தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அதே கண்கள்..

2 posters

Go down

அதே கண்கள்.. Empty அதே கண்கள்..

Post by udhayam72 Sun Jun 02, 2013 11:20 am

அதே கண்கள்...
(புவனா கோவிந்த்)



[You must be registered and logged in to see this link.]


"சுமி.... ஏய் சுமி... தட்டை பாத்து சாப்பிடு... சுமி...கூப்டுட்டே இருக்கேன்... காதுல விழுதா பாரு" என சுமேதாவின் அம்மா சுசிலா அழைக்க அப்படியும் ஏதோ நினைவில் இருந்தாள் சுமி

"சுமி... " என அவள் அண்ணன் சுரேஷ் அவள் தோளை பற்றி உலுக்க நினைவில் இருந்து மீண்டாள் சுமேதா

"என்ன? என்ன ஆச்சு?" என மலங்க மலங்க விழித்தவளிடம்

"அத நாங்க கேக்கணும்" என்றாள் சுசிலா கேலியான குரலில்

"கேக்கறதுக்கு என்னமா இருக்கு. கல்யாணம் நிச்சியம் ஆகி இந்த ரெண்டு மாசத்துல மேடம் பாதி நேரம் வேற உலகத்துல சஞ்சாரம் தானே..." என கிண்டலாய் சிரித்தான் சுரேஷ்

சுமி முகம் சிவக்க "அதெல்லாம் ஒண்ணும் இல்ல...போண்ணா... " என சிரித்து மழுப்பினாள்

"டேய்.... சும்மா இரு சுரேஷ்....ஏன் அவளோட வம்பு பண்ற" என மகளுக்கு பரிந்து பேசினார் அப்பா சுந்தரம். அதே நேரம் மகள் முகத்தில் ஓடிய குழப்ப ரேகையை கவனிக்க தவறவில்லை

அதை கூறி எல்லோரையும் கலவரப்படுத்த மனமின்றி அப்புறம் கேட்டு கொள்ளலாம் என விட்டுவிட்டார். ஒருவேளை அப்போதே கேட்டிருந்தால்
பல விபரீதங்களை தவிர்த்து இருக்கலாமோ என்னமோ...

________________

"ஹலோ சுமி"

கணவனாக போகிறவனின் அன்பு குரலில் மனம் குதூகலிக்க "சொல்லுங்க சூர்யா" என்றாள்

"என்ன பண்றீங்க மேடம்? காலைல இருந்து போனே காணோம்"

"ம்...ஏன்? நீங்க பண்ணினா என்னவாம்"

"ஓ... நான் கூபிடறேனா இல்லையான்னு டெஸ்ட் பண்றீங்களோ" என சிரிப்பு வழிய கேட்க அவன் உற்சாகம் தன்னையும் தொற்றிக்கொள்ள

"ம்... அதே தான்" என்றாள் சிரிப்பை அடக்க முயன்று

"அடிப்பாவி... கல்யாணத்துக்கு அப்புறம் உன்கிட்ட என்னவெல்லாம் படப்போறேனு தெரியலையே" என போலியாய் பயந்தது போல் பேச

"அப்படியா .... அப்போ வேற பொண்ணு பாருங்களேன்... எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லப்பா" என்றாள் கிண்டலாய்

"வேற பொண்ணா? எந்த பொண்ண பாத்தாலும் இப்பவெல்லாம் இந்த பொண்ணு முகத்த மாஸ்க் போட்ட மாதிரி தானே தெரியுது ... என்ன செய்ய? பொண்ணு பாக்க வந்த அன்னைக்கே மொத்தமா விழுந்துட்டனே கண்மணி" என காதல் மொழி பேசினான் சூர்யா

"ஆஹா...போதுமே...எனக்கு ஏற்கனவே பயங்கர கோல்ட்...ஹச்...." என கிண்டல் செய்தாள் சுமி

"நேரம் தான்... உன்ன நேர்ல பாக்கறப்ப கவனிச்சுகறேன்...." என்றவன் "சரிடா, கொஞ்சம் வேலை இருக்கு அப்புறம் பேசறேன்" என துண்டித்தான்

சூர்யாவுடன் பேசிய உற்சாகத்தில் ஏதோ பாட்டை முணுமுணுத்தபடி இருந்தாள்

சற்று நேரத்தில் மறுபடியும் கைபேசி அலற சூர்யா தான் மறுபடியும் அழைக்கிரானென தோன்ற யாருடைய நம்பர் என்று கூட பார்க்காமல் "ஹலோ..." என்றாள் சந்தோசமாய்

எதிர்முனை பேசியதில் கொஞ்சநேரம் முன்பு இருந்த சந்தோச மனநிலை முற்றிலும் மாற தலையணையில் முகம் புதைத்தாள்

_______________________

"என்ன சுமி ஏன் என்னமோ போல இருக்க. நானும் நேத்துல இருந்து பாத்துட்டு தான் இருக்கேன்" என சுசீலா மகளின் சோர்ந்த முகம் கவலையூட்ட கேட்டாள்

"ஒண்ணும் இல்லம்மா" என சிரித்து மழுப்பினாள்

"அம்மா...அது என்ன காரணம்ன்னு எனக்கு தெரியும்" என்றான் சுரேஷ் தங்கையை பார்த்து

என்ன என்பது போல் மொத்த குடும்பத்தின் பார்வையும் அவன் மீதே பதிந்தது

"ஒருவேளை போன்ல பேசினத அண்ணா கேட்டிருப்பானோ" என தோன்ற சுமேதாவின் இதயம் மிக வேகமாக அடித்து கொண்டது

ஆனால் அப்படி இருந்தால் இத்தனை நேரம் இப்படி தன்னிடம் சாவகாசமாய் பேசிகொண்டிருக்க மாட்டான் என்பது உரைக்க என்ன சொல்கிறான் என்பதை கேட்பதில் கவனமானாள்

"இன்னிக்கி காலைல மாப்பிள்ளை கிட்ட வேற ஒரு விசியமா பேச கூப்டப்ப சொன்னாரு. மூணு நாள் ஆபீஸ் விசியமா வெளியூர் போறாராம் இன்னிக்கி. அதான் சுமேதா அவர்களின் சோகத்தின் ரகசியம். சரிதானே தங்கையே..." என ஏதோ அந்த கால சினிமா வசனம் போல் சுரேஷ் கூற

"மூணு நாள் தானே சுமி... அதுக்கே இப்படி சோகமா" என சுசிலாவும் மகளை கேலி செய்தாள்

என்ன சொல்ல போகிறானோ என பயந்திருந்த சுமேதா தன் முகத்தில் தோன்றிய நிம்மதி உணர்வை மறைக்க தலை குனிந்தாள்

அதை மகளின் வெட்கம் என அர்த்தம் செய்து கொண்ட பெற்றோர் பெருமிதத்தில் மகிழ்த்தனர்

மகளுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுத்து விட்டோம் என்ற நிம்மதி அந்த பெருமிதத்தில் தெரிந்தது

தன் சிறு கலக்கத்தை தாங்காமல் விசாரிக்கும் குடும்பத்தினரிடம் எத்தனை பெரிய விசியத்தை மறைக்கிறோம் என குற்ற உணர்வு தோன்ற சொல்லிவிடலாம் என இமை உயர்த்தியவள் தன் தந்தையின் உடல் நிலை நினைவு வர மௌனமானாள்

ஆறு மாதம் முன்பு திடீரென சுந்தரம் நெஞ்சு வலியால் துடிக்க பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டியதானது. அதன் பின் தான் இவள் ஜாதக கட்டை எடுத்ததே

கொஞ்ச நாள் போகட்டுமென சுமேதா தள்ளி போட முயன்றதை யாரும் ஏற்கவில்லை. ஏற்றிருந்தால் அதற்குள் தன் இன்றைய பிரச்சனையின் நிலைமை சீராகி இருக்குமோ என தோன்றியது அவளுக்கு

அம்மாவை பற்றி சொல்லவே வேண்டாம் எப்போதும் இளகிய மனம்

அண்ணாவிடம் தனியே சொல்லலாமா என நினைத்தவள் சுரேஷின் கட்டுப்படாத முன் கோபம் நினைவுக்கு வர மனம் நொந்தாள்

"பேசாமல் சூர்யாவிடமே பேசினால் என்ன, பெண் மனதை புரிந்து கொள்ள முடியாதவன் இல்லையே. எத்தனை நாள் தான் மனதில் உள்ளதை மறைத்து சந்தோசமாய் இருப்பது போல் நடிக்க இயலும்" என தோன்ற அதுவே சரியன முடிவுக்கு வந்தாள்

மறுநொடியே, அப்படி அவனிடம் கூறினால் அதனால் ஏற்படக்கூடிய விபரீதங்கள் கண் முன் தோன்ற செய்வது அறியாமல் திகைத்தாள்...
மறுநாள் ஏதோ ஆடை வாங்கவென கடைவீதிக்கு சுமி தன் அன்னையுடன் சென்றாள். சிறிது நேரத்தில் ஏதோ கண்கள் தன்னை தொடர்வது போல உள்ளுணர்வு உறுத்த அந்த திசையில் பார்த்தவள் ......

அதே கண்கள்................................ தொடர துணுக்குற்றாள்....

முகத்தின் முகவரி கண்கள்
காதலின் முகவரி இதயம்
கண்கள்வழி பயணித்து
காதல் முகவரி கண்டேனடி!!

பாதை மிக சுகமே
பயணம் சில கணமே
ஒய்ந்து அமர உணர்ந்தேன்
ஒரு வழிபயணம் அதுவென!!


ஒரு கணம் தன் அருகில் இருக்கும் அம்மா தன்னை கவனித்து இருப்பாரோ என பதறியவள் அவர் பூக்காரியுடன் பேரம் பேசி கொண்டு இருப்பதை பார்த்து நிம்மதி ஆனாள் சுமேதா

அந்த சந்தடி நிறைந்த கோவை மாநகரின் கிராஸ் கட் ரோட்டில் அந்த கண்களை மீண்டும் தேடினாள்

"அம்மா நீ பூ வாங்கிட்டு இரு...நான் ஒரு நிமிஷம் வந்துடறேன்" என்றவள் அவள் அம்மாவின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அந்த கண்களின் திசையில் சென்றாள்

___________________

"எங்க சுமேதா போன வெயில்ல இப்படி நிக்க வெச்சுட்டு? எவ்ளோ நேரம் ஆச்சு"

"இல்லமா....இங்க தான்...கடைக்கு...." என்று ஏதோ உளறினாள்

"சரி சரி....சீக்கரம் வா. ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ்ல ஒரு blouse எடுக்கணும். இன்னும் கொஞ்சம் போன கடைல கூட்டம் ஆய்டும்" என துரிதபடுத்தினாள் சுசீலா

____________________

"என்ன சுமி. எப்பவும் என்னோட காதை puncture பண்ற மாதிரி லொட லொடன்னு பேசிட்டே இருப்ப. இன்னிக்கி அமைதியா இருக்க. ஏண்டா ஒடம்புக்கு எதுனா சரி இல்லையா" என காதலும் கவலையுமாய் கேட்டான் சூர்யா

அன்னபூர்ணா உணவகத்தின் பாமிலி ரூமின் ஏசி குளிரையும் மீறி வியர்த்தது சுமேதாவுக்கு

"இல்லையே...நான் எப்பவும் போல தான் இருக்கேன்" என சிரிக்க முயன்றாள் சுமேதா

"இல்ல...நீ எப்பவும் போல இல்ல.... நான் மூணு நாளு தானே ஊர்ல இல்ல அதுக்கே கோபமா இல்ல கல்யாண பயமா?" என சிரித்து கொண்டே கேட்டான்

"கல்யாண பயம் உங்களுக்கு தான் வரணும்...எனக்கு என்ன?" என்றாள் இயல்பாய், பேச்சை திசை மாற்றும் பொருட்டு

"அடிப்பாவி...அப்போ என்னை torture பண்ண நெறைய பிளான் போட்டு வெச்சு இருக்கியா?"

"ம்... கல்யாணம் நிச்சியம் ஆன அடுத்த நாளே 80 பக்க நோட் ஒண்ணு வாங்கி எழுத ஆரம்பிச்சுட்டேன்... கிட்ட தட்ட நோட் தீந்து போச்சு...." என அபிநயத்துடன் கை விரித்து சொல்ல அதை ரசித்தவன்

"ஆஹா...ஆளை விடு தாயே" என பயந்தது போல் நடித்தான்

____________________

"ஹலோ......நான் சுமேதா பேசறேன்"

"......."

"ம்...ஒகே...அப்படியே செய்யறேன்"

"........"

"ஆனா....கொஞ்சம் பயமா இருக்கு"

"........"

"ம்... உன்ன தான் நம்பி இருக்கேன்...."

"......."

"ஒகே வெச்சுடறேன்" என சொல்லி திரும்பியவள் தன் அம்மா அவள் அறை வாயிலில் நிற்பதை கண்டதும் இதயம் வேகமாக அடித்து கொண்டது சுமேதாவுக்கு

"என்ன சுமி...யாரு போன்ல? என்ன ஏதோ பயமா இருக்கு...உன்ன தான் நம்பி இருக்கேன்னெல்லாம் சொல்லிட்டு இருந்த" என பதட்டத்துடன் கேட்க

"அ...அ....அது....ஒண்ணுமில்லமா....என் friend திவ்யா தான். அது...கல்யாணத்துக்கு பியுட்டி பார்லர் அவ தானே சொல்லி இருந்தா...அந்த லேடிக்கு அன்னிக்கி வேற ஏதோ முக்கியமா ஒரு appointment னா....அதான் கடைசி நேரத்துல இப்படி சொன்னா எப்படி? பயமா இருக்கு...உன்ன தான் நம்பி இருக்கேன்ன்னு சொல்லிட்டு இருந்தேன்" என ஒருவாறு தன் அம்மாவிடம் சமாளிப்பதற்குள் சுமேதாவிற்கு முகம் வியர்த்து போனது

"பாத்து சுமி...வேற யாராச்சும் கிட்ட கூட சொல்லி வெய்யி" என சுசீலா சொல்லி சென்றார்

"கடவுளே....கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தானே இருக்கு...எப்படி சமாளிக்க போறேன்" என சுமேதா மனதிற்குள் புலம்பினாள்

___________________

அன்று... திருமண நாள்.... கோவையின் பிரபலமான ராமகிருஷ்ண திருமண மண்டபம் விழாக் கோலம் பூண்டு இருந்தது

"என்ன கல்யாண பொண்ணே...செம டென்ஷன்ஆ இருக்க? நியாயத்துக்கு மாப்பிள்ளை தானே டென்ஷன் ஆகணும்" என தோழிகளின் கேலியில் இயல்பாய் சிரிக்க முயன்று தோற்றாள் சுமேதா

அதற்குள் "முஹுர்த்ததுக்கு நேரமாச்சு...பொண்ண அழச்சுண்டு வாங்கோ" என ப்ரோகிதர் குரல் கொடுக்க மணப்பெண்ணை மணவறைக்கு (கல்யாண பந்தல்) அழைத்து சென்றனர்

மணமேடையில் அமர்ந்த சுமேதாவின் கண்கள் கூட்டத்தில் யாரையோ தேடியது

சுமேதாவின் குழப்பமான முகம் மணமகன் சூர்யாவை அமைதி இழக்க செய்ய "சுமி" என்றான் மெல்லிய குரலில்

அவன் அழைப்பில் கவனம் மாறி முகத்தில் வலிய புன்னகையை மாட்டி மணப்பெண்ணாய் தலை குனிந்தாள் சுமேதா

"கெட்டி மேளம் கெட்டி மேளம்" என ப்ரோகிதர் கூற சுமேதாவின் கழுத்தில் சூர்யா மங்களநாண் அணிவித்தான்

சுற்றமும் நட்பும் கண்கள் பனிக்க ஆசீர்வதிக்க ஒரு ஜோடி கண்கள் மட்டும் அந்த காட்சியை ரசிக்கும் மனநிலையின்றி பதட்டத்துடன் அலைபாய்ந்தது.....
"பெண்ணே சமத்து....பத்தாவது மாசம் தொட்டில் கட்டிடணும், என்ன?" என மூத்த தலைமுறையும்

"பாத்துடி....மாப்பிள்ளை பயந்துட போறார்" என தோழிகளும் கேலி செய்ய எல்லாவற்றிற்கும் வெட்கப்படுவதை போல் நடித்து தலை குனிந்து சமாளித்தாள் சுமேதா

அதே சமயம் "அக்கா உனக்கு போன்" என தொலைபேசியை அவள் கையில் திணித்து விட்டு போனது ஒரு வாண்டு

"இந்த நேரத்துல என்ன சுமி போன்? சரி சரி... சீக்ரம் பேசிட்டு வெய்யி" என்றாள் சுசீலா

"ஹலோ...." என்றாள் நடுங்கும் குரலில்

"....."

மறுமுனை என்ன கூறியதோ, முகம் வியர்க்க கண்கள் பனிக்க உடல் நடுங்க குளியல் அறைக்குள் தஞ்சமானாள் சுமேதா

______________________

ஆவலுடன் மனைவியை எதிர்நோக்கி காத்திருந்த சூர்யா, அறைக்குள் வந்த சுமேதாவின் முகம் வெளிறி இருந்ததை கண்டு குழப்பமானான்

"என்ன ஆச்சு சுமி? ஏன் இப்படி இருக்க?" என பதட்டத்துடன் கேட்க

"அ....அது...ரெம்ப தலைவலியா இருக்குங்க" என்றாள் கேள்விகளுக்கு முற்றுபுள்ளி வைக்க

"அப்படியா... காலைல இருந்து வீடியோ லைட் அடிச்சுட்டே இருந்ததல்ல... உனக்கு சேரலைன்னு நெனைக்கிறேன். உன் கண்ணு கூட சிவப்பா இருக்கு... சரி நீ ரெஸ்ட் எடு சுமி" என்றான் அக்கறையாய்

அவனது புரிந்துணர்வும் அக்கறையும் சுமேதாவின் குற்ற உணர்வை மேலும் அதிகமாக்கியது

அந்த இரவு பல ரகசியங்களை தன்னுள் தேக்கி கொண்டே உறங்கியது

________________________

மறுநாள் மறுவீடு செல்ல மாமியார் வீட்டுக்கு கிளம்பினாள் சுமேதா

"மாமா நாங்க அந்த வீட்டுக்கு போயிட்டு அப்படியே ஊட்டி போறோம் சாயங்காலம். வெள்ளிக்கிழமை வந்துடறோம்" என சூர்யா சுமேதாவின் அப்பாவிடம் கூறிக் கொண்டு இருந்தான்

"சரிங்க மாப்ள... பாத்து பத்திரமா டிரைவ் பண்ணுங்க" என்றார் தந்தைக்கே உரிய அக்கறையுடன்

"ஏய்....சுமி...இன்னும் கிளம்பலையா நீ. மாப்ள வண்டில ஏறியாச்சு" என தங்கையை துரிதப்படுத்தினான் சுரேஷ்

"ஏண்டா அவள வெரட்டற. நானே கிளம்பராளேன்னு கவலையா இருக்கேன்" என சுசீலா கண்ணில் நீருடன் சொல்ல அதுதான் சாக்கென சுமேதா அன்னையை கட்டி கொண்டு அழுதாள்

அவள் அழும் காரணம் வேறு என அங்கு யாருக்கும் புரியாதது தான் வேதனை

"சரிம்மா நான் வரேன்...வரேண்ணா... அப்பா வரேன்...." என எல்லோரிடமும் கடைசியாய் விடை பெறுவது போல் பலமுறை சொல்லி சென்றாள் சுமேதா.....

__________________

புதுமனைவியை ஓர கண்ணில் ரசித்தவாறே கார் ஓட்டினான் சூர்யா

"சுமி... தலைவலி இப்போ ஒகேவா? மாத்திரை எதுனா வாங்கனுமா"

"இல்லைங்க...இப்போ பரவால்ல" என தலை குனிந்தாள்

"ஏய்...இப்போ நாம ரெண்டு பேரு தானே இருக்கோம்.... நேத்து கல்யாண மண்டபத்துல மாதிரியே இன்னும் தலை குனிஞ்சுட்டே இருக்க..." என்ற அவன் சீண்டலில்

"அப்படி எல்லாம் இல்ல..." என சிரித்தாள்

மேம்பாலம் தாண்டி சாய்பாபா கோவில் சிக்னலில் வண்டி நிற்க வெளியே வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்தாள் சுமேதா

அப்போது.... சிக்னலில் எதிர்புறம் இருந்த வண்டியில் இருந்த ஒரு உருவம் அவள் கண்ணில் பட சிலையானாள்...

சிக்கனம் தான்நானும்
சிலையாய் உனைவடிப்பதில்
இக்கணம்நீ வேணும்
இனிவாழும் நாள்வரை

தன் முகமாற்றத்தை கணவன் கண்டு கொண்டானோ என அவனறியாமல் அவனை கண்டவள் அவன் சாலையில் கவனம் செலுத்தியதில் நிம்மதியானாள்

சிக்னலின் மறுபுறம் நின்ற உருவம் ஏதோ சைகை காட்ட தலை குனிந்தாள்
_____________________

"சுமி.... வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி எங்க காலேஜ் பாத்துட்டு போலாமா?"

"......" குழப்பத்தில் லயித்து இருந்தவள் எதுவும் பேசாமல் இருக்க

"ஏய்... சுமி... என்ன இப்பவே ஊட்டி போயிட்டியா?" என கேலியாய் சிரிக்க

"ம்... இல்ல...."என சிரித்து சமாளித்தாள்

"வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி எங்க காலேஜ் பாத்துட்டு போலாமானு கேட்டேன்?"

"ம்....எந்த காலேஜ்?"

"கிழிஞ்சது போ... ரெண்டு மாசமா பேசினது எல்லாம் மறந்து போச்சா மேடம்க்கு"

"இல்ல...அது.... " என பேச இயலாமல் விழிக்க

"சரி விடு... நான் சொன்னது நான் UG பண்ணின கொங்கு நாடு ஆர்ட்ஸ் காலேஜ். அது ஒரு கனா காலம் தான். காலேஜ்ல ஐய்யா தான் ஹீரோ தெரியுமா... பொண்ணுங்க எல்லாம் சுத்தி சுத்தி வருவாங்க தெரியுமா?" என காலர் தூக்கி கண்ணடித்து விசிலடித்து கொண்டே கூற

"ஒரு வேளை இவனுக்கு ஏதேனும் காதல் கதை இருக்குமோ... என் நிலைமை சொன்னால் புரிந்து கொள்வானோ. சொல்வதா வேண்டாமா" என மனதினுள் பட்டிமன்றம் நடத்தினாள் சுமேதா

அவளின் முக மாற்றத்தை அவன் "பொண்ணுங்க எல்லாம் சுத்தி சுத்தி வருவாங்க"னு சொன்னதுக்கான முக மாற்றம் என நினைத்து கொண்ட சூர்யா

"ஏய்... நான் சும்மா உன்னை வம்பு இழுக்கறதுக்காக சொன்னேன். டென்ஷன் ஆய்டியா?" என சமாதானம் செய்தான்

"இல்ல... ஒண்ணுமில்ல" என சுமேதா சமாளித்து "காலேஜ் போலாமே...நீங்க சொன்ன மாதிரி" என்றாள்

"ம்... ஒகே.. " என்றவன் கல்லூரிக்கி முன் பக்கம் இருந்த இடத்தில் காரை பார்க் செய்து விட்டு இறங்க வாட்ச்மேன் எழுந்து வந்தார் "யாரை பாக்கணும் நீங்க?" என்றார் கரகர குரலில்

"இல்லங்க... நான் இங்க தான் படிச்சேன்... அப்போ சுந்தரம் அண்ணன் தான் வாட்ச்மேன்ஆ இருந்தாரு. சும்மா இந்த வழியா வந்தோம்... என்னோட wife க்கு காலேஜ் காட்டலாம்னு வந்தேன்" என சூர்யா உரைக்க

"ஓ... சரிங்க தம்பி... முன்னாடியே நின்னு பாத்துட்டு போங்க... இப்ப university ஆனப்புறம் கொஞ்சம் செக்யூரிட்டி tight " எனவும்

"ஒண்ணும் பிரச்சனை இல்லைங்ண்ணா... இங்கயே நின்னு பாத்துக்கறோம்" என்றான் சூர்யா

"சுமி... இந்த மரம் எல்லாம் இருக்கில்ல... இங்க தான் எப்பவும் அரட்டை கச்சேரி நடக்கும். செம ஆட்டம் போடுவோம்" என பழைய நினைவுகளில் கண்கள் பளிச்சிட கூறினான்

அவன் சந்தோசத்தில் தானும் மகிழ்ந்தவள் "ஓ.... அப்போ படிக்கற வேலை எல்லாம் இல்லையா?" என கிண்டல் செய்ய

"ஏய்... " என செல்லமாய் முறைத்தான்

இன்னும் பல கல்லூரி கால சம்பவங்களை சொல்லி கொண்டே வந்தான் சூர்யா

அவனது உற்சாகத்தை கண்ட வாட்ச்மேன் மனம் இறங்கி "தம்பி... வேணா இன்னும் கொஞ்சம் உள்ள வரைக்கும் போங்க... நான் சொல்லிக்கறேன்" என்றார்

"தேங்க்ஸ்ங்ண்ணா..." என ஒரு சல்யூட் வைத்து உள்ளே சென்றான்


"இதான் சுமி மெயின் பில்டிங். ஆபீஸ் எல்லாம் இங்க தான் இருக்கும்" பேசிக்கொண்டே வந்தவனை செல்போன் ஒலி தடை செய்ய

"வீட்டுல இருந்து போன்" என சுமியிடம் கூறியவன்

"ஹலோ" என்றான் பேசியில்

"...."

"வந்துட்டு இருக்கோம்மா... அதுக்குள்ள காலேஜ்ல நிறுத்தினேன்... "

"....."

"இன்னும் பத்து நிமிஷம் தான் வந்துடுவோம்....சரிம்மா" என செல்போனை அணைத்தவன்

"அம்மா கெளம்பி ரெம்ப நேரம் ஆச்சே காணோம்னு டென்ஷன் ஆய்டாங்க போல...சரி சுமி கிளம்பலாம்... இன்னொரு நாள் ரிலாக்ஸ்ஆ வரலாம்" என்றவனை பின் தொடர்ந்தாள் சுமேதா...
"வாம்மா மருமகளே... வலது கால் எடுத்து வெச்சு உள்ள வா" என ஆரத்தி சுற்றி மணமக்களை வரவேற்றாள் சூர்யாவின் அன்னை

"அதான் நேத்திக்கே சுத்தியாச்சே இதெல்லாம்... இப்பவும் சுத்தனுமா ம்மா" என அன்னையை கேலி செய்தான் சூர்யா

"போடா...உனக்கு வேற வேலை இல்ல... என்கிட்ட வம்பு பண்ணிட்டு... மறுவீடு வர்ரப்பவும் ஆரத்தி சுத்தறது தான்... நீ உள்ள வாம்மா" என்றாள் சுமேதாவிடம்

விருந்து முடிந்து சற்று நேரம் உண்ட களைப்பில் இளைப்பாறிய பின் மணமக்கள் தேனிலவுக்கு புறப்பட்டனர்
___________________

மேட்டுப்பாளையம் தாண்டி அழகிய பச்சை நிற வயல்களின் அழகில் எல்லாம் மறந்து உற்சாகமானாள் சுமேதா

"வாவ்... ரெம்ப அழகா இருக்குங்க இந்த இடம்"

"நீ ஊட்டி போனதில்லையா சுமி"

"கோயம்புத்தூர்ல இருந்துட்டு ஊட்டி போகாம இருப்பாங்களா? இந்த வயல் வெளி ரெம்ப அழகா இருக்கு... பெரும்பாலும் நான் travel ல தூங்கிடுவேன்... தெளிவா பாத்ததில்ல இந்த வழி"

"ஓ....இப்ப என்கூட வர்றதால தெளிவா இருக்கேன்னு சொல்ற...இல்லையா சுமி" என சீண்ட

"நெனப்பு தான் உங்களுக்கு" என அவளும் கேலி பேசினாள்

"ஒகே....இனி ஹில் டிரைவ் ஆரம்பிச்சாச்சு... சீட் பெல்ட் நல்லா போட்டு இருக்கியான்னு பாத்துக்கோ" என்றான் சூர்யா அக்கறையாய்

"ஏன்... அவ்ளோ மோசமாவா ஓட்டுவீங்க" என அவனை ஓட்டினாள் சுமேதா

"நேரம் தான்...." என அவனும் அந்த சீண்டலை ரசித்தான்

"ட்ரைன்ல போனா இன்னும் நல்ல இருக்குமில்ல... அங்க பாருங்க ட்ரெயின் அழகா இருக்கு"


"ஆமா சுமி...ட்ரைன்ல போனா நல்லாத்தான் இருக்கும்...ஆனா மேல போய் சுத்தறதுக்கு கார் வேணுமே... இன்னொரு வாட்டி ட்ரைன்ல வரலாம் சரியா"

"ம்...."

இப்படியே பேச்சும் சிரிப்புமாய் கடிகார முட்கள் நகர ஊட்டியின் அந்த பிரபலமான ஸ்டார் ஹோட்டல் வந்து சேர்ந்தனர்

சட்டென மேகம் கறுக்க சிறிது தூறல் விழ இருட்ட தொடங்கியது வானம்.... பின்னால் வரபோகும் விபரீதத்தை உணர்த்துவது போல்... ஆனால் அவர்கள் இருந்த மனநிலையில் அதை உணரவில்லை

அவர்களை கண்டதும் அந்த ஹோட்டல் பணியாள் வந்து பெட்டிகளை வாங்கி கொண்டான் எதுவும் பேசாமல்

"தேங்க்ஸ்...." என சூர்யா முறுவலிக்க பதில் பேசாமல் reception அருகில் பெட்டியை கொண்டு வைத்தான் அவன்

அவனது பார்வை ஏனோ உறுத்த சுமேதா சூர்யாவை ஒட்டி நின்றாள்

அதற்குள் reception ஆசாமி "மே ஐ ஹெல்ப் யு சார்?" எனவும்

"ஹாய்... ஒரு டபுள் ரூம் வேணும்" எனவும்

"ரூம்# 13 இருக்கு சார்... நல்ல view இருக்கும்...."

அந்த பெட்டி தூக்கிய பணியாள் திடுக்கிட்டு திரும்பினான்

எதுவும் பேசாதே என்பது போல் அவனுக்கு சைகை காட்டினான் reception ஆசாமி

"ஒகே..." என்றான் சூர்யா

பதிமூணு என்ற எண் ஏனோ சுமேதாவுக்கு உறுத்த

"வேற இருக்கானு கேளுங்க" என்றாள்

"இல்ல மேடம்... எல்லாம் புக் ஆய்டுச்சு... "

"அதனால என்ன சுமி" என மனைவியை சமாதானம் செய்த சூர்யா "அதே குடுங்க" என்றான்

அறை சாவியை பெற்ற பின் சூர்யா பெட்டியை தூக்க முயல receptionist தடுத்து "இருங்க சார் இவன் கொண்டு வந்து தருவான்" எனக் கூற அந்த வேலையாள் மீண்டும் வந்து பெட்டிகளை எடுத்து கொண்டான்

அவனது வெறித்த சிவந்த கண்கள் சுமேதாவிற்கு என்னமோ போல் இருந்தது. அவனை காண்பதை தவிர்த்து கணவனை ஒட்டி நடந்தாள்

அறைக்குள் பெட்டிகளை வைத்தவன் உணர்ச்சியற்ற ஒரு பார்வையை செலுத்தினான் அவர்களை நோக்கி

"இந்தா வெச்சுக்கோ" என சூர்யா பத்து ரூபாய் நோட்டு ஒன்றை தர வேண்டாம் என்பது போல் செய்கை செய்தான்

அவன் சென்றதும் "அவன் பார்வையே சரி இல்ல... நாம வேற ஹோட்டல் போலாமே" என சுமேதா பயத்துடன் கூறினாள்

"ச்சே... ஏம்மா அப்படி சொல்ற...? பாவம் ஊமை போல இருக்கு... பணம் கூட வாங்கிகல பாரு... நல்லவன் தான் போல... பாக்கறதுக்கு கொஞ்சம் முரடன் மாதிரி தோற்றம் அவ்ளோ தான்..."

"இருந்தாலும்...." என சுமேதா ஏதோ சொல்ல வாய் எடுக்க

"சுமி... நமக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் என்னத்துக்கு? நமக்கு வேற முக்கியமான ஆராய்ச்சி எல்லாம் இருக்கே..." என கண்ணடித்து சிரித்தான் அவள் மனதை திசை மற்றும் பொருட்டு....
____________________

அதே நேரம், ஊமையன் போல் இருந்தவன் அந்த receptionist ஆசாமியிடம்

"என்ன சார்? அந்த ரூம் வாடகைக்கி விட்டுடீங்க.... முதலாளிக்கு தெரியுமா?"

"நீ சும்மா இரு மாரிமுத்து. முதலாளிக்கி தெரியாது.... இதுக ஏதோ வெளியூர் பார்ட்டி போல இருக்கு.... இங்க நடக்கற விசயம் எல்லாம் தெரியாதுன்னு நினைக்கிறேன்.... இநத வாடகை கணக்குல காட்டாம நாம பங்கு போட்டுக்கலாம்... என்ன சொல்ற?" என நயமாய் பேச

"நீங்க சொல்றப்ப கேக்க நல்லாத்தான் இருக்கு.... ஆனா ...." என இழுக்க

"ஒண்ணும் ஆகாது... நீ சும்மா இரு..." என பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தான்
அதே நேரம்..... இரு கண்கள் அந்த ஹோட்டல் வாசலில் நின்று வெறித்து பார்த்து கொண்டு இருந்தது....
______________________

"சுமி... வீட்டுக்கு ஒரு போன் பண்ணிடலாம் மொதல்ல" என்றான் சூர்யா

"ம்.. சரிங்க" எனவும் தன் செல்போன்ஐ எடுக்க பாக்கெட்ல் கை விட அது காலியாக இருந்தது...

"இங்க தானே வெச்சேன்..." என மற்ற பாக்கெட்களையும் பார்த்தவன்

"ம்....காணோமே...சுமி... உன்னோட போன்ல இருந்து கால் பண்ணு... ரிங் ஆகுதான்னு பாப்போம்"

அவள் எண்களை அழுத்த எங்கும் சத்தம் வரவில்லை

"ஒருவேள கார்ல வெச்சுட்டேன்னு நினைக்கிறேன்... சரி உன்னோட போன்ல ஊருக்கு பேசிக்கலாம். அப்புறம் எடுத்துக்கலாம்" எனவும்

"என்னோட போன் பாட்டரி ஏற்கனவே கத்திகிட்டே இருக்கு பாருங்க... சார்ஜர் கொண்டு வர மறந்துட்டேன். அஞ்சு நிமிஷம் கூட பேச முடியாது.. பேசாம நீங்க காருக்கு போய் உங்க போன் எடுத்துட்டு வந்துடுங்க. அதுக்குள்ள நான் ஒரு குளியல் போடறேன்... "

"ம்... நான் வேற ஒரு ஐடியா சொல்லட்டுமா..." என்றவன் குறும்பு பார்வையுடன் அவள் காதில் ஏதோ சொல்ல...

சிவந்த முகத்தை மறைத்தவள் "ஒண்ணும் வேண்டாம்... நீங்க போயிட்டு வாங்க சார்... " என அவனை விரட்டினாள்

"சுமி... சாப்பிட எதுனா வாங்கிட்டு வரட்டுமா...இல்ல அப்புறமா ரூம் சர்வீஸ் ஆர்டர் பண்ணிக்கலாமா"

"ம்... வாங்கிட்டே வந்துடுங்க... அப்புறம் ஆர்டர் பண்ணி நேரம் ஆகும்... குளிருக்கு இப்பவே பசிக்குது... "

"ஒகே சுமி... வாங்கிட்டே வந்துடறேன்... கதவ சாத்திக்கோ" எனவும் அதுவரை மற்றதை மறந்து இருந்தவள் சட்டென முகம் மாறினாள்

"ம்..." என்ற ஒற்றை சொல்லில் கணவனுக்கு விடை கொடுத்தாள்

அவள் கதவை சாத்தி சூர்யா இரண்டு அடி நகர்ந்ததும் சுமேதாவின் செல் பேசி அலறியது

_______________

திரும்பி வந்த சூர்யா அறை திறந்து கிடந்ததை கண்டதும் "சுமி...சுமி... "என அழைக்க பதில் இல்லாமல் போக குளியல் அறை பால்கனி எல்லா பக்கமும் தேடியவன் எங்கும் அவளை காணாமல் தன் செல்போன் எடுத்து அவள் செல்போனுக்கு அழைக்க "The subscriber you are trying to reach is on another call" என்றது ஒரு பெண் குரல்

தனக்கு தான் அழைக்க முயல்கிறாளோ என தோன்ற கட் செய்து காத்திருக்கலானான்

நிமிடங்கள் கரைய கரைய பயம் சூழ்ந்தது சூர்யாவிற்கு

அறைக்கு வெளியே வந்து சுற்றும் முற்றும் தேடினான். எங்கும் நிசப்தமாய் இருக்க அந்த அமைதி மனதில் கிலியூட்டியது

அறையை பூட்டியவன் விரைந்து reception க்கு வந்தான்

"Excuse மீ... என்னோட wife இந்த பக்கம் போனதை பாத்தீங்களா?" என கேட்டான்

"இல்ல சார்... நான் சாப்பிட போயிட்டு இப்ப தான் வந்தேன்... என்னாச்சு சார்? எதாச்சும் problemஆ?" என்றான் reception ஆசாமி

புது மனைவியுடன் சண்டையோ என்ற சந்தேகம் தெனித்தது அவன் குரலில்

அந்த கேள்வி தன் சுய மரியாதையை தீண்ட சூர்யா சமாளித்தான்

"இல்ல... நான் காருக்கு போயிட்டு வந்தேன்... அவ ரூம்ல இல்ல...
ஒரு வேள என்னை தேடி கார் பார்கிங் போய் இருப்பானு நினைக்கிறேன். போய் பாக்கறேன்" என்றவன்

அப்படியும் இருக்கலாம் தானே, அதை யோசிக்கவில்லையே என தன்னையே கடிந்து கொண்டவன் கார் நிறுத்தி இருந்த இடத்தை நோக்கி விரைந்தான்

அங்கேயும் அவளை காணாமல் மறுபடியும் அவள் செல்போனுக்கு அழைக்க "The subscriber you are trying to reach is currently switched offl" என்றது

என்ன செய்வதென புரியாமல் மறுபடியும் அறைக்கு விரைந்தான் , தன்னை தேடி விட்டு மீண்டும் அறைக்கு சென்று இருப்பாள் என்ற நம்பிக்கையில்

அங்கேயும் ஏமாற்றமே மிஞ்சியது சூர்யாவிற்கு

அந்த ஹோட்டல் இருக்கும் தெருவில் அந்த பக்கமும் இந்த பக்கமும் இலக்கின்றி சுற்றினான். நடுநடுவே அவள் செல்பேசிக்கு அழைக்க முயன்று "switched off " என்றே வந்ததும் சோர்ந்து போனான்

ஒரு மணி நேரத்திற்கும் மேல் அப்படியே சுற்றியவன் மீண்டும் வந்திருப்பாள் என்ற நப்பாசையுடன் அறைக்கு சென்றவன் அவளை காணாமல் பயத்தில் கண்களில் நீர் கோர்த்தது

ஏதேனும் விபரீதமாய் ஆகி இருக்குமோ என்று அப்போது தான் மனதிற்கு உறைத்தது

அதற்கு மேலும் தாமதிப்பது தவறு என தோன்ற reception சென்றவன்

"என்னோட மனைவிய காணோம்.... போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணனும்... லோக்கல் போலிசை கூப்பிடுங்க" என்றான் கலங்கிய கண்களுடன்

அதை கேட்டதும் reception ஆசாமி நடுங்கினான்

முதலாளிக்கு தெரியாமல் அந்த அறையை வாடகைக்கு விட்டவன் போலிசை அழைத்தால் தன் வேலையே போய் விடுமென்பது உறைக்க "என்ன சார்... எங்க போய்ட போறாங்க... இங்க தான் எங்கயாச்சும் இருப்பாங்க... இருங்க தேடி பாப்போம்... "என சமாளிக்க முயன்றான்

"இல்ல மிஸ்டர்... எல்லா பக்கமும் தேடிட்டேன்... எங்கயும் காணோம்... போலிசை கூப்பிடுங்க ப்ளீஸ்... delay பண்ண பண்ண ரிஸ்க் தான்" என்றான் சூர்யா பதட்டத்துடன்

"அது இல்ல சார்..." என அந்த ஆள் ஏதோ சொல்ல முயல

"இப்ப நீங்களே கூப்பிடறீங்களா இல்ல நான் 100 டயல் பண்ணட்டுமா?" என சூர்யா கோபமாய் கேட்க

"கூப்பிடறேன் சார்... " என்றவன் அதற்கு மேல் தாமதிக்காமல் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு அழைத்தான்

_________________

பூட்ஸ் சத்தம் அதிர உள்ளே நுழைந்த காவல் அதிகாரி "மிஸ்டர் கண்ணன்... உங்க ஹோட்டல்ல மாசத்துகொரு கேஸ்... இதே வேலையா போச்சா?" என்றார் reception ஆசாமியிடம்

கண்ணன் எதுவும் பேசாமல் பயந்து நிற்க

"யாரோ தங்கி இருந்தவங்க காணோம்னு சொன்னீங்க இல்லையா... அவங்க கூட இருந்தது யாரு?" என்ற கேள்வியை இன்ஸ்பெக்டர் முடிக்கும் முன்

"அது நான் தான் சார்... என் பேரு சூர்யா... என்னோட wife சுமேதாவை காணோம்" என்றான்

"மிஸ்டர் சூர்யா... நீங்க இருந்த ரூமை நான் பாக்கணும்... வாங்க போலாம்... எந்த ரூம்" எனவும்

"ரூம் நம்பர் 13 சார்" என சூர்யா கூற

"என்னது... ????" என்று அதிர்வுடன் நின்றார் இன்ஸ்பெக்டர்

"ஏன்யா...அந்த மூணு கேசும் முடியற வரை அந்த ரூமை யாருக்கும் வாடகைக்கு விட வேண்டாம்னு சொன்னது மறந்து போச்சா" என இன்ஸ்பெக்டர் எகிறினார் receptionist கண்ணனிடம்

"சார்...அது வந்து சார்... " என கண்ணன் உளற

அதுவரை எதுவும் பேசாமல் இருந்த சூர்யா பதறியவனாய் "என்ன சார்... என்ன கேஸ்? ப்ளீஸ் டெல் மீ" என்றான்

"மிஸ்டர் சூர்யா ... அந்த 13 ம் நம்பர் ரூம்ல கடந்த மூணு மாசத்துல மூணு பேரு மர்மமான முறைல இறந்து போய் இருக்காங்க... அதுக்கு என்ன காரணம்னு இன்னும் investigation நடந்துட்டு இருக்கு...இது தெரியாம நீங்க அந்த ரூம்ல தங்கி இருக்கீங்க... பாத்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க... நியூஸ் எல்லாம் பாக்கறதில்லையா?"

"ஐயோ... என்ன சார் சொல்றீங்க... ? நான் இந்த ஊர் இல்ல... இந்த நியூஸ் நான் எதுலயும் பாக்கலையே... ஐயோ... இப்ப என்ன செய்வேன்...சுமி... எங்க இருக்க நீ" என கிட்டத்தட்ட அழும் நிலைக்கு தயாரானான்

"காம் டௌன் மிஸ்டர் சூர்யா... லெட்ஸ் ஹோப் நத்திங் பாட் happened " என மனித நேயத்துடன் அவனை சமாதானம் செய்தார் அந்த காவல் துறை அதிகாரி
அதுவரை எதுவும் பேசாமல் இருந்த சூர்யா பதறியவனாய் "என்ன சார்... என்ன கேஸ்? ப்ளீஸ் டெல் மீ" என்றான்

"மிஸ்டர் சூர்யா ... அந்த 13 ம் நம்பர் ரூம்ல கடந்த மூணு மாசத்துல மூணு பேரு மர்மமான முறைல இறந்து போய் இருக்காங்க... அதுக்கு என்ன காரணம்னு இன்னும் investigation நடந்துட்டு இருக்கு...இது தெரியாம நீங்க அந்த ரூம்ல தங்கி இருக்கீங்க... பாத்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க... நியூஸ் எல்லாம் பாக்கறதில்லையா?"

"ஐயோ... என்ன சார் சொல்றீங்க... ? நான் இந்த ஊர் இல்ல... இந்த நியூஸ் நான் எதுலயும் பாக்கலையே... ஐயோ... இப்ப என்ன செய்வேன்...சுமி... எங்க இருக்க நீ" என கிட்டத்தட்ட அழும் நிலைக்கு தயாரானான்

"காம் டௌன் மிஸ்டர் சூர்யா... லெட்ஸ் ஹோப் நத்திங் பாட் happened " என மனித நேயத்துடன் அவனை சமாதானம் செய்தார் அந்த காவல் துறை அதிகாரி

"சார் ப்ளீஸ்... என் மனைவிய கண்டுபிடிச்சு குடுங்க"

"ஸூர்... எவ்ளோ நேரமா உங்க மனைவிய காணோம்"

"கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் சார்"

"வாட்... இவ்ளோ நேரம் என்ன செஞ்சீங்க?"

"பக்கத்துல எங்கயாச்சும் போய் இருப்பான்னு எல்லா எடமும் தேடினேன் சார்"

"ஒகே...மொதல்ல ஹோட்டல்ல ஒரு ரவுண்டு பாத்துட்டு இந்த ஏரியால ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடலாம்... அனேகமா பக்கத்துல எங்கயாச்சும் போய் இருந்தாலும் இருப்பாங்க... "

"சார் நான் இந்த ஏரியா பூரா பாத்துட்டேன் சார்... சின்ன சின்ன சந்து கூட நடந்து போய் பாத்தேன்... எங்கயும் காணோம் சார்... பயமா இருக்கு சார்" என கலங்கினான் சூர்யா

"நீங்க பாத்து இருந்தாலும் இட்ஸ் மை டூட்டி... நீங்களும் என்னோட வரணும்"

"ஸூர் சார்..." என்ற சூர்யா இன்ஸ்பெக்டர் உடன் சென்றான்

ஒரு மணி நேரத்திற்கும் மேல் அந்த ஏரியா முழுக்க தேடியும் சுமேதாவை எங்கும் காணவில்லை.

"சார்... எனக்கு ரெம்ப பயமா இருக்கு... சுமி ரெம்ப பயந்த சுபாவம்... இந்த எடத்துக்கெல்லாம் தனியா வந்தே இருக்க மாட்டா" என்றான் சூர்யா

"அப்படி நிச்சியமா சொல்ல முடியாது... நீங்க ஊட்டிக்கு வந்ததுல இருந்து என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லுங்க" என்றார் இன்ஸ்பெக்டர்

சூர்யா நடந்தது ஒன்று விடாமல் கூறினான்

"ஒகே... நீங்க இருந்த ரூம்ல எதாச்சும் தடயம் கெடைக்குதான்னு பாப்போம்..."

"சார் ப்ளீஸ்... அந்த மூணு கேஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்க... ?" என்றான் சூர்யா

"அது... மொதல் கேஸ் உங்கள போல ஒரு யெங் கபில் தான்... அவங்க ஹோட்டல்க்கு வந்த ரெண்டு நாளுல மனைவி கொலை செய்யபட்டு இருந்தாங்க. இன்னொரு கேஸ் ஒரு பிசினஸ்மேன். அடுத்தது ஒரு பாமிலி...அவங்க சின்ன கொழந்த கொலை செய்யப்பட்டு கிடந்தது"

"ஐயோ என்ன சார் சொல்றீங்க" என சூர்யா பதற

"அப்படி எதுவும் ஆகி இருக்காது... லெட்ஸ் பி பாசிடிவ்"

"இங்க ஆவி நடமாட்டம் இருக்கறதா அந்த ஆளு கண்ணன் வேற பயமுறுத்தினான் சார்"

"புல் ஷிட் ... நீங்க ப
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

அதே கண்கள்.. Empty Re: அதே கண்கள்..

Post by udhayam72 Sun Jun 02, 2013 11:22 am

"குறையொன்றும் இல்லை... மறைமூர்த்தி கண்ணா... குறையொன்றும் இல்லை கண்ணா..." என அனிதா பாடத்துவங்க "ஊ... ஊ... கண்ணா... கிருஷ்ணா... கோவிந்தா... "என மாணவர்கள் கேலியும் கிண்டலும் செய்ய அனிதா அழுது கொண்டே நகர்ந்தாள்

அவளை பற்றி நிறுத்திய சுமேதா மாணவர்களை பார்த்து கோபமாய் "டியர் பிரெண்ட்ஸ். நீங்க செய்யறது உங்களுக்கே சரின்னு தோணுதா? தமிழ்ல பேசணும்னு கேட்டப்ப சந்தோசப்பட்டேன். அப்படி தமிழ் பற்று இருக்கற உங்களுக்கு இந்த அழகான பாட்டை ரசிக்க தெரியலன்னா யாருக்கும் ரசனையே இல்லைன்னு தான் அர்த்தம். ராக் & ராப் தான் உங்கள பொறுத்த வரை இசையா? அதை தப்புன்னு சொல்லல... நானும் கேப்பேன். ஆனா நம்ம பாரம்பரியமிக்க கர்நாடக சங்கீதத்துல இருக்கற ஆன்மா வேற எதுலயும் இல்ல. இந்த பாட்டு மூதறிஞர் ராஜாஜி எழுதி எம்.எஸ் அம்மாவால ஐ.நா சபைல பாடப்பட்ட அற்புதமான வரலாற்று சிறப்பு மிக்க பாடல். நான் இவ்ளோ சொன்னபுறமும் உங்களுக்கு இந்த பாட்டு வேண்டாம்னா நான் அனிதாவை அனுப்பிடறேன்" என சுமேதா பேசி நிறுத்த சில நொடிகள் அங்கு அமைதி நிலவியது

சட்டென ஒரு மாணவன் எழுந்து "அனிதா... நீங்க பாடுங்க... நாங்க கேக்கறோம்" என கூற மற்ற மாணவர்களும் ஆமோதிக்க "எல்லாருக்கும் ரெம்ப நன்றி" என்று கூறி விட்டு "அனிதா நீ பாடு" என்றாள் சுமேதா

எங்கும் அமைதி நிலவ அனிதாவின் தேன் குழைந்த அந்த குரலில் எல்லோரும் கண்டுண்டனர். எல்லாரும் எதிர்பார்த்தது போல் பாட்டு போட்டியில் முதல் பரிசு அனிதாவே பெற்றாள்

அடுத்து வந்த பல போட்டிகளில் அரசு கலை கல்லூரி மாணவன் அருண் தான் வெற்றி பெற்றான். அழகும் திறமையும் நிறைந்த அருணை பல பெண்களின் கண்கள் மொய்த்து. ஆனால் அவன் கண்ணுக்கு ஒரு பெண் மட்டுமே தெரிந்தாள்

விழாவின் இறுதியில் அரசு கலை கல்லூரி தான் அதிக புள்ளிகள் பெற்று கோப்பை வென்றது. கோப்பையை பெற மேடைக்கு வந்த அருண் சுமேதாவிடமிருந்து மைக்கை வாங்கி "டியர் பிரெண்ட்ஸ். இன்னிக்கி நாங்க எல்லாரும் உங்க காலேஜ்க்கு வந்து ரெம்ப என்ஜாய் பண்ணினோம். எல்லா ப்ரோக்ராமும் ரெம்ப நல்லா இருந்தது. முக்கியமா அனிதாவோட பாட்டு இன்னும் காதுல ஒலிச்சுகிட்டே இருக்கு. காம்பெயர் பண்ணின சுமேதா சொன்ன மாதிரி நம்ம பாரம்பரியமிக்க கர்நாடக சங்கீதத்துல இருக்கற ஆன்மா வேற எதுலயும் இல்ல. தேங்க்ஸ் டு ஆல். பாய்... சி யு நெக்ஸ்ட் இயர்" என விடை பெற்றான்

அருணின் பேச்சை கேட்ட சுமேதா அவனை பார்த்து சிநேகமாய் புன்னகைத்தாள்

அதன் பின் அருண் அடிக்கடி தன் பள்ளி கால நண்பர்களை காண என ஏதேனும் சாக்கிட்டு அந்த கல்லூரிக்கு வந்தான்

அருணின் பள்ளிகால நண்பர்கள் சிலர் சுமேதாவின் வகுப்பில் இருந்தனர். எனவே அடிக்கடி சுமேதாவும் அவனை சந்திக்க நேர்ந்தது. அருணின் சிரிக்க சிரிக்க பேசும் இயல்பும் அனைவரையும் மதிக்கும் குணமும் விரைவிலேயே பல தோழிகளை அந்த கல்லூரியில் பெற்று தந்தது, அதில் சுமேதாவும் ஒருத்தி, ஒருமையில் பேசிக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்தது அவர்களின் நட்பு

சிறுவயதில் இருந்தே தன் அண்ணன் சுரேஷின் நண்பர்களுடன் தோழமையாய் பழகியதால் அவளுக்கு ஆண்கள் பெண்கள் என்று நட்பில் பிரித்து பார்க்கும் பழக்கம் எப்போதும் இருந்ததில்லை.

ஆனால் தனக்கென ஒரு வரையறை வகுத்து கொண்டு எல்லாரிடமும் ஒரே போல் இருப்பாள். சுமேதாவின் பெற்றோரும் மகளை பற்றி நன்கு அறிந்து இருந்ததால் முழு சுதந்திரம் கொடுத்து இருந்தனர்

அன்று கல்லூரிக்கு வந்த அருண் நேரே சுமேதாவை தேடி வந்தான்

"ஹாய் அருண்... என்ன காலங்காத்தால இங்க? காலேஜ் போகலையா?"

"இன்னைக்கு ஒரு முக்கியமா ஆளோட பிறந்த நாள்... அதான் இங்க வந்தேன்"

"யாருக்கு? ரமேஷுக்கா?"

"இல்ல..."

"ஆனந்த் பர்த்டே லாஸ்ட் மன்த் தான் வந்தது... ஒரு வேளை குணாவா... இல்ல இல்ல அவனுது முடிஞ்சுது... வேற யாரு... நீயே சொல்லு"

"ஏன்... ரமேஷ் ஆனந்த் குணா இவங்களுக்கு மட்டும் தன் பர்த்டே வருமா... எனக்கெல்லாம் வராதா?" என கோபமாய் கேட்க

"ஓ...சோ சாரி அருண்... எனக்கு நெஜமா தெரியாது... உன்ன கொஞ்ச நாளா தானே தெரியும்"

"ஒருத்தரை எத்தனை நாளா தெரியும்கறது முக்கியமில்ல அவங்களை பத்தி எவ்வளவு தெரிஞ்சு வெச்சு இருக்கோம்கறது தான் முக்கியம்" என மீண்டும் கோபமாய் பேசி முகம் திருப்ப சுமேதாவுக்கு மிகவும் வருத்தம் ஆனது

"சாரி அருண்... தப்பு தான்... தெரிஞ்சுக்காதது தப்பு தான்... சரி என்ன பணிஷ்மன்ட்னு சொல்லு... தோப்புகரணம் போடணுமா? எண்ணிக்கோ போடறேன்... " என அவள் பாவமாய் முகத்தை வைத்து கொண்டு தன் காதில் கைகளை பற்றி தோப்புகரணம் போடத்துவங்க அதற்கு மேல் அடக்க முடியாமல் சிரித்து விட்டான் அருண்

"அப்பாடா... ஒரு வழியா சிரிச்சுட்டே... எப்பவும் சிரிச்சுட்டே இருப்பியா? நீ கோபபட்டா பாக்கவே சகிக்கலை அருண்... " என்றவளை யோசனையாய் பார்த்தான் அருண்

"அப்படியா... அப்போ நான் வாழ்நாள் பூரா சிரிச்சுட்டே இருக்க ஒரு ஐடியா இருக்கு... அதுக்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும். செய்வியா?" என சிரித்து கொண்டே கேட்க

"என்ன? சொல்லு... உன்னோட பர்த்டேவை மறந்ததுக்கு பிராயசித்தமா என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்யறேன்" என்றாள் அவளும் உற்சாகமாய்

"சுமி... நான் உங்க டிபார்ட்மென்ட்ல பர்ஸ்ட் இயர் படிக்கற அனிதாவை விரும்பறேன். நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்"

"ஏய்... அருண்...நீ சொல்றது... " என்ற சுமேதாவின் விழிகள் ஆச்சிர்யத்தில் விரிந்தது

"நிஜம் தான் சுமி. மொதல் மொதலா அவள இண்டர்காலேஜ் மீட்ல பாத்தப்பவே என்னமோ... சம்திங்... ஐயம் ஜஸ்ட் லாஸ்ட்... " என உணர்ச்சி பொங்க கூற சுமேதாவால் இன்னும் நம்ப முடியாமல் இருந்தது

"ஆனா... நீ அவ கூட பேசி நான் பாத்ததே இல்லையே அருண்...எப்படி? நீயுன்னு இல்ல... யார் கூடவும் பேசாம ஒதுங்கி ஒதுங்கி போவாளே... சாமியார்னு பட்டப் பேரே இருக்காமே அவளுக்கு" என இன்னும் ஆச்சிர்யம் விலகாமல் சுமேதா கேட்க
"அதான் பிரச்சனை சுமி. அதுக்கு தான் உன் ஹெல்ப் வேணும்" என அருண் கூற

"என்ன சொல்ற? எனக்கு ஒண்ணுமே புரியல... இதுல நான் என்ன...?"

"பக்கத்துல போனாலே ஓடறா... பட் அவளுக்கு என்மேல இண்டரெஸ்ட் இருக்குனு எனக்கு தெரியும் "

"அடப்பாவி ஒன் சைடு லவ்வுக்கா இவ்ளோ பில்ட் அப் குடுத்த... நான் கூட ஏதோ கல்யாணம் வரை வந்தாச்சு போல, அதுக்கு தான் ஹெல்ப் கேக்கறேன்னு நெனச்சேன்"

"ஒன் சைடு லவ்வுனா என்ன கேவலமா?" என அருண் கோபமாய் பேச

"அப்படி இல்ல அருண்... உன்னை ஹர்ட் பண்ணுனும்னு அப்படி சொல்லல... அவளுக்கு இஷ்டம் இல்லாதப்ப நாம என்ன செய்ய.... "என்றவளை இடைமறித்த அருண்

"இல்ல சுமி... அவளுக்கு என்மேல விருப்பம் இருக்கு. எனக்கு தெரியும். ஆனா அவளோட கூச்ச சுபாவம் அவளை பேச விட மாட்டேங்குது"

"சரி ... நான் என்ன ஹெல்ப் பண்றது... தூது போக சொல்றியா?"

"அது... இல்ல... "

"பின்ன"

"அவ உன்னோட ஜூனியர்... பர்ஸ்ட் இயர் தானே... அவளை என்கிட்ட ஐ லவ் யு சொல்ல சொல்லி ராக்கிங் பண்ணனும். அப்புறம் அவளை என் வழிக்கு கொண்டு வர்றதை நான் பாத்துக்கறேன்"

"ஏய்... விளையாடறயா?" என சுமேதா முறைக்க

"என்ன சுமி... ஒரு சின்ன ஹெல்ப் தானே"

"ராக்கிங் எல்லாம் எப்பவோ முடிஞ்சுது. காலேஜ் ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆச்சு"

"ப்ளீஸ் சுமி... அவ உன்னோட ஜூனியர் தானே... எனக்காக... இந்த ஹெல்ப் என்னோட பர்த்டேக்கு நீ தர்ற கிப்ட்னு நெனச்சுக்கோ... நாங்க ஒண்ணு சேந்தபுரம் அவளே உனக்கு இதுக்கு தேங்க்ஸ் சொல்ல போறா பாரு" என கெஞ்சவும் வேறு வழியின்றி ஒத்துகொண்டாள் சுமேதா

"சரி.. ஜஸ்ட் திஸ் ஒன்ஸ்... இன்னொரு வாட்டி இந்த மாதிரி லூசுத்தனமா எதாச்சும் ஐடியா கொண்டு வந்தா உன்னோட பேசவே மாட்டேன்"

"நிச்சியமா இல்ல... ஜஸ்ட் திஸ் ஒன்ஸ்... தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ் அ லாட் சுமி..." என்றவன் சட்டென முகம் மலர "சுமி அனிதா வர்றா... அங்க பாரு...அவள கூப்பிடு.. நான் அந்த மரத்துகிட்ட போய் நிக்கறேன்... அவள அங்க வந்து என்கிட்ட ஐ லவ் யு சொல்ல சொல்லு" என்றவன் சுமேதாவின் பதிலுக்கு காத்திருக்காமல் சென்றான்

"ஏய் அனிதா... இங்க வா?" என சுமி அழைக்க

"சொல்லுங்கக்கா... "என அனிதா பாவமாய் கேட்க

"ம்... நீ பர்ஸ்ட் இயர் தானே... நான் உன்னை இதுவரைக்கும் ராக் பண்ணவே இல்ல... அதுக்கு தான் கூப்ட்டேன்" என முடிந்த வரை முகத்தை சீரியஸ்யாய் வைத்து கொள்ள முயன்றாள் சுமேதா

அனிதா எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றாள்

"அனிதா... அங்க பாரு.. அங்க மரத்துகிட்ட நிக்கற அந்த ப்ளூ ஷர்ட் பையன் கிட்ட போய் ஐ லவ் யு சொல்லிட்டு வா" என சுமேதா கூற அனிதா இன்னும் குனிந்த தலை நிமிராமல் நின்றாள்

"ஏய் சொல்றது காதுல விழலயா" என கோபமாய் பேச முயன்றாள் தன் இயல்புக்கு மாறாய்

"அக்கா ப்ளீஸ்... வேற எதாச்சும் சொல்லுங்க... செய்யறேன்... ப்ளீஸ்" என அனிதா கெஞ்ச சுமேதாவுக்கு சந்தேகம் வந்தது

ஒரு வேளை அருண் சொல்வது போல் இல்லையோ... அவன் தான் தவறாக அனிதாவை பற்றி புரிந்து கொண்டு இருக்கிறானோ என தோன்ற அவள் திரும்பி அருணை பார்க்க "ப்ளீஸ் ப்ளீஸ்" என வாயசைவில் கெஞ்சினான்

சரி இன்னும் ஒரு முயற்சி செய்யலாம் என தோன்ற "இங்க பாரு அனிதா... இன்னிக்கி நீ இதை செய்யாம இங்க இருந்து போக முடியாது... இப்பவே நான் சொல்றத செய்யலைனா இனிமே தினமும் ராக்கிங் தான்" என சுமேதா மிரட்ட சற்று நேரம் பேசாமல் நின்றிருந்த அனிதா தப்பிக்க வேறு வழி அறியாமல் அருணிடம் சென்று அவன் முகத்தை கூட பாராமல் "ஐ லவ் யு" என கூறினாள்

அவள் எதிர்பாராமல் சட்டென அவள் கைகளை பற்றிய அருண் "இன்னொருவாட்டி சொல்லு" என கேட்க

"ப்ளீஸ் விடுங்க... ப்ளீஸ்" என அழ அங்கு வந்த மற்ற மாணவர்கள் அவளை பார்த்து சத்தமாய் சிரிக்க அவள் அழுது கொண்டே ஓடினாள்

சுமியிடம் வந்த அருண் "தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ் அ மில்லியன் சுமி... இந்த உதவிய நான் மறக்கவே மாட்டேன்... எங்க மொதல் கொழந்தைக்கு உன்னோட பேரு தான்"

"ஆணா பொறந்தா கூட சுமேதானு பேரு வெப்பியா... " என்ற சுமேதா கலகலவென சிரிக்க

"ஏன்? சுமன்னு வெச்சுட்டு போறேன்" என அருணும் சேர்ந்து நகைக்க

"ரெம்பத்தான் ஸ்பீடா போற அருண்" என கேலி செய்தாள் சுமேதா

"காதல்னு வந்துட்டா ஸ்பீடா இருக்கணும் சுமி... இல்லேனா நாம மிசஸ்ஆ வரணும்னு நெனைக்கரவங்களை மிஸ் பண்ணிடுவோம்"

"அடேயப்பா... லவ் பண்ண ஆரம்பிச்சப்புறம் டயலாக் எல்லாம் கலக்கற அருண்"

"சுமி... எப்படியோ அவளை ஐ லவ் யு சொல்ல வெச்சாச்சு. ஆனா இந்த பசங்க வந்து சிரிச்சு அவளை மூட் அவுட் பண்ணிடாங்க அதுக்குள்ள... இல்லேனா ஒழுங்கா பேசி கன்வின்ஸ் பண்ணி இருப்பேன் இன்னிக்கி"

"நீ எதுக்கு எங்க காலேஜ்க்கு அடிக்கடி வர்றேன்னு நான் கூட யோசிப்பேன்... இப்ப தான் புரியுது... " என்ற சுமேதாவின் கேலி கூட அவனுக்கு சந்தோசமே அளித்தது

அதன் பின் இரண்டு நாட்கள் அருண் சுமேதாவின் காலேஜ் பக்கமே வரவில்லை. அன்று வந்தவனின் முகத்தில் பழைய சுரத்தே இல்லாமல் என்னமோ போல் இருந்தான் என்பதை அவனை பார்த்த உடனே சுமி உணர்ந்தாள்

"என்னாச்சு அருண்? ஏன் ஒரு மாதிரி இருக்க? என்ன ரெண்டு நாளா ஆளே காணோம்"

"ப்ச்... வாழ்க்கையே வெறுத்து போச்சு சுமி...ச்சே... " என சலித்து கொள்ள

"என்ன அருண் இது? அன்னிக்கி ஒரே சந்தோசமா போன... என்ன ஆச்சு இப்போ?"

"என்ன சுமி சொல்றது? நான் பாத்தா ஓடறா... நான் பாக்காத மாதிரி நின்னா திருட்டுத்தனமா பாக்கறா... என்னை பத்தி உருகி உருகி கவிதை எழுதறா... போய் பேசினா மட்டும் ஓட்டம் தான்"

"என்ன சொல்ற? கவிதையா?" என சுமி ஆர்வமாய் கேட்க

"ம்... இங்க பாரு... அவளோட நோட் புக்"

"இது எப்படி உன்கிட்ட?"

"அன்னிக்கி ஐ லவ் யு சொல்லிட்டு பயந்து ஓடினாளே அப்ப தவற விட்டுட்டு போயிட்டா... தவற விட்டுட்டு போனாளா இல்ல வேணும்னே நான் பாக்கணும்னு விட்டுட்டு போனாளானு புரியல... "

"அடேயப்பா... என்ன அழகா கவிதை எழுதி இருக்கா? பாத்தா பூனை மாதிரி இருக்கா... பயங்கரமான ஆளு தான் உன் ஆளு" என சுமேதா கேலி செய்ய

"என்ன எழுதி என்ன செய்யறது... மனசு விட்டு பேசினாதானே ஆகும்" என அருண் சலித்து கொள்ள

"இந்த நோட்டை குடு நானே போய் அவ கிட்ட கேக்கறேன்.. .கவிதை எழுதறதுக்கு இருக்கற தைரியம் மனசுல இருக்கறதை நேர்ல சொல்ல இல்லையான்னு கேக்கறேன்"

"வேண்டாம் சுமி... இதை உன்கிட்ட காட்டினேன்னு தெரிஞ்சா அவ பீல் பண்ணுவா இல்ல... என்ன இருந்தாலும் திஸ் இஸ் சம்திங் பர்சனல்" என அருண் கூற

"நெஜமாவே அனிதா ரெம்ப லக்கி தான் அருண்... சீக்கரம் அவ தயக்கம் போகத்தான் போகுது பாரு..." என சமாதானமாய் சுமேதா பேச
"இல்ல சுமி... இன்னும் பத்து வருஷம் ஆனாலும் அவ இப்படியே தான் இருப்பா... எதாச்சும் செஞ்சே ஆகணும்... இல்லேனா அவ என்னை விட்டு போய்டுவாளோனு பயமா இருக்கு" என கண்களில் நீர் துளிர்க்க அருண் கூற இயல்பிலேயே இளகிய மனம் படைத்த சுமேதா மனம் நெகிழ

"என்ன அருண் இது? இதுக்கு போய் இவ்ளோ டென்ஷன் ஆகற... வேணும்னா இன்னொரு வாட்டி அன்னிக்கி போல ராக்கிங் பண்ணட்டுமா?" என கேட்க

"வேண்டாம் சுமி... இனி அந்த ஐடியா சரி வராது... வேற எதாச்சும் அவளா என்கிட்ட வர்ற மாதிரி எதாச்சும் செய்யணும்"

"அது எப்படி..."

"ஒரு ஐடியா இருக்கு.... ஆனா நீ சொன்னா திட்டுவ..."

"என்ன ஐடியா?"

"அது.... கோபப்படமாட்டேனு சொல்லு... அப்புறம் சொல்றேன்"

"கோபப்படாத மாதிரி சொல்லு.."

"பாத்தியா...சரி.. வேண்டாம் விடு... நான் கிளம்பறேன்"

"ஏய்... அருண்...சரி சொல்லு... என்ன?"

"அது... சும்மா அவளை சீண்டறதுக்காக... அவ மனசுல இருக்கறத சொல்ல வெக்கறதுகாக... நீ என்னை லவ் பண்ற மாதிரி நடிக்கணும்... "

"வாட்?" என அதிர்ந்த சுமேதா... "ஆர் யு மேட்?" என சீறினாள்

"பாத்தியா... இதுக்கு தான் சொல்லலைன்னு சொன்னேன்..."

"என்ன அருண் இது? அர்த்தம் இல்லாத பேச்சு... நான் உன்னை லவ் பண்றமாதிரி நடிக்கறதுக்கும் அவ உன்கிட்ட அவ மனசுல இருக்கறத சொல்றதுக்கும் என்ன சம்மந்தம்"

"இல்ல சுமி... யாருக்கும் தான் விரும்பின ஒரு பொருள் தன்கிட்ட இருக்கறப்ப விட இன்னொருத்தர் கைக்கு போயிடுமோனு பயம் வர்றப்ப தான் ஆவேசம் வரும்... உண்மையும் வெளிய வரும்"

"சுத்த நான்சென்ஸ் இது... ரெம்ப சினிமா பாத்து ஒளராத"

"இல்ல சுமி... ஜஸ்ட் ஒன் வீக் நடிப்போம்... அப்பவும் அவ எறங்கி வரலைனா ஐ வில் கிவ் அப்" என கூற

"நோ வே... இந்த பைத்தியக்காரதனத்துக்கு நான் ஒத்துக்க மாட்டேன்"

"ஒகே... பாய்" என அவள் முகத்தை கூட பாராமல் கூறி விட்டு சென்றான் அருண்

சுமேதாவும் ஒன்றிரண்டு நாளில் அருண் தானே புரிந்து கொள்வான் என மௌனமாய் இருந்தாள்

அதன் பின் கிட்டதட்ட ஒரு வாரம் அருண் சுமேதாவின் கண்ணிலேயே படவில்லை. சுமேதா அவன் நண்பர்களிடம் கேட்க அவர்களும் பார்க்கவில்லை என கூறினர்

அன்று வந்தவன் சுமேதாவிடம் பேசாமல் நேராக தன் நண்பர்களிடம் சென்று பேசிவிட்டு சென்றது சுமேதாவின் மனதிற்கு வேதனை அளித்தது

அடுத்து வந்த சில நாட்களும் அதே போல் நடக்க அன்று பொறுமை இழந்த சுமேதா "ஏய் அருண்... என்ன நெனச்சுட்டு இருக்க உன் மனசுல... நீ சொல்றதை கேக்கலைனா உடனே மௌன விரதமா... இதான் உன் பிரெண்ட்ஷிப்பா" என கோபமாய் கேட்க

"பிரெண்ட்க்கு ஹெல்ப் பண்ண மனசில்லாத உன் பிரெண்ட்ஷிப் மட்டும் ரெம்ப கிரேட்ஆ?" என அவன் திருப்பி கேட்க

"ப்ளீஸ் அருண்... சொல்றத புரிஞ்சுக்கோ"

"நல்லா புரிஞ்சுட்டேன் சுமி... எல்லாம் வெளி வேஷம்... என் காதல் தோத்தா உனக்கு என்ன நஷ்டம்? நீ எதுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணனும்"

"அருண்... ஏன் இப்படி எல்லாம் பேசற? எனக்கு பிடிக்காத ஒண்ணை எப்படி செய்ய முடியும்"

"ஏன்? நடிப்புக்காக காதலிக்கற அளவுக்கு கூட என்னை பிடிக்கலையா... நான் அவ்ளோ மோசமாவா இருக்கேன்"

"ஐயோ அருண்... திஸ் இஸ் நாட் அபௌட் இட்... "

"இட்ஸ் ஒகே... லீவ் இட்" என அவன் வருத்தமாய் நகர

"ஒகே... ஜஸ்ட் ஒன் வீக்... அதுக்கு மேல இல்ல... நம்ம ரெண்டு பேரு தவிர யாருக்கும் இதை பத்தி சொல்ல கூடாது சரியா... " என சுமேதா கூற

"தேங்க்ஸ் தேங்க்ஸ் ரெம்ப தேங்க்ஸ் சுமி" என உற்சாகமாய் சிரித்தான் அருண்

நண்பனின் சந்தோஷம் சுமேதாவையும் சந்தோசப்படுத்தியது. ஆனாலும் மனதின் ஒரு மூலையில் ஏதோ உறுத்தலாய் உணர்ந்தாள்

சரி விளையாட்டுக்கு தானே என தன்னையே சமாதானம் செய்து கொண்டாள், விதி தனக்கு காட்ட இருக்கும் விளையாட்டை உணராமல்

அடுத்த நாள் சுமேதாவை தேடி வந்த அருண் "சுமி... இன்னிக்கி அனிதா எனக்கு பிடிச்ச ப்ளூ கலர் டிரஸ்ல வந்திருக்கா? நல்ல சகுனம். இன்னைக்கே நம்ம டிராமாவை ஸ்டார்ட் பண்ணிடலாமா?" என உற்சாகமாய் கேட்க

"ஹா ஹா ஹா... நூத்து கெழவி மாதிரி சகுனம் எல்லாம் பாக்றே... கொஞ்சம் விட்டா ஒரு பாமிலி ஜோசியர் வெச்சுப்ப போல இருக்கே..." என கேலி செய்ய

"என்ன செய்யறது? காதல்ல ஜெய்க்க பாமிலி ஜோசியர் என்ன பாமிலி கோவிலே கட்டணும்னாலும் செஞ்சு தானே ஆகணும்" என பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கூற சத்தமாய் சிரித்தாள் சுமேதா

"சிரிச்சது போதும்...அவ லைப்ரரிக்கு பின்னாடி இருக்கிற லான்ல உக்காந்துட்டு இருக்கா... சீக்கரம் வா..." எனவும்

"ஒகே ஒகே...வரேன்... டிராமா ஸ்கிரிப்ட் ஒண்ணும் தரலியே"

"என்ன கிண்டலா?" என அருண் முறைக்க

"டென்ஷன் ஆகாதே அருண்... சொதப்பாம இருக்கணுமே... அதான் கேட்டேன்"

"வெரி சிம்பிள்... சும்மா அவ கண்ணுக்கு தெரியல தூரத்துல உக்காந்து எதாச்சும் ஸ்வீட் நத்திங்க்ஸ் பேசற மாதிரி நடிக்கணும்... "

"ஸ்வீட் நத்திங்க்ஸ்னா?" என சுமேதா வேண்டுமென்றே கேட்க

"ஐயோ கடவுளே... உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவன் ரெம்ப பாவம்" என வருத்தமாய் கூற

"ஹா ஹா ஹா... உன் சாமியார் காதலிய விடவா நான் மோசம்" என சுமேதா சிரித்து கொண்டே கேட்க அருண் முறைத்தான்

"சரி சரி... டென்ஷன் ஆகாதே அருண்... லெட்ஸ் கோ... பத்து நிமிஷம் தான் இன்னிக்கி கால்ஷீட்... க்ளாஸ்க்கு போகணும் ஒகேவா?"

"சரி சரி... ரெம்ப பந்தா பண்ணாதே நட" என இருவரும் அனிதா இருந்த இடத்திற்கு வந்தனர்

அனிதா ஏதோ புத்தகத்தை மும்முமரமாய் படித்து கொண்டு இருந்தாள்

சுமேதாவும் அருணும் பேசினால் அனிதாவுக்கு கேட்கும் தூரத்தில் அமர்ந்தனர்

"சுமி இந்த ட்ரெஸ் உனக்கு ரெம்ப அழகா இருக்கு" என்றான் அருண் சற்று சத்தமாய்

சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த அனிதா ஒரு கணம் அவர்களையே பார்த்தவள் மீண்டும் புத்தகத்தில் மூழ்கினாள்

"அப்படியா... தேங்க்ஸ். உனக்கு கூட இந்த செக்கட் ஷர்ட் நல்லா இருக்கு அருண்" என்றாள் சுமேதா

"ஆனா சுடிதார் விட உனக்கு சாரி ரெம்ப அழகா இருக்கும்... உன்னை மொதல் மொதலா உங்க காலேஜ் பங்சன்ல பாத்தப்ப கட்டி இருந்தியே அதை போல" எனவும் சுமேதா அவனை பார்த்து முறைத்தாள்

அருண் அடிக்குரலில் "நீ இல்ல அனிதா" என்றான்

கல்லூரி விழா அன்று அனிதாவும் புடவை கட்டி இருந்தது நினைவு வர சுமேதா சிரித்தவாறே "ஒகே ஒகே ரெம்ப ஐஸ் வெக்காதே அருண்... இப்பவே ஒரே கோல்ட்" என நடிப்பை தும்முவது போல் செய்ய

"ஐயோ... கோல்டா... ? என்ன ஆச்சு? நட இப்பவே டாக்டர் கிட்ட போலாம்" என பதற

"அடச்சே... கோல்டுக்கெல்லாம் டாக்டர்கிட்டயா?" என கேலி செய்ய

"என்ன சுமி இப்படி சொல்ற? உனக்கு எதாச்சும் ஒண்ணுனா என்னால தாங்க முடியாது தெரியுமா?" என சொல்ல அதே நேரம் அனிதா எழுந்து சென்றாள்

அவள் போவதை பார்த்த சுமேதா "என்ன அருண்? உன் ஆளு செம டென்ஷன் ஆய்ட்டா போல இருக்கே?"

"நான் தான் சொன்னேனே சுமி... ஒன் வீக்ல கண்டிப்பா அவளை வழிக்கு கொண்டு வந்துடுவேன்"

"சரி சரி... நான் க்ளாஸ்க்கு போறேன்... டைம் ஆச்சு... நீ ஓவரா ட்ரீம் அடிக்காம கொஞ்சம் படிக்கற வேலையும் பாரு" என சுமேதா கிளம்பினாள்
__________________________

இப்படி அந்த வாரத்தில் எல்லா நாளும் அனிதாவின் கண் முன் ஏதோ சாக்கிட்டு அருணும் சுமேதாவும் நெருக்கமாய் வலம் வந்தனர்

அதற்கு அடுத்த வாரம் அனிதா கல்லூரிக்கு வரவில்லை

அருண் தினமும் வந்து அனிதா வந்தாளா என கேட்டு கொண்டே இருந்தான்

சுமேதாவிற்கே அவனை காண பாவமாய் இருந்தது

அனிதாவின் வகுப்பு தோழிகளிடம் கேட்க அவர்கள் எதுவும் தெரியாது என்றனர்

அவள் யாருடனும் நெருங்கி பழகும் குணம் இல்லாததால் அவள் வீடு எங்கே என்று கூட யாருக்கும் தெரியவில்லை

கல்லூரி அலுவலகத்தில் முயன்றும் அப்படி எல்லாம் முகவரி தர இயலாது என்று கூறி விட்டனர்

சோகமாய் இருந்த அருணுக்கு ஆறுதல் சொன்னாள் சுமேதா

"கவலைப்படாதே அருண்... எதாச்சும் பாமிலி பங்க்சனா இருக்கும்... நெக்ஸ்ட் வீக் வந்துடுவா"

"இல்ல சுமி... எனக்கு ரெம்ப பயமா இருக்கு"

"என்ன அருண் சொல்ற?"

"ஒருவேள நாம இப்படி க்ளோசா இருக்கறதை எதாச்சும் சீரியஸா எடுத்துட்டு தப்பா எதாச்சும்... "என நிறுத்த

"என்ன அருண் ஒளர்ற? அப்படி எல்லாம் ஒண்ணும் இருக்காது"

"ஒருவேள அப்படி இருந்தா"

"என்ன அருண் இப்படி பயப்படுத்தற? நீ தான் இந்த பைத்தியகாரத்தனமா ஐடியா குடுத்த... நான் அப்பவே இந்த மாதிரி எதாச்சும் வம்பாய்டுமோனு தான் வேண்டான்னு சொன்னேன். இப்போ என்னையும் சேத்து டென்சன் பண்ற"

"இல்ல சுமி... அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகாது... என்னோட காதல் உண்மைனா கண்டிப்பா ஜெய்க்கும்" என்றான் உறுதியாய்

அவன் உறுதியை கண்டு சுமேதாவும் மகிழ்ந்தாள்

அதற்கு அடுத்த இரண்டு வாரமும் அனிதா கல்லூரிக்கு வரவில்லை

அருணும் அனிதாவை பற்றி அதன் பின் எதுவும் விசாரிக்கவில்லை. ஆனால் முகத்தில் வருத்தம் நிலைத்து இருந்தது

ஒருவேளை பேசி மனதை வருத்தி கொள்ள வேண்டாம் என இருக்கிறானோ என சுமேதாவும் எதுவும் கேட்கவில்லை
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

அதே கண்கள்.. Empty Re: அதே கண்கள்..

Post by udhayam72 Sun Jun 02, 2013 11:28 am

"சுமேதாக்கா.. " என்றபடி தன்னை பார்த்து ஓடி வந்த முதலாண்டு மாணவி கீதாவை பார்த்ததும் நின்றாள் சுமேதா

"என்ன கீதா? ஏன் இப்படி ஓடி வர்ற?"

"அக்கா... அந்த அனிதாவை பத்தி கேட்டுட்டு இருந்தீங்க இல்ல... நேத்து அவங்க வீட்டுல இருந்து வந்து டி.சி வாங்கிட்டு போய்ட்டாங்களாம்"

"என்ன சொல்ற கீதா? என்ன ஆச்சாம் அவளுக்கு?" என அதிர்ச்சியானாள் சுமேதா

"என்னனு தெரியலக்கா? எங்க க்ளாஸ் ரெப் தீபா ஹெச்.ஓ.டி மேம் எதுக்கோ கூப்ட்டாங்கன்னு அவங்க ரூமுக்கு போனா... அப்போ நம்ம சுதா மேடம் கிட்ட ஹெச்.ஓ.டி பேசிட்டு இருந்ததை கேட்டாளாம்"

"ஓ... ச்சே என்ன ஆச்சுனு தெரியலயே?"

"சரிக்கா... நான் க்ளாஸ் போறேன்" என கீதா சென்றாள்

இதை எப்படி அருணிடம் கூறுவது என சுமேதா யோசனையுடன் இருந்தாள்

அவள் யோசித்து கொண்டு இருக்கும் போதே அருண் வந்தான்

"ஹாய் அருண்... உனக்கு நூறாய்சு... இப்போ தான் உன்னை நெனச்சேன்... நீயே வந்துட்டே" என்று இலகுவாய் பேச முயன்றவளை பார்த்து பெருமூச்சு விட்டான்

"என்ன அருண்? நான் பேசிட்டே இருக்கேன் நீ பதிலே சொல்ல மாட்டேங்கற"

"என்ன பேசறது? நூறு ஆய்சு யாருக்கு வேணும்? மனசுக்கு பிடிச்சவளோட ஒரு நாள் வாழ்ந்தாலும் போதுமே..." என ஏக்கமாய் கூற இப்படி வெறுத்து பேசுபவனிடம் அனிதா பற்றிய விசயத்தை எப்படி கூறுவது என தயங்கினாள்

அவள் தயக்கத்தை புரிந்தவன் போல் "என்ன சுமி.. என்ன விசயம்? ஏதோ சொல்ல வந்து தயங்கற மாதிரி இருக்க" என ஆர்வமாய் கேட்க அவளுக்கு அவனை பார்க்கவே பாவமாய் இருந்தது

அனிதாவை பற்றி நல்ல தகவல் ஏதும் சொல்வேனோ என ஆர்வமாய் கேட்பவனிடம் அவள் இனி வர மாட்டாள் என எப்படி கூறுவது என தவித்து போனாள்

இருந்தாலும் மறைத்து என்ன பயன், என்றேனும் தெரியவேண்டியது தானே என தோன்ற

"அருண் ஒரு விசயம்... நீ டென்ஷன் ஆகாதே" என பீடிகை போட

"சொல்லு சுமி... என்ன?"

"அது வந்து... அனிதா... அனிதாவோட வீட்டுல இருந்து வந்து டி.சி வாங்கிட்டு போய்டாங்களாம்" என கூற அதிர்ச்சியாய் அவளை நிமிர்ந்து பார்த்தவன் எதுவும் பேசாமல் எழுந்தான்

"அருண்... எங்க போற... இரு"

"எதுக்கு?" என உணர்ச்சியற்ற குரலில் கேட்க

"அருண் டோன்ட் லூஸ் ஹார்ட்... விசாரிச்சு பாக்கலாம்..."

"வேண்டாம் விடு"

"அருண் உன்னோட வருத்தம் எனக்கு புரியுது"

"இல்ல உனக்கு புரியாது சுமி"

"என்ன அருண் இது? ஏன் இப்படி பேசற?"

"நான் தப்பா சொல்லல சுமி... இந்த வேதனைய அனுபவிக்கரவனுக்கு மட்டும் தான் அது புரியும்"

"அப்படி எல்லாம்..." என்றவளை பேச விடாமல்

"காதலிச்சு பின்னாடி பிரச்னைகளால காதல் தோத்து போறத விட இப்படி மனசு விட்டு பேசாத காதலிகிட்ட மாட்டிக்கற என்னை போல தவிக்கறவங்க நெலம ரெம்ப கொடும சுமி"

"ஏன் இப்படி விரக்தியா பேசற அருண்? காதல்ல தோத்து போனவங்க எல்லாம் ஒடஞ்சு போய்ட்டா உலகத்துல பாதி பேர் இப்படி தான் அலையணும்"

"வேற என்ன செய்யறது?"

"அருண்... அட்வைஸ் பண்றேன்னு நெனைக்காதே... காதல் மட்டுமே வாழ்க்கை இல்ல... எல்லா காதலும் கல்யாணத்துல முடியறதில்ல. உனக்குன்னு ஒருத்தி நிச்சியம் இருப்பா"

"ஹும்... " என விரக்தியாய் சிரித்தவன் "ஒருவேளை நாம போட்ட டிராமா தான் என்னோட காதலுக்கு எமன் ஆய்டுச்சோனு தோணுது சுமி"

"ச்சே ச்சே.. .என்ன அருண் இது? அவளுக்காக தானே இதை செஞ்சே... அதை புரிஞ்சுக்கலைனா என்ன செய்யறது?"

"அப்போ காதலுக்காக போட்ட இந்த டிராமா தப்பில்லைன்னு சொல்றியா?"

"நிச்சியமா இல்ல அருண்... உன்னை புரிஞ்சுக்காததால நஷ்டம் அவளுக்கு தான்... உயிரா நேசிக்கற உன்னை மிஸ் பண்ணிட்டாளே" என்று அவனுக்கு ஆறுதலாய் பேசினாள்

சற்று நேரம் எதுவும் பேசாமல் இருந்தவன் "ஐ லவ் யு சுமி" என்றான்
சுமேதா ஒரு கணம் அப்படியே சிலையானாள். சுமேதா தான் ஏதேனும் கனவு காண்கிறோமோ என ஒரு கணம் தலையை உலுக்கி கொண்டாள்

அதை புரிந்தவன் போல "இல்ல சுமி... இது கனவு இல்ல... நிஜம் தான்" என்று அவள் கைகளை பற்றினான்

"ஆர் யு மேட்... என்ன ஒளர்ற அருண்?" என அவன் கைகளை உதறினாள் சுமி

"ஒளரல... இதான் நிஜம்... ஐ லவ் யு... லவ் அட் பர்ஸ்ட் சைட்... அதை நான் நம்பினதே இல்ல... நானே அதை அனுபவிச்ச வரைக்கும்"

"காதல் தோல்வில உனக்கு பைத்தியம் எதாச்சும் பிடிச்சுடுச்சா?" என சுமேதா கோபமாய் பேச

"இல்ல சுமி... நான் விரும்பினது உன்னை தான்... உன்னை மட்டும் தான்" என மீண்டும் அவள் கையை பற்றினான்

"ச்சே... " என உதறிவிட்டு எழுந்தாள்

"சுமி ப்ளீஸ்... கோபப்படமா நான் சொல்றத கேளு"

"அருண் ப்ளீஸ்.... ஜஸ்ட் கெட் அவுட் ஆப் மை சைட்... உன்னை பாக்கவே எனக்கு வெறுப்பா இருக்கு"

"சுமி ப்ளீஸ்... இப்படி சொல்லாத... இந்த வார்த்தைகள கேக்கற சக்தி எனக்கில்ல"

"ஒருத்தி இல்லைனதும் அடுத்த நிமிசமே இன்னொருத்திய நினைக்கறவன்கிட்ட வேற எப்படி பேசணும்... ச்சே... உன்னை எவ்ளோ உயர்வா நெனச்சேன்... சச் அ சீப் பெர்சன் யு ஆர்... உன்னோட காதலை நான் எவ்ளோ உண்மைன்னு நம்பினேன்... ச்சே" என வெறுப்பாய் வார்த்தைகளை கொட்ட

"சுமி ப்ளீஸ்... என்னை என்ன வேணா சொல்லு... நான் உன்மேல வெச்சுருக்கற காதலை தப்பா பேசாதே"

அவன் பேசுவது காதில் விழாதது போல் விலகி சென்றாள் சுமேதா

அதற்குள் சுமேதாவிற்கு வகுப்புகள் துவங்க வேறு வழியின்றி அருண் அங்கிருந்து சென்றான்

_____________________________

அடுத்த சில நாட்கள் எவ்வளவு முயன்றும் அருணுடன் பேச மறுத்தாள் சுமேதா. அவன் சொல்வதை காது கொடுத்து கேட்கவும் இல்லை

அன்று நூலக வாயிலில் அவளை வழிமறித்தவன் "சுமி ப்ளீஸ்...எனக்கு ஒரே ஒரு சான்ஸ் குடு... ப்ளீஸ்... ஜஸ்ட் ஒன் சான்ஸ் டு எக்ஸ்ப்ளெயின் எவரிதிங்... அப்புறம் நீயே புரிஞ்சுப்ப"

எதுவும் பேசாமல் அவள் விலக "சுமி... இப்ப நீ நான் பேசறத கேக்கலைனா என்னை உயிரோட பாக்க மாட்ட"

"என்ன மெரட்டறையா?" என சுமி கோபமாய் கேட்க

"எனக்கு வேற வழி தெரியலயே" என அருண் கண்ணீருடன் கூற சுற்றி இருந்த சிலர் வேடிக்கை பார்க்க

"எதுக்கு இப்ப சீன் க்ரியேட் பண்ற அருண்?" என்றாள் கோபம் சற்றும் குறையாமல்

"ஜஸ்ட் ஒன் சான்ஸ்... நான் நடந்த உண்மைய சொல்றேன்... அப்புறம் உன் இஷ்டம்... தொந்தரவு பண்ண மாட்டேன்... ப்ளீஸ்" என கெஞ்ச எல்லோருக்கும் வேடிக்கை பொருளாய் ஆவதில் இருந்து தப்பிக்க

"சரி... உனக்கு அஞ்சு நிமிஷம் டைம்.. அதுக்குள்ள சொல்றதை சொல்லு"

"இங்க வேண்டாம்... பின்னாடி லான்க்கு போய்டலாம் ப்ளீஸ் சுமி" என கெஞ்ச அவளுக்கும் இங்கு எல்லோர் முன்னிலும் நிற்க விருப்பமின்றி நூலகத்திற்கு பின்புறமிருந்த புல்வெளியை நோக்கி நடந்தாள்

அங்கு இருந்த மரபென்ச்சில் அமர்ந்தவள் "சொல்" என்பது போல் அவனை பார்த்தாள்

"சுமி... உன்னை மொதல் மொதலா காலேஜ் பங்சன்ல பாத்தப்பவே உன்னை விரும்ப ஆரம்பிச்சுட்டேன்"

"ஐ டோன்ட் வான்ட் டு ஹியர் ஆல் திஸ் நான்சென்ஸ்... சொல்ல வந்ததை சொல்லு"

"ஒகே... உன் க்ளாஸ்ல படிக்கற என்னோட பிரெண்ட்ஸ்கிட்ட உன்னை பத்தி காஸுவலா விசாரிச்சப்ப என் பிரெண்ட்ஸ் கிண்டலா சொல்ற மாதிரி உன்னை பத்தி சொல்லி எனக்கு ஹெல்ப் பண்ணினாங்க. உனக்கு காதல்ல எல்லாம் பெருசா விருப்பம் இல்லை, என்னை விட அழகான திறமையான அந்தஸ்துல மேல இருக்கறவங்க காதலை கூட நீ நிராகரிச்சதை சொன்னாங்க"

"ரெண்டு நிமிஷம் முடிஞ்சுது" என்றாள் உணர்ச்சியற்ற குரலில்

"ப்ளீஸ்... ஐ நீட் டு ஜஸ்டிபை மைஸெல்ப்... எல்லாம் சொன்னாதானே புரியும் சுமி" என கெஞ்சலாய் பார்க்க சொல்லு என்பது போல் பேசாமல் இருந்தாள்

"உன்னை பத்தி தெரிஞ்சுகிட்டதும் நேரா என்னோட காதலை சொன்னா நீ ஒத்துக்க மாட்டே, உன்னோட மனசுல எனக்கு ஒரு இடத்த ஏற்படுத்தணும். நீயே என்னை விரும்பற மாதிரி செஞ்சு அப்புறம் என்னோட காதலை சொன்னா நீ மறுக்க மாட்டேனு தான் இப்படி டிராமா பண்ணினேன்"

"அதுக்கு அனிதாவை எதுக்கு பலி ஆக்கின?"

"ஐயோ இல்ல...அவ கிட்ட நான் பேசினது கூட இல்ல. அந்த பொண்ணு ரெம்ப பயந்த சுபாவம்னு காலேஜ் பங்சன் அன்னைக்கே புரிஞ்சுகிட்டேன். அதான் அவளை லவ் பண்றதா உன்கிட்ட பொய் சொன்னேன். நீயா எதாச்சும் கேட்டா கூட அவ பயந்துகிட்டு சொல்ல மாட்டான்னு தான் அவ பேரை யூஸ் பண்ணினேன்... மத்தபடி அவ முகத்த கூட நான் ஒழுங்கா பாத்ததில்ல. இந்த டிராமா மூலமா ஒண்ணு நான் உன் மனசுல இருந்தா தெரிஞ்சுக்கலாம். இல்லைனா உண்மைய சொல்லி அப்புறம் என்னோட காதலை உன்கிட்ட சொல்றதா இருந்தேன் சுமி... இது தான் நடந்தது"

"அப்போ அனிதா எழுதினதா சொன்ன அந்த கவிதை?"

"அது... அவ அன்னிக்கி பயத்துல நோட்டை தவற விட்டுட்டு போனது மட்டும் தான் நிஜம். அவ எழுதினா மாதிரி நானே தான் அந்த கவிதையை அதுல எழுதினேன் உன்னை இந்த டிராமாவுக்கு சம்மதிக்க வெக்க"

"வாட் அ சீட்டர்... ச்சே" என சுமேதா கோபமாய் எழ

"ப்ளீஸ் சுமி... நான் சொல்றத கேளு"
"இன்னும் என்ன கேக்கணும்... பொய் தவிர எதுவும் பேச முடியாத உன்னை எந்த பொண்ணும் நம்ப மாட்டா"

"சுமி ப்ளீஸ்... நான் சொன்ன பொய்யெல்லாம் உன் மேல உள்ள காதலால தானே... அதையேன் புரிஞ்சுக்க மாட்டேங்கற"

"உன்னோட விளக்கம் எனக்கு தேவை இல்ல...லீவ் மீ அலோன்"

"ப்ளீஸ் சுமி.. நீயே சொன்னியே அன்னைக்கி காதலுக்காக டிராமா போட்டதுல தப்பில.... உன்னை புரிஞ்சுக்காததால நஷ்டம் அவளுக்கு தான்... உயிரா நேசிக்கற உன்னை மிஸ் பண்ணிட்டாளேனு நீ தானே சொன்னே சுமி"

"அது உன்னோட காதலை உண்மைன்னு நம்பி நொந்து போய் இருக்கற உன்னோட மனசுக்கு ஆறுதல் சொல்றதா நெனச்சு மனிதாபிமானத்தோட நான் சொன்னது... பொண்ணுங்க மனச விளையாட்டு பொம்மையா நெனைக்கற உனக்கு அந்த வார்த்தைகள் கேக்கற தகுதி கூட இல்ல"

"சுமி ப்ளீஸ்... நான் வந்த வழி தப்பா இருக்கலாம்... ஆனா நான் உன்னை நேசிக்கறது சத்தியம் சுமி... நீ இல்லாத லைப் என்னால கற்பனை கூட பண்ண முடியல"

"ஜஸ்ட் கட் யுவர் டிராமாஸ் அருண்... ச்சே"

"ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்... ஜஸ்ட் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் சுமி ப்ளீஸ்"

"ஒருவேள நீ நேரடியா உன்னோட காதலை சொல்லி இருந்தா கூட என் மனசுல மாற்றம் வந்து இருக்கலாம்... இப்படி ஒரு குறுக்குபுத்தி இருக்கற உன்னோட பழகினதை நெனச்சாலே எனக்கு அருவருப்பா இருக்கு... ச்சே ... இனி என்னோட பேச முயற்சி பண்ணாதே... அப்புறம் அனிதாவை மாதிரி நானும் கண்ணுலபடாம போய்டுவேன்" என்றவள் அவன் பதிலுக்கு கூட காத்திராமல் விடுவிடுவென நடந்தாள்

நீண்ட நேரம் பேசியதில் மூச்சு வாங்க நின்றாள் சுமேதா


"இரு சுமி... தண்ணி எடுத்துட்டு வரேன்" என உள்ளே சென்றான் கணேஷ்

பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்த சுமேதா "இனி என்ன செய்ய போகிறோம்" என கண்களில் நீர் வழிய நின்றாள்

கணேஷ் கொடுத்த நீரை பருகியவள் மீண்டும் பழைய கதையை சொல்ல வாயெடுக்க கணேஷ் தடுத்தான்

"சுமி... அத்தை லஞ்ச் ரெடி ஆய்டுச்சுனு சாப்பிட வர சொன்னாங்க. நீ காலைலயும் சரியா சாப்பிடலைன்னு வருத்தப்பட்டாங்க. வா மொதல்ல சாப்பிடு... அப்புறம் பேசலாம்"

"வேண்டாம் கணேஷ், எனக்கு பசியே மறந்து போச்சு. என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு" என கலங்க

"சுமி இங்க பாரு.... வயத்த காய போடறது எதுக்கான தீர்வும் இல்ல... இன்னும் பலவீனமாக்கி சின்ன பிரச்சனை கூட பெருசா தெரியும்... வா சாப்பிட்டு வந்து பேசுவோம்... கண்டிப்பா தீர்வு இல்லாத பிரச்சனை இருக்க முடியாது" என்றவனின் பேச்சில் சற்று நம்பிக்கை பெற்றவளாய் முழு மகிழ்ச்சி இல்லையென்றாலும் ஏதோ நிம்மதி ஆனாள்

இரண்டு நாளில் இன்று தான் மகள் ஒழுங்காக சாப்பிடுகிறாள் என நிம்மதி உற்றாள் சுமேதாவின் அன்னை

உண்டு முடித்து சற்று இளைப்பாறிய பின் "நீங்க மதியம் கொஞ்சம் தூங்குவீங்க இல்லையா அத்த... நீங்க படுத்துகோங்க... இங்க புழுக்கமா இருக்கு... நாங்க பின்னாடி உக்காரறோம்" என கணேஷ் சொல்ல

"சரிப்பா... எனக்கு இந்நேரத்துக்கு கொஞ்சம் சாஞ்சா தான் சரி வரும்... நீங்க பேசிட்டு இருங்க" என எழுந்து சென்றாள்

பின் பக்கம் ஊஞ்சலில் வந்து அமர்ந்ததும் மீண்டும் பழைய நிகழ்வுகளை கூறினாள் சுமேதா

"அதுக்கப்புறம் கொஞ்ச நாள் அருண் என்கிட்ட நேரடியா பேசல. டெய்லி காலைல எங்க காலேஜ் வருவான், என்னை பாத்ததும் போய்டுவான். என்கிட்ட வம்பு பண்ணாத வரை எப்படியோ தொலையட்டும்னு நானும் கண்டுக்கல கணேஷ்"

"கரெக்ட் தான்... "

"அப்புறம் கொஞ்ச மாசம் முன்னாடி எங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து சர்ஜரி பண்ணினப்ப ஹாஸ்பிடல் வந்து பாத்தான். நான் பேசக்கூட இல்ல. அப்புறம் அப்பாவுக்கு சரியானப்புறம் நான் காலேஜ் போன அன்னிக்கி தேவை இல்லாம வந்து என்ன என்னமோ பேசினான். ஒரு கட்டத்துல என்னால கோபத்தை கட்டுப்படுத்த முடியாம அறைஞ்சுட்டேன்"

"என்னது?" என அதிர்ந்தான் கணேஷ்

"ஆமா கணேஷ்... பொறுமையோட எல்லைக்கே கொண்டு போய்ட்டான் பாவி"

"உனக்கு கோபம் வரும்னே என்னால நம்ப முடியல சுமி" என கணேஷ் வியப்பாய் கூற

"அதான்... அதான் என்னால தாங்க முடியல... என்னோட இயல்பே மாத்தற மாதிரி இருந்த அவனோட செய்கை அவன் மேல இருந்த கோபத்தை வெறுப்பா மாத்திடுச்சு"

"ம்... அப்புறம் என்ன மெரட்டினானா?"

"இல்ல கணேஷ்... என் கண்ணு முன்னாடியே அதிகம் வர்ல... ஒண்ணு ரெண்டு வாட்டி பாத்தப்பவும் நான் கண்டுகல. அவனும் பேச முயற்சிக்கல. அப்புறம் ரெண்டு நாள் முன்னாடி தான்... " என அதுவரை சாதாரணமாய் பேசி கொண்டு இருந்தவள் விசும்பினாள்

"சுமி... ப்ளீஸ் அழாத... " என சமாதானம் செய்தான் கணேஷ்

"ம்... ரெண்டு நாள் முன்னாடி போன் பண்ணி நீ என்னை கல்யாணம் பண்ணிக்கணும். இல்லைனா அனிதாவை ஏமாத்தறதுக்குன்னு நாம போட்ட டிராமா அப்போ நாம லவ்வர்ஸ் மாதிரி பேசினதெல்லாம் ஆடியோ ரெகார்ட் பண்ணி வெச்சு இருக்கேன். அப்புறம் போட்டோஸ் கூட இருக்கு நாம சேந்து க்ளோசா இருக்கற மாதிரி ... எல்லாத்தையும் உன் கல்யாணதன்னைக்கி கொண்டு வந்து குடும்ப மானத்த வாங்கிடுவேன்னு மெரட்டறான்" என மீண்டும் விசும்பினாள்

"சுமி ப்ளீஸ்... அழாத.... இந்த மாதிரி கோழைத்தனமா போன்ல மெரட்டறவன் எல்லாம் ஒண்ணும் பண்ண மாட்டான். அவனை நான் பாத்துக்கறேன்... அவன் டீடைல்ஸ் சொல்லு" என எல்லா விவரங்களையும் பெற்று கொண்டு சென்றான் கணேஷ்

சுமேதா சொன்னதை இன்ஸ்பெக்டரிடம் கணேஷ் கூறி முடிக்க இன்னும் நம்பாத பார்வை பார்த்தார் இன்ஸ்பெக்டர்

"சரி கணேஷ்... அப்புறம் நீங்க போய் அந்த அருணை பாத்தீங்களா?"

"அன்னைக்கு சாயங்காலமே பாத்தேன் சார்... மெரட்டிட்டு வந்தேன்... பயந்த மாதிரி தான் இருந்தான்... ஆதாரம் எல்லாம் குடுன்னு கேட்டதுக்கு அப்படி எதுவும் இல்லை சும்மா சொன்னேன்னு சொன்னான்"

"சரி அதோட அவன் சாப்ட்டர் முடிஞ்சதல்ல... என்ன பிரச்சனை?" என இன்ஸ்பெக்டர் குழப்பமாய் பார்க்க

"என்கிட்ட பயந்த மாதிரி நடிச்சவன் அடுத்த நாள் சுமி கிராஸ் கட் ரோடுல ஏதோ ஷாப்பிங் போனப்ப அங்க அவளை பாலோவ் பண்ணி இருக்கான்...
ஆனா எதுவும் பேசல. எதாச்சும் திட்டம் போடரானோனு சுமி ரெம்ப டிஸ்டர்ப் ஆய்ட்டா. சுமேதா எனக்கு அங்க இருந்து மெசேஜ் பண்ணினா.

அதுக்கப்புறம் நாங்க பேசினது இதான்" என அந்த உரையாடல் பற்றி கூறினான்

"ஹலோ......நான் சுமேதா பேசறேன்"

"சுமி உன்னோட டெக்ஸ்ட் மெசேஜ் பாத்தேன்... நீ ஒண்ணும் கவலை படாதே அவனை நான் க்ளோசா வாட்ச் பண்ணிட்டு தான் இருக்கேன். நீ அவனை இனிமே எங்கயாச்சும் பாத்தா பயந்த மாதிரி காட்டாதே. அவனுக்கு நாமளே தைரியம் குடுத்த மாதிரி ஆய்டும்"

"ம்...ஒகே...அப்படியே செய்யறேன்"

"சுமி... ஏன் குரல் இப்படி குரல் நடுங்குது? நான் தான் பயபடவேண்டாம்னு சொல்றேன்ல?"

"ஆனா....கொஞ்சம் பயமா இருக்கு"

"நான் பாத்துக்கறேன்னு சொல்றேன்ல"

"ம்... உன்ன தான் நம்பி இருக்கேன்...."

"சரி... போய் நிம்மதியா சூர்யா கூட டூயட் பாடு" என கேலி செய்தான் கணேஷ் சூழ்நிலையை இலகுவாக்க முயன்று

"ஒகே வெச்சுடறேன்" என்றாள் சுமேதா

இதுக்கப்புறம் எந்த பிரச்சனையும் இல்ல சார்... ஆனா என்னதான் சுமிக்கு தைரியம் சொல்லி இருந்தாலும் கல்யாணதன்னைக்கி நான் தான் ரெம்ப பயந்து போய் இருந்தேன்... கல்யாணத்த கூட ரசிக்கற மூட்ல இல்ல... ஆனா கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாம நல்லபடியா நடந்தது"

"ம்..."

"அதுக்கப்புறம் நேத்து நைட் தான் சுமி எனக்கு போன் பண்ணினா. கல்யாணதன்னைக்கி நைட் யாரோ போன் பண்ணி உன்னோட ரகசியம் எல்லாம் தெரியும்னு மெரட்டினதா சொன்னா....அது அவனோட குரல் இல்லைன்னு சொன்னா... ஆனா அவன் பல குரல்ல பேசறவன்னும் சொன்னா


அப்புறம் நேத்து காலைல சாய்பாபா கோவில் சிக்னல்கிட்ட அவனை பாத்ததா சொன்னா. அவனும் பாத்துட்டு ரெம்ப அதிர்ச்சியானதா சொன்னா. அப்புறம் நேத்து நைட் மாப்பிள்ளை செல்போன் எடுக்க கார்க்கு போனப்ப எதோச்சையா இவ ஜன்னல்ல வெளிய பாக்க இவங்க தங்கி இருந்த ஹோட்டல் முன்னாடி நின்னுட்டு இருந்தானாம்... அதை பாத்துட்டு பயந்து தான் சுமி போன் பண்ணினா. உடனே கிளம்பி வந்தேன்... நெறைய முறை ட்ரை பண்ணியும் சுமிய ரீச் பண்ண முடியல சார்...இதான் நடந்தது"

"உங்கள நம்பலாமா?" என இன்ஸ்பெக்டர் இன்னும் சந்தேகம் தீராமல் கேட்க

"இன்ஸ்பெக்டர் எனக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல... அதுவும் இல்லாம நான் மொதலே சொன்னா மாதிரி அவ எனக்கு தங்கை மாதிரி... அவள கண்டுபிடிக்க என்னால ஆன உதவிய செய்ய தான் நான் முயற்சி செய்வேன்" என அவ்வளவு தான் என்பது போல் மௌனமானான்

"ஒகே.... உங்களுக்கு அந்த ஆளை அடையாளம் தெரியும் இல்லையா... "

"தெரியும் சார்... அவனோட போட்டோ சுமி அடையாளத்துக்கு குடுத்தது என்னோட செல்போன்ல இருக்கு இதோ"

"ஓ... தட்ஸ் கிரேட்... லெட்ஸ் மூவ்"

"எங்க சார்?"

"வாங்க சொல்றேன்" என வெளியே சென்றார் இன்ஸ்பெக்டர்

மதிய வெய்யில் மண்டையை பிளக்க ஸ்டேஷன் முன் இருந்த இளநீர் கடையில் எல்லோருக்கும் இளநீர் சொன்னார்

அங்கு அமர்ந்து இருந்த சுரேஷும் சூர்யாவும் இன்ஸ்பெக்டரை பார்த்ததும் பதட்டமாய் எழுந்தனர்

"என்ன சார் ஆச்சு? உண்மைய சொல்லிட்டானா?" என கேட்டு முடிக்கும் முன் கணேஷும் பின்னோடு வர "இவனை எதுக்கு சார் வெளிய விட்டீங்க?" என சுரேஷ் அவனை தாக்க முயல

"ஸ்டாப் இட் சுரேஷ். லெட் மீ எக்ஸ்ப்ளெயின். கணேஷ்கிட்ட பேசினதுல புதுசா ஒரு க்ளு கிடைச்சு இருக்கு. உங்க தங்கையை ஒரு தலையா காதலிச்ச அருண். அவன் வேலையா இருக்கலாம்னு தோணுது"

"என்ன சார் சொல்றீங்க?"

"எஸ்... அவனை ஊட்டில பாத்து பயந்து தான் உங்க சிஸ்டர் கணேஷ்க்கு போன் பண்ணி இருக்காங்க"

"ஓ"

"மிஸ்டர் சூர்யா... இங்க பாருங்க இந்த ஆளை நீங்க இங்க எங்கயாச்சும் பாத்தீங்களா?" என இன்ஸ்பெக்டர் கணேசின் செல்போனில் இருந்த போட்டோவை காட்டி கேட்க இல்லை என்று தலையசைத்தான் சூர்யா

ஆனால் அவன் முகத்தில் குழப்பம் மிகுந்து இருந்ததை இன்ஸ்பெக்டர் கவனித்தார். திருமணமான ஒரு நாளில் இவ்வளவு பிரச்சனைகள் என்றால் என்ன செய்வான் பாவம் என அவன் மேல் பரிதாபம் தோன்றியது இன்ஸ்பெக்டருக்கு

"ஒகே... ஏற்கனவே இந்த போட்டோவை செக்போஸ்ட்க்கு அனுப்பிட்டேன். ஆளை பாத்தா பிடிச்சு வெக்க சொல்லி ஆர்டர் போட்டாச்சு. வாங்க மொதல்ல ஹோட்டல்ல விசாரிச்சுட்டு அப்புறம் என்ன செய்யறதுன்னு பாப்போம்"

மூவரும் இன்ஸ்பெக்டர் பின் சென்றனர்

_________________________________________

ஹோட்டல் சென்று ஜீப்பை நிறுத்தி விட்டு இன்ஸ்பெக்டர் உள்ளே செல்ல "வாங்க சார்" என பவ்யமாய் வரவேற்றான் வரவேற்பு பணியில் இருந்த கண்ணன்

"ம்.... யோவ்... இந்த போட்டோல இருகரவன இந்த பக்கம் எங்கயாச்சும் பாத்தியா?"

"சார்... இந்த ஆளு... இப்ப தான் சார்... அஞ்சு நிமிஷம் முன்னாடி நம்ம ஹோட்டல்ல ரூம் போட்டாரு... ரூம் நம்பர் பதினாலு சார். உள்ள தான் இருக்காரு"

"வாட்?" என அதிர்ந்த இன்ஸ்பெக்டர் உடனே ரூம் நோக்கி ஓட கணேஷ் சூர்யா சுரேஷ் மூவரும் பின்னே சென்றனர்

கதவு தடதடவென தட்டப்பட கதவை திறந்த அருண் இன்ஸ்பெக்டரை பார்த்து பதட்டமானான்

பின்னே வந்த மூவரையும் கண்டு மேலும் அதிர்ந்தான்
______________________________
உள்ளே வந்த வேகத்தில் இன்ஸ்பெக்டர் அருணின் சட்டை காலரை பற்றி "அந்த பொண்ண எங்க வெச்சுருக்க...சொல்லு? சுமேதா எங்க?"

"ஐயோ... சுமி...சுமிக்கு என்ன ஆச்சு? ஐயோ... சொல்லுங்க சார்... சுமிக்கு என்ன ஆச்சு?" என பதற

"டேய் டேய்... இந்த நடிப்பெல்லாம் வேற யாராச்சும் ஏமாந்தவன்கிட்ட வெச்சுக்க... இப்ப ஒழுங்கா உண்மைய சொல்லு"

"சார்... சத்தியமா சொல்றேன்... எனக்கு ஒண்ணும் தெரியாது..."

"அப்ப இந்த ஊர்ல உனக்கு என்னடா வேல"

"சுமிய பாக்க வந்தேன்" தயக்கம் சிறிதுமின்றி கூறினான்

"பாத்தீங்களா சார்... எவ்ளோ திமிரா பேசறான்னு" என சுரேஷ் அவன் கன்னத்தில் அறைந்தான்

"சுரேஷ் ஜஸ்ட் ஸ்டே அவுட் ஆப் இட்" என இன்ஸ்பெக்டர் ஆணை போல் சொல்ல சுரேஷ் விலகி நின்றான்

"டேய்... ஒழுங்கா உண்மைய சொல்லு... இல்லேனா கொன்னுடுவேன்"

எதுவும் பேசாமல் சிரித்தான் அருண்

"என்ன திமிரா?" என இன்ஸ்பெக்டர் அறைய

"இல்ல சார்.... " என்றான் விரக்தியாய்

"டேய்..."

"சுமி... சுமிக்கு என்னாச்சு சார்... ப்ளீஸ் சொல்லுங்க சார்" என கெஞ்சினான்

"நீ இதுக்கெல்லாம் சரி வர மாட்டே... வா லாடம் கட்டறேன்"

"என்ன வேணும்னாலும் செய்ங்க சார்... சுமி எங்க ப்ளீஸ் சொல்லுங்க..." என்றவன் கணேசை கண்டதும் "சார் நீங்க தான அன்னிக்கி வந்து என்னை மெரட்டிட்டு போனீங்க... சொல்லுங்க சார்... சுமி எங்க சார்?" என கண்களில் நீர் வழிய கேட்க இன்ஸ்பெக்டர் அவன் கையில் விலங்கை மாட்டி

"நடடா ஸ்டேஷன்க்கு நான் சொல்றேன்... எங்கன்னு" என இழுத்து சென்றார்

சுரேஷின் முன்கோபத்தை கண் கூடாக பார்த்ததால் அவர்கள் மூவரையும் வெளியே இருக்கும் படி பணித்தார் இன்ஸ்பெக்டர்

ஸ்டேஷன் சென்று எத்தனை அடி அடித்தும் சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னான் அருண்

"ஒழுங்கா சொல்லு... சுமேதவை நீ காதலிச்சையா இல்லையா" என இன்ஸ்பெக்டர் முட்டியில் லத்தியால் தட்ட வலியில் உயிரே போனது

"என் உயிருக்கும் மேல சார்" என்றான்

"டேய்... " என இன்ஸ்பெக்டர் லத்தியை ஒங்க

"சார்... இதுக்கு மேல அடிச்சா நான் செத்துடுவேன் சார்... உடம்புல மனசுல எதுலயும் தெம்பில்ல சார்... எனக்கு சாகறது பத்தி கவலை இல்ல சார்... கடைசியா ஒரு தரம் சுமிய பாக்கணும் சார்... அதுவரைக்கும் எனக்கு உயிர் பிச்சை குடுங்க சார்" என அருண் விசும்ப

"ஒண்ணு இவன் நல்ல நடிகனா இருக்கணும் இல்லைனா இவன் சொல்றது உண்மையா இருக்கணும்" என இன்ஸ்பெக்டர் குழம்பினார்

"சரி... நடந்த எல்லாத்தையும் ஒண்ணு விடாம ஒழுங்கா சொல்லு... எதாச்சும் மறைச்சேன்னு சந்தேகம் வந்தா கூட விட்டு வெக்க மாட்டேன்" என இன்ஸ்பெக்டர் அவன் பேசினால் ஏதேனும் க்ளு கிடைக்குமோ என பேச செய்தார்

"சுமிய மொதல் மொதலா பாத்தப்பவே எனக்கே பொறந்தவனு தோணுச்சு சார்... பாத்த உடனே ஒருத்தர் மேல அவ்ளோ ஆசை எப்படி வரும்னு நானே ஆச்சிர்யப்பட்டேன் சார்... " என சிறிது நேரம் ஏதோ நினைத்து மௌனமானான்

"ம்... மேல சொல்லு" என இன்ஸ்பெக்டர் கூற

"ம்... அப்புறம் அவளுக்கு காதல்ல விருப்பம் இல்லைன்னு என் பிரெண்ட்ஸ் சொன்னதை கேட்டு பயந்து எப்படியும் அவ வேணுங்கற ஆசைல வேற ஒரு பொண்ணு மேல ஆசை பட்றதா சொல்லி அதுக்கு அவ உதவிய கேட்டேன்

அப்பவே நீ எப்படிடா வேற ஒருத்திய லவ் பண்ணலாம்னு கேப்பானு ஒரு நப்பாசை. அது நடக்கல. சரின்னு நானும் நடிச்சேன். ஆனா சீக்கரமே அவ கிட்ட உண்மைய சொல்லிட்டேன். ரெம்ப கோபபட்டா. அதெல்லாம் கூட நான் தாங்கிட்டேன்... ஆனா கடைசீல இனிமே பேசினா கண்ணுலபடாம போய்டுவேன்னு சொன்னா சார் "என விசும்பினான்

"ம்... மேல சொல்லு"

"என்னால முடியல சார்... "என அந்த நிகழ்வுகளை விவரிக்க தொடங்கினான்
________________________________________

தன்னை பற்றி தவறாக பேசிய போது கூட விடாமல் கெஞ்சியவன் "கண்ணுலபடாம போய்டுவேன்" என்ற வார்த்தையில் திகைத்து நின்றான் அருண்

அவளை காணாமல் ஒரு நாளும் தன்னால் இயலாது என்பதை உணர்ந்தே இருந்தான். விடுமுறை நாளில் கூட அவள் வீடு இருக்கும் தெருவில் இருக்கும் ஒரு நண்பனின் வீட்டிற்க்கு சென்று அவள் அறியாமல் அவளை காண்பான்

அப்படிபட்டவன் "கண்ணுலபடாம போய்டுவேன்" என்றதை எப்படி தாங்குவான். சுமேதா எந்த அளவிற்கு இரக்க குணமும் நல்ல மனமும் கொண்டவளோ அதே அளவிற்கு கோபமும் பிடிவாதமும் கொண்டவள் என்பதை இத்தனை நாளில் அவளை பற்றி அறிந்தே இருந்தான்

அவளை காணாமல் தவிப்பதை விட தூரத்தில் இருந்தேனும் பார்க்க முடிந்தால் போதுமென மௌனமானான். நிச்சியம் ஒரு நாள் அவள் தன் காதலை புரிந்து கொள்வாள் என நம்பினான்

அவளே கூறினாளே ஒரு வேளை நேரடியாய் காதலை கூறி இருந்தால் கூட ஏற்றிருப்பேனென. அவள் மனதில் சிறிதேனும் பாதிப்பை தான் ஏற்படுத்தியதால் தானே அவள் அப்படி கூறினாள் என தன்னை தானே சமாதானம் செய்து கொண்டான்

அவள் மனம் மாறும் நாளுக்காக ஒரு ஒரு நாளும் காத்திருந்தான்
____________________________________

தினமும் அவள் கல்லூரிக்கு வரும் நேரம் கல்லூரி வாசலிலேயே தன் நண்பர்களுடன் பேசி கொண்டு இருப்பான். அவள் கண் மறையும் வரை கண்ணால் பார்த்து மனதில் நிரப்பி கொண்டு அங்கிருந்து சென்று விடுவான். அவளுடன் எதுவும் பேசக் கூட முயற்சிக்கவில்லை

அவளுக்கு அவன் செய்கை எரிச்சல் அளித்த போதும் பேசாமல் கூட இருப்பவனிடம் என்னவென கோபம் கொள்வது என கண்டும் காணாதது போல் இருந்தாள்

அவளால் அவன் செய்த மடத்தனத்தை ஜீரணிக்க இயலவில்லை. என்ன தான் காரணம் சொன்ன போதும் அவள் கோபம் சற்றும் குறையவில்லை

தன்னை நம்ப வைத்து ஏமாற்றியதை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை. அதை தன் சுயமரியாதைக்கு கிடைத்த ஒரு அடியாய், அதற்கு காரணமான அவனை அடியோடு வெறுத்தாள்
____________________________________

அன்று எப்போதும் போல் கல்லூரிக்கு வந்து காத்திருந்தவன் சுமேதா வராமல் தவித்து போனான் அருண்

அவள் வகுப்பு தோழிகளிடம் கேட்க "தெரியவில்லை" என்றனர். அன்று முழுவதும் எதுவும் செய்ய இயலாமல் அவள் வீடு இருந்த தெருவிலேயே சுற்றி கொண்டு இருந்தான்

அவள் வெளியே வராமல் போக உடம்புக்கு ஏதேனும் சரி இல்லையோ என பயந்தான்

அடுத்த நாளும் அவள் கல்லூரிக்கு வராமல் போக தான் தினமும் இப்படி வந்து பார்ப்பது பிடிக்காமல் சொன்னது போல் கண்ணில்படாமல் போய் விட்டாளோ என பதறினான்

அந்த நேரத்தில் தான் அந்த அதிர்ச்சியான செய்தி அவள் தோழி மூலம் வந்தது

சுமேதாவின் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக அறிந்ததும் அவளுக்கு தன் தந்தை என்றால் உயிர் என ஒரு முறை சுமேதா கூறியது நினைவுவர எப்படி துடித்திருப்பாளோ என தவித்தான் அருண்

உடனே அவளை காண வேண்டும் போல் துடித்தான். ஆனால் அவளை நேரில் கண்டதும் காணாமலே இருந்திருக்கலாமோ என எண்ணினான்
______________________________

அருண் சென்ற போது சுமேதாவின் தந்தைக்கு பைபாஸ் சர்ஜரி நடந்து கொண்டு இருந்தது. ஆபரேஷன் தியேட்டர் முன் இருந்த இருக்கையில் இருந்த சுமேதாவை கண்கொண்டு பார்க்க முடியவில்லை அவனுக்கு

அழுது அழுது கண்கள் சிவந்து முகம் வீங்கி, கண்களில் நீர் வழிய அமர்ந்து இருந்தவளை கண்டவனுக்கு நெஞ்சே வெடித்து விடும் போல தோன்றியது

அவளை உரிமையோடு தன் தோளில் சாய்த்து கொண்டு ஆறுதல் கூற துடித்தான். தான் வந்ததை கூட உணர முடியாமல் துக்கத்தில் இருப்பவளிடம் என்ன பேசுவதென புரியாமல் விழித்தான்

அவள் சாயலில் இருந்த அவன் அவள் அண்ணனாக இருக்க வேண்டுமென யூகித்தான். அருண் சுமேதவை பார்த்து கொண்டு நிற்பதை அப்போது தான் கவனித்த சுரேஷ் அருணை நோக்கி வந்தான்

"நீங்க....?" என புரியாமல் பார்க்க

"ம்... நான் சுமேதாவோட க்ளாஸ்மேட் .. விஷயம் கேள்விபட்டேன்...அதான்" என தடுமாறினான் அருண்

மற்றொரு சமயமென்றால் அருணின் தடுமாற்றத்தில் சந்தேகம் கொண்டு தீர விசாரித்திருப்பான் சுரேஷ். அன்றிருந்த மனநிலையில் அவனுக்கு எதுவும் மனதில் பதியவில்லை

சுமேதாவிடன் அவனை அழைத்து சென்றான் சுரேஷ். அவனை கண்டதும் தன் துக்கத்தையும் மீறி கோபம் கிளம்பியது சுமேதாவிற்கு. தன் அண்ணனின் முன்கோபம் பற்றி அறிந்ததால் மௌனம் காத்தாள்

ஏன் வந்தாய் என்பது போன்ற ஒரு பார்வை அருண் மேல் வீசினாள். அதை பொருட்படுத்தாமல் அவளுக்கு ஆறுதல் சொல்ல முயன்றான்

"பயப்படாத சுமேதா... இப்ப இந்த சர்ஜரி ரெம்ப சகஜம் ஆய்டுச்சு... சீக்கரம் சரி ஆய்டும்" என கூற அவள் எதுவும் பேசாமல் கண்களை மூடி சாய்ந்தாள்

அருண் சங்கடமாய் சுரேஷை பார்க்க "சாரி... அவ மூட் அவுட்ல இருக்கா" என வருத்தம் தெரிவித்தான் சுரேஷ்

"இட்ஸ் ஒகே... சுமேதவோட அம்மா...?" என கேள்வியாய் நோக்க

"அப்பாவுக்கு இப்படி ஆனதும் அம்மா ரெம்ப பயந்துட்டாங்க... அதிர்ச்சில மயங்கிட்டாங்க. ரூம்ல மெடிசன் குடுத்து தூங்க வெச்சு இருக்கோம்" என கூற

"ஓ...சாரி... சரிங்க நான் கிளம்பறேன்" என விடைபெற்றான்

ஆனால் அங்கிருந்து செல்ல மனமின்றி மறைந்து நின்று வெகுநேரம் சுமேதாவை பார்த்து கொண்டே இருந்தான்
_____________________________________

சுமேதாவின் தந்தைக்கு ஆபரேஷன் நல்லபடியாய் முடிந்து அவள் கல்லூரிக்கு வரும் வரை தினமும் மாலையில் சிறிது நேரம் மருத்துவமனையில் மறைந்து நின்று அவளை பார்த்து வந்தான்

ஒரு வழியாய் சுமேதாவின் தந்தை குணமடைந்து அவள் கல்லூரிக்கு வந்த முதல் நாள் அவள் வருகைக்காக காத்திருந்தான் அருண். எப்போதும் போல் வாசலில் நண்பர்களுடன் நிற்காமல் அவள் வகுப்பிற்கு செல்லும் வழியில் நின்றிருந்தான்

அவளை தூரத்தே கண்டதுமே வெகு நாட்களுக்கு பின் அருண் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அவள் அருகில் வர வர படபடப்பு அதிகமானது

தோழிகள் இருவருடன் பேசிக்கொண்டே வந்தவள் அவனை கண்டதும் காணாதது போல் நடக்க "சுமி..." என்றழைத்தான்

இப்போது அவள் தோழிகள் "பேசிட்டு வா... " என்று கூறிவிட்டு முன்னே நடக்க அவனை எரித்துவிடுவது போல் பார்த்தாள் சுமேதா

"சுமி ப்ளீஸ்... கோபப்படாதே... நான் எதுவும் கேக்கல... உன்கிட்ட ரெண்டு வார்த்தை பேசினா போதும்... நான் கூட எதுவும் பேசல... உன்னோட குரலை கேட்டா போதும்... நான் போய்டறேன்... " என ஏக்கமாய் பார்க்க

"இப்ப என்ன புது டிராமா எதாச்சுமா? இதுல நீ மட்டும் தானா... இல்ல வேற யாரையாச்சும் ஏமாத்தி இன்வால்வ் பண்ணி இருக்கியா?" என ஏளனமாய் கேட்க

"சுமி ப்ளீஸ்... "

"ஸ்டாப் இட் அருண்... உனக்கென்ன பைத்தியமா"

"ஆமா உன்மேல பைத்தியம்"

"ச்சே... விருப்பம் இல்லைன்னு சொன்னபுறமும் எதுக்கு இப்படி தொந்தரவு பண்ற?"

"இல்ல சுமி... உன்னையே நீ ஏமாதிக்கற... உன் மனசுல எனக்கு எடம் இருக்கு"

"வாட் த ஹெல்? நான் உன்னை வெறுக்கறேன்... உலகத்துல நான் வெறுக்கற ஒரே ஜீவன் நீ தான் போதுமா"

"சுமி... வேண்டாம்...வார்த்தைகள கொட்டாத... பின்னாடி நீயே வருத்தப்படுவ"

"என்ன மெரட்டறையா? என்னை என்ன செய்வ... கொன்னுடுவயா? சொல்லு கொன்னுடுவயா?" என கோபத்தில் கத்த

"என்ன சுமி இது? உன்ன கொன்னுட்டு எனக்கு என்ன இருக்கு வாழ?"

"ச்சே... உன்னோட வசனம் கேட்டு கேட்டு வெறுத்து போச்சு... அதை எங்க திருடினயோ"

"நீ என்ன வேணும்னாலும் நெனச்சுக்கோ... பின்னாடி நீயே வருத்தப்படுவனு நான் சொன்னது நாம ஒண்ணு சேந்தபுரம் இப்படி என்னை பேசினதுக்காக நீ வேதனை படகூடாதுங்கற அர்த்ததுல தான்... "

"அப்படி வேற ஒரு எண்ணம் இருக்கா... கனவுல கூட அது நடக்காது... "

"ஏன் சுமி இப்படி எல்லாம் பேசற? அன்னிக்கி ஹாஸ்பிட்டல்ல உன்னை அப்படி பாத்ததுல இருந்து மனசே சரி இல்ல சுமி... உன்கிட்ட பேசணும்னு ஒரே தவிப
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

அதே கண்கள்.. Empty Re: அதே கண்கள்..

Post by udhayam72 Sun Jun 02, 2013 11:32 am

இப்படியே சில மாதங்கள் ஓடின. கல்லூரி இறுதி தேர்வுகளும் முடிந்தது. அப்போது தான் மிகவும் தவித்து போனான் அருண்

கல்லூரிக்கு வந்து கொண்டு இருந்த வரை திருட்டுத்தனமாகவேனும் சுமேதாவை கண்டு ஆறுதல் கொண்டிருந்தவன் கல்லூரி முடிந்த பின் அவளை காண முடியாமல் சோர்ந்து போனான்

அந்த சமயத்தில் இடியாய் வந்த ஒரு செய்தி அவனை புரட்டி போட்டது

அருண் கொண்டிருந்த எல்லா நம்பிக்கைகளும் சீட்டு கட்டு வீடாய் சரிந்தது அந்த செய்தியை கேட்ட நொடி...

எதற்கும் கலங்காதவன் வாய் விட்டு கதறினான். தன் பெற்றவர்களை இழந்த போது கூட இப்படி கலங்கவில்லை

பதிமூன்று வயதில் ஒரு விபத்தில் பெற்றவர்களை இழந்து மாமா வீட்டில் தஞ்சம் புகுந்தான்

என்னதான் அத்தையும் மாமாவும் அருமையாய் பார்த்து கொண்டாலும் தங்கள் பிள்ளைகளிடம் அவர்கள் உரிமையாய் கோபித்து கொள்வதும் தான் தவறே செய்தாலும் தட்டி கேட்காததும் அவனை விலக்கி வைத்தது

ஒன்பதாம் வகுப்பு வந்ததும் பிடிவாதம் பிடித்து விடுதியில் சேர்ந்தான். அன்று முதல் தனிமை வாழ்க்கைக்கு தன்னை பழக்கி கொண்டான்

சுமேதவை காணும் வரை தான் ஒரு அனாதை என்ற எண்ணமே அவன் மனதில் இருந்தது. அவளை கண்டதும் இவள் தான் இனி தனக்கு எல்லாம் என மனதில் பதிந்து கொண்டான்

தனக்கு மனைவியாய் மட்டுமின்றி தன் அன்னை விட்டு சென்ற இடத்தையும் நிரப்பி தன் அர்த்தமற்ற வாழ்கையை முழுமைப்படுத்துவாள் என நம்பினான்

இதையெல்லாம் அவளிடம் கூற அவனை ஏதோ தடுத்தது. அனுதாபம் தேட பொய் சொல்கிறேன் என்று கூட நினைப்பாளோ என அச்சமாய் இருந்தது

என்றேனும் ஒரு நாள் சுமேதா தன்னை புரிந்து கொள்வாள். அவள் மீது தான் கொண்ட காதலை உணர்ந்து தன் சிறிய தவறுகளை மன்னிப்பாள் என அவன் கட்டி இருந்த மனக்கோட்டை நண்பன் ஒருவன் மூலம் சுமேதாவிற்கு திருமணம் முடிவான செய்தி வந்த போது சுக்கு நூறாய் உடைந்தது

அப்போது தான் அந்த விபரீதமான முடிவை எடுத்தான்

_______________________________________

சுமேதா கிட்டத்தட்ட அருணை மறந்தே போனாள்

அன்று கல்லூரியில் எல்லோர் முன்னிலையிலும் அவனை அடித்த பின் ஓரிருமுறை தவிர அவள் கண்ணில் கூட அவன் படவில்லை என்பதால் நிம்மதியானாள்

அதற்குள் இறுதி தேர்வுகளும் அருகில் வர அதில் கவனம் செலுத்தியவள் அருணை மறந்தே போனாள் எனலாம்

தேர்வுகள் முடிந்து இரண்டாவது வாரம் சூர்யா அவளை பெண் பார்க்க வந்தான். முதலில் இப்போது திருமணம் வேண்டாம் இப்போது தானே தேர்வு முடிந்தது என்றவள் சூர்யாவின் புகைப்படத்தை பார்த்ததும் மனம் மாறினாள்

முதலில் போட்டோவை காட்டி அவளுக்கு பிடித்து இருக்கிறது என அறிந்த பின்னே அவள் பெற்றோர் சூர்யாவின் வீட்டினரை அழைத்து இருந்தனர்

நேரில் பார்க்க இன்னும் கம்பீரமான ஆண்மகனாய் இருந்தான் சூர்யா. வீட்டிற்கு ஒரே பிள்ளை. நல்ல படிப்பு, பண்பு, அந்தஸ்து, வேலை, நல்ல குடும்பம் எல்லாம் தீர விசாரித்த பின்பே பெண் பார்க்கும் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது

முதல் பார்வையிலேயே சுமேதாவின் வீட்டில் எல்லாருக்கும் சூர்யாவை பிடித்து போனது. அதே போல் தான் சுமேதவையும் அவர்கள் எல்லோருக்கும் பிடித்து போனது, முக்கியமாக சூர்யாவிற்கு

சூர்யாவின் அன்னை மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். திருமணமே வேண்டாமென கூறி வந்த பிள்ளை சுமேதாவின் புகைப்படத்தை பார்த்ததுமே சம்மதம் சொன்னதில் மிகவும் மகிழ்ந்தார்

வீணான ஆடம்பரம் விரும்பாத இரு வீட்டாரும் ஒருவரை ஒருவர் பிடித்து போன பின் காலம் தாழ்த்தல் எதற்கென அந்த பெண் பார்க்கும் வைபவத்தையே நிச்சியதார்த்த விழவாக்கினர்

இதை யூகித்தோ என்னமோ சூர்யாவின் அன்னை சூர்யா சுமேதா இருவருக்கும் "எஸ்" என்ற எழுத்தை கொண்ட மோதிரங்களை வாங்கி இருந்தார்... சுமேதாவின் விரல் அளவு தெரியாததால் அவளுக்கு அட்ஜஸ்டபள் வகை மோதிரம் என எல்லாம் அழகாக திட்டமிட்டு செய்து இருந்தார்

சூர்யா சுமேதாவின் பட்டு விரல்களில் மோதிரம் அணிவிக்க அவனின் பார்வையின் ஆழத்தை தாங்கமாட்டாமல் தலைகுனிந்தாள். தானும் அவன் விரலில் மோதிரம் அணிவித்தாள்

அதன் பின் சுமேதாவிற்கு உலகமே மறந்து போனது. எப்போதும் சூர்யாவுடன் செல்போன் பேச்சுகளும் அவனுடன் தான் வாழப்போகும் அழகிய வாழ்வை பற்றிய கற்பனைகளுமாகவே பொழுது கழிந்தது

அன்று நிச்சியம் முடிந்த ஐந்தாவது நாள். அவள் செல்போன் ஏனோ காலை முதலே வேலை நிறுத்தம் செய்ய அதை சரி செய்து வரும்படி தன் அண்ணனிடம் கொடுத்தாள்

"ஒரு நாளைக்கி இருபத்திநாலு மணிநேரமும் அதை வேலை வாங்கினா அது என்ன செய்யும் பாவம்... அதான் இன்னிக்கி ஸ்டரைக் பண்ணுது போல... சரி விடு சுமி... இன்னிக்கி ஒரு நாள் சூர்யா நிம்மதியா இருக்கட்டும்" என தங்கையை சீண்டினான் சுரேஷ்

"என்னண்ணா நீ? போ... " என தங்கை முகம் சுருங்க, தாங்கமாட்டாதவனாய்

"ஒகே ஒகே... சும்மா வம்புக்கு சொன்னேன் சுமி... கண்டிப்பா சரி பண்ணிட்டு வரேன்... இன்னிக்கி வேணும்னா என்னோட போன் யூஸ் பண்ணிக்கறையா" என சுரேஷ் அன்புடன் தங்கையை பார்க்க

"இல்லண்ணா வேண்டாம்... உனக்கு அபீசியல் கால்ஸ் எல்லாம் வரும் இதுல... ஒரு நாள் தானே... இட்ஸ் ஒகே" எனவும்

"சரிடா... நான் கெளம்பறேன். அம்மா அப்பா கோவில் போய்ட்டாங்க இல்ல... கதவை சாத்திக்கோ... பெல் அடிச்சா பாத்துட்டு தெற" என சுரேஷ் எச்சரிக்க

"ஐயோ...அண்ணா... எனக்கு இன்னும் மூணு மாசத்துல கல்யாணம்... நீ இன்னும் என்னை மூணு வயசு கொழந்தை மாதிரி ட்ரீட் பண்ற" என பெருமையாய் சலித்துகொள்ள

"என் சுமி எனக்கு எப்பவும் கொழந்தை தான்.... ஒகேடா பாய்" என சுரேஷ் கிளம்ப கதவை சாத்திவிட்டு உள்ளே வர அதே நேரம் வீட்டு தொலைபேசி அலறியது
______________________________
சூர்யா தான் செல்போனுக்கு முயற்சித்துவிட்டு இதற்கு அழைக்கிரானென தீர்மானமாய் விரைந்து தொலைபேசியை எடுத்த சுமேதா அதே வேகத்தில் "சூர்யா... செல்போன்க்கு ட்ரை பண்ணி பாத்துட்டு இதுக்கு கூப்பிடறீங்க கரெக்டா... எப்படி கண்டுபிடிச்சேன் பாத்தீங்களா உங்க சுமி" என காதல் வழிய பேச எதிர்முனையில் பதில் வராமல் போக

"ஹலோ... ஹலோ...சூர்யா..." என தவிப்பாய் அழைக்க

அவளின் அந்த தவிப்பு எதிர்முனையில் இருந்தவனை கொன்று குழியில் போட்டது. அது வேறு யாருமல்ல, அருண் தான்

தனக்காக இருக்க வேண்டிய இந்த தவிப்பு இன்று வேறு ஒருவனுக்காக என்பதை அவனால் தாங்க இயலவில்லை

அதிலும் "உங்க சுமி" என அவள் கூறியது அருண் மனதை குத்தி கிழித்தது. எத்தனை நாட்கள் அவள் வாயில் இருந்து ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை இது போல் வராதா என ஏங்கி இருப்பேன் என தவித்தான்

சற்று நேரம் தான் சூர்யா போல் பேசி இன்னும் கொஞ்சம் அவளின் அன்பு வழியும் குரலை கேட்க வேண்டும் போல் மனம் துடித்தது

அடுத்த கணம் அந்த யோசனையை உதறினான். ஒரு தரம் விளையாட்டாய் சொன்ன பொய் இன்னும் கொன்று கொண்டு இருக்கிறது. மீண்டும் அதே தவறை செய்ய தைரியம் வரவில்லை

வெகு நேரம் எதிர்முனையில் பதில் வராமல் போக சுமேதாவிற்கு குழப்பம் ஆனது. ஒருவேளை சூர்யா வேண்டுமென்றே தவிக்கவிடுகிறாரா இல்லை வேறு யாரேனும் போன் செய்து தான் உளறி விட்டோமா என தடுமாறினாள்

"ஹலோ... யாருங்க லைன்ல?" என சாதாரண குரலில் பேச சற்று முன் அவள் குரலில் இருந்த அந்த குழைவும் காதலும் இல்லாததை உணர்ந்தான் அருண்

அது சூர்யாவிற்கு மட்டுமே சொந்தமோ என அந்த முகமறியா ஆணின் மீது கோபம் கொப்பளித்தது

இன்னும் பேசுவது தானென தெரிந்தால் இந்த சாதாரண குரலில் கூட கடுமை ஏறி விடும் என்பதை நினைக்க வேதனையில் கண்களில் நீர் துளிர்த்தது

ஆனால் வேறு வழியில்லை பேசியே ஆக வேண்டும். இனியும் தாமதித்தால் சுமி என்னை விட்டு வர முடியாத தூரத்திற்கு சென்று விடுவாள் என உணர்ந்தவன் "ஹலோ சுமி" என்றான்

சுமேதா குரலை கேட்டதுமே அருண் என்பதை அறிந்து கொண்டாள். பலநாள் பேசாத போதும் அவன் குரல் மற்ற எல்லோரின் குரலில் இருந்து மாறுபட்டு ஒரிருமுறை பேசியவர்களே அடையாளம் காண கூடிய தனித்தன்மை வாய்ந்த குரல் என்பதால் சுமேதா அருண் என்பதை அறிந்து கொண்டாள்

கோபம் வந்த போதும் அதனை அடக்கியவள் "சொல்லு அருண்" என்றாள் சாதாரணமாய்

இதை எதிர்பாராத அருண் அவள் தன்னை திருமணம் செய்ய சம்மதித்ததர்க்கு இணையாய் மகிழ்ந்தான்

"சுமி... என்னோட வாய்ஸ்... எப்படி நீ... கேட்டதும்" என உணர்ச்சி குவியலாய் தடுமாற ஒளிந்திருந்த கோபம் முன்னே வந்தது சுமேதாவிற்கு

"இங்க பாரு அருண்... உன்னோட கதை கேக்க எனக்கு நேரமில்ல... எதுக்கு போன் பண்ணின...அதை சொல்லு..." என கடுமையாய் பேச முகம் வாடினான் அருண்

"சுமி...உனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகி இருக்குனு கேள்விபட்டேன் உண்மையா?" என இன்னும் நம்ப முடியாமல் கேட்டான்

"ஆமா... உண்மை தான்"

"சுமி... என்ன சுமி இப்படி சொல்ற? நான் உன்மேல உயிரையே வெச்சுருக்கேன்னு உனக்கு தெரியாதா? என்கிட்ட இல்லாதது அந்த சூர்யாகிட்ட என்ன இருக்கு?" என கோபமும் வருத்தமுமாய் கேட்க

"சட் அப்... அவர் பேரை சொல்ற தகுதி கூட உனக்கில்ல... போனை வெய்யி"

"சுமி ப்ளீஸ் நான் சொல்றத கேளு"

"முடியாது"

"சுமி... அப்புறம் நீ ரெம்ப வருத்தப்பட வேண்டி இருக்கும்" என்றான் குரலில் கடுமை ஏற்ற முயன்று

அவள் பதில் கூறாமல் தொலைபேசியை வைத்தாள். கோபத்தில் முகம் சிவந்தது சுமேதாவிற்கு

மறுபடியும் தொலைபேசி அலற அடித்து ஓய்ந்தது

மறுபடியும் அலற ஒரு வேளை சூர்யாவாக இருந்தால் என மனம் கேளாமல் எடுத்து "ஹலோ" என்றாள் சாதாரணமாய்

"சுமி... போன் வெச்சுடாதே... அப்புறம் காலம் பூரா நீ அழ வேண்டி இருக்கும்... உன்னோட சூர்யா உனக்கு கெடைக்க மாட்டார்" என எங்கு தொட்டால் வலிக்குமோ அங்கு தொட்டான் அருண்

"அருண் ப்ளீஸ்... வேண்டாம்...அவருக்கு எதாச்சும் ஆச்சுன்னா... அப்புறம்... அப்புறம் நான்... "என சுமேதா விசும்ப அவள் அழுவதை பொறுக்க முடியாமல் அதே சமயம் இளக்கம் காட்டினால் போனை வைத்துவிடுவாளென தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டான்

"அழுது என்னை இளக வெக்கலாம்னு தப்பு கணக்கு போடாதே. அந்த காலம் எல்லாம் முடிஞ்சுது. ஒழுங்கா நான் சொல்றதை குறுக்க பேசாம கேளு"

"...." எதிர்முனையில் பதில் வராமல் போக

"ஹலோ... லைன்ல இருக்கியா இல்லையா?" என அதட்டலாய் கேட்க

"ம்... " என்றாள் சுமேதா அழுகையை அடக்க முயன்றபடி

"இங்க பாரு... மூணு நாள் டைம் தர்றேன்... அதுக்குள்ள என்னை தேடி நீ வரணும்... என்னை கல்யாணம் பண்ணிக்கணும்... இல்லேனா அனிதாவை ஏமாத்தறதுக்குன்னு நாம போட்ட டிராமா அப்போ நாம லவ்வர்ஸ் மாதிரி பேசினதெல்லாம் ஆடியோ ரெகார்ட் பண்ணி வெச்சு இருக்கேன். அப்புறம் போட்டோஸ் கூட இருக்கு நாம சேந்து க்ளோசா இருக்கற மாதிரி ... எல்லாத்தையும் உன் கல்யாணதன்னைக்கி கொண்டு வந்து குடும்ப மானத்த வாங்கிடுவேன். அது மட்டுமில்ல... சூர்யாவும் உனக்கு கெடைக்க மாட்டான். அவன் மானமும் சேந்து தான் போகும்... " என பேசிக்கொண்டே போனவனை இடைமறித்தாள்

"அருண் ப்ளீஸ்... உன்னை நம்பி உனக்கு உதவின்னு செஞ்சதுக்கு இது தான் நீ செய்யற கை மாறா?" என விசும்ப இதற்கு மேலும் பேசினால் தன் பலவீனம் வெளிபட்டுவிடுமென

"நான் வெக்கறேன்... மூணு நாள் டைம் மறந்துடாதே" என அவள் பதிலை எதிர்பாராமல் துண்டித்தான்

போன் வெச்சதும் அவன் மேலேயே கோபம் பொங்கியது. இந்த வாய் தானே பேசி சுமிய அழ வெச்சது என ஓங்கி தன்னை தானே அடித்து கொண்டான்

அடுத்த வந்த நாட்கள் நத்தையாய் நகர்ந்தது அருணுக்கு. சுமேதாவிடம் பேச துடித்த இதயத்தை அடக்கினான். பொறு இன்னும் இரு நாட்கள் மட்டுமே... அப்புறம் உனக்கே உனக்காய் அவள் என சமாதானம் செய்து கொண்டான்
______________________________
அடுத்த நாள் மாலை நான்கு மணி. வீட்டின் கதவு தட்டப்பட "இந்த நேரத்துல யாரு?" என நினைத்துகொண்டே "ஒரு வேளை சுமியா" என நினைத்தவன் முகம் மலர அடுத்த கணம் கதவை திறந்தான்

அங்கே நின்றிருந்தவனை இதற்கு முன் பார்த்தது போல் இல்லை

"யார் நீங்க? என்ன வேணும்?"

வந்தவன் பதில் கூறாமல் அருணை அளவெடுப்பது போல் பார்த்தான்

"ஹலோ... யார் சார் நீங்க?" என மறுபடியும் கேட்க

"கொஞ்சம் பேசணும்... உள்ள வரலாமா?"

"நீங்க....?" என தயங்க

"சுமிய பத்தி பேசணும்... உள்ள வரலாமா இல்ல போகட்டுமா?" என கோபமாய் கேட்க

சுமி என்றதும் மந்திரத்துக்கு கட்டுண்டவன் போல் வழி விட்டான்

வந்தவன் உள்ளே வந்ததும் கதவை சாத்தி தாளிட்டான்

"கதவை....ஏன்?" என அருண் தடுக்க முயல

"அதான் பேசணும்னு சொன்னனே" என கடுமையாய் கூற எதுவும் பேசாமல் அமர்ந்தான் அருண்

சற்று நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை

அருண் இவன் யாராய் இருக்கும் என மண்டையை உடைத்து கொண்டான்

ஒரு வேளை இவன் தான் மாப்பிள்ளையோ, சுமி கட்சிக்காரன் காலில் விழுவதே மேல் என சொல்லி விட்டாளோ... ச்சே ச்சே இருக்காது... இவன் சுமிக்கு பொருத்தமானவன் அல்ல... இவனிடம் மயங்கி என்னை ஒதுக்கும் அளவுக்கு தோன்றவில்லை என தனக்குள் பேசிக்கொண்டான்

"என் பேரு கணேஷ்" என வந்தவன் தான் துவங்கினான்

இவன் சூர்யா இல்லையா என ஏனோ மனம் ஏமாற்றம் ஆனது அருணுக்கு. இவனென்றால் நீ சுமிக்கு பொருத்தமில்லை என வாதாட நினைத்தானோ என்னமோ, முகம் வாடியது

"நான் சுமியோட கசின்" என அவனே பேசிக்கொண்டு இருந்தான்

"நான் எதுக்கு வந்து இருக்கேன்னு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்" என்று மரியாதையோடு பேசினான்

"சொல்லுங்க" என்றான் அருண்

"நீங்க சுமிய மெரட்டினதா சொன்னா அது உண்மையா?"

"என் சுமி பொய் சொல்ல மாட்டா" என "என்" என்பதற்கு அழுத்தம் கொடுத்தான் அருண். அதை கணேஷ் கவனிக்க தவறவில்லை

"சந்தோஷம்... ஆனா அவ உங்க சுமி இல்ல... சூர்யாவுக்கு நிச்சியம் செய்யப்பட்ட சுமி"

"இல்ல... அவள மொதல்ல விரும்பினது நான்"

"கரெக்டா சொன்னீங்க... நீங்க மட்டும் தான் விரும்பினீங்க... சுமி மனசுல நீங்க இல்ல"

"நோ... நோ ... " என கத்திய அருண் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தான்

"அருண்... சொல்றதை கேளுங்க... உங்க உணர்வுகள் எனக்கு புரியுது... எனக்கு காலேஜ் நாட்கள்ல ஒரு காதல் இருந்தது... அதுல தோத்தும் போனேன்..." என்றவனை கனிவுடன் பார்த்தான் அருண்

"அப்படினா இந்த கஷ்டம் உங்களுக்கு புரியுதல்ல. நீங்களே ஏன் ஹெல்ப் பண்ண கூடாது...நாங்க சேரரதுக்கு" என சிறுபிள்ளை போல் கேட்டான்

"என்ன புரியாம பேசறீங்க அருண்? சுமியும் உங்களை லவ் பண்ற மாதிரி இருந்தா யாரை எதுத்து வேணும்னாலும் நான் ஹெல்ப் பண்ண தயார். ஆனா அவளுக்கு விருப்பம் இல்லைங்கரப்ப என்ன செய்ய?"

"எனக்கு அதை பத்தி கவலை இல்ல... எனக்கு அவ வேணும்"

"அருண்... உனக்கென்ன பைத்தியமா?" என ஒருமைக்கு தாவினான் கணேஷ்

"எஸ்... சுமி மேல பைத்தியம்"

"அருண்... உனக்கு தேவை கல்யாணம் இல்ல... நல்ல ட்ரீட்மென்ட்... ரியலி யு நீட் ஹெல்ப்"

"தேவை இல்ல"

"சுமிய கொழந்தைல இருந்த பாக்கறவன் நான்... அவ இவ்ளோ அழுது ஒரு நாள் கூட நான் பாத்ததில்ல... நீ எல்லாம்... ச்சே... இங்க பாரு ஒழுங்கா அந்த ஆடியோ கசெட்ஸ் போட்டோஸ் எல்லாம் குடு... இல்லைனா நான் போலீஸ்கிட்ட போவேன் " என்றதும் முகம் மாறினான் அருண்

"வேண்டாம்... நீங்க யாருகிட்டயும் போக வேண்டாம்... அப்படி எந்த காசெட்டும் இல்ல... போட்டோவும் இல்ல... சுமிய மிரட்ட தான் சும்மா அப்படி சொன்னேன்" என்றான் அருண்

"உன்னை நம்பலாமா? இப்ப என்னை சமாளிக்க எதாச்சும் சொல்லிட்டு அப்புறம் வேண்டாத வேலை செஞ்சா நடக்கறதே வேற" என கணேஷ் அவன் காலரை பற்றி உலுக்க

"என்னால சுமிக்கு எந்த தொந்தரவும் வராது சார்... நம்புங்க" என்றவன் இனி என்ன என்பது போல் எழுந்து நின்றான்

"ஒகே... நான் உன்னை வாட்ச் பண்ணிட்டே தான் இருப்பேன்... எதாச்சும் சந்தேகம் வந்தா... அப்புறம் கேக்க ஆள் இல்லாம போய்டுவ" என்றவனை உணர்ச்சி அற்ற பார்வை பார்த்தான் அருண்

கணேஷ் சென்றதும் கதவை அடைத்தவன் பெட்டியில் இருந்த தன் பெற்றோரின் புகைப்படத்தை எடுத்து சற்று நேரம் இமைக்காமல் பார்த்தான்

பின் சுமியும் அவனும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பார்த்தான். வாக்மேன் எடுத்து காதில் பொருத்தி சுமியும் அவனும் அனிதாவை ஏமாத்த பேசிய காதல் வசனங்களை ரசித்தான்

அதற்குள் அவன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்....
______________________________
தன் கையில் இருந்த சுமேதாவின் புகைப்படத்துடன் ஏதோ நேரில் உள்ளவர்களுடன் பேசுவது போல் பேசினான்

"சுமி... உன் கசின் கணேஷ் என்ன சொன்னார்னு கேட்டியா? கேக்க ஆள் இல்லாம போய்டுவனு சொன்னார்... இப்ப மட்டும் எனக்கு கேக்க யாரு இருக்கா சுமி. உனக்காக என்னை வந்து மிரட்ட கணேஷ் மாதிரி எனக்கு யாராச்சும் இருந்திருந்தா உங்க அம்மா அப்பா கிட்ட வந்து பொண்ணு கேக்க வெச்சிருப்பேன் சுமி... இப்ப என்ன செய்யட்டும்?" என்றவன் ஏதோ அவளின் பதிலுக்கு காத்திருப்பது போல் சற்று நேரம் மௌனமாய் இருந்தான்

மறுபடியும் பேசினான் "சுமி... போலீஸ்கிட்ட போவேன்னு சொன்னதுக்கு பயந்துட்டதா அவர் நெனச்சுருக்கலாம். ஆனா நீ ரெம்ப அழுதேன்னு அவர் சொன்னதை என்னால தாங்க முடியல சுமி. அதான் வேண்டான்னு விட்டுட்டேன். நீ வேணும்னு நான் நெனச்சது உன்னோட சேந்து சந்தோசமா வாழத்தானே... ஆனா நீ அழறியாமே... வேண்டாம் சுமி... எதுவும் வேண்டாம்..." என்றவன் ஏதோ தீர்மானித்தவன் போல் எழுந்தான்

சற்று நேரம் ஜன்னல் கம்பியை பற்றி கொண்டு நின்றவன் மீண்டும் வந்து பெற்றவர்களின் புகைப்படத்தை எடுத்தான்

"அம்மா அப்பா... நானும் உங்கிட்ட வந்துடறேன்... ஆனா இன்னும் கொஞ்ச நாள்... மூணு மாசம்... சுமிக்கு கல்யாணமான அடுத்த நாள் நான் உங்ககிட்ட வந்துடறேன். அதுவரைக்கும் அவளுக்கு தெரியாம எந்த தொந்தரவும் தராம சும்மா அவள கண்ணால பாத்தா போதும்" என்றான்

______________________________

அதன் பின் அவன் சுமி எங்கே சென்றாலும் அவள் அறியாமல் பின் தொடர்ந்தான். ஒரு வார்த்தை கூட பேச முயலவில்லை

வெறுமனே அவளை பார்த்து கொண்டு இருப்பான்

அவள் வீட்டுக்கு சென்றதும் தானும் சென்று வீட்டில் அடைந்து கொள்வான்

அம்மா அப்பா விட்டு சென்ற பணம் அவனுக்கு அன்றாட தேவைகளுக்கு தாராளமாய் இருந்தது

தனக்கு பின் தன் பணம் மற்றும் பாங்கில் அம்மாவின் சில நகைகள் ஊரில் உள்ள வீடு எல்லாமும் கோவையில் பிரபலமான ஒரு அநாதை விடுதிக்கு சேர வேண்டுமென ஒரு கடிதம் எழுதி தன் பெட்டியில் பத்திரப்படுத்தினான்

தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும், தனியே இந்த உலகில் வாழ விருப்பம் இல்லை அதனால் மரணத்தை தேடி போகிறேன் என ஒரு கடிதம் எழுதி வைத்து கொண்டான் தயாராய்

அப்படி ஒரு கடிதத்தை எழுதியதும் ஏனோ சுமியின் குரலை கேட்க வேண்டும் போல் கட்டுப்படுத்த முடியாத ஆசை எழ அவளுக்கு பொது தொலைபேசியில் இருந்து அழைத்தான்

"ஹலோ" என்றாள் சுமி உற்சாகமாய்

தான் என்று தெரிந்தால் இந்த உற்சாகம் வாடி விடுமே என அமைதியாய் இருந்தான்

சற்று நேரம் ஹலோ ஹலோ என்றவள் துண்டித்து விட்டாள்

அதற்கு பின் போன் செய்வதை விட்டுவிட்டான்

அன்றும் வழக்கம் போல் சுமேதவை பின் தொடர்ந்து சென்றவன் அவள் கிராஸ் கட் ரோடு அருகில் ஒரு கடையில் நின்று கொண்டு இருப்பதை எதிர்புறம் ஒரு நடைபாதை கடை அருகில் நின்று பார்த்து கொண்டு இருந்தான்

சட்டென சுமேதா தன்னை கண்டுவிட அங்கு இருந்து விலக வேண்டுமென அறிவு உணர்த்திய போதும் கால்கள் நகர மறுத்தன அவனுக்கு

அவள் ஐந்தடி தொலைவில் வந்தவுடன் அவள் முகத்தில் இருந்த பயம் அவனை வேதனை படுத்த அது தான் விலகி விட வேண்டும் என்ற உணர்வை தர அந்த இடத்தை விட்டு அகன்றான்

அவள் தன்னை கண்டதும் பயம் கொண்டது அவனுக்கு வேதனை அளித்தது. அதன் பின் அவளை வெகு தொலைவில் இருந்தே பார்த்தான்

வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் பெற்றோரின் புகைப்படத்தையும் சுமேதாவின் புகைப்படத்தையும் அவர்கள் அனிதாவை ஏமாத்த பேசிய காதல் பேச்சுகளையும் கேட்டு கொண்டே இருந்தான்
___________________________

அன்று சுமேதாவின் திருமண நாள். முடிந்த வரை தன் தோற்றத்தை தாடி மீசை என மாற்றி கொண்டு ஏதோ வயதானவன் போன்ற தோற்றத்துடன் ஒரு மூலையில் நின்று அவளை மணகோலத்தில் ரசித்தான் அருண்

ஆனால் தாலி கட்டும் நேரம் அவள் வேறு ஒருவனுக்கு சொந்தமாகும் வைபவத்தை காணும் மனபலம் இன்றி அங்கிருந்து வெளியேறினான்

அதற்கு மறுநாள் உயிரை போக்கி கொள்ளும் எண்ணத்துடன் வீட்டை காலி செய்து உரிமையாளரிடம் சாவியை ஒப்படைத்து விட்டு புகைப்படங்கள் ஆடியோ காசெட் எல்லாவற்றையும் எரித்தான்

போலீஸ் தன் உடலை கை பற்றும் போது அவர்களுக்கு சுமேதவை பற்றி எந்த தடயமும் சிக்க கூடாதென கவனமாய் செய்தான்

கடைசியாய் திட்டத்தை வகுத்தான். தன் பெற்றோரின் கல்லறைக்கு சென்று விட்டு வந்து இரவு வரை வெளியே சுற்றி விட்டு எதாவது ஒரு பூங்காவில் இருந்து பின் தூக்கமாதிரைகளை உண்பதென முடிவு செய்து முன்பே எழுதிய கடிதம் எல்லாம் பத்திரமாய் எடுத்து வைத்தான்

காலை பெற்றோரின் கல்லறைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்த போது சாய்பாபா கோவில் சிக்னலில் சுமேதாவும் அவள் கணவனும் காரில் இருப்பதை பார்த்தான்

சாகும் போது கடைசி ஆசையாய் இன்னும் சற்று நேரம் அவளை பார்க்க மனம் தவித்தது

அவள் அறியாமல் பின் தொடர்ந்தான். அவர்கள் கார் கொங்குநாடு கல்லூரி பக்கம் நிற்க அருண் எதிரில் இருந்த கடையில் ஒதுங்கினான்

பின் சூர்யாவின் வீடு வரை பின் தொடர்ந்து அங்கு இருந்த ஒரு சிறிய பூங்காவில் மறைந்து கொண்டான்

சில மணி நேரங்களுக்கு பின் அவர்கள் மீண்டும் வெளிய செல்ல அவர்களை பின் தொடர்ந்தவன் ஊட்டியில் அவர்கள் தங்கவந்த ஓட்டல் வரை வந்தான்

வந்தவன் ஊட்டியில் இருக்கும் வரை அவளை பார்த்து இருந்து விட்டு பின் சாவதென முடிவை மாற்றினான்

அவர்கள் உள்ளே சென்று பதிமூணாம் எண் அறை என வரவேற்பாளர் சொல்வதை கேட்டவன் சுமியும் சூர்யாவும் உள்ளே சென்றதும் தானும் ஹோட்டல் உள்ளே சென்றான்

"எனக்கு ஒரு ரூம் வேணும்" என்றான் அருண்

"இல்ல சார்... இப்ப தான் கடைசியா இருந்த ரூம் ஒரு கபில்க்கு குடுத்தேன்"

"ப்ளீஸ்... எவ்வளவுன்னாலும் ஒகே... ப்ளீஸ்"

"இல்ல சார்... இருந்தா தர மாட்டேனா... ஒண்ணு பண்ணுங்க நீங்க நாளைக்கி மதியம் வாங்க... ஒரு ரூம் காலி ஆகும்" என கூற

"ஒகே... தேங்க்ஸ்" என வெளியே வந்தவன் அங்கிருந்து செல்ல மனமின்றி சற்று நேரம் நின்று விட்டு பின் ஏதோ பார்க்கில் சென்று உறங்கினான்

மறுநாள் மதியம் சொன்னது போல் அந்த ஹோட்டலுக்கு வந்தான் அருண். அவனுக்கு பதினாலாம் எண் அறை கிடைக்க மிகவும் மகிழ்ந்தான் சுமி பதிமூணாம் எண் அறை என்பது தெரிந்ததால்

அவன் அறைக்கு சென்று உடை மாற்ற எண்ணிய நொடி அறை கதவு படபடவென தட்டப்பட திறந்தவன் அந்த போலீஸ் உடையில் ஒருவர் நிற்பதை பார்த்து அதிர்ந்தான்
______________________________
"இதான் சார் நடந்தது" என அருண் பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்தான்

"நீ சொல்றது உண்மைன்னு எப்படி நம்பறது?" என இன்ஸ்பெக்டர் இன்னும் சந்தேகமாய் பார்க்க

"சார்... இங்க பாருங்க சார்... என்னோட பாக்கெட்ல தூக்க மாத்திரை... அந்த என்னோட பேக் இருக்கே அதை எடுத்து பாருங்க... நான் தற்கொலை செய்துக்க போறேன்னு எழுதி வெச்ச லெட்டர் எல்லாம் இருக்கு" என அருண் கூற எல்லாவற்றையும் பார்த்த இன்ஸ்பெக்டர் இன்னும் கூட சந்தேகம் விலகாமல் பார்த்தார்

"இது எல்லாம் சரி தான்... ஒருவேளை நீ சுமேதாவை பழி வாங்கிட்டு சாகற முடிவுல இதை எல்லாம் வெச்சுருக்கயோனு எனக்கு சந்தேகமா இருக்கு... நீயே சொன்னியே நெறைய டிராமா ப்ளாக்மெயில் எல்லாம் செஞ்சதா"

"சார்... என்னை நம்புங்க சார்... நான் உண்மைய தான் சொல்றேன்"

"ஆனா..." என இன்ஸ்பெக்டர் ஏதோ கூறும் முன்

"அவன் உண்மை தான் சொல்றான் சார்" என ஒரு குரல் கேட்க இருவரும் திரும்பி பார்க்க... அங்கே...

இன்ஸ்பெக்டரை மீறி ஓடினான் அருண்

"சுமி...சுமி...உனக்கு ஒண்ணும் ஆகலை தானே... " என அவள் கையை பற்ற போனவன் அருகில் நின்றிருந்த சூர்யாவை பார்த்து விலகினான்

"நீங்க...?" என இன்ஸ்பெக்டர் ஆச்சிர்யம் விலகாமல் கேட்க

"நா... நான்...தான்.... சு... சுமேதா... " என்றாள் நடுக்கத்துடன்

"என்ன நடந்தது? எங்க போனீங்க நேத்து நைட்ல இருந்து? உங்களை யாராச்சும் கடத்தினாங்களா?" என இன்ஸ்பெக்டர் கேள்வி மழை பொழிய சுமேதா பெரிய மூச்சுக்களை எடுத்து தன்னை நிதானபடுத்திக்கொள்ள முயன்றாள்

"இன்ஸ்பெக்டர் ப்ளீஸ்... சுமி ரெம்ப பயந்து போன மாதிரி இருக்கா... கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும்" என சுரேஷ் கூற சுமேதா அண்ணனின் தோளில் ஆதரவாய் சாய்ந்தாள்

"என்ன சுமி... ? தண்ணி குடிக்கறயா?" என கேட்க

"ம்..." என்றாள் முனகலாய்

நீர் அருந்திய பின் சற்று பலம் வந்தது போல் இருந்தது சுமேதாவிற்கு

"சொல்லுங்க சுமேதா... என்ன நடந்தது?" என்றார் இன்ஸ்பெக்டர் விடாமல்

அவள் இன்னும் மருண்ட விழிகளுடன் இருக்க "சுமி... ரிலாக்ஸ் பண்ணு... நேத்து நைட் சூர்யா செல் போன் எடுக்க கார்க்கு போயிட்டு திரும்பி வந்தப்ப நீ ரூம்ல இல்லைன்னு சொன்னார்... அந்த நேரத்துல என்ன நடந்தது... சொல்லுடா" என சுரேஷ் பரிவுடன் கேட்க அவள் சூர்யாவை திரும்பி பார்த்தாள்

சூர்யாவும் "சொல்லு சுமி...என்னாச்சு?" என கேட்க

"அது...அது..." என அவள் தடுமாற

"அருண் ஹோட்டல் வாசல்ல நிக்கறான்னு எனக்கு போன் பண்ணின.. அப்புறம் என்ன நடந்தது? அவன் எதாச்சும் தொந்தரவு செஞ்சானா?" என கணேஷ் அருணை பார்த்து கொண்டே சுமேதாவிடம் கேட்க

"இல்ல... இல்ல...அருண் எதுவும் பண்ணல" என்றாள் அவசரமாய்

"வேற என்ன நடந்தது?" என இன்ஸ்பெக்டர் கேட்க

"நான்... இவர் செல்போன் எடுக்க போய் கொஞ்ச நேரம் வரலைனதும் அருண் எதாச்சும் அவர்கிட்ட பேசிடுவானோனு பயந்து கீழ போனேன். முன் வாசல் வழியா போனா அருண் பாத்துடுவானோனு லிப்ட்ல போகாம ஸ்டெப்ஸ்ல எறங்கி பின்னாடி வழியா போனேன்... " என மூச்சு வாங்கினாள்

கணேஷ் தண்ணீர் எடுத்துத்தர பருகியவள் தொடர்ந்தாள்

"கீழ போனப்ப இவர் கார் பார்கிங்ல இல்ல... ஒருவேளை நான் பின்னாடி வழியா வந்தப்ப இவர் லிப்ட்ல போய் இருப்பாரோன்னு மொதல்ல தோணுச்சு... எதுக்கும் பக்கத்துல எங்கயாச்சும் இருக்காரோனு பாத்துட்டே வந்தேன்... அப்போ ஒரு இருபதடி தூரத்துல இவர் போட்டு இருந்த மாதிரியே ஒரு மெரூன் கலர் ஷர்ட் தெரிஞ்சுது. கூப்ட்டேன் திரும்பல... ஒருவேளை கேக்கலை போல இருக்குனு பின்னாடியே போனேன்... பக்கத்துல போய் பாத்தா அது இவர் இல்ல...வேற யாரோ... சரி ஹோட்டல்க்கு போலாம்னு திரும்பி ஒரு அஞ்சடி கூட வந்திருக்க மாட்டேன்.. அப்போ... அப்போ... " என உடல் நடுங்க கண்களை மூடி சுரேஷின் தோளில் சாய்ந்தாள்

சற்று நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. பின் சுமேதாவே தொடர்ந்தாள்

"அப்போ... ஒரு பெரிய காட்டு நாய் மாதிரி ஒண்ணு... பக்கத்துல வந்தது... எனக்கு ரெம்ப ப... பயமாய்டுச்சு... பயந்து ஓட ஆரம்பிச்சேன்...வழில ஆள் நடமாட்டமே இல்ல... ரெம்ப தூரம் ஓடினேன்... நின்னு திரும்பி பாத்தா அந்த நாய காணோம்... ஆனா ஏதோ காட்டுக்குள்ள வந்துட்டேன்னு புரிஞ்சது. திரும்பி போக வழி தெரியல... கொஞ்சம் நேரம் அங்கேயே சுத்தி சுத்தி எதாச்சும் வழி தெரியுதான்னு பாத்தேன்... அதுக்குள்ள ஏதோ உறுமல் சத்தம்... ஏதோ மிருகம்னு பயந்து மரத்து மேல ஏறிட்டேன்... ஒரு கரடி... யானை... எல்லாம் வந்தது கொஞ்ச நேரத்துல... எனக்கு கீழ எறங்க ரெம்ப பயமா இருந்தது... களைச்சு போய் அப்படியே மரக்கிளைலையே தூங்கிட்டேன் போல இருக்கு... நல்லா வெளிச்சம் வந்தப்புறம் தான் நினைவு வந்தது... அப்புறம் தேடி தேடி ரோடு கண்டுபிடிச்சு வழில எல்லாம் விசாரிச்சு ஹோட்டல் வந்து சேந்தேன்... அந்த ஹோட்டல் ரிசப்னிஸ்ட் தான் என்னை நீங்க தேடுற விசயம் சொல்லி இங்க கொண்டு வந்து விட்டார்" என சொல்லி முடித்தவள் தண்ணி என ஜாடை காட்டினாள்

"இன்ஸ்பெக்டர் மத்த பார்மாலிடீஸ் எதாச்சும் இருந்தா நான் இருந்து முடிச்சுட்டு போறேன்... அவங்க போகட்டும்... ப்ளீஸ்" என கணேஷ் கூற சுமேதாவின் நிலை பார்த்து சரி என்றார் இன்ஸ்பெக்டர்

அதே நேரம் சுமேதாவின் பெற்றோரும் அங்கு வந்து சேர நடந்ததை சுருக்கமாய் அவர்களிடமும் கூறி சுமியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர் முதலில்

பின் தன் வண்டியை கணேஷை எடுத்து வர சொல்லிவிட்டு சுரேஷ் சூர்யாவுடன் சென்றான்
______________________________
சூர்யா ஆபீஸ் விசியமாய் அவசரமாய் வெளியூர் செல்லவேண்டுமென சுமேதாவை அவள் பெற்றோர் வீட்டிலேயே விட்டு சென்றான். சூர்யாவின் பெற்றோரும் வந்து பார்த்து விட்டு ஆறுதல் கூறி சென்றனர்

வீட்டுக்கு வந்த இந்த ஒரு வாரத்தில் சுமி அதிகம் யாருடனும் பேசவில்லை

அவள் அறையிலேயே அடைந்து கிடந்தாள். வீட்டில் உள்ளவர்கள் பேச முயன்ற போதும் தூக்கம் வருது என சென்று படுத்து கொண்டாள்

அன்று சுமேதாவின் அன்னை தன் மகனிடம் வருத்தத்துடன் கூறி கொண்டு இருந்தாள்

"சுமி சரியாவே சாப்பிடமாட்டேன்கறா சுரேஷ்..."

"அம்மா... சுமி ரெம்ப பயந்து போய் இருக்கா... இன்னும் அந்த அதிர்ச்சில இருந்து வெளிய வர்ல... கொஞ்ச டைம் ஆகும்"

"மாப்பிள்ளை இந்த நேரம் பாத்து வெளியூர் போயிட்டாரே... "

"என்னமா செய்யறது... கல்யாணத்துக்கு நெறைய லீவ் போட்டாரே... இன்னும் லீவ் எடுக்க முடியாதில்ல"

"அதில்ல... "

"அம்மா நீ தேவையில்லாம குழப்பிக்காதே" என சுரேஷ் ஆறுதலுடன் பேச

"அதில்ல கண்ணா... ஒருவேள மாப்பிள்ள சுமிய பத்தி தப்பா...எதாச்சும்..." என தயங்க

"அம்மா ப்ளீஸ்... சூர்யாவ பத்தி அப்படி பேசாதே...அவ காணோன்னதும் அவர் தவிச்ச தவிப்பை பக்கத்துல இருந்து பாத்தவன் நான்"

"இருந்தாலும் இவ இப்படி இருக்கறப்ப எப்படி விட்டுட்டு போக மனசு வரும்" என வருத்தமாய் கூற

"அம்மா நீ இன்னும் அந்த காலத்துலேயே இருக்க... கொஞ்சம் பிராக்டிகலா யோசிம்மா ப்ளீஸ்"

"ஆனா..."

"அம்மா... எனக்கும் இந்த உறுத்தல் இருந்ததும்மா... அதை ஊட்டில போலீஸ் ஸ்டேஷன்லயே சூர்யாகிட்ட கேட்டேன். அவர் என்ன சொன்னார் தெரியுமா சுமி உங்க தங்கைனா எனக்கு மனைவி, என்னில் பாதி... அவகிட்ட நீங்க வெச்சு இருக்கற நம்பிகையை விட எனக்கு நெறைய நம்பிக்கை இருக்குனு சொன்னார்மா... அவரை போய் சந்தேகப்படறியே"

"ஐயோ சந்தேகம் இல்ல சுரேஷ்... என்னமோ மனசுக்கு கஷ்டமா..."

"அம்மா சுமிக்கு இப்ப கொஞ்சம் ரெஸ்ட் வேணும்னு நெனச்சு கூட அவர் இங்க விட்டுட்டு போய் இருக்கலாம்... இந்த அதிர்ச்சில இருந்து அவ வெளிய வரணும்னு விலகி இருக்கலாம் நெனைச்சு இருப்பார்னு எனக்கு தோணுது"

"சரிப்பா... நான் தான் சும்மா குழப்பிக்கறேன் நீ சொன்ன மாதிரி...எப்ப வெளியூர்ல இருந்து வரார்னு சொன்னாரா?"

"தெரியலம்மா....நானே அவர்கிட்ட பேசணும்னு நெனச்சுட்டு இருந்தேன்... இரு இப்பவே கூப்பிடறேன்" என்றவன் சூர்யாவின் அலைபேசிக்கு அழைத்தான்

"ஹலோ சூர்யா"

"அ... சொல்லுங்க சுரேஷ்"

"எப்படி இருக்கீங்க சூர்யா?"

"ம்... இருக்கேன்... நீங்க?" என என்னமோ போல் கூற சுமியை பிரிந்திருக்கும் சோகம் என புரிந்து கொண்டான் சுரேஷ்

"நல்லா இருக்கேன். அப்புறம் வொர்க் எப்படி போயிட்டு இருக்கு"

"ஒகே... போயிட்டு இருக்கு... "

" ஒகே... அப்புறம்... எப்ப கோயம்புத்தூர் வரீங்க?"

"அது... அனேகமா... நாளைக்கி வருவேன்னு நினைக்கிறேன்... சரியா தெரியல... நான் வந்த
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

அதே கண்கள்.. Empty Re: அதே கண்கள்..

Post by udhayam72 Sun Jun 02, 2013 11:35 am

அன்று மாலை மகளை பார்க்கவென சுமேதாவின் பெற்றோர் மற்றும் அவள் அண்ணன் எல்லோரும் வந்திருக்க சுமேதா மிகவும் மகிழ்வாய் இருப்பது போல் தன்னை காட்டிக் கொள்ள முயன்றாள்

அதிசயமாய் அன்று சூர்யாவும் நேரத்திலேயே அலுவலகம் விட்டு வந்து விட உண்மையிலேயே அவள் மனம் மிகவும் சந்தோசமானது

"என்ன சுமி? இங்க வந்து ரெண்டே நாளுல ரெண்டு கிலோ வெயிட் ஏறிட்ட போல இருக்கே. என்ன சூர்யா? போற போக்க பாத்தா வீட்டு கதவெல்லாம் பெரிசாக்கணும் போல இருக்கே" என அவள் அண்ணன் சுரேஷ் கேலி பேச

"போண்ணா நீ... பாரும்மா இந்த அண்ணன" என அவள் அன்னை தோளில் சலுகையாய் சாய்ந்து கொண்டாள். எல்லோரும் அதை ரசித்து சிரித்தனர்

அப்போது அவளை கண்ட சூர்யா, பெற்றவள் அருகில் சிறு பிள்ளை போல் நிற்கும் இவளா தன் கோபத்திற்கு ஈடு கொடுத்து போராடுபவள் என நம்ப இயலாமல் பார்த்தான்

அவள் சிரித்த முகத்தில் ஒரு கணம் தன்னை மறந்து மனம் நெகிழ நோக்க அதே நேரம் சுமேதாவும் அவனை கண்ணோடு காண அவன் முகம் பாறையாய் இறுகியது

எதற்கு இநத கண்ணாமூச்சி ஆட்டமென புரியாமல் குழம்பினாள் சுமேதா

இப்படியே கோபமும் தாபமுமாய் ஒரு மாதம் கழிந்தது. தன் ஒவ்வொரு செய்கையிலும் அவளை தான் வெறுப்பதை பதிவு செய்ய முயன்றான் சூர்யா

அதை தன் அன்பான பார்வையால் / அணுகுமுறையால் தோற்கடித்தாள் சுமேதா. அது சூர்யாவின் கோபத்தை மேலும் அதிகமாக்கியது
_________________________________

அன்று பெரியவர்கள் இருவரும் ஏதோ நண்பர் வீட்டிற்கு சென்றிருக்க சூர்யாவும் அலுவலகம் சென்று விட ஏதோ புத்தகத்தை வைத்து கொண்டு நேரத்தை கொல்ல முயன்று கொண்டு இருந்தாள் சுமேதா

அதே நேரம் டெலிபோன் மணி அடித்தது

"ஹலோ"

"சுமி..." என பரிச்சயமான குரல் கேட்க

"சொல்லுமா... அப்பா அண்ணா எல்லாரும் ஆபீஸ் போயாச்சா?" என பெற்றவளின் குரல் கேட்ட மகிழ்ச்சி தெரிந்தது அவள் உற்சாகமான குரலில்

"ரெண்டு பெரும் கெளம்பியாச்சு சுமி. மாபிள்ள ஆபீஸ் போய்ட்டாரா?"

"ம்... கெளம்பிட்டாருமா"

"அத்த, மாமா?"

"யாரோ மாமாவோட பிரெண்ட்க்கு ஒடம்பு சரி இல்லைன்னு பாக்க போனாங்க அம்மா"

"சுமி... இப்படி இவங்க ரெண்டு பெரும் கிளம்பினப்புறம் தனியா இருக்கறப்ப தான் தோணும், இன்னும் கொஞ்ச நாள் உன்னை நம்ம வீட்டுலையே கல்யாணம் பண்ணாம கூட வெச்சுட்டு இருந்துருக்கணும்னு. படிச்சு முடிச்சதும் அனுப்பியாச்சு" என பெற்றவள் ஆதங்கமாய் கூற

"அப்படி செஞ்சிருந்தா என் வாழ்க்கை கூட நல்லா இருந்துருக்கும்மா" என வாய் வரை வந்த வார்த்தைகளை அடக்கி கொண்டாள்

மகள் பதில் எதுவும் பேசாமல் போக அவள் மனம் வேதனையுற பேசி விட்டோமோ என பதறிய அவள் அன்னை "சுமிம்மா... சும்மா மனசுக்கு பட்டத சொன்னேன்டா... வேற ஒண்ணுமில்ல...ஆனா அப்படி நெனச்சுருந்தா இப்படி ஒரு தங்கமான மாப்பிள்ளைய தவற விட்டுருப்போமே" என மகளின் மனதிற்கு இதமாய் பேச முயன்றாள்

கண்களில் துளிர்த்த நீரை சுண்டியவள் "ஆமாம்மா" என குரலில் மகிழ்ச்சியை காட்ட முயன்றாள்

சற்று நேரம் ஏதேதோ பேசினார்கள் அன்னையும் மகளும்

திடீரென நினைவு வந்தது போல் "சுமி... சொல்ல மறந்துட்டனே. உன் பிரெண்ட் திவ்யா போன் பண்ணி இருந்தா. அவளுக்கு கல்யாணமாம் இன்னும் ரெண்டு மாசத்துல. உன்கிட்ட பேசணும்னு நம்பர் கூட வாங்கினா. பேசினாளா?" என கேட்க

"இல்லையேம்மா... ச்சே... எனக்கு இப்பவே அவகிட்ட பேசணும் போல இருக்கு" என்றாள் உற்ற தோழியின் நினைவில்

"பேசேன் சுமி" எனவும்

"என்கிட்ட அவ நம்பர் இல்லமா இப்போ" என்றாள் வருத்ததுடன்

"இரு இரு... அவ ஏதோ செல்போன் நம்பர் குடுத்தா. இங்க தானே வெச்சேன். இதோ கிடைச்சுடுச்சு, எழுதிக்கரயா" எனவும்

"ஒரு நிமிஷம் இரும்மா... பேப்பர் பேனா ஒண்ணும் பக்கத்துல இல்ல. எடுத்துட்டு வரேன்" என தொலைபேசியை கீழே வைத்து விட்டு சென்றாள்

வரவேற்பறையில் எங்கும் பேனா சிக்காமல் போக மேலே தங்கள் அறைக்கு சென்றாள்

சூர்யாவின் கப்போர்டில் இருக்குமோ என எண்ணியவள் "என் பொருட்களை ஏன் கலைக்கிறாய்" என கோபம் கொள்வானோ என ஒரு கணம் தயங்கியவள், இல்லை என்றால் மட்டுமென்ன கொஞ்சவா செய்கிறான் என அவன் கப்போர்டை திறக்க முயல அது பூட்டி இருந்ததை கண்டு ஆச்சிர்யமானாள்

பூட்டி வைக்கும் அளவுக்கு அதில் என்ன இருக்கிறதென பார்க்கும் ஆர்வம் தலை தூக்க, ஒரு வழியாய் டிரெஸ்ஸிங் டேபிளில் இருந்த சாவி கொத்தில் இதற்கான சாவியை கண்டுபிடித்து திறந்தாள்

அதில் சிறிய டிராயர் போன்ற அமைப்பு இருந்ததை பார்த்து அதில் பேனா போன்ற பொருட்கள் இருக்குமென யூகித்து அதை திறந்தவள், அதிர்ச்சியில் மயங்கி விடாமல் இருக்க அதன் கதவை பற்றிக்கொண்டாள்...
______________________________

தன் கண்களால் கண்டதை இன்னும் நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் கண்களை கசக்கி கொண்டு பார்த்தாள்

தன் அன்னை தொலைபேசியில் காத்திருக்கிறாள் என்பது கூட மறந்து போனவளாய், உடலின் பலம் மொத்தமும் வடிந்தது போல் நிற்க கூட இயலாமல் கட்டிலில் அமர்ந்தாள்

சற்று நேரம் பெரிய மூச்சுகளை எடுத்து தன்னை ஆசுவாசபடுத்தி கொண்டவள் மீண்டும் எழுந்து வந்து கப்போர்டின் அருகே நின்றாள்.

அங்கு இருந்த அனிதாவின் சிரித்த முகம் அவளை பார்த்து கேலி செய்வது போல் இருந்தது

"அனிதாவின் போட்டோ எப்படி இங்கே? ஒருவேள அனிதா இவரோட காதலியோ... ஐயோ கடவுளே... வேண்டாம்... என்னால தாங்க முடியாது" என்றவளின் கண்களில் நீர் கட்டுப்படாமல் வழிந்தது

"இன்னிக்கி வந்ததும் கேட்டுட வேண்டியது தான்" என தீர்மானித்தாள். ஆனால் அடுத்த கணமே அவள் மனம் மாறியது

"ஆம் அவள் என் காதலி தான் என்று அவன் கூறிவிட்டால்...அதன் பின் என்ன செய்ய இயலும்... " என மனம் பதறியது

சில நிமிடங்கள் வெறித்து பார்த்தவள் மடங்கி அமர்ந்து சத்தமாய் அழுதாள். வீட்டில் யாரும் இல்லாத தனிமை அவள் உணர்வுகளின் வடிகாலுக்கு உதவியது

"இல்லை... அது தன்னால் இயலாது. அவன் மனதில் வேறு ஒரு பெண் என்பதை அவன் வாயால் கேட்கும் சக்தி தனக்கில்லை" என எண்ணத்தை மாற்றினாள்

"பேசாமல் தான் இதை பார்த்ததே மறந்து இன்று போலவே இருந்து விட்டால் என்ன" என எண்ணினாள்

"ஆனால் காலம் முழுக்க இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி கொண்டு என்ன வாழ்க்கை இது" என அவள் மனம் கசந்தது

"அனிதா தான் காதலி என்றால் அவளை மணம் செய்யாமல் தன்னை ஏன் மணந்தான். ஒரு வேளை அனிதாவுக்கு ஏதேனும்... " என மனம் பதற "அதற்கு தன்னை ஏன் பழி வாங்க வேண்டும்..." என நினைத்த நொடி அருணின் நினைவு வந்தது

"பாவி அவன் தான் அனிதாவை ஏதேனும் செய்து விட்டானோ. தன்னையே மிரட்டியவன் ஆயிற்றே. அவன் நாடகத்தை நம்பி இருவரையும் தான் இணைக்க முயன்றது சூர்யாவிற்கு தெரிந்திருக்குமோ. அதனால் தான் என்னை தண்டிக்கிராரோ?" என பலதையும் எண்ணி மனம் குழம்பினாள்

"எப்படி இருந்தாலும் அனிதாவிற்கு என்ன ஆனது என்பதை சூர்யா அறியாமல் கண்டுபிடிக்கவேண்டும். அதன் பின் தான் தன் வாழ்வை பற்றிய தீர்மானத்தை எடுக்க இயலும்" என முடிவுக்கு வந்தாள்

எந்த சூழ்நிலையிலும் சூர்யாவை விட்டு பிரிவதை அவள் மனம் ஏற்க மறுத்தது. அவன் தன்னை பழுதாய் வெறுத்த போதும் ஏன் மனம் அவனையே நாடுகிறது என சுய பச்சாதாபம் மேலிட அழுதாள்

எத்தனை நேரம் அப்படியே இருந்தாளோ அழைப்பு மணி சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். அத்தை மாமா தான் வந்துவிட்டார்கள் என புரிந்தவள் அவசரமாய் கப்போர்டை சாத்தி சாவியை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு கீழே வந்தாள்

அதற்குள் அழைப்பு மணி பல முறை ஒலித்தது. கதவை திறந்தவள் அங்கு சூர்யாவை எதிர்பாராததால் திணறிப்போனாள்

"நீங்க... ஏன்?" என பதற

"ஏன்... என் வீட்டுக்கு வர்றதுக்கு உன்கிட்ட பெர்மிசன் வாங்கனுமா" என கேலியாய் கேட்டான்

"இல்ல வெளிய போன அத்தை மாமா தான் வந்துட்டாங்கன்னு..." என தடுமாறியவளை யோசனையாய் ஏறிட்டான்

"ஏன் கண்ணு செவந்துருக்கு? யாரும் வீட்டுல இல்லைன்னு சுகமான தூக்கமோ... " என கேலி போல் கேட்க

"ஆமா... " என சமாளித்தாள்

"நல்ல கனவுல நான் தொந்தரவு பண்ணிட்டனோ" என ஏளனமாய் கேட்க

"இல்ல... " என என்ன பேசுவதென தெரியாமல் அவள் விழிக்க

"வழி விடு... " என அவளை இடித்து தள்ளாத குறையாய் உள்ளே வந்தவனின் கண்களில் முதலில் பட்டது கீழே எடுத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசி தான்

என்ன இது என்பது போல் அவளை பார்க்க "ஓ... அம்மா பேசிட்டு இருந்தாங்க" என்றாள் அப்போது தான் நினைவு வந்தவள் போல்

விரைந்து சென்று பேசியை எடுத்து காதுக்கு கொடுத்தவன் எந்த சத்தமும் இல்லாமல் போக "சொல்ற பொய்ய கரெக்டா சொல்லு" என்றான் இறுகிய முகத்துடன்

"இல்லங்க... நெஜமாவே அம்மாதான் பேசினாங்க. நான்..." அவளை இடைமறித்தவன்

"ஏய்... கொஞ்சம் முன்னாடி தூங்கிட்டு இருந்தேன்ன... இப்ப அம்மா போன் பேசினாங்கன்னு கதை விடற... என்ன நெனச்சுட்டு இருக்க உன் மனசுல..." என கர்ஜிக்க

"இல்ல... " என நிறுத்தினாள். தூங்கவில்லை என்றால் அழுததால் கண் சிவந்தது என்றோ அதற்கான காரணத்தையோ கூற இயலுமா என மௌனம் காத்தாள்

"என்ன? ஏன் நிறுத்திட்ட? உன் வேஷம் கலைஞ்சுடும்னா?" என ஆவேசமாய் நெருங்கியவன் அவள் கழுத்தை நெரிப்பது போல் பற்ற அவள் இருந்த மனநிலையில் துவண்டு போனாள்

"கொன்னுடுங்க... . இப்படி தினம் தினம் சாகரத விட ஒரேடியா போய்டறேன்" என அவள் கதற அவன் பிடி தளர்ந்தது

கிட்டத்தட்ட ஒரு மாதமாய் தனக்கு சரியாய் வாயாடி தன் கோபத்தை வெல்ல முயன்றவள் இன்று மொத்த தைரியமும் வடிய கதறியதை காண சகியாமல் வெளியேறினான் சூர்யா
______________________________

அதற்கு பின் சில நாட்கள் அமைதியாய் சென்றது. இருவரும் பேசுவது கூட குறைந்து போனது. எப்போதும் சூர்யா விலகி விலகி போனாலும் சுமேதா தான் வலிய வந்து வம்பு செய்வாள்

இப்போது ஏதோ யோசனையில் அவள் எப்போதும் அமைதியாய் இருந்தாள். அவள் மீது வெறுப்பும் கோபமும் இருந்த போதும் சூர்யாவிற்கு சுமேதாவின் அமைதி வேதனையை அளித்தது

அதற்கான காரணம் புரியாமல் அவளிடம் கேட்கவும் இயலாமல் தவித்தான். அவளே சொல்லட்டுமென மௌனமானான்

சுமேதாவோ அனிதாவை பற்றி அறிந்து கொள்ள முயன்றாள். அதன் முதல் கட்டமாய் அருணை தொடர்பு கொள்ள முயன்றாள். அந்த செல் நம்பர் உபயோகத்தில் இல்லை என அறிந்தாள்

கணேஷ் மூலம் அருணை கண்டுபிடித்தால் என்ன என தோன்ற கணேசின் எண்ணுக்கு அழைத்தாள். அழைப்பு சென்று கொண்டே இருந்ததே ஒழிய எடுக்கவில்லை

பொறுமை இழந்தவள் கணேஷின் வீட்டிற்கு தொடர்பு கொண்டாள்

"ஹலோ..." என கணேஷின் அம்மா குரல் கேட்க

"ஹலோ அத்தை நான் சுமேதா பேசறேன்" என்றாள்

"அடடா சுமிகண்ணு.. நல்ல இருக்கியாமா? கணேஷ் எல்லா விசியமும் சொன்னான். மனசுக்கு கஷ்டமா போச்சு... இப்ப எல்லாம் சரிதானேம்மா?" என உண்மையான அன்பு வழியும் குரலில் கேட்க

"இப்ப எதுவும் பிரச்சனை இல்ல அத்த... நல்லா இருக்கேன்" என கூறும் போதே தன்னையும் அறியாமல் அவள் கண்களில் நீர் வழிந்தது

"அப்புறம்மா... உங்க வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?"

"நல்லா இருக்காங்க அத்தை. கணேஷ் இருக்காரா அத்த?"

"இல்லமா, அவன் ஆபீஸ் வேலையா வெளியூர் போயிருக்கான். நீ செல்லுக்கு கூப்பிட்டு பாரேன்"

"செல்லுக்கு கூப்ட்டேன் அத்த, எடுக்கல... அதான் வீட்டு நம்பர்க்கு கூப்ட்டேன்"

"சில சமயம் வெளியூர் போனா போன் சரியா எடுக்காதுன்னுவான். வீட்டுக்கு கூப்ட்டானா பேச சொல்றேன் கண்ணு"

"சரிங்க அத்த ... கண்டிப்பா பேச சொல்லுங்க... ஒகே வெச்சுடறேன்" என பேசியை அணைத்து விட்டு திரும்பியவள் அங்கு சூர்யா கண்களில் கோபம் வழிய நின்றிருப்பதை பார்த்து அதிர்ந்தாள்

என்ன பேசுவதென புரியாமல் அவள் விழிக்க "சபாஷ்... நான் கூட உன்ன என்னமோன்னு நெனச்சேன்... " என ஏளனமாய் சிரிக்க

"ஐயோ... நீங்க என்னை தப்பாவே புரிஞ்சுக்கறீங்க சூர்யா....நான்..." என அவள் பேச முயல

"ஆமா... ஆமா... தப்பாத்தான் புரிஞ்சுட்டேன். கொஞ்ச நாளா நீ அமைதியா இருந்தத பாத்து கொஞ்சம் திருந்திட்டயோனு தப்பாத்தான் புரிஞ்சுட்டேன்"

"இல்லங்க... ப்ளீஸ்... "

"ஏய்... வாய மூடு... ஒண்ணுக்கு ரெண்டா ஆள் ரெடியா வெச்சுருக்க. அருண் இல்லேனா கணேஷ் கரெக்டா? நீ இவ்ளோ கேவலமா இருப்பேன்னு நான் நெனக்கல" என அவன் தன் பெண்மையையே அசிங்கபடுத்தி பேச அதற்கு மேல் பொறுக்க இயலாதவளாய்

"நிறுத்துங்க சூர்யா... என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு... ஆமா, நான் யார்கூட போனா உங்களுக்கு என்ன? அதை கேக்க நீங்க யாரு..." என கூறிய கணம் இடியாய் அவன் கை அவள் கன்னத்தில் இறங்கியது

அதை எதிர்பாராத சுமேதா வலியில் கண்ணில் நீர் வழிய உறைந்தாள். அந்த கணம் சூர்யாவின் கண்களில் அவள் கண்டது வெறுப்பை தவிர வேறில்லை என்பது அவளுக்கு தெளிவாய் புரிந்தது

மனதில் இத்தனை வெறுப்பை கொண்டிருப்பவன் என்றேனும் தன் மனதை புரிந்து கொள்வான் என நினைப்பது முட்டாள்தனம் என்பதை அந்த கணம் உணர்ந்தாள்

இனி தன் வாழ்வில் அவனுக்கு எந்த பங்கும் இல்லை என்பதை தீர்மானித்தாள்
______________________________

அனிதாவிற்கு என்ன ஆனது என்பதை அறிவது முக்கியம். அவளுக்கு அருணால் ஏதேனும் ஆகி இருந்தால் அதில் தனக்கும் ஒரு வகையில் பங்குண்டு

அதற்கு செய்ய வேண்டிய பிராயச்சித்தத்தை செய்து விட்டு தன் வழியே செல்ல வேண்டியது தான் என முடிவு செய்தாள்

கணேசின் அழைப்பிற்கு கூட காத்திருக்கும் பொறுமையின்றி மறுநாள் அருணின் இருப்பிடத்திற்கு சென்று பார்ப்பதென முடிவு செய்தாள்
_________________________________________

அன்று அதன் பின் சுமேதா சூர்யாவை நேரே பார்ப்பதை கூட தவிர்த்தாள். மறுநாள் சூர்யா அலுவலகம் கிளம்பி செல்லும் வரை அதிகம் அவன் கண்ணில் கூட படாமல் ஏதோ வேலையாய் இருப்பதை போல் பாவனை செய்து கொண்டிருந்தாள்

சூர்யா கிளம்பிய பின் தன் தோழியை சந்திக்க போவதாய் சூர்யாவின் அன்னையிடம் கூறி விட்டு கிளம்பினாள் சுமேதா

அதே நேரம் அலுவலகத்தில் வேலையில் மனம் பதியாமல் சூர்யாவின் மனம் அலைபாய்ந்தது. என்ன இருந்தாலும் அவளை கை நீட்டி அடித்தது தவறென குற்ற உணர்வில் தவித்தான்

தன்னை யார் என்று கேட்டதை அவனால் ஏற்று கொள்ள இயலவில்லை. தன்னை விட வேறு யார் அவளுக்கு முக்கியமாய் இருக்க இயலும் என மனதில் தோன்றிய கணம் அதிர்ந்தான்

என்ன இது? தான் அவளை திருமணம் செய்த நோக்கம் என்ன, ஏன் இநத தடுமாற்றம் இப்போது என தன் மேலேயே கோபம் வந்தது

அவள் செய்த பாவத்திற்கு அனுபவிக்கிறாள், நன்றாக அழட்டும், என்னை அழ வைத்ததற்கு இன்னும் அனுபவிக்க வேண்டுமென நினைத்தான்

எல்லாம் ஒரு கணம் தான். மீண்டும் அவள் தான் அடித்ததை தாங்காமல் கன்னத்தில் கை தாங்கி கண்களில் நீர் வழிய நின்ற காட்சியே கண் முன் வந்தது

அன்று காலை தன்னை பார்ப்பதை கூட தவிர்த்தாளே, என்னை மிருகம் என வெறுத்தே விட்டாளோ என வேதனை அடைந்தான்

அதே நேரம் சுமேதா காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் வந்து சேர்ந்தாள். ஒருமுறை மற்ற நண்பர்களுடன் அருணின் வீட்டிற்கு வந்திருக்கிறாள்

பஸ் நிலையத்தில் இறங்கி ஆர்.வீ ஹோட்டல் செல்லும் வழியில் நடந்து சென்ற நினைவு இருந்தது. ஒருவழியாய் அருணின் வீட்டை கண்டுபிடித்து அருகில் செல்ல வீடு பூட்டி இருந்தது

பக்கத்து வீட்டில் இருந்தவர் அருண் வெகு நாட்களுக்கு முன்பே வீட்டை காலி செய்து சென்று விட்டான் என்று கூறிய செய்தி அவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது

என்ன ஆயிற்றோ என்ற யோசனையுடன் மீண்டும் பஸ் நிலையம் நோக்கி நடக்க துவங்கிய நேரம் அவளை உரசுவது போல் ஒரு கார் வந்து நின்றது

அவள் அதிர்ந்து நகர கார் கதவை திறந்த சூர்யா "ஏறு வண்டில...." என்றான்

அவனை எதிர்பாராத அதிர்ச்சியில் "நீங்க... " என அவள் தடுமாற

"மொதல்ல வண்டில ஏறு..." என்றான் மிரட்டும் குரலில். அதற்கு மேல் நிற்க இயலாமல் உள்ளே அமர்ந்தாள்

அவள் அமர்ந்த கணம் கார் சீறி பாய்ந்தது. அவள் நடந்ததை கூற முயல "பேசாத... எதுவும் பேசி என்னை மிருகமாக்கிடாத...." என கத்தினான்

அவன் கண்களில் தெரிந்த கோபம் அவளை அதற்கு மேல் பேச விடாமல் தடுத்தது. நேரே தன் வீட்டிற்கு சென்றான். உள்ளே செல்லாமல் கேட்டின் வெளியே நிறுத்தினான்

"எறங்கு... " என்றான் கோபம் சற்றும் குறையாமல்

"சூர்யா ப்ளீஸ்... நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க..." என்றவளை கை பிடித்து காரின் வெளியே இழுத்தான்

"அம்மா அப்பா இருக்காங்கன்னு பாக்கறேன்... இல்லேனா இப்பவே வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் கொன்னு போட்டுடுவேன்..." தீவிரமாய் ஒலித்தது அவன் குரல், சொல்வதை செய்வேன் என்பது போல்

மீண்டும் அவன் கொடூர முகத்தை கண்டதும் சகலமும் அடங்க மௌனமானாள் சுமேதா

"நான் நைட் வீட்டுக்கு வர்ற வரைக்கும் நீ எங்கயாச்சும் வெளிய போனேன்னு தெரிஞ்சா அப்புறம் உயிரோட இருக்க மாட்டே..." என மிரட்டி விட்டு வேகமாய் காரில் கிளம்பினான்

அவன் கோபம் அவளுக்கு பழகியது தானென்றாலும் தன்னை அவன் இழிவாய் நினைப்பதை அவளால் ஏற்று கொள்ள இயலவில்லை

தன் பக்க ஞாயத்தை சொல்ல கூட ஒரு வாய்ப்பு தராமல் தண்டிப்பது வேதனை அளித்தது சுமேதாவிற்கு
______________________________

அன்று இரவு வெகு நேரம் கழித்தே வீட்டிற்கு வந்தான் சூர்யா. வீடு மொத்தமும் இருளில் மூழ்கி இருந்தது

கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல தன் அன்னை வரவேற்பறையில் இருப்பாள் என அவன் எதிர்பாராததால் "அம்மா...இன்னும் தூங்கலையா நீ..." என தயக்கமாய் நின்றான்

"இல்ல... நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் சூர்யா அதான் வெயிட் பண்றேன்" என்றார். தன் அம்மாவின் கண்களில் இருந்த தீவிரத்தை கண்டவன் சுமேதா ஏதேனும் கூறி இருப்பாளோ என அதிர்ந்தான்

"அம்மா எனக்கு டையர்ட்ஆ இருக்கு... மார்னிங் பேசலாமே..." என தவிர்க்க முயன்றான்

"இல்ல சூர்யா... இப்ப பேசணும்... காலைல நேரத்துலையே நானும் அப்பாவும் ஊருக்கு போறோம். தாத்தா பாட்டிய பாத்து நாளாச்சு. போய் ஒரு வாரம் இருந்துட்டு வரலாம்னு இருக்கோம்" எனவும்

"சரிம்மா... என்ன பேசணும்? சொல்லு" என்று சோபாவில் அமர்ந்தான்

"உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சன" என நேரடியாய் தாக்க சூர்யா தடுமாறினான்

"பிரச்சனையா...? என்ன? அப்படி ஒண்ணும் இல்லையே" என சமாளித்தான்

"இநத விசியத்துல மட்டும் ரெண்டு பேருக்கும் நல்ல ஒற்றுமை தான். அவள கேட்டாலும் இதே தான் சொல்றா... ஆனா ஏதோ பிரச்சனைன்னு மட்டும் எனக்கு நிச்சியமா புரியுது" எனவும் அவளும் எதுவும் கூறவில்லை என்றறிந்ததும் நிம்மதியாய் மூச்சு விட்டான் சூர்யா

"இல்லம்மா அப்படி எதுவும் இல்ல..." என எழுந்து உள்ளே செல்ல முயல

"ஒரு நிமிஷம் சூர்யா... நான் புத்தி சொல்ற வயசெல்லாம் நீ கடந்தாச்சு. கணவன் மனைவிக்குள்ள சின்ன சின்ன பிரச்சனைகள் வர்றது சகஜம் தான். எதுவா இருந்தாலும் அப்பப்ப பேசி தீத்துடணும். அனுபவபட்டவ சொல்றேன். அதுக்கு மேல உன் விருப்பம்" என்று விட்டு தன் அறைக்குள் சென்றார்

சற்று நேரம் யோசனையாய் நின்ற சூர்யா தன் அறைக்கு சென்றான்.அறை இருளில் மூழ்கி இருக்க விளக்கை உயிர்ப்பித்தான்

வெளிச்சம் கண்டு சுமேதா பதறி எழ அதுவரை மறைந்திருந்த கோபம் அவளை பார்த்ததும் மீண்டும் தலை எடுத்தது அவனுள்

"என்ன? நல்லா கனவுல உன் காதலனோட டூயட் பாடிட்டு இருந்தத கெடுத்துடேனோ?" என ஏளன பார்வை பார்க்க

"சூர்யா ப்ளீஸ்...நான் சொல்றத ஒரு நிமிஷம் காது குடுத்து கேளுங்க" என கெஞ்ச

"நிறுத்து... கேட்ட வரைக்கும் போதும்... நேத்து உன்கிட்ட அப்படி மிருகத்தனமா நடந்துக்கிட்டதுக்கு என் மேலேயே எனக்கு கோவம் இருந்தது. மனசு கேக்காம உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும்னு தான் இன்னிக்கி காலைல ஆபீஸ்ல இருந்து போன் பண்ணினேன்... நீ வெளிய போய் இருக்கேன்னு அம்மா சொன்னதுமே நீ அவன பாக்க தான் போய் இருப்பேன்னு தெரிஞ்சு தான் அங்க வந்தேன்... என் யூகம் பொய்க்கல" என கோபம் துளியும் குறையாமல் அவளை குற்றவாளி கூண்டில் நிறுத்தினான்

"கண்ணால் காண்பதும் பொய்..." என அவள் தன் நிலையை விளக்க முயல

"பேசாத... என்னை கொலகாரனாக்கிடாத... கணேஷ் லைன்ல கிடைக்கிலைனதும் அடுத்தது அவன் தானே... இல்ல வேற ஆப்சன்ஸ் ஏதும் இருக்கா இன்னும் எனக்கு தெரியாம..."

"ஐயோ... கடவுளே..." என அவள் கதற, அவள் கதறல் அவனை சிறிதும் அசைக்கவில்லை

"என்கிட்ட இருந்து போகணும்கறது தானே உன் விருப்பம்... போ... எவன் கூட வேணும்னாலும் போ... இந்தா டைவர்ஸ் பேப்பர்ஸ்... இதுல கையெழுத்து போடு... விவாகரத்து வந்ததும் எப்படியோ போய் தொல. ஆனா இந்த வீட்டுல இருக்கற வரை எங்க குடும்ப கெளரவம் போகறத பாத்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்..." என இரக்கமின்றி வார்த்தைகளை கொட்டினான்

சுமேதா சிலையாய் சமைந்தாள். இவனிடம் இனி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை உணர்ந்தாள். தன்னை வேசியாய் சித்தரித்து பேசுபவனிடம் என்ன சொல்லி புரிய வைப்பது.

மனதில் கடுகளவேனும் அன்பிருந்தால் நிச்சியம் அவனால் இப்படி பேச இயலுமா? அன்பும் காதலும் ஒரு பக்கமாய் இருந்து சாதிக்கபோவதென்ன என உடைந்து போனாள்

இப்படி இருப்பவனிடம் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என தீர்மானித்தாள். அவன் சொல்வது போல் விவாகரத்து பெற்று விலகுவது தான் சரி என முடிவுக்கு வந்தாள்

அவன் பெற்றவர்கள் ஊருக்கு சென்று திரும்பி வந்ததும் அவர்களிடம் ஒரு வார்த்தை கூறி விட்டு விலகுவது என தீர்மானித்தாள்.அதற்குள் அனிதாவை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டுமென நினைத்தாள்

அந்த இரவு இருவரும் ஒரு நொடியும் கண் மூடவில்லை

சூர்யாவின் நிலைமை இன்னும் மோசமாய் இருந்தது. தன்னை விட்டு விலகும் எண்ணத்தில் தானே இன்னொருவனை தேடிப்போனாள் என்பதை அவனால் தாங்க இயலவில்லை

தான் விவாகரத்தை பற்றி கூறிய போது மறுத்து பேசாமல் நின்றாளே. அவள் மனதில் நான் இருந்தால் ஏன் இந்த மௌனம்

தான் முன்பு நினைத்தது போல் அவள் சரியானவள் அல்ல. என்னை அப்படி நம்ப செய்ய அவள் நடத்திய நாடகம் தான் அது. அவளின் பல நாடகங்களில் இதுவும் ஒன்று

இவளால் எனக்கு நேர்ந்த துன்பத்தை எல்லாம் கூட மறந்து இவளை என் மனதில் இருத்த முயன்றேனே என தன் மீதே கோபம் கொண்டான்

மறுநாள் காலை சூர்யாவின் பெற்றோர் வெளியூர் கிளம்ப அதன் பின் இரண்டு நாட்கள் அந்த வீட்டில் மௌனமே ஆட்சி செய்தது
______________________________

அதே நேரம் சென்னையின் புகழ் பெற்ற அந்த மருத்துவமனையில் ஒரு நோயாளி யார் கைகளிலும் சிக்காமல் படிகளில் தாவி ஏறி கொண்டிருக்க மருத்துவமனை பணியாட்கள் பிடிக்க முயன்று கொண்டிருந்தனர்

"ஏய் நில்லு... சொன்னா கேளு... சரி நீ மருந்து சாப்பிட வேண்டாம் நில்லு" என பணியாள் கத்தி கொண்டே வர அந்த நோயாளியின் காதில் எதுவும் விழுந்ததாய் தெரியவில்லை

எல்லோருக்கும் போக்கு காட்டி விட்டு மொட்டை மாடிக்கு சென்று கீழே குதிக்க முயன்ற கணம் "அனிதா... " என்ற குரலில் நின்றாள்

குரல் வந்த திசையில் அருண் நிற்பதை கண்டவள் ஓடி சென்று அவன் கைகளை பற்றி கொண்டாள். "அருண்... அருண் ப்ளீஸ்... என்னை கூட்டிட்டு போய்டுங்க... இவங்க என்ன கொன்னுடுவாங்க... எனக்கு பயமா இருக்கு" என அழ எதுவும் புரியாமல் திகைத்தான் அருண்

"அனிதா என்ன ஆச்சு உனக்கு? அனிதா" என அவளை விலக்கி நிறுத்த முயன்றான். அவளோ, அவனை விட்டால் தனக்கு வேறு வழியில்லை என்பது போல் அவன் கைகளை இறுக பற்றி அவன் தோளில் தலை சாய்த்து நின்றாள்

அனிதாவின் பின்னோடு ஓடி வந்த டாக்டர் மற்றும் செவிலியர் அவளின் இந்த செய்கையில் திகைத்து நின்றனர்
______________________________________________

அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்தான் சூர்யா. டெலிபோன் மணி அடிக்க நிதானமாய் வந்து எடுத்தான்

எதிர்முனையில் சொன்ன செய்தியில் பதறினான். அவன் பதட்டத்தை கண்ட சுமேதா என்னவோ என பயந்து "என்னாச்சு..." என்றபடியே அவனருகில் வந்தாள்

அவள் இருப்பை கூட மறந்தவன் போல் "என்ன டாக்டர் சொல்றீங்க? இப்ப அனிதா எப்படி இருக்கா?" என கண்களில் நீர் துளிர்க்க கேட்டான் சூர்யா

அனிதாவின் பெயரை கேட்டதும் சுமேதாவின் முகம் மாறியது... "ஐயோ என்னாச்சு... சொல்லுங்க ப்ளீஸ்" என அவன் கையை பற்றி உலுக்க அவளை உதறினான் சூர்யா

"நான் இப்பவே வரேன் டாக்டர்... ப்ளீஸ்... இன்னொரு தரம் இப்படி நடக்காம பாத்துக்கோங்க டாக்டர்" என தொலைபேசியை கீழே வைத்தவன் உடனே அலுவலகத்துக்கு அழைத்து இன்று தான் வர இயலாது என தெரிவித்தான்

தன் அறைக்கு சென்று ஒரு பெட்டியை எடுத்து கொண்டவன் வேகமாய் கீழே வர படிகளின் முடிவில் நின்றிருந்த சுமேதாவை பொருட்படுத்தாமல் விலகினான்

கதவின் அருகில் வந்து அவனை மறித்து நின்றாள் சுமேதா. "என்னாச்சு சொல்லுங்க... அனிதாவுக்கு என்னாச்சு?"என கேட்க

"அவளை பத்தி உனக்கென்ன தெரியும்...வழி விடு" என கத்தினான்

"எதுவும் தெரியாது... உங்க காப்போர்ட்ல அவ போட்டோ பாத்து எதுவும் புரியாம மேல தெரிஞ்சுக்கணும்னு தான் கணேசையும் அருணையும் தேடினேன்... நீங்க அதையும் தப்பாதான் புரிஞ்சுக்கிட்டீங்க" என்றவளை ஒரு கணம் எதுவும் பேசாமல் பார்த்தான்

"வழி விடு" என்றான் எதுவும் காதில் விழாதது போல்

"முடியாது... அனிதாவுக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்னு சொல்லுங்க... அவளுக்கு என்ன ஆச்சு? எனக்கு தெரியணும்"

"எதையும் உங்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்ல" என அவளை கீழே தள்ள முயன்றான்

"ஏன்...? அவ உங்க காதலியா?" என கோபமாய் கேட்க

"ஏய்............." என அவளை அடிக்க கை ஓங்கினான். சுமேதாவின் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவனை அடிக்கவிடாமல் தடுத்தது "ஒழுங்கா வழி விடு" என கத்தினான்

"அப்ப நீங்க போற எடத்துக்கு நானும் வரேன்... " என கதவு திறந்து வெளியேறினாள். அவன் எதுவும் பேசாமல் வெளியே வர, அவசரமாய் வீட்டை பூட்டி விட்டு வந்து காரில் ஏறினாள்

சற்று நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. சுமேதா தான் ஆரம்பித்தாள் "ப்ளீஸ் சொல்லுங்க... உங்களுக்கும் அனிதாவுக்கும் என்ன உறவு?"

"நீ நெனக்கரமாதிரி எந்த உறவும் இல்ல" என்றான் உணர்ச்சியற்ற குரலில்

"ப்ளீஸ்... சொல்லுங்க" எனவும், அவளும் தெரிந்து கொள்ள வேண்டிய நேரமென நினைத்தானோ என்னமோ

"அவ என் சித்தி பொண்ணு... "

"என்ன....?" என்றாள் ஆச்சிர்யமாய், உடனே "என்னாச்சு அவளுக்கு..." என பதறினாள்

"செய்யறதையும் செஞ்சுட்டு என்னனு வேற கேக்கறையா?" என கோபமாய் கேட்க

"எனக்கு எதுவும் புரியல சூர்யா... ப்ளீஸ் சொல்லுங்க" என கெஞ்சலாய் கேட்க அதற்கு மேல் தாமதிக்க விரும்பாதவன் போல்

"ஒம்பது வயசுல வீட்டுக்கு திருட வந்த ஒரு கும்பலால தன்னோட அம்மா அப்பா அக்கா எல்லாரும் கொல்ல பட்டத பாத்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் அந்த அதிர்சசியிலேயே நடை பிணமா இருந்தா... அப்ப இருந்தே அவ எங்க வீட்டுல தான் வளந்தா... எனக்கு அவ மேல உயிர்..." என்றவன் வேதனையில் முகம் சுருங்க அதற்கு மேல் பேச இயலாமல் நிறுத்தினான்

அவன் முகத்தில் இருந்த வேதனையை பார்த்தவள் எதுவும் பேசவில்லை, அவனே தொடரட்டுமென அமைதிகாத்தாள்

"கொஞ்ச கொஞ்சமா பழசெல்லாம் மறந்து நிம்மதியா இருந்தோம் எல்லாரும். ஆனாலும் சின்ன வயசுலேயே ஏற்பட்ட அந்த அதிர்ச்சியால அவ ரெம்ப பயந்த சுபாவமாவே இருந்தா" என்றவன் காரை ஓரமாய் நிறுத்தினான்

பின் சீட்டில் இருந்த சூட்கேசில் இருந்து ஒரு டைரியை எடுத்து "இது அனிதா எழுதின கடைசி டைரி... போன வருஷ டைரி... நீயே படிச்சுக்கோ.. நீ பண்ணின பாவம் என்னனு புரியும்" என்றான் உணர்ச்சியற்ற குரலில். பின் எதுவும் பேசாமல் காரை கிளப்பினான்

சுமேதா டைரியை திறக்க முதல் பக்கத்தில் சூர்யாவின் புகைப்படம் அதன் மேல் "மை ஸ்வீட் அண்ணா" என்று எழுதப்பட்டிருந்தது அனிதாவின் கையெழுத்தில்
______________________________

//ஜனவரி முதல் நாள்: இன்னிக்கி ஒரே ஜாலி, அண்ணா புல் டே வீட்டுலையே இருந்தான்... அண்ணாதான் இந்த டைரி எனக்கு குடுத்தான். கடவுளே, எப்பவும் போல இந்த நியூ இயர் அன்னைக்கும் எனக்கு ஒரே ஒரு விஷ் தான். எனக்கு அடுத்த ஜென்மத்துலயும் இதே அண்ணா வேணும் ப்ளீஸ்....// என்பதோடு முடிக்கப்பட்டிருந்தது

அடுத்த வந்த பல பக்கங்கள் பெரும்பாலும் சூர்யாவை பற்றியதே. சிலது அவள் பள்ளியை பற்றியும் +2 வில் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர வேண்டுமென்பது பற்றியும் எழுதி இருந்தாள்.அதன் பின் சில பக்கங்கள் காலியாய் இருந்தன

//ஜூன் 28ம் நாள்: ரெம்ப நாள் கழிச்சு டைரி எழுதறேன் இன்னைக்கி. எக்ஸாம் பிஸி, லீவ்னு அப்படியே ஓடி போச்சு. இன்னிக்கி மொதல் மொதலா காலேஜ் போனேன். ரெம்ப பயமா இருந்தது. ராக்கிங் எல்லாம் பண்ணினாங்க. அத்தன பயத்துலையும் ஒரு சந்தோஷம் ஒரு அக்காவ பாத்ததுல. அவங்க பேரு சுமேதானு அவங்க பிரெண்ட்ஸ் கூப்பிட்டப்ப தெரிஞ்சுகிட்டேன். என் அக்கா உயிரோட இருந்திருந்தா இப்படி தான் இருந்துருப்பானு ஏனோ தோணுது. அவங்கள பாக்கவே அடிக்கடி சீனியர் க்ளாஸ் பக்கம் போய் இன்னிக்கி நெறைய ராக்கிங்ல மாட்டினேன்... இருந்தாலும் ஒகே. அவங்கள பாத்துல ஹாப்பி//

இதை படித்ததும் சுமேதாவின் கண்கள் நிறைந்தது. அடுத்த வந்த பக்கங்கள் பலவும் சூர்யாவுக்கு இணையாய் தன்னை பற்றியும் அனிதா எழுதி இருந்ததை ஆச்சிர்யமாய் படித்தாள் சுமேதா

தான் அணிந்து வந்த உடைகள் பற்றியும் தன் எல்லோரிடமும் பழகும் விதம் பற்றியும் நிறைய எழுதி இருந்தாள். அனிதா தன்னை இவ்வளவு கவனித்தாள் என்பதே சுமேதாவிற்கு இன்னும் நம்ப இயலாமல் இருந்தது. அவளை போய் அருண் பேச்சை கேட்டு வருத்தினோமே என தன் மீதே கோபம் வந்தது

அதை பற்றி என்ன எழுதி இருக்கிறாள் என அரிய பக்கங்களை வேகமாய் புரட்டினாள்

//டிசம்பர் 5 : இன்னிக்கி எனக்கு ரெம்ப கஷ்டமா இருக்கு. எனக்கு ரெம்ப பிடிச்ச சுமி அக்கா என்னை அழ வெச்சுட்டாங்க. யாரோ ஒருத்தர்கிட்ட போய் ஐ லவ் யு சொல்ல சொல்லி ராக் பண்ணினாங்க. எனக்கு என் அக்கா அப்படி செஞ்சது மனசுக்கு ரெம்ப கஷ்டமா இருக்கு. அக்கா ஏன் இப்படி செஞ்சாங்கன்னு தெரியல... ஆனாலும் ஐ லவ் அக்கா... ஐ லவ் மை சுமி அக்கா//

இதை படித்ததும் சுமேதா டைரியை மடி மீது வைத்து விட்டு கைகளால் முகம் பொத்தி விசும்பினாள்

அவளை திரும்பி பார்த்த சூர்யா தன்னையும் அறியாமல் அவளை நோக்கி நகர்ந்த கைகளை கட்டுப்படுத்தினான். எதுவும் பேசாமல் மீண்டும் சாலையில் கவனம் செலுத்தினான்

மீண்டும் டைரியை எடுத்து படிக்கலானாள் சுமேதா

// டிசம்பர் 6 : இன்னிக்கி காலேஜ் விட்டு வெளிய வர்றப்ப யாரோ ரெண்டு பேரு வந்து "அருண்கிட்ட மட்டும் தான் ஐ லவ் யு சொல்லுவியா எங்ககிட்ட சொல்ல மாட்டியானு" மெரட்டினாங்க. அதுக்குள்ள அண்ணா என்னை கூட்டிட்டு போக வந்துட்டாரு, தப்பிச்சுட்டேன்... ஆனா ரெம்ப பயமா இருக்கு. அண்ணாகிட்ட கூட சொல்லல//

//டிசம்பர் 10 : இன்னிக்கி எனக்கு ரெம்ப மூட் அவுட். சுமி அக்கா அந்த அருண லவ் பண்றாங்க போல இருக்கு. அக்காவுக்கு இன்னும் பெட்டரா மாப்பிள்ளை இருக்கணும்னு எனக்கு தோணுது. ஆனா சொல்ல பயமா இருக்கு. லைப்ரரி பின்னாடி பார்க்ல ரெண்டு பெரும் பேசிட்டு இருந்தாங்க. எனக்கு பிடிக்கல, நான் எழுந்து போயிட்டேன்//

//டிசம்பர் 13 : இன்னிக்கி அந்த ரெண்டு பேரு மறுபடியும் வந்து மெரட்டினாங்க காலேஜ்குள்ளேயே. எனக்கு காலேஜ் போகவே பயமா இருக்கு. அதுல ஒருத்தன் ரவுடி மாதிரி இருக்கான்... ரெம்ப பயமா இருக
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

அதே கண்கள்.. Empty Re: அதே கண்கள்..

Post by udhayam72 Sun Jun 02, 2013 11:39 am

"இதுல என்ன இருக்குங்க கணேஷ். அனிதா என் கூட பிறக்கலையே தவிர அவ என் தங்கை தான். அவளுக்கு ஒண்ணுனா என்னால தாங்க முடியறதில்ல... அதான் அருண் மேல கூட அவ்ளோ கோவம் வந்தது அங்க அவரை பாத்தப்ப. ஆனா உண்மை புரிஞ்சதும் கோபம் போய்டுச்சு" என கூறியவன் உட்பொருளாய் சுமேதாவிடம் உண்மை அறிந்த பின் உன்னிடமும் கோபம் இல்லை என கூற முயன்றான்

ஆனால் அது அவள் கருத்தில் பதியவில்லை. //அவளுக்கு ஒண்ணுனா என்னால தாங்க முடியறதில்ல... அதான் அருண் மேல கூட அவ்ளோ கோவம் வந்தது // என்றது மட்டுமே பற்றி கொண்டாள்

மீண்டும் அவளை கண்ணாடியில் பார்த்தவன் அவளிடம் எந்த மறுதலிப்பும் இல்லாமல் போக மீண்டும் கணேசிடம் திரும்பி "ஆனா நீங்க சொன்னது போல உங்க சுமி லக்கியா இல்லையானு எனக்கு தெரியாது. நான் ரெம்ப லக்கி" என சந்தோசமாய் சிரித்தான் சூர்யா

"என்ன சுமி... சூர்யா சொல்றதை கேட்டியா?" என கணேஷ் கேலி போல் சிரிக்க சுமேதா உறங்குவது போல் கண்களை மூடி கொண்டாள்

அவளிடமிருந்து பதில் வராமல் போக திரும்பி பார்த்த கணேஷ் "தூங்கிட்டா போல இருக்கு" என்றான் சற்று மெல்லிய குரலில்

ஆனால் அவள் உறங்கவில்லை என்பதை சூர்யா உணர்ந்தே இருந்தான். இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே, அதன் பின் உன்னை எப்போதும் அழ விட மாட்டேன் கண்மணி என மனதிற்குள் கூறி கொண்டான் சூர்யா

நான் ரெம்ப லக்கி என சூர்யா கூறியதை கேட்ட போதும் கூட "இதுவும் அவன் நாடகத்தில் ஒரு பகுதி போல" என தனக்குள்ளே கூறி கொண்டாள் சுமேதா

அது தான் விசித்திரமான மனித மனம் போலும். ஒன்றின் மீது பிடிப்பும் நம்பிக்கையும் உள்ள வரை சிறு துரும்பை கூட பற்றி படர எண்ணும் மனம் அந்த பிடிப்பு தளர்ந்து போனால் எதையும் சமாதானமாய் ஏற்க மறுக்கிறது

சில மணி நேர பயணத்திற்கு பின் காபி சாப்பிடலாம் என கணேஷ் கூற சூர்யாவிற்கு விரைவில் இல்லம் செல்லவே மனம் பறந்தது

விரைவில் தன் மனமாற்றத்தை தன்னவளுக்கு உணர்த்த மனம் பரபரத்தது, அதிலும் அவள் வாடிய முகம் அந்த வேகத்தை இன்னும் கூட்டியது

இருந்தாலும் கணேசை மறுக்க இயலாமல் வழியில் ஒரு இடத்தில் நிறுத்தினான் சூர்யா. சுமேதாவை எழுப்ப முயல அவள் நிஜமாகவே நல்ல உறக்கத்தில் இருந்தாள்

"எனக்கும் சேத்து வாங்கிட்டு வந்துடுங்க கணேஷ்.. நான் சுமி கூட இருக்கேன்" என சூர்யா கூற கணேஷ் சரியென சென்றான்

கணேஷ் அகன்றதும் சூர்யா பின் பக்கம் திரும்பி சுமியை எழுப்ப முயன்றான். எத்தனை நாள் தூங்காத தூக்கமோ என்பது போல் அயர்ந்து உறங்கி கொண்டு இருந்தவளை விழி அகலாமல் பார்த்தான்

மானசீகமாய் அவளிடம் மன்னிப்பு கேட்டான். கணேஷ் வருவதற்குள் அவளிடம் ஒரு வார்த்தையேனும் பேசிவிட துடித்த மனதை கட்டுபடுத்தினான்

அப்படி ஒரு வார்த்தையில் பேசி அவள் மனகாயத்தை ஆற்ற இயலாது என்பதை அவளை ஜென்ம ஜென்மமாய் அறிந்தவன் போல் உணர்ந்தான்

ஒருவழியாய் கணேஷ் திரும்பி வர அவர்கள் பயணம் தொடர்ந்தது

வழியில் நல்ல டிராபிக் இருக்க அவர்கள் வந்து சேர நினைத்ததை விட மிகவும் தாமதம் ஆனது

கோவையை சமீபிக்க சில மணித்துளிகள் இருக்கும் போது சுமி விழித்தாள், வெய்யில் கண்ணாடி வழியே ஊடுருவி கண்களை கூச செய்தது

அவளை பார்க்காமலே அவள் விழித்ததை உணர்ந்தவன் போல் சட்டென திரும்பி "நல்ல தூக்கமா சுமி?" என்றான் சூர்யா

அவன் கவனிப்பான் என எதிர்பாராதவள் அதிர்ந்தாள், சுதாரித்து "ம்... " என்றாள் ஒற்றை வார்த்தையாய் சோம்பல் போல

"என்ன சுமி? கஷ்டப்பட்டு டிரைவ் பண்றது சூர்யா. அவர் இவ்ளோ பிரிஸ்கா இருக்கார், நீ இந்த தூக்கம் தூங்கற?" என கணேஷ் கேலி செய்ய என்ன பேசுவதென தெரியாமல் முறுவலித்தாள்

அப்போது அவள் பார்வை தன்னையும் அறியாமல் சூர்யாவின் முகத்தில் பதிந்தது

அவன் முகத்தில் இதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து தெளிவாய், இன்னும் சொல்லப்போனால் சற்று சந்தோஷம் பரவி இருந்ததை அவள் உணர்ந்தாள்

இப்போது எல்லா புதிர்களும் விடுபட்டுவிட தான் அவனை விட்டு விலக போகிறேன் என்பதால் தான் அவன் முகத்தில் இந்த தெளிவோ என அவள் பேதை மனம் வாடியது

அவள் தன்னை கண்ணெடுக்காமல் பார்ப்பதை உணர்ந்து கணேஷ் பேசுவது எதுவும் மனதில் பதியாமல் இருந்தான் சூர்யா

ஒரு கட்டத்தில் தன்னை கட்டுப்படுத்த இயலாமல் கார் சிக்னலில் நின்ற போது அவளை திரும்பி பாத்தான், ஆழமாய் அவள் கண்களை ஊடுருவ முயன்றான்

அவன் பார்வையின் கூர்மையை தாங்க இயலாமல் அவள் முகம் வேறு புறம் திரும்பியது

அவன் பார்வைக்கான அர்த்தத்தை தேட முயன்றாள். எதுவும் புலப்படாமல் மௌனமானாள்
சூர்யாவிற்கோ அந்த கணமே அவளை கைகளில் ஏந்தி கொள்ள மனம் தவித்தது. அதே நேரம் சூர்யாவின் செல்போன் அலறியது

"ஹலோ... "


"...."

"எஸ்... சொல்லு பிரகாஷ்"

"...."

"ஆமா இன்னிக்கி ஆபீஸ் வரேன்..."

"...."

"இல்ல... கொஞ்ச லேட்டா வரேன்..."

"..."

"இல்ல பிரகாஷ்... மேனேஜ் பண்ணு எப்படியாச்சும்... கொஞ்ச நேரம்..."

"...."

எதிர்முனையில் உள்ளவர் என்ன கூறினாரோ சூர்யாவின் குரலில் சற்று முன் இருந்த அமைதி காணாமல் போக "ஒகே... I will be there as soon as possible" என சற்று சலிப்பு கலந்த குரலில் கூறினான்

கோபமாய் அவன் செல்போனை கீழே வீசுவது போல் வைக்க "என்னாச்சு சூர்யா? எனி ப்ராப்ளம்?" என கணேஷ் பதட்டமாய் கேட்க

"இல்ல கணேஷ்... கொஞ்சம் அவசரமா ஆபீஸ் போகணும்... யு. எஸ் ல இருந்து clients வர்றாங்க இன்னைக்கி... நேத்து எதிர்பாராம லீவ் எடுக்க எடுத்ததால முடிக்க வேண்டிய வேலை எல்லாம் பெண்டிங்... அதான்... " என்றவன் திரும்பி சுமேதாவை பாவமாய் பார்க்க, அவள் தன் முகத்தை தாழ்த்தி அவனை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தாள்

"சூர்யா... அப்படினா ஒண்ணு பண்ணலாம்... எங்க வீட்டுக்கு இன்னும் பத்து நிமிசத்துல போய்டலாம் தானே. சுமிய இங்க விட்டுட்டு போங்க. நான் வீட்டுல டிராப் பண்ணிடறேன்... நீங்க உங்க வீட்டுக்கு போயிட்டு அப்புறம் மறுபடி இந்த பக்கம் உங்க ஆபீஸ் வரணும்னா ரெம்ப டைம் ஆய்டும்... நீ என்ன சுமி சொல்ற?" என கணேஷ் கேட்க

"ம்.. சரி... நான் இங்கயே இறங்கிக்கறேன்..." என்றாள் சூர்யாவின் பார்வை தவிர்த்து

அது தான் நல்லது என அவளுக்கும் தோன்றியது. மீண்டும் அவனை தனியே சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தாமல் இருப்பதே நல்லதென அவளுக்கு தோன்றியது

அப்படி பேச நேர்ந்தால் தன் உறுதி தளர்ந்து விடுமோ என பயந்தாள்

அது மட்டுமில்லாமல் அவன் முன் போல் ஏதேனும் கோபமாய் பேசினால் தான் இன்றுள்ள மனநிலையில் தன்னால் தாங்கவும் இயலாது என உணர்ந்தாள்

சூர்யாவோ ஒரு பத்து நிமிடமேனும் அவளுடன் தனியே பேச வேண்டும் போல் துடித்தான். ஆனால் வேறு வழி இல்லாமல் கணேஷ் சொன்னது போல் சுமேதாவை கணேஷ் வீட்டில் விட்டு விட்டு கிளம்பினான்

கிளம்பும் முன், "சுமி... "என அழைத்தவன் "நான்.... நான் சீக்கரம் வர ட்ரை பண்றேன்... நீ ரெஸ்ட் எடு" என்றான் சூர்யா, ஏதோ சொல்ல வந்து ஏதோ சொல்வது போல்

அவள் சரி என்பது போல் தலை அசைத்தாள். அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்றை படிக்க முயன்று தோற்றாள் சுமேதா
_________________________________________________________________

கணேஷின் அன்னை வற்புறுத்தியும் அங்கு நீண்ட நேரம் தங்க மறுத்து விட்டாள் சுமேதா

வீட்டில் எல்லாம் அப்படியே போட்டது போட்டபடி இருக்கிறதென கூறி உடனே கணேசை அவள் வீட்டில் கொண்டு விட செய்தாள்

கணேஷ் கிளம்பியதும் சற்று ஆசுவாசபடுத்தியவள் அடுத்து செய்ய வேண்டியதென்னவென திட்டமிட்டாள்

முதலில் தங்கள் அறைக்கு சென்று சூர்யா சில நாட்களுக்கு முன் கோபமாய் அவள் முகத்தில் வீசிய டைவர்ஸ் பேப்பர்களில் கையெழுத்திட்டாள்

பொங்கி வந்த கண்ணீரை கட்டுப்படுத்தினாள். தனது பொருட்கள் சிலவற்றை எடுத்து ஒரு பெட்டியில் வைத்தாள்

மேஜை மீது இருந்த அவனது புகைப்படத்தை எடுத்தவள் அதற்கு மேல் கட்டுபடுத்த இயலாமல் கதறினாள்

சற்று நேரம் அழுது ஓய்ந்தவள், அந்த புகைப்படத்தையும் தன் பொருட்களோடு வைத்தாள்

ஏதோ நினைத்தவள் போல் அனிதாவின் புகைப்படத்தையும் எடுத்து கொண்டாள்

இரவு சாப்பிட்டது, அதுவும் அவன் வற்புறுத்தலில் சிறிது மட்டுமே சாப்பிட்டதால் உடலும் மனதோடு சோர்வுற ஏதேனும் உண்டாலொழிய தன்னால் திடமாய் செயல்பட இயலாது என்பதை உணர்ந்தவள் போல் உண்டாள்

அந்த கணம் சூர்யா ஏதேனும் சாப்பிட்டானோ என மனதில் தோன்ற, மீண்டும் மனம் சோர்ந்தது

இனி அவன் வாழ்வில் தான் ஒரு அங்கமாய் தான் இருக்கபோவதில்லை என்ற நினைவே, அவளை பலவீனப்படுத்தியது

இங்கு தனியாய் இன்னும் சற்று நேரம் இருந்தால் தானே மனம் மாறிவிடக்கூடும் என தோன்ற விரைந்து தன் பொருட்களை சேகரித்து கொண்டு கிளம்பினாள்

கிளம்பும் முன் டைவர்ஸ் பேப்பர்களை மேஜை மீது வைத்தவள் அதன் மேல் ஒரு குறிப்பையும் எழுதி வைத்தாள் "போகிறேன்... மொத்தமாய் போகிறேன்... நான் செய்த தவறை... முடிந்தால் மன்னிக்கவும்... - சுமேதா"
______________________________

அதே நேரம் அலுவலகத்தில் நிலைகொள்ளாமல் தவித்தான் சூர்யா

எப்போது சுமேதாவை காண்போமென்ற எண்ணமே அவனை முழுவதும் ஆக்ரமித்திருந்தது

உடனே அவள் குரலை கேட்க வேண்டுமென தோன்ற தன் வீட்டு எண்ணுக்கு அழைத்தான்

வெகு நேரம் மணி அடித்தும் சுமி எடுக்காமல் போக என்ன ஆனதோ என பதறினான்

ஒருவேளை கணேஷ் வீட்டிலேயே இருக்கிறாளோ, மிகவும் சோர்வாக வேறு இருந்தாளே என தோன்ற உடனே கணேசின் செல்போன் எண்ணுக்கு அழைத்தான்

"சொல்லுங்க சூர்யா..."

"கணேஷ்... ம்... சுமி இருக்காளா...? சும்மா... பேசலான்னு தான்" என தடுமாற

"சுமிய அப்பவே வீட்டுல டிராப் பண்ணிட்டனே சூர்யா... அம்மா இருன்னு எவ்வளவு சொல்லியும் கேக்கல... " என கணேஷ் கூற பதறிய மனதை கட்டுபடுத்திய சூர்யா

"ஒகே கணேஷ் நான் வீட்டுக்கு கூப்பிட்டு பாக்கறேன்" என சமாளித்து பேசியை துண்டித்தான்

என்ன ஆனது, எங்கு போனாள் என எதுவும் அனுமானிக்க இயலாமல் யாரை கேட்பது என எதுவும் தோன்றாமல் சற்று நேரம் மௌனமானான் சூர்யா

"ஏதேனும் தவறாய் முடிவு எடுத்து இருப்பாளோ" என தோன்றிய கணம் இதயம் சற்று நின்று இயங்கியது

"இல்லை, அப்படி செய்யும் கோழை இல்லை என் சுமி... " என உடனே தன்னை தானே சமாதானம் செய்து கொள்ள முயன்றான்

"வேண்டுமென்றே தன் மேல் உள்ள கோபத்தில் வீட்டில் தொலைபேசி எடுக்காமல் இருக்கிறாளென" மனதை அமைதிப்படுத்த முயன்றான்

அடுத்த கணமே இரவு கார் கண்ணாடியில் தெரிந்த அந்த வேதனை நிறைந்த முகம் கண் முன் வர உடனே அவளை பார்த்தால் தவிர தன்னால் மூச்சு விடவும் இயலாது என நினைத்தான்

ஆனால் அலுவலக வேலைகள் அவனை நகரவும் விடாமல் தடுத்தன. இன்னும் சற்று நேரம் பாப்போம் என வேலையில் கவனத்தை செலுத்த முயன்றான்
_____________________________________________

மகள் பெட்டியுடன் வீட்டினுள் நுழைந்ததை கண்ட சுமேதாவின் அன்னை துணுக்குற்றாள்

"என்ன சுமி? என்ன இந்த நேரத்துல தனியா? அதுவும் பெட்டி எல்லாம்" என பதற என்ன சொல்வதென புரியாமல் ஒரு கணம் சுமேதா விழித்தாள்

எப்படியும் சொல்ல வேண்டியது தானே என பேச தொடங்கியவள் பெற்றவளின் உடல் நிலை பற்றிய கவனம் வர, அண்ணனும் அப்பாவும் அருகில் இருக்க கூறுவது தான் சரியென மௌனமானாள்

"அது வந்தும்மா... ஒரு வாரம் இங்க இருக்கலாம்னு... ரெம்ப நாள் ஆச்சே நம்ம வீட்டுல ரெண்டு நாள் சேந்த மாதிரி இருந்து... என்னோட ட்ரெஸ் எல்லாம் அங்க இருந்தது... அதான் பெட்டி... "என ஏதோ சமாளித்தாள்

மகள் தன்னுடன் ஒரு வாரம் இருக்கபோகிறாளென்ற சந்தோசத்தில் பெற்றவளுக்கும் வேறு எதுவும் தோன்றவில்லை

"அப்படியா... இப்பவாச்சும் மாப்பிளைக்கு உன்னை அனுப்ப மனசு வந்ததே... " என பெற்றவள் மகிழ

"என்னை மொத்தமா அனுப்பணும்னு தானேமா இவ்ளோ நாளா போராடினாரு" என மனதில் தோன்றிய வார்த்தைகளை விழுங்கினாள் சுமேதா

"சரி சுமி... நீ போய் ட்ரெஸ் மாத்திட்டு வா... நான் உனக்கு பிடிச்ச காரக்கொழம்பு செய்யறேன் இன்னிக்கி" என அவள் அம்மா அன்பு மேலிட உரைக்க அது தன்னை பலவீனமாக்குவதை உணர்ந்த சுமேதா அந்த இடத்தை விட்டு அகன்றாள்

தன் அறைக்கு சென்றவள் சற்று மனதை நிலைபடுத்த முயன்றாள். அதே நேரம் அன்னை அழைக்கும் குரல் கேட்க வெளியே வந்தாள்

"இருங்க மாபிள்ள... சுமிகிட்ட குடுக்கறேன்..." என அவள் கையில் தொலைபேசியை கொடுத்துவிட்டு அவள் அன்னை நகர என்ன செய்வதென புரியாமல் அமைதியாய் நின்றாள்

பொறுமை இழந்த சூர்யா "சுமி...சுமி... லைன்ல இருக்கியா... சுமி" மீண்டும் மீண்டும் அழைக்க அவன் குரலை ஒரு முறை கேட்கும் ஆவல் தூண்ட "ம்..." என்றாள் மெதுவாய்

"என்ன சுமி இது? அம்மா வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு போய் இருக்கலாம்ல... வீட்டுல நீ போன் எடுக்காம.. எங்க போனயோனு...." என அந்த கணத்தின் நினைவில் பேச இயலாமல் நிறுத்த அவன் குரலில் தெறித்த உணர்வுகள் தன்னை தாக்குவதை உணர்ந்த சுமேதா

"நான் வெச்சுடறேன்..." எனவும்

"சுமி... ப்ளீஸ் ப்ளீஸ்... " என அவசரமாய் தடுத்தான்

"என்ன? சொல்லுங்க" என முற்றிலும் உணர்ச்சி துடைத்த குரலில் சுமேதா கேட்க அவள் குரலில் தெரிந்த மாற்றத்தை புரிந்து கொண்டவன் போல்

"சுமி... நான் உன்கிட்ட நெறைய பேசணும்டா..."

"வேண்டாம்...எனக்கு எதுவும் கேக்க வேண்டாம்..." என அவனை இடைமறித்தாள்

"சுமி ப்ளீஸ்... "

"குட் பை..." என துண்டித்தாள்

அவள் தன்னிடம் பேச மறுத்தபோதும் அவள் தாய் வீட்டில் தான் பத்திரமாய் இருக்கிறாளென அறிந்ததும் சற்று நிம்மதியானான் சூர்யா

அதன் பின் நடு இரவு வரை வேலை நகர விடாமல் பிடித்தது

ஒரு வழியாய் எல்லாம் முடித்து நாளை தான் அலுவலகம் வர வேண்டிய அவசியம் இல்லாதபடி எல்லாம் முடித்துவிட்டு கிளம்பினான் சூர்யா

"நேரே அவள் அம்மா வீட்டுக்கு இப்போது சென்றால் என்ன?" என தோன்றியது சூர்யாவிற்கு

ஆனால் நடு இரவில் சென்று கதவை தட்ட என்னமோ போல் தோன்ற, அதுவும் இல்லாமல் அவளிடம் நிறைய தனிமையில் பேச வேண்டியதும் உறைக்க காலையில் செல்வதே சரியென முடிவு செய்தான்
______________________________

தன் வீட்டுக்குள் நுழைந்த அந்த கணமே சுமி இல்லாத வெறுமையை அவன் மனம் உணர்ந்தது

தன் அறைக்கு சென்றவன் அங்கு மேஜை மேல் இருந்த டைவர்ஸ் பத்திரம் கண்ணில் பட துவண்டு போனான்

அதற்கும் மேலாய் அவளது குறிப்பு அவனது மனதை மொத்தமாய் கொன்றது "போகிறேன்... மொத்தமாய் போகிறேன்... நான் செய்த தவறை... முடிந்தால் மன்னிக்கவும்... - சுமேதா"

சுமேதாவின் அழகிய கையெழுத்தை கண்டதும், தன்னையும் அறியாமல் அவன் விரல்கள் அந்த எழுத்தை வருட, பின் தன் மார்போடு அணைத்து கொண்டான்

தான் விலகி சென்றபோதெல்லாம் தன் மனதை கொள்ளை கொள்ள முயன்றவள் இப்போது தான் மொத்தமாய் அவளிடம் சரணடைந்தபின் இப்படி விலகி செல்கிறாளே என வேதனைப்பட்டான்

அவளை தான் ஊட்டியில் வைத்து கொல்ல முயன்றேன் என்று அறிந்த பின்னும் மனதில் அத்தனை அன்பை தேக்கி கொண்டிருந்தவள், எத்தனை வேதனை ஆட்கொண்டிருந்தால் இப்படி விலகி செல்ல முடிவு செய்திருப்பாள் என தோன்ற, அதற்கு காரணமான தன் மீதே கோபமாய் வந்தது சூர்யாவிற்கு

ஒரு கணமும் கண் மூட இயலவில்லை அவனுக்கு

முந்தின தினம் உறங்காமல் நீண்ட நேரம் பயணித்து அன்று நாள் முழுவதும் வேலை நெரித்தும் கூட உறக்கம் அவனை தழுவவில்லை

தன் மனதில் நிறைந்திருப்பவளை கண்ணில் காணும் வரை உறக்கத்தை கூட தழுவ விட மாட்டேன் என்பது போல் பிடிவாதமாய் நேரத்தை கொல்ல முயன்றான்

முதல் முறையாய் தங்கள் திருமண ஆல்பத்தை ஆசையோடு பார்த்தான்

அதில் உலகின் சந்தோஷம் மொத்தமும் தனக்கே சொந்தம் என்பது போல் மகிழ்வாய் சுமேதா சூர்யாவை பார்த்து கொண்டிருந்த ஒரு புகைப்படம் அவன் கண்களை நிறைத்தது

எத்தனை கனவுகளோடும் ஆசைகளோடும் தன்னை மணந்திருப்பாள்... தான் செய்ததென்ன... ச்சே... என தன்னையே வெறுத்தான் அந்த கணம்

ஒரு வழியாய் ஜன்னல் வழியே மெதுவாய் விடியல் கண்ணுக்கு புலப்பட, அன்று தங்கள் வாழ்விலும் விடியலாய் இருக்குமென்ற நம்பிக்கையோடு எழுந்தான் சூர்யா
_______________________________________________________

"ஹாய் சுரேஷ்" என சூர்யா சுமேதாவின் அம்மா வீட்டினுள் நுழைய, அந்த காலை நேரத்தில் சூர்யாவை அங்கு எதிர்பாராத சுமேதாவின் அண்ணன் சுரேஷ் ஆச்சிர்யமாய் நோக்கியவன்

"வாங்க சூர்யா உள்ள வாங்க" என மகிழ்வோடு அழைத்தான்

"நீங்க ஆபீஸ் கெளம்பற நேரத்துல வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்..சாரி சுரேஷ்"

"ஐயோ... என்னங்க சூர்யா இது... நம்ம வீட்டுக்கு நீங்க வர்றதுக்கு... என்ன இது..." என்றவன் "அம்மா.. சூர்யா வந்திருக்காரு"என உள்நோக்கி குரல் கொடுத்தான்

"வாங்க மாபிள்ள..." என்றபடி சுமேதாவின் பெற்றோர் வெளியே வர அவர்களிடம் சம்பிரதாயமாய் வாய் பேசிய போதும் சூர்யாவின் கண்கள் சுமேதாவை தேடியது

அதை புரிந்து கொண்ட சுரேஷ் "சுமி எங்கம்மா?" என தன் அன்னையிடம் கேட்க

"இங்க தானே இருந்தா... இருங்க கூப்பிடறேன்... " என உள்ளே சென்றார்

சூர்யா மனதை அமைதிபடுத்த முயன்று தோற்று தவித்தான்

அதே நேரம் தன் அன்னையுடன் சுமேதா வரவேற்பறைக்கு வர "நேரத்துலையே எழுதுட்டயா சுமி?" என என்னமோ அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல் இயல்பாய் கேட்டான் சூர்யா

"ம்... " என்றவள் அதற்கு மேல் என்ன பேசுவதென புரியாமல் அமைதியாய் நின்றாள்

"சரி மாபிள்ள... நீங்க பேசிட்டு இருங்க... நான் டிபன் ரெடி பண்றேன்... " என அவள் அன்னை உள்ளே சென்றார்

சுமேதாவும் அவள் அன்னையின் பின்னோடு செல்ல அவளுடன் தனியே பேச இயலாமல் பொறுமையை இழுத்து பிடித்தான் சூர்யா

காலை உணவு ஆன பின் சற்று நேரம் பேசி கொண்டிருந்தவன் "சரி சுமி... டைம் ஆச்சு... போலாமா?" என அவளை பார்த்து கேட்க, என்ன சொல்வதென புரியாமல் விழித்தவள்

"நான்... என் பிரெண்ட் திவ்யா கல்யாணத்துக்கு..." என ஏதோ கூற வர

"ஆமா... சொல்லிட்டு இருந்தெல்ல... ம்...ரெண்டு பேருமே போலாம்... கிப்ட் எதாச்சும் வாங்கனுமா?" என எல்லாம் அறிந்தவன் போல் பேசி கொண்டே போனான்

"இல்ல... நான்..."

"ஓ... கிப்ட் வாங்கிட்டயா? ஒகே சுமி... டைம் ஆச்சு கெளம்பலாம்" என கடிகாரத்தை பார்த்து கொண்டே கூறினான், அவளுக்கு பேசவே அவகாசம் தராமல்

"என்ன சுமி... ஒரு வாரம் இருக்கேன்னு பெட்டி எல்லாம் தூக்கிட்டு வந்த..." என அவள் அன்னை குற்றம் சாட்டுவது போல் கூற அப்படியா என்பது போல் அவளை பார்த்தான் சூர்யா

"அது..." என சுமேதா ஏதோ கூற விழைய

"அது...அது வந்து அத்த... அம்மா அப்பா ஊர்ல இருந்து அடுத்த வாரம் தான் வர்றதா இருந்தது... அதான் சுமி இங்க இருக்கட்டும்னு நெனச்சேன்... ஆனா அவங்க இன்னைக்கே வராங்க... அதான்... அப்புறம் நெக்ஸ்ட் வீக் கொண்டு வந்து விடறேன் அத்த" என சூர்யா அவளுக்கும் சேர்த்து பேச அதற்கு மேல் மறுக்க இயலாமல்

"சரி சுமி... அடுத்த தரம் வரப்பவாச்சும் சேந்த மாதிரி ஒரு வாரம் இருக்கறாப்ல வா சரியா" என மகளுக்கு மனமின்றி விடை கொடுத்தாள் அன்னை

அதற்கு மேல் என்ன செய்வதென எதுவும் புரியாமல் அவனுடன் கிளம்பினாள் சுமேதா

கார் சற்று ஓட தொடங்கியதும் "நான் நான்..." என சுமேதா ஏதோ கூற தடுமாற

"நீ...நீ... எதுவும் பேச வேண்டாம்... வீட்டுல போய் பேசிக்கலாம்" என சூர்யா அவள் தவிப்பை ரசித்து சிரித்து கொண்டே கூறினான்

"நான்... வீட்டுக்கு வர்ல..." என்றாள் சுமேதா கோபமாய்

"சரி... வீட்டுக்கு வேண்டாம்... வேற என்ன போலாம் சொல்லு... எங்கயாச்சும் வெளியூர் போலாமா?" என்றான் மென்மையாய் அவள் கைகளை அழுத்தியவாறே

சட்டென அவன் கையை உதறியவள் "ஏன்... என்னை கொல பண்ண வேற வெளியூர்ல புதுசா எதாச்சும் பிளான் பண்ணி இருக்கீங்களா?" கோபம் சற்றும் குறையாத குரலில் சுமேதா கேட்க, அப்படி ஒரு கேள்வியை எதிர்பாராத சூர்யா ஒரு கணம் செயல்பட இயலாதவன் போல் காரை அவசரமாய் நிறுத்தினான்

அந்த அதிர்வில் தன்னை நிலைபடுத்திக்கொள்ள தன்னையும் அறியாமல் அவன் கையை பற்றியவள் அவசரமாய் விலகினாள்

சூர்யா இன்னும் அவள் கேள்வியின் தாக்கத்தில் இருந்து வெளி வர இயலாமல் அவளையே வேதனையோடு பார்த்தான்
______________________________

அவன் கண்களில் தெரிந்த வேதனை தன்னை அசைத்த போதும் அதை தன் கண்களில் அவன் கண்டுகொள்வானோ என பயந்தவளாய் முகத்தை வேறு புறம் திருப்பினாள் சுமேதா

அதற்கு மேல் வீட்டிற்கு வரும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை. கார் நின்றதும் தான், வீட்டிற்கு வந்திருப்பதை உணர்ந்த சுமேதா "நான்... போகணும்..." என்றாள் அவன் முகத்தை கூட பாராமல்

"போ...நான் தடுக்கல... அதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் பேசணும் சுமி" என அவன் குரல் நிதானமாய் ஒலித்தது

"எனக்கு... எதுவும் கேக்க வேண்டாம்..." என சுமேதா வெளியே கேட் பக்கம் நடந்தாள்

அவள் முன் வந்து மறித்தவன் "உள்ள வா.... உன்கிட்ட பேசணும் ப்ளீஸ்..." என்றான் அவள் கண்களை நேராய் பார்த்து

"வழி விடுங்க நான் போகணும்" என அவனை மீறி செல்ல முயன்றாள்

சட்டென அவள் கைகளை தன் கரங்களுக்குள் சிறை பிடித்தான் சூர்யா

அவன் தொடுகை தன்னை பலமிழக்க செய்வதை உணர்ந்தவள் அவன் பிடியில் இருந்து விடுவித்து கொள்ள போராடினாள்

என்ன செய்தாலும் உன்னை விடுவதாய் இல்லை என முடிவு செய்தவன் போல் சூர்யா இன்னும் தன் பிடியை இறுக்கினான்

இயலாமை கோபத்தை கிளற, அவன் பிடியை தளர செய்ய ஒரே ஆயுதமாய் தன் பேச்சை பயன்படுத்த எண்ணினாள் சுமேதா

"இப்ப என்ன? யாரும் இல்லாதப்ப என்னை கொன்னு எங்கயாச்சும் கொண்டு போய் போட போறீங்களா? உங்களுக்கு அந்த கஷ்டம் வேண்டாம். நானே எங்கயாச்சும் போய் விழுந்துடறேன்" என்றாள்

அவள் வார்த்தை மனதை வேதனையுற செய்த போதும் தன்னை பலவீனபடுத்தி தன்னை விட்டு விலகவே அப்படி செய்கிறாள் என்பதை உணர்ந்த சூர்யா பேச்சை மாற்றும் எண்ணமாய்

"தனியா கொல தான் செய்யணும்னு இல்ல சுமி... இன்னும்...." என மையலாய் புன்னகையுடன் நோக்கியவனை இடைமறித்தாள்

"போதும் நிறுத்துங்க... விடுங்க நான் போகணும்" என்றாள் தீர்மானமாய்

"நீயே வீட்டுக்குள்ள வர்றயா? இல்ல நான் தூக்கிட்டு போகணுமா?" என தான் அதற்கும் தயார் என்பது போல் அவளை தூக்க தயாராவது போல் பாவனையுடன் நெருங்கினான் சூர்யா சிறு முறுவலோடு

அவன் கோபத்தை கூட தாங்கி நின்று பழகியவள் இப்போது அவன் நெருக்கத்தை தாங்க இயலாமல் "விடுங்க வரேன்... " என்றாள்

அவளை விடுவிக்க மனமில்லாத போதும் அவள் பிடிவாதத்தை உணந்தவனாய் விலகி நின்றான்

சுமி எதுவும் பேசாமல் வீட்டினுள் சென்றாள்

உள்ளே சென்றதுமே "நான் தான் டைவர்ஸ் பேப்பர்ஸ் எல்லாம் சைன் பண்ணிட்டனே... இன்னும் என்ன வேணும்?" என எங்கோ பார்த்து கொண்டு சுமேதா கேட்க

"நீ தான் வேணும்..." என்ற சூர்யா அதற்கு மேல் விலகி நிற்க இயலாமல் அருகில் சென்று அவள் முகத்தை கைகளில் ஏந்தினான்

அவன் பார்வையை நேரே சந்திக்க இயலாமல் அவனை விட்டு விலகியவள்

"நான்... நான்... இங்க இருக்க மாட்டேன்... நான் உங்களுக்கு தேவை இல்ல" என்றவளின் குரலில் கோபம் மிகுந்து இருந்ததை உணர்ந்தான் சூர்யா

"சுமி ப்ளீஸ்... அப்படி சொல்லாத... நான் பண்ணினது தப்பு தான்... மன்னிக்கவே முடியாத தப்பு தான்... ஆனா அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனை வேண்டாம் சுமி..." என உணர்ச்சி மேலிட கூற

"இதுவும் உங்க டிராமால ஒரு பகுதியா...?" என இரக்கமில்லாமல் அவள் குரல் வெளிப்பட்டது

சற்று நேரம் அவன் எதுவும் பேசவில்லை. திரும்பி அவனை பார்த்தவள் அவன் துயரம் நிறைந்த முகம் மனதை பிசைய பார்வையை விலக்கினாள்

"சுமி... உன் கோபம் நியாமானது தான்... அதுக்கு காலம் பூரா நான் மன்னிப்பு கேக்க தயார். ஆனா எனக்கு நீ வேணும்" என அவள் அருகில் வர அவனருகில் தன் உறுதி தளர்வதை உணர்ந்தவள் விலகி சென்றாள்

"சுமி...நான் சொல்ல வேண்டியத சொல்லி முடிச்சுடறேன்... அதுக்கு மேல உன் விருப்பம்" என அவன் நிறுத்த அவள் பதிலேதும் பேசாமல் நின்றாள்

மீண்டும் அவனே தொடர்ந்தான் "ஆரம்பத்துல அனிதாவோட இந்த நிலைமைக்கு காரணமான அந்த ரெண்டு பேரை கண்டுபிடிக்க முடியாம போனப்ப, இதை ஆரம்பிச்சு வெச்சது நீ தான்னு அது ஒண்ணு தான் மனசுல இருந்தது. நான் பொய் சொல்ல விரும்பல... உன்னோட போட்டோவ தரகர் கொண்டு வந்தப்ப கல்யாணம் நிச்சியம் மட்டும் பண்ணி அப்புறம் விலகிடனும்... அப்படி தான் உன்னை பழி வாங்கணும்னு மட்டும் தான் எண்ணம் இருந்தது. ஆனா உன்னோட பழக ஆரம்பிச்சப்புறம் என்னையும் அறியாம எனக்கு மட்டும் தான் நீ சொந்தம்னு தோண ஆரம்பிச்சது" என்றவனை நம்பாமல் ஏறிட்டாள்

"ஆனா அப்போ அதை வாய் விட்டு சொல்லவோ மனசால ஏத்துக்கவோ முடியல சுமி... உன்மேல என் கவனம் பதிய பதிய என்னை இப்படி அடிமைப்படுத்தறேனு அதுக்கும் உன் மேல கோவம் தான் வந்தது. ஆனாலும் கல்யாணத்த நிறுத்த மனசு வரல. அனிதாவோட நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிட்டே போச்சு. நம்ம கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் முன்னாடி அனிதாவ பாக்க போனப்ப அவ என்னை கூட அடையாளம் தெரியாம கத்தினது தாங்க முடியல... அந்த கோபம் மொத்தமா உன்மேல தான் திரும்புச்சு... அப்ப தான் நான்...." என சொல்ல வந்ததை சொல்ல இயலாமல் சூர்யா நிறுத்த
______________________________

"என்னை கொல்லனும்னு முடிவு பண்ணினீங்களா?" என வேதனை நிறைந்த குரலில் சுமேதா அவனை நேருக்கு நேராய் பார்த்து கேட்டாள்

அவளின் வேதனை நிறைந்த குரலும் கலங்கிய கண்களும் அவன் குற்ற உணர்வை மேலும் கூட்ட கட்டுப்படுத்த இயலாமல் அவள் கைகளை பற்றி தன் நெஞ்சோடு வைத்து கொண்டான் சூர்யா

"சுமி... ப்ளீஸ்... நான்... நான் ஒரு ஒரு நாளும் நெனச்சு நெனைச்சு என்னையே வெறுக்கற ஒரு விஷயம் அது"

அவன் சொன்ன சமாதானத்தை ஏற்க இயலாதவள் போல் அவன் கையை உதறியவள் "எப்படி சூர்யா? நெஜமாவே உங்க மனசுல நான் சின்ன பாதிப்பயாச்சும் ஏற்படுத்தி இருந்தா என்னை... என்னை... அந்த நடு காட்டுல... " என்றவள் அதற்கு மேல பேச இயலாமல் அந்த பயங்கரமான நினைவில் தடுமாற

"சுமி..." என பதறியபடியே விரைந்து அவளை தன்னோடு அணைத்தான்

"நோ... என்னை தொடாதீங்க" என விலகினாள் சுமேதா

அவள் விலகியது பொறுக்காமல் "ப்ளீஸ்டா... சாரி சுமி...ப்ளீஸ்... சத்தியமா சொல்றேன்... அதை நெனச்சு உன்னை விட அதிகமா வேதனை படறவன் நான் தான் சுமி..." என தன்னிலையை அவளுக்கு புரிய வைக்க முயன்றான்

ஆனாலும் சற்றும் சமாதானமாகாத சுமேதா "இதை நான் நம்பனுமா?" என்பது போல் ஒரு பார்வை பார்க்க

"நான் சொல்ல வந்தத சொல்லி முடிச்சுடறேன் சுமி... அந்த நிமிச கோபத்துல வேகத்துல உன்னை அப்படி தனியா விட்டுட்டு வந்துட்டு உனக்கு எதுவும் ஆகி இருக்க கூடாதுன்னு என்னோட இன்னொரு மனசு ஏங்கினது எனக்கு தான் தெரியும் சுமி... அந்த நாள் எனக்குள்ள இருந்த மிருகம் என்னை பலவீனமாக்கிடுச்சு... "

"ஒருவேள நான் செந்திருந்தா..." என சுமேதா கேட்க ஒருகணமும் தாமதியாமல் "நான் அதுக்கப்புறம் உயிரோட இருந்துருப்பேனு தோணல" என்றான் சூர்யா

"ஹும்...அதான் திரும்பி வந்ததும் அவ்ளோ நல்லா பாத்துகிட்டீங்களா?" என ஏளனம் போல் கேட்டாள்

ஏளனத்தையும் மீறி அவள் குரலில் இருந்த வேதனையை உணர்ந்தவன் தன் மனதை மறைக்காமல் எடுத்துரைத்து அவள் வேதனையை போக்க எண்ணினான்

"திரும்பி வந்தப்ப மொதல்ல உன்னை face பண்ற தைரியம் எனக்கு இருக்கல சுமி... உனக்கு உண்மை தெரிஞ்சுடுச்சுனு புரிஞ்சப்ப நீ இனி என்னை முழு மனசோட நேசிக்க மாட்டேன்னு மனசுல ஒரு எண்ணம் வந்தது. என்னால அதை தாங்க முடியல...

உன்னை இனி இழந்துடுவேங்கர எண்ணமே என்னை பைத்தியமாக்கிடுச்சு. எப்படி என்னை உனக்கு புரிய வெக்கறதுன்னு புரியாம தவிச்சுட்டேன் சுமி. எல்லா உண்மையும் சொன்னா அந்த நிமிசமே நீ என்னை விட்டு போய்டுவயோனு பயம்

நீ கணேஷ்கிட்ட பேச முயற்சி பண்ணினப்ப, அருணை தேடி போனப்பவெல்லாம் நீ என்னை விட்டு விலகறயோனு... அதான் கோபமா வெளிப்பட்டது சுமி... சத்தியமா அதான் உண்மைடா... ப்ளீஸ் என்னை நம்பும்மா ப்ளீஸ்..." என அவள் முகத்தை தன் கையில் ஏந்தியவன்

"நீ அனிதாவ பத்தி தெரிஞ்சுக்க தான் அருணை தேடினேனு சொன்னப்ப அனிதாவ பாக்க போகனுங்கற அந்த பதட்டத்துலயும் என் மனசுல ஏற்பட்ட சந்தோஷம் உனக்கு புரியாது சுமி..."

சட்டென அவன் கையை விலக்கியவள் "அப்போ... என்னை அருண் கூட வேற விதமா தப்பாவும் யோசிச்சு இருக்கீங்க இல்லையா?" என கண்ணீரை கட்டுப்படுத்தி கொண்டு சுமேதா கேட்க

"ஐயோ... இல்லடா... நான் பண்ற கொடுமை தாங்காம... ஒருவேள..." என சூர்யா தடுமாற

"அவன்கிட்ட போய்டுவேன்னு நெனச்சீங்க இல்ல?" என அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள், தன்னை எப்படி அவன் அவ்வாறு நினைக்கலாம் என தாங்காமல்

"ப்ளீஸ் சுமி...அப்படி பாக்காத... என்னோட நெலமைல இருந்து ஒரு நிமிஷம் யோசிச்சு பாரு... ஏன் நீ நெனைக்கலையா? அனிதா உங்க காதலியான்னு கேக்கலையா? என் மேல உள்ள அன்புனால தானே அப்படி கேட்ட... ப்ளீஸ்டா என்னை நம்பு... ஐ லவ் யு சுமி... எனக்கு நீ வேணும்மா" என்றவனின் குரலில் இருந்த அன்பும் காதலும் அவள் பிடிவாதத்தை தகர்க்க அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் அவள் கண்ணீர் அணை மீறியது

அவள் அழுவதை காண சகியாமல் அவளை தன்னோடு அணைத்தவன் "ப்ளீஸ் சுமி... அழாதடா ப்ளீஸ்... ப்ளீஸ்...ப்ளீஸ்..." என சூர்யா அவளை சமாதானப்படுத்த முயல அவள் அழுகை மேலும் வலுத்ததே ஒழிய குறையவில்லை

"எ...என்னால... தா... தாங்க முடியல.... " என கதறினாள். துக்கம் தீரும் வரை அழுது ஓயட்டும், இனி எப்போதும் அவள் கண்ணில் நீர் வர தான் காரணமாய் இருக்க கூடாது என உறுதி பூண்டவன் போல் ஆதரவாய் அவளை அணைத்து நின்றான்

கதறல் தேம்பலாகி கேவலில் தொடங்கி விசும்பலில் வந்து நின்றது

"என்னால இன்னும் நடந்ததெல்லாம் நெனச்சா, தாங்க முடியல சூர்யா" என அவள் விசும்ப

"சாரிடா ப்ளீஸ்... நடந்த எதையாச்சும் மாத்த முடியும்னா அதுக்காக என்ன விலை குடுக்கவும் நான் தயார் சுமி... என்னை நம்புமா ப்ளீஸ்..." என ஆதரவாய் அவளை தன் மார்போடு அணைத்தான்

மெல்ல அவளை விலக்கி முகத்தை பார்த்தவன் அவளின் அழுது சிவந்த கண்களில் இதழ் பதித்தான். மீண்டும் தன்னோடு அணைத்து கொண்டான்

தனக்கும் அதுவே சம்மதம் என்பது போல் அவன் அணைப்பில் அசையாமல் நின்றாள் சுமேதா

அதற்கு பின் எதுவும் பேசக்கூட வேண்டியதில்லை என்பது போல் இருவரும் மௌனமாய் இருந்தனர்

சில நேரங்களில் பேசும் வார்த்தைகளை விட பேசாத மௌனம் பல செய்திகளை சொல்வதை இருவரும் அந்த கணம் அனுபவப்பூர்வமாய் உணர்ந்து நின்றனர்
______________________________

திடீரென ஏதோ நினைவு வந்தவள் போல் "அனிதாவ பத்தி அத்தை கூட என்கிட்ட எதுவும் பேசினதில்லயே... ஏன்?" என கேட்க

"அவள பத்தி பேசினாலே நான் ரெம்ப அப்செட் ஆய்டுவேன், சரியா சாப்டாம தூங்காம இருப்பேன்னு அந்த பேச்சே வீட்டுல இருக்காது சுமி. அம்மாவுக்கும் அவ மேல உயிர். அவளுக்கு எங்க யாரையும் அடையாளம் தெரியாம எங்களை பாத்தாலே பயந்து கத்தினப்ப அம்மாவால தாங்க முடியல. அவளுக்கு குணமாகற வரை பாக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க" என வருத்தம் மேலிட கூற

"என்னாலையே அவளை அப்படி பாக்க முடியல... சாரிப்பா... " என சுமேதா நிஜமான வருத்ததோடு கூற

"இனி பழச பத்தி பேச வேண்டாம் சுமி... அனிதா குணமாகி வர்றப்ப உன்னை அவ அண்ணியா பத்தா சந்தோசத்துல குதிக்க போறா பாரேன்" என தங்கையின் அன்பை நினைவு கூர்ந்தான்

"ம்... நானும் அந்த நாளுக்காக காத்துட்டு இருக்கேன்" என்றாள் சுமேதா

"சுமி... அனிதா மனசுல அருணோட பிம்பம் அப்படி பதிஞ்சு போய் இருக்குன்னா அதுக்க
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 41
Location : bombay

Back to top Go down

அதே கண்கள்.. Empty Re: அதே கண்கள்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jun 12, 2013 3:51 pm

[You must be registered and logged in to see this image.]ரொம்ப பெரிசா இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அதே கண்கள்.. Empty Re: அதே கண்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum