தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சின்ன சின்ன கதைகள்

Go down

சின்ன சின்ன கதைகள்  Empty சின்ன சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 28, 2013 5:17 pm

எல்லோரையும் போல் தானும் அழகாக வேண்டும் என்று நினைத்த ஒரு மனிதர் மருத்துவரிடம் சென்று,எல்லோரும் அழகா இருக்காங்க, நா மட்டும் அழகில்லை, மற்றவர்களை விட அழகாக வேண்டும், ஆலோசனை சொல்லுங்கள் என்றார்.
உடனே
"தொப்பையை குறை" என்று மருத்துவர்ஆலோசனை செய்தார்.

அன்று முதல் தன் Excess sizeஐ Excersie மூலம் குறைத்தார், கரைத்தார். உடம்பு அழகானது, முகம் மட்டும் அழகாக வில்லை.
மீண்டும் வருத்தது டன் அந்த ஊரில் உள்ள ஞானியிடம் சென்று, மருத்துவரிடம் சொன்னது போன்றே

"எல்லோரும் அழகா இருக்காங்க, நா மட்டும் அழகில்லை, மற்றவர்களை விட அழகாக வேண்டும், ஆலோசனை சொல்லுங்கள் என்றார்". உடனே அந்த ஞானி
"குப்பையை குறை" என்றார்
.
ஐயா "குப்பையை குறைப்பதா" என்று சந்தேகத்துடன் கேட்டார்.
ஆம் அடுத்தவன் அழகாக இருக்கிறான் என்று உன் உள்ளம் நினைக்கிறதே அந்த குப்பையை அகற்று அழகாகி விடுவாய் என்றார்.

ஆம், மனிதர்களாகிய நமக்கு உள்ள ஒரே பிரச்சினை நாம் ஏழை என்பதல்ல, அடுத்தவன் பணக்கரனாக இருப்பது தான். அதுவே நாளடைவில் மன நோயாக மாறிவிடும்.

உடல் நோயிக்குத்தான் Medication மன நோய் போக்க Meditation.
காந்தி அழகான ஆடை உடுத்தி இருக்கும் சிறு வயசு புகைப்படத்தை விட, அவர் கோவணத்தோடும், பொக்கைவாயுடனும் இருக்கும் வயதான புகைப்படம் அழகாக இருக்கும்.
 
அந்த அழகு மனக்குப்பைகளை Meditation மூலம்அகற்றியதால் வந்தது. பணத்தாசை இல்லாத அவரின் புகைப்படம்,இன்று இந்திய ரூபாய் நோட்டை அலங்கரிகிறது.

அகவே
அடுத்தவரை பார்த்து ஏங்கும் எண்ணத்தை தவிர்த்து
அடுத்தவரை தாங்கும் எண்ணத்தை உருவாக்குவோம்
அதுவும் முடியவில்லையா
அடுத்தவரை தாக்காமல் இருக்கவாவது கற்று கொள்வோம்.
பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கச்
சிறந்த வழி மெளனம்;
பல பிரச்சனைகளைத் தவிர்க்க
மிகச் சிறந்த ஆயுதம் புன்னகை.


-முக நூல்.

சின்ன சின்ன கதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சின்ன சின்ன கதைகள்  Empty Re: சின்ன சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 28, 2013 5:19 pm

குட்டையோரம் அமர்ந்திருந்தான் ஓர் இளைஞன். முழங்கால்களுக்கிடையில் முகம் புதைத்து பெரும் சோகத்தில் அவன் இருந்தான். 


அவ்வழியே சென்று கொண்டிருந்த ஒரு துறவி அந்த இளைஞனைக் கண்டார். அவனருகே வந்தார். அவனது சோகத்துக்கான காரணத்தைக் கேட்டறிந்தார். அவன் மீது பரிதாபம் கொண்டார். 


இளைஞனின் அருகே அமர்ந்த துறவி தனது கையிலிருந்த மண் குடுவை ஒன்றை எடுத்தார். குட்டையிலிருந்து சிறிது நீரை மொள்ளும்படி இளைஞனிடம்  சொன்னார். 


துறவி சொன்னபடியே அந்த இளைஞனும் செய்தான். "இந்தாருங்கள்! அய்யா!" -  என்று பயபக்தியுடன் நீர் நிரம்பிய குடுவையையும் நீட்டினான். 


துறவி மீண்டும் தன்னிடமிருந்த உப்பிலிருந்து ஒரு பிடியை இளைஞனிடம் கொடுத்து, "மகனே! இதை குடுவையில் உள்ள தண்ணீர் கரைத்துவிடு!" - என்றார். 


இளைஞனும் அவ்வாறே செய்தான். 


புன்முறுவலுடன் துறவி உப்பு கரைத்த குடுவையை இளைஞனிடம் கொடுத்தார். 


"குழந்தாய்! இதை குடி!" - என்றார்.


ஒரு மிடறுகூட குடித்திருக்கமாட்டான். இளைஞனின் முகம் அஷ்ட கோணலானது. குமட்டலுடன் நீரை கீழே துப்பிய இளைஞன், "அய்யா, நீர் குடிக்க முடியாதளவு உப்பால் கரிக்கிறது!" - என்றான்.


மீண்டும் புன்முறுவல் பூத்த துறவி, இன்னொரு கைப்பிடியளவு உப்பை எடுத்து இளைஞனிடம் கொடுத்தார்.


"மகனே, இதை எதிரில் உள்ள குட்டையில் கரைத்துவிடு!" - என்றார்.


இளைஞனும் துறவியார் சொன்னபடியே செய்தான். 


இப்போது துறவியர் சொன்னார்: "மகனே! குட்டையில் உள்ள நீரை சிறிதளவு குடித்துப் பார்!" - என்றார்.


இளைஞனும் துறவியார் சொன்னபடியே குட்டையிலிருந்த நீரை இரு கரங்களாலும் எடுத்து திருப்தியாக குடித்து முடித்தான். 


"மகனே! நீரின் சுவை எப்படியிருக்கிறது?" - என்று கேட்டார் அந்த துறவி.


"நல்ல சுவையாக.. உப்பின் கரிப்பு தெரியாமல் இருக்கிறது அய்யா!" - என்றான் இளைஞன்.


துறவியார் இப்போது வாய்விட்டு சிரித்தார். அவனது கரங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டார். மென்மையான குரலில் இப்படி சொன்னார்:


"மகனே, அதே நீர் .. அதே ஒரு கைப்பிடி அளவு உப்பு.. ஒன்று கரிக்கிறது. மற்றொன்று  கரிப்புத் தெரியாமல் சுவைக்கிறது!


இந்த உப்பைப் போன்றதுதான் நமது துன்பங்களும்..  அளவில் மாறாதவை.. எப்போதும் ஒன்றுபோல நம்மை வருத்துபவை. 


ஆனால், அந்த துன்பங்களின் சுவை அதாவது தாக்கம் நாம் கையாளும் விதத்தில் இருக்கிறது. சிறிய குடுவை நீர் கரித்தது போல! குட்டையின் நீர் கரிப்புத்தன்மையில்லாமல் சுவையாக இனித்தது போல தான் இவையும். 


மகனே! நீ துன்பத் துயரங்களில் இருக்கும் போது உனது மனதை விரிவாக வைத்துக் கொள்! குடுவையைப் போல இல்லாமல் ஒரு குட்டையைப் போல!"


இளைஞனின் அறிவுக் கண் திறந்தது. துறவிக்கு நன்றி சொன்னவன்.. நெஞ்சு நிறைய காற்றை இழுத்துவிட்டுக் கொண்டான். உடல் நிமிர்ந்து வீட்டை நோக்கி நடந்தான்.


- மழலைப் பிரியன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சின்ன சின்ன கதைகள்  Empty Re: சின்ன சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 28, 2013 5:20 pm

ஒரு மூங்கிலைப் போல!'
******************************************
விரக்தியோடு போய் கொண்டிருந்தான். ரொம்பவும் சோர்ந்து போய் இருந்தான். வாழ்க்கை பிடிக்கவில்லை அவனுக்கு.

ஒரு காடு எதிர்பட்டது.

காட்டில் ஒரு பெரியவரைச் சந்தித்தான். தன் முடிவைத் தெரிவித்தான். தான் வாழ்ந்தேயாக வேண்டும் என்பதற்கான ஒரே ஒரு காரணத்தைச் சொன்னால்கூட தனது முடிவை மாற்றிக் கொள்ள தயாராக இருப்பதாக அவன் சொன்னான்.


பெரியவர் புன்முறுவல் பூத்தார்.

தனது குடிலுக்கு அழைத்துச் சென்றார்.

காட்டுக்குள் அற்புதமாக அமைந்திருந்தது அவரது அந்த வசிப்பிடம்.

மூங்கில் தோப்புக்குள் அமைந்திருந்தது அவரது குடிசை. சுற்றியும் பூச்செடிகள்.

 குடிசைக்கு வெளியே இருந்த கட்டிலில் உட்கார வைத்த பெரியவர் சுற்றியிருந்தவற்றைக் காட்டிக் கேட்டார்: "இவை என்னவென்று தெரிகிறதா?"

"ஏன் தெரியாது.. பூஞ்செடிகளும் மூங்கில்களும்!" - என்றான் அவன்.

"இவற்றை நான்தான் விதைப் போட்டு வளர்த்தேன்"-என்றார் பெரியவர். 

"ஓ..! அழகாக வளர்ந்துள் ளனவே!" ஆச்சரியப் பட்டான் அவன்.

"இந்த பூச்செடிகளையும், அதோ அந்த மூங்கில் தோப்பையும் நான் ஒன்றாகத்தான் நட்டேன்!" - என்றார் அந்த பெரியவர்.



அவர் சொல்வதை அவன் வியப்புடன் கேட்டான்.

"ஆமாம்..இந்த பூந்தோட்டத்தையும், அதோ அந்த மூங்கில் தோப்பையும் ஒரே நேரத்தில் நிலத்தைக் கொத்தி விதைத் தெளித்தேன். நன்றாக சூரிய ஒளி கிடைக்கும்படி செய்தேன். காலந்தவறாமல் உரமிட்டேன். களையெடுத்தேன். நீர்ப்பாய்ச்சினேன்!" - சொல்வதை நிறுத்தியவர் சிறிது நேரம் கழித்து புன்முறுவலுடன் தொடர்ந்தார்: 


 "இந்த பூச்செடிகள் வேகமாக முளைவிட்டு வளர்ந்துவிட்டன. பச்சைப் பசேனெ புதராய் மண்டிவிட்டன. அழகிய வண்ணங்களில் பூப்பூத்து மணம பரப்பின. ஆனால், மூங்கில் விதைகள் நட்டு ஒரு வாரமாகியும் அவை முளைவிடவில்லை. 

ஆனால், நான் தளர்ந்துவிடவில்லை.

இரண்டு வாரங்களாகின.  ம் மூங்கில் விதைகள் முளைவிடக் காணோம்.

ஆனால், நான் தளர்ந்துவிடவில்லை.

மூன்று வாரங்களாயின. இன்னும் இதேநிலைதான்! மூங்கில் விதைகளிலிருந்து ஓர் அசைவும் காணோம். 

ஆனாலும், நான் தளர்ந்துவிடவில்லை.

 
அது நாலாவது வாரம் அதாவது மூங்கில் விதைகளை நட்டு 30 நாட்கள் கழிந்து விட்டிருந்தன. ம்.. மூங்கில் விதைகள் அசைந்து கொடுப்பதாய் இல்லை. 

ஆனால், நான் தளர்ந்துவிடவில்லை. 

ஐந்து, ஆறு, ஏழு என்று வாரங்கள் ஓடிக் கொண்டிருந்தன. மூங்கில் விதைகள் முளைப்பதாயில்லை.

கடைசியில், எட்டாவது வாரம் அதாவது 60 நாட்களுக்குப் பிறகு பூமியைப் பிளந்துகொண்டு மஞ்சள் நிறத்தில் சின்ன சின்ன தளிர்கள் பூமிக்குள்ளிருந்து வெளிவந்திருந்தன. அந்த நேரத்தில் இந்த பூச்செடிகளோட ஒப்பிடும்போது, அது மிகவும் சின்ன உருவம்தான்! ஆனால், வெறும் ஆறே ஆறு மாதங்களில் 100 அடிக்கும் மேலாக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்துவிட்டன. ஒரு நாளைக்கு ஒரு மீட்டர் உயரம் என்று வேக வேகமாக வளர்ந்து இதோ தோப்பாய் நிற்கின்றன!"

அதற்குள் வீட்டிலிருந்து ஒரு மூதாட்டி பெரியவரின் துணைவியார் மண் குவளையில்  சுட சுட பானம் ஒன்று கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்தார். 

"சித்தரத்தை, கற்பூரவள்ளி, துளசி, பனை வெல்லம் கலந்த தேனீர் இது நன்றாக இருக்கும்! !" - என்றவர் தொடர்ந்தார். 

"... அந்த விதைகள் கிட்ட தட்ட 60 நாட்கள் முளைப்பதற்கான சூழலுக்குப் போராடியிருக்கின்றன. நம் கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்குள் வேர்ப்பாய்ச்சி அதன் மீட்சிக்குக் காரணமாய் நின்றன. 

இறைவன் யார் மீதும் சுமக்க முடியாத பாரத்தைச் சுமத்திவிடுவதில்லை என்பதை  எப்போதும் மறக்கக் கூடாது!

உனது முடிவிலிருந்து உன்னை மாற்றிக் கொள்ள ஒரு காரணத்தைக் காட்டச் சொன்னாய். அதற்கான ஆயிரமாயிரம் காரணங்கள் உனக்குள்ளாகவே இருப்பதை நீ பொறுமையுடன் சிந்தித்தால் தெரிந்து கொள்ளலாம்.

உனது இத்தனை நாள் போராட்டங்களும், துன்பங்களும், கவலைகளும் ஒரு மீட்சிக்கான போராட்டமாகவே காண வேண்டும். மூங்கில் விதைகளைப் போல உனது வேர்கள் பாய்ச்சலுக்கான அவகாசமது!"

அவன் அந்த மூலிகைத் தேனீர் அருந்தியவாறு ஆவலுடன் கேட்க ஆரம்பித்தான்.

பெரியவர் தொடர்ந்தார்: ".... அடுத்தது, யாருடனும் உன்னை ஒப்பிடாதே! ஒவ்வொருவரும் தனித்தனி திறமையானவர்கள். மூங்கிலோடு இதோ இந்த பூச்செடிகளை ஒப்பிட முடியுமா? அதுபோலதான் அடுத்தவரோடு நம்மை ஒப்பிடுவதும்!

உனக்கும் காலம் இருக்கிறது. நீயும் உயரமாய் வளரத்தான் போகிறாய்!"

அதற்குள் அவன் இடை மறித்தான்: "எவ்வளவு உயரம்?"

"அதோ அந்த மூங்கில் உயரத்துக்கு.. நீ முயல்வதற்கு ஒப்ப..ஆம்.. உனது முயற்சிகளை முடுக்கிவிட்டு மூங்கிலைப் போல வீரியமாய வளர்ந்து விண்ணைத் தொடு!" - என்றார் பெரியவர் அவனை வாழ்த்தியவாறு.

அவன் காட்டிலிருந்து திரும்பினான் இந்தக் கதையோடு!

- மழலைப் பிரியன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சின்ன சின்ன கதைகள்  Empty Re: சின்ன சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 28, 2013 5:21 pm

'உள்ளத்தில் உரம் வேண்டும்!'
**********************************************
மாம்பழத்தைச் சுவைத்த சிறுவன் கொட்டையை மலையின் மீது  வீசி எறிந்தான்.  "ஹே..!  ஹைய்யா..! ட்ரூ..ட்ரூ..!"- ஆடுகளை ஓட்டிக் கொண்டு சென்றான்.

மலையின் மீது விழுந்த மாங்கொட்டைக்குச் சரியான அடி.

"ஊ.. ஊ..!"- வலியால் துடித்து அழலாயிற்று. 

உறங்கிக் கொண்டிருந்த மலை இந்த சத்தத்தால் தூக்கம் கலைந்து எழுந்தது. 

மாங்கொட்டையை கண்டது.

"ஏய்! பொடிப்பயலே! இங்கே என்ன செய்கிறாய்? இடத்தை காலி பண்ணு சீக்கிரம்!"- அதட்டியது. 

"கொர்.. கொர்.."- என்று மீண்டும் உறங்க ஆரம்பித்தது.

அடிப்பட்ட மாங்கொட்டை மெல்ல எழுந்து நடந்தது. புகலிடம் தேடி மலை மீது அலைந்தது. 

இதைப் பார்த்துவிட்ட சூரியனுக்கு ஏக கோபம்.

"ஆஹா..! பொடியன் புகலிடம் தேடுகிறானே! என்ன துணிச்சல்!" - தகதகக்கும் அனலுடன் உக்கிரமான கதிர்களைப் பாய்ச்சியது. 

அனல் தாளாமல் ஓரிடத்தில் ஒதுங்கிய மாங்கொட்டை, சூரியக்கதிர்களைப் பொறுமையுடன் தாங்கிக் கொண்டது. உடலிலிருந்த வியர்வை ஈரத்தை நன்றாக உலர்த்திக் கொண்டது.

அனலாய்.. பொழிந்து.. பொழிந்து சூரியன் சோர்வடைந்தது. 

அங்கு வந்த மேகக் கூட்டம், "என்ன நண்பரே! என்ன விஷயம்?" - என்று விசாரித்தது.

நடந்ததைக் கேள்விப்பட்டதும், மேகத்திற்கு பொல்லாத கோபம் வந்தது. 

"நான் என்ன செய்கிறேன் பார் அவனை!" - என்று கொதித்தது. 

சில நிமிடங்களில் மப்பும்-மந்தாரமுமாய் திரண்ட மேகம், பூமியைத் துளைத்துவிடும் அளவுக்கு மழையாய்ப் பொழிந்து தாக்குதல் தொடுத்தது. இதைக் கண்டு மாங்கொட்டை ஆரம்பத்தில் பயந்துதான் போனது. பிறகு சமாளித்துக் கொண்டது. நெளிந்து .. புரண்டு மழையில் மிதந்தது. பாறைகளுக்கிடையே அலை மோதியது.

மழையின் போராட்டம் தோல்வியடையும் தருவாயில் அங்கு வந்த சேர்ந்த காற்று விஷயத்தை அறிந்தது. மழையுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டது.

"உய்.. உய்..!"- இரைச்சலுடன் காற்று சுழன்று.. சுழன்று அடித்தது. பயங்கரமாகத் தாக்குதல் தொடுத்தது. 

மாங்கொட்டை இப்போது உண்மையிலேயே பெரும் சிக்கலுக்கு ஆளானது. தத்தளித்தது. தவித்தது. ஆனாலும், கலங்கவில்லை. சோர்ந்துவிடவில்லை. தெப்பமாக நனைந்துவிட்ட அது பாறைகளுக்கிடையே பதுங்கிக் கொண்டது. 

"ஒழிந்தது சனியன்!" - காற்றும், மழையும் பெருமூச்சுவிட்டன. தாக்குதலை நிறுத்திக் கொண்டன. 

பதுங்கியிருந்த மாங்கொட்டை, மெல்ல கண்விழித்தது. தோலைப் பிளந்து கால்களை மலைமீது பதித்துத் துழாவியது. ஆணிவேரை பாறைகளுக்கிடையே இறக்கியது. சல்லி.. வேர்களை மலைமீது படரவிட்டது. 

தன் மீது ஏதோ ஊர்வதைப் போல உணர்ந்து மலை மறுபடியும் விழித்துக் கொண்டது. மாங்கொட்டையைக் கண்டு துணுக்குற்றது. 

"ஏ! பொடியனே! இன்னுமா நீ உயிருடன் இருக்கிறாய்? மரியாதையாய் இங்கிருந்து ஓடிவிடு!" - என்று அலட்சியமாக கூறியது. வழக்கம் போலவே உறங்கிவிட்டது.

மாங்கொட்டை எதையும் சட்டை செய்யவில்லை. இன்னும் உறுதியாக முயற்சியை மேற்கொண்டது. மெல்லத் துளிர்விட்டு வளர்ந்தது. செடியானது.


ஒருநாள். அந்த வழியே சென்ற ஆட்டு மந்தையின் காலில் மிதிபட்டு மாஞ்செடி நசுங்கிப் போனது. வலியால் துடிதுடித்தது. 

அதன் வேதனையைக் கண்ட மலை,  "ஹி..  ஹி.. ! சொன்னால் கேட்டாத்தானே! மூஞ்சியைப் பார்.. மூஞ்சியை.." - என்று கிண்டலுடன் கைக்கொட்டி சிரித்தது.

மாஞ்செடி அதைக் கண்டு கொள்ளவேயில்லை. மலையுடன் விவாதிக்கவும் அது தயாராக இல்லை. சில நாளில் சமாளித்துக் கொண்டு நிமிர்ந்து விட்டது. துளிர்விட்டு முளைத்தது.

மற்றொரு நாள். 

செம்மறி ஆடொன்று கடித்த கடியும், பிடித்து இழுத்த இழுப்பும் மாஞ்செடி, இதுவரையும் அனுபவிக்காத வேதனையாக இருந்தது. மரண வேதனை. 

ஆவேசம் கொண்ட மாஞ்செடி, இந்தமுறை ஆடு கடித்த இடத்தில் ஒன்றிற்கு இரண்டாய்ப் பக்க கிளைகளைவிட்டு இன்னும் வேகமாய் முளைக்க ஆரம்பித்தது. கிடு.. கிடு வென்று வளர்ந்தது. 

மலைப்பாறை, சூரியன், மழை, காற்று அனைத்தின் எதிர்ப்புகளையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு மாஞ்செடி தழைத்து வளர்ந்து மரமாகிவிட்டது. 

அந்த வழியே செல்லும் பயணிகளுக்கு அது ஓய்வெடுக்கும் புகலிடமாக இப்போது விளங்கியது. ஆடு-மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிவருவோருக்கு அது இதமான நிழலைத் தந்தது. சுவை தரும் கனிகளை அள்ளி அள்ளி வழங்கியது. தன்னை நாடிவரும் பறவைகளுக்குச் சரணாலயமாக திகழ்ந்தது.

ஆரம்ப காலத்தில் தன்னைக் கடுமையாக எதிர்த்த மலை, சூரியன், மேகம், காற்று முதலியவற்றின் தவறுகளை எல்லாம் மாமரம் மறந்துவிட்டது. அவைகளுடன் நேசத்துடன் பழக ஆரம்பித்தது. 

ஆரம்பத்தில் கேலி செய்து அலட்சியப்படுத்திய மலைக்கு, மாமரம் நிழல் தந்தது. சமயத்தில் பழுத்த பழங்களையும் தந்து மகிழ்வூட்டியது. சுட்டிடெரிக்கும் வெய்யிலிலிருந்து மனிதர்களையும், பிராணிகளையும் பாதுகாத்து சூரியனுக்குப் புகழ் சேர்த்தது. நிலத்திலிருந்து நீரை உறிஞ்சி ஆவியாக்கி மேகத்துக்கு அனுப்பியது. இதன் மூலம் மழைப் பெய்ய மேகத்துக்கு ஒத்துழைத்தது. வெப்பமாக வீசும் காற்றை அணைத்து, அரவணைத்து குளிர்ச்சியாக்கி அனுப்பியது. 

கடந்த காலப் போராட்டம் நினைவில் எழும்போதெல்லாம், மனதில் மாமரம் சிரித்துக் கொள்ளும். மௌனமாகத் தலையாட்டி ரசித்துக்கொள்ளும். 

- நன்றி~ கீதா.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சின்ன சின்ன கதைகள்  Empty Re: சின்ன சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 28, 2013 5:22 pm

ரீ கடை 
**************
கிராமத்தில் அந்த டீக்கடை மிகவும் பிரபலம். 
அதிகாலை நேரமானதால் டீக்கடையைச் சுற்றிக் கூட்டம் கூடியிருந்தது.

‘‘அண்ணே! நாலு டீ போடுங்கண்ணே? அதுல ஒண்ணு சீனி கம்மியா ஸ்டாங்கா இருக்கட்டும்.’’

‘‘ஒரு ரெண்டு டீ போடு.’’

குரல் நாலாபுறம் இருந்தும் வந்தது.

டீக்கடைக்காரர் கூட்டம் அதிகமாக இருந்தும் பதட்டப்படாமல் டீ போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, ‘‘ஐயா! சாமி ஒரு சாயா தாங்கய்யா.’’ _எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.

அழுக்கு உடையில் காவிப் பற்களுடன் துண்டை இடுப்பில் கட்டியவாறு அந்த நபர் தெரிந்தார்.

டீக்கடைக்காரர் எல்லோருக்கும் கண்ணாடி டம்ளரில் டீ கொடுத்து விட்டு, 
அந்த அழுக்கு நபருக்கு, அலுமினிய டம்ளரில் டீ போட்டு 
தன் விரல் அந்த நபர் கையில் பட்டு விடாதபடி டம்ளரை நீட்டினார்.

எல்லோரும் காசு கொடுக்க _ 
அந்த நபரும் காசு கொடுக்க 
கல்லாவில் போட்டார் கடைக்காரர். 
டீ கொடுத்து, அதைக் குடித்து விட்டு கடைக்காரரை ஏறிட்டு மெதுவாகச் சொன்னார் 

அந்த அழுக்கு ஆசாமி.
‘‘ஐயா, நான் தாழ்த்தப்பட்ட சாதிக்காரன்னு 
எனக்குத் தனியா வேற ஒரு டம்ளரில் டீ தாரீங்க. 

ஆனா நான் கொடுத்த காசையும் அவங்க கொடுத்த காசையும் 
ஒரே கல்லாவில் போடுறீங்களே!’’

பதில் சொல்லத் தெரியவில்லை டீக்கடைக்காரருக்கு.


- முக நூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சின்ன சின்ன கதைகள்  Empty Re: சின்ன சின்ன கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum