தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

4 posters

Go down

கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed May 16, 2012 12:00 am

கவிதைக்கூத்து

நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ்

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வனிதா பதிப்பகம் ,தி நகர் ,சென்னை 17. விலை ரூபாய் 70

நூலின் அட்டைப்பட ஓவியம் நன்று.
நூல் ஆசிரியர் மத போதகராக .அருட்தந்தையாக இருந்துக் கொண்டு மிக துணிவான
கவிதைகளை எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .இந்த நூலின் வெளியீட்டு விழா
மதுரையில் நடைப் பெற்றது .விழாவிற்கு நானும் சென்று வாழ்த்தி விட்டு
வந்தேன். விழாவில் தமிழ்த்
தேனீ இரா .மோகன் .மனிதத் தேனீ இரா .சொக்கலிங்கம் உள்ளிட்ட பலரும் நூல் விமர்சன உரையாற்றினார்கள் .வனிதா பதிப்பகத்தாரும், தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் இயக்குனர் முனைவர் கோ .பெரியண்ணன் .நூல் ஆசிரியரின் அண்ணி தொடக்கக் கல்வி
இணை இயக்குனர் பணித்தேனீ திருமதி ராணி ஆகியோர் சென்னையில் இருந்து
மதுரைக்கு வருகை தந்து விழாவைச் சிறப்பித்தனர் .


தந்தைக்கு நூலை அர்ப்பணம் செய்துள்ளார் .
தன்னலம் கருதாத்
தந்தையவர்
மின்னலை முந்தும் வேகமவர்
முன்னிலை விரும்பா மனிதரவர்
என் நிலை உயர்த்திய
ந்லவர்.

இந்தக் கவிதை அவர் தந்தையை மட்டுமல்ல படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் தந்தையை நினைவூட்டும் விதமாக உள்ளது .பாராட்டுக்கள்
பெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் அவர்களின் அணிந்துரையும் ,கலை மாமணி கு .ஞானசம்பந்தன் அவர்களின் வாழ்த்துரையும் நூலிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளது .உள்ளத்தில் உள்ளது கவிதை .உண்மை உரைப்பது கவிதை .சொற்களின் சிற்பம்
கவிதை .சிந்தையை செதுக்குவது கவிதை .இப்படி கவிதைக்கு இலக்கணம் எழுதிக்
கொண்டே போகலாம் .இந்த நூலில்
நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான
ஆனந்தராஜ் அவர்கள் எந்த வித சமரசத்திற்கும் இடமின்றி தான் ஒரு மத போதகர்
என்பதையும் மறந்து கவிஞராக மாறி உண்மையை கவிதையாக்கி நூலாக்கி உள்ளார்
.பாராட்டுக்கள் .


கவிதைக்கூத்து !

அடிமைத்தனத்திற்கு
முடிவை அது காட்டும்
அறிவுள்ள மனிதனாக
அனைவரையும் தீட்டும் .
பேனா
கூர்மையில்
பிரளயம் பிறப்பெடுக்கும்
கவிதைக்குப் பின்னாலே
உலகமே காலெடுக்கும்.
கவிதை குறித்த விளக்கம் மிக நன்று .


சாதி என்ன நிறம் !
இரத்தத்தில் மட்டும் எழுதாதே
வாசிப்பதற்கு யாரும்
உயிரோடு இருக்க மாட்டார்கள் .

சாதியின் பெயரால் நடக்கும் வன்முறையைச் சாடும் வண்ணம் கவிதை வடித்துள்ளார் .மனித நேயம் விதைக்கும் விதமாக எழுதி உள்ளார் .

தலைப்பில்லாத் தலையங்கம் என்று தலைப்பிட்டு சிறு கவிதைகள் எழுதி உள்ளார்
.இந்தக் கவிதைகளை ஹைக்கூ வடிவிலும் எழுத முயன்று உள்ளார் .

தாழ்மை
வேண்டுமென்று
ஜெபம் செய்தேன்
அடிமையாக்கி விட்டார்கள் .

இந்த வரிகளின் மூலம் சிந்திக்க வைத்து பகுத்தறிவை நினைவூட்டுகின்றார் .

வாதம் செய்வதற்கு
அஞ்சாதீர்கள்
வாழ்க்கை
அங்குதான் இருக்கிறது .
பேச்சுரிமைக்கு வலு சேர்க்கும் விதமாக கவிதை எழுதி உள்ளார் .


என் ஜீவனுக்குள்
ஜீவன்
"கவிதை "
கவிதை எமக்கு உயிர் என்கிறார் .


அன்று இன்றும் கவிதையில் தேவாலயத்தில் நடக்கும் முரண்பாடுகளை
தோலுரித்துக் காட்டுகின்றார் .நெஞ்சு உரத்துடன் ,நேர்மைத் திறத்துடன் கவிதை
எழுதி உள்ளார் .

பதச் சோறாக ஒன்று உங்கள் பார்வைக்கு .

இன்று
நம்பிக்கையோடு வா
ஊருக்கு ஓரு சிலுவை உனக்காகக்
காத்திருக்கிறது .மரம் வாங்கியதிலும்
ஆசாரிக்
கூலி அனைத்திலும் கமிசன் .

செல் பற்றி எழுதி உள்ள கவிதை மிக நன்று .நூலில் பல்வேறு கவிதைகள் மிகச் சிறப்பாக உள்ளது .எய்ட்ஸ்
உணர்ச்சியைப் பங்கிடு
ஒன்றும் தவறில்லை
உன்னவளோடு மட்டும் .

ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் தமிழ்ப் பண்பாட்டை உணர்த்தும் விதமாக உள்ளது கவிதை .


மூட நம்பிக்கையைச் சாடும் விதமாக ,ஜோதிடத்தை சாடும் விதமாக ,பகுத்தறிவு விதைக்கும் விதமாக கவிதை வடித்துள்ளார் .,
கைரேகை !
கைக்குள் இருக்கும்
கைரேகையில் இல்லை வாழ்க்கை
உழைப்பே உயர்வுக்கு முகவரி
குரு மேடு என்று குழம்பிக் கொள்ளாதே
சனி
என்று சளைத்துக் கொல்லாதே
செவ்வாய் தோசத்தில்சிக்கிக் கொண்டதாக
சிறுமைப் படதே
உன் கையே உனக்கு எதிரியாகுமா !

சோதிடத்தை நம்பி நேரத்தையும், பணத்தையும் வீணாக்கும் மனிதர்களுக்குப் புத்திப் புகட்டும் விதமாக உள்ளது கவிதை
இது ஒன்பதாவது நூல் .இனி தொடர்ந்து நூல் எழுதிட வாழ்த்துக்கள் .
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by vinitha Wed May 16, 2012 9:51 am

arumaiyana pakirvu nanri anna கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 548321
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed May 16, 2012 10:08 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by ருக்மணி Wed May 16, 2012 10:13 am

கவிதைகள் அத்தனையும் அருமை
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed May 16, 2012 10:16 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் Wed May 16, 2012 11:07 am

ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் தமிழ்ப் பண்பாட்டை
உணர்த்தும் விதமாக ...!?
-

இந்த பண்பாடு எந்த இலக்கியத்தில் வருகிறது..
நமக்கு வழிகாட்டுபவர்களில் பெரும்போலோர் இருதார
மணம் புரிந்தவர்களாக அல்லவா இருக்கிறார்கள்..!!
-
தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்களில் பலரும்
அரியணைக்கு ஒன்று, அந்தப்புரத்திற்கு நாலு என்று
வாழ்ந்தவர்கள்தானே..!
-
விவாதிக்கலாம்...
உறவுகள் அவரவர் கருத்துகளை
பதியுங்கள்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by ருக்மணி Wed May 16, 2012 11:22 am

உலக பொது மறை மற்றும் கம்பராமாயணத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தே கூறப்படுகிறது ஐயா
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் Wed May 16, 2012 11:27 am

நம் நாட்டின் இதிகாசங்கள் இரண்டு..
ஒன்று இராமாயணம் மற்றொன்று மகாபாரதம்..
காலத்தால் முந்தியது ராமாயணம்..
மகாபாரதத்தில் ஒருத்திக்கு ஐவர் கணவர்கள்..
-

பொதுமறையில் ஒருவனுக்கு ஒருத்தி என வலியுறுத்தும் குறள்கள்
யாவை?
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by ருக்மணி Wed May 16, 2012 11:33 am

எனைத் துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறன் இல்புகல்? (குறள்:144)

(எனைத்துணையர் = எவ்வளவு பெருமை உடையவர்,
என்னாம் = (என்னஆகும்) என்ன பயன் உண்டாகும்,
தினைத்துணையும் = (தினை அளவு) சிறிது அளவும்,
தேரான் = ஆராயாதவன், புகல் = செல்லுதல்)

என்ற குறளின் வாயிலாக வள்ளுவர் கூறுகிறார்.

எவ்வளவு பெருமை உடையவனாக இருந்தாலும், சிறிது அளவு
கூட ஆராய்ந்து பார்க்காமல் பிறன்மனைவியை விரும்புதல்
அல்லது பிறன் மனைவியிடம் செல்லுதல் ஆகிய தீய செயலைச்
செய்யும் ஒருவனது பெருமைகளால் எந்தவிதப் பயனும் இல்லை,
என்கிறார் வள்ளுவர். அதாவது, பிற எல்லாப் பெருமைகளும்,
பிறனில் விழைதல் எனும் ஒரு பிழையால் ஒன்றும் இல்லாமல்
ஆகிவிடுகின்றன.
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by ருக்மணி Wed May 16, 2012 11:36 am

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு (குறள்:148)

(ஆன்ற = நிறைந்த)

எனும் குறள்மூலம் கூறப்படுகிறது.

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை,
சான்றோர்க்கு அறம் மட்டும் அல்ல; நிறைந்த ஒழுக்கமும்
ஆகும் என்பது இந்தக் குறளின் பொருள்.
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed May 16, 2012 11:43 am

எய்ட்ஸ் ஹைக்கூ
கவிஞர் இரா .இரவி


பண்பாடுப் பயிற்றுவிக்கும்
பயமுறுத்தல் நோய்
எய்ட்ஸ்

ஒழுக்கத்தைப் பொதுவாக்குவோம்
இருபாலருக்கும்
வராது எய்ட்ஸ்

மருந்து இல்லை
மரணம் உறுதி
எய்ட்ஸ்

உயிரை உருக்கும்
உடலைக் கெடுக்கும்
எய்ட்ஸ்

கவனம் தேவை
குருதி பெறுகையில்
எய்ட்ஸ்

எச்சரிக்கை
ஊசி போடுகையில்
எய்ட்ஸ்

வரும் முன் காப்போம்
உயிர்க் கொல்லிநோய்
உணர்ந்திடுவோம்

சபலத்தின் சம்பளம்
சலனத்தின் தண்டனை
எய்ட்ஸ்

சில நிமிட மகிழ்வால்
பல வருடங்கள் இழப்பு
எய்ட்ஸ்

வெறுக்க வேண்டாம்
நேசிப்போம் நண்பராக
எய்ட்ஸ் நோயாளிகளை

--
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by ருக்மணி Wed May 16, 2012 11:52 am

வட மொழி ராமாயணம்

குரங்கு இனத்தைச் சார்ந்தவன் வாலி. குரங்கு இனங்களினுடைய ஒரு நாட்டின் தலைவன். வாலியின் தம்பி சுக்ரீவன். அண்ணன் ஆகிய வாலியின் கொடுமைகள் தாங்க முடியாமல் சுக்ரீவன், இராமனிடம் சரண் அடைகிறான்.

இராமன் வாலியைக் கொன்று, வாலி ஆட்சி செய்த நாட்டையும் சுக்ரீவனுக்குக் கொடுக்கிறான். நாட்டின் ஆட்சியில் அமர்ந்த சுக்ரீவன், அண்ணன் மனைவி ஆகிய தாரையைத் தன் மனைவி ஆக்கிக் கொள்கிறான். வட மொழியில், வால்மீகியால் எழுதப்பட்ட இராமாயணத்தில் இவ்வாறு, அண்ணன் மனைவியைத் தம்பி சுக்ரீவன் அபகரித்துக் கொண்டதாகக் கதை அமைந்து உள்ளது.

கம்பனின் ராமாயணம் :

வாலி இறந்த பின், அவன் நாட்டைக் கைப்பற்றிய சுக்ரீவன், வாலியின் மனைவியாகிய தாரையைத் தன் மனைவி ஆக்கிக் கொள்ளவில்லை, அவள் விதவையாக, அந்தப்புரத்தில் தனியாக வாழ்ந்து வருவதாகக் கம்பன் காட்டுகிறார். ஏன் அவ்வாறு காட்டுகிறார்?

விலங்கு இனங்களின் இடையேயும் பிறன் இல் விழையாமையை எடுத்துக்காட்டவே கம்பன் இவ்வாறு மாற்றி அமைத்துள்ளார். மூல நூலாகிய வடமொழி இராமாயணத்தில் சொல்லாத ஒரு கருத்தைக் கம்பன் தன் படைப்பில் சொல்லக் காரணம் என்ன?

பிறன் இல் விழையாமைக்குக் கம்பன் கொடுத்த சிறப்பு. பிறன் இல் விழையாமையை ஓர் அறமாக, பண்பாகக் கொண்டிருந்த தமிழ்ச் சமுதாயத்தின் உயர்வு அத்தகைய அறத்தைப் பின்பற்றி வாழ்தல், சிறந்த பண்பாடாகக் கருதப்பட்டது. தமிழர்களின் அந்தப் பண்பாட்டின் அடிப்படையில்தான் இங்குச் சுக்ரீவன் பிறனில் நோக்காப் பேராண்மை உடையவனாகக் கம்பனால் காட்டப்படுகிறான்.
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் Wed May 16, 2012 12:19 pm

ஒருவனுக்கு ஒருத்தி என்ற நோக்கோடு வாழ்ந்த
ஸ்ரீராமனின்
தந்தைக்கு எத்தனை மனைவியர்..?
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by ருக்மணி Wed May 16, 2012 12:29 pm

ராமாயணத்தில் மிகை படுத்தி சொல்ல பட்டது ராமனின் வாழ்க்கை வரலாறே... 63 மனைவியுடன் வாழ்ந்த தசரதனின் வாழ்க்கை அல்ல ஐயா...
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் Wed May 16, 2012 12:36 pm

வாதம் செய்வது என் கடமை
அதில் வழியைக் காண்பது உங்கள் திறமை..!

----------------------------------------------------------------
“உனக்கென இருப்பேன்..உயிரையும் கொடுப்பேன்

உன்னை நான் பிரிந்தால்..உனக்குமுன் இறப்பேன்

கண்மணியே..கண்மணியே!”

ஒரு திரைப்பட பாடல்..
-
===========================================
பலதார மணம் ஏற்புடையதே என்பற்கு முன்னிலைப்
படுத்தப்படும் காரணங்கள் இவை:-


திருமணமே ஆகாமல் பெண்கள் கர்ப்பமடைவதும்
கைவிடப்படுவதும் மலேசிய இந்துச் சமுதாயத்தில்
அதிகமாகி வருவதைக் கண்டு அங்குள்ள இந்துக்கள்
பலதார மணத்தைத் தங்களுக்கும் அனுமதிக்குமாறு
போராடி வருகின்றனர். ( மலேசிய நண்பன் நாளிதழ் -
05.01.2002)

1948 ஆம் ஆண்டில் மியூனிச்சில் நடந்த அகில உலக
இளைஞர்கள் மாநாட்டில் மிகவும் ஏற்றத்தாழ்வு மிக்க
பால்விகிதத்தால் ஏற்படும் பிரச்னை பற்றிப் பலவாறு
விவாதிக்கப்பட்டும் இறுதிவரை எந்தத் தீர்விற்கும் வர
முடியவில்லை என்பது அவர்களுக்கு தெளிவாகத்
தெரிந்தவுடன், மாநாட்டில் கலந்து கொண்ட சிலர்
பலதார மணத்தை சிறந்த தீர்வாக முன்வைத்தனர்.

இதைக்கேட்டதும் ஆரம்பத்தில் மாநாட்டிற்கு வந்தோர்
அதிர்ச்சிக்கும் வெறுப்பிற்குமுள்ளாயினர். ஆயினும்,
இதைக் கவனமாக ஆராய்ந்த மாநாட்டினர், பலதார
மணம் ஒன்றுதான் சாத்தியமான தீர்வு என்பதை ஒப்புக்
கொண்டனர். இறுதியாக, மாநாட்டின் இறுதித்
தீர்மானங்களில் ஒன்றாகப் பலதார மணமும் சேர்க்கப்
பட்டது.

திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள்
திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை
விடப் பல மடங்கு அதிகமாக உள்ளனர். ஏனெனில்
பெண்கள் ஆண்களை விட சுமார் 10 வருடங்களுக்கு
முன்பே திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர்.

யுத்தங்களில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக
கொல்லப்படுகிறார்கள். விபத்துக்களிலும் , நோய்
வாய்ப்பட்டும் இறப்பவர்களில் பெண்களைவிட
ஆண்களின் விகிதாச்சாரமே அதிகம். ஆண்களின்
வாழ்க்கைக் காலம் பெண்களின் வாழ்க்கை காலத்தை
விடக் குறைவாகவே இருப்பதால் எந்த காலகட்டத்திலும்
மனைவியை இழந்த கணவர்களை விட, கணவனை
இழந்த மனைவியரே இவ்வுலகில் அதிகம்
காணப்படுகின்றனர்.

சராசரியாகப் பெண்ணினத்தின் வாழ்க்கைக் கால
அளவு, ஆணிணத்தின் வாழ்க்கைக் கால அளவைவிட
அதிகமானது.
-------------------
நன்றி: இணையம்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Jul 23, 2012 10:03 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

கவிதைக்கூத்து   நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர்  ஞான  ஆனந்தராஜ்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty Re: கவிதைக்கூத்து நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஒரு கவிஞனின் வாக்கு மூலம் !நூல் ஆசிரியர்விஞர் ஞான ஆனந்தராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum