தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

4 posters

Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 12:09 pm

நன்றி - http://www.tamilvu.org/

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

தோற்றம்

‘புதுக்கவிதை’ என்ற பெயர் அநேகருக்குப் பிடிக்கவில்லை, இந்தப் பெயரைக் கண்டு
பலர் மிரளுகிறார்கள். கேலி செய்ய வேண்டும் என்ற தூண்டுதலை இது சிலருக்கு 
ஏற்படுத்துகிறது. இதன் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பார்த்துக் குழப்பம் 
அடைகிறவர்கள் பலர்.

காலவேகத்தில் கவிதைத்துறையில் இயல்பாக ஏற்பட்ட ஒரு பரிணாமம் இது. தமிழ்க்
கவிதையில் மறுமலர்ச்சி பெற்ற இப்புதுமைக்கு ‘புதுக்கவிதை’ எனும் பெயர் 1960 களில்
தான் சேர்ந்தது ‘நியூ பொயட்ரி’ என்றும், ‘மாடர்ன் பொயட்ரி’ என்றும் ஆங்கிலத்தில்
கூறப்படுவதை ஒட்டி, தமிழில் ‘புதுக்கவிதை’ என்ற பெயர் இம்முயற்சிக்கு இடப்பட்டது.

ஆயினும் ஆரம்பத்தில், யாப்பு முறைகளுக்கு கட்டுப்படாமல், கவிதை உணர்வுகளுக்கு சுதந்திரமான எழுத்து உருவம் கொடுக்கும் இப்படைப்பு முயற்சி ‘வசன கவிதை’ என்றே அழைக்கப்பட்டது. பின்னர், ‘யாப்பில்லாக் கவிதை’, ‘இலகு கவிதை’, ‘கட்டில்டங்காக் கவிதை’ (Free Verse) போன்ற பெயர்களை இது அவ்வப்போது தாங்க நேரிட்டது. 

புதுக்கவிதை என்பதில் மிரட்சிக்கோ பரிகாசத்துக்கோ, குழப்பத்துக்கோ எதுவும் இடம்
இல்லை.

முன்பு பழக்கத்தில் இருந்து வருகிற-மரபு ரீதியாக அமைந்த-ஒன்றிலிருந்து மாறுபட்டு
(அல்லது அதை மீறித்) தோன்றுவது புதுசு (புதிது). மரபு ரீதியான, யாப்பு இலக்கணத்தோடு
ஒட்டிய கவிதைகளிலிருந்து மாறுபடும் இக்கவிதைப் படைப்பு புதுக்கவிதை எனப் பெயர்
பெற்றது பொருத்தமேயாகும்.
பார்க்கப்போனால், கவி சுப்பிரமணிய பாரதி தனது எல்லாக் கவிதைகளையுமே 
‘புதுக்கவிதை’ என்றுதான் குறிப்பிடுகிறார்- அந்நாள் வரை இருந்து வந்த தமிழ்க்
கவிதைகளிலிருந்து அவை மாறுபட்ட தன்மைகளைப் பெற்ற படைப்புகளாக விளங்கியதால்,

‘சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
சொற்புதிது, சோதிமிக்க
நவகவிதை’

என்று பாரதியார் தன் கவிதைகளைப் பற்றிப் பெருமையோடு பேசுகிறார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 12:10 pm

தனது கவிதா உணர்வுகளையும் உள்ளத்தின் எழுச்சிகளையும், கனவுகள் கற்பனைகள்
எண்ணங்கள் அனைத்தையும் மரபு ரீதியான யாப்பு முறைகளுக்கு உட்படும்-கவிதைகளின்
விதம் விதமான வடிவங்களில் வெளிப்படுத்திய கவிபாரதி, இலக்கணத்துக்கு உட்படாத

புதிய வடிவத்திலும் உருக்கொடுக்க முயன்று வெற்றியும் கண்டார். அதுதான் ‘காட்சிகள்’
என்ற வசன கவிதைத் தொகுப்பு.

பாரதி தன் எண்ணங்களை எழுத்து ஆக உருவாக்குவதற்குப் பல சோதனைகளில்
ஆர்வம் கொண்டிருந்தார் என்பது அவரது படைப்புகளை ஆராய்வோருக்குப் புரியும்.
கவிதைகளில் பல சோதனைகள் செய்தது போலவே, வசனத்தில் தராசு, ஞானரதம், 
நவதந்திரக் கதைகள் போன்ற புதிய முயற்சிகளை அவர் செய்திருக்கிறார். அதே 
தன்மையில், வசனத்தை மீறிய, ஆயினும் கவிதையின் பூரணத்துவத்தை எய்தாத ஒரு 
முயற்சியாக அவர் படைத்துள்ள வசன கவிதைகளே ‘காட்சிகள்’. எனவே, கவி 
சுப்பிரமணிய பாரதிதான் தமிழ்ப் ‘புதுக்கவிதை’யின் தந்தையாவார்.

பாரதியின் ‘காட்சிகள்’ வசனம்தான்; அவரது படைப்புகளைத் தொகுத்துப் 
பிரசுரித்தவர்கள் தவறுதலாக அவற்றையும் கவிதைகளோடு இணைத்து, வசன கவிதை 
என்று வெளியிட்டுவிட்டார்கள் என்று அந்தக் காலத்தில் ஒரு சிலர் எதிர்க்குரல் 
கொடுத்தது உண்டு.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 12:10 pm

பாரதி ‘காட்சிகள்’ என்ற தலைப்பில் எழுதியிருப்பது வெறும் வசனம் அல்ல.
தவறுதலாகக் கவிதைத் தொகுதியில் இடம் பெற்றுவிட்ட வசன அடுக்குகள் என்று அதைக்
கொள்வதும் சரியாகாது. என்றோ எழுதப்பட வேண்டிய கவிதைச் சித்திரங்களுக்காக 
அவ்வப்போது குறித்து வைக்கப்பட்ட துணுக்குகள் என்று மதிப்பிடுவதும் பொருந்தாது.
பாரதியின் கட்டுரைகள் என்ற பெயரில் துண்டு துணுக்குகள், எண்ணச் சிதறல்கள் பற்பல
காணப்பட்ட போதிலும், ‘காட்சிகள்’ முழுமைபெற்ற-நன்கு வளர்க்கப்பட்ட-சிந்தனைக் 
கட்டுமானங்களாகவும், சொல் பின்னல்களாகவுமே அமைந்துள்ளன. 

தனது எண்ணங்களுக்கும், அனுபவங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் வெவ்வேறு
விதமான வடிவங்கள் கொடுக்க ஆசைப்பட்ட பாரதிக்குக் கவிதை ‘தொழில்’; இதயஒலி;
உயிர் மூச்சு. என்றாலும், கவிதை சில சமயங்களில் சக்தியை இழந்து விடுகிறது. வசனம்
அநேக சமயங்களில் கவிதையை விட அதிகமான வலிமையும் அழகும் வேகமும் பெற்று
விடுகிறது. இதை பாரதியே உணர்ந்திருக்கிறார். இதற்கு ‘பாஞ்சாலி சபதம்’ 
நெடுங்கவிதையில் வருகிற ‘மாலை வருணனை’ எனும் கவிதைகளும், பாரதி எழுதியுள்ள
‘ஸூர்யாஸ்தமனம்’ என்ற வசனப் பகுதியும் நல்ல எடுத்துக்காட்டு ஆகும். ஆகவே அவர்
‘வசன கவிதை’ என்ற புதிய சோதனையை மேற்கொண்டார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 12:11 pm

மேலும் பாரதி ‘வடிவம்’ (Form) பற்றி தெளிவாக சிந்திக்கிறார் என்று கொள்ள
வேண்டும். ‘வசனகவிதை’யில் வருவது இது-

“என் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது.
அதற்கு ஒரு வடிவம், ஓரளவு ஒரு நியமம்
ஏற்பட்டிருக்கின்றது

இந்த நியமத்தை, அறியாதபடி சக்தி
பின்னே நின்று காத்துக் கொண்டிருக்கிறாள்.
மனிதஜாதி இருக்குமளவும் இதே தலையணை 
அழி வெய்தாதபடி காக்கலாம்.
அதனை அடிக்கடி புதுப்பித்துக் கொண்டிருந்தால்

அந்த வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும்,
புதுப்பிக்கா விட்டால் அவ்வடிவம் மாறும்,
வடிவத்தைக் காத்தால்,
சக்தியை காக்கலாம்;
அதாவது, சக்தியை அவ்வடிவத்திலே காக்கலாம்; 

வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை
எங்கும், எதனிலும், எப்போதும் எல்லா விதத்
தொழில்களும் காட்டுவது சக்தி.

வடிவத்தைக் காப்பது நன்று, சக்தியின் பொருட்டாக.
சக்தியைப் போற்றுதல் நன்று வடிவத்தைக் காக்குமாறு.
ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவோர்
சக்தியை இழந்து விடுவர்.” (‘சக்தி’)

    பாரதி தன்னுள் லீலைகள் புரிந்த சக்தியைப் போற்றினார். சக்தியை விதவிதமான
வடிவங்களில் துதித்தார். பாம்புப் பிடாரன் பற்றி பாரதி கூறுவது அவருக்கும் பொருந்தும்.

“இஃது சக்தியின் லீலை,
அவள் உள்ளத்திலே பாடுகிறாள். அது
குழலின் தொளையிலே கேட்கிறது.
பொருந்தாத பொருள்களைப் பொருத்திவைத்து
அதிலே இசையுண்டாக்குதல்-சக்தி” 

    இப்படி ‘பொருந்தாத பொருள்களைப் பொருத்தி வைத்து அதிலே இசையுண்டாக்கும்’
முயற்சிதான் பாரதியின் வசனகவிதைப் படைப்பு ஆகும்.

தொடரும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கலைநிலா Thu Aug 01, 2013 12:41 pm

அன்பு மலர்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 10:29 pm

 கருவி பல, பாணன் ஒருவன்.
தோற்றம் பல, சக்தி ஒன்று.
 
     பாரதி என்னும் பாணன், தன்னுள் ஜீவனுடன் பிரவாகித்துக் கொண்டிருந்த சக்திக்கு
புறத்திலே பலப்பல தோற்றங்கள் கொடுக்க விரும்பியபோது அவருக்குப் பயன்பட்ட
கருவிகள் பல. முக்கியமானது கவிதை. வசனமும் வசன கவிதையும் பிற.

    
பாம்புப் பிடாரன் குழல் ஊதும் ஆற்றலை பாரதியின் வசன கவிதைச்
சொல்லமைப்புக்கு ஒப்பிடலாம். பாரதி சொல்கிறார்:
 
 இதோ பண்டிதன் தர்க்கிப்பது
போலிருக்கின்றது.
ஒரு நாவலன் பொருள் நிறைந்த
சிறிய சிறிய வாக்கியங்களை
அடுக்கிக் கொண்டு போவது போலிருக்கிறது,
இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்?
...
பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக
வாசித்துக் கொண்டு போகிறான்.  
 
     பாரதியின் வசனகவிதை முயற்சிகளும் பொருள் நிறைந்த சிறிய சிறிய 
வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவதும்பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாகவாசிப்பதும் ஆகத்தான் அமைந்துள்ளன.
 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 10:30 pm

     இந்த விதமான வசனகவிதைப்படைப்பில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை 
பாரதிக்கு ஏன், எப்படி ஏற்பட்டிருக்கக் கூடும் என்று இன்று சர்ச்சை செய்வது
சுவாரஸ்யமான யூகங்களுக்கே இடமளிக்கும். எனினும், பேராசிரியர் பி.மகாதேவன்
கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அபிப்பிராயமாகவே தோன்றுகிறது.
 
     பாரதி ரவீந்திரநாத் தாகூருடன் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டினார்; தாகூரின்
கீதாஞ்சலிமாதிரி அவரும் இதை எழுதினார் என்று மகாதேவன் சொல்லியிருக்கிறார்.
 
     தாகூரின் கீதாஞ்சலிமுதலிய படைப்புகளை ரசித்த பாரதி அவற்றைப்போல் வசனகவிதை படைக்க முன்வந்திருக்கலாம். அக்காலத்தில் அவருக்கு வால்ட் விட்மனின்
லீவ்ஸ் ஆவ் கிராஸ்பாடல்களும் அறிமுகமாகி இருந்தன. மேலை நாட்டு நல்ல 
கவிஞர்களின் திறமையை அறிந்து கொள்ளத் தவறாத பாரதி விட்மனையும் அறிமுகம் 
செய்து கொண்டிருந்தார். இதற்கு பாரதியின் கட்டுரையில் சான்று கிடைக்கிறது. வால்ட் 
விட்மன் பற்றி பாரதி இவ்வாறு எழுதியிருக்கிறார்- வால்ட் விட்மன் என்பவர் சமீப 
காலத்தில் வாழ்ந்த அமெரிக்கா (யுனைட்டெட் ஸ்டேட்ஸ்) தேசத்துக்கவி. இவருடைய 
பாட்டில் ஒரு புதுமை என்னவென்றால், அது வசனநடை போலேதான் இருக்கும். எதுகை,
மோனை, தளை ஒன்றுமே கிடையாது. எதுகை மோனையில்லாத கவிதைதான் உலகத்திலே
பெரிய பாஷைகளில் பெரும் பகுதியாகும். ஆனால், தளையும் சந்தமும் இல்லாத கவிதை
வழக்கமில்லை. வால்ட் விட்மான், கவிதையை பொருளில் காட்ட வேண்டுமே யல்லாது
சொல்லடுக்கில் காட்டுவது பிரயோஜனமில்லை யென்று கருதி ஆழ்ந்த ஓசை மாத்திரம்
உடையதாய் மற்றப்படி வசனமாகவே எழுதிவிட்டார். இவரை ஐரோப்பியர், காளிதாஸன்,
கம்பன், ஷேக்ஸ்பியர், மில்டன், தாந்தே, கெத்தே முதலிய மகாகவிகளுக்கு ஸமான
பதவியுடையவராக மதிக்கிறார்கள். குடியாட்சி, ஜனாதிகாரம் என்ற கொள்கைக்கு மந்திர
ரிஷிகளில் ஒருவராக இந்த வால்ட் விட்மானை ஐரோப்பிய ஜாதியார் நினைக்கிறார்கள்.
எல்லா மனிதரும், ஆணும் பெண்ணும் குழந்தைகளும், எல்லாரும் ஸமானம் என்ற
ஸத்யத்தை பறையடித்த மஹான்களில் இவர் தலைமையானவர்.
 
  (பாரதி கட்டுரைகள்: சமூகம்-நகரம்’)
 
     புல்லையும் மண்ணையும் நீரையும் மனிதர்களையும் நாடுகளையும் உற்சாகத்தோடு
பாடிப் பெருமைப்பட்ட விட்மனைப் போல பாரதியும் காற்றையும் கயிற்றையும் மணலையும்
விண்ணின் அற்புதங்களையும் மண்ணின் மாண்புகளையும் போற்றி, ‘பொருள் நிறைந்த
சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிதர்க்கித்துக் கொண்டு போக விரும்பியிருக்கலாம்.
பாரதத்தின் பழங்கால ரிஷகளைப் போல, உபநிஷத்
கர்த்தாக்களைப் போல பாரதியும் ஒளியை, வெம்மையை, சக்தியை, காற்றை, கடலை
ஜகத்தினைப் போற்றிப் புகழ இப்புதிய வடிவத்தைக் கையாண்டிருக்கலாம்.

    
அது எவ்வாறாயினும், தமிழுக்குப் புதிய வடிவம் ஒன்று கிடைத்தது. பாரதியின்
வசனகவிதை இனிமை, எளிமை, கவிதை மெருகு, ஓட்டம் எல்லாம் பெற்றுத் திகழ்கிறது.
இதற்கு ஒரு உதாரணமாகப் பின் வருவதைக் குறிப்பிடலாம்.
 
 நாம் வெம்மையைப் புகழ்கின்றோம்,
    
வெம்மைத் தெய்வமே ஞாயிறே, ஒளிக்குன்றே,
அமுதமாகிய உயிரின் உலகமாகிய
    
உடலிலே மீன்களாகத் தோன்றும்
விழிகளின் நாயகமே
    
பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே,
வலிமையின் ஊற்றே, ஒளி மழையே, உயிர்க்கடலே,
    
சிவனென்னும் வேடன் சக்தியென்னும்
குறத்தி உலகமென்னும் புனங்காக்கச்
    
சொல்லி வைத்து விட்டுப் போன விளக்கே,
கண்ணனென்னும் கள்வன் அறிவென்னும்
    
தன்முகத்தை மூடி வைத்திருக்கும்
ஒளியென்னும் திரையே.
    
ஞாயிறே, நின்னைப் பரவுகின்றோம்.
(ஞாயிறு புகழ்)
 
     இது வெறும் வசனம்தானா? இல்லை, இது கவிதைதான் என்று எப்படிச் சொல்ல முடியும்?
 
     வசனத்தின் வறண்ட, அறிவு பூர்வமான சாதாரண இயல்பை மீறியது. கவிதையின் 
தன்மையைப் பூரணமாகப் பெறாதது. எனவேதான் வசனகவிதைஎன்று பெயர் பெறுகிறது.
 
     பாரதி காட்டும் காட்சிகளின் பல பகுதிகள் கவிதை ஒளி பொதிந்த சிறு சிறு
படலங்களாகவே திகழ்கின்றன. ஆயினும் அவை கவிதை ஆகிவிடா. வசனகவிதைஎனும்
புதிய வடிவத்தின் ஜீவனுள்ள சித்திரங்கள் அவை. திரும்பத் திரும்பப் படித்துச் 
சுவைப்பதன் மூலம் அவற்றின் நயத்தையும் உயர்வையும் தனித்தன்மையையும்
உணரமுடியும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 10:32 pm

இரட்டையர்
 
     பாரதி தோற்றுவித்த வசனகவிதை முயற்சி பின்னர் 1930களின் பிற்பகுதியில்தான்
துளிர்விடத் தொடங்கியது. பாரதிக்குப் பிறகு புதுக்கவிதை முயற்சியில் ஆர்வத்துடன் முதன்
முதலாக ஈடுபட்டவர் . பிச்சமூர்த்திதான்.
 
     சிறுகதைத் துறையில் குறிப்பிடத் தகுந்த வெற்றி பெற்றிருந்த .பி., ‘பிக்ஷுஎன்ற
பெயரில் கவிதைகள் எழுதலானார். அவர் எழுதிய முதல் கவிதை எது, அது எந்தப்
பத்திரிகையில் பிரசுரமாயிற்று என்பது இப்போது தெரியவில்லை.
 
     (‘நான் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தது 1934 ‘மணிக்கொடியில்; ‘காதல்முதல்
கவிதை. தொடர்ந்து ஒளியின் அழைப்பு’, ‘கிளிக்குஞ்சு’, ‘பிரார்த்தனை’, ‘தீக்குளி
முதலியவை 1934-ம் வருஷ மணிக்கொடியிலேயே பிரசுரமாயின. 1934 முதல் நான் 
புதுக்கவிதை தொடர்ந்து எழுதியிருக்கிறேன்என்று .பி. ஒரு கடிதம் மூலம் பின்னர்
அறிவித்தார்.)
 
     நான் முதன் முதலாகப் பார்க்க நேர்ந்த பிக்ஷுவின் கவிதை கிளிக்கூண்டு’, 1937-ம்
வருடம் பிரசுரமான அருமையான இலக்கிய மலரான தினமணிஆண்டு மலரில் (புதுமைப்
பித்தன் பொறுப்பில் தயாரானது அது) வெளிவந்தது.
 
 இருளின் மடல்கள் குவிந்தன,
வானத்து ஜவந்திகள் மின்னின.
காவிரி நாணல்கள் காற்றில் மயங்கின,
மேற்கே சுடலையின் ஓயாத மூச்சு,
காலன் செய் ஹோமத்தில் உடல் நெய்யாகும் காட்சி,
கிழக்கே பெண்களின் மட்டற்ற பேச்சு, 
கட்டற்ற சிரிப்பு
காவிரி மணலில் குழந்தைகள் கொம்மாளம்...
 
 
     இப்படி இனிமையாக ஆரம்பிக்கும் அழகான வசனகவிதை அது. (கிளிக்கூண்டு 
என்ற இக்கவிதை, 1962-ல் சி.சு. செல்லப்பா தயாரித்த எழுத்துப் பிரசுரம் புதுக்குரல்கள்
1964-
ல் வெளியிட்ட ந. பிச்சமூர்த்தியின் வழித்துணைஆகிய இரண்டு தொகுப்புகளிலும்
இடம் பெற்றுள்ளது. பின்னர் பிரசுரம் பெற்ற பிச்சமூர்த்தி கவிதைகள்என்ற தொகுப்பிலும்
உள்ளது.)
 
     “சம்பிரதாயமான யாப்பு முறைகளுக்கு உட்படாமல் கவிதையைக் காணும் புதுக்கவிதை
முயற்சிக்கு, யாப்பு மரபே கண்டிராத வகையில் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன்
எழுதிய புல்லின் இதழ்கள்என்ற கவிதைத் தொகுப்புத்தான் வித்திட்டது. அதைப் 
படித்தபோது கவிதையின் ஊற்றுக்கண் எனக்குத் தெரிந்தது. பின்னர் பாரதியின்
வசனகவிதையைப் படிக்க நேர்ந்தது. என் கருத்து வலுவடைந்தது. இவற்றின் விளைவாக
என் உணர்ச்சிப் போக்கில் இக்கவிதைகளை எழுதினேன்என்று .பி. கூறுகிறார்.
 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 10:33 pm

     வசனகவிதை ரீதியில் கவிதை எழுதுகிறபோதே, மரபு வழிக்கவிதை போல் தோற்றம்
காட்டுகிற, ஓசை நயமும் செவிநுகர் செஞ்சொல் ஓட்டமும் நிறைந்த கவிதை இயற்றுவதிலும்
பிக்ஷு நாட்டம் கொண்டிருந்தார். 1937 இறுதியில் மணிக்கொடியில் பிரசுரமான அக்கா 
குருவிஇதற்கு நல்ல உதாரணம் ஆகும். வசனகாவியம்என்றுதான் அது அச்சாயிற்று.
 
 சித்திரைச் சூரியன் செஞ்சூலம் பாய்ச்சலால்
ஆற்றுமணல் வெள்ளம் அனலாகக் காய்ந்தது;
பத்தரை மாற்றுச் சொர்ணப்பொடி போல்ரவி
ஏற்ற மணல்காடு அங்கங்கு மின்னிற்று.
செழிப்புற்ற தோட்டமும் பாவீனும் ஏற்றமும்,
பேணாது பொங்கிய கவிஞன் கனவைப் போல்
எழில் மண்டித் தூங்கும் விரிசடை மரங்களும்
நாணாத பச்சைக்கை நீண்டு பரவல்போல
வானப் பகைப்புல சித்திர மூங்கிலும்
மொக்கின் வரிசையும் மலர்களின் சூழ்ச்சியும்
கானமே உயிர்மூச்சாய்க் கொள்ளும் பறவையும்
கொக்கின் வர்ணங்கொள் கரையோர நாணலும்...
 
 
     இவ்வாறு மேலே மேலே வளர்கிறது கவிதை. துன்பத்தில் அக்காவுக்கென்றென்றும்
ஏங்கும்ஒற்றைக் குயிலின் சோகத்துடன் முடிகிறது. 
 
     கொம்பும் கிணறும், மார்கழிப் பெருமை, பொற்றாமரை போன்ற வசன கவிதைகளை
ந.பி. 1939-ல் எழுதினார். அவை மணிக்கொடி, ஜெயபாரதி முதலிய பத்திரிகைகளில்
அவ்வப்போது பிரசுரமாயின.
 
     அதே காலகட்டத்தில்தான் கு.ப. ராஜகோபாலனும் கவிதை முயற்சியில் ஈடுபட்டார்.
அவரும் சிறுகதையில் சாதனைகள் புரிந்தவர்தான்.
 
     கு.ப.ரா. வின் வசனகவிதைகள் பிக்ஷுவின் கவிதைகளினின்று தொனியிலும், சொல்லும்
பொருளிலும் மாறுபட்டிருந்தன.
 
ஏர் புதிதா?
 
முதல் மழை விழுந்ததும்
மேல் மண் பதமாகி விட்டது.
வெள்ளி முளைத்திடுது, விரைந்து போ, நண்பா!
காளைகளை ஓட்டிக் கடுகிச் செல், முன்பு!
பொன் ஏர் தொழுது, புலன் வழிபட்டு,
மாட்டைப் பூட்டி
காட்டைக் கீறுவோம்! 
ஏர் புதிதன்று, ஏரும் நுகத்தடி, கண்டது,
காடு புதிதன்று, கரையும் பிடித்ததுதான்!
கை புதிதா, கார் புதிதா? இல்லை !

நாள் தான் புதிது, நட்சத்திரம் புதிது!
ஊக்கம் புதிது, உரம் புதிது!

மாட்டைத் தூண்டி, கொழுவை அழுத்து. 
மண் புரளும் மழை பொழியும்!
நிலம் சிலிர்க்கும் பிறகு: நாற்றும் நிமிரும். 
எல்லைத் தெய்வம் நிலம் காக்கும், கவலையில்லை!
கிழக்கு வெளுக்குது! 
பொழுதேறப் பொன் பரவும் ஏரடியில் 
நல்ல வேளையில் நாட்டுவோம் கொழுவை
  
 
     பெண்மையை வியக்கும், பெண்ணை எண்ணி ஏங்கும், அகத்துறைக் கவிதைகளையே
கு.ப.ரா. அதிகம் எழுதினார். கருவளையும் கையும்’, ‘பெண்ணின் பிறவி ரகசியம்’, ‘விரகம்
போன்ற பல இனிய கவிதைகள் ரசிகர்களுக்கு மகிழ்வூட்டும் படைப்புக்கள் ஆகும்.
 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 10:34 pm

     கிராமியக் காதலர்கள் பற்றி, கிராமியப் பாங்கான முறையில் கவிதை எழுதுவதிலும்
கு.ப.ரா. உற்சாகம் காட்டினார். நல்ல வெற்றியும் கண்டார்.அவரது அந்த ஆற்றலுக்கு ஒரு
உதாரணம் ராக்கி நெனப்பு’. (1939 - மணிக்கொடி, ஏப்ரல்15) 
 
 குட்டி அவ என்ன சோக்கு 
    
என்ன சோருதெரியுமா?
தீண்டாத சாதியவ 
    
கலியன் சாம்பான் பொண்ணுடா! 
பட்டிக்குச்சு மோட்டு மேலே 
    
பூத்த பறங்கி போலே 
ஏண்டா அங்ஙணெ போயி பொறந்தா 
    
கட்டுக் கொண்டெக்காரி? 
மட்டசாதி ஈனசாதி 
    
எண்ணு ஆர்ரா சொன்னவென்? 
அவனெக் கொண்டு அவமுன்னே 
    
நிறுத்தி யல்ல பாக்கணும்! 
கெட்ட பயமவடா அவ 
    
என்ன மயக்கு மயக்கரா! 
மவராசி போலே அவ 
    
மவா ராங்கிக்காரி! 
ஓடக்கெர மரத்துங்கீளே 
    
உருமத் துநேரம் 
மாட்டை ஓட்டி மேயவுட்டு 
    
படுத்திருக்கையிலே
கோடேவெயிலு காலுங்கீளே 
    
கொளுத்திச் சுட்டுப் பொசுக்க 
பாட்டை வெளியே போன ராக்கி 
    
அங்கே வந்து ஒதுங்ணா! 
வேத்துக் கொட்டி வெள்ளேச்சேலே 
    
மேலே ஓட்டிப்போயி 
அள்ளிச் சொருவியிருந்த மயிரு 
    
அவுந்து மேலே கொட்டி 
நேத்து தாண்டா அவளே கிட்டே 
    
பாத்து சொக்கிப் போனேன்! 
கள்ளிப் பசப்பிப் பேரைக் கேட்டா 
    
குனிஞ்சு நின்னு சிரிச்சா! 
அடபோடா - நீ யென்ன 
    
கண்டே அந்த அளவே? 
பொளுதே மறந்தேன் போக்கை மறந்தேன் 
    
பெறப்பெக் கூட மறந்தேன் 
மொடவன் பேலே மரத்துங்கீளே 
    
பாவிமய மாயம் 
உளந்து கெடந்தேன், பொச்சாய 
    
ஆத்தா வந்து பாத்தா! 
ராக்கி நெனப்பு ராக்கி சிரிப்பு- 
    
அது என்ன போடா- 
ராப்பவலா எந்நேரம் 
    
வேறே நெனப்பு இல்லே! 
பாக்கி நாளு என்னா செய்வேன் 
    
சொல்லு பாப்பம் சொக்கா! 
சப்புன்னு இருக்கு சீவன் 
    
செத்துப் போனாத் தேவலாம்,
 
 
     இதேபோல கள்ளுப் போனா போகட்டும் போடா எனக்கு சொக்கி இருக்கா 
சொக்கா!என்று முடியும் ரசமான கவிதை ஒன்றும் உண்டு.
 ‘சூறாவளியில் மயன்எழுதிய பாட்டைப் படித்தேன். ஆங்கிலத்திலும், பிற
பாஷைகளிலும் இந்தப் புதிய மோஸ்தரில் இது போன்ற பாட்டுகள் வெளிவருவதைப் 
பார்த்து அவ்வளவு வருத்தப்பட்டதில்லை. மற்ற பாஷைகளை பிடித்த பீடை தமிழையும்
தொத்தஆரம்பித்து விட்டதாகத் தெரிகிறது.
 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 10:35 pm

     செய்யுள் இலக்கண விதிகளையும், தளைகளையும் மீறி கட்டுப் பாடில்லாமல் 
எழுதப்படும் கவியை பிரஞ்சு பாஷையில் Vers Libre என்று சொல்லுவார்கள். இந்தக் 
கட்டுப்பாடில்லாத கவியினால் ஏற்படும் குணா குணங்களை நாம் ஆராய்ச்சி செய்ய 
வேண்டிய ஒரு நெருக்கடி ஏற்பட்டு விட்டது.
 
     கவிஞனுக்கு விலங்கிடலாமா என்று கேட்கலாம். கவிஞனுடைய கற்பனா சக்திக்கும்,
வெற்றிக்கும் ஓரளவு சுதந்திரம் அவசியந்தான். ஆனால், கவியானது சப்பாத்திக் கள்ளி
படர்ந்தது போல சட்டதிட்டங்களுக்கு உள்படாமல் திமிறிக் கொண்டு செல்லுமேயானால்
வியர்த்தமாகிவிடும் என்பது திண்ணம்.
 
     தமிழ்க் கவியின் இயல்பையும், சம்பிரதாயத்தையும், தாளலயத்தையும் தள்ளி 
வைத்துவிட்டு வசனத்தையே கவிரூபமாக கடுதாசியில் எழுதிவிட்டால் கவியென்று ஒப்புக்
கொள்ள முடியுமா?
 
     உணர்ச்சி பாவத்திற்கேற்ற வார்த்தைகள், வார்த்தைச் சேர்க்கையினால் உண்டாகும்
புதிய சக்தி; உணர்ச்சியின் ஏற்றத் தாழ்வுகள், துடிப்புக்காகக் காட்டக்கூடிய தாளம், Rythm
இவைகள் உண்மைக் கவிக்கு இன்றியமையாத சாதகங்களில் சில. இவற்றில் சிரேஷ்டமானது
தாளம்தான். தாளம் என்ற கருவியை வைத்துக் கொண்டுதான் கவிஞன் கேட்போருடைய
ஹிருதயத்தைத் தட்டி எழுப்பப் பாடாகப்படுத்திவிடுகிறான்.
 
     இந்தப் புதுரகக் கவிகளோ தாளத்தைக் கைவிட்டு விட்டார்கள். உரையும் 
செய்யுளுமில்லாத வௌவால் கவிதைக்கு தமிழில் ஒரு
ஸ்தானம்- நிரந்தரமான ஸ்தானம்-உண்டா?”
 
     28-5-1939 ‘சூறாவளிஇதழில் வந்த இதுதான் அச்சு ரூபத்தில், புதுக்கவிதைக்கு
விரோதமாக எழுந்த முதலாவது எதிர்ப்புக் குரல் ஆகும்.
 
     4-6-1939 இதழில் மயன்சிறுபதில் ஒன்று கொடுத்திருந்தார்.
 
     “Vers Libre” என்ற பதம் சுதந்திரத்தை நோக்கிஎன்று அர்த்தப்படும்- மேல்
நாடுகளில் சென்ற ஒரு நூற்றாண்டாகக் கலைகளின் தளைகளை அறுத்தெறியச்
செய்யப்பட்டு வரும் முயற்சிகளுக்கு பொதுவாக இப்பெயர் வழங்கி வந்திருக்கிறது.
 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 10:36 pm

     கவிகளுக்கு சுதந்திரம் வேண்டியதுதான் என்று ஒப்புக்கொள்ளும் மகராஜ் ஓரளவுக்கு
மேல் அந்த சுதந்திரம் இருக்கக்கூடாது என்று சொல்லுகிறார். கட்டுப்பாடில்லாதது என்று
சொல்லப்படும் இந்தக் கவிதைக்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு; அதை அனுசரித்து
எழுதினால்தான் அது கவிதையாகும் என்பதை மறந்து விட்டார் மகராஜ்.
 
     என்னைப் பற்றிய வரையில் எல்லா இலக்கியத்துக்கும் பொதுவான பாஷை
அர்த்தம் என்ற இரண்டு கட்டுப்பாடுகளே அதிகம் என்று சொல்லுவேன்”.
 
     அதே இதழில், வசனகவிதை முயற்சியைக் கேலி செய்யும் வசனகவிதைஎன்னும்
பரிகாசப் பாடல் ஒன்றும் வெளிவந்தது. அதை எழுதியவர் பெயர் வெறும் எஸ்என்றே
தரப்பட்டிருந்தது.*
 
 
வசன கவிதை
 
 
 எதுகையும் மோனையும் 
வேண்டவே வேண்டாம் 
சீரும் கீரும் 
சுத்தச் சனியன்கள் 
வெண்பாவும் கிண்பாவும் 
விருத்தமும் திருத்தமும் 
வேண்டாத தொல்லைகள்
 
மட மட வென்றும், 
கட கட வென்றும், 
மள மள வென்றும் 
வசன கவிதை 
எழுதித் தள்ளுவோம் 
ததாஸ்து
வாணியின் விலங்குகள்- 

கைவிலங்கும் கால்விலங்கும் 
படார், படார்! 
டணார், டணார்!
 
________________
*
அப்படி எஸ்என்ற பெயரில் எழுதியது தானேதான் என்று சுந்தாபின்னர் என்னிடம் தெரிவித்துள்ளார்.
விலங்குகள் எல்லாம் 
பொடிப் பொடியாகுக! 
பொடிந்த பொடியை 
ஹே காற்றே. 
கடலில் சேர்ப்பாய். 

ஜல்தி! ஜல்தி! 
டம், டம், டம். 
புரட்சி, புரட்சி 
இலக்கிய உலகில் புரட்சி செய்வோம் 
தாளத்தைப் போக்கிக் 
கூளத்தைக் கூப்பிடுவோம். 
இசையைத் தகர்த்து 
இம்சைகள் செய்வோம். 
அமைப்பை நொறுக்கி 
அலங்கோலம் செய்வோம் 

அகத்திய முனிவரை 
ஹோ ஹோவென்று 
அலற வைப்போம்.

கம்பனைக் கதற வைப்போம். 
எத்தனை சாத்தனார் 
எதிர்த்து வந்த போதிலும் 
அச்சம் இல்லை; அச்சம் இல்லை 
அச்சம் 
என்பது 
இல்லையே
  
 
     இதற்குப் பதில் பரிகாசச் செய்யுள் ஆக 11-6-39 இதழில் வந்தது. நாணல்
எழுதியிருந்தார். அந்நாட்களில் நாணல் (பேராசிரியர் அ. சீனிவாசராகவன்) வசன கவிதை
எழுதிக் கொண்டிருந்தார். அவரது அத்தகைய படைப்புக்கள் காலேஜ் மேகஸின்களில்
பிரசுரமாகி வந்தன. அவை இப்போது கிடைக்கமாட்டா. 
 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 10:38 pm

     ‘சூறாவளியில் அவர் எழுதிய பரிகாசம் யாப்பின் பெருமை’. அது பின்வருமாறு; 
 
     ‘சில ஆண்டுகளுக்குமுன், வளையாகேசி என்ற பழந்தமிழ் நூலைப்பற்றிய வரலாற்றை
ஆராய நேர்ந்த பொழுது பஃறுளிப் பள்ளம் என்ற ஊரிலே வேளாண் மரபிலுதித்தவரும்,
புலவருக்கு வரைவிலாது வழங்கும் வள்ளலும், சிவநேசச்செல்வருமான உயர் திருவாளர்
பலகந்தற் பிள்ளையவர்களிடத்திலே அருமையான பழஞ்சுவடிகள் பல இருப்பதைக்
கண்ணுற்று, பிள்ளையவர்களின் பேரன்பின் வழியாக அமைவதைப் பெற்றுப் பல காலம்
ஆராய்ச்சி செய்ததன் பயனாக தற்போது, வசனக்கவிதை என்று உலவி வருகின்றவிடமானது
பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னமேயே தமிழ் கூறும் நல்லுலகிற்றோற்ற, அவ்வமயம்
பாற்கடலிற்றோற்றிய நஞ்சையுண்டு வானவர்க்கருளிய பெம்மானைப்போற் பல புலவர்கள்
இந்நஞ்சைத் தலைசக்காட்ட வொட்டா தடித்து அமிழ்தினுமினிய
தமிழ்மொழியைக் காத்தனர் என்பதும், ‘ரிதும்என்று இக்காலத்தில் வழங்கிவருஞ் சொல்
ஆங்கிலச் சொல்லல்ல தமிழ்ச் சொல்லே என்பதும், இன்னன போற்பிறவும் தெற்றென
விளங்க, சூறாவளி ஏழாவது இதழில் வெளியாகியுள்ள வசனகவிதைஎன்ற கட்டுரையைக்
கண்ணுற்றுக் கலங்கியாப்பின் பெருமையைக் காக்கத் தொல்காப்பியனார் மரபிற் றோன்றிய
எதுகைக் கீரி, மோனைப் பூனை முத்தமிழ்க் கோடரி உளறுவாய்ப் புலவர் மாணாக்கனார்
தவளைக் குரலார் யாத்த செய்யுளொன்றைக் கீழே வெளியிடத் துணிந்து ஏட்டுப்
பிரதியிலுள்ளவாறே வெளியிட்டால் விளங்குவதரிதாமென நினைத்து சிற்சில
மாறுதல்களோடு வெளியிடப் போந்துளமாகலின் அத்தொண்டைச் செவ்வனே ஆற்றற்குரிய
ஆற்றலை அளித்த அருமறை முதல்வன் திருவடி சிந்தித்து வணங்குகின்றனம்;
 
 கரும்பு போலத் தித்திக்கும் 
    
கற்கண்டைப் போலினிதாகும் 
துரும்பு போல வலிதாகும் 
    
தூவென்றால் பின் சூவாகும் 
கரும்பு மலர் கண்டிசை பாடும் 
    
கடுகற் பொதிய முனிவன் சொல் 
விரும்பிச் சீர்தளை யெதுகையினை 
    
விரும்பிற் பொருளை விரும்புவரோ? 
விரும்பு சோளக் கவின் கொல்லை 
    
வித்தங் காக்கு விம்மம் போல 
திரும்பிப் பொருளைப் பாராமல் 
    
திருதிரு வென்று தயங்காமல் 
அரும்பு சொல்லின் செல்வமெலா 
    
மசையில நிறைந்து நேராக 
எறும்பு கல்லைத் தோய்ப்பதுபோ 
    
லிசைமின் னெதுகை சீர்தளையே. 
தளையைத் தளர்த்த முற்படுவீர் 
    
தலைவேதனையைக் கவி யென்பீர் 
கிளைக்கு மேலே நின்றிடுவீர் 
    
கீழ்மர மெய்யு மதியுடையீர் 
தளைசீர் மோனை யெதுகைப் பாவும் 
    
பாவினமு மென்றாகி 
விளைக்குஞ் சேற்றுநிலந்தனிலே 
    
விழுத்தீராயி னெழுந்தீரே 
எழுந்தீரென்றே னேதென்றா லெழுதாக் 
    
கவிதை யெலா முமதே 
செழுந்தீ சூழுஞ் சுடுகாட்டிற் 
    
செந்நாப் பேய்களாடுவதும் 
கொழுந்து விட்டே வுலக்கைத்தாய் 
    
கோலா கலமாய் வளருவதும் 
விழைந்து கண்டு விரைவில்நீர் 
    
வீங்கு யாப்பாற் கவியாவீர்
கவியாம் பெருமை வேண்டுமெனிற் 
    
கண்கள் முழுதும் பஞ்சாகத் 
தவியாய்த் தவித்துத் தாளத்தைத் 
    
தத்தித் தத்திப் போட்டிட்டு 
அவியாவொளி போலணைந்திட்டே 
    
அறியா ரிதுமைக் கும்பிட்டுச் 
செவியே யில்லாக் கட்செவி போற்- 
    
செஞ் சொன் மேலே யூர்வீரே
  
   
 
வேறு
 
 வெண்ணெயானது நெய்யா யுருகிடுங் 
கண்ணி லாதவனைக் குருடனெனலாம் 
அண்ணனானவன் தம்பிக்கு மூத்தவன் 
எண்ணி யாப்பி சைத்தாற் கவியாகுமே.
 
   
 
வேறு
 
 வாழ்க சீர்தளை மோனை 
வாழ்க காரிகை யெதுகை 
ஆழ்க வசனக் கவிதை 
சூழ்க இலக்கண இருளே.
 
   
     வசன கவிதைக்கு எழுந்த எதிர்ப்புக்கு விவாத ரீதியான பதில் ஒன்று சூறாவளி
ஒன்பதாவது இதழில் (18-6-1939) இடம் பெற்றது. அதை எழுதியவர் கவிதைத் தொண்டன்’.
 

தொடரும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by அ.இராமநாதன் Fri Aug 02, 2013 7:09 am

-
இன்றைய அவசர யுகத்தில்  அதிகம் ரஸிக்கப்படுவது
வசன கவிதையே...!
-
மிக்க மகிழ்ச்சி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Aug 02, 2013 9:28 am

     பொதுவாகவே வசனகவிதையைக் கண்டிப்பவர்களுடைய வாதம் நூதனமாக 
இருக்கிறது - வசன கவிதை நூதனமோ இல்லையோ! வசன கவிதை நன்றாக இருக்கிறதா
இல்லையா என்று வாசித்துப் பார்த்து குணத்தை நிர்ணயிக்க அவர்கள் இஷ்டப்படவில்லை.
சீர், தளை, எதுகை, மோனைகளை அனுசரிக்காமல் எழுதிய கவிதை நன்றாக இருக்க
முடியாது என்பதே அவர்களுடைய கட்சிபோல் இருக்கிறது. இல்லாவிட்டால் ஒரு புதுப்
பரீக்ஷை என்பதற்காகவே அதை ஏன் கண்டிக்க வேண்டும்? 

    
சில பண்டிதர்கள் வசன கவிதை புதிதொன்றுமில்லை என்று சொல்லுகிறார்கள்.
பழைய நூல்களில் இருக்கிறதாம். எனவே வசன கவிதையை எதிர்ப்பவர்களை இரண்டு 
பகுப்பாகப் பிரிக்கலாம். (1) பழைய முறையைப் பின்பற்றாமல் நவீனமாகப் புரட்சிப்
பாதையில் போகிறது என்ற கட்சி. (2) வசன கவிதை நவீனம் ஒன்றும் இல்லை. எல்லாம்
பழையதுதான்.ஆகையால் அதைப் புதுப் பரீக்ஷை என்று சொல்லிக் கொண்டு கூத்தாடுவது
பிசகு என்ற கட்சி. 

    
முன் கட்சியினருக்கு ஒரு பதிலும் சொல்லமுடியாது. ஏனென்றால் அவர்கள்
குணத்தைப்பற்றியோ கவிதையைப் பற்றியோ பேசத் தயாரில்லை. கவிதையின் அணி அலங்
காரத்தைப்பற்றித்தான் பேசத் தயார். பின் கட்சியினருக்குமட்டும் நான் ஒன்று சொல்ல
விரும்புகிறேன். ஓரிருவரால் இப்பொழுது தமிழில் கையாளப்பட்டு வரும் வசன
கவிதைமுறை புதிதுதான். நவீனம்தான். முற்காலத்தில் இருந்ததாக அவர்கள் குறிப்பிடும்
வசன கவிதைக்கும் இதற்கும்
சம்பந்தமே கிடையாது. கருத்திலும் சரி உருவத்திலும் சரி. 

    
ஆம், வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு. அதற்கும் அணி அலங்காரம் 
உண்டு. அதற்கும் தளையுண்டு. மோனையுண்டு. எல்லா வற்றிற்கும் மேலாக அதற்கும்
ரிதும்உண்டு. செய்யுள் எழுதுவதைக் காட்டிலும் வசன கவிதை எழுதி வெற்றி 
பெறுவதுசிரமம் செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைக்கும் ஒரு இசை இன்பத்தை
ஊட்டிவிடும். ஆனால் வசன கவிதையில் கருத்தின் வேகமும் உணர்ச்சியும் சொல்லில் 
தட்டினால்தான் கொஞ்சமாவது கவர்ச்சி கொடுக்கும். சொல்லில் கவிதையின் அம்சம் 
இல்லாவிட்டால் அது வசன கவிதையாகாது-வெறும் வசனம்தான். 

    
இந்த முறையில் வசன கவிதையைத் தமிழில் முதல் முதலாகக் கையாண்டவர் 
சுப்பிரமணிய பாரதிதான். காட்சிகள்என்று அவர் எழுதியிருக்கும் சித்திரங்களைப் 
படிப்பவர்கள் வசனம் எதுவென்றும் வசன கவிதை எதுவென்றும், தெளிவாக அறியலாம்.
அவருக்குப் பின்னால் அவரைப் பின்பற்றி எழுதி வருபவர்கள் ஒரு வேளை அவ்வளவு
வெற்றி பெறாமல் இருக்கலாம். இன்னும் பரீஷை நிலையிலேயே இருக்கலாம். அதனால்
வசன கவிதை செய்யுளின் முன் நிற்க முடியாதென்றோ, அது கவிதையாகாதென்றோ யாரும்
சொல்ல முடியாது. எட்வர்ட் கார்பென்ட்டரும், வால்ட் விட்மனும் ஆங்கிலத்தில் பெற்ற
வெற்றிக்குப் பிறகு, பாரதியே தமிழில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, தமிழில் வசன கவிதையை
எந்தக் கற்பனை உச்சியிலும் கையாளலாம் என்பது ஒரு சிலரின் தீர்மானம். முயன்று 
பார்த்து விடுவது என்றும் ஓரிருவர் தீர்மானித்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது. 

    
நாணல் பரிகாசமாக எழுதிய பிறகு இந்தப் பதில் கூடத் தேவையில்லை. ஆனாலும்
காளிதாஸன் சொல்வதுபோல
 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Aug 02, 2013 1:28 pm

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum