் அப்படி இல்லை என்ற கருத்தை நாசூக்காகச் சொல்லி இருந்தார்கள். சிலரோ இதோ நான் அருவாள் எடுத்துவிட்டேன் எங்கே மரம், வெட்டுகிறேன் என கிளம்பியதே இதில் இருக்கும் தவறான தகவல்களை யாரும் அலசி பார்க்காமல் நம்பிப் போனதுக்கு காரணமாக இருக்கலாம்.

சில நாள்களில் அந்த பிரச்சினை ஓய்ந்து இப்போது மீண்டும் எங்கேபார்த்தாலும்அதே விசயம் பரவ ஆரம்பித்து இருக்கிறது. சரி நாமும் அப்படி என்னதான் கெடுதல் விரிவாக அறிந்து கொள்வோமே என்று தேடிப்பார்த்தால் ஆச்சர்யமான, அதிர்ச்சியான சில உண்மைகள் விளங்கின. அவைகளைத்தான் இங்கே விளக்கமாக பார்க்க போகிறோம். விசயத்திற்கு செல்லும் முன் வெட்டசொன்ன மரத்தினை பற்றி சிறு அறிமுகம்.

இதன் அறிவியல் பெயர் : Prosopis Juliflora

நம்மூரில் அறியப்படுவது : சீமை கருவேலம் அல்லது வேலிமரம்

இதனை பற்றி முழுவதுமான அறிவியல் விளக்கங்களை தெளிவாக இந்த சுட்டியில் காணலாம்.

இந்த மரத்தின் தீமைகளாக எடுத்து வைக்கப்படும் விசயங்கள்...

1) இந்த மரம் அதிகம் விஷத்தன்மை கொண்டது.

2) இதன் வேர்கள் ஆழமாக சென்று நீரை உறிஞ்சி விடுவதால் நீராதாரம் பாதிக்கப்பட்டு தென்தமிழகத்தின் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் நிலவும் வறட்சிக்கு இவைகளே முக்கிய காரணம்.

3) இந்த மரத்தின் எந்த ஒரு பொருளும் பயன்பாட்டுக்கு உதவாது, முக்கியமாக இலை,காய் (நெத்து), பூ என எல்லாமே விஷத்தன்மையுள்ளது. ஆகையால் கால்நடைகள் தெரியாமல் உண்டுவிட்டால் உயிரிழப்பு ஏற்படும்.

4) நிலத்தடி நீரை விஷமாக மாற்றுவதோடு இல்லாமல் மண்ணின் வளத்தை முற்றிலுமாக சீரழித்து விடும். இது வளர்ந்த இடத்தில் எதையுமே பயிரிடமுடியாது. விவசாய நிலங்களை ஆக்கிரமித்து விவசாயத்தை கெடுக்கிறது

5) இந்த மரத்தில் கால்நடைகளை கட்டிவைத்தால் அவைகள் மலடாக மாறும் அல்லது கன்றுகள் ஊனமாக பிறக்கும்.

இதே விசயங்கள் இணையம் முழுதும் எங்கும் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை அப்படியே நேர்மாறாக இருக்கிறது. அதனால் ஒரேயடியாக இந்த மரத்தை விஷம் நிறைந்த மரம் என்று ஒதுக்கி தள்ளுவதற்கு முன் இதனை பற்றி சரியாகத் தெரிந்து கொள்வது கொஞ்சம் அவசியமாகிறது.

இதை இங்கு தெரிவிப்பதின் காரணம் இந்த மரம் நமக்கு மிகவும் அவசியமானது, இதை வீட்டுக்கு ஒன்றாக வளர்க்க வேண்டும் என இந்த மரத்துக்கு பரிந்துபேசி வலியுறுத்த போவதில்லை. மாறாக இந்த மரத்தைப் பற்றிய தவறான தகவல்களை ஆதாரங்களோடு மறுப்பதோடு, சொல்லிக்கொள்ளும் அளவில் இருக்கும் இம்மரத்தின் நன்மைகளையும் பார்க்கப் போகிறோம்.

ஆனால் இதன் பொதுவான தீங்கு விவசாய நிலங்களில் வளர்ந்து விவசாயிகளுக்கு பெரும் தொந்தரவாக இருப்பது. இது பெரியதாக வளர்ந்து விட்டால் இதன் வளர்சித்தன்மையின காரணமாக வேகமாக பரவும். அதுவும் எந்த காலநிலையும்,மண் தன்மையும் இதன் வளர்ச்சியை ஒன்றும் செய்ய முடியாது. பெரும்பாலும் எந்த விவசாயியும் இதனை தனது நிலத்தில் வளர அனுமதிப்பது இல்லை அந்த நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்யும் பொருட்டு. இது ஒன்றுதான் நாம் எதிர்கொள்ளும் தீமை.அதுவும் நாமே அதை வளர அனுமதித்தால் ஒழிய.

இந்த மரத்தைப் பற்றிய விஷயங்களை கீழ்கண்ட தலைப்புகளில் பார்க்கலாம்.

1) இது விஷம் நிறைந்தது அல்ல.

2) தமிழகத்தின் சில மாவட்டங்களில் நிலவும் வறட்சிக்கு இது தான் காரணமா?

3) இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பொருள்களை வைத்து எவ்வாறு பயனடையலாம்.

4) இதனை ஒன்றுக்கும் உதவாத அதாவது உப்பு, உவர் நிலங்களில் வளர்ப்பதால் என்னமாதிரியான பயன்களை தருகிறது.

5) இது கால்நடைகளுக்கு எவ்வாறு மருந்தாக,உணவாக பயன்படுகிறது.

6) இதனால் சமூகத்தில் இருக்கும் பொருளாதார தாக்கம் என்ன முக்கியமாக ஏழைகளின் வாழ்வில்.

7) மின்சார தயாரிப்பில் இதன் பங்கு.

1. விஷச்செடியா??

இது விஷச்செடி வகையை சார்ந்ததா என்றால் நிச்சயமாக இல்லை. விஷச்செடி என்றால் அரளிச்செடியை சொல்லலாம். இந்த முறையில் பார்த்தால் இந்த மரத்தினால் உயிரினங்களுக்கு அந்த மாதிரியான எந்த பாதிப்பும் இல்லை. மேலும் இதன் முள் விஷத்தன்மை வாய்ந்தது, இலையை தின்றால் உயிரிழப்பு என்பதெல்லாம் முற்றிலும் ஆதாரமற்ற விசயங்களே.

2. வறட்சிக்குக் காரணமா?

அடுத்து சில மாவட்டங்களில் நிலவும் வறட்சிக்கு இதுதான் முக்கிய காரணம் என்பது அபத்தமானது. வறட்சி என்பது ஒருவகையில் மட்டும் வருவது இல்லை. பல காரணிகள் பின் நிற்கின்றன. மண்வளம், நிலத்தடி நீரின் அளவு, காற்றில் நிலவும் ஈரப்பதம் போன்ற காரணிகள். இந்த மரமே இதை சுற்றியுள்ள காலநிலையை நிர்ணயிக்கிறது என்பதும் சரியில்லை.

குறிப்பாக விருதுநகர்,ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் வறட்சிக்கு அங்கு நிலவும் மண்வளமே காரணம். மண்ணில் காணப்படும் கால்சியம் கார்பனேட் (Calcium carbonate) மண்ணின் வளம் மேம்படுவதை வெகுவாக பாதிக்கிறது. வைகைப் படுகை இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மணல், உவர்நிலங்களாகவே இருக்கின்றன.

இப்படி அதிகமாக காணப்படும் தரமற்ற மண்ணில் மரவகைகள் செழித்து வளர்வது முடியாத காரியம். ஆனால் இந்த கருவேலம் மரத்துக்கு மண் வளம் பெரிய பிரச்சினையே இல்லை. முக்கியமாக உவர், உப்பு நிலங்களில் கூட செழித்து வளரும். இதுவளரும் சூழ்நிலையில் மற்ற மரங்கள் வளர்வது சாத்தியமற்றது.

இந்த வறட்சியான சூழ்நிலையை கருத்தில் கொண்டுதான் பென்னி குக் பெரியார் அணையே கட்டினார். ஏனென்றால் வைகை ஆற்றில் இருந்து கிடைக்கபெரும் நீர் அங்கு நிலவும் வறட்சியை தாக்குப்பிடிக்க முடியாது என்று எண்ணியதே. முக்கியமான விசயம் என்னவென்றால் பல நூறு வருடங்களுக்கு முன்னரே இந்த வறட்சி இருந்து இருக்கிறது. ஆனால் கருவேலம் இந்தியாவுக்கு வந்தது 1857 ல் தான். அதுவும் தமிழகத்துக்கு இதன் வருகை கொஞ்சம் காலம் தள்ளியே இருக்க வேண்டும். பார்க்க..

///the earliest recorded introduction of P. juliflora was in 1857, the first systematic plantations were not carried out until 1876 ~ 77 in the Kaddapa area of Andhra Pradesh. It was introduced into parts of Gujarat in 1882 ///

ஆனால் பெரியாறு அணை கட்டும் திட்டம் 1807 ல் அடிப்படை வேலைகள் தொடங்கி சில பிரச்சினை வந்து அப்புறம் 1882 ஆம் ஆண்டில் முழுவதும் கட்டி முடிக்கபெற்று இருக்கிறது. இந்த அணை கட்டுவதற்க்கு முன்பே நிலவிய வறட்சியின் காரணமே இதனை உருவாக்கும் எண்ணம்அவருக்கு தோன்றி இருக்கிறது.

http://en.wikipedia.org/wiki/John_Pennycuick_%28British_engineer%29

எனவே இந்த கருவேலம் மரம்தான் அங்கு நிலவும் வறட்சிக்கு முழுக்காரணம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்வதில் அர்த்தமில்லை. மேலும் மற்ற மரங்கள் வளரமுடியாத அந்த உவர் நிலங்களில் இந்த கருவேல் மரம் வளர்ந்து அப்பகுதி மக்களுக்கு கரிமூட்டம், அடுப்பு எரிக்க விறகு போன்ற விசயங்களுக்கு உதவுகின்றது.

3. எப்படி பயனளிக்கிறது...?

எரிபொருளாக

இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பொருள்களை அப்படியே விஷம் என்று சொல்லி ஒதுக்கி இருந்தால் இந்நேரம் அதிக இழப்புகளை சந்தித்து இருப்போம். முக்கியமாக ஏழை மக்கள். அவர்களுக்கு முக்கியமான எரிபொருளாக பயன்படுவது இந்த மரமே. பார்க்க பக்கம் 137 & 138, [url]http://www.iamwarm.gov.in/Environment/report.pdf[url].

அதோடு ஏழைமக்களுக்கு வேலையோடு நிலையான வாழ்வாதாரத்தையும் இந்த மரங்கள் கொடுத்து வருகின்றன. மிகவும் வறட்சி மற்றும் பொதுவான மரங்கள் செழித்து வளர முடியாத இடங்களில் வாழும் மக்களுக்கு இந்த மரத்தை விட்டால் வேறு மாற்றுவழி இல்லாததே காரணம். இதன் விதைகளையும் மாவாக்கி பயன்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள். பார்க்க பக்கம் 7 ~ 10 .. http://www.cazri.res.in/envis/pdf/3no3-4.pdf

வாழ்வாதாரத்தைப் ஏழைகளுக்கு கொடுப்பதில் இதன் விறகு முக்கியத்தன்மை பெறுகிறது. இதில் இருந்து கரிமூட்டம் மூலமாக தயாரிக்கப்படும் கரி பல்வேறு உபயோகங்களுக்கு பயன்படுகிறது. முக்கியமாக் சிறு தீப்பெட்டி தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள் உணவகங்கள், கொள்ளபட்டரை, தாது பொருள்களை பிரித்து எடுக்கும் பெரிய தொழிற்சாலைகள் என பட்டியல் நீளும். பார்க்க பக்கம் 1 ~ 2 http://www.currentsciencejournal.info/issuespdf/Saraswathi%20Prosophis.pdf.

உணவாக

அடுத்து இதன் நெத்து (காய்), மற்றும் அதில் இருந்து பெறப்படும் விதைகள் விலங்குகளுக்கும்,மனிதர்களுக்கும் உதவுகின்றன. ஆடு மாடுகளுக்கு இதையே உணவாக கொடுக்கிறார்கள். இதில் ப்ரோடீன் சத்து நிறைவாக இருப்பதாகவும் இதை உணவாக உண்பதால் கால்நடைகள் நலமாக வளர்வதாக சொல்கிறார்கள். பார்க்க பக்கம் 11 ~ 14 & 28. http://www.issg.org/database/species/reference_files/progla/Mwangi&Swallow_2005.pdf

இதனை மரமாக எப்படி திறன்மிக்க முறையில் வீட்டு உபகரணங்கள், கரிமுட்டம் இவற்றிக்கு பயன்படுத்தலாம் என்பதை பார்க்க பக்கம் 77 ~ 81 [media]http://www.gardenorganic.org.uk/pdfs/international_programme/ManagingProsopisManual.pdf[/media]

ஆச்சரியப்படும் விசயம் என்னவென்றால் இதன் விதையை மாவாக்கி அதை மனிதர்களும் உணவுப் பொருள்களாக பயன்படுத்துவதுதான். அதுவும் இது மிகவும் சத்து நிறைந்த ஒன்றாக அதாவது இதில் ப்ரோடீன் 10%, fiber 14% கலந்து இருப்பதுதான். இதை கொண்டு தயாரிக்கப்பட்ட ரொட்டிக்கும், கோதுமை மாவினால் செய்த ரொட்டிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. அதோடு பிரேசில், பெரு போன்ற நாடுகளில் இந்த விதைகளை அரைத்து காபியாக குடிக்கிறார்கள். பார்க்க பக்கம் 84 ~ 86 (தொடர்ந்து வரும் பக்கங்களில் எப்படி மருந்தாக பயனளிக்கிறது என்பதயும் பார்க்கலாம்) http://www.gardenorganic.org.uk/pdfs/international_programme/ManagingProsopisManual.pdf

4. உவர்நிலங்களில் மண்ணின் வளம் மேம்படுதல்

இது வளர மண்வளம் தேவை இல்லை என்பதை பார்த்தோம். சாதாரண மரங்கள் வளர முடியாத மண்வளத்தில் அதாவது உப்பு,உவர்,மற்றும் அமிலத்தன்மை அதிகம் கொண்ட மண்ணில் இது செழித்து வளருவதோடு அந்த மண்ணின் தன்மையை மாற்றியமைக்கிறது. அதாவது அதில் உள்ள கேடுகளை நீக்கி ஒருவகையில் மண்ணின் வளத்தை மேம்பட செய்கிறது.

உவர்,உப்பு தன்மை கொண்ட நிலங்ககளில் உள்ள அமிலத்த தன்மையை இந்த மரத்தை அதில் பயிரிடுவதன் மூலம் அந்த மண்ணை மேம்படுத்தலாம் என்பதை ஆராய்ச்சியின் மூலமாக நிரூபித்து உள்ளார்கள்,

கர்நாடக மாநிலம் சித்திரதுர்க்கா என்னும் மாவட்டத்தில் அதிகம் உப்புத்தன்மை கொண்ட சாதரணமாக மரங்கள் வளர முடியாத நிலம் சோதனைக்கு எடுத்துகொள்ளப்பட்டு அதில் இந்த மரத்தை நட்டுவளர்த்து அதற்கு பின் அந்த மண்ணில் ஏற்ப்பட்ட மாற்றத்தை கணக்கிட்டு இதனை நிரூபித்து உள்ளார்கள்.

இந்த ஆய்வில் முற்றிலும் உப்புத்தன்மை கொண்ட நிலமாக இருந்த இடத்தில் கருவேலம் மரத்தை சில வருடங்கள் வளர்ததின் மூலம் அதில் உள்ள கனிமங்கள் எவ்வாறு மாறி இருக்கிறது என்பதை தெளிவாக இங்கு காணலாம். பார்க்க பக்கம் 1 ~ 3 http://pub.uasd.edu/ojs/index.php/kjas/article/viewFile/354/339

அவர்களின் ஆய்வின்படி இந்த மரம் மண்ணில் உள்ள ஆர்கானிக் கார்பன் (organic carbon) ஐ மண்ணில் அதிகமாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த organic கார்பன் மண்ணின் வளத்தில் முக்கியபங்கை வகிக்கிறது என்பதை இந்த இணைப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம். பார்க்க பக்கம் 1 ~ 3 http://www.esd.ornl.gov/~wmp/PUBS/post_kwon.pdf

இன்னொரு ஆய்வு தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் இடமான கோயம்புத்தூர் பகுதியில் செய்யப்பட்டு இருக்கிறது. பொதுவாக தொழிற்சாலைகள் இருக்கும் இடங்களில் அதில் இருந்து வெளியாகும் சிறு உலோக துகள்களால் மண்ணின் வளம் கண்டிப்பாக பாதிக்கப்படும்.

கொஞ்சம் கொஞ்சமாக சேரும் இந்த துகள்கள் நாளடைவில் மண்ணின் மேற்பரப்பில் ஒரு தடுப்பு போல அமைந்து மற்ற தாவர இனங்கள் வளர முடியாதபடி செய்துவிடும். இந்த ஆய்வின் படி அந்த பகுதியில் இருந்த தாமிரம் மற்றும் காட்மியம் போன்ற உலோகதுகள்களால் பாதிப்படைந்த நிலத்தில் இம்மரங்களை வளர்த்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் அதிகமாக உலோகதுகல்களால் பாதிப்படைந்த நிலம் கொஞ்சம் கொஞ்சமாக அதன் தன்மையில் இருந்து மாறி வருவது கண்டறியப்பட்டது.

இதில் காட்மியம் எனும் உலோகம் மிக அபாயம் நிறைந்த ஒன்று என்பதால் இந்த நிலங்ககளில் வளரும் மரத்தின் எந்த ஒரு பொருளையும் மக்கள் தங்கள் கால்நடை பயன்பாட்டுக்கு கிடைக்காமல் செய்யப்படவேண்டும் என அறிவுருத்தபடுகிறது. மண்ணில் இருக்கும் ஆபத்தான உலோகங்களை மரமே உறிஞ்சி எடுத்துக் கொள்வதாலேயே இப்படி சொல்லப்படுகிறது (இந்த காட்மியம் உலோகம் ஒரு வகைp புற்றுநோய்க்கு காரணமாக இருக்கிறது என்று அறிக). பார்க்க http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16054919

5. கால்நடைகளுக்கு மருந்து

இதை உண்டால் கால்நடைகள் இறந்துவிடும் அல்லது மலடாக மாறிவிடும் என்ற ஜல்லியடிப்புகள் விழிப்புணர்வு என்ற போர்வையில் பரப்பப்பட்டு இருக்கிறது என்பதை கிழே உள்ள விசயங்களை படிப்பதின் மூலம் உணரலாம்.

இதன் இலைகளை கால்நடைகள் உண்ணாது எனபது உண்மை. இதன் நெத்து (காய்) சத்து பொருள்கள் நிறைந்த ஒரு உணவாக கால்நடைகளுக்கு கொடுக்கப்படுகிறது. வறட்சி காலங்ககளில் ஏற்க்கனவே சேகரித்து வைக்கப்பட்டு இருக்கும் இந்த நெத்துக்களை தங்களின் கால்நடைகளுக்கு கொடுக்கின்றனர், வறட்சியான நிலங்களில் வசிப்பவர்கள். பார்க்க பக்கம் 82 http://www.gardenorganic.org.uk/pdfs/international_programme/ManagingProsopisManual.pdf

இந்த மரத்தினால் மலட்டுத்தன்மை உண்டாகிறது என்று அபத்தமாக எந்த வித ஆதாரமும் இல்லாமல் எப்படி பொத்தம் பொதுவாக சொல்ல முடிந்ததோ தெரியவில்லை. காரணம் இந்த விதைகளே ஆடுகளின் மலட்டுத்தன்மையை போக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. எப்படி உண்மையை நேர்மாற்றமாக பரப்பி வருகிறார்கள் பார்த்தீர்களா?

அதாவது ஒருகிராமத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு ஆட்டுமந்தைகள் சோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டு ஒரு பிரிவில் இந்த நெத்தை அல்லது இதன் விதைகளை பார்லி உடன் சேர்த்து உணவாகக் கொடுக்கபட்டது. மற்ற பிரிவில் இந்த உணவு வழங்கப்படவில்லை.இந்த விதைகளை சினை காலங்களில் ஆட்டுக்கு கொடுப்பதின் மூலம் அவற்றின் சினை பிடிக்கும் திறன் அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பார்க்க http://www.dfid.gov.uk/r4d/PDF/Outputs/R6953e.pdf

6. பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி

விவசாயம் ஏதும் செய்ய முடியாத, வறட்சி மிகுந்த நிலங்களில் வாழும் ஏழை மக்களுக்கு இந்த மரங்களினால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். இதனை ஏழைகளுக்கான மரம் என்றே சொல்கிறார்கள். ஆனாலும் முதலில் சொன்னபடி இது தொடர்ச்சியாக விவசாயம் செய்யும் நிலங்களில் வளருவதால் விவசாயிகள் பாதிப்படைந்து அரசாங்கத்திடம் இதன் முற்றிலும் அளிக்கும் திட்டத்தினை செயற்படுத்துமாறு நிர்பந்திக்கிரார்கள்.

இவர்கள் சொல்படியே நமது மாநிலத்தில் இருக்கும் எல்லா மரங்களையும் அழித்துவிட்டால் இதனை எரிபொருளாக,தொழிலாக பயன்படுத்துவோரின் நிலை என்னவாக இருக்கும். அதே நேரத்தில் நல்ல செழிப்பான பகுதிகளில் இருக்கும் மற்ற எல்லா விவசாயிகளும் இதனை தனது நிலத்தில் வளரவிடாமல் முன்னெச்சரிக்கையாக இருந்தாலே போதுமானது அல்லவா?

அதற்கு விளை நிலங்களை எந்த காரணம் கொண்டும் தரிசாக வைத்து இருக்கக் கூடாது. தொடர்ந்து சில வருடங்ககள் வரை கண்டுகொள்ளாத நிலங்களாக இருந்தால் கண்டிப்பாக இந்த மரங்கள் வளர வாய்ப்பு இருக்கிறது. எனவே முடியாத பட்சத்தில் வருடத்தில் ஒருமுறையாவது தனது நிலத்தில் இருக்கும் தேவையில்லாத செடிகளை அகற்றும் பணியில் செயல்பட வேண்டும். அது ஆட்களை வைத்து அகற்றுவதாக அல்லது உழவு அடிப்பதான முறையில் இருக்கலாம். இதுதான் அவர்களுக்குண்டான விழிப்புணர்வைக் கொடுக்கும் விசயமாக இருக்கழ்மே தவிர மற்றவர்களுக்கு வேறு விதத்தில் பயனளிக்கும் ஒன்றை மொத்தமாக அழிப்பது என்பதை எதில் சேர்ப்பது ?

இந்த மரத்தைப் பயன்படுத்துவோரின் நலனை கருத்தில் கொள்ளும் வகையில் சில விசயங்களை இந்த இணைப்பில் காணலாம் பார்க்க http://www.gardenorganic.org.uk/pdfs/international_programme/Prosopis-PolicyBrief-2.pdf

7. மின்சார தயாரிப்பில் இதன் பங்கு

மின்சாரம் தயாரிப்பதில் இருக்கும் சிக்கல்கள், மின்சாரத்தின் அவசியம் எல்லாவற்றையும் தமிழ்நாட்டு மக்களுக்கு இப்போதைய நிலையில் நான் எதையும் ஆதாரத்தோடு விளக்க வேண்டிய அவசியம் இல்லையென நம்புகிறேன். அனைத்தையும் அனுபவப் பாடமாக படித்துக்கொண்டு இருக்கிறோம்.

இருக்கும் மின்தட்டுப்பாட்டை அணுமின்நிளையம் வைத்து போக்க முயன்றால்பாதுகாப்பு,சுற்றுப்புற சூழ்நிலை நலன் கருதி முடக்கி வைத்தாயிற்று. மற்ற முறையில் எடுக்கப்படும் மின்சார முறையில் ஏற்ப்படும் இழப்புகளும் அதிகம். அனல்மின்சாரம் எடுக்கும் இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகை, பிற கழிவுகளை எல்லோரும் அறிந்ததே.

இந்த மாதிரியான நிலையில் ஒரு நல்ல தீர்வை முடிவாக எடுப்பது உடனடி தேவை. அந்த தீர்வும் உடனடியாக கிடைக்கும் தருவாயில் இருப்பதாக இல்லை.இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மிக அதிகச்செலவில் மாற்று மின்சார முறைகளை புதியாதாக ஆராய்ந்து புதிய தொழில்நுட்பங்களை நடைமுறைபடுத்துவது என்பது அதிக காலமும்,பண விரயத்தையும் கொண்ட செயல். அதிலும் முழு பயன் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.

இந்த நிலையில் நமது நாட்டில் கிடைக்கும் அதிகமான உதிரிப்பொருள்களை ஆதாயமாக வைத்து சில திட்டங்ககளை செயல்படுத்தினால் நல்ல பலனோடு அதை கொடுப்பவர்களின் வழக்கையும் உயர வாய்பிருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் Biomass Power Generation என்ற முறை சிறப்பான ஒன்று.

இந்த முறையில் இயற்கையாக கிடைக்கும் கனிம அல்லது மற்ற பொருள்களை வைத்து மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது. நாம் கொட்டும் குப்பைகள் கூட ஒருவிதத்தில் இதுக்கு உதவும் என்கிறார்கள். குப்பையை பயன்படுத்துவதின் மூலம் அதை வேறொரு முறையில் அழிக்கும் போது இருக்கும் பாதிப்புகள் தவிர்க்கப்படுவதோடு பயனாக மின்சாரம் கிடைக்கிறது.

தமிழ் நாட்டில் இந்தமாதிரியான சிறு மின்நிலையங்கள் சில இடங்களில் நடைபெற்றுவருகிறது. இங்கே முக்கியமான விசயம் என்னவென்றால் அதற்கு எரிபொருளாக கருவேல் மரத்தின் விறகுகள் பயனபடுத்தப்படுகின்றன. இந்த மரவிறகுகள் அதிக எரிசக்தி கொண்டவையாக இருப்பதால் நல்ல பலனும் கிடைக்கிறது. மற்ற வழிமுறைகளைவிட குறைந்த அளவே கார்பன் டை ஆக்சடை வெளியிடுகிறது. (பக்கம் 23, 24). http://www.sgsqualitynetwork.com/tradeassurance/ccp/projects/395/BMC-PDD-Final%5B1%5D.pdf

இதனால் இன்றைய அத்தியாவசியத்த் தேவையான மின்சாரமும் கிடைப்பதோடு பிந்தங்கிய மாவட்டங்களில் வாழும் இந்த மரத்தை சார்ந்து தொழில்செய்வோரின் வாழ்வாதாரமும் உயரும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த Biomass Power Generation எவ்வாறு இயங்குகிறது அதற்கு உண்டான வழிமுறைகள் என்னென்ன போன்ற விசயங்களை தெளிவாக இந்த இணைப்பில் படிக்கலாம். கொடுமை என்னவென்றால் இது திருநெல்வேலி பகுதிகளில்தான் அதிகமாக இருக்கிறது. சொந்த ஊரில் இந்த மாதிரியான விசயங்ககளை வைத்துக்கொண்டு விழிப்புணர்வு என்ற பெயரில் எதையுமே ஆராய்ந்து பார்க்காமல் ஜல்லியடித்து இருப்பவர்களை என்ன சொல்வது....? பார்க்க
http://www.sgsqualitynetwork.com/tradeassurance/ccp/projects/395/BMC-PDD-Final%5B1%5D.pdf
http://gasifiers.bioenergylists.org/gasdoc/abe/IndiaBioSummary050721Web.pdf

இது எவ்வாறு சாத்தியம் என்பதில் சந்தேகம் இருந்தால் அறிவியல்பூர்வமான செயல்முறை விளக்கம் இங்கே காணலாம் பார்க்க,
http://en.wikipedia.org/wiki/Gasification

ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்கவே நினைத்தோம். படிப்பவர்களுக்கும் எளிதாக இருந்திருக்கும். ஆனால் கட்டுரையின் அதிக நீளம் கருத்தில் கொண்டு பல இடங்களில் "பார்க்க பக்கம்" என்று போடவேண்டியாதாகிவிட்டது. எப்படியோ இதன் மூலம் கருவேலம் ஒரு நச்சுப்பொருள் இல்லை என்பதோடு அதனால் எப்படியெல்லாம் பயனடைகிறோம் என்பதை விளக்கமாக தெரிந்து இருப்பிர்கள். முக்கியமாக விழிப்புணர்வு என்ற பெயரில் உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல் அபத்தங்களை எழுதி பரப்பியவர்களின் நோக்கம் என்னவென்றாவது புரிந்து இருக்கும்.

டெரர் கும்மிக்காக எழுதியவர்கள்
கணேஷ் & பன்னிகுட்டிராம்சாமி
avatar
எஸ்.கே
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 24
Points : 42
Join date : 24/11/2010

Back to top Go down

கருவேல மரங்கள்... Empty Re: கருவேல மரங்கள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 03, 2012 11:53 pm

மரத்துக்குள் எவ்வளவு விசயங்கள்... விரிவான தகவலைப் பகிர்ந்தமைக்கு பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கருவேல மரங்கள்... Empty Re: கருவேல மரங்கள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 05, 2012 2:43 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:மரத்துக்குள் எவ்வளவு விசயங்கள்... விரிவான தகவலைப் பகிர்ந்தமைக்கு பாராட்டுகள் கருவேல மரங்கள்... 548321 கருவேல மரங்கள்... 548321 கருவேல மரங்கள்... 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கருவேல மரங்கள்... Empty Re: கருவேல மரங்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum