தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

ராமன் ஆண்மையற்றவன்!

+5
கலைவேந்தன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
dhilipdsp
அ.இராமநாதன்
ரௌத்திரன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty ராமன் ஆண்மையற்றவன்!

Post by ரௌத்திரன் Tue Jul 17, 2012 8:22 am

(ஒரு விலைமகள் என்னை ஆசையோடு நெருங்கிய போது

நான் உற்ற உணவுர்வுகளும்
, அடைந்த அவஸ்தைகளும்,

நடந்த நிஜங்களும் கவிதையாகி இருக்கிறது)

வேண்டாம்!

தயவு செய்து
என்னை நெருங்காதே!

நீ
அழகுதான்!

அதனால்தான்
அச்சப்படுகிறேன்....

உன்
நீல விழிகொண்டு
நீளப் பார்வை பார்க்காதே!

நான்
அவ்வப்போது அருந்தும்
விஸ்கியைவிட
உன்
விழியில் போதை அதிகமாக இருக்கிறது....

வேண்டாம்!
சொன்னால் கேள்!

ஒரு
கூலிக்காரனின்
காசைப் போல

சிறுகச் சிறுக
சேமித்த இந்திரியத்தைச்
சில நிமிடங்களில்
செலவழிக்கச் செய்துவிடாதே.....

புரிகிறது!

நீ சீதையுமல்ல
இது அசோக வனமுமல்ல!

ஆனால்
நிச்சயம்
நான் ராவணன் ஆயிற்றே....

அதனால்தான்
அச்சப்படுகிறேன்!

உன்
தேகம் தீண்டினால்
காமன் கணைகளுக்கும்
காய்ச்சலடிக்குமே....

அதனால்தான்
அச்சப்படுகிறேன்!

உன்
கட்டழகைக்
கண்டுவிட்டால்
இவன் ரெட்டைக் கண்களில் என்ன
சிவனின் நெற்றிக் கண்ணிலும்
காமம் வழியுமே....

அதனால்தான்
அச்சப்படுகிறேன்!

வேண்டாம்!
சொன்னால் கேள்!

வேதத்தின்
வேர்களைத் துழாவிய
விசுவாமித்திரன் கூட
விவேகம் இழந்த இடம் பெண்...

அதனால்தான்
அச்சப்படுகிறேன்!

துறவியின்
தூய்மையைக் கூட
துடைத்து எறிந்துவிடும் ஆற்றல்
ஒரு
பெண்ணின் முந்தானைக்கு உண்டு....

அதனால்தான்
அச்சப்படுகிறேன்!

புழுதியைக் கூடப்
பூமணக்கச் செய்யும்
பாதங்களால்
என் கால்களை அழுத்தாதே!

உன் கால்களுக்குக் கீழே
என்
ஆண்மை பீடமே
அமுங்குவதாய்ப் படுகிறது எனக்கு....

உன்
புடவைவீசும்
புயல்காற்றில்
என்
புலன்களென்னும்
பூவனத்தை உதிர்த்துவிடாதே...

!
வேண்டாம்!
வேண்டாம்!

உன்
இடையைப் போல
இளைத்துக்கொண்டே வருகிறது
என் வைரக்கியம்....

ராவணனாய் வாழ்ந்து
ரணமானது போதும்.

இனியேனும்
ராமனாய் வாழ ஆசைப்படுகிறேன்!

சொன்னால் கேள்!

வரம் கிடைக்கும் நேரத்தில்
தவத்தைக் கலைத்துவிடாதே!

ஐயோ! போதும்!

ஆதவனின் கதிர்க்கரங்கள் தீண்டியும்
அவிழாத
அதிசயத் தாமரைகளாய்

என்
முகத்தில் அழுந்தும்
மதர்த்த நின்
முலைகளை எடு!

மூச்சு
முட்டுகிறது எனக்கு.....

விலகு...
விலகிவிடு...

வருகிறேன்!

ராவணன்
ராமனாகி விட்ட சந்தோஷத்தில்
நடக்க ஆரம்பித்தேன்.

ஆனால்
அந்த ஆனந்தத்தை
அடுத்த நொடியே
அடித்து நொறுக்கியது

என்
உள்மனம்
உதிர்த்த செய்தி!

"ராமனாகிவிட்டதாய்
ரொம்பப் பெருமைப் படாதே!

அவள் நினைத்திருப்பாள்
"சீ!
இவன் ஆண்மகன் தானா?""

!
ராமன் எனில்
ஆண்மையற்றவனோ?

-------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 37
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by அ.இராமநாதன் Tue Jul 17, 2012 11:10 am

[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by dhilipdsp Tue Jul 17, 2012 1:20 pm

[You must be registered and logged in to see this image.]
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jul 17, 2012 2:25 pm

[You must be registered and logged in to see this image.]

Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Jul 19, 2012 1:44 pm; edited 1 time in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by கலைவேந்தன் Tue Jul 17, 2012 10:35 pm

அருமையான கவிதைகளை எழுதிய ரௌத்திரனிடமிருந்து ஓர் அருவெருக்கத்தக்க ஒரு கவிதை.

என்னதான் எதார்த்தத்தைச் சொல்வதாய் பீற்றிக்கொண்டாலும் என்னதான் எதுகை மோனையோடு கைகோர்த்து வந்தாலும் கவிதையின் கரு குமட்டுகிறது.

நல்ல கவிதைகளைப் பாராட்டிய நானே தான் இதுபோன்ற அவசியமற்ற கவிதையைத் தூற்றுகிறேன்.

இக்கவிதை மூலம் எதையாவது சாதித்துவிட்டதாய் நெஞ்சை நிமிர்த்துவதானால் தங்களின் கவித்திறமைக்கு அது களங்கமன்றி வேறெதும் இல்லை.
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by அ.இராமநாதன் Wed Jul 18, 2012 10:32 am

ஒரு விலைமகள் என்னை ஆசையோடு
நெருங்கிய போது நான் உற்ற உணவுர்வுகளும்
,
அடைந்த அவஸ்தைகளும்,
நடந்த நிஜங்களும் கவிதையாகி இருக்கிறது..
என தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் கவிஞர்...
-
எனவே கடுமையான சாடல் அவசியமற்றது என
கருதுகிறேன்...

-
கவிஞர்கள் தங்கள் கருத்துகளை முன் வைக்கலாம்.....

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by கலைவேந்தன் Wed Jul 18, 2012 8:42 pm

ஐயா.

தன்னிலை விளக்கம் ஒருவர் தந்துவிட்டதாலேயே ஒரு கவிதைக்கு தனிப்பட்ட அந்தஸ்து வந்துவிடாது. தகாத கவிதை தரம் கொண்டு மிளிராது.

இதே ரௌத்திரனின் நான் கவிஞன் கவிதையை வாசித்துப் பாருங்கள். ஒரு கவிஞனின் பிரக்கினையை சமூகத்தின் பால் கொள்ள வேண்டிய அக்கறையை சமூதத்தீவினைகளைச் சாடவேண்டிய கவிஞனின் அவசியத்தை கவிஞனின் பொறுப்பை என்ன அழகாக விளக்கி இருக்கிறார்..

அதே பொறுப்ப்புள்ள கவிஞன் இப்படி ஒரு கவிதையை எழுதலாமா என்பது என் ஆதங்கம்.

மேலும் எந்த ஒரு கவிஞனும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று என்ன என்றால் தன்னிடம் இருந்து வரும் நல்ல கவிதைகளைத்தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாடும் அதே வாசகர்கள் தாம் அவர்களின் விமர்சனத்தையும் தாங்கவேண்டிய அவசியம் இருக்கிறது என்பது தான்.

நானும் ஒரு கவிஞன் என்ற வகையில் என் பார்வையை வைத்துள்ளேன். இது அனைவரது கருத்தும் என்றோ அனைவரும் இதை வலியுறுத்தவேண்டும் என்றோ விழையவும் இல்லை.

எதை எழுதினாலும் கைதட்டிப் போக வேண்டிய அவசியமும் எனக்கில்லை. விமர்சனம் என்பது இருந்தால் தான் படைப்பு மேலும் மிளிரச்செய்யும் என்பது நிஜம்.

இந்த மேல் சொன்ன என் கருத்துக்கு எதிராக பலரும் கூறிவிடுவதால் என் கருத்து நியாயமற்றது என்று ஆகிவிடாது.

உலக அரங்கில் எப்படிப்பேசப்படும் என்பதைப்பொறுத்தே அமையும்.

சாரு நிவேதிதா என்பவர் தான் எழுதிய அபத்த நாவல் எக்சைலுக்கும் இன்னும் பிற அருவெருக்கத் தக்க படைப்புகளுக்கும் சப்பைக்கட்டு கட்டுகிறார். அவரது துதிக்கூட்டமும் தாளம் போடுகிறது. அதே சமயம் பல அவரை விமரிசித்துக்கொண்டு தான் இருக்கிறார்.

சமூகத்தின் பேரில் அக்கறை உள்ள எவருக்கும் இக்கவிதை ஏற்புடையது அன்று என்பது என் திண்ணமான கருத்து.

புரிதலுக்கு நன்றி.
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by சதாசிவம் Wed Jul 18, 2012 9:08 pm

கவிஞரின் கவிதை ரசிக்க இயவில்லை.

ஒன்று சொல்ல வந்த விஷயம்,

இரண்டு இந்து மதத்தில் இறைவனாகக் கருதும் கடவுளையும், புராணத்தையும் கிண்டல் செய்வது போல் உள்ளது. இதே பாணியில் மற்ற மதங்களில் வரும் கதையையும் கடவுளையும் வைத்து கவிதை எழுதினால் அனைவராலும் ஏற்றுக் கொள்ளமுடியுமா?
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by ரௌத்திரன் Wed Jul 18, 2012 9:41 pm

கவிஞர் கலைவேந்தன் அவர்களின் மனம் திறந்த விமர்சனத்தை நான் மதிக்கிறேன். எனது கவிதையைப் பார்த்துக் குமட்டுகிறது என்று கூறிய முதல் நபர் இவர்தான்.ஆயினும் எனக்கு இதில் வருத்தம் இல்லை. பொதுவாக பாராட்டுகளுக்கு நான் நன்றி கூறுவது கிடையாது. விமர்சனத்திற்கு மட்டுமே விளக்கம் அளிப்பது எனது வழக்கம். அதுவும் உடனே அளிப்பதில்லை. காரணம், எவருக்குமே தங்கள் படைப்பை பிறர் விமர்சனம் செய்யும் அந்த நொடியில் ஆத்திரம் வரும். உடனே பதில் தருவது உகந்ததும் அல்ல. எனவே நிதானித்துதான் நான் பதில் அளிப்பது!

கவிஞர் கலைவேந்தன் அவர்களின் கருத்தின் மீது எனக்குக் கோபமில்லை. அதே நேரம் எனது இக்கவிதை அருவருக்கத் தக்க கவிதையல்ல அழகுக் கவிதை என்பதில் எனக்கு எப்போதும் இருகருத்து இல்லை.

இந்தக் கவிதை எழுதப்பட்ட கோணத்தை சிலர் சரிவரப் புரிந்துகொள்ளவில்லையோ என்ற கவலைமட்டும் வருகிறது. ஆம்,

"லஞ்சம் வாங்கமாட்டேன்" என்ற கொள்கையோடு இருப்பவனைத் தனது மனைவியே நேரங்களில் "பிழைக்கத் தெரியாதவன்" என்று பரிகசிப்பது போல,

வரதட்சணை கேட்டால் "ஐயோ அடுத்தான் சொத்துக்கு அலைகிறானே" என்பதும், "கட்டிய சேலையோடு வந்தாலும் போதும்

என்ற நல்லெண்ணம் கொண்ட இளைஞர்களை, "படிக்காதனெல்லாம் அவ்வளவு கேட்கும் பொது, இவன் என்ன வேண்டாம் என்கிறான்? ஒருவேளை ஏதேனும் குறை இருக்குமோ?" என்று சிலர் சந்தேகப் படுவது போல,

காந்தியின் வழியைப் பின்பற்றி சாத்வீகப் பாதையில் நடப்போரைச் சிலர் ஆண்மையில்லா பேடி, கோழை என்று இழித்துரைப்பது போல,

ராமனைப் போல ஒழுக்கமாக வாழ நினைப்பவனையும் சமூகம் சிலநேரம் எப்படி எதிர்மறையாகக் கண்டு கேலிக்கு ஆளாக்கிவிடுகிறது என்பதுதான் இக்கவிதையின் ஆணிவேரே!

இந்த விளக்கத்திற்குப் பிறகும் இக்கவிதை விரசமானதாகவோ வீணான வார்த்தை ஜாலம் என்றோ எவரேனும் நினைத்தால் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

நான் இந்து மதக் கடவுளைப் பழிப்பதற்காக இதனை எழுத வில்லை. நான் நாத்திகனாக இருந்து, வாழ்வில் இறைவனின் லீலைகளை அனுபவபூர்வமாக உணர்ந்து பிறகு ஆத்திகனாக மாறியவன். எனவே எந்த ஒரு மதத்தையோ கடவுளையோ கேவலப் படுத்துவதாக என் மீதோ என் எழுத்தின் மீதோ வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்னைப் பொறுத்தவரை நகைப்புக்குரியதே!

கற்சிலை என்றே நான்

கர்ஜித்த பொதும்தான்

பொற்சிலை போல்பூத்துக் கண்ணன் வந்தான்!

பொய்யேன்று புறந்தள்ளிப்

போனேனின் வாழ்வுந்தான்

நெய்யாக மணம்வீசக் கண்ணன் வந்தான்!

"தூ"வென உமிழ்ந்தே நான்

தூற்றிய போதும்தான்

தூணென எனைத்தாங்கக் கண்ணன் வந்தான்!

ஆவலை நான் பாடி

ஆசையை வெளிக்காட்ட

நாவினில் கவியாகக் கண்ணன் வந்தான்!

ஆம், என் நாவிலே கவிதையாக வருவதே அந்தக் கண்ணன் தான்

ராமன் தான்!

----------------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 37
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by கவி கவிதா Wed Jul 18, 2012 9:42 pm

கலைவேந்தன் wrote:அருமையான கவிதைகளை எழுதிய ரௌத்திரனிடமிருந்து ஓர் அருவெருக்கத்தக்க ஒரு கவிதை.

என்னதான் எதார்த்தத்தைச் சொல்வதாய் பீற்றிக்கொண்டாலும் என்னதான் எதுகை மோனையோடு கைகோர்த்து வந்தாலும் கவிதையின் கரு குமட்டுகிறது.

நல்ல கவிதைகளைப் பாராட்டிய நானே தான் இதுபோன்ற அவசியமற்ற கவிதையைத் தூற்றுகிறேன்.

இக்கவிதை மூலம் எதையாவது சாதித்துவிட்டதாய் நெஞ்சை நிமிர்த்துவதானால் தங்களின் கவித்திறமைக்கு அது களங்கமன்றி வேறெதும் இல்லை.

இந்தக் கவிதையில் அருவருக்க எதுவும் இல்லை என்று நினைக்கிறேன்

மன்னிக்கவும், அவரின் உணர்வைச் சொன்னார் கவிதையில் அது குமட்டலா?.

கொஞ்சம் ஆழமாக இந்தக் கவிதைக்குள் போனால் அவர் சொல்ல வந்தது வேறொன்றாக கூட இருக்கலாம் அல்லவா?.
அவர் எழுதிய உணர்வும் உங்களின் புரிதலின் உணர்வும் வேறாக இருக்கலாம் அல்லவா?.
மோசமான வார்த்தை பிரயோகம் இல்லை தானே? அழகான கவிதையில் அவரின் உணர்வை சொல்லி இருக்கிறார் ...

கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by கவி கவிதா Wed Jul 18, 2012 9:49 pm

சதாசிவம் wrote:கவிஞரின் கவிதை ரசிக்க இயவில்லை.

ஒன்று சொல்ல வந்த விஷயம்,

இரண்டு இந்து மதத்தில் இறைவனாகக் கருதும் கடவுளையும், புராணத்தையும் கிண்டல் செய்வது போல் உள்ளது. இதே பாணியில் மற்ற மதங்களில் வரும் கதையையும் கடவுளையும் வைத்து கவிதை எழுதினால் அனைவராலும் ஏற்றுக் கொள்ளமுடியுமா?

அற்புதமான வரிகள்..

அவர் கிண்டல் பண்ணுவதாக இல்லை இந்தக் கவிதை.. அவரின் உணர்வை பொங்கவைத்த உணர்ச்சிக் கவிதை. இதில் ராமன் ஒரு உதாரணம் மட்டுமே, முழுதும் அவரின் உணர்வே.. இங்கு கடவுளும் வரவில்லை, புராணமும் வரவில்லை...

ராமன் ஏக பத்தினி விரதன்.. வேறு எந்த ஒரு கடவுளுக்கும் இப்படி ஒரு பட்டதை நாம் கொடுக்கவில்லை, அப்படி கொடுத்து இருந்தால் கண்டிப்பாக அதை/அவரை ரௌதிரன் உதாரணமாக தந்திருப்பார் என நினைக்கிறேன்.

மனித உணர்வு இந்தக் கவிதையில் கடவுளை சிறுமை படுத்தியதாய் தவறாக புரியப் பட்டு இருக்கிறது... இது வெற்றுக் கோணத்தில் எழுதி இருக்கக் கூடும் என நினைக்கிறேன்

கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by கலைவேந்தன் Wed Jul 18, 2012 9:59 pm

மிக அருமையான விளக்கம் ரௌத்திரன். பாராட்டுகிறேன். அதே நேரம் நான் சொல்ல வந்த கருத்தையும் பகிர்ந்துகொள்ளத்தான் வேண்டும்.

ஒவ்வொருவருடைய வாழ்விலும் இருண்ட பக்கம் என்று ஒன்று கட்டாயம் இருந்தே தீரும்.

கண்ணதாசனின் வனவாசத்தில் ஒரு சம்பவம் குறித்திருப்பார். கலைஞரும் இவரும் ஒரு நாள் தாசிவிட்டுக்க்குச் சென்று விட்டு காசுகொடுக்காமல் வீண் அபாண்டம் கூறி கலைஞர் வெளிவந்ததைக் குறிப்பிட்டிருப்பார்.

கலைஞர் தனது எந்த படைப்பிலும் இச்சம்பவத்தை ஒரு பிரேரணையாகக் கொண்டும் கூட எழுதியதில்லை. காரணம் சமூகப்பொறுப்புள்ள படைப்பாளிகள் தங்கள் படைப்புகளால் எதிர்மறை எண்ணங்கள் விரவிப்பரவி விடாமல் இருக்கவேண்டும் என்னும் பிரக்ஞையே காரணம்.

இங்கே தமது அனுபவத்தின் ஒரு பகுதியை எழுதியதன் மூலம் வாசிப்பவர்களின் மனதில் இனி எந்த தாசியாவது வலிய அழைத்தால் அவள் ஆண்மையற்றவன் என்று கேவலப்படுத்துவாளோ என்று பயந்து இணங்கிவிட முயலக்கூடும்.

சமூகத்தின் இருண்ட பக்கங்களைப் படம் எடுப்பதன் மூலம் சமூகத்தைத் திருத்துவதாய் எண்ணி அந்த இருண்ட பக்கங்களை முழுக்க முழுக்கக் காட்டிவிட்டுப் பிறகு அதற்கு ஒரு தீர்வு சொல்வது எந்த வகையில் ஏற்கத்தக்கது..?

நம் படைப்புகள் பலரைத் தூண்டிவிடும் என்னும் பொறுப்பு மிக்க கவிஞர் இதைப்போல இருண்ட பக்கங்களை எழுதுவது சரியெனப்படவில்லை.

வரதட்சினை கேட்காதவரை குறையுள்ளவர் என்று கூறிவிடுவார்கள் என்பதற்காகவே வரதட்சினை கேட்கும் பலரை நான் கண்டிருக்கிறேன்.

கையூட்டு பெறவில்லை எனில் மனைவி கேவலப்படுத்துவாள் என்று பயந்து கையூட்டு வாங்க எண்ணிய பலரை நான் கண்டிருக்கிறேன்.

இங்கே இந்த கவிதையில் ஆண்களின் உத்தமனான ராமனை ஆண்மையற்றவன் என ஏசிவிடுவார்கள் என்னும் கருத்தினைக் கூறியதால் இளைஞர்களின் மனதில் எத்தகைய எண்ணம் எழும் என யோசிக்கிறேன்.

கவிதையின் சொற்களில் நான் அருவெருப்பைக் காணவில்லை. முலை இந்திரியம் போன்ற சொற்களை நானும் எனது கவிதைகளில் கையாண்டிருக்கிறேன் - அது அவசியமென கருதியபோது..

எனவே சொற்குற்றம் நான் காணவே இல்லை.

நான் கண்டு இன்னும் வெறுப்பது கருக்குற்றம் தான்..!

எனது எண்ணம்போல் சதாசிவம் அவர்களின் எண்ணம் ஒத்திருப்பதும் எனது கருத்தே சரியில்லை என்பது போல் ராமநாதன் ஐயா மற்றும் கவிதா வரையில் கூறி இருப்பதைக் கண்டும் எந்த விதத்திலும் எனது கருத்தை நான் மாற்றிக்கொள்ளவில்லை.

இது அவரவர் எண்ணப்போக்கையும் சிந்திக்கும் திறனையும் பொருத்த விடயம் தான்.. இதில் கூற என்ன்னிடம் ஒன்றும் இல்லை.

விரும்பியோர் ரசித்திடுக.

நன்றி அனைவருக்கும்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by ரௌத்திரன் Wed Jul 18, 2012 10:17 pm

கவிஞர் கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம்!

நீங்கள் முன்வைத்த கருத்தை நான் வரவேற்கிறேன். சிந்தித்துப் பார்க்கிறேன். அதே நேரம், நீங்களும் நானும் இன்னும் சில விஷயங்களில் முரண்பாடுவோம் என்பது மட்டும் திண்ணம்.

கவியரசு கிண்ணதாசனும் கலைஞர் கருணாநிதியும் தாசி வீட்டுக்குப் போய் அனுபவித்துவிட்டு பிறகு கலைஞர், அந்த தாசியின் தகப்பனிடம் அடாவடித்தனம் செய்து கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற்ற கதையை யானும் அறிவேன்.

இதைக் கலைஞர் எங்கும் வெளிப்படுத்தியிருக்க மாட்டார் என்பதும் தெரியும். காரணம் அவர் அந்த அளவுக்கு "யோக்கியவான்" "நல்லவர்". தமிழ் இனத்தின் தன்னிகரற்ற தலைவர், தமிழின் தலைமகன், வாழும் வள்ளுவர், அந்தப் பெருந்தகை அப்படித்தான் இருப்பார். முள்ளிவாய்க்கால் அழிகையில் கூட அவர் எதைத்தான் வெளிப்படுத்தினார்? தமிழன் என்ற உணர்வை? தமிழினத் தலைவர் என்ற பொறுப்பு?

எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் குறித்த உங்கள் கண்ணோட்டமும் எனது கண்ணோட்டமும் ஒன்றே!

சரி. முரண்பாடுகள் முளைக்கும் போது மீண்டும் பேசலாம்.

இப்போதைக்கு நன்றி!

வணக்கம்!

---------------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 37
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by கலைவேந்தன் Wed Jul 18, 2012 10:26 pm

ஒரு வரி விளக்கம் மட்டும் என் தரப்பில் :

கலைஞரை அவரது தமிழுக்காக மட்டுமே போற்றுபவன். மற்றபடி அவரது தமிழினத்துரோகம் குறித்து நான் எழுதாத கட்டுரைகள் இல்லை கவிதைகள் இல்லை. தமிழினத்துக்கு வாய்த்த பீடை அவர் என்பதில் எனக்கு இருவேறு கருத்தில்லை.

பொதுவாக நான் முரண்படுவது சமூக பிரக்ஞை குறித்தது மட்டுமே..

இயன்றால் எனது கவிதைகளை வாசித்துப்பாருங்கள். நான் காமத்தையும் உடலுறவையும் கூட எவ்விதம் நான் கையாண்டிருக்கிறேன் என்பது விளங்கும்.

நன்றி மீண்டும்.
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 18, 2012 11:19 pm

கலைவேந்தன் wrote:

இங்கே தமது அனுபவத்தின் ஒரு பகுதியை எழுதியதன் மூலம் வாசிப்பவர்களின் மனதில் இனி எந்த தாசியாவது வலிய அழைத்தால் அவள் ஆண்மையற்றவன் என்று கேவலப்படுத்துவாளோ என்று பயந்து இணங்கிவிட முயலக்கூடும்.

சமூகத்தின் இருண்ட பக்கங்களைப் படம் எடுப்பதன் மூலம் சமூகத்தைத் திருத்துவதாய் எண்ணி அந்த இருண்ட பக்கங்களை முழுக்க முழுக்கக் காட்டிவிட்டுப் பிறகு அதற்கு ஒரு தீர்வு சொல்வது எந்த வகையில் ஏற்கத்தக்கது..?

நம் படைப்புகள் பலரைத் தூண்டிவிடும் என்னும் பொறுப்பு மிக்க கவிஞர் இதைப்போல இருண்ட பக்கங்களை எழுதுவது சரியெனப்படவில்லை.

இக்கருத்தே என்னுடைய கருத்தும்.

ரௌத்திரன் அவர்களின் சில கவிதைகளை சென்ற வாரம் முதல் படித்துவருகிறேன். நடையின் ஆளுமை கண்டு பாராட்டியும் கருவை ரசித்தும் இருக்கிறேன்.

ஆனால் இந்தக் கவிதை எனக்கு நெருடலை உண்டாக்கியது என்னமோ உண்மைதான்.

உண்மை என்பதால் எல்லாவற்றையும் நாம் கவிதையாக வடித்திட முடியாது.

கவிஞரின் இந்தச் செயல் கலங்கரை விளக்காக இருந்தால் போற்றலாம். ( கவிஞர் அந்த விசயத்தில் கலங்கரை விளக்கு. பாராட்டுகள்.) ஆனால் படிப்பவன்... இதுபோன்று சம்பவம் நடந்தால் தன் ஆண்மையை தவறாக கணிக்கப்படும் என்று தவறாக நடந்து கொண்டால் இந்தக் கவிதை கலங்கமாய் அமைந்ததுதான்.

இது என் தனிப்பட்ட கருத்து.

விதிவிலக்குகள் கலங்கரை விளக்காக இருந்தால் ஏற்றக்கொள்ளலாம். கலங்கமாய் இருந்தால் களை எடுப்பதுதான் சிறந்தது.

கவிதையை ஆக்க கவிஞருக்கு உரிமை உண்டு. விமர்சனம் தாங்கிக்கொள்ளும் அனுபவம் கவிஞனுக்கும் இருக்க வேண்டும். தவற்றை நியாயப்படுத்தக் கூடாது என்பதையும் நான் அறிந்து தெளிந்திருக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by sarunjeevan Wed Jul 18, 2012 11:47 pm

கலைவேந்தன் wrote:ஐயா.

தன்னிலை விளக்கம் ஒருவர் தந்துவிட்டதாலேயே ஒரு கவிதைக்கு தனிப்பட்ட அந்தஸ்து வந்துவிடாது. தகாத கவிதை தரம் கொண்டு மிளிராது.

இதே ரௌத்திரனின் நான் கவிஞன் கவிதையை வாசித்துப் பாருங்கள். ஒரு கவிஞனின் பிரக்கினையை சமூகத்தின் பால் கொள்ள வேண்டிய அக்கறையை சமூதத்தீவினைகளைச் சாடவேண்டிய கவிஞனின் அவசியத்தை கவிஞனின் பொறுப்பை என்ன அழகாக விளக்கி இருக்கிறார்..

அதே பொறுப்ப்புள்ள கவிஞன் இப்படி ஒரு கவிதையை எழுதலாமா என்பது என் ஆதங்கம்.

மேலும் எந்த ஒரு கவிஞனும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று என்ன என்றால் தன்னிடம் இருந்து வரும் நல்ல கவிதைகளைத்தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாடும் அதே வாசகர்கள் தாம் அவர்களின் விமர்சனத்தையும் தாங்கவேண்டிய அவசியம் இருக்கிறது என்பது தான்.

நானும் ஒரு கவிஞன் என்ற வகையில் என் பார்வையை வைத்துள்ளேன். இது அனைவரது கருத்தும் என்றோ அனைவரும் இதை வலியுறுத்தவேண்டும் என்றோ விழையவும் இல்லை.

எதை எழுதினாலும் கைதட்டிப் போக வேண்டிய அவசியமும் எனக்கில்லை. விமர்சனம் என்பது இருந்தால் தான் படைப்பு மேலும் மிளிரச்செய்யும் என்பது நிஜம்.

இந்த மேல் சொன்ன என் கருத்துக்கு எதிராக பலரும் கூறிவிடுவதால் என் கருத்து நியாயமற்றது என்று ஆகிவிடாது.

உலக அரங்கில் எப்படிப்பேசப்படும் என்பதைப்பொறுத்தே அமையும்.

சாரு நிவேதிதா என்பவர் தான் எழுதிய அபத்த நாவல் எக்சைலுக்கும் இன்னும் பிற அருவெருக்கத் தக்க படைப்புகளுக்கும் சப்பைக்கட்டு கட்டுகிறார். அவரது துதிக்கூட்டமும் தாளம் போடுகிறது. அதே சமயம் பல அவரை விமரிசித்துக்கொண்டு தான் இருக்கிறார்.

சமூகத்தின் பேரில் அக்கறை உள்ள எவருக்கும் இக்கவிதை ஏற்புடையது அன்று என்பது என் திண்ணமான கருத்து.

புரிதலுக்கு நன்றி.

பொறுப்ப்புள்ள கவிஞன் இப்படி ஒரு கவிதையை எழுதலாமா என்பது என் ஆதங்கம் [You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by sarunjeevan Thu Jul 19, 2012 12:13 am

கலைவேந்தன் wrote:மிக அருமையான விளக்கம் ரௌத்திரன். பாராட்டுகிறேன். அதே நேரம் நான் சொல்ல வந்த கருத்தையும் பகிர்ந்துகொள்ளத்தான் வேண்டும்.

ஒவ்வொருவருடைய வாழ்விலும் இருண்ட பக்கம் என்று ஒன்று கட்டாயம் இருந்தே தீரும்.

கண்ணதாசனின் வனவாசத்தில் ஒரு சம்பவம் குறித்திருப்பார். கலைஞரும் இவரும் ஒரு நாள் தாசிவிட்டுக்க்குச் சென்று விட்டு காசுகொடுக்காமல் வீண் அபாண்டம் கூறி கலைஞர் வெளிவந்ததைக் குறிப்பிட்டிருப்பார்.

கலைஞர் தனது எந்த படைப்பிலும் இச்சம்பவத்தை ஒரு பிரேரணையாகக் கொண்டும் கூட எழுதியதில்லை. காரணம் சமூகப்பொறுப்புள்ள படைப்பாளிகள் தங்கள் படைப்புகளால் எதிர்மறை எண்ணங்கள் விரவிப்பரவி விடாமல் இருக்கவேண்டும் என்னும் பிரக்ஞையே காரணம்.

இங்கே தமது அனுபவத்தின் ஒரு பகுதியை எழுதியதன் மூலம் வாசிப்பவர்களின் மனதில் இனி எந்த தாசியாவது வலிய அழைத்தால் அவள் ஆண்மையற்றவன் என்று கேவலப்படுத்துவாளோ என்று பயந்து இணங்கிவிட முயலக்கூடும்.

சமூகத்தின் இருண்ட பக்கங்களைப் படம் எடுப்பதன் மூலம் சமூகத்தைத் திருத்துவதாய் எண்ணி அந்த இருண்ட பக்கங்களை முழுக்க முழுக்கக் காட்டிவிட்டுப் பிறகு அதற்கு ஒரு தீர்வு சொல்வது எந்த வகையில் ஏற்கத்தக்கது..?

நம் படைப்புகள் பலரைத் தூண்டிவிடும் என்னும் பொறுப்பு மிக்க கவிஞர் இதைப்போல இருண்ட பக்கங்களை எழுதுவது சரியெனப்படவில்லை.

வரதட்சினை கேட்காதவரை குறையுள்ளவர் என்று கூறிவிடுவார்கள் என்பதற்காகவே வரதட்சினை கேட்கும் பலரை நான் கண்டிருக்கிறேன்.

கையூட்டு பெறவில்லை எனில் மனைவி கேவலப்படுத்துவாள் என்று பயந்து கையூட்டு வாங்க எண்ணிய பலரை நான் கண்டிருக்கிறேன்.

இங்கே இந்த கவிதையில் ஆண்களின் உத்தமனான ராமனை ஆண்மையற்றவன் என ஏசிவிடுவார்கள் என்னும் கருத்தினைக் கூறியதால் இளைஞர்களின் மனதில் எத்தகைய எண்ணம் எழும் என யோசிக்கிறேன்.

கவிதையின் சொற்களில் நான் அருவெருப்பைக் காணவில்லை. முலை இந்திரியம் போன்ற சொற்களை நானும் எனது கவிதைகளில் கையாண்டிருக்கிறேன் - அது அவசியமென கருதியபோது..

எனவே சொற்குற்றம் நான் காணவே இல்லை.

நான் கண்டு இன்னும் வெறுப்பது கருக்குற்றம் தான்..!

எனது எண்ணம்போல் சதாசிவம் அவர்களின் எண்ணம் ஒத்திருப்பதும் எனது கருத்தே சரியில்லை என்பது போல் ராமநாதன் ஐயா மற்றும் கவிதா வரையில் கூறி இருப்பதைக் கண்டும் எந்த விதத்திலும் எனது கருத்தை நான் மாற்றிக்கொள்ளவில்லை.

இது அவரவர் எண்ணப்போக்கையும் சிந்திக்கும் திறனையும் பொருத்த விடயம் தான்.. இதில் கூற என்ன்னிடம் ஒன்றும் இல்லை.

விரும்பியோர் ரசித்திடுக.

நன்றி அனைவருக்கும்..!

சமூகத்தின் இருண்ட பக்கங்களைப் படம் எடுப்பதன் மூலம் சமூகத்தைத் திருத்துவதாய் எண்ணி அந்த இருண்ட பக்கங்களை முழுக்க முழுக்கக் காட்டிவிட்டுப் பிறகு அதற்கு ஒரு தீர்வு சொல்வது எந்த வகையில் ஏற்கத்தக்கது..?

நம் படைப்புகள் பலரைத் தூண்டிவிடும் என்னும் பொறுப்பு மிக்க கவிஞர் இதைப்போல இருண்ட பக்கங்களை எழுதுவது சரியெனப்படவில்லை.

ரெளத்திரன் என்றாலே ஒரு ஸ்டைல் இருக்கிறது..
ரெளத்திரன் கவிதைகளில் ஒரு fire இருக்கிறது..
அந்த மாதிரியான கவிதைகளை படித்து விட்டு

உனக்கும் உன் கவிதைகளுக்கு ரசிகன் ஆன ஒருவனுக்கு கண்டிப்பாக,
இந்த கவிதையின் முடிவு ஏமாற்றத்தை அளிக்கும்..[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by கவி கவிதா Thu Jul 19, 2012 12:16 am

sarunjeevan wrote:

பொறுப்ப்புள்ள கவிஞன் இப்படி ஒரு கவிதையை எழுதலாமா என்பது என் ஆதங்கம் [You must be registered and logged in to see this image.]

பொறுப்புள்ள கவிஞன் என்றால் என்ன?... சமூகம் சார்ந்த கவிதை மட்டுமே எழுதணுமா??... கவிதை ஒருவரின் தனிப்பட்ட விஷயம் இல்லயா?.
அழுகை போல, சிரிப்பு போல, ஒவ்வொருவரின் கவிதையும் வெறும் வரியில்லை உணர்வை சிந்தும் இடம். இதென்னங்க ஒரு தப்பா??.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 19, 2012 8:35 am

கவி கவிதா wrote:
sarunjeevan wrote:

பொறுப்ப்புள்ள கவிஞன் இப்படி ஒரு கவிதையை எழுதலாமா என்பது என் ஆதங்கம் [You must be registered and logged in to see this image.]

பொறுப்புள்ள கவிஞன் என்றால் என்ன?... சமூகம் சார்ந்த கவிதை மட்டுமே எழுதணுமா??... கவிதை ஒருவரின் தனிப்பட்ட விஷயம் இல்லயா?.
அழுகை போல, சிரிப்பு போல, ஒவ்வொருவரின் கவிதையும் வெறும் வரியில்லை உணர்வை சிந்தும் இடம். இதென்னங்க ஒரு தப்பா??.

தங்கள் கருத்து ஏற்கத் தக்கதே...

அழுகை போல, சிரிப்பு போல, ஒவ்வொருவரின் கவிதையும் வெறும் வரியில்லை உணர்வை சிந்தும் இடம். இப்படி இல்லை என்றால் காதல் கவிதைகள் - தோல்விக் கவிதைகள் சாத்தியமே இல்லை என்பதும் உண்மை.

கவிதையில் உண்மை மட்டும் இருந்தால் போதாது. கவிதையும் தெய்வீக தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

ரௌத்திரன் அவர்களின் இந்தக் கவிதைதான் எம்மைப்போன்ற சிலரை வருந்தச் செய்துள்ளது. அவரின் மற்ற படைப்புகளைப் பாராட்டவே செய்துள்ளோம்.

கவிஞர் முறை தவறும்போது சுட்டிக்காட்டுவது தவறல்லவே...

தங்கள் அனைவரின் ஆரோக்கியமான விவாதத்துக்கு தோட்டம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

இனிமேல் தொடரம் விவாதங்களும்கூட படைப்பாளரைக் காயப்படுத்தாமல் கருத்துரைக்க வேண்டுகிறோம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by ரௌத்திரன் Thu Jul 19, 2012 12:00 pm

மன்னிக்க வேண்டும் தோழர் தோழியரே!

என்னை எவருடைய கருத்தும் காயப்படுத்திவிட முடியாது.

கல்லெறிந்தால் உடைந்துவிட இவன் ஒன்றும் கண்ணாடி அல்ல.

காற்று!

தவளைகள் சப்தமிட்டுத் தாமரை கருகிவிடாது.

தேக்கை அரிக்கும் வலிமை கறையான்களுக்குக் கிடையாது.

எச்சில் துப்பியா எரிமலை அணைந்துவிடும்?

விமர்சனங்களைக் கண்டு விழி பிதுங்குபவன் நானன்று!

இக்கவிதையை இனியும் எவர் வேண்டுமானாலும் தாராளமாக விமர்சிக்கலாம் பாராட்டலாம். பாராட்டுபவரை நான் நன்றியோடு பார்க்கிறேன். விமர்சிப்பவரை நான் மரியாதையோடு பார்க்கிறேன்.

நன்றி

-------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 37
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by sarunjeevan Thu Jul 19, 2012 3:15 pm

கவி கவிதா wrote:
sarunjeevan wrote:

பொறுப்ப்புள்ள கவிஞன் இப்படி ஒரு கவிதையை எழுதலாமா என்பது என் ஆதங்கம் [You must be registered and logged in to see this image.]

பொறுப்புள்ள கவிஞன் என்றால் என்ன?... சமூகம் சார்ந்த கவிதை மட்டுமே எழுதணுமா??... கவிதை ஒருவரின் தனிப்பட்ட விஷயம் இல்லயா?.
அழுகை போல, சிரிப்பு போல, ஒவ்வொருவரின் கவிதையும் வெறும் வரியில்லை உணர்வை சிந்தும் இடம். இதென்னங்க ஒரு தப்பா??.

கவிதா,

கவிதை ஒருவரின் தனிப்பட்ட விஷயம் இல்லையா?
எல்லாமே தனிப்பட்ட விஷயம் தான்.. பொது இடத்தில் பகிரபடாத வரை..

பொது இடத்தில் பகிரும் போது, கவிதையோ கதையோ,,,
விமர்சனத்திற்கு உள்ளாகிறது...

கவிஞன் தன் உணர்வுகளால் கவிதை எழுதி உள்ளேன்..
அதனால் விமர்சிக்கக்கூடாது என்பது கேளிக்கையாக இருக்கிறது..
இப்படி ஒரு கவிஞசனை அவமானப்படுத்துவது நீங்கள் தான்..[You must be registered and logged in to see this image.]

ரெளத்திரனின் கவிதைகளை நிறைய பேர் படிக்கிறார்கள்,,
அவரது கவிதைகளை படிப்பதால் விமர்சிக்கிறார்கள்,,

யாருமே படிக்கவில்லை எனில்,, இந்த விமர்சனத்துக்கு வேலையில்லை..
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by சதாசிவம் Thu Jul 19, 2012 5:31 pm

உங்களின் பின்னூட்டம் தங்களின் கவிதையை விமர்சிப்பவரின் பின்னூட்டத்தை பொருட்படுத்தவில்லையென்று தெரிகிறது. உதாசீனபடுத்தும் நிலையில் இதை மேலும் விவாதிப்பது வீண் செயல்.

மேலும் காலா நீ சற்றே அருகில் வா, உன்னை காலால் உதைப்பேன் என்று கூறிய கவிஞரின் கற்பனை வரியும் காலன் கரியின் காலால் அவரை உதைத்த நிதர்சனமும் தான் நினைவுக்கு வருகிறது.
சதாசிவம்
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by கலைவேந்தன் Thu Jul 19, 2012 9:31 pm

@ கவிதா..

தனது சொந்த உணர்வை எழுதிடத்தடையில்லை. ஆயினும் நெறிமுறை என்று ஒன்று உண்டல்லவா..?

நாளை நானோ இன்னொரு கவிஞனோ ஒரு தாசியிடம் முயங்கிய உணர்வினை அப்பட்டமாக நீலப்படம் போல் வர்ணித்து ஓர் கவிதை எழுதி அதைப் பொதுவிலும் பகிர்வாரெனில் அதை ஏற்றுக்கொள்ள இயலுமா..?

சாரு நிவேதிதாவை மீண்டும் உதாரணம் கொள்கின்றேன்.

அவர் தனது நாவலில் வேசியைப் புணர்ந்த நிகழ்வையும் இன்னும் அவரிடம் மயங்கிவிழுந்த பெண்களின் மோகத்தையும் அதை அனுபவித்த தனது லாஹிரிகளையும் விலாவாரியாகப்பகிர்ந்திருப்பார். அது ஏற்புடையதா என்றால் அறவே இல்லை. சர்ச்சைக்கு வேண்டுமானால் உதவக்கூடும்.

ஒரு நல்ல கவிஞன் சர்ச்சையால் புகழ்பெறவேண்டும் என விரும்பமாட்டான்.

நான் முன்பே கூறியபடி வாழ்வில் அனைவருக்குமே ஓர் இருண்ட பக்கம் உண்டு. ஏன் எனக்கும் உண்டு. அதற்காக என் உணர்வைப் பகிர்கிறேன் பேர்வழி என்று அப்பட்டமாக எழுதத்தொடங்கினால் அவன் நாலாந்தர கவிஞனாக மதிக்கப்படுவான்.

எந்த விடயமும் பொதுவில் வந்தால் நல்லவை எனில் போற்றப்படும்; அல்லவையெனில் தூற்றப்படும். இது உலக நியதி.

புரிதலுக்கு நன்றி.

கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by கவி கவிதா Thu Jul 19, 2012 9:41 pm

கலைவேந்தன் அய்யா..

உங்களுக்கு இந்தக் கவிதை ஏற்புடையது அல்ல என்பதை நான் ஏற்கிறேன்.. உங்களின் பொது நோக்கம் எனக்கு புரிந்தது

ஆனால் உங்களின் "கடுமையான விமர்சனம்" தான் என்னை இவ்வளவு பின்னூட்டம் போட வைத்தது.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 19, 2012 9:48 pm

தெளிவான விளக்கம்...

அவர் கவிதையில்,

என்
உள்மனம்
உதிர்த்த செய்தி!

"ராமனாகிவிட்டதாய்
ரொம்பப் பெருமைப் படாதே!
(என்பதோடு முற்றுபெற்றுவிட்டால் நாம் என்ன வேண்மானாலும் நினைத்து விரித்துரைத்துக்கொள்ளலாம்.)

அவள் நினைத்திருப்பாள்
"சீ!
இவன் ஆண்மகன் தானா?""

ஒ!
ராமன் எனில்
ஆண்மையற்றவனோ?
(அவள் விபச்சாரி என்பதற்காகவே அவள் இப்படித்தான் நினைத்திருப்பாள் என்று நாம் அவளைத் தவறாக நினைக்க வேண்டாமே.)

கவிதையை எங்கு எப்படி முடிக்க வேண்டும் என்பதை அந்தக் கவிஞன்தான் முடிவு செய்வான். வாசகன் பார்வையில் இந்தக் கவிதை நான் குறிப்பிட்டதோடு நிறுத்தியிருந்தால் நலம் என்று தோன்றுகிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ராமன் ஆண்மையற்றவன்!  Empty Re: ராமன் ஆண்மையற்றவன்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum