தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிதை போட்டி - பூ (பூக்கள்)

+8
dhilipdsp
yarlpavanan
manisen37
ஹிஷாலீ
nadinarayanan
கலைநிலா
ருக்மணி
கவியருவி ம. ரமேஷ்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 01, 2012 7:55 pm

உன்னை பூக்களுக்கும் பிடித்திருக்கிறது

பூக்கள்
உனக்காகக் கண் விழித்துக்
காத்துக் கொண்டிருக்கின்றன
முதலில் உன் கை பட.


பூக்களை
மாலையாகத் தொடுத்து
படங்களுக்குத் தொங்கவிடும்போது
ஒன்றிரண்டு இதழ்கள்
கண்ணீர்த் துளிகளாய் உதிர்க்கிறது
நீ
சூடிக்கொள்ளவில்லையே என்பதால்.


விடுமுறை நாட்களில்
நீ
பூக்களைப் பறிக்காதபோது
வண்டுகள்
உனக்கு நன்றி சொல்கிறது.


நாரிலும் நூலிலும்
கட்டுப்படுவதைவிட
உன் தொடுப்பிற்குக்
கட்டுப்படுவதுதான்
பூக்களுக்குப் பிடித்திருக்கிறது.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by ருக்மணி Tue May 01, 2012 10:21 pm

ஒரு பூ எழுதும் கவிதை

நித்தம் ஒரு பிறப்பு எனக்கு
இயற்கையின் ராணி பட்டமும் எனக்கு
எத்தனை எத்தனை வண்ணம் எனக்கு
பட்டாம்பூச்சியை கவரும் எண்ணம் எனக்கு
தாய்மாமன் சீரில் முதலிடம் எனக்கு
தாரத்திற்கு பரிசிலும் தனியிடம் எனக்கு
பூமி அன்னை மடி எனக்கு
அதில் மடியும் பாக்கியமும் எனக்கு!!!

விழாக்களில் முன் நிறுத்துவாய் என்னை
நீடித்த மணம் பெறுவாய் உண்மை
முட்களுடன் வாழும் வாழ்வு தான்
அழகுக்கு வேலி தேவை தான்
தேனீக்கள் உறிஞ்சும் தேனீ என்னிடம்
தேன்துளியால் எழுதும் கவிதை உன்னிடம்
உயிருள்ள ஐம்புலன்கள் எனக்கே அர்ப்பணம்
உயிரற்ற ஐம்புலன்களுக்கு நானே சமர்ப்பணம்...



Last edited by ருக்மணி on Tue May 01, 2012 10:32 pm; edited 1 time in total
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by ருக்மணி Tue May 01, 2012 10:26 pm

பூவாகிய நான்

விஞனின் கற்பனையும் நான்
ஒளிப்பதிவாளனின் ரசனையும் நான்
மக்களின் கண்காட்சியும் நான்
பெண்மையின் ஒப்பீடும் நான்
காதலின் தொடக்கமும் நான்
திருமண வைபவத்திலும் நான்
பிறப்பின் ஆரம்பமும் நான்
இறுதியில் கல்லறையிலும் நான்!!!!!!

ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by கலைநிலா Wed May 02, 2012 12:13 am

பூக்கள் எழுதுதிய கவிதை
காதலி கூந்தலில்
மாலையாய்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by nadinarayanan Thu May 03, 2012 5:47 pm

அப்பாவின் இறுதி ஊர்வலத்தில்
உதிர்ந்த பூக்களில்
கொஞ்சம் அப்பாவின் நினைவுகளும்
உதிர்ந்திருக்க கூடும்

உதிர்ந்த பூவில்
அப்பாவும் இருக்கலாம்

மிதித்துவிடக் கூடாது
என்பதற்காக...

கடமை முடித்து
திரும்பி வேறு வழியில் வந்தேன்
nadinarayanan
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 32
Location : மதுரை

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by ஹிஷாலீ Fri May 04, 2012 2:31 pm

பூவாளே காதல் சொல்ல வந்தேன்

கொல்லையில மல்லிப் பூவு
கொண்டு வந்தேன் ராஜாத்திக்கு நீ
அல்லி முடிஞ்சா கூந்தலிலே
ஆசையாக சூடிக்கிட்டு...

தண்ணிக் குடம் தாகத்தாலே
தளதளனு சிரிச்சிப் புட்டு
கனகாம்பரம் வெக்கத்தில என்ன
காதல் பார்வை பார்த்தவளே

அல்லிப்பூ செண்டாலே
அய்த்தான் வாறேன் பக்கத்துல
ஆசையாக முத்தம் தந்தா
ரோஜா தருவேன் என்
ராஜாத்திக்கு ராஜாவா நானுமிருப்பேன்

நீயிருக்கும் இதயத்திலே நித்தம்
ஒரு பூ பூக்கையிலே
அச்சமெல்லாம் பேசுதுங்க
அகிம்சையாக கூசுதுங்க
மிச்சம் மீதி வாசத்திலே
மீட்க வாங்க ரோசத்துல
மரிகொளுந்து மாமா எனக்கு
மஞ்சத் தாலி தாமா

காதல் பூ சொன்னவளே
காகிதப்பூ பெண்ணவளே வைகாசி
மாதத்துல வாழைப்பூபந்தலில் பரிசம்போட்டு
மிச்ச மீதி பூவையெல்லாம்
மாலையாக கோர்த்து வச்சு
தாலிகட்டி கைபிடிப்பேன் தங்கமே
தாழம்பூ சாட்சியாக ....!
















ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by ஹிஷாலீ Fri May 04, 2012 4:10 pm

பூவின் ஆராதனை

ஆயிரம் பூக்கள் பூத்தாலும் அதில்
இறுதிப்பூவாய் நானிருப்பேன் - என்றும்
இதயமற்ற மனிதருக்கும் நான்
உதயம் உற்ற பூவிரிப்பேன் - நாளைய

வாழ்வை தேடும் வியாபாரிகளுக்கு
வாரி வழங்கும் வள்ளலாய் வாழவைப்பேன்
நேற்று என்று நினைப்போரை
இன்றே நன்று என்று உணரவைப்பேன்

மாவிலைத் தோரணத்தில் மலர் மாலை
சூடி மகிழவைப்பேன் என்றும்
மஞ்சள் குங்குமம் நிலைத்திருக்க
மங்கையரின் அங்கத்தில் அணிவகுப்பேன்

சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு
சிங்காரமாய் விளையாட சங்கம் வகிப்பேன்
சீர்சனத்தி பழங்களிலே
பேர் உசத்தியாய் சிவந்திருப்பேன்

காலமெல்லாம் காத்திருப்பேன் என்
கருணை வடிவான இறைவனுக்கு
வண்டிற்கு பசி தீர்ப்பேன்
என் வண்ணத்தில் வட்டமிடும்
வண்ணத்துப் பூச்சுக்கு காவலிருப்பேன்

பூவெல்லாம் ஒன்று கூடும் போர்க்களத்தில்
பொல்லாத பூக்களாய் சாகடிப்பேன்
வளரும் கவிஞருக்கு கவி கொடுப்பேன்
வாழ்ந்து கெட்டு போகும் போது
வாக்கரிசியாய் சேர்ந்து நடப்பேன்

எங்கு சென்று வந்தாலும் இறுதியில்
மண் சென்று மக்கியிருப்பேன்
மறு ஜென்மம் நிறைவேற விதையாய்
வித்தேடுப்பேன் பூ விதையாய் வித்தேடுப்பேன்





Last edited by ஹிஷாலீ on Thu May 31, 2012 6:51 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by manisen37 Fri May 04, 2012 9:17 pm

நம்
மெளவுனப் பார்வைகளில்
ஒரு பூ மலர்கிறது...
அதற்கு
இவ்வுலகம்
காதல் என பெயர்சூட்டுகிறது
உள்ளது உள்ளபடியே
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by yarlpavanan Sat May 05, 2012 12:03 am

காதலும் பூக்களைப் போலவே!

பூக்கள் என்றும் அழகானவை
அழகான பூக்கள் எம்மை இழுக்கும்
இழுக்கும் பூக்களில் கிடக்கும் முட்கள்
முட்செடிப் பூக்கள் மணம் தராதே!

மணம் தராத பூக்களில் ஏதுமில்லை
ஏதுமில்லாப் பூக்களில் தேனிருக்கும்
தேனிருக்காத பூக்களில் கள்ளிருக்கும்
கள்ளிருக்காத பூக்களில் வண்டுமிருக்காதே!

வண்டுமிருக்காத பூத்தானோ காதல் பூ
காதல் பூ என்பதாலோ அழகுப் பெண்
அழகுப் பெண் முகத்தில் பூசல்மாவோ
பூசல்மா பெண்ணில் மணம் வீசவோ!

மணம் வீசப் பூசுதண்ணியும் உண்டோ
உண்டெனப் பணமும் வெளிப்படுமோ
வெளிப்பட்ட பணத்திலும் மணத்திலும் காதலா?
காதலா காலம் கடந்து பிரிவதற்கே!

பிரிவதற்கேயான காதல் பூவா பெண்
பெண்ணைப் பூவாக்கி மணம்கெட வீசவா?
வீசிய பூவழுதால் காதல் தோல்வியா?
தோல்விக்கு உள்ளம் விரும்பாத பூக்களே!

பூக்களே பகை வேண்டாம் புரிந்திடு
புரிந்தால் ஆண்களும் காதல் பூவே
காதல் பூவாம் ஆண்களும் பணமிழப்பர்
பணமிழந்தவர் தோற்றிட காதலும் பூக்களாகவே!
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 05, 2012 11:22 am

• இடமாற்றம்

செடியிலிருந்து
பூ ஒன்று
உதிரும்போது
உதிர்ந்த இடத்தில்
போய் அமர்கிறது
வண்ணத்துப்பூச்சி.
பின்னர் வரும்
தேனீக்கள்
ஏமாற்றத்துடன்
திரும்புகின்றன.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by dhilipdsp Sun May 06, 2012 7:19 pm

பூத்தால் பறித்து
விடுவாய் என்று
தெரிந்துதான்
உன்னுள் பூக்காமலே
வளர்ந்து கொண்டு
இருகிறது என்
காதல் செடி...........
-----------------------------------------------------
ரோஜாவில்
இருந்து உதிர்த்த
ஒற்றை இதழை
ஒட்ட துடிக்கும்
உன் மனதை
பார்ததும் பூத்து
விட்டது என் மன ரோஜா ............
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by பார்த்திபன் Mon May 07, 2012 2:17 pm

தொட்டிச் செடியிலிருந்து
எட்டிப் பறிக்கையில் எனைத்
திட்டித்தீர்த்த குட்டி ரோஜா
கார்க்குழல் ஏந்திய என்
காதலிக்கு சூடுகையில்
என் காதோரம் சொன்னது,
"எமைப் பறித்தமைக்கு
நன்றி" என்று!
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by சரவணன் Mon May 07, 2012 9:54 pm

கழுத்தை நெரித்து கொலை செய்யமுயன்றான்
தற்காப்புக்காக ஆயுதம் (முள்)ஏந்தியது ரோஜா
ரத்த காயத்துடன் உயிர் தப்பினான் குஞ்சுமணி (குட்டிபையன்)

காதலன் வந்ததும் கற்பை இழந்தன - பூக்கள்
தேன் குடித்தது வண்டு

என் கையிலிருந்த ரோஜாவும் கலங்கி நிற்கிறது
அதனையும் சேர்த்து நிராகரித்து விட்டாளென்று!!!

தன் இறப்பிற்கும் சேர்த்து அழுது கொண்டே சென்றன -பூக்கள்
இறுதி ஊர்வலத்தில்

மரணம் கண்டதும் மோட்சம் பெற்றன -பூக்கள்
அவள் கூந்தலில்




கொசுறு : பஞ்ச்
அழகான பெண்ணின் கூந்தலில் இருக்கும் பூக்களை விட
அட்டு பிகரின் கூந்தலில் இருக்கும் பூக்களுக்கே மரணம் அதிகம் வலித்திருக்கும்.

பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு பொருள் கொடுக்காத மகிழ்ச்சியை
ஐந்து முழம் மல்லிகை பூ கொடுத்துவிடும்
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by ருக்மணி Thu May 17, 2012 9:03 am

கல்லூரி காதல்

கல்லூரி சாலையில்
உன்னை கடந்த போது
உன் ஸ்பரிசம்
என் கவனத்தை ஈர்த்தது...

அன்று முதல்
ஒவ்வொரு நாளும்
உன் அழகை
ரசிக்க தவறியதில்லை...

நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
உன் வளர்ச்சி கண்டு
ஏங்குவோர் பலர்....

உன் இதழ்களின் அசைவினில்
காதலை உணரும் வேளையில்
இதழ்களை மூடிக் கொண்டாய்..
இது என்ன இன்ப விளையாட்டு?

உன் இதழ்கள் மீது
அமர்ந்திருந்த தேனீக்களிடம்
எனக்கு வந்தது
பொல்லாத கோபம்…

கோபம் பொறாமையாக மாறி
சூழ்ச்சியும் செய்து
அந்த வித்தையை
கற்றேன் தேனீயிடம்

இன்று உன் இதழ் மீது
தேனீக்கள் இல்லை..
இடமாற்றம் செய்து
என் இதழ் வந்தது...

கல்லூரி வந்து செல்லும்
நேரம் போதவில்லை எனக்கு
எப்போதும் உன்னுடன்
இருக்கும் வரம் வேண்டினேன்...

வீட்டிற்கு உன்னை அழைத்து
செல்ல திட்டமிட்டேன்...
பெற்றோர்கள் தான் வல்லவர்களாயிற்றே
காதலை பிரிப்பதில்!!!

என் பெற்றோர் மட்டும்
விதி விலக்கா என்ன!!
உன்னை வளர்ப்பதே போதும்
உனக்காக இது வேறா என்றார்கள்!!!

ஏதும் ஏறவில்லை மண்டையில்
பெற்றோரிடம் சண்டையிட்டேன்
என் காதலுக்காக
இன்று நீ என் இல்லத்தில்!!!

தினமும் கண் விழிப்பதே
உன் முகத்தில் தானே!!
எத்தனை பேருக்கு
இந்த பாக்கியம் கிட்டும்!!!

உன் மீதான காதலை
யாராலும் பிரிக்க முடியாது
என்றென்றும் வாழ்வேன்
உன்னுடன் இன்பமாக!!!

ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by ஹிஷாலீ Sat May 19, 2012 6:28 pm

பூவின் வாசம்


ஆடையில்லாமல் மலர்ந்தேன்
அகிலத்தில் ஓர் நாள் வாழ்ந்தேன்
வண்டுக்கும் தேன் தந்து சென்றேன்
வளரும் தமிழுக்கு கவிதந்து மகிழ்ந்தேன்
நிலவுக்கு மணம் தந்து மறைந்தேன்
நீர் காற்றுக்கும் உணவாகி மகிழ்ந்தேன்
மனிதனுக்கு மருந்தாக பிறந்தேன்
மண்ணுக்கு விதையாக மகிழ்ந்தேன்
இறைவனுக்கு மாலையாக முடிந்தேன்
இதயமற்ற பெண்களுக்கு இல்லறத்தில் மகிழ்ந்தேன்
உதிக்கும் சூரியனுக்கு உறவாய் வருகிறேன்
உலகின் இயற்கைக்கு அழகாய் பூக்கிறேன்
என்றும் பூவாய் எதிலும் பூவாய்
வென்று வென்று வாழ்கிறேன்
என் பூவின் வாசத்தில்...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by கலைநிலா Sun May 20, 2012 9:46 pm

விதவையை கண்டு
சூடா மறுத்தது
பூக்கள்...!
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by ஹிஷாலீ Mon May 21, 2012 12:39 pm

நீ தான் பூ மகளோ...!

வண்ணத்தின் தயாவளோ இல்லை
வானவில்லின் சேயவளோ நீ
யாரென்று சொல்லும் முன் நானொன்று
சொல்கிறேன் கேள் உன் பேர் பூ மகளோ

இன்பம் துன்பம் அறிந்ததில்லை
இல்வாழ்க்கை புரிந்ததில்லை
ஜதி மத வேதம் பார்க்கா
சமத்துவப் பூ மகளோ

உன்னை யாரும் அடித்ததில்லை
உலகில் யாரும் வெறுத்ததில்லை
கெட்ட பெயர் வைத்து அழைக்காத
ஒற்றைப் பெயர் கொண்ட பூ மகளோ

பந்த பாசம் உறவுமில்லை
பணம் சொத்து ஆசையுமில்லை
கொலைக் குற்றம் செய்யாத
கோவில் தெய்வம் பூஜிக்கும் பூ மகளோ

கருவறை பாரமில்லை
கண்ணீரில் வீழ்ந்ததில்லை
ஆடம்பர வாழ்க்கையாலே
ஆணவத்தில் அழியாத தியாகத்தின் பூ மகளோ

அண்ணன் தம்பி பகையுமில்லை
அனாதையாய் வாழ்ந்ததுமில்லை
நகை நட்டு அழகைவிட
நாளு மொழம் பூவழகாலே
மங்கலமாய் சிரித்திருக்கும் பூ மகளோ

மாமியார் கொடுமையில்லை
மானங்கெட்ட பொளப்புமில்லை
புத்தி கெட்ட மனிதர்களுக்கு
புத்தி புகட்டும் ஊனமில்லா பூ மகளோ

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 26, 2012 5:21 pm

- by kalamkadir on Wed May 02, 2012 8:53 pm

படைத்தவன் படைத்த
பாமாலை
பாரெங்கும் பூத்திருக்கும்
பூஞ்சோலை

கருப்பையின் கதகதப்பு
அன்னையின் அரவணைப்பு
அத்தனையும் வாடாத பூ



மனைவியின் இதழ்
மலரும் சிரிப்பு
மாதுளையின் பூ
கன்னச் சிவப்பு
கவரும் ரோசாப் பூ

மழலையின்
மாசிலாப் புன்சிரிப்பு
மல்லிகைப் பூ

நண்பனின் நட்பு
நாளும் பாதுகாப்பு
அரிதாய்ப் பூக்கும்
குறிஞ்சிப் பூ

உறவுகள் என்பது
கதம்பப் பூ

அத்தனைக்கும்
ஆணிவேர் அன்பு

ஆனால்,

கல்லின் மீது
பூ வீசியவர்கள்
முதன் முதலாய்
ஒரு பூவின் மீது
கல்வீசினார்கள்
தாய்ஃப் நகரத்தில்

பூவொன்று புரட்சிப்
புயலானாதால்
வெறுப்பு

அப்பூவே
கற்களை
வீழ்த்தியதும்
பெரும் வியப்பு..!!

மக்கத்தில் பிறந்து
மதீனத்தில் மறைந்த
இறைவனின்
அருட்கொடை பூ

அரசியலார் அள்ளி வீசும்
வாக்குறுதி காகிதப் பூ

என்று மினிக்கும் இலக்கியம் போலவே
தென்றலும் பூவாசம் தூவிட- நன்றாய்
அகத்தி லிறங்கிடும் அப்பொழுதில் பூவின்
சுகந்தம் தருமே சுகம்.


அபுல்கலாம்(த/பெ. ஷைக் அப்துல்காதிர்)
(‘”கவியன்பன் கலாம்,)


கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 26, 2012 5:23 pm

போட்டி நடுவர்களுக்கு (நிர்வாகக் குழுவினர்கள், வலை நடத்துனர்கள், மன்ற ஆலோசகர்கள் (காப்பாளர்கள்) களுக்குத் தமிழ்த்தோட்டம் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

நடுவர்கள் தாங்கள் முதல் மூன்று இ்டத்துக்காக முன்னிருத்தும் தகுதியான படைப்புகளை 29 ஆம் தேதிக்குள் அனைத்துப் போட்டிப் பிரிவுகளிலும் (அந்தந்தப் பிரிவிலேயே மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி) வரிசைப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 31, 2012 7:14 am

கவிதை போட்டி - பூ (பூக்கள்) - முடிவு

முதல் இடம்
by nadinarayanan on Thu May 03, 2012 4:17 pm
அப்பாவின் இறுதி ஊர்வலத்தில்
உதிர்ந்த பூக்களில்
கொஞ்சம் அப்பாவின் நினைவுகளும்
உதிர்ந்திருக்க கூடும்

உதிர்ந்த பூவில்
அப்பாவும் இருக்கலாம்

மிதித்துவிடக் கூடாது
என்பதற்காக...

கடமை முடித்து
திரும்பி வேறு வழியில் வந்தேன்

இரண்டாம் இடம்
by yarlpavanan on Fri May 04, 2012 10:33 pm
காதலும் பூக்களைப் போலவே!

பூக்கள் என்றும் அழகானவை
அழகான பூக்கள் எம்மை இழுக்கும்
இழுக்கும் பூக்களில் கிடக்கும் முட்கள்
முட்செடிப் பூக்கள் மணம் தராதே!

மணம் தராத பூக்களில் ஏதுமில்லை
ஏதுமில்லாப் பூக்களில் தேனிருக்கும்
தேனிருக்காத பூக்களில் கள்ளிருக்கும்
கள்ளிருக்காத பூக்களில் வண்டுமிருக்காதே!

வண்டுமிருக்காத பூத்தானோ காதல் பூ
காதல் பூ என்பதாலோ அழகுப் பெண்
அழகுப் பெண் முகத்தில் பூசல்மாவோ
பூசல்மா பெண்ணில் மணம் வீசவோ!

மணம் வீசப் பூசுதண்ணியும் உண்டோ
உண்டெனப் பணமும் வெளிப்படுமோ
வெளிப்பட்ட பணத்திலும் மணத்திலும் காதலா?
காதலா காலம் கடந்து பிரிவதற்கே!

பிரிவதற்கேயான காதல் பூவா பெண்
பெண்ணைப் பூவாக்கி மணம்கெட வீசவா?
வீசிய பூவழுதால் காதல் தோல்வியா?
தோல்விக்கு உள்ளம் விரும்பாத பூக்களே!

பூக்களே பகை வேண்டாம் புரிந்திடு
புரிந்தால் ஆண்களும் காதல் பூவே
காதல் பூவாம் ஆண்களும் பணமிழப்பர்
பணமிழந்தவர் தோற்றிட காதலும் பூக்களாகவே!

மூன்றாம் இடம்
by ருக்மணி on Thu May 17, 2012 7:33 am
கல்லூரி காதல்

கல்லூரி சாலையில்
உன்னை கடந்த போது
உன் ஸ்பரிசம்
என் கவனத்தை ஈர்த்தது...

அன்று முதல்
ஒவ்வொரு நாளும்
உன் அழகை
ரசிக்க தவறியதில்லை...

நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
உன் வளர்ச்சி கண்டு
ஏங்குவோர் பலர்....

உன் இதழ்களின் அசைவினில்
காதலை உணரும் வேளையில்
இதழ்களை மூடிக் கொண்டாய்..
இது என்ன இன்ப விளையாட்டு?

உன் இதழ்கள் மீது
அமர்ந்திருந்த தேனீக்களிடம்
எனக்கு வந்தது
பொல்லாத கோபம்…

கோபம் பொறாமையாக மாறி
சூழ்ச்சியும் செய்து
அந்த வித்தையை
கற்றேன் தேனீயிடம்

இன்று உன் இதழ் மீது
தேனீக்கள் இல்லை..
இடமாற்றம் செய்து
என் இதழ் வந்தது...

கல்லூரி வந்து செல்லும்
நேரம் போதவில்லை எனக்கு
எப்போதும் உன்னுடன்
இருக்கும் வரம் வேண்டினேன்...

வீட்டிற்கு உன்னை அழைத்து
செல்ல திட்டமிட்டேன்...
பெற்றோர்கள் தான் வல்லவர்களாயிற்றே
காதலை பிரிப்பதில்!!!

என் பெற்றோர் மட்டும்
விதி விலக்கா என்ன!!
உன்னை வளர்ப்பதே போதும்
உனக்காக இது வேறா என்றார்கள்!!!

ஏதும் ஏறவில்லை மண்டையில்
பெற்றோரிடம் சண்டையிட்டேன்
என் காதலுக்காக
இன்று நீ என் இல்லத்தில்!!!

தினமும் கண் விழிப்பதே
உன் முகத்தில் தானே!!
எத்தனை பேருக்கு
இந்த பாக்கியம் கிட்டும்!!!

உன் மீதான காதலை
யாராலும் பிரிக்க முடியாது
என்றென்றும் வாழ்வேன்
உன்னுடன் இன்பமாக!!!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by nadinarayanan Thu May 31, 2012 11:11 am

என் கவிதைக்கு முதல் இடம் அளித்தமைக்கு மிக்க நன்றி
nadinarayanan
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 32
Location : மதுரை

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by அ.இராமநாதன் Thu May 31, 2012 11:22 am

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by ருக்மணி Thu May 31, 2012 12:09 pm

தமிழ் தோட்டத்திற்கும், ரமேஷ் கும் என் நன்றிகள் .வெற்றி பெற்ற அனைவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by ஹிஷாலீ Thu May 31, 2012 12:30 pm

வெற்றி பெற்ற மூவாருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 31, 2012 12:49 pm

வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கவிதை போட்டி - பூ (பூக்கள்) Empty Re: கவிதை போட்டி - பூ (பூக்கள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum