தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

2 posters

Go down

தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Tue Sep 18, 2012 10:50 pm

தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !

நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ஆதி .பாலசுந்தரன் .

வெளியீடு மருத்துவர் கு . சிதம்பர நடராஜன் . நாகர்கோவில் விலை ரூபாய் 70.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நாகர்கோவில் கவிதை உறவு அமைப்பின் சார்பில் நாகர்கோவிலில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு கலை மாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன் , தமிழ்த்தேனீ இரா .மோகன், தமிழ்ச்சுடர்
நிர்மலா மோகன் ,கவிஞர் திருநாவுக்கரசு மற்றும் நானும் கலந்து கொண்டோம்
.இந்த நூலை தமிழக வனத்துறை அமைச்சர் பச்சைமால் அவர்கள் வெளியிட்டார்கள்
.வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது .விழா ஏற்பாட்டை
மருத்துவர் கு . சிதம்பர நடராஜன் செய்து
இருந்தார்கள்
.
நாகர்கோவில் மருத்துவர் கு . சிதம்பர நடராஜன் அவர்கள் சேவைச் செம்மல்
குற்றாலிங்கம் - மீனாட்சி அம்மாள் அறக்கட்டளை நிறுவி , அதன் மூலம் இந்த
நூலை வெளியிட்டு , "இந்தப் புத்தக விற்பனைத் தொகை அறக்கட்டளை நிதியுடன்
ஏழை மாணவர் கல்வி மேம்பட உதவும் " என்ற அறிவிப்பு
ம் நூலில் பதிவு செய்துள்ளார்கள் .பாராட்டுக்கள் .நூல்
ஆசிரியர் தமிழ் அறிஞர் ஆதி .பாலசுந்தரன் அவர்களின் ஒப்பற்ற உழைப்பை உணர
முடிகின்றது .குமரி மாவட்ட பெயர்கள் ஆய்வு செய்து நூல் எழுதி உள்ளார்கள்
.தமிழின் பெருமையைப் பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .
தமிழுக்கு உரம் சரக்கும் நூல் இது. தமிழருக்கு பெருமை சேர்க்கும் நூல்
இது . ஊரின் ஒவ்வொரு பெயரும் காரண காரியங்களுடன் அமைத்துள்ளது என்பதை
இலக்கிய
ச் சான்றுகளுடன் எழுதி உள்ளார் .

" வேண்டுமென்றே மறைக்கப்பட்டும் உச்சரிப்புப் சோம்பலால் சிதைத்தும்
,அழித்தும் மனம் போனவாறு திரித்தும் ,கற்பனைக் கதைகளின் அடிப்படையிலும்
தொடக்க கால
த் தமிழ் பெயர்களை அறவே மாற்றினர். நடு
+ஆலம் = "நடுவாலம் "என்பதை "நட்டாலம்" என எழுதுகின்றனர் . ( NATALAM )என
ஆங்கிலத்தில் எழுதி தமிழில் உச்சரிப்பதால் ஏற்பட்ட விளைவு .


இந்த தகவலை நூலில் படித்தவுடன் மதுரையில் இதுபோன்று நிகழ்ந்துள்ள தகவல்
என் நினைவிற்கு வந்தது .மழை நீர் எவ்வளவு வந்தாலும் வெளியே தள்ளாத குளம்
என்பதால் தல்லாகுளம் என்று இருந்ததை ஆங்கிலேயர் ஆங்கிலத்தில் ( TALLAKULAM )
என்று எழுதியதை
உச்சரித்து இன்று தல்லாகுளம் என்று ஆகி விட்டது .

மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர் " ஊர் மெச்சிய குளம் " நல்ல
தமிழ்ப்பெயர் ஊமச்சிகுளம் என்றாகி விட்டது .நூல் படிக்கும் வாசகர்கள்
அனைவருக்கும் அவரவர் ஊர்களில் நடந்த இது போன்று நினைவிற்கும் வரும் .
இடப் பெயர் ஆய்வை மிக நுட்பமாக நிகழ்த்தி உள்ளார் .நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர்
ஆதி .பாலசுந்தரன்.


ஊர்ப் பெயர்கள் ; குறிச்சி ,ஊர் ,குடி ,பாடி ,சேரி , கோடு,பட்டினம்
,பாக்கம் ,காவு ,காடு ,கா என்றெல்லாம் ஊர்களுக்குப் பொதுப் பெயர் இட்டு
வழங்கினர் .நிலங்களுக்கு ஏற்ற வகையில் இப்பெயர்கள் அமைத்தனர். இவை
இடுகுறிச் சிறப்புப் பெயர்களாக அமைந்தன .நூல் முழுவதும் பல அரிய தகவல்கள்
உள்ளது .


கல் + ஆலம் + குடி = "கல்லாலங்குடி" என்பது பேச்சு வழக்கில் கல்லாங்குடி என்றானது.
இடை + ஆலம் + குடி = இடை ஆலக்குடி , "இடையாலக்குடி " என்பதை "இடலாக்குடி ","எடலாக்குடி" என்றானது .


ஆலமரப் பெயர் ஊர்கள் ; ஆலமரப் பெயர் கொண்ட பல ஊர்கள் தமிழ்நாட்டில் உள்ளன .
ஆலம்பாறை ,ஆலங்கோடு ,ஆல
ஞ்சோலை ,ஆலம்பாடி , ஆலங்கானம்
,ஆலந்துறை ,ஆலவாய், ஆலம்பொழில் ,ஆலடியூர் ,ஆலடிப்பட்டி ,ஆலங்குளம் என்பன .
இந்தத் தகவ
லைப் படித்ததும் உடன் என் நினைவிற்கு வந்தது . மதுரைக்கு ஆலவாய்
என்ற பெயர் உண்டு .மதுரை அருகே
ஆலங்குளம் என்ற ஊர் இன்றும் உள்ளது .

குமரி மாவட்டத்தில் ஆல் + ஊர் = ஆலூர் என்பது ஆளூர் ஆனது .
குறுமை + ஆலம் = குற்றாலம் .

நூல் ஆசிரியர் ஆதி .பாலசுந்தரன் அவர்கள் தமிழ் அறிஞர் என்பதால்
தொல்காப்பியம் , சங்க இலக்கியம் போன்றவற்றில் இருந்து பாடல்களின்
சான்றுகளுடன் நூல் எழுதி பிரமிக்க வைத்துள்ளார் .


கள்ளியங்காடு என்னும் சங்ககாலக் காட்டுப் பெயர் ,அப்படியே இங்கே
சொல்லப்படுவது குமரியின் தொன்மைக்கு மேலும் ஒரு சான்றாகும் ." பரல் கல்
விளை "
என்னும் ஊர்ப் பெயரை
பேச்சுவழக்கில் "பறக்கை" எனச் சொல்கிறார்கள் .

குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டு வகைகளில் ஒன்று இணையம் என்பது , சங்ககால
ப் பெயர் . (VEGITATION SURVEY, BIOMASS )என இப்போது தாவர அறிவியலில் கூறப்படும் செய்திகளை நம் முன்னோர், அவர்களின் அனுபவத்திற்கு ஏற்ப அறிந்து இருந்தனர் .இப்படி பல அறிய தகவல்கள் நூலில் உள்ளது .


"ஊறல் வாய் பொழில்" என்ற நல்ல தமிழ்ப் பெயர் இன்று "ஊரல்வாய்மொழி " என்றானது .

குறும்பனை ,ஏழ்தெங்கு, அஞ்சுதெங்கு ,ஒற்றைத்தெங்கு ஆகிய குமரிக்கண்டம் சார்ந்த ஊர்கள் இப்போதும் குமரி மாவட்டத்தில் உள்ளன .

தமிழகத்தில் திருநின்றவூர் சென்னைக்கு அருகில் உள்ளது .
திருநின்றவூர் எனற இதே
பெயரில் காஸ்மீரத்தில் ஒரு ஊர் இருந்தது .வட மொழி வழக்கிற்கு ஏற்ப
ஸ்ரீநகர் ஆனது .இமயம் முதல் குமரி வரை தமிழர்களே வாழ்ந்தார்கள் , ஆண்டார்கள்
என்பதை உணர்த்தும் மிக நல்ல ஆய்வு .பாராட்டுக்கள் .

கேரளத்தின் கடற்கரையிலும் "அலை வாய் " என்னும் ஊர் உள்ளது .இதனை ( ALWAY ) என ஆங்கிலத்தில் எழுதியதன் விளைவாக ஆல்வே ,ஆல்வாய் என வழங்கப் பட்டு விட்டது .
ஆய்வில் குமரி மாவட்டம் மட்டும் ஊர்ப் பெயர் எழுதி உள்ளார்கள் .விரைவில் தமிழகம் முழுவதற்குமான ஊர்ப் பெயர் ஆய்வு செய்து எழுத வேண்டும் .அந்த நூலையும் மருத்துவர்
கு . சிதம்பர நடராஜன் அவர்கள் வெளியிட்டு உதவ வேண்டும் என்ற
வேண்டுகோளையும் வைக்கின்றேன் .இந்த நூல் படித்து முடித்தவுடன் எனக்கும்
ஆய்வு உள்ளம் மலர்ந்தது .எள் + நெய் = எண்ணை
.எனவே எள்ளில் இருந்து வரும் எண்ணையைத்தான் எண்ணை என்று சொல்ல வேண்டும் .தேங்காய் + நெய் = தேங்காய்நெய் ஆனால் நாம் தேங்காய் எண்ணை என்று சொல்கிறோம். கடலை + நெய் =கடலைநெய்.ஆனால் நாம் கடலைஎண்ணை என்று சொல்கிறோம்.

இனி வரும் காலங்களில் காரண காரியம் அறிந்து வைத்துள்ள நல்ல தமிழ்ப்
பெயர்களை .அதன் உண்மையான பொருளிலேயே அழைப்போம் .எழுதுவோம் .பாராட்டுக்குரிய நூல் .பயனுள்ள நூல் .
நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ஆதி .பாலசுந்தரன் அவர்களுக்கும் , வெளியிட்டு உதவிய
மருத்துவர் கு . சிதம்பர நடராஜன்
அவர்களுக்கும் பாராட்டுக்கள் .
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  Empty Re: தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Sep 21, 2012 10:49 am

தெரிந்த ஊரும் தெரியாத பெயரும் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  596549
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum